திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

செய்கின்ற தென்கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.

   பொ-ரை :- இதர விஷயங்களில் தொண்டு பூண்டு இருப்பவர்களே! இவர்கள் செய்கின்றது என்னுடைய கண்களுக்கு ஒரு காரியத்தைச் செய்வதுபோன்று இருக்கின்றது; அது யாது? எனின், இந்த உலகத்திலே ஸ்ரீ வைகுண்டநாதனுடைய அடியார்களேயாகித் தங்கள் இச்சையாலே எங்கும் நிலைபெற்று உங்களையும் கொன்று இந்தக் காலத்தையும் மாற்றி விடுவார்கள் போலே இருக்கின்றது; இதில் சந்தேகம் இல்லை; ஆதலால், அரக்கர்களாயும் அசுரர்களாயும் பிறந்தவர்களாய் இருப்பீர்களேயானால், உங்களுக்குப் பிழைத்தற்குரிய வழியில்லை என்றவாறு.

வி-கு :- தொண்டீர்! செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது; இவ்வுலகத்து, வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னிக் கொன்று ஊழி பெயர்த்திடும்; ஐயம் ஒன்று இல்லை; அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் (உங்களுக்கு) உய்யும் வகை இல்லை என்று கூட்டுக. மன்னி – மன்னுதலால், கொன்று ஊழி பெயர்த்திடுவார்கள் என்க.

ஈடு :- ஐந்தாம் பாட்டு, 1ஸ்ரீ வைஷ்ணவர்கள், அசுர இராக்ஷசரான உங்களையும் முடித்து யுகத்தையும் பேர்ப்பர்கள் என்கிறார்.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது – செய்கிறபடி 2பார்த்தேனுக்கு என் கண்களுக்கு ஒன்று போலே இராநின்றது. என்போலே இராநின்றது? என்றால், இவ் வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் – பகவானுடைய குணங்களுக்கு மேட்டுமடையான சம்சாரத்தில் நித்தியவிபூதியில் இருப்புக்குத் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய். மாயத்தினால் எங்கும் மன்னி-3“மாயாவயுநம் ஞானம்” என்கிறபடியே, இச்சை என்ற பொருளைக் குறிக்கிற ஞானத்தாலே. இச்சையாலே எங்கும்புகுந்திருந்து. ஐயம் ஒன்று இல்லை-‘இங்கே இருந்தே அவ்விருப்புக்குத் தோற்றிருப்பர்கள்’ என்றதில் ஒரு சந்தேகம் இல்லை. அன்றிக்கே, ‘பேர்த்திடும்’ என்னுமதில் ஒரு சந்தேகம் இல்லை என்னலுமாம். அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்வகை இல்லை – இராக்கதத்தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத்தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக்கொண்டு, 1ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது, “ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தினபடி. 2“வாழ் ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேடவேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு, ‘அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’ என்று தேடவேண்டும்படியாயிற்று என்றபடி. தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே – 3”பிறர்க்குத் தொண்டு செய்தல் நாய்த்தொழிலாகும்” என்கிற மற்றை விஷயங்களிலே தொண்டுபட்டிருக்க உங்களைக் கல்பந்தானே வருத்திக்கொண்டு, தானும் பேரும் என்னுதல்; அன்றிக்கே, வைகுந்தன் பூதங்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பேர்ப்பர் என்னுதல்.

ஆசூர உங்களையும் முடித்து –
நல் வழிக் காலம் ஆக்குவார்கள் என்கிறார்கள் –
செய்வது கண்ணுக்கு தோன்ற
அடியவர்களே நிறைந்து -ஞானத்தினால் மாயா =ஞானம்
எங்கும் பரந்து -அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உஜ்ஜீவிக்க வழி இல்லை –

பார்த்தேனுக்கு என் கண்களுக்கு – பார்க்கின்றேனான என்னுடைய
கண்களுக்கு. ‘ஒன்றுபோல இராநின்றது,’ என்றது, “ஒன்றே ஒக்கின்றது”
என்றதற்குப் பொருள். ‘என் போலே இராநின்றது’ என்பதனை, பின்னே
வருகின்ற “ஊழி பெயர்த்திடும்” என்றதனோடு கூட்டுக. என்றது, ஸ்ரீ
வைஷ்ணவர்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பெயர்ப்பார்கள்
போன்று இராநின்றது என்றபடி. “வைகுந்தன்” என்றதனை நோக்கி
‘நித்திய விபூதியில் இருப்புக்கு’ என்கிறார்.

3. மாயை என்பதற்கு, இச்சை என்பது பொருள். அச்சொல் அப்பொருளில்
வருவதற்கு மேற்கோள், ‘மாயா வயுநம் ஞானம்’என்பது இது, நிகண்டு.

இம்மூன்று சொற்களும் ஒரு பொருளன.
இச்சையாலே-எங்கும் பரந்து சென்று திருத்தவேணும் என்னும்  இச்சையாலே.

எனது கண்ணுக்கு தோன்ற –
பகவத் குணங்களுக்கு மே ட்டு மடையான சம்சாரத்தில் –
நித்ய விபூதியில் இருக்கும் இருப்பில் தோற்று இருக்கும் நித்ய சூரிகள்
இச்சையால் எங்கும் புகுந்து –
மாயா -சம்பவாமி ஆத்மம் -மாயா
சங்கரர் -ந ஜாதாக -பிரமத்துக்கு ஒன்றும் இல்லை -மாயையால் பிறந்தது போலே காட்டுகிறான் இந்த்ரஜாலம்
ஜன்ம கர்ம மே திவ்யம் -என்று சொல்லி -உள்ளபடி அறிந்தவனுக்கு மோஷம்
மாயா -சங்கல்ப ரூப ஞானத்தினால் அவதரிக்கிறான் இச்சையால் –

இச்சையாலே எங்கும் புகுந்து –
ஐயமும் இல்லை
இங்கும் அடிமைப்பட்டு இருப்பார்கள் -இதிலும் சங்கை இல்லை
பெயர்த்திடும் என்பதிலும் சங்கை இல்லை
அரக்கர் அசுரர் -அவாந்தர பேதம் –
ராஷசர் –
தேவ யோனியில் பிறந்த கெட்டவர் –
மனுஷ்ய யோனியில் பிறந்து கெட்ட குணம் –
சுகர் சாரணர் ராவண ஒற்றர்கள் புகுந்தது போலே –
உள்ளீரேல் -யாராவது இருந்தால் -இல்லை ஆழ்வார் அறிவார்
வாழட் பட்டு நின்றீருள்ளீரேல் -பெரியாழ்வார் தேட வேண்டி இருந்தது –

அவர்களை தேட வேண்டும்படி ஒன்றும் தேவும் கேட்டு சம்சாரம் மாறி –
தொண்டீர் -சப்தாதி விஷயங்களில் -சேவா ஸுவ வ்ருத்தி –
கல்பம்
வைகுந்தம் பூதங்கள் உங்களையும் கொன்று ஊழி பெயர்திடுவர்

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: