திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில்வண்ணன் எம்மான் கடல்வண்ணன் பூதங்கள்மண்மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.

பொ-ரை :- பொருள்களின் தன்மையை மாற்றுகின்ற கலியுகம் நீங்கும்படியாகவும், பெருமை பொருந்திய கிருதயுகத்தின் தன்மையை யுடைத்தாய்ப் பேரின்ப வெள்ளம் பெருகும்படியாகவும், நித்தியசூரிகளும் புகும்படியாகவும், கரிய முகில்வண்ணனும் கடல்வண்ணனும் எம்மானுமாகிய சர்வேச்வரனுடைய அடியார்கள் இந்த உலகத்தின் மேலே ஆரவாரம் உண்டாகும்படியாகப் புகுந்து இசையோடு பாடி எல்லா இடங்களையும் தங்களுக்குரிய இடங்களாகக் கொண்டார்கள்.

வி-கு :-  நீங்கி, தேவர்கள் தாமும் புகுந்து என்னும் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களைச் செய என்னும் வாய்பாட்டு எச்சமாகத் திரித்துக்கொள்க. நீங்கப் புகப் பெருகக் கடல் வண்ணன்பூதங்கள் மண்மேல் எங்கும் இடம் கொண்டன என்க. பூதங்கள் கொண்டன என்க.

ஈடு :-
மூன்றாம் பாட்டு. 1நித்தியசூரிகளும் புகுந்து பரிமாறும்படி சம்சாரம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயானார்கள் என்கிறார்.

திரியும் கலியுகம் நீங்கி – 2“கலியுகத்தில் தந்தையின் வார்த்தையைப் புத்திரன் கேட்க மாட்டான், மருமகளும் மாமியார் வார்த்தையைக் கேட்க மாட்டாள், உடன் பிறந்தவர்களும் மூத்தவன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள், வேலைக்காரர்கள் யஜமானன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள், மனைவி கணவன் வார்த்தையைக் கேட்க மாட்டாள், இப்படிக் கீழ் மேலாக மாறும்படி ஆகப் போகிறது” என்கிறபடியே, பொருள்களின் தன்மையானது மாறாடும் படியான கலிகாலமானது கழிந்தது. அன்றிக்கே, போவது வருவதாகத் திரிகின்ற கலிகாலம் என்னலுமாம். தேவர்கள் தாமும் புகுந்து-இவ்வருகில் உண்டாக்கப்பட்டவர்களான இந்திரன் முதலான தேவர்கள்; அன்றிக்கே, அவர்கள் சம்பந்தம் சிறிதும் பொறுக்க மாட்டாமல் 3வாந்தி பண்ணும் நித்தியசூரிகளும் அகப்பட ‘இவ்விடம் சம்சாரம்’ என்று பாராமல் புகுந்து என்னுதல். பெரிய கிருதயுகம்பற்றி – கலிகாலம் முதலிய காலங்களால் மறைக்கப்படுதல் இல்லாத 1ஒரு போகியான கிருதயுகத்தையுடையராய். பற்றி – பற்றினவராய்; இது, தேவர்களுக்கு அடைமொழி. 2அன்றிக்கே, ஆப்பான் ‘ஆதி சிருஷ்டியில் கிருதயுகத்தைக் காண் சொல்லுகிறது’ என்பராம். இங்கு, பற்றி என்பதற்குத் தொடங்கி என்பது பொருள். பேர் இன்ப வெள்ளம் பெருக – அந்தம் இல்லாத பேரின்ப வெள்ளம் இங்கே உண்டாகும்படி. பெரிய கிருதயுகம்பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக – ஆதிகிருதயுகம் தொடங்கி நடுவுள்ள கலிகாலத்தின் தோஷங்கள் தெரியாதபடி பேரின்ப வெள்ளம் பெருகிற்று. 3‘கிண்ணகம் இத்தைப் பற்றிப் பெருகிற்று’ என்னக் கடவதன்றோ. 4அன்றிக்கே, பற்றி என்பதற்கு, கலியைப் போகப் பற்றி என்றும், கிருதயுகத்தைப் புகுரப் பற்றி என்றும் பொருள் கூறலுமாம். கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன்பூதங்கள் – 1“மேகஸ்யாமம் – நீருண்ட மேகம்போல் கரிய” என்கிற வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாற் போன்று, எழுதிக்கொள்ளும் சிரமஹரமான வடிவிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள். மண்மேல் இரியப் புகுந்து – 2பெரிய ஆரவாரத்தோடே சஞ்சரிப்பது நித்திய விபூதியிலே யன்றோ; சம்சாரத்திலே ஆரவாரத்தோடே புகுந்து. இசை பாடி-பகவானை அநுபவிப்பதனால் உண்டாகும் பிரீதியாலே பாடி. எங்கும் இடம் கொண்டனவே – எங்கும் தங்களுக்கு இடமாகக் கொண்டார்கள். புறச் சமயத்தாருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் இடம் இல்லாதபடி 3சிஷ்யர்களும் சிஷ்யர்களுக்குச் சிஷ்யர்களுமாக எங்கும் பரந்தார்கள். 4“வாநரங்களால் சூழப்பட்டுள்ள மதில் அகழி இவற்றின் பிரதேசங்களை, வானரங்களால் செய்யப்பட்டதுபோல் இருக்கிற பிராகாரமாக அரக்கர்கள் கண்டார்கள்” என்கிறபடியே, பிரதிகூலர்க்கு இடம் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.

நித்ய சூரிகளும் புகுந்து பரிமாறும் படி சம்சாரம் இங்கேயே ஆன பின்பு –
திரியும் கலி யுகம் -மாற்றி விடும் கலி யுகம் -நீங்கி
கிருத யுகம் போலே ஆனபின்பு இன்ப வெள்ளம் பெருகி
மண் மேல் நெருங்கி புகுந்து இசை பாடி எல்லா இடத்திலும் பரவி
பதார்த்த ஸ்வபாவங்கள் மாறும் படியான கலி யுகம் -திரியும் –
பவிஷ்யதி
நான்கு கால் -ஒவ் ஒன்றாக இப்பொழுது ஒரே காலில் தர்மம் நிற்க

“ந ச்ருண்வந்தி பிது: புத்ரா ந ஸ்நுஷா ந சகோதரா:
ந ப்ருத்யா ந களத்ராணி பவிஷ்யதி அதர உத்தரம்”

என்பது, பாரதம் மோக்ஷ தர்மம்.

முதற்பெருந் தேவெனும் முகுந்தன் பூசனை
அதர்ப்பட ஆற்றிடார், அரிய மாமறை
விதத்தொடு முரணிய விரியும், ஆகம
மதத்தொடு மருவுவர், மாக்கள் என்பவே.
மைந்தர்தம் மாமியர் மாமனார் சொலச்
சிந்தை உண்மகிழ்ந்து தீங்கெனினும் செய்குவர்;
தந்தையர் தாயர்சொற் சார்ந்து கேட்கலர்;
நிந்தனை புரிகுவர்; நிலத்தின் என்பவே.

என்பன, பாகவதம் பன்னிரண்டாங்கந்தம் கலிதன்மம் உரைத்த அத். செய்.
15. 20.

அப்படிப்பட்ட கலியுகம் நீங்கி –
கதவ போய் வருவதாக திரியும் கலி யுகம் நீங்கி சாத்விக குணம் ஒன்றே ஆனபின்பு
தேவர்கள் தாமும் புகுந்து -ஆக்கப்பட்ட இந்த்ராதிகள் மட்டும் அன்றி –
இந்த்ரன் ஸ்தானம் -போலே –
லோக கந்தம் பொறுக்காமல் வாந்தி எடுப்பார்கள் -கால் பாவாமல் -இருப்பர்
ஹவிர்பாவம் வாங்க கையை மட்டும் நீட்டி
நித்ய சூரிகள் ஸ்வர்க்கம் இப்படி பார்ப்பார்கள்
அப்படிப்பட்ட நித்யசூரிகள் இங்கே புகுந்து –
ஸ்ரீ வைஷ்ணவ சமர்த்தி -கிருத யுகம் நல்லடிகாலம்
பெரிய கிருத யுகம் -நான்கும் சேர்ந்து ஒன்றாக ஆனதால் பெரிய கிருத யுகம் தானே
1000 தேவ சம்வச்தரம் -10000 தேவ சம்வத்சரம் ஆனதால் பெரிய கிருத யுகம்
ஒரு கோவியான கிருத யுகம்
அன்றிக்கே

மகா பிரளயம் -ஆத்தான் திருவழுந்தூர் அரையர் -அடுத்த கிருத யுகம் தர்க்மம் குறையும்
ஆதி சிருஷ்டியில் உண்டான கிருத யுகம் -பெரிய கிருத யுகம் -தர்மம் சுத்தமாக இருந்ததால் –
அந்தமில் பேர் இன்ப வெள்ளம் இங்கேயே உண்டாகும்படி -உபதேசத்தால் –
கலியை போக பற்றி கிருத யுகம் அடையும் பற்றி
கடல் வண்ணன் பூதங்கள் -கரிய முகில் வண்ணன் –
மேக சியாமள வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டான் -அது போலே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மேனி அழகில் தோற்று

திருமேனிக்கு உவமை சொல்லுமிடத்து இரண்டனுள் ஒன்றனைக் கூறாது,
முகில், கடல் என்னும் இரண்டனையும் சொல்லுவான் என்? என்னும்
சங்கையிலே முன்னையதைத் திருஷ்டாந்தமாக்கி அருளிச்செய்கிறார்
‘மேகஸ்யாமம்’ என்று தொடங்கி.

“மேகஸ்யாமம் மஹாபாஹீம் ஸ்திரசத்வம் த்ருடவிரதம்
கதா த்ரக்ஷ்யா மஹோராமம் ஜகத: சோகநாசனம்”

என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 8.

மண் மேல் -பெரிய ஆரவாரத்தோடு சஞ்சரிப்பது நித்ய விபூதியில் இ றே
ஸ்தானம் பிரதி கூலருக்கு இடம் இன்றி
70 வெள்ளம் வானர சேனை நிறைந்து -இலங்கை நிறைந்து
பரந்ததற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘வானரங்களால்’ என்று தொடங்கி.

  “கிருத்ஸ்நம் ஹி கபிபி; வியாப்தம் பிராகார பரிகாந்தரம்
தத்ருஸூ ராக்ஷசா தீநா: பிராகாரம் வாநரீகிருதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41; 97.

லோகம் அடைய இப்படி திருந்திற்று

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: