திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

  கொன்றுஉயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்றுஇவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான்தமர் போந்தார்
நன்றுஇசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.

  பொ-ரை :- உயிரைக் கொன்று உண்ணுகின்ற நோய் என்ன, பகை என்ன, பசி என்ன, மற்றும் தீயனவாயுள்ளன எவை எவை உன்ளனவோ அவை எல்லாவற்றையும் இவ்வுலகத்தில் விடாமல் நின்று போக்குவதற்காக, சக்கரத்தைத் தரித்த சர்வேச்வரனுடைய அடியார்கள் வந்தார்கள்; வந்து செய்த காரியம் யாது? எனின், இசைபாடியும் துள்ளி ஆடியும் இவ்வுலகத்திலே பெரிதும் பரந்தார்கள்; தொண்டீர்! மனத்தைச் செந்நெறியிலே நிறுத்திச் சென்று தொழுது உஜ்ஜீவிப்பீர்களாக என்கிறார்.

வி-கு :- இவ்வுலகில் நின்று கடிவான் என்று மாற்றுக. போந்தார் பரந்தார் – போந்தார்களாகிப் பரந்தார்கள். போந்தார்: முற்றெச்சம். நன்று பரந்தார் எனக் கூட்டுக. “நன்று பெரிது” என்பது தொல்காப்பியம். தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தித் தொழுது உய்ம்மின் என்க.

ஈடு :-
ஆறாம் பாட்டு, 1எல்லாத் துக்கங்களையும் போக்குகைக்காக ஸ்ரீ வைணவர்கள் உலகமடையப் பரந்தார்கள்; அவர்களோடே நீங்களும் அவனை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.

கொன்று 2உயிர் உண்ணும் விசாதி-சரீரத்தின் பிரிவினைப் பிறப்பித்துப் பிராணன்களைக் கொள்ளை கொள்ளும்படியான வியாதி. அன்றிக்கே, பிராணனைப் பிரித்துச் சரீரத்தை முடிக்கும் வியாதி என்னுதல். இப்பொருளில், உயிர் என்பதற்குச் சரீரம் என்பது பொருள். பகை பசி – 3அப்படிச் செய்யும் பகையும் பசியும். இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது என்? தீயன எல்லாம் – 4தண்ணியவை எல்லாம். நின்று இவ்வுலகில் கடிவான் – இவ்வுலகில் விடாமல் நின்று போக்குகைக்காக. 5நேமிப் பிரான் தமர் போந்தார்-கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்குமவர்கள் வந்தார்கள். போந்த நேமிப்பிரான் தமர், நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-நன்றான இசை பாடியும், பரபரப்போடு நிருத்தம் பண்ணியும், இப்படிப் பூமி அடையப் பரந்தார்கள். சென்று தொழுது உய்ம்மின்-1அவர்கள் பாடே சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல். அவர்களோடே சென்று சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல். தொண்டீர் – தக்கது அல்லாத விஷயத்தில் தொண்டுபட்டிருக்கிற நீங்கள். என்றது, 2திருந்துகைக்கு யோக்கியதையுடைய நீங்கள் என்றபடி. 3அது செய்யுமிடத்தில், சிந்தையைச் 4செந் நிறுத்தியே-தொழுத பின்னர் “எனக்கு ஒன்று தா, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாமல் வணங்குங்கோள் என்கிறார்.

விசாதி வியாதி
விரோதி தீயன போக்கும் நேமிப்பிரா ன் தமர் -பூதங்கள் முன்பு சொல்லி –
நீங்கள் சென்று சேவித்து உஜ்ஜீவனம் அடைய பாரும்
கொன்று உயிர் உண்ணும் வியாதி
தேக விச்லேஷம்
உயிர்” என்பதற்கு, இரண்டு பொருள்; ஒன்று, பிராணன். மற்றொன்று, சரீரம்.
நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய சூரிகள்.
எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
கொன்று -பிராணனை அபஹரிக்கும் வியாதி

எல்லாம் போக்குவதருக்கு
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்கள் -சரீர ருசியைப் போக்கி
நரகத்தை நாக்கு நெஞ்சே
கட்டி ஹிம்சிக்க -நான் தான் வென்றேன் -என்றாராம் -விட்டு போவதே வேண்டும் –

கணி கண்ணன் விஷயமாக யவ்வன பருவம்
பட்டர் ராஜரணம் -போக ஒன்றும் செய்து கொள்ள வில்லையே
ஆத்மா பற்றிய விஷயங்கள் தான் அருளுவார்கள்

பாவியெனை பல நீ காட்டிப் படுப்பாயோ
பகை யாருமே பகைவன் இல்லை என்று காட்டி அருளி போக்கி
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் -பரந்து
அவர்களை தொழுது -உஜ்ஜீவியும்கோள்
அவர்கள் உடன் சென்று எம்பெருமானை சேவித்து உஜ்ஜீவியும்கோள்
அப்ராப்த விஷயத்தில் தொண்டீர் -திருந்த யோக்யதை உடையவர்கள் நீங்கள்

பாகவதர்களை தொழுது திருமாலை ஆண்டான்
அவர்களை கொழுந்து -கோல் போலே கொண்டு எம்பெருமானை சேவிக்க சொல்கிறார் எம்பெருமானார் நிர்வாகம்

சம்சயம் நீங்கி தேவதாந்தரங்கள் பிரயோசனங்கள் தேடி போனே நீங்கள்
செம்மையாக சிந்தை வகுத்த விஷயத்தில் நிறுத்தி
தொழுது பிரதி பலன் கேட்க்காமல் –

பிரார்த்தனை இன்றி –
கைங்கர்யமாக செய்ய வேண்டும் –
தேஹி -ததாமி சொல்லாமல் –
ஹிருதயம் செம்மையாக
தொழுவதையே [இரயோஜனம்
மடி தடவாத சோறு
சுருள் நாறாத பூ
சுண்ணாம்பு கலவாத சாந்தம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: