திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

உறுவது ஆவதுஎத் தேவும்எவ் வுலகங்களும்
மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்துஇத் தனையும்
நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
திருக்குரு கூரதனுள்
குறிய மாண்உரு வாகிய நீள்குடக்
கூத்தனுக்கு ஆட்செய்வதே.

    பொ-ரை : எல்லாத் தேவர்களும் எல்லா உலகங்களும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் ஆகிய இத்தனையும், குற்றம் இல்லாத மூர்த்தியைப் போன்று இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க, வயல்களிலே நெற்பயிர்கள் கரும்புகளைப் போன்று ஓங்கி வளர்கின்ற திருக்குருகூர் என்ற திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற பிரஹ்மசாரி வேடத்தையுடைய வாமனனாகிய நீள்குடக்கூத்தனுக்கு அடிமை செய்வதே சீரியதாயும் தக்கதாயுமுள்ள புருஷார்த்தம் ஆகும்.

    வி-கு : ‘இத்திருப்பாசுரத்தை ஆட்செய்வதே உறுவது ஆவது,’ எனப் பூட்டுவிற்பொருள்கோளாக முடிக்க. ‘மற்றும் இத்தனையும் மறுவின்மூர்த்தியோடு ஒத்துத் தன்பால் நின்ற வண்ணம் நிற்க’ எனக்கூட்டுக. மாண் – பிரஹ்மசாரி. குடக்கூத்தன் – குடக்கூத்து ஆடியவன்; கிருஷ்ணன்.

ஈடு : பத்தாம் பாட்டு. 1‘தன் ஐஸ்வரியத்தில் ஒன்றும் குறையாமல் வந்து திருநகரியிலே நின்றருளுகின்ற பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கையே தக்கது,’ என்கிறார்.

    ‘நீள் குடக்கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது ஆவது,’ என்க. 2‘உறுவதும் இது – சீரியதும் இது; ஆவதும் இது – செய்யத்தக்கதும் இது,’ என்னுதல். அன்றிக்கே, ‘உறுவதாவது இதுவே’ என்னுதல். எத்தேவும் எவ்வுலகங்களும் – எல்லாத் தேவர்களும், தேவர்களுக்கு இன்பத்தை அனுபவிப்பதற்குரிய இடங்களான எல்லா உலகங்களும். மற்றும் – மற்றும் உண்டான உயிர்ப்பொருள்களும் உயிரல்பொருள்களும். தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து – தன்னிடத்து வந்தால் 3மறு இல்லாதபடி மூர்த்தியோடு ஒத்து. என்றது, 4இவை மூர்த்தியாமிடத்தில் பிரகிருதி சம்பந்தம் இல்லாத விக்கிரஹத்தைப் போன்று குறைவு இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி. மறு ஆகிறது – குற்றம்; அதாவது, குறைவு; இது இன்றிக்கே இருக்கை. பிரிந்து நிலைத்திருக்கையும் தோன்றுதலும் முதலானவைகள் இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தவாறு.

    அன்றிக்கே, மறுவையுடைத்தான விக்கிரகம் – ஸ்ரீவத்சத்தையுடைத்தான விக்கிரகம்; அதனோடு ஒத்து என்னுதல்; மறு   – ஸ்ரீவத்சம்; இல் – வீடு; இருப்பிடம். அன்றிக்கே, மறு இல்லாத மூர்த்தி உண்டு – குற்றங்கட்கு எதிர்த்தட்டான விக்கிரகம்; அதனோடு ஒத்து’ என்னுதல்;

மறு – குற்றம். 1‘இவை சரீரத்தோடு ஒத்திருத்தலாவது என்?’ என்னில், பிரிந்து நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத ஆதார ஆதேய பாவ – ஏவுகின்ற ஏவப்படுகின்ற பாவ – சேஷிசேஷ பாவமான சரீர இலக்கணங்கள் இவற்றிற்கு உண்டு ஆகையாலே. 2மரத்திலே தேவதத்தன் நின்றால் அது அவனுக்குச் சரீரமாகாதே அன்றோ? இங்கு அங்ஙன் அன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

    இத்தனையும் நின்ற வண்ணம் தன்பால் நிற்க – இவையடங்கலும் இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க. 3தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரமாகையாலே அடிமையாம்படி இருக்கிற இந்த ஐசுவரியத்தில் ஒன்றும் குறையாதபடி வந்து நிற்கை. என்றது, ‘இரு வகையான உலகங்களையும் உடையவனாகையாலே வந்த ஐசுவரியம் அடையத் தோற்றும்படிக்கு ஈடாக ஆயிற்று இங்கு வந்து நிற்கிறது,’ என்றபடி. ‘நன்று; தாழ நிற்கிற இடத்தில் ஐசுவரியம் தோற்றுமோ?’ எனின், இராஜபுத்திரன் ஓர் ஒலியலை உடுத்துத் தாழ இருந்தாலும் இறைமைத்தன்மையில் குறைந்து தோன்றாதே அன்றோ?

    செறுவில் செந்நெல் கரும்போடு ஓங்கு திருக்குருகூர் அதனுள் – வயல்களில் செந்நெற்பயிர்களானவை கரும்போடு ஒக்க ஓங்காநின்றுள்ள திருக்குருகூரதனுள்; 4பரமபதத்திலே எல்லாரும் ஒருபடிப்பட்டு இருக்குமாறு

போலே, அவ்வூரில் பொருள்களில் ஒன்றில் ஒன்று குறைந்திருப்பதில்லை; குறிய – கோடியைக் காணியாக்கினாற்போலே, கண்களால் முகக்கலாய் இருக்கும்படி வடிவை அமைத்தபடி. மாண் உருவாகிய – இட்டபோதொடு இடாத போதொடு வாசியற முகமலர்ந்து போகும்படியாக இரப்பிலே தழும்பு ஏறினபடி. நீள் குடக் கூத்தனுக்கு – 1குடக்கூத்து ஆடிவிட்ட பின்பும், மனத்தைக் கவர்கின்ற அச்செயலைப் பிற்பட்டகாலத்தில் கேட்டார்க்கும் சம காலத்திலே கண்டாற்போலே பிரீதி பிறக்கும்படியாயிற்றுக் குடக்கூத்து ஆடிற்று. ஆள் செய்வதே – 2அச்செயல் தானே அடிமையிலே மூட்டும்; நீங்கள் இசையுமத்தனையே வேண்டுவது. 

மும்மூர்த்தி சாம்யம் அருள வில்லை முனியே நான்முகனே முக்கண்ணப்பா
மூவரில் ஒருவரை உம மனத்தில் வைத்து –
அந்தராத்மா -சரீர -சரீரி  பாவம்
ஒன்றும் தேவும் இருந்ததோ ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் பிழைத்ததோ -எம்பார்
கபால நன் மோகம் கண்டு கொண்டு நாயகன் அவனே -பேச நின்ற சிவனுக்கும் பிரமனுக்கும் மற்று எவருக்கும்
பரத்வம் ஸ்பஷ்டமாக
அர்ச்சையில் பரத்வம்
உயர்வற –
நாராயணன் சொல்லாமல்
வ ண் புகழ் நாரணன் திண் கழல் சேரே அப்புறம் அருளி
இங்கு திரு குருக்கூர் நின்ற ஆதிப்பிரானே பரத்வம்
இதுக்கு உண்டான பெருமை –
அவனுக்கு அடிமை செய்வதே உசிதம்
பரன் திறம் அன்றி மற்ற தெய்வம் இல்லை
பிரகாரமாக தான்
ஒப்பார் மிக்காரை இளையாள மா மாயன்

தனது ஐஸ்வர்யம் ஒன்றும் குறை இன்றி இங்கே எழுந்து அருளி நிற்கும் பிழிந்து நின்ற பிரான்
உறுவது ஆவது –
கடைசில் வைத்து அந்வயம் –
அவனுக்கு ஆள்செய்வதே ஆவது –
அனைவரும் சரீர பூதங்கள்
இப்படி நின்ற வண்ணம் -திரு குருகூர் எழுந்து அருளி
வாமன பிரம்மச்சாரி
குடக் கூத்து ஆடி
சௌலப்ய எல்லை இந்த இரண்டாலும் காட்டி
ஓங்கி உலகு எழுந்த உம்பர் கோமானே
அடி போற்றி
சௌலப்யம் பற்றி வாமனன் கண்ணன் சாம்யம் –
அது அஹமின் அர்த்தம் இது மாமின் அர்த்தம்
உறுவது ஆவது -சீரியதும் இது தான் -அவனுக்கு ஆள் செய்வதே
தகுந்ததும் இதுவே
நாக்குக்கு  ருசியாக உண்ண -ருசி சுசி இரண்டும்

சுமுகம் கர்த்தும் அவ்யயம்
எத்தேவும்
எவ்வுலகும்
மற்றும் சேதன அசேதனங்கள்
அனைத்தும் மறுவில்  மூர்த்தி
திருமேனி -மறுவில் மூர்த்தி -மறு இல்லாத படி தோஷம் இல்லாத அவன் திருமேனி போலே
இவை மூர்த்தி -அப்ராக்ருத திவ்ய மேனி போலே ஆகி
அவனை விட்டு பிரிந்து இருப்பு என்ற நிலை இன்றி இருக்க ஆக மூன்று அர்த்தங்கள்
சரீரம் ஆத்மா போலே -இருக்கும் வரை தான் சரீரம் இருப்பு –

ஆதார ஆதேய பாவம் சொன்னால் போதியதாகாதோ? ‘பிரிந்து
நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத’ என்ற விசேஷணம் எற்றிற்கு?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மரத்திலே’ என்று தொடங்கி. ‘மரத்திலே
தேவதத்தன் நின்றான் என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம் இல்லை; சாதி
குணங்கள் ஒரு வடிவிலே கிடந்தன என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம்
இல்லை; தாரகமாகவும் நியாமகமாகவும் சேஷியாகவும் இருக்கிற ஒரு
பொருளிலே ஆத்தும பாவத்தையும், தார்யம் நியாம்யம் சேஷம் இவற்றோடு
கூடியிருக்கின்ற ஒரு பொருளிலே சரீர பாவத்தையும் கோடல் வேண்டும்,’
என்றார் முன்னும்

மறு மச்சம் உடைய மூர்த்தி ஸ்ரீ வத்சம் ஒத்து
சம்சாரிகள் எதிர் தட்டான திருமேனி
நியந்த -சேஷி சேஷ பாவம்
சரீர சரீரி பாவம் லஷணம் -மூன்று
யஸ்ய சேதனச்ய த்ரவ்யம் —
யதால் காக்கக்படுகிறதோ -ஆத்மா -தாரயித்வம்
நியந்தும் தரித்தால் மட்டும் போதாதே
மரத்தின் மேலே தேவ தத்தன் நின்றான் -தாங்கும் இங்கு சேஷ -நியமிக்காதே
சேஷ தைக -ஸ்வாபவம் -மூன்றாவது
யாரும் யாரையும் நியமிக்கலாமே லோகத்தில் –

திரு விளக்கு பிச்சன் பெரிய பெருமாளை உள்ளே போக கிடக்க நியமித்தது பரிவின் காரணத்தால்
சரீரம் சர்வ காலமும் சேஷ தன்மை உண்டே ஆத்மாவுக்கு
தரிக்க பட்டும் நியமிக்க பட்டும் சேஷ பூதனாகவும் அனைத்தும் அவனுக்கே இந்த வஸ்துக்கள்
மறுவில் மூர்த்தி யோடு ஒக்கு –
மூர்த்தி பல பல வாக்கி –
சரீரமாய் இருப்பவரை உபாசிக்கும்
அருமறையின் பொருள் அருளினான் -அதை ஆயிரம் இன் தமிழால் பாடினான் மாறன் –
ஒன்றும் குறையன்று நிற்க செய்தேயும் -திரு குருகூரில் –
இவனை விட்டு மற்று தெய்வம் நாடுதிரே-

இவ்வுலகத்தில் ஒன்றில் ஒன்று குறையாதிருக்கக் கூடுமோ?’ என்ன,
‘குறைந்திராமைக்குக் காரணம், திவ்வியதேசமாகையாலே’ என்று கூறத்
திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பரமபதத்திலே’ என்று
தொடங்கி.

உபய விபூதி யுக்தன் -இப்படி நிற்க –
ராஜ புத்திரன் ஒரு வஸ்த்ரம் உடுத்து தாள நின்றாலும் -ராஜ புத்திரன் தானே
சர்வஸ்மாத் பரன்
சேய்கள் -செந்நெல் -பதார்த்தங்கள் ஒன்றும் குறையின்றி –
கரும்பு உயரத்துக்கு நெல் ஓங்கு பெரும் செந்நெல் திரு விக்கிரமன்  போலே வளர்ந்து –
கரும்போடும் ஒக்க உயர்ந்த செந்நெல்
தேச விசேஷத்தில் அனைவரும் ஒருப்பட்டு இருப்பாரை போலே இங்கும்
முக்தாத்மா நித்யர் வாசி இன்றி இருப்பார்களே அங்கு

பரஸ்பர நீஸ பாவம் அங்கு –
அது போலே அசித் பதார்த்தங்கள் இங்கு
நெல் போடும் இடத்தில் கரும்பு விளையும் படி -சேர்ந்து வளரும் தேசம்
கோணியை காணி ஆக்கினது போலே -குறிய மாண் உருவாக்கி –
திரட்டு பால் -பாலைசுண்ட காய்ச்சி சுருக்கி கொண்டு
மாண் உருவாக்கி இட்ட போதும் இடாத போதும் முகம் மலர்ந்து வாசி இன்றி –
பிரமச்சாரி லஷணம்
குடக் கூத்து -நீள் -சப்தம் -விட்ட பின்பும் மநோ பாவம் -பின்பும் ஆடும் படி
நீண்ட காலம் வர்த்திக்கும்
மன்று -மன்றம் -நாள் சாந்தி -அற கூத்தாடி மகிழ்ந்தாய் என்னும் பொருந்தி இதுக்கும் படி –
இன்றும் கூத்தாடிக் கொண்டே இருக்கிறான்
நம் பெருமாள் எழுந்து அருளி போன பின்பும் அதே வாசனை நீடித்து இருக்கும்
அவதாரத்தில் கண்டவர் போலே பிறபட்டாரும்
ஆள் செய்வதே
சே ஷிடிதம் அடிமையில் மூட்டும்
இசைவே வேண்டியது

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: