திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்க ளேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.

பொ-ரை :- எல்லா இடங்களையும் தமக்கு உரிய இடமாகக் கொண்டுள்ள புறச்சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுமாறு போன்று, விசாலமான கடலிலே யோக நித்திரை செய்கின்ற சர்வேச்வரனுடைய அடியார்களேயாகிக் கிடந்தும் இருந்தும் எழுந்தும் பலப்பல இசைகளைப் பாடிக்கொண்டு நடந்தும் பறந்தும் ஆடியும் நாடகம் செய்யாநின்றார்கள்.

வி-கு :- தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைப் பூதங்கள் இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே  ஆய் நாடகம் செய்கின்றன என முடிக்க. பூதங்கள் செய்கின்றன என்க.

ஈடு :- நான்காம் பாட்டு. 1அசைக்க முடியாதவாறு வேர் ஊன்றியிருக்கின்ற புறச்சமயங்களை எல்லாம் வேரோடே அறுப்பாரைப் போன்று எங்கும் வைஷ்ணவர்களேயாகி, பகவானுடைய குணங்களை அநுபவிப்பதனால் உண்டாகின்ற சந்தோஷத்தாலே களித்துத் திரியாநின்றார்கள் என்கிறார்.

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே    – பயிர் தேயும்படி களை வளருமாறு போலே சத்துவ குணத்தையுடைய பெரியோர்கள் ஒதுங்கும்படி வளருகின்ற புறச் சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுவாரைப் போலே. ‘போலே’ என்பான் என்? என்னில், சத்துவ குணமுடைய பெரியோர்கட்குப் ‘பிறரை நலிய வேணும்’ என்ற ஓர் எண்ணம் இல்லையே அன்றோ; 2நெற்செய்யப் புற்றேயுமா போலே, இவர்கள் ஊன்ற ஊன்ற அவர்கள் தாமாகவே தேய்வார்கள் அத்தனை. தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் – 1தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிக் கண்வளர்ந்தருளுகைக்கு ஈடான பரப்பையுடைய திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிற அழகை நினைத்து, 2“பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும், காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்” என்று அதிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய். கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் – தங்களுக்கு விருப்பமான எல்லாக் காரியங்களுக்கும் தகுதியாம் படி பூமியைக் கைக்கொண்டு, ஒவ்வோர் இடத்திலே இருந்தும், ஒவ்வோர் இடத்திலே நின்றும், பகவானுடைய அநுபவத்தின் மிகுதியால் வந்த களிப்பினால் பலப்பல பாட்டுக்களைப் பாடியும், மனத்தைக் கொள்ளை கொள்ளும்படியாக உலாவியும், கால் தரையிலே பாவாதபடி பரபரப்போடு நிருத்தம் செய்தும். நாடகம் செய்கின்றன – இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை. 3“எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும், ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச்செய்வர் நஞ்ஜீயர்.

“நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்”-என்பது, பழமொழி நானூறு. 83.

அத்வைதிகளும் ஆராதனை செய்து -பின் பற்றாமல் -பிரசாரம் பண்ண முடியாதே
ப்ரஹ்மதை தவிர மற்றவை அசத்தியம் அஹம் பிரஹ்மாஸ்மி -என்பரே
ஆழ்வார்கள் திருவவதாரத்தால் அனைத்தும் சிதைந்து –
முன்பு இடம் கொள் சமயம் –
கடல் வண்ணன் பூதங்கள் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதங்கள் பாடி நடந்தும் குதித்தும் –
நாடகம் போலே பூதங்கள் -ஆனந்தமாக
எடுதுக்களைவன -களை பிடுங்கி நெல் விளைப்பது போலே –
சாத்விக மதம் -நெல் பாஹ்ய மதம் களை
பறித்து பொகடுவரைப் போலே -என்பான் என் என்னில் –
சாத்விகர் -எடுத்து பொகட்ட வேண்டாதபடி -தங்கள் கார்யம் -நெல் செய்ய புல்  தேயுமா போலே

குணமில்லை -விக்ரஹம் இல்லை என்பார் -மிடற்றை பிடிப்பது போலே உயர்வற உயர் நலம் உடையவன் –
தன்னடியே நிரசனம் ஏற்படுமே -இத்தால் –
தடம் கடல் -பள்ளி கொண்ட பெருமான்
தாளும் தோளும் -சமன் இலாது பரப்பும் படி -காலாழி நீ கிடக்கும் பண்பை கேட்டலும்
திருவாய். 8. 10 : 8.–. பெரிய திருவந். 34.
நெஞ்சு உருகி பூதங்கள் -அடியவர்கள்
கிடந்தும் -இஷ்ட செஷ்டிதங்கள்
கண்டவாற்றால் தனதே உலகு என்று அவன் இருந்தது போலே

இஷ்டப்படி என்ன வேண்டிலும் பண்ணலாம்
கிடந்தும் -இருந்தும் -ஹர்ஷத்தாலே பாடியும்
மனோஹாரியாம் படி உலாவியும்
நிருத்தம் செய்தும்
நாடகம் -வியாபாரம் செயல்கள் -வல்லார் ஆடினால் போல் இருக்க
ஆளவந்தார் நடையை அரசன் கொண்டாடினது போலே
எம்பெருமானார் ஸ்திதி சயனம் நினைத்து ப்ரீதி அடைவது போலே
military dress முக்கியம் போலே polish கூட பார்த்து யுத்தம் செய்பவனுக்கு அனைத்திலும் ஒழுக்கம்
கைங்கர்யம் செய்பவனுக்கும் இப்படி இருக்க வேண்டுமே
கோஷ்டி அலங்காரம் வேண்டுமே

அனுபவித்து கொண்டாடுவது போலே –
நஞ்சீயர் கொண்டாட -வேதாந்தி திருத்தி உம்முடைய பொறுப்பு பட்டருக்கு நியமனம்
நஞ்சீயர் எம்பெருமானாரை முன்பே தர்சித்து கொண்டாடி இருக்கிறார் –

மடித்தேன் -உலாவிஅருளும் அழகை எம்பார் காண கதவு அருகில் இருந்து –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: