Archive for March, 2013

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-238-247..

March 30, 2013

238-

பாயும் நீர் அரங்கம் -மாயனார் திரு நன் மார்பும்
மரகத உருவம்
தோளும் தூய தாமரைக் கண்கள் –பவள வாயும் -ஆய சீர் முடியும் –
அடியரோர்க்கு அகல முடியுமா தேஜஸ் செவித பின்பு –
வரணம் உடன் சேவை முடி கொண்டான் ஷேத்ரம் யோக சயனம்
கரு நீல வர்ண திருமேனி
தேவிமார் திருவடியில்
பொன் வர்ணம் மகா லஷ்மி
பூமா தேவி பச்சை வர்ணம்
நாபி கமலத்தில் பிரம்மா
ஆதி சேஷ படுக்கை

வர்ணங்கள் உடன் சேவை -முடி கொண்டான் -திருவாரூர் அருகில் –
நீல நிற திருமேனி நம் நெஞ்சை நிறைக்கும் –
தேவிமார் இருவரும் -நான்முகனும் சேவை
இயற்க்கை மூலிகைகள் -சம்ஹிதையில் சொல்லிய படி –
பிரசாதம் பெருமாளும் திருவடியும் சேர்ந்து பரத்வாஜ ஆஸ்ரமம் –
பலி பீடம் அரங்கனுக்கும் ராமனுக்கும் இங்கே உண்டு
70 சர்க்கம்
துர் சொபனம் பரதன் –
ஏழு நாள்களில் திரும்ப -தூதுவர்கள் உடன் -பரிசு பொருள்கள் உடன் -முதலில் வந்தார்கள்
குசல பிரச்னம் செய்கிறார்கள் நாட்டுக்கு உடன் திரும்ப செய்தி வசிஷ்டர் –
தூதர் முகம் பார்த்து சோகம் எதனால் பரதன்
நிழல் படிந்தது -மேகம் மேலே இருந்தால் படுவது போலே
சத்ருக்னன் உடன் சென்றான்

239

ஆஸ்தானாம் -ராம சந்த்ராம் -நம
அற்புதமான சித்திரங்கள் முடி கொண்டான்
விஷ்வக் சேனர் நம் ஆழ்வார் மாறன் அடி பணிந்து உய்ந்தவர் சேவை
ஆதிசேஷன் லஷ்மணன் பல ராமன் ராமானுஜர் 1017-1137 வரை எழுந்து அருளி –
71 சர்க்கம்
வாயு  வேகம் மநோ வேகம் குதிரைகள் ஓட –
சுதாமா ஹலாதினி நதி கடந்து
சரத்யுமம் -நதி தாண்டி –
சித்ரா ரதம் காட்டை தாண்டி –
யமுனை நதி அடைந்து ஒய்வு எடுத்துக் கொண்டு –
பாகீரதி அடைந்து கங்கை தாண்டி –
தோரண தேசம் தாண்டி -கலிங்க நகரம் தாண்டி
கோசல தேசம் அடைந்து -சரயு நதி கரையில்
முதலில் பார்க்கும் பொழுது உயர்ந்த கோயில் நதி கண்டு பெருமிதம்
அயோதியை அபராஜிதா கண்டு
கொஞ்ச நேரம் தான்
நெருங்க நெருங்க ஹோம புகை காணோம்
தோட்டம் தோரணங்கள் காணாமல் துக்கப் பட்டான்
யானை பிளிறலும் கேட்க வில்லை
வியாபாரிகள் காணோம்
தேரோட்டி இடம் துக்கமாக பேசுகிறான் பரதன்
தனது மனம் தான் கேட்டதாக நினைத்து

optimistic /pesimistic /realistic மூன்று வகை பட்டவர்கள்
தன்னால் தான் இப்படி என்றும் நினைத்தானாம்
அலஷ்மீகரமாக இருக்க -அலங்காரம் இழந்து இருக்க
புஷ்பக் கடைகள் சந்தன கடைகள் இல்லையே
அரசபை புகுந்தான்
தசரதனை சேவிக்க
உள்ளே புகுந்தான் -யாரும் சிரித்து  வரவேற்கவில்லை

240

கவசி கட்கி கச்சன் மஹா பாஹோ -லஷ்மணன் உடன் கூடி
சாப பாண -வில்லும் அம்பும் பற்றிக் கொண்டு இளமை மாறாமல் முன்னே செல்பவன் நம்மை காக்கட்டும்
8 அடி உயர்ந்த திருமேனி
முடி கொண்டான் -மகுட வர்தன புரம்
சீதா ராமர் லஷ்மணர் சேவை
மூலவர் போலே உத்சவர்
ஆபரணங்கள் அழகை மூடி மறைக்க
இயற்க்கை திருமேனி மனம் கொள்ளை போகுமே
கை வண்ணம் தாமரை -அவரை நாம் தேவர் என்று அஞ்சி னோமே
இருவராய் வந்தார்
பேசத் துடிக்கும் திரு அதரங்கள்
திரு தோள்கள்
திருவடிகள் ஆசன பத்மத்தில் அழுந்தியசுந்தரி ரகுநாதச்ய -உண்ணாது உறங்காது ஒலி கடலை –
சீதை ராமன்லஷ்மணன் மூவரையும் சேவிக்கப் பெற்ற பாக்கியம் திருவடி சேவை
72 சர்க்கம்-
தசரதன் அந்தபுரம் காணவில்லை
கைகேயி அந்தபுரம் போக -தாய் குசல பிரசனம் செய்ய
திகைத்து கோலம் மாறி இருக்க –
அழுகை இன்றியும் இருக்க -கலங்கினான்
அனைவரும் நலம் -வசிஷ்டர் அவசரமாக வர சொன்னார்
எதனால் அலம்கோலம் உண்மையாக சொல்லு
யாராக இருந்தாலும் போக வேண்டிய து போலே தந்தையும் போனார்
சகஜமாக சொல்ல
தரையில் விழுந்து புரண்டான்
நெஞ்சு இழந்து சோகம் மிக்கு
ஆல மரம் போலே விழுந்து இருக்க
உத்திஷ்டே ராஜன் -சோகப்பட கூடாதே
தூக்கி வாரிப் போட துடித்து எழுந்தான்
வாளேறு காண தேளேறு மறந்தது போலே –
தன்னை அரசன் -அடிமை தானே ஸ்வரூபம் அதை அழிக்க பார்க்கிறாளே
கேட்டு அதிர்ந்தான்
துடித்து எழுந்தான் –
தயரதன் மரித்தான் -எங்கேயோ போன ராமர் என்று சாதாரணமாக கைகேயி சொல்ல
ராமனுக்கு என்ன நடந்தது சொல் துடிப்புடன் கேட்டான்

241

லோகாபிராமம் ஸ்ரீ ராமம் -நமாம்யஹம்
மங்களம் கொடுக்கும் சத்யசீலன் -கருணை மிக்க காகுஸ்தன்
கோதாவரி பஞ்சவடி நதிக்கரையில் மாயமான் -ஜடாயு மோஷம் அளித்த இடம்
நன்னிலம் அருகில் -திரும்ப நடத்திக் காட்ட ரிஷிகள் பக்தனுக்கு சேவை
அச்சுத மங்கலம் -இறங்கி -நடந்து -அதன்பால் -நல்ல மான் குடி நன்னிலம் –
ஹதம் -பார் முடித்து விடுகிறேன் -கோதண்ட ராமர் ஸ்வாமி சேவை
அம்பு -கொல்லு மான் குடி நடுவில் -ஹா சீதே ஹா லஷ்மணா குரல் கொடுத்து போக –
லஷ்மணன் புறப்பட்டு ராமனை சந்திக்க -உச்சி வெய்யில் களைப்பு
இலை தழை போட்டு நடந்து வர –
பரணசாலை சீதை பிராட்டி இன்றி –
ஆயாசம் களைப்பால் இருந்த தேசம் -பட்டாபி ராமர் -ஐந்து ஊரையும் சேவை
ஆச்சர்யமான சேவை இன்றும் ராம பக்தர்களுக்கு
ஆயிரம் வேலி -யானை கட்டி போர் அடி-வானை முட்டும் போராம்
செழிப்பு
நின்ற திருக் கோலம் கல்யாண ரெங்க நாத ஸ்வாமி –
ராமன் -ஆராதன பெருமாள் விடாமல் சேவை –
72 சர்க்கம் –
தகப்பனார் மரித்த காரணம் என்ன –
ராமன் எங்கே –
உச்சி முகர்ந்து நுழைந்த உடன் பார்ப்பானே –

242-

காவேரி விரஜா ..பிரத்யட்ஷம் பரம பதம் -பூ லோக ஸ்ரீ வைகுண்டம்
பரவாசுதேவனே ஸ்ரீ அரங்க நாதன் –
அங்கெ அமர்ந்த திருக்கோலம் இங்கே சயன திருக்கோலம்
கல்யாண ரெங்கநாதன்
கோதண்ட ராமர் திருக்கோயில் வீற்று இருந்த நன்னிலம் அருகில்
கொண்டல் வண்ணனாய் -கோவலனாய்
கிரீட மகுட சூடாவதம்ச திரு ஆபாரணங்கள்
ஒரே கற்ப க்ரஹத்தில் ராஜகோபாலன் அரங்கன் நர்த்தன கண்ணன் ஆச்சார்யர் ஆழ்வார் சேவை
73 சர்க்கம் –
பரதன் ராமன் திருவடிகளில் விழ பாரிக்க
கைகேயி வார்த்தை -15 ஆண்டுகள் கழித்து எப்பொழுது பார்ப்பேனோ தயரதன் சொல்லி ஹா மயங்கி விழ
தசரதன் மரித்தான்
ராஜன் சொல்லி அடுத்த துக்கம்
இரண்டாவது துக்கம் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசே வேண்டியவன்
இப்பொழுது பெரிய துக்கம் பெருமாள் இங்கே இல்லை –
கைகேயி பிரியமானதை பேசுவது போலே ஈட்டியால் குத்தியது போலே பேச
நல்லது செய்வதாக
என்னையும் -என் பெற்றாய் கைகேயி –
பெருமாள் எதனால் நாட்டில் இருந்து போனார் –
தனது நினைவு மறந்து -உனக்கு வரம் வாங்கி அனுப்பினேன்
உண்மை பேசினாளே ஆசார்யம் தான்
ராமன் குற்றவாளி அல்லன் –
புத்திர சோகத்தால் தசரதன் மரிக்க
உனக்காக ராஜ்ஜியம் சம்பாதித்து வைத்து இருக்கிறேன்
தைர்யம் ஆக ஆளலாம்
வசிஷ்டர் வைத்து முடி சூடலாம் –
சட்டு என்று அனைத்தையும் சொல்ல -மயக்கி பேசாமல் உண்மை பேச
துடித்த பரதன் வசவு பாடுகிறான் 73 சர்க்கம்
மக்கள் மரித்தால் போலே ராமனை காட்டுக்கு அனுப்பினாயே பேச ஆரம்பிக்கிறான்

243

ராமாய ரகு நாதாயா சீதையா பதயே நம
பத்ரம் பல்லாண்டு போற்றி மங்களம்
ராம பத்ரன் -அவனே புனிதம் -அவனுக்கு மங்களம் உண்டாகுக
ரகு குலத்தில் பிறந்த நாதன்
சீதைக்கு பதி
நன்னிலம் -அச்சுத மங்கலம் அதாம்பா மாயமான் நடக்கப் பெற்ற ஸ்தலங்கள்
மூலவர் சித்திர ரூபத்துடன் சேவை
உத்சவர் மிக பெரிய திரு உருவம்
73 சர்க்கம் –
கௌசல்யை ஒரே பிள்ளையை பெற்று -அவளுக்கு காட்டிய நன்றி இதுவா
மான் தோல் மர உரி அனுப்பி ராமனை அனுப்பி என்னை வெண் கொற்றக் குடை கீழ்
ராஜ்ஜியம் ஆள சொல்கிறாயே
மூத்தவனே பட்டாபிஷேகம் இஷ்வாகு குல ராஜ தர்மம்
பத்னி தர்மம் விலகி
தாய் கடமை தவறி
ராஜ்ய குல தர்மம் மீறி
மூன்றாலும் குற்றம் செய்தாயே
ராமன் உள்ள சித்ர கூடம் போகப் போகிறேன்
தாச பூதன் தானே
உன்னால் அனைவருக்கும் சோகம் தான்
நீ கேகேயி புத்ரி இல்லையா -ராஜ்ய தர்மம் மீறி நடந்தாயே
அன்புடையார் -பேர் அன்பு -தாயார் -மனசில் இருந்து குழந்தை பிறக்க -இப்படி செய்வாயா
ஒரு குட்டி கதையும் சொல்கிறான்
இந்த்ரன் தேரில் பறக்க காமதேனு தனது குட்டிகள் அழ
கண்ணீர் பார்த்து இந்த்ரன் கேட்க
வயற்றில் பிறந்த காள மாடுகள் துன்பம் படுகின்றன என்று அழ
நீயே காட்டுக்கு போ -அழிந்து போ –
அழுது அலற்றி பூமியில் சரிய
கௌசல்யை சுமத்ரை என்ன நடக்கிறது அருகில் வந்தனர்

244

ஐந்திலே ஓன்று பெற்றார் -ஐந்திலே ஓன்று வைத்தான் நம்மை அளித்து காப்பான்
ஐந்து பூதங்கள்
ஆசார்ய பஞ்ச சம்ஸ்காரம் அர்த்தங்களும் சொல்லி
நெருப்பை கொண்டு இலங்கை அழித்து
ஐம் பெரும் பூதங்களும் ஆஞ்சநேயருக்கு உதவ
திருச்சி -புகை வண்டி நிலையம் அருகில் -ஆஞ்சநேயர் திருக் கோயில்
சுத்தமாக பராமரிக்கப் பெற்று
கோபுரம் ஸ்ரீ இராமாயண கதைகளை சொல்லி
பல்லாண்டு காப்பிட்டார் பெரியாழ்வார்
மண்டபங்களில் அழகிய சித்திரங்கள் சேவை –
1928-மைல் கல்கள் நிறுவ -பல கல்கள் –
ஒன்றில் ஆஞ்சநேயர் உருவாக
செங்குத்தாக நட்டு வைத்து
ஆர்ம்ஸ் டே மேலாளர் -கால் தடுக்கி கீழே விழ
பெயர்த்து எடுத்து ஓரமாக வைக்க
கனவில் 2000 குரங்குகள் துன்புறுத்த
புகை வண்டி போகாமல் குரங்குகள் தடுக்கும் செய்தி வர வியந்தார்
உணர்ந்து பெரும் இடம் ஒதுக்கு தனது ஒரு மாத சம்பளம் கொடுத்து
ஆகம முறையில் பிரதிஷ்டை செய்ய
73/74 சர்க்கம்
தாய் உருவில் வந்து இருக்கும் பேய் என்கிறான் பரதன் –
தாய் உள்ளத்தில் அன்பால் பிறக்கும் -பிள்ளையை பிரித்து
சுமத்ரை ஒரு பிள்ளை உண்டு சமாதானம் அடையலாம்
காமதேனு கதை சொல்லி -இந்த்ரன் உனது கவலை போக்குவேன்
கைகேயி -இடம் இந்த கதை சொல்லி -ஒரு மகனை பெற்ற கௌசல்யை எப்படி துக்கம்
நான் காட்டில் இருந்து ராமனை திரும்பி அனுப்புவேன்
நீயே உன்னை முடித்துக் கொள்
அங்குசத்தால் அடி பட்ட யானை போலே விழுந்தான்
ராகு கேது சூழ்ந்து -இருள் –
கௌசல்யை சந்தித்து சபதம் செய்யப் போகிறான் கேட்ப்போம்

245-

வருவார் செல்வார் -திருவாழ் மார்பர் -உடைய நங்கையார் பிறந்த ஸ்தலம் திரு வண் பரிசாரம்
சங்கு சக்கரம் சுமக்க லஷ்மணன் தவிர மற்று இல்லையே
கைங்கர்யம் எனக்கு கொடுக்கக் கூடாதா
விளம்பம்-சதா பஞ்சாயுதம் -கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
அபயம் கரே –
கல்லுக்குழி ஆஞ்சநேயர்
சக்கரத்து ஆழ்வார் சேவை -அடியார்களை காக்க 16 திருக் கரங்கள்
சங்கம் சக்கரம் அஸி சாரங்கம் -சத முக அக்நி
ஷோடச ஆயுதங்கள்
யோக நரசிம்ஹர் -அங்கு அப்பொழுதே தோன்றிய சிங்க பிரான் பெருமை
உக்ர நரசிம்ஹர் இல்லை யோக நரசிம்ஹர் பகத் ரஷண சிந்தை உடன்
பரதன் -40 பாபங்கள் வரட்டும் என்று பட்டியல்
கௌசல்யை சற்றே சங்கிக்க சூழ் உரைக்கிறான் –
நமக்கு சொல்ல 40 தீய செயல்கள் -விட வேண்டும் என்ற வால்மீகி மறை முகமாக வைக்கிறார்
தர்மம் வழி எவை குற்றம் -சொல்லி காட்டுகிறார் 75 சர்க்கம்
அரசில் விருப்பம் இல்லை என்றும் ராமனே அரசன்
கைகேயி செய்தது குற்றம் தான்
நெடு நோக்கு பார்வை உடைய பரதன்
அயோதியை இருக்காமல் திட்டம் இட்டு போக வில்லை
ராமனின் பின்னே பிறந்த பரதன் சடை முடி புனைய போகிறான் என்கிற நெடு நோக்கு
முடி துரந்து பாதுகை வைத்து ராஜ்ஜியம் நடத்தி –
குரூரமான வரத்தை புத்திர பாசத்தால் கௌசல்யை பேச
இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை என்னாமல் ஏற்றுக் கொண்டான் பரதன்
புண்ணில் புளி வைத்தால் போலே பேச –
பரதன் சூழ் உரைக்கிறான்
கௌசல்யை நாட்டுக்கு அரசி கலங்க கூடாதே

246-

வந்தே -ஜெயந்தி வைஜயந்தி விபூஷணம் கோபால விம்சதி
நெருஞ்சி முள் காட்டை மாற்ற -தோட்டம் காடு பசுக்கள் பிடிக்கும்
இட்டமான பசுக்களை -மேய்த்து தண்ணீர் காட்டி தடவி வளர்த்தான்
காளி ங்க நர்த்தனன் வேணு கோபாலன் மாடு மேய்க்கும் வெண்ணெய்க்கு ஆடும் திருக்கோலம்
இரண்டு திருக்கரங்கள் இடுப்பில் வைத்து –
கையில் புல்லாம்குழல் உடன் விட்டல் பண்டரிநாதன் சன்னதி
75 சர்க்கம் இருக்கிறோம்
பரதன் சூழ் உரைக்கும் பட்டியல்
யஸ்ய ஆர்ய அநுமதி -உடன் சென்று இருந்தால்
பசு மாட்டை கால் உதைத்து அடித்து
சூர்யா சந்த்ரர் பார்த்து மல ஜாலம் கழிக்கும் பாபம்
அரசன் சொல்லிய பிரதிக்ஜை மீறிய பாபம் வரட்டும்
வரி பணம் தனக்கு உபயோகித்து நாட்டுக்கு உதவாமல் இருக்கும் பாபம்
வேத விர்ப்பனர்கள் தஷனை கொடுக்காத பாபம்
நேர்மையான யுத்தம் செய்யாத பாபம்
நுண்ணிய கருத்து கேட்டு உபயோகிக்காமல்
ராமன் மீண்டும் வருவான் சிங்காசாசனம் பார்க்க முடியாதவன் பாபம்
பாயாசம் எள் உணவு காரணம் இன்றி உண்ணும் பாபம்
குருவை அவமதித்த பாபம்
நண்பனை இகழ்ந்த பாபம்
நம்பிக்கை உடன் சொல்லிய ரகசியம் காக்காத பாபம்
நன்றி மறந்த
தீய பண்புகளால் நிந்திக்க படுபவன் பாபம்
தான் மட்டும் உண்ணும் பாபம்
நல்ல மனைவி இருக்க தர்ம செயல்கள் செய்யாத பாபம்
சந்ததியர் துன்ப படுவதை பார்க்கும் பாபம்
வயோதிகர் கொன்ற பாபம்
கள் மாமிசம் விஷம் விற்கும் பாபம்
சத்ருக்கள் எதிர்க்க புற முதுகு இட்டு ஓடும் பாபம்
பெண்கள் இடம் தவறாக நடக்கும் பாபம்
காம குரோதம் ஆள் பட்ட பாபம்
சேர்த்த பொருள் திருடப் பட்டவன் அடையும் துக்கம் அடைவேன்
குருவின் மனைவி இடம் தவறாக நடந்தவன் பாபம்
தாய் தந்தை பணி செய்யாத பாபம்
தாய்  சொல் படி கேட்க்காத பாபம்
கை ஏந்தி வருபவர்களை ஏமாற்றும் பாபம்
வேகமாக பேசுகிறான் பரதன்

247-

யத்ர எத்ர ரகுநாத கீர்த்தனம்
ஆஞ்சநேயர் ஹனுமான் மாருதி ராம தூதன் ராம தாசன்
அஞ்சனை மைந்தன்
யஜஸ் கீர்த்தி வலிமை பணிவு உருக் கொண்டால் போலே
கல்லுக்குழி ஆஞ்சநேயர் சன்னதி
பாரிஜாதம் புஷ்பம் தாங்கி அபய ஹஸ்தம்
வடக்கு நோக்கி அயோதியை
வேண்டும் வரங்கள் கொடுப்பவர்
உத்சவர் ஸ்ரீ நாராயணன் போலே
கூப்பிய கை இல்லை கதை பற்றி இல்லை
இங்கே பெருமாள் நின்ற திருக்கோலம் போலே
ஆசன பத்மம் பதித்த திருவடிகள்
கதை இடது கையில் பற்றி -வலது கை அபய ஹஸ்தம்
லஷம் வடைகள் ஒரே மாலையில் சாத்தி
ஜாங்கிரி மாலையும்
அதே உளுந்தை கொண்டு 1000ஜாங்கிரி மாலை
பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
75 சர்க்கம்
ரிது படி இல்லாத செயல்களால் வரும் பாபம்
அந்தணர் ஏமாற்றிய பாபம்
பொருள் திருடிய தோஷம்
ஈன்ற கன்று -பாலை கொடுக்காமல் வரும் தோஷம்
அக்னி சாஷியாக கொண்ட மனைவி விட்டு வேறு ஸ்திரீ மேலே கண் வைக்கும் தோஷம்
கிணற்றில் விஷம் வாய்த்த தோஷம்
நீதிபதி ஒரு தலை பஷமாக தீர்ப்பு வழங்கும் தோஷம்
பெருமை அறிந்து கொண்டேன்
மகனை பிரிந்த தவிப்பால் வார்த்தை பேசினேன்
பரதனை உச்சி முகந்து பார்த்து –
கம்ப ராமாயணம் பார்ப்போம்
தூதர் வர -பேரி வாத்தியம் -நுழைய
அலங்கோலம் -ஏர் துரந்த வயல் -தாமரை நீக்கிய தடாகம்
பாடல் நீத்தனர் ஆடல்நீத்தனர்
மங்கள வீதியில் கோலம் இல்லை
உற்றது உணர்ந்திலன்
தந்தை காணவில்லை ஐயனை நாடி –
தாய் கேகேய தேச  நலம் விசாரிக்க –

திருப்பல்லாண்டு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

March 29, 2013

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த -முதல் தனியன்

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –

————————————————————————–
குருமுகம் -ஆசார்ய முகத்தாலே
அநதீத்ய-அப்யசிக்காமலே
ப்ராஹ -உபன்யசித்தாரோ
வேதான் -வேதங்களை
அசேஷான் -சமஸ்தமாகிய
நர பதி -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
பரிக்லிப்தம் -ஏற்படுத்தப்பட்ட
சுல்கம்-வித்யா சுல்கத்தை
ஆதாதுகாம -க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
ஸ்வசுரம் -மாமனாரும்
அமர -தேவதைகளால்
வந்த்யம் -ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
ரங்க நாதஸ்ய -ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
ஸாஷாத் -பிரத்யஷமாய்
த்விஜகுல -ப்ராஹ்மண வம்சத்துக்கு
திலகம் -அலங்கார பூதருமாகிய
தம் விஷ்ணு சித்தம் -அந்த பெரியாழ்வாரை
நமாமி -சேவிக்கிறேன்-

————————————————————————–

அவதாரிகை –
இந்த தனியன் திருப்பல்லாண்டு பாடுகைக்கு அடியான பெரியாழ்வார் வைபவத்தை
பெருக்க பேசி அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது –

————————————————————————–
வியாக்யானம் –
குருமுகம் அநதீத்ய –ஸ்வதஸ் சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனும் -சாந்தீபனேஸ் சக்ருத்
ப்ரோக்தம் ப்ரஹ்ம வித்யா சவிஸ்தரம் -என்னும்படி -சாந்தீபநிடத்திலே ஆய்த்து
சகல வேதங்களையும் அதிகரித்தது –
இவர் அங்கன் குருகுல வாஸம் பண்ணி -தந் முகேன -நலங்களாய நற் கலைகள் நாலையும் –அதிகரியாதே -புண்டரீகரைப் போலே துளபத் தொண்டிலே மண்டி –
ஸ்ரீ மாலா காரரைப் போலே சூட்டு நன் மாலைகள் தொடுத்து –
வட பெரும் கோயில் உடையானுக்கு சூட்டி அடிமை செய்து போந்தார் –
ஏவம் வித தாஸ்ய ரஸஞ்ஞரான இவர்-

நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம-என்று ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவாலே பரதத்வ நிர்ணய பூர்வகமாக-புருஷார்த்த லாபத்தை லபிக்கைக்காக அநேகமான அர்த்தத்தை வித்யா சுல்கத்தை கல்பித்து கல் தோரணத்திலே கட்டிவைக்க-இப்படி நிர்மிதமான அந்த தநத்தை வட பெரும் கோயில் உடையானுடைய ஆக்ஜையாலே
ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்கிற அபேஷை உடையராய் -வித்வித் கோஷ்டியிலே சென்று –
அசேஷான் -வேதான் -ப்ராஹ –
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி யறுத்தான் என்றதைச் சொல்லுகிறது –
இவருக்கு அப்போது -வேதப் பிரானாரான -பீதகவாடைப் பிரானார் தாமே -பிரம குருவாய் -போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து -நாவினுளானாய் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளை-இவர் முகேன பேசுவித்தான் இ றே-எயிற்றிடை மண் கொண்ட எந்தையான -ஞானப் பிரான் ஆய்த்து இவரை ஞானக் கலைகளை-ஒதுவித்தது -ஆகையாலே நாட்டாருக்கு ஓதின இடம் ஒழிந்து ஓதாத விடம் தெரியாததாய்-இருக்கும் -இவருக்கு மயர்வற மதி நலம் அருளுகையாலே அசேஷ வேதங்களையும்-அருளிச் செய்யும்படி விசதமாய்த்து -அத்தாலே -வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த-விளக்கை விட்டு சித்தன் விரித்தன் -என்னும்படி -பரதத்வ ஸ்தாபனம் பண்ணி அந்த-வேத தாத்பர்யமான திருப்பல்லாண்டை -அங்கு ஆனை மேல் மங்கல வீதி வருகையாலே –
மங்களா சாசனமாக அருளிச் செய்தார் -வேதான் அசேஷான் –என்கிறதுக்கு உள்ளே இதுவும் அந்தர்ப்பூதம்-வேதைஸ் ச ஸர்வை ரஹ மேவ வேதய -என்னக் கடவது இ றே-
ஸ்வ ஸூரம் –
அநந்தரம் வித்வான்களை வென்று கிழி யறுத்து -அந்த தநத்தை ஸ்வாமி சன்னதியிலே
சமர்ப்பித்து -மீளவும் தம் துறையான துளவத் தொண்டிலே மூண்டு நடத்திக் கொண்டு போர -அக்காலத்திலே ஆண்டாள் இவர்க்கு திருமகளாய் திருத்துழாய் அடியிலே அவதரிக்க இவரும்-திருமகள் போலே வளர்த்துப் போர-அஞ்சு பிராயத்திலே திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியில் பெண்களை அநுகரித்து
திருப்பாவை பாடி -அதுக்கு மேலே அவர் தொடுத்த துழாய் மலரை –
வியன் துழாய் கற்பென்று சூடும் கரும் குழல் மேல் -என்கிறபடியே
சூடிக் கொடுத்தவராய் -பின்பு ப்ராப்த யௌவனையாய் –
மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் -என்றும் –
பண வாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் -என்றும் -சொல்லப்படுகிற-அழகிய மணவாள பெருமாளை பிரார்த்தித்து திருமணம் புணருகையாலே அவர்-அவர் மணவாளபிள்ளை யானார் –
மறை நான்கு முன்னோதிய பட்டனுக்கு இ றே -பட்டர் பிரான் கோதையைக் கொடுத்தது –
ஆகையால் ஔபசாரிகமாக அன்றிக்கே யதாவாக ரெங்கநாதனுக்கு பட்டநாதர் மாமனார் ஆனார்அத்தாலே அமர வந்த்யம் என்கிறது -அதாவது –
வடிவுடை வானோர் தலைவனான தம்மை அவர்கள் அடி வணங்கி ஏத்துமா போலே –
இவர் தம்மையும் அமரர் வந்திக்கும்படியான வரிசை கொடுத்தபடி -தம்மையே ஒக்க அருள் செய்வர் இ றே
பட்டநாதரான மாதரம் அன்றிக்கே தேவர்களாலும் ஸ்துதித்யராய் இருக்குமவர் என்கிறது
விரும்புவர் அமரர் மொய்த்து -என்னக் கடவது இ றே
அஸ்தானே பய சங்கிகள் ஆனவர்களையும் இவர் மங்களா சாசனம் பண்ணுமவர் ஆகையாலே-அவர்களும் இவர்க்கு ஸ்துதிய அபிவாதனந்களை பண்ணுவர்கள் –
பரஸ்பர நீச பாவை -என்னக் கடவது இ றே
இனி ரெங்கநாதனோடே சம்பந்திகைக்கு ஈடான பட்ட நாத குலத்தை சொல்லுகிறது-
த்விஜ குல திலகம் என்று -வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தர் ஆகையாலே –
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென்னரங்கத்தே -என்னும்படி கண்டு கொடுத்தார் -த்விஜ குல திலகர் ஆகையாவது -ப்ராஹ்மண குலத்துக்கு எல்லாம் முக்யராய் -சிரஸா வாஹ்யராய் -ஸ்ரேஷ்டராய் இருக்கை என்றபடி –
தம் விஷ்ணு சித்தம் –
அப்படி ஸ்ரேஷ்டராய் -விஷ்ணுவை எப்போதும் சித்தத்திலே உடையவர் ஆனவரை என்கிறது –
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்என்று
அடியிலே தமக்கு நிரூபகமாக ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே –
விட்டு சித்தர் -என்கையாலே –
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த -என்று பெரியாழ்வார் திருமொழி அடியிலும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்று முடிவிலும் அருளிச் செய்கையாலே-
இந்த திரு நாமத்தாலே அந்த பிரபந்த ப்ரவக்தா என்னுமதுவும் ஸூசிதம் –
அதுக்கும் தனியன் இதுவே இ றே –
அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து
வைகி வாழச் செய்தாய் எம்பிரான் -என்னும்படி
இவர் திரு உள்ளத்திலே அத்ய அபிநிவிஷ்டனாய் இருக்கும் ஆய்த்து –
விஷ்ணு சித்தம் -விஷ்ணு நாவ்ய பதேஷ்டவ்யராய் -இருக்கிற படி –
நின் கோயிலில் வாழும் வைட்டணவன் -என்றார் இ றே
அவனும் வைஷ்ணவ சம்பந்தத்தை அபேஷித்து கைப் பற்றினான் –
தம் விஷ்ணு சித்தம் நமாமி –
அந்த விஷ்ணு சித்தரை -கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று -என்னும்படி
சேவிக்கிறேன் என்கிறது -நமஸ்காரமும் சேவையும் பர்யாயம் –
ஓம் நமோ விஷ்ணவே -என்னுமது விஷ்ணு சித்த விஷயத்திலே யாய்த்து –
விசேஷஞ்ஞர்க்கு பகவத் விஷயத்திலே அரை வயிறாய் -இங்கே இ றே எல்லாம்
பூரணமாவது -நம்பி விட்டு சித்தர் இ றே
இத்தால்
பிரதம பிரபந்த அனுசந்தான தசையில்–தத் வக்தாவான ஆழ்வாரை -தம் பூர்வம் அபிவாதயேத் -என்று பிரதமம் திருவடி-தொழும் படியை சொல்லிற்று ஆய்த்து-

————————————————————————–

இரண்டாம் தனியன் -மின்னார் தட மதிள் இத்யாதி –
அவதாரிகை –
இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்-திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்-அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும்
மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது –

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து-

மின் -மின்னுதல் -மணிகளால் ஒளி விடுதல்
ஆர் -நிறைந்த அதிகமான
தடம் -அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
மதிள் -திரு மதிளாலே
சூழ் -வளைக்கப்பட்ட
வில்லி புத்தூர் என்று -ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
ஒரு கால் சொன்னார் -ஒரு தரம் உச்சரிதவருடைய
கழல் கமலம் -திருவடித் தாமரைகளை
சூடினோம் -விசேஷ புஷ்பமாக முடித்தோம்
முன்னாள் -புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
கிழி -பொருள் முடிப்பை
அறுத்தான் என்று -அறுத்து வெளி இட்டவர் என்று
உரைத்தோம் -சொல்லப் பெற்றோம்
ஆகையால்
கீழ்மை -நரகத்தில்
இனி -இனிமேல்
சேரும் -முன் போல் செல்லுகிற
வழி -மார்க்கத்தை
அறுத்தோம் -அறப் பண்ணினோம்
நெஞ்சே -மனசே
வந்து -சம்ஸார ரஹீதராய் வந்து

வியாக்யானம்

மின்னார் தட மதிள் சூழ் –
தேஜ பரசுரமான பெரிய மதிள்களால் சூழப் பட்ட வில்லி புத்தூர் -இத்தால்
செம்பொன் ஏய்ந்த மதிளாய் இருக்கை –
பிரதி கூலருக்கு கிட்ட ஒண்ணாத படியாய் -அனுகூலருக்கு கண்டு வாழும் படியாய் இருக்கை-
கல் மதிள் போல் அத்தலைக்கு அரணாய் -மங்களா சாசன பரரான பெரியாழ்வார் இருக்குமூரில் மதிள் இ றே -ஏவம்விதமான மதிளாலே சூழப்பட்ட

வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் –
ஒருகால் ஆகிலும் ஸ்ரீ வில்லிபுத்தூரை உச்சரித்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய ஸ்ரீ பாத கமலங்களை-பைம் கமலத் தண் தெரியலாக -தலையிலே சூடினோம் –
கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலவே -என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது –
ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் வட பெரும் கோயில் உடையானுக்கும் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து –
வில்லிபுத்தூர் உறைவான் –
வில்லிபுத்தூர் பட்டர் பிரான் –
அன்ன வயல் புதுவை ஆண்டாள் –
கோதை பிறந்தவூர் -வில்லிபுத்தூர் -என்னக் கடவது இ றே
பிரணவம் போலே மூவரும் கூடலாய் இருக்கை

இப்படி உத்தேச்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்போதும் உத்தேச்யர் ஆகையாலே-அவர்கள் ஸ்ரீ பாதங்கள் சிரோ பூஷணமாக தார்யம் என்கிறது –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னுமா போலே –

பின்னை விரோதிகள் செய்தது என் என்னில் –
முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
முன்னாள் கிழி யறுக்கை யாவது –
முற்காலத்திலே பாண்டியன் வித்யா சுல்கமாக கட்டின த்ரவ்ய கிழியை அங்கே  சென்று
வேதாந்தார்த்த முகேன -விஷ்ணுவே பரதத்வம் என்று விஷ்ணு சித்தரான தாம் வித்வஜ்
ஜனங்களை வென்று த்ரவ்யக் கிழியை யறுத்த ஆழ்வார் உடைய இந்த அத்யத்புத கர்மத்தை அனுசந்தித்தோம்
அத்தாலே
கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி -த்யக்த்வா தேஹம் -புநர்ஜன்ம நேதி
மாமேதி சோர்ஜுந -என்று
கிருஷ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம சம்சார பந்தத்தை அறுக்குமா போலே
யாய்த்து விஷ்ணு சித்தர் ஜன்ம கர்மங்களும் –
இங்கும் ஸ்ரீ வில்லி புத்தூர் ஜன்மமும் கிழி யறுக்கை கர்மமுமாய் இருக்கும்
கீழ்மையினில் சேரும் வழி யறுக்கை யாவது –நிஹீன க்ர்த்யத்தாலே ப்ராபிக்கும் ப்ரதிபந்தகமான மார்க்கத்தை சேதித்தோம் -புற நெறிகளை கட்டு -அவைதிக மார்க்கத்தை அடைகை பாப பலம் இ றே –
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று இவர் தாம் சந் மார்க்க வர்த்திகள் இ றே
அன்றிக்கே
கீழ்மையினில் சேரும் வழி -என்று
அத பதநத்திலே ப்ராப்தமான மார்க்கம் என்று அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கீழாய்
புநராவர்த்தி லஷண ஹேதுவான தூமாதி மார்க்க த்ரயத்தையும் நிரோதித்தோம் –

நெஞ்சமே வந்து
நெறி நின்ற நெஞ்சாய் -நீ அநுகூலிக்கை யாலே இந்த லாபத்தை லபித்தோம்
வந்து -இவ்வளவும் வந்து -ஆழ்வார் அளவும் வந்து -வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம்-

கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம்-இதுவன்றோ நீ அநுகூலித்ததால் பெற்ற  பேறு -நீ என் வழி வருகையாலே-இவை எல்லாம் பெற்றோம் -இஷ்ட ப்ராப்தியோபாதி அநிஷ்ட நிவாரணமும் பலம் இறே
நெஞ்சமே வந்து- 
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் –
என்றால் போலே பெற்ற பேற்றைப் பேசி நெஞ்சோடு ஹர்ஷிக்கும் படியைச் சொல்கிறது
வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் என்றது –
வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -என்றும் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -என்றும் –
பகவத் விஷயத்திலே தகப்பனாரும் மகளாரும் ஒரு கால் சொன்னால் போலே
பாகவத விஷயமாக ஒரு கால் சொன்னார் -என்றபடி-சம்பந்த அநுசந்தானம் ஸக்ர்த் என்றபடி

————————————

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

பாண்டியன் கொண்டாட -அவதாரிகை –
இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று –

பாண்டியன் -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன்
கொண்டாட -மேன்மேல் ஏத்த
பட்டர்பிரான் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
வந்தான் என்று -எழுந்து அருளினான் என்று
ஈண்டிய -கூடின அநேகமான
சங்கம் எடுத்து -சங்குகளைக் கொண்டு
ஊத -அநேகர் சப்திக்க
வேண்டிய -அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
வேதங்கள் -வேதார்தங்களை
ஓதி -தெரியச் சொல்லி
விரைந்து-தாமசியாமல்
கிழி -வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
யறுத்தான் -அறுத்தவனுடைய
பாதங்கள் -திருவடிகளே
யாமுடைய -நாங்கள் ஆஸ்ரயமாக உடைய
பற்று -ஆதாரம் –
————————————————————-
வியாக்யானம் –
பாண்டியன் கொண்டாட –
தென்னன் கொண்டாடும் போலே -நமக்கு பரதத்வ நிர்ணயம் பண்ணித் தரும்படி
பட்டர்பிரான் வந்தான் என்று பாண்டியனான ஸ்ரீ வல்லப தேவன் சொல்லிக் கொண்டாட -அத்தசையிலே –

ஈண்டிய சங்கம் எடுத்து ஓத –
திரண்டு இருக்கிற வித்வத் சங்கமானது ஓரோர் பிரதேசங்களிலே ஓதிக் கிடக்கிற
ப்ரசம்சா பர வாக்யங்களை எடுத்து ப்ரஹ்ம ருத்ராதிகளை போரப் பொலிய சொல்லி
உபன்யசிக்க என்னுதல்-அன்றிக்கே
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத என்று-
ஜய சங்கங்கள் பலவற்றையும் வாயிலே மடுத்தூத என்னுதல் –
பூம் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி -என்னக் கடவது இ றே
எடுத்தூத -என்ற போது
சங்கத்தை எடுத்துவாயிலே ஊதி என்றபடி –
அடுத்தூத -என்ற போது
கிட்டி ஊத என்றபடி –
அதிஷேபித்த வித்வான்கள் வாய் அடைக்கும்படி –

வேண்டிய வேதங்கள் ஓதி –
சர்வே வேதா யத் பதமாம நந்தி –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய -என்கிறபடி
வேதங்கள் எல்லாவற்றாலும் ஆராதன பிரகாரத்தையும் ஆராய்த வஸ்துவையும்
சொல்லுகிறது என்று அறுதி இட்டு -பகவத் பரத்வத்தை சாதித்து -இனி தாழுகைக்கு
ஹேது என்று திருவடிகளில் தாழ்ந்த கிழியை த்வரித்து அறுத்தவருடைய –
த்ரவ்ய க்ரந்தியை யறுத்தவருடைய

பாதங்கள்
கிழி யறுத்த பட்டர்பிரான் பாதங்கள்

யாமுடைய பற்று –
பட்டர்பிரான் அடியேன் -என்னும்படி அவருக்கு சேஷ பூதராய் இருக்கிற நம்முடைய ரஷை
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்று -என்கிற பொதுவானவன் உடைய திருவடிகள் அன்று
அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
யாமுடைய பற்று
நம்முடைய அரண் -புகல் -உபாயம் -சரண்யம் -என்றபடி
யாமுடைய பற்று –
பற்றற்ற நம்முடைய பற்று –
பற்றிலார் பற்ற நின்றான் -என்னக் கடவது இ றே-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாண்டிய பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாத முனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 29, 2013

கிளர்ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர்ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர்ஒளிய கனல்ஆழி வலம்புரியன், மணிநீல
வளர்ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.

பொ-ரை : ‘கிளர்ந்த ஒளியாலே குறைபாடு இல்லாத நரசிங்க உருவமாய்க் கிளர்ந்து எழுந்து, கிளர்ந்த ஒளியையுடைய இரணியனுடைய அகன்ற மார்பினைக் கிழித்து மகிழ்ந்த, வளர்கின்ற ஒளியையுடைய பிரகாசம் பொருந்திய சக்கரத்தையும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும் நீலமணி போன்று வளர்கின்ற ஒளியினையுமுடைய சர்வேசுவரன் விரும்பாத வரிகளையுடைய வளையல்களால் ஒரு பிரயோஜனத்தையுமுடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : கிளர்தல் – மிக்குப்பொலிதல். ‘எழுந்து கிழித்து உகந்த ஒளியான்,’ என்க. அரி – சிங்கம். வரி – அழகு; கீற்றுமாம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘பெற்ற தமப்பன் பகையாக, பாலன் ஆனவனுக்கு உதவினவன், தன்னால் உதவப் பெறாமல் நோவு படுகிற எனக்கு உதவானாகில், நான் ஆபரணம் பூண்டு அலங்கரித்திருக்கின்ற இவ்வலங்காரம் யார்க்கு?’ என்கிறாள்.

    கிளர் ஒளியால் குறை இல்லா அரி உருவாய் – கிளர்ந்த ஒளியால் குறைவின்றிக்கே இருக்கின்ற நரசிம்ஹமாய். 2‘ஜ்வலந்தம் -பிரகாசித்துக்கொண்டிருப்பது’ என்கிற மந்திரார்த்தம் தோற்றச் சொல்லுகிறது-

நரசிம்ஹ அவதாரத்தில் ஒளி உண்டோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஜ்வலந்தம்’ என்று.

  ‘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்.’

  என்பது அம்மந்திரமாகும்.

கிளர்ந்து எழுந்து – சீறிக்கொண்டு தோற்றி. என்றது, 3‘பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை’-பெரிய திருமொழி. 2. 5 : 8. என்கிறபடியே, சிறுக்கன்மேலே அவன் முடுகினவாறே கிளர்ந்தபடி. கிளர் ஒளிய இரணியன் – மிக்க ஒளியையுடைய இரணியன். ஆசுரமான ஒளியைக் குறித்தபடி. 4நரசிம்ஹமும் பிற்காலித்து வாங்கும்படி ஆயிற்றுப் பையல் கிளர்த்தி இருந்தபடி. அகல் மார்பம் – அகன்ற மார்வை :

தேவர்களுடைய வரத்தை 1ஊட்டியாக இட்டுத் திருவுகிருக்கு இரை போரும்படியாக வளர்த்த மார்பாதலின், ‘அகல் மார்பம்’ என்கிறது.

    கிழித்து – 2நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகத்தையும், நா மடிக்கொண்ட உதட்டையும், குத்துதற்கு முறுக்கின கையையும், அதிர்ந்த அட்டகாசத்தையும் கண்டவாறே, பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்றுப் பொன்னன். ஆகையாலே, பின்னர் வருத்தமின்றியே கிழித்துப் போகட்டான். 3நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே பதஞ்செய்யுமே அன்றோ? உகந்த – ‘சிறுக்கனுடைய விரோதி போகப் பெற்றோமே!’ என்று உகந்தபடி. அன்றிக்கே, 4‘ஏ தேவனே! உன்னைத் துதித்த என்னிடத்தில் என் தமப்பனாருக்கு அதனால் உண்டான பாபமானது நாசம் அடையட்டும்,’ என்கிறபடியே, இவன்தான் காற்கட்டி ஆணையிடாதே, இவன்தானே ‘கொல்ல வேண்டும்’ என்று இசையப் பெற்றோமே அன்றோ என்று உகந்த உகப்பு என்னுதல்.

    வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியான் – 5காவற்காட்டில் துஷ்ட மிருகங்களுக்கு ஊட்டி இட்டு வளர்க்குமாறு போலே, தேவர்களுடைய வரங்களை ஊட்டியாக இட்டு வளர்த்த பையலுடைய மார்பு முழுவதும் திரு உகிருக்கு அரை வயிறாம்படி ஆயிற்றே அன்றோ? 6ஒருவன் கைபார்த்திருப்பார் பலர் உளர் ஆனால், அவர்களிலே 1சிலவர் இவனோடே கைசெய்து, அவனுக்குள்ள 2உடலையும் தாங்கள் கண்டபடி அழித்து நீக்கியுள்ள உடலையும் கூறிட்டு, தாங்களே கொண்டுவிட்டால், மற்றுள்ளார் கதகத எனச் சொல்ல வேண்டா அன்றோ? 3இவர்கள்தாம் நுனியாடிகள் அலரோ? 4இப்படி இவர்கள் தாமேயாவது என், நாம் இருக்க?’ என்று திவ்விய ஆயுதங்கள் கிளர்ந்தன ஆயிற்று. மணி நீல வளர் ஒளியான் – நீலமணி போலே வளராநின்றுள்ள ஒளியையுடையவன். கை மேலே 5இலக்கைப் பெறாதார்க்கு நாடோறும் படி விட வேண்டுமே அன்றோ? படி விடாத போது அரைக்கணமும் நில்லார்களே அவர்கள். இவர்கள் விருத்தவான்கள் ஆகையாலே அன்றோ கைமேலே இப்படிப் பெற்று வாழ்கிறார்கள்? ‘படி கண்டறிதியே’ என்னக் கடவதன்றோ?

‘ஒருவன் கைபார்த்திருப்பார்’ என்று தொடங்கிச் சிலேடையாக
அருளிச்செய்கிறார். கைபார்த்திருப்பார் – ‘ஒருவனுக்குப்
பரதந்திரராயிருப்பார்’ என்பதும், ‘கையிலே இருப்பார்’ என்பதும் பொருள்.
கைசெய்து – ‘துணை செய்து’ என்பதும், ‘கையிலே இருந்து’ என்பதும்
பொருள்.

இலக்கு – மாத ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – அரிசிப் படியும்,
திருமேனியும், என்றது, ‘கைமேலே இருந்து வைத்து இலட்சியம்
பெறாதார்க்குச் சந்தோஷத்தையுண்டாக்குவதற்காகத் திருமேனியைக் கொடுக்க
வேணுமேயன்றோ?’ என்றபடி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளைக்
காட்டுவதற்கு மேற்கோள், ‘படி கண்டறிதியே’ என்பது, முதல் திருவந். 85.

எப்பொழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்,’ என்கிறபடியே, இப்படிக் கண்டு ஜீவிக்குமதேயன்றோ உள்ளது?

    ‘‘மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில், ‘சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது. கவராத வரி வளையால் குறை இலமே –  ‘அவ்வடிவையுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக்கொள்ளாத இவ்வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

பெற்ற தகப்பனால் வந்த நோவை -விலக்கி
தன்னால் நோவு படும் எனக்கு -உதவாமல்
வளையால் என்ன பிரயோஜனம் ஒப்பனை யாருக்கு
ஹிரண்யனின் மார்பை கிழித்து உகந்த
நர சிம்ஹனை சொல்லி -திரு ஆழியை சொல்லி வளையை சொலி
மந்த்ரம் -உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் -ஜ்வலந்தம் -அர்த்தம் காட்டி
கிளர்ந்த ஒளியால் -சீறிக் கொண்டு போக்கி
சிருக்கன் மேலே –
அகல் மார்பன் -பரந்த தேவதைகள் வரத்தால் பெருகிய மார்பன்
கிழித்து -பொசுக்கிய பன்றி போலே -கோபம் கொண்ட திரு முகம் -நா மடிக் கொண்ட உதட்டையும் –
குத்த முருக்கின திருக்கையும் -அதிர்ந்த அட்டகாசத்தையும் -மந்த காசம் =புன் சிரிப்பு
உருகினான் இத்தால் -வருத்தம் இன்றி கிழித்து
நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே

அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே
கண் மேலே போக புருவமும் மேலே போக

பதம் செய்யும்
பொன்னன் ஆகையாலே -ஹிரண்யன் உருகினான் –
கிழித்து என்பதருக்கு இவ்வளவு அர்த்தம்
உகந்த -சிறுகண் விரோதி தொலைக்கப் பெற்றோமே என்று உகந்து
அன்றி கால் கட்டி விலக்காமல் இருந்ததால் மகிழ்ந்து -இரண்டாலும் உகந்து –
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியான் –
காவல் காட்டில் துஷ்ட மிருகங்களை ஊட்டி வளர்ப்பது போலே -தேவர்கள் வரத்தால்
பையல் -திரு வயிற்ருக்கு அரை வயிறு ஆக -மற்ற ஆயுதங்களுக்கு வேலை இன்றி –
கைபார்த்து இருப்பார் அநேகர் இருக்க –
சிலர் -நகங்கள் இவன் உடன் கை செய்து யுத்தம் செய்து –
கூறிட்டு கிழித்து பங்கு போட்டு கொண்டால்
மற்றவர் வேலை இன்றி-இவர்கள் நுனி யாடிகள்
சங்கு சக்கரங்கள் -முதல் ஆயுதங்கள் கிளர்ந்து
நீல மேனி போலே வளரா நின்று உள்ள ஒளியை உடையவன்
படி விடாத போது -அரை ஷணம் நில்லார்களே இவர்கள்
படி =திருமேனி
இவர்கள் தான் விருதவான்கள் கை மேலே
சதா பஸ்யந்தி படி கண்டு ஜீவிப்பவர்கள்

இலக்கு – மாத ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – அரிசிப் படியும்,
திருமேனியும், என்றது, ‘கைமேலே இருந்து வைத்து இலட்சியம்
பெறாதார்க்குச் சந்தோஷத்தையுண்டாக்குவதற்காகத் திருமேனியைக் கொடுக்க
வேணுமேயன்றோ?’ என்றபடி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளைக்
காட்டுவதற்கு மேற்கோள், ‘படி கண்டறிதியே’ என்பது, முதல் திருவந். 85.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 29, 2013

அறிவினால் குறையில்லா அகல்ஞாலத் தவர்அறிய,
நெறிஎல்லாம் எடுத்துஉரைத்த நிறைஞானத்து ஒருமூர்த்தி,
குறியமாண் உருவாகி, கொடுங்கோளால் நிலங்கொண்ட
கிறிஅம்மான் கவராத கிளர்ஒளியால் குறையிலமே.

    பொ-ரை : ‘அறிவு ஒன்றில் மாத்திரம் குறைபாடு இருப்பதை அறியாத அகன்ற உலகிலேயுள்ள மக்கள் அறியும்படியாக உபாயங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கூறிய நிறை ஞானத்து ஒரு மூர்த்தியும், சிறிய பிரமசரிய வடிவங்கொண்டு கொடிய செயலாலே உலகத்தை அளந்துகொண்ட விரகையுடைய தலைவனுமான சர்வேசுவரன் விரும்பாத மிக்க ஒளியால் யாதொரு பயனையும் உடையேம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : ‘மூர்த்தியாகிய அம்மான், ஆகிக் கொண்ட அம்மான்’ என்க. கிறி – விரகு; உபாயம்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 3‘அறிவில்லாதார்க்குத் தன்னை அடைவதற்குரிய உபாயங்களை உபதேசித்து, அறிவு பிறத்தற்குத் தகுதியில்லாதாரை வடிவழகாலே தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன் விரும்பாத மிக்க ஒளியால் என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

    அறிவினால் குறை இல்லா – அறிவினால் குறைவுபட அறியாத. அறிவு ஒன்றிலும் ஆயிற்றுக் குறைவுபட

அறியாதது. என்றது, ‘நாட்டார் 1அன்னம் பானம் முதலிய எல்லாவற்றாலும் காரியமுடையராய் இருப்பார்களே அன்றோ? அறிவால் காரியம் இன்றிக்கே இருப்பார் ஆயிற்று,’ என்றபடி. அகல் ஞாலத்தவர் அறிய – பரப்பையுடைத்தான பூமியில் அறிவில் குறைவுபட அறிவார் ஒருவரும் இலர் ஆயிற்று; ஆதலால், கல்லைத்துளைத்து நீரை நிறுத்தினாற்போலே இவர்கள் நெஞ்சிலே படும்படி செய்தானாதலின், ‘அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் அறிய’ என்கிறது. நெறி எல்லாம் எடுத்து உரைத்த – கர்மயோகம் முதலாகப் பிரபத்தி யோகம் முடிவாக எல்லா உபாயங்களையும் விளக்கமாக உபதேசித்தபடி. 2ஆத்துமாக்களினுடைய பேதங்களைப் போலே போருமே அன்றோ உபாயங்களினுடைய பேதங்களும்? ஆதலின், ‘நெறி எல்லாம்’ என்கிறது. என்றது, ‘கர்ம ஞான பத்திகள், அவதார ரஹஸ்ய ஞானம், புருஷோத்தமவித்தியை, ஆத்துமாவினுடைய உண்மைத்தன்மை, விரோதிகள் போவதற்குப் பிரபத்தி, கைவல்யத்தை அடைவதற்குப் பிரபத்தி, பகவானை அடைதற்குப் பிரபத்தி இவை அடங்க விளக்கமாக அருளிச்செய்தவன்,’ என்றபடி.

    3கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லுமுகத்தாலே அவதார ரஹஸ்யத்தைஉபதேசித்து, பின்னர் ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று பின்பு பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று, பின்னர், 1‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின் சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ, 2அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக அடைவாய்,’ என்றும், 3‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே சொரூப ஞானத்தைப் பிறப்பித்து, 4‘என்னுடைய இந்த மாயைதானே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’ என்று தொடங்கி, 5‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான பிரகிருதியைச் சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச் சரீரம் என்று கூறி, அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத் தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி, 6‘இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’ என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி, 7அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப் பரிஹாரம் சொல்லி, 8அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும்

தானே அறிவித்து, பிரபத்தி மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.

    ‘ஒருவன் சொன்னான்’ என்ற அளவில் அது பிரமாணமாமோ? நம்பத் தக்கதாக வேண்டாவோ?’ என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் மேல் : நிறை ஞானத்து ஒருமூர்த்தி – நிறைந்த ஞானத்தை உடைத்தான ஒப்பற்றதான சொரூபத்தையுடையவன். என்றது, ‘இத்தலையில் அறிவு இன்மையால் இவனுக்கு அழிவு வாராதபடியான ஞானபூர்த்தியையுடையவன்’ என்பதனைத் தெரிவித்தபடி. 1பிரமாணமாய் எல்லார்க்கும் ஞானத்தைப் பண்ணிக் கொடுப்பதான வேதத்தினுடைய என்றும் உளதாம் தன்மையும், புருஷனால் செய்யப்படாத தன்மையும் தன் அதீனமாம்படி அவற்றை நினைத்துச் சொல்லுமவனாய் உள்ளவன். 2வேதார்த்தத்தை விரித்து அருளிச்செய்தவன். குறிய – கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே, வளர்ந்த போதையிற்காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி. மாண் உருவாகி – 3பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு, அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, ‘பிறப்பதற்கு முன்பெல்லாம் இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத் தகுதியாக ஆயிற்று, 4‘உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைத்த போதோடு வாசி அற முகமலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி. ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை 5வடுக விடுநகம் இட்டு வடிவழகாலே

தனக்கு ஆக்கிக்கொள்ளுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

    கொடுங்கோளால் – 1வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு, ‘கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு, ‘செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது; ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது, தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே, அவன் செவ்வைக்கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி. கிறி அம்மான் – அவன் தரும் விரகு அறிந்து வாங்க வல்ல பெருவிரகனான சர்வேசுவரன். 2‘பெருங்கிறியான்’ –திருவிருத்தம், 91.-என்னக் கடவதன்றோ? கவராத கிளர் ஒளியால் குறை இலமே – செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன், முன்னரே இசைந்து தன்னைப் பெறவேண்டும் என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித் தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ? கிளர்ஒளி – மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.

அறிவு இல்லாதாருக்கு உபாயம் உபதேசித்து
வடிவு அழகால் எழுதிக் கொண்ட
கிளர் ஒளியால் என்ன பலன் –
நெறிகள் உபாயம்
குள்ளமான வடிவம் கொண்டு
உபாயம் அறிந்த வாமனன்
அறிவினால் குறை இல்லா
கீதை லோகத்தாருக்கு உபதேசித்து
அறிவு உள்ளவர்களுக்கு இல்லை
நம்பிள்ளை -அன்னம் பானம் இல்லாமல் குறை இருக்கலாம்
அறிவு இல்லை என்று யாரும் குறை பட வில்லையே

கல்லை துளைத்து நீரை நிரப்புவது போலே உபதேசித்து
ஆசை பல விதம்
கீதை
கர்ம யோகம் முதலாக பிரபத்தி வரை உபதேசித்து
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
கர்ம ஞான பக்தி யோகம் அவதார ரகசியம் புருஷோத்தமா வித்தை விசத தமமாக
ஸ்வரூப யாதாத்ம்யம்
விரோதி நிவ்ருதிக்கு பிரபத்தி
பகவத் லாபத்துக்கு பிரபத்தி
சர்வ பலத்துக்கும் பிரபத்தி உண்டே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 29, 2013

தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.

பொ-ரை : தளிர் போன்ற நிறத்தாலே குறைபாடு இல்லாத, தனித்த சிறையிலே பிரசித்தமாக இருந்த கிளி போன்ற சொற்களையுடைய பிராட்டி காரணமாக, கிளர்ச்சியையுடைய இராவணனது நகரமாகிய இலங்கையை எரித்த, தேன் பொருந்திய மலர்களையுடைய திருத்துழாய் மாலையானது வாசனை வீசுகின்ற திருமுடியையுடையவனும், கடலாற்சூழப்பட்ட இவ்வுலக மக்களிடத்தே திருவருள் மிகுந்தவனுமான சர்வேசுவரன் விரும்பாத அறிவினால் ஒரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : ‘குறை இல்லாத கிளிமொழியாள்’ என்றும், ‘விளப்புற்ற கிளிமொழியாள்’ என்றும், தனித்தனியே கூட்டுக. ‘காரணமாக நகர் எரித்த முடியன்’ என்க.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘பரம காதலனாய் எல்லாரையும் காக்கின்றவனான சக்கரவர்த்தி திருமகன் விரும்பாத அறிவினால் என்ன பிரயோஜனம் உண்டு எனக்கு?’ என்கிறாள்.

    தளிர் நிறத்தால் குறை இல்லா – 2‘தன் திருமேனியின் ஒளியால் எல்லாத் திக்குகளையும்  இருள் இல்லாதபடி செய்கிறவள்’ என்கிறபடியே, பிராட்டி பத்து மாதங்கள் திரு மஞ்சனம் பண்ணாமையாலே திருமேனியில் புகர் மங்கியிருக்கும்படி, பத்துத் திக்குகளிலும் உண்டான இருளைப் போக்குமளவாயிற்று; 3‘வருத்தம் இருள் இவைகளைப் போக்க வல்ல பிள்ளை என்று பேர் பெற்ற ஒளி’ என்பது இரகு வமிசம். தனிச்சிறையில் – 4ஒளியையும் ஒளியை

உடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி? விளப்புற்ற – 1‘கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, ‘தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்; அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.

    கிளி மொழியாள் காரணமா – திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே 2‘இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது. ‘அப்படிப்பட்ட வார்த்தையையுடையவள் காரணமாக’ என்றபடி. கிளர் அரக்கன் – ‘கொழுத்தவனான இராவணனுடைய’ என்கிறபடியே, 3தாயும் தமப்பனும் சேர இருக்கப் பொறாதபடியான கிளர்த்தியையுடைய இராவணன். நகர் எரித்த – 4இராவணனுடைய எல்லா

வற்றாலும் நிறைவுற்றிருந்த நகரத்தை எரித்துச் சாம்பல் ஆக்கின. என்றது, ‘பையல் குடியிருப்பை அழித்து 1மூலையடியே வழி நடத்தின’ என்றபடி.

    களி மலர்த்துழாய் அலங்கல் கமழ் முடியன் – தேனையுடைத்தான மலரோடு கூடின திருத்துழாய் மாலை கமழா நின்றுள்ள திருமுடியையுடையவனை. 2அவன் தான் மக்கட் பிறவியை மேற்கொண்டு அவதரித்தால், பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்களும் அதற்குத் தகுதியான வடிவைக் கொண்டு வந்து தோன்றுவன இத்தனையேயன்றோ? ஆகையாலே, அவன் கலம்பகன் கொண்டு வளையம் வைத்தாலும் இவர்கள் எடுத்துச் சொல்லுவது திருத்துழாயை இட்டேயாம். 3தனக்கேயுரிய சிறப்புப் பொருள்களைக் கொண்டே அன்றோ கவி பாடுவது? பாண்டியர்கள் மற்றையார் கருமுகை மாலையைக் கொண்டு வளையம் வைத்தாலும், அவர்களுக்கே உரியதான வேம்பு முதலானவற்றையிட்டேயன்றோ கவி பாடுவது? கடல் ஞாலத்து அளி மிக்கான் – சமுசாரத்தில் தண்ணளி மிக்கவன் ஆயிற்று. மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, ‘இதைப் போக்கவேண்டும்’ என்று திருவுள்ளம் 4இங்கே வேரூன்றினபடி. என்றது, பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய், பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப வேண்டும்படியன்றோ இங்கேவேரூன்றினபடி?’ என்றவாறு. கவராத அறிவினால் குறை இலம் -அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம். 1பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு? 2பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது? 

அறிவினால் என்ன பலன் –
சீதா பிராட்டி -பிரணீயன் -விரும்பாத ஞானத்தால் என்ன பிரயோஜனம்
நிறத்தால் குறை இன்றி
தனிமை சிறையில்
தேஜஸ்
உடன் கிளி மொழியாள்
புகர் -தேஜஸ் குறையாமல் -சிறை இருக்க –
திசைகளை எல்லாம் தேஜஸ் குறையும் படி -திரு மஞ்சனம் செய்யாமல் –
அந்தகாரம் போக்குமவள்
தனிச்சிறை பிரபை ப்ரபாவான் பிரித்து வைத்து –
பாச்கரேண ப்ரபா
விளக்குற்ற -தன்னை பேணாமல் இருந்த -விண்ணப்பம் செய்யப்பட்ட -திருவடியால் விளக்கப் பட்ட
விளங்கப் பெற்ற பெருமை -தானே வழிய சிறை புகுந்து தேவ ஸ்திரீகள் விலங்கை மீட்ட தான் விலங்கு பூட்டிக் கொண்ட பெருமை
சிறை இருந்தவள் ஏற்றம் -இந்த பாசுரம் கொண்டே வியாக்யானம் –
கிளி மொழியாள் -மதுரா மதுரா லாப -கொண்டாடி -வரத்தாலே பலத்தாலே பையல்
குடி இருப்பை அழித்து –
களி மலர் துழாய் -எதை அணிந்து இருந்தாலும் திரு துழாய் அம்சம்
அவன் மனுஷ்யனாக அவதரிக்க திரு துழாயும் -கலம்பகமும் வர்ணங்கள் கொண்ட கதம்பமாகவும்
பாண்டிய ராஜர் வேம்பு போலே கவி பாடுவார் போலே

சம்சாரிகள் துக்கம் போக்கும்
பிராட்டி இளைய பெருமாள் அகற்றி -தேவதைகள் பிரார்த்திக்க -தர்ம கார்யம் செய்ய எம தர்மனுக்கு வேலை இன்றி
துர்வாசர் மூலம் -செய்தி அனுப்பி -கிளப்ப வேண்டும்படியாய் இ றே இருப்பது
கடல் ஞாலத்து அளி மிக்கவன்
அவனும் விரும்பாத ஞானத்தால் என்ன பலன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 29, 2013

நிறையினால் குறையில்லா நெடும்பணைத்தோள்
மடப்பின்னை
பொறையினால் முலைஅணைவான், பொருவிடைஏழ்
அடர்த்துஉகந்த
கறையினார் துவர்உடுக்கைக் கடையாவின்
கழிகோல்கைச்
சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறையிலமே.

    பொ-ரை : ‘நிறை என்னும் குணத்தாலே குறைவற்றிருக்கின்ற, நீண்ட மூங்கில் போன்ற தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நப்பின்னைப்பிராட்டியின் தனங்களைச் சேரும்பொருட்டுப் பொறையினாலே, போர் செய்கின்ற இடபங்கள் ஏழனையும் கொன்று மகிழ்ந்த, கறை தோய்ந்த துவர் ஊட்டின உடுக்கையினையும், கடையாவினையும் கழிகோலினையுமுடைய கையினையுடைய சறையினார் விரும்பாத தளிர் போன்ற நிறத்தால் யாதொரு பயனையும் உடையோமல்லோம்,’ என்கிறார்.

    வி-கு : ‘குறை இல்லாப் பின்னை’ என்க. ‘பின்னையினது முலை அணைவான் பொருவிடை ஏழனைப் பொறையினால் அடர்த்து உகந்த சறையினார்,’ என்க. ‘துவர் உடுக்கைச் சறையினார்’ என்றும், ‘கடையாவினையும் கழிகோலினையுமுடைய கையையுடைய சறையினார்’ என்றும் ‘தனித்தனியே கூட்டுக. ‘கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழிகோற்கைச் சறையினார்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற் காணலாகும்.

    ஈடு : நான்காம் பாட்டு. 2‘தன்னைப் பேணாமல், பெண் பிறந்தாரைப் பேணும் கிருஷ்ணன் விரும்பாத நிறம் எனக்கு வேண்டா,’ என்கிறாள்.

நிறையினால் குறை இல்லா – 1கிருஷ்ணன், தன்னைப் பெறுகைக்கு எருதுகளின்மேல் விழுகிற செயல்களில் தான் வேறுபடாதவளாய் இருக்கிற பெண் தன்மையில் குறைவற்றிருக்கை. என்றது, வேறுபடுதற்குக் காரணம் உண்டாய் இருக்கத் தான் வேறுபடாதவளாய் இருந்தபடி. நெடும்பணைத்தோள் -மேல் ஆத்தும குணம்சொல்லிற்று; இங்கு உருவத்தின் குணம் சொல்லுகிறது. 2‘நெடியதாய்ப் பணைத்த தோள்’ என்னுதல்; ‘நெடிய மூங்கில் போலே இருந்த தோள்’ என்னுதல். இதனால், 3‘அரியன செய்தும் பெற வேண்டும்படிகாணும் வடிவழகு இருப்பது’ என்பதனைத் தெரிவித்தபடி.

    மடம் பின்னை – மிருதுத்தன்மையுடையவள். முலை அணைவான் -சேர்க்கைக்காக. பொறையினால் – துன்பத்தைப் பொறுக்குந்தன்மையனாய். என்றது, ‘எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்ட இதனை, அவள் முலையாலே பிறந்த 4விமர்த்தமாக நினைத்திருந்தான்,’ என்றபடி. பொரு விடை ஏழ் அடர்த்து – கேவலம் இடபங்கள் அல்ல கண்டீர், அசுர ஆவேசத்தாலே யுத்த சன்னத்தங்களாய் வந்தவை ஆதலின், ‘பொரு விடை’ என்கிறது. ஒன்று இரண்டு அல்ல; ஏழு ஆதலின், ‘ஏழ்’ என்கிறது. அவற்றை ஒருகாலே ஊட்டியாக நெரித்து. உகந்த – ‘இனி நாம் இவளைப் பெற்றோமே!’ என்று உகந்தான். நப்பின்னைப்பிராட்டியை 5விடைகொண்டு வந்து காணும் கைப்பிடித்தது. ‘நிறையினால் குறையில்லா நெடும்பணைத் தோள் மடப்பின்னை முலை அணைவான் பொறையினால் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த’ எனக் கூட்டுக.

கறையினார் துவர் உடுக்கை – கறை மிக்குத் 1துவர் ஊட்டின சிவந்த தோலாயிற்று உடுக்கை. காட்டில் பழங்களைப் பறித்து இடுகையாலே கறை மிக்கு இருக்கும்; அதனால், கறைமிக்க துவர் ஆயிற்று உடுக்கை;’ அதனை நோக்கிக் ‘கறையினார் துவர்’ என்கிறது. ‘உடுக்கை’ என்றது, ஆயர்கள் காட்டிற்குப் போகும் போது முள் கிழியாமைக்கு உடுக்கும் உடைத்தோலைச் சொல்லுகிறது. 2இதனால், ‘அரையில் பீதகவண்ண ஆடை வேண்டாள் ஆயிற்று இவள்; பசுக்களைக் காப்பாற்றின வடிவோடே அணையக் கணிசிக்கிறாள்,’ என்றபடி.

திருப்பீதாம்பரத்தைச் சொல்லாமல், தோலைச் சொல்லுவான் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இதனால்’ என்று தொடங்கி.

  ‘பெண்ணின் வருத்த மறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை
கொண்டுஎன்னை வாட்டந் தணிய வீசிரே.’

  என்பது நாய்ச்சியார் திரு. 13 : 1.

  கணிசிக்கிறாள் – விரும்புகிறாள்.

கடையாவின்கை – உரிய காலங்களிலே கறப்பதற்குக் கையிலே கடையவும் கொண்டாயிற்றுத் திரிவது; கடையா – மூங்கிற்குழாய். கழிகோல்கை -மூங்கிற்குழாயையும் வீசுகோலையும் கையிலேயுடையவர். கழிகோல் – வீசுகோல்.  அன்றிக்கே, 3 ‘கொடுவைப் பசுக்களை நியமித்துக் கறக்கைக்கு வீசுகோலைக்  கையிலே கொண்டு திரியுமவர்’ என்னலுமாம். அன்றிக்கே, ‘கழிகோல்’ என்பதற்கு, ‘முன்னணைக்கன்று  பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்குக் கொறுக்கோல் என்பது ஒன்றனை அதன் முகத்திலே கட்டிவிடுவார்கள்; அதனைச் சொல்லுதல்’ என்னுதல். 4சந்யாசிகள் தந்தாமுக்கு என்ன ஓர் இருப்பிடம் இல்லாமையாலே மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக் கொண்டு திரிவார்கள் ஆயிற்று; அவர்கள் போன்று பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ளவிடத்திலே தங்குவார்களித்தனையன்றோ இவர்களும்?சறையினார் – 1சறைகைமணி என்று ஒரு மணி உண்டாயிற்று, ஆயர்கள் அரையிலே கோத்துக்கட்டி முன்னே போகாநின்றால் அந்த ஒலியின் வழியே பசுக்கள் எல்லாம் ஓடி வரும்படியாய் இருப்பது ஒன்று; அதனையுடையவர்கள். அன்றிக்கே, ‘சறை’ என்று தாழ்வாய்’ ‘முதன்மை பெற்ற சாதிகளில் ஒக்க எண்ண ஒண்ணாத தாழ்ந்த ஆயர் குலத்திலே பிறந்தவர்’ என்னுதல். அன்றிக்கே, ‘சறை’ என்று சறாம்புகையாய், ‘மற்றைய ஆயர்கள் விஷூ அயந சங்கிரமணங்களுக்கு உடம்பு இருக்கத் தலை குளித்தல், உடம்பிலே துளி நீர் ஏறிட்டுக்கொள்ளுதல் செய்வர்களாகில், இவன் அவ்வாறு செய்வதற்கும் காலம் இன்றி இருக்குமாயிற்றுப் பசுக்களின் பின்னே திரிகையாலே,’ என்னுதல். 2பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தலுக்காகத் தன்னைப் பேணாத அவ்வடிவை அணைப்பதற்காயிற்று இவள் ஆசைப்படுகின்றது. என்றது, 3‘பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.

    கவராத தளிர் நிறத்தால் குறை இலம் – அவன் விரும்பாத பிரமசாரி நிறத்தால் என்ன காரியம் உண்டு? என்றது, 4இராவணனைக் கொன்ற பின்பு பிராட்டி நீராடி

எழுந்தருளின போதை நிறம்போலே அவனுடைய வெறுப்புக்கு விஷயமான நிறம் நமக்கு என் செய்ய?’ என்றபடி. 1‘இவளைப் போன்று மற்றைப்பிராட்டிமாரில் இப்படி நிறத்தைப் பற்றிச் சொன்னார் இலரே? முதற்பாட்டில் ‘மணி மாமை குறையிலம்’ என்றாள்; இப்பாட்டில் ‘தளிர் நிறத்தால் குறையிலம்’ என்கிறாள்; இவற்றுக்கு வாசி என்?’ என்னில், அங்கு, ‘மணிமாமை’ என்று அழகையும் மென்மையையும் சொல்லிற்று; இங்கு, நிறத்தைச் சொல்லிற்று. அன்றிக்கே, அங்கு நிறத்தைச் சொல்லிற்றாகில், இங்குச் சேர்க்கையால் உண்டாய அழகிய நிறத்தைச் சொல்லுகிறது.

    2தீக்ஷிதம் – ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’ என்கிறாள். விரத சம்பந்நம் – முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத் தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத் தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் – கூறையுடையையும்  காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை. சுசிம் – ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர். குரங்கசிருங்கபாணிஞ்ச – ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ – ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’ என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் – பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே, இவ்வுலக

இன்பத்துக்காகத் துதிக்கிறாள்காணும். 1அங்கும் ‘சதாபஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?

    ‘நன்று; வழியில் கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?    

அவன் விரும்பாத நிறமும் வேண்டாம்
தன்னைப் பேணாமல் பெண்ணை பேணும்
நிறையினால் குறை வில்லா -பணைத் தோள் -நப்பின்னை அடைய
எருதுகளை அடர்த்து
கறையினார் துவர் உடுக்கை
கழி கோல் கை சறை -உடுக்கை
பூர்த்தி -கிரிஷ்ணனை பெற -அவன் எருதுகள் மேல் விழுந்தாலும் கவலை இன்றி –
அறிவாள் அவன் வெல்வான் என்று -ஸ்த்ரீத்வம் பூரணமாக இருந்த நப்பின்னை பிராட்டி
இத்தாலே ஆத்ம குணம் சொல்லி மேலே ரூப குணம் -நெடிதாய் பணைத்த தோள்

பணை’ என்பதற்குப் பருத்த என்றும், மூங்கில் என்றும் இரு பொருள் உண்டு.    

அரியன செய்து பெற வேண்டும்படி இருக்கும் படி
மடப்பின்னை மிருதுவான
பொறையினால் -கொம்பால் பொறு விடை -ஏழு எருதுகளையும் கட்டி நெறித்து
ஊட்டி கழுத்திலே உணவாக
உகந்த -நப்பின்னை பிராட்டியை -விடை கொண்டு வந்து காணும் கைப் பிடித்தது
உடுக்கை கறை பட்ட -பழங்கள் -துவர்
முள் கிழியாமை என்பதருக்கு உடுத்த
பீதக வாடை வேண்டாமல் இடைச்சி பாவம்மிக்கு
கடையா -மூங்கில் குழாய்
கழி கோல் -மேய்க்க வைத்த கோல்
கடையா -துஷ்ட பசுக்களை கறக்க கோலை கொண்டு
கொறு க்கொல் மூஞ்சிலே கன்றுக்கு கட்டுவதாம்
சன்யாசிகள் கமண்டலம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போவது போலே
இவனும் அனைத்தும் கொண்டு போவானே
மணி ஓசை கேட்டு பசுக்கள் பின் வருமாம்

சறகை மணி
சறை -தாழ்ந்த இடையர் குலம்
விஷூ அயன சங்கிரமண ங்களுக்கு குளிப்பார் -உடம்பு இருக்க தலை குளிப்பர் மற்றையவர்
இவன் அது கூட இன்றி பசு பின்பே போவானாம்
தன்னை பேணாமல் பசுக்களை பேணி பின் செல்வானே
ரஷ்ய வர்க்கத்துக்கு தன்னை பேணாமல் -அந்த வடிவை அணைக்க ஆசைப் படுகிறாள்
தீஷிதம் இது, ஸ்ரீராமா. ஆரண். 18 : 12.

நிறத்தால் முதலில் சொல்லி
இங்கும்
அங்கு அழகும் மென்மையும் இங்கு நிறத்தை சொல்லி
அங்கு நிறத்தை சொல்லி இங்கு சேர்க்கையால் வந்த நிறம் –
ஷத்ரியன் நிறம் சேவிக்க சீதை பிராட்டி ஆசைப்பட்டது போலே இவள் ஆயர் குல வேஷம் விரும்பி

நப்பின்னை பிராட்டியும் பராங்குச நாயகியும் இடைச்சி பாவத்தால்
கையும் கோலுமான -கறை கொம்பை கையில் கொண்ட கோபாலானை காண –
வ்ரதம் -ரிஷி ஒரு நாள் இருக்க சொன்னாலும் ஈடுபாடு மிக்க நாலு பட்டினி விட்டு பெருமாள் இருக்க –

ஸ்திரீகள் தீண்ட கூடாது -பிராட்டி புடவைத் தலைப்பு பட்டாலும் தீர்த்தமாடி -நிற்பர்
ஆசார்ய சீலன் –
பார்த்தால் -அனைத்துக் கொள்ள தானே வருமே –
பஸ்யந்தி -பகவத் குணம் அனுபவிப்பார் த்ருஷ்ட பலத்துக்கு -இந்த லோக பலனுக்கு
அத்ருஷ்ட பலத்துக்கு ஸ்தோத்ரம் பண்ண
இவரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார் –
அங்கும் சதா பஸ்யந்தி  இ றே

கண் எச்சில் வாராமல் இருக்க மங்களா சாசனம் செய்பவர்கள்
சாவித்திரி பர்தாவைக் காட்டி அநேகம் பிள்ளைகளை பெற வேண்டும் வரம் கேட்டு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 29, 2013

மடநெஞ்சால் குறையில்லா மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே.

    பொ-ரை : ‘மடப்பம் பொருந்திய நெஞ்சத்தால் குறைவில்லாத தாய்மகளாகத் தன்னைச் செய்துகொண்டு வந்த ஒரு பேயாகிய பூதனையினது மிக்க விஷத்தையுடைய முலையைச் சுவைத்துப் பால் குடித்த மிகுந்த ஞானத்தையுடைய சிறிய குழவியும், படத்தையுடைய பாம்பின் படுக்கையிலே சயனித்திருக்கின்ற பெருத்த மலை போன்ற தோள்களையுடைய பரம்புருடனும், நெடுமாயனுமான சர்வேசுவரன் விரும்பாத நிறை என்னும் குணத்தால் யாதொரு பயனுமுடையோம் அல்லோம்,’ என்றவாறு.

    வி-கு : மனித வடிவிலே தாய் உருவத்தோடு வந்தவளாதலின், ‘மகள் தாய்’ என்கிறாள். மகள் என்பது, மக்கள் என்ற சொல்லின் சிதைவு. ‘விடம் நஞ்சம்’ என்பன, ஒரு பொருட்சொற்கள். ‘மிகு ஞானம்’ என்றது, ஈண்டுச் சுவை உணர்வையுணர்த்திற்று. குழவி – குழந்தை. பரம்புருடன் – புருடோத்தமன்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘பகைவர்களை அழிக்கும் ஆற்றலையுடையனாய், வேறுபட்ட மிக்க சிறப்பினையுடையனாய்,

முன்னர் என் பக்கல் மிக்க காதலையுடையன் ஆனவன் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா,’ என்கிறாள்.

    மடம் நெஞ்சால் குறை இல்லா – மடப்பமாவது, மென்மை; அதாவது, நெஞ்சில் நெகிழ்ச்சி. என்றது, 1முலை உண்ணும்போது யசோதைப்பிராட்டிக்குப் பிறக்கும் பரிவையும் ஏறிட்டுக்கொண்டு வந்தபடி. 2‘அகவாயில் உள்ளது பகைமையாய் இருக்கச்செய்தே, அத்தை மறைத்துக்கொண்டு, அன்பு தோற்ற வந்தவள்’ என்பதனைத் தெரிவித்தபடி. மகள் தாய் செய்து – தாய் மகள் செய்து; என்றது, ‘பேயான தான் மனித வேடத்தைக் கொண்டு, அதுதன்னிலும் 3‘பெற்ற தாய் போல்’ –பெரிய திருமொழி, 1. 3 : 1.-என்கிறபடியே, தாய் வடிவைக் கொண்டு வந்தவள்’ என்றபடி. மகள் என்பது மனிதர்கட்குப் பெயர். மகள் – மக்கள். ஒரு பேய்ச்சி – இஃது என்ன வஞ்சனைதான்! ‘வஞ்சனைக்கு ஒப்பற்றவள்’ என்றபடி. அன்றிக்கே, ‘நலிய வந்தாள்’ என்னும் கோபத்தாலே விருப்பம் இல்லாத வார்த்தையாகவுமாம்.

    விடம் நஞ்சம் – விஷம் என்றும், நஞ்சம் என்றும் மீமிசைச் சொல்லாய், ‘நாட்டில் விஷங்கள் எல்லாம் அமிருதம் என்று சொல்லக் கூடியதான விஷம்’ என்னுதல். அன்றிக்கே, பேய்ச்சிவிட – பேயானவள் உயிரை விடும்படி, நஞ்சம் முலை சுவைத்த – ‘நஞ்சு முலையை அமுது செய்த’ என்னுதல். என்றது, ‘அம்முலை வழியே உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான்’ என்கிறபடியே, பாலும் உயிரும் ஒக்க வற்றி வரும்படி சுவைத்தமையைத் தெரிவித்தபடி. 4‘உயிரோடு குடித்தான்’ என்னக் கடவதன்றோ?

மிகு ஞானச் சிறு குழவி – 1இளமைத்தன்மையில் கண்ணழிவற்று இருக்கச்செய்தேயும், சுவை உணர்வாலே, ‘இது தாய் முலை அன்று; வேற்று முலை,’ என்று அமுது செய்தான். 2அன்றிக்கே, ‘அவள் தாயாய் வந்தாலும், இவன் ‘தாய்’ என்றே முலை உண்டாலும், பொருளின் தன்மையாலே வருமது தப்பாதே அன்றோ? அத்தாலே தப்பிற்றித்தனை,’ என்னுதல்.

    படம் நாகத்து அணைக் கிடந்த – 3உணவுக்குத் தகுதியாகக்காணும் கிடந்தபடியும். நஞ்சை உண்டு நஞ்சு அரவிலே அன்றோ கிடக்கிறது? நஞ்சுக்கு நஞ்சு மாற்றே அன்றோ? 4விரோதியை அழியச் செய்து படுக்கையிலே சாய்ந்தபடி. 5அன்றிக்கே, ‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலை விட்டுவிட்டு’ என்கிறபடியே, படுக்கையை விட்டுப் போந்து விரோதியைப் போக்கினபடி’ என்னுதல். 6அடியார்களுடையக்கக்குரல் கேட்டால்  போகத்திலே நெஞ்சு பொருந்தாதே அன்றோ? சர்வேசுவரன் திருமேனியிலே சாய்கையால் உண்டான சந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடையவனாதலின், ‘படநாகம்’ என்கிறது. 1அசுரர்களுடைய கூட்டம் கிட்டினால் ‘வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார்’ என்று முடியுமாறு போலே ஆயிற்று, அன்புள்ளவர்கள் கூட்டம் கிட்டினால் வாழும்படி.

    பரு வரைத் தோள் – 2திருவனந்தாழ்வானுடைய சம்பந்தத்தால், ஒரே தன்மையதான விக்கிரஹத்துக்குப் பிறக்கும் வேறுபாட்டைச் சொல்லுகிறது. 3‘கர்மங்காரணமாக வருகின்ற வேறுபாடுகள் இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களுடைய சேர்க்கையில் வேறுபாடு இல்லை எனில், அவ்வஸ்துவை அணைய ஆசைப்பட வேண்டாவே? பரம்புருடன் – தகட்டில் அழுத்தின மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த பின்பாயிற்று ‘அறப்பெரியன்’ என்று தோன்றிற்று. நெடு மாயன் – 4என் மடியில் சுவடு அறிந்த பின்பு படுக்கையில் பொருந்தி அறியாதவன். கவராத நிறையினால் குறை இலமே –

நெடுமாயன்’ என்பதற்கு மிக்க வியாமோகத்தையுடையவன் என்று பொருள்
கூறத் திருவுள்ளம் பற்றி, ‘மிக்க வியாமோகத்தை உடையனாகையாவது யாது?’
என்ன, ‘என் மடியில்’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
மடி – வயிறு. சுவடு – இனிமை. ‘என் மடியில் சுவடு’ என்ற இவ்விடத்தில்,
‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்னும் மறைமொழி அநுசந்திக்கத்தகும்.
  திருவாய். 1. 9 : 4

அப்படி ஆதரித்தவன் இப்படி உபேக்ஷித்த பின்னர், எனக்கு என்னுடைய பெண்மையால்என்ன காரியம் உண்டு? 1நிறை அடக்கம்’ என்றது, ‘தன்னகவாயில் ஓடுகிறது பிறர்க்குத் தெரியாதபடி இருக்கும் பெண் தன்மை.’

நிறை -அடக்கம் வேண்டாம் என்கிறார் இதில்
பூதனை நிரசனம்
அத்யந்த விலஷணன்
மடப்பமான நெஞ்சு -இல்லாமல் வந்த
தாய் போலே வந்த
விட நஞ்சு மீமிசை போலே
மிக்க ஞானம் உடைய -சிறு குழவி –
பாம்பணை மேல் சேர்ந்த பரம் புருடன்
நெஞ்சில் நெகிழ்ச்சி இன்றி -யசோதை போலே ஏறிட்டு கொண்டு -தாய் உருவாக்கி கொண்டு –
தாய் மக்கள் -தாய் மகள் மனுஷ்ய வேஷம் கொண்ட பேய் -தாய் வேஷம் கொண்ட பேய்ச்சி
வஞ்சனைக்கு ஒப்பு இன்றி
விடம் நஞ்சம் -மீ மிசை அதிக விஷம் -நாட்டில் விஷம் எல்லாம் அமிர்தம்
பேய்ச்சி உயிர் விட நஞ்சை அமுது செய்தான் -என்றுமாம்
நச்சு முலை அமுது செய்த

மிக ஞான சிறு குழவி
தாயாக வந்தாலும் -வேற்று முலை என்று அறிந்தவன்
வஸ்து ஸ்வாபம் தப்பாது
ஜீவாத்மா சேஷத்வம் தானே ஸ்வரூபம் அவனை பற்றி தன்னடையே வரும்
பூதனைக்கும் அவனைப் பற்றி தனது ஸ்வாபம் கிடைத்ததே
நெருப்பு சுடும் தெரியாமல் பட்டாலும் சுடுமே –
பட நாகத்து அணை கிடந்த -உண்ட நஞ்சுக்கு ஈடாக இங்கே சயனித்து அருளி

நஞ்சுக்கு நஞ்சு மாற்று இ றே
விரோதியை அழித்த ஆயாசம் தீர படுக்கையிலே சாய்ந்தபடி
படுக்கை விட்டு போந்து விரோதி அழித்த
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீராப்தி -மதுராபதி -போலே
துக்க குரல் கேட்டால் படுக்கை பொருந்துமோ
விகசிதகமான படங்கள் –
திரு வநந்த ஆழ்வான் ஸ்பர்சத்தாலே -ஏக ரூபமான
அவனுக்கும் தோள்கள் பணைத்து -பரு வரைத் தோள்
பரம் புருடன் -சர்வாதிகன் தோன்றுமே தகட்டில் அழுந்திய மாணிக்கம் போலே பிரகாசிக்கும்
நெடு மாயன் -எனது மடியில் சுவடு அறிந்து படுக்கை பொருந்தாதே
இப்பொழுது உபேஷித்து
நிறை அடக்கம் ஸ்த்ரீத்வம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 28, 2013

மணிமாமை குறையில்லா மலர்மாதர் உறைமார்பன்
அணிமானத் தடைவரைத்தோள் அடல்ஆழித் தடக்கையன்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைஇலமே.

    பொ-ரை : ‘மணி போன்ற ஒளியையுடைய அழகிலே யாதொரு குறைவும் இல்லாத பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற மார்பையுடையவனும், அழகிய பெருமை பொருந்திய விசாலமான மலை போன்ற தோள்களையும் பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும் உடையவனும், கைங்கரியத்தின் அளவிலே தவறாமல் அடியேனை அடிமை கொண்ட நீலமணி போன்ற நிறத்தையுடைய மாயவனுமான சர்வேசுவரனால் விரும்பப்படாத மடநெஞ்சால் ஒரு காரியத்தையுடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : ‘குறை இல்லாத மாதர்’ என்க. அடல் – கொல்லுதல். பணி -தொண்டு. மானம் – அளவு.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘மேற்பாசுரத்திற்கூறிய சீலத்துக்கும் அடியான பிராட்டியோடே கூட வடிவழகைக் காட்டி அடிமை கொண்டவன் விரும்பாத உரிமைப்பட்ட நெஞ்சால் என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

    மணி மாமை குறை இல்லா மலர் மாதர் உறை மார்பன் – ‘மணி மாமை குறை இல்லா மாதர்’ என்கையாலே, தன்னைப்போன்று ‘மணிமாமை குறை இலமே’ என்ன வேண்டாதவள் என்பதனைத் தெரிவிக்கிறாள். 2அவள் எப்பொழுதும் அண்மையில் இருப்பதாலே என்னை அடிமை கொண்டவன். ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும் கூட இருக்கச்செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில், என் உடைமையால் 3எனக்குதான் பிரயோஜனம் என்? மலரில் மணத்தையே

வடிவாக வகுத்தாற்போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள். ‘நிறமே அன்றிக்கே, பிரியத் தகாத மென்மைத்தன்மையும் உடையவள்,’ என்பாள், ‘மாதர்’ என்கிறாள். மாது – மிருதுத்தன்மை. உறை மார்பன் – அவள் நித்திய வாசம் செய்கிற திருமார்வையுடையவன். மலரில் பிறப்பு மாத்திரமேயாய், நித்தியவாசம் செய்வது மார்பிலேயாதலின், ‘உறை மார்பன்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள். 1தான் பிறந்த மலர் நெருஞ்சிக்காடு ஆம்படியான மார்வு படைத்தவன் என்பதாம்; 2அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ என்றானேயன்றோ? 3முத்தன் இவ்வுலகவாழ்க்கையை நினையாதாப்போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன். 4பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று, இவள் தான் பிறந்த மலரை நினைப்பது. 5அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!

    அணி மானம் தடவரைத் தோள் – 6‘எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்க திருத்தோள்கள்’ என்கிறபடியே, ‘ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். 7‘நீண்டும் அழகாய்த் திரண்டும் உலக்கையை ஒத்தும்’ என்கிறபடியே, ‘நீட்சியையுடைத்தாய்ச் சுற்றுடைத்தாய் ஒருவரால் சலிப்பிக்க

ஒண்ணாத தோள் படைத்தவன்’ என்பதாம். அணி – ஆபரணம். மானம் – அளவு; நீட்சி. அன்றிக்கே, ‘அணி என்று அழகாய், மானம் என்று பெருமையாய், அணி பெருகிய தோள்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர். 1அதனாலும், ‘ஆபரணத்துக்கு ஆபரணம்’ என்கிறபடியாய் இருக்கை.

    அடல் ஆழித் தடக்கையன் – 2பிராட்டியும் தானுமான சேர்த்திக்குப் பரமபதத்திலுங்கூட என் வருகிறதோ என்று ஐயங்கொண்டு எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய்ப் பகைவர்களைக் கொல்லும் தன்மையையுடைய திருவாழியைத் தடக்கையிலேயுடையவன். 3இவனுடைய விருத்தம் கைமேலே காணலாய் இருக்கிறபடி. பணி மானம் பிழையாமே – 4‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, கைங்கரியத்தில் ஓரளவும் குறையாமல். பணி – கைங்கரியம். மானம் – அளவு. அடியேனைப் பணி கொண்ட – இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே, இருவருங்கூட இருந்துகாணும்

அடிமை கொண்டது. 1‘குமரிருந்து போகாமே’ என்பார், ‘அடியேனைப் பணிகொண்ட’ என்கிறார். என்றது, ‘இச் சரீரம் இறைவனுக்கு உரிமைப்பட்டதாக இருக்க, அவனுக்கு உறுப்பு அன்றிக்கே போகாமல்’ என்றபடி. இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: 2உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்;  என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.

    பணி கொண்ட மணி மாயன் – நீல இரத்தினம் போன்ற கறுத்த நிறத்தையுடையவன்; என்றது, ‘தஹ பச – சுடு அடு’ என்று அன்று அடிமை கொண்டது; 3‘பிடாத்தை விழி விட்டு வடிவைக் காட்டி அடிமை கொண்டான்’ என்றபடி. கவராத மடநெஞ்சால் குறை இலமே – வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம் உண்டு? 4நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச்செய்வது ஒரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே, அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்றுவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’ என்பது. 1‘பிராட்டி அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறி இரேனோ? தோள் அழகை எனக்குக் காட்டிற்றிலனாகில், நான் ஆறி இரேனோ? கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில், ‘சம்பந்தம் இல்லாத விஷயம்’ என்று ஆறி இரேனோ? வடிவழகால் அன்றிக் குணத்தாலே என்னை அங்கீகரித்தானாகில் நான் ஆறி இரேனோ?’ என்கிறாள்.

மடநெஞ்சால் குறையிலம்’ என்கிறவளுடைய மனோபாவத்தை
ஆப்தசம்வாதத்தாலே விளக்குகிறார், ‘நஞ்சீயர்’ என்று தொடங்கி. ‘பூசும்
சாந்து என் நெஞ்சமே’ என்றவிடத்தில், நெஞ்சின் காரியமான நினைவினைச்
சாந்தாகச் சொன்னதை நோக்கி, நெஞ்சைச் சாந்துப்பரணியாகக் கொண்டு,
‘சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே’ என்று திருஷ்டாந்தம்
அருளிச்செய்கிறார். நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு
சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ்வாக்கியம், ரசோக்தி.

மட நெஞ்சால்
சீலம் மூலம் பிராட்டி தானே –
கூடி இருக்கும் வடிவு அழகை காட்டி என்னை அடிமை கொண்டான்
மாமை குறை இல்லாதபடி இறையும் அகலகில்லேன் என்று இருக்கும் பிராட்டி உடன்
பணி -தொண்டு கைங்கர்யம்
கொண்ட ஆச்சர்யமான திருமேனி கொண்டவன் –
மணிமாமை குறை இல்லா என்ன வேண்டாதவள்
அவள் உறை மார்பன் –
பிரிந்தால் தரிக்காத மென்மை உடையவள்
பிறப்பு தான் பூவில் நித்யவாசம் திரு மார்பில்

உறைமார்பன்’ என்று நிகழ்காலத்தாற் கூறுகின்றவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘அவள்’ என்று தொடங்கி. ‘அகலகில்லேன்’ என்பது
  திருவாய்மொழி.

சீதை மிதிலை நினையாத மாதிரி -சக்ரவர்த்தி திரு மகனை கைப்பிடித்த பின்பு
நெறிஞ்சி முள் -முக்தன் சம்சாரம் நினைக்காதது போலே –
அணி ஆபரணம் -ஆபரணமான தோள் -நஞ்சீயர்
சர்வ பூஷண பூஷண -திருவடி வார்த்தை –
ஆபரணத்தை இட்டு  மறைத்தால் ஆகாதோ –
ஏகாந்தமாக இருக்கும் அழகை -திருமஞ்சனம் -கண்டு ஆனந்திக்கலாமே –
அடல் ஆழி தடக்கையன் -நெருப்பை -உமிழும் -பிரதிபந்தத்தை அடக்கும் –
இதனுடைய வ்ருத்தம் கை மேலே காணலாமே –
கைங்கர்யம் அஹம் சர்வம் கரிஷ்யாமி -குறையாதபடி அடியேனைப் பணி கொண்ட
மிதுனத்தில் இளைய பெருமாளைப் போலே
அடியேனை -அடிமை தன்மை -வ்யர்தமாக போகாமல்
குமர் இருந்து போகாமே’ என்றது, ‘அடியேன் என்ற சேஷத்வம் பயன்
அற்றுப் போகாமல்’ என்றபடி. அதனை விவரிக்கிறார், ‘என்றது’ என்று
தொடங்கி.

கிடாம்பி ஆச்சான் -ஐதீகம் எம்பெருமானார்
தண்ணீர் அமுது பரிமாற -சாய நின்று பரிமாற –
தீர்த்தம் வலது கையாலே தானே குடிக்க வேண்டும் –
உடையவர் ஓடி வந்து முதுகிலே அடித்து நேரே நின்று தானே பரிமாற வேண்டும் –
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.

பணி கொண்ட மணி மாயன் -பச்சை வடத்தை காட்டி அடிமை கொண்டான்
மடநெஞ்சால் குறையிலம்’ என்கிறவளுடைய மனோபாவத்தை
ஆப்தசம்வாதத்தாலே விளக்குகிறார், ‘நஞ்சீயர்’ என்று தொடங்கி. ‘பூசும்
சாந்து என் நெஞ்சமே’ என்றவிடத்தில், நெஞ்சின் காரியமான நினைவினைச்
சாந்தாகச் சொன்னதை நோக்கி, நெஞ்சைச் சாந்துப்பரணியாகக் கொண்டு,
‘சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே’ என்று திருஷ்டாந்தம்
அருளிச்செய்கிறார். நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு
சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ்வாக்கியம், ரசோக்தி.

குணத்தாலும் மட்டும் ஆள் கொள்ள  வில்லை
வடிவு அழகைக் காட்டி அடிமை கொண்டானே
மறக்க முடியுமோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 28, 2013

எட்டாந்திருவாய்மொழி – ‘ஏறாளும்’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே, கேட்டார் அடைய நீராகும்படி  கூப்பிட்டார்; ‘இப்படிக்கூப்பிடச் செய்தேயும், சர்வேசுவரன் நமக்கு முகம் தாராதிருந்தது நம் பக்கல் விருப்பம் இல்லாமையாலேயாக அடுக்கும்,’ என்று பார்த்து, 2‘சம்பந்தமுள்ளவனுமாய், சுசீலனுமாய், விரோதிகளை அழிக்கிற தன்மையனுமாய் இருக்கிறவன் இது வேண்டா என்று இருக்குமாகில், எனக்கோதான் இது வேண்டுவது?’ என்று விடப்பார்த்து, 3‘அவனுக்கு வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு,’ என்று ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அற்றபடியை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார். 4அவன் விரும்பின வழியாலேகாணும் ஆத்தும வஸ்துவை

விரும்பச் சம்பந்தம் உள்ளது; 1இங்ஙனம் விரும்பாத போது தேகத்தையே ஆத்துமாவாக நினைத்திருக்கும் பழைய நினைவினைப் போன்றதே அன்றோ?

    2‘ந தேகம் – இத்தனைச் சாந்து நாற்றத்துக்காக நிலை நின்ற பலத்தையுங்கூட அழிய மாற்றும்படி அன்றோ சரீரத்தில் பண்ணியிருக்கும் அபிமானம்? அப்படிப்பட்ட சரீரம் வேண்டா. ந பிராணாந் – சரீரத்தை விரும்புகிறது பிராணனுக்காக; அந்தப் பிராணன்களும் வேண்டா. ந சுகம் -பிராணன்களை விரும்புகிறது சுகத்துக்காக; அந்தச் சுகமும் வேண்டா. இதற்கு உறுப்பாக வருமவை எல்லாம் எனக்கு வேண்டா. இவையெல்லாம் புருஷார்த்தமாவது, ஆத்துமாவுக்கே அன்றோ? அந்த ஆத்துமாதானும் வேண்டா. இங்ஙனம் பிரித்துச் சொல்லுமது என்? உன்  திருவடிகளில் அடிமையாகிற சாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில, அவை ஒன்றும் எனக்கு வேண்டா. நாத – உடையவனுக்குப் புறம்பாய் இருக்குமவற்றை விரும்பச் சம்பந்தம் உண்டோ?’ ‘அங்ஙனேயாமாகில், கிரமத்திலே கழித்துத் தருகிறோம்,’ என்ன, ‘ஒரு கணமும் பொறுக்கமாட்டேன்; இவைதம்மைத் தவிர்த்துக் கடக்க வைக்க ஒண்ணாது; நசித்துப்போம்படி செய்யவேண்டும். இது கழுத்துக்கு மேலே வருகின்ற வார்த்தை அன்றோ?’ என்ன, தத் சத்யம் – அது மெய். மது மதந – ‘இங்ஙனம் அன்றாகில், தேவர் முன்பு பொய்யரானார் பட்டது படுகிறேன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார். 3‘-இது,
தோத்திர ரத்நம்,
57.

காரதராகிய பெருமாளைப் பிரிந்து அரக்கியர் நடுவில் வசிக்கிற எனக்குப் பிராணனால் பயன் இல்லை; பொருள்களாலும் பயன் இல்லை; ஆபரணங்களாலும் ஒரு பயன் இல்லை,’ என்றாள் பிராட்டி. ‘பிராணன் முதலியவற்றால் காரியம் இன்றிக்கே ஒழிகிறது என்?’ என்னில், ‘இருக்கிறது அரக்கியர்கள்-ஸ்ரீராமா. சுந். 26 : 5.-

நடுவே; பிரிகிறது பெருமாளை; இவற்றால், என்ன பிரயோஜனம் உண்டு?’ என்றபடி.

410

ஏறுஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறுஆளும் தனிஉடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும் படியாக நிருமித்து, படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை 1குறைஇலமே.

    பொ-ரை : ‘இடபவாகனத்தையுடைய சிவபிரானும் நான்கு முகங்களையுடைய பிரமனும் திருமகளும் தனித்தனியே ஆளுகின்ற ஒப்பற்ற திருமேனியையுடையவனும், கூட்டம் கூட்டமாக அசுரர்கள் சாம்பலாகும்படியாக நினைத்துப் படையைப் பிரயோகித்த மாறாளனுமான சர்வேசுவரனால் விரும்பப்படாத அழகிய இந்நிறத்தால் ஒருவிதப் பயனும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : குறை – பயன். இத்திருவாய்மொழி, தரவுகொச்சகக் கலிப்பா.

    ஈடு : முதற்பாட்டு. 2‘எல்லை இல்லாத பெருமை பொருந்திய குணத்தையுடையவனுமாய் விரோதிகளை அழிக்கிற ஆற்றலையுடையவனுமாய் இருக்கிற எம்பெருமான் விரும்பாத நலம் மிக்க நிறங்கொண்டு எனக்கு ஒரு காரியம் இல்லை,’ என்கிறாள்.

ஏறு ஆளும் இறையோனும் திசை முகனும் கூறு ஆளும் தனி உடம்பன் – இதனால், 1‘நான், நான்,’ என்பார்க்கும் அணையலாம்படியான உடம்பை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள், 2 ‘கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள். ஏறு ஆளும் –3சர்வேசுவரன் வேதமே சொரூபமான பெரிய திருவடியை வாஹனமாகவுடையனாய் இருக்குமாகில், தானும் கைக்கொள் ஆண்டிகளைப் போலே ‘ஓர் எருத்தையுடையேன்’ என்று செருக்குற்று இருப்பவனாதலின், ‘ஏறு ஆளும்’ என்கிறார்.  ஆளும் – 4இவனுடைய இரு வகைப்பட்ட உலகங்களின் ஆட்சி இருக்கிறபடி. 5அவன் உபயவிபூதிகளுக்கும் கடவனாய்ச் சர்வேசுவரனாயிருப்பான் : கள்ளியை ‘மஹாவிருக்ஷம்’ என்பதனைப் போன்று, தானும் ‘ஈசுவரன்’ என்று இருப்பவனாதலின், ‘இறையோன்’ என்கிறார். திசைமுகனும் – படைத்தலுக்கு உறுப்பாக நான்கு வேதங்களையும் உச்சரிப்பதற்குத் தகுதியான நான்கு முகங்களையுடையனாய், ‘நான் படைப்பவன்’ என்று செருக்குற்று

இருக்கிற பிரமனும். 1‘தர்ம தர்மிகளுக்கு ஐக்கியம் உண்டித்தனை போக்கி, தர்மி துவயத்துக்கு ஐக்கியமில்லை,’ என்க.

    திருமகளும் – 2‘நான் ஸ்ரீ ராகவனுக்கு வேறு ஆகாதவள்’ என்று சொல்லுகிறபடியே இருக்கிற பெரிய பிராட்டியும். கூறு ஆளும் தனி உடம்பன் -இவர்கள் கூறு இட்டு ஆளும்படி ஒப்பற்ற உடம்பு படைத்தவன். 3‘நாங்கள்அதிகாரி புருஷர்களுடையவர்கள்’ என்று பிராட்டி பக்கத்திலே புக்குச் சிலர் அழிவு செய்தல், ‘நாங்கள் படுக்கைப் பற்றிலுள்ளோம்’ என்று சிலர் அவர்கள் எல்லையிலே புக்கு அழிவு செய்தல் செய்ய ஒண்ணாதபடி ஆளுகின்றாராதலின், ‘கூறு ஆளும்’ என்கிறார். 4திவ்யாத்ம சொரூபத்திலும் வீறுடையது திருமேனியே அன்றோ? 5எல்லார்க்கும் இடமாய் அன்றோ திருமேனிதான் இருப்பது? 6இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.

குலம் குலமா அசுரர்களை நீறு ஆகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் – இதனால், 1‘அணைக்கைக்குத் தடை உண்டாய்த்தான் இழக்கின்றேனோ?’ என்கிறாள். மேற்கூறியது, 2‘இந்த உலகத்தில் இக்காலத்தில் குணங்களையுடையவர் யாவர்?’ என்பது போன்றது. ‘வீரத்தையுடையவர் யாவர்?’ என்பது போன்றது இது. குலம் குலமா அசுரர்களை – குலம் குலமாக அசுரர் கூட்டத்தை. நீறாகும்படியாக நிருமித்து – 3‘என்னால் முன்னரே கொல்லப்பட்டு இருக்கிறார்கள்’ என்கிறபடியே, உறவு வேண்டேம்’ என்ற போதே சாம்பலாகப் போகும்படி நினைத்து. படை தொட்ட – 4‘உலகத்தைப் படைக்கின்ற காலத்தில் சங்கற்பத்தாலே அதனைச் செய்யுமவன், அடியார்கட்குப் பகைவர்களை அழியச் செய்யுமிடத்தில் படையையுடையவனாய் மேல் விழுவான். 5படைத்தல் முதலிய தொழில்களில் சத்திய சங்கற்பனாய் இருப்பான், அடியார்களுடைய பகைவர்களிடத்திலே அசத்திய சங்கற்பனாய் இருப்பான். 6‘யாகங்களுக்கு இடையூறு செய்கின்றவர்களையும், பாண்டவர்கட்குத் துன்பம் செய்கின்றவர்களையும் நான் வருத்துவேன்!’ என்கிறபடியே, ‘தன்னை மிடற்றைப்

பிடித்தாரையும், உயிர் நிலையிலே நலிந்தாரையும் நலியுமவன்’ என்பதாம்.

    நீறு ஆகும்படியாக – 1‘அறுக்கப்பட்டனவாகவும் பிளக்கப்பட்டனவாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டனவாகவும்’ என்கிறபடியே, தூளியாகும்படியாக நினைத்து ஆயுதம் எடுக்குமவன் ஆதலின், ‘நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்கிறார். மாறாளன் – ‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல். 2துரியோதனன் ‘உண்ண வேண்டும்’ என்ன, ‘பகைவனுடைய அன்னம் உண்ணத்தக்கது அன்று; பகைவர்களையும் உண்பிக்கக்கூடாது,’ என்கிறபடியே, தன் அடியார்களுடைய பகைவர்களைத் தனக்குப் பகைவர்களாகக் கொண்டு வழக்குப் பேசுமவன் அன்றோ? கவராத மணி மாமை குறை இலமே – பகைவர்களை அழியச்செய்து விடாய்த்துத் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அவன் வந்து அணையாத நல்ல நிறத்தால் ஒரு விருப்பம் உடையோம் அல்லோம். 3நிறத்திலே அவன் ஆதரிக்குமன்று அன்றோ இத்தால் காரியமுள்ளது? அல்லது, நிறக்கேடாமித்தனை அன்றோ?  

மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
அருளிச்செய்கிறார், ‘மேல் திருவாய்மொழியிலே’ என்றது முதல்
‘அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார்’ என்றது முடிய.

2. இத்திருவாய்மொழியிலே வருகின்ற ‘அடியேனைப் பணி கொண்ட’
என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனாய்’ என்றும், ‘கூறாளும்
தனியுடம்பன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுசீலனுமாய்’ என்றும்,
‘அசுரர்களை நீறாகும்படியாக’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘விரோதிகளை அழிக்கின்ற தன்மையனுமாய்’ என்றும் அருளிச்செய்கிறார்.

3. ‘உயிரினால் குறைஇலம்’, ‘உடம்பினால் குறை இலம்’?
என்பனவற்றைத்திருவுள்ளம் பற்றி, ‘அவனுக்கு வேண்டாத நானும் என்
உடைமையும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அந்யாபதேசம் –
மாற்றிச் சொல்லுதல்; வேறு வகையில் பேசுதல்.

4. ‘அவன் விரும்பிலனாகில், அதற்காகத் தான், தன்னையும் தன்
பொருள்களையும் விரும்பாதிருத்தல் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அவன் விரும்பின வழியாலே’ என்று தொடங்கி. 

  ‘காதலர் நயந்தது யாமுடை நயப்பே;
காதலர் வேண்டின யாம்வேண் டினமே;
காதலர் எம்மை வேண்டார் எனிலே
யாமும் வேண்டலம் இனியே’

  என்றார் பிறரும்.

சிவன், பிரமன்’ என்னாமல் ‘ஏறாளும்’, ‘திசைமுகன்’ என்று விசேடித்ததற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘நான், நான்’ என்று தொடங்கி. என்றது,
அவர்களுடைய உயர்வைச் சொல்லுகிறது அன்று;
‘அகங்காரங்கொண்டவர்களுக்கும் சுலபமானது எனக்கு அரியதாயிற்றே!’
என்னுமதனைச் சொல்ல வந்தது.

2. அதனை ரசோக்தியாக விவரிக்கிறார், ‘கண்ட காபாலி’ என்று தொடங்கி.
காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் – கந்தையையுடையவன்;
சிவன். அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு
நாபீ கமலத்தில் பிறந்தவன் என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏறாளும் -கூப்பிட்டாலும் முகம் காட்டாமல் –
அதிகார பூர்த்தி அடைய
தமது பக்கல் உபேஷை
ஆத்ம ஆதமீயம் வேண்டாமே
சீதா பிராட்டி நிலை போலே
பிரப்தன் சுசீலன் விரோதி நிரசன்னா சீலன் -வேண்டாம் என்றால்
அவனுக்கு வேண்டாத நானும் எனது உடைமையுமஎனக்கு வேண்டாமே
நசை அற்ற படியை
அன்யாபதேசம் –
இப்படியே நாயகி பாவம் –
அவன் விரும்பின படியே ஆத்ம வஸ்துவை விரும்புவது
இல்லை என்றால் தேகாபிமானம் போலே ஆகுமே
சேஷத்வ –
உனக்கு ஆனதே வேண்டும் ஆளவந்தார்
சாந்தாக தனது
பூசும் சாந்து எனது நெஞ்சமே
அத்தையும் அழிய மாறும் படி தேக அபிமானம்
ந பிராணான்
சுகமும் வேண்டாம்
இதுக்கு உறுப்பாக
ஒன்றும் வேண்டாம்
ஆத்மாவே வேண்டாம் என்றல் எதுவும் வேண்டாமே
சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு
உடையவன் உடைமை விரும்பலாமா
க்ரமத்தில் கழித்து தருவோம்
என்ன
ஷணமும் பொறுக்க மாட்டேன்
மேல் எழுந்த வார்த்தை இல்லை
சத்யம்
மெய் -மது அரக்கனை அழித்தாயே
பொய்யானால் மது பட்டது படுவேன்
சீதை போன்ற வார்த்தை சொல்கிறார்
பெருமாளை பிரிந்து

ஈசன் உகப்பக்குக்கு மாறு படில் ஆத்ம ஆத்மதீயங்கள் ஒன்றும் வேண்டாம் என்கிறார் –
பிராட்டி வார்த்தை -ஜீவிதே அர்த்தம் இல்லை -ராஷசிகள் இடம் இருந்து பெருமாள் இடம் சேராமல்
இஷ்ட பிராப்தியும் இன்றி அநிஷ்ட நிவ்ருதியும் இருக்க –
இளைய பெருமாளும் அருளிய வார்த்தை -ந தேவ லோகம் இத்யாதி எதுவும் வேண்டாம் சக்கரவர்த்தி திரு மகனை பிரிந்து
ஆளவந்தார் -உபயோகப் படாத பொழுது ந தேகம் -ஒன்றும் வேண்டாம்
தத் சேஷத்வ -கிடைக்காமல் -சத்யமான வார்த்தை –
அவனுக்கு வேண்டாத ஓன்று வேண்டாமே
கோவை வாயாள் -எனது நெஞ்சை பூசும் சாந்தாக கொண்டான்
என்னுடைய ஆத்ம ஆத்மதீயங்கள் அவனுக்கு –
அனைத்தும் எம்பெருமானுக்கே
ஆயுஷ் ஹோமம் கூட பண்ண மாட்டார்கள் -நமக்கு என்று கூடாது
பகவத் கைங்கர்யத்துக்கு என்றால் செய்யலாம்
பகவத் ப்ரீத் யார்தம் லோக சேமம் ஆனால் அர்ச்சைனையும் செய்யலாம்
ஆத்மா சொல்லி ஆத்மாதீயங்கள்
உயிரினால் குறைவிலேமே முதலில் சொல்லாமல்
எம்பெருமான் உடம்பை விரும்பினதாலே அதே முறையில் அருளுகிறார்

தனி தனியாக இவற்றை விரும்பினான்
அதனால் அதே க்ரமத்தில் அருளுகிறார் –
அத்யந்த குண சீலன் -அனைவருக்கும் இடம் கொடுத்து
விரோதி நிரசன சீலன்

பாசுரத்தில் ‘ஏறாளும்’ என்றது முதல் ‘தனியுடம்பன்’ என்பது முடியக்
கடாக்ஷித்து, ‘எல்லையில்லாத குணத்தையுடையவனுமாய்’ என்றும், ‘குலம்
குலமா’ என்றது முதல் ‘படை தொட்ட’ என்றது முடியக் கடாக்ஷித்து,
‘விரோதிகளை . . . ஆற்றலையுடையவனுமாய்’ என்றும், ஈற்றடியைத்
திருவுள்ளம் பற்றி, ‘எம்பெருமான்’ என்று தொடங்கியும், அவதாரிகை
அருளிச்செய்கிறார். இங்குக் ‘குணத்தை’ என்றது, சௌசீல்ய குணத்தை.
சௌசீல்யமாவது, ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடைய இறைவன்,
அங்கு நின்றும் சமுசாரி சேதநர் நின்றவிடத்தே வந்து அவதரித்து
எளியனாகி எல்லாரோடும் கலந்து பரிமாறித் தன்னைத் தாழவிட்டால்,
‘இப்படிச் சிறியாரளவிலே நம்மைத் தாழ விட்டோமே!’ என்று தன்
திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருத்தல்.

போக்தாவுக்கு உகப்பு ஒன்றே காரணம் –
திருக்கண் அமுதில் சேர்க்கும் முந்திரி போல்வன அவற்றுக்கு என்று இல்லாமல்
அவன் ஆனந்தம் ஒன்றே குறிக்கோள் என்று அருளிச் செய்கிறார் –
மணிமாமை முறை இலமே
ஏறு எருது வாகனமாக கொண்ட ருத்ரன் -பிரமன் -பெரிய பிராட்டியார்
கூறாளும் தனி உடம்பன் –
குலம் குலம் அசுரர்களை நீராகும் படி செய்தவன் –
மாமை நிறம் இத்தால் என்ன கார்யம் –

‘சிவன், பிரமன்’ என்னாமல் ‘ஏறாளும்’, ‘திசைமுகன்’ என்று விசேடித்ததற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘நான், நான்’ என்று தொடங்கி. என்றது,
அவர்களுடைய உயர்வைச் சொல்லுகிறது அன்று;
‘அகங்காரங்கொண்டவர்களுக்கும் சுலபமானது எனக்கு அரியதாயிற்றே!’
என்னுமதனைச் சொல்ல வந்தது.

2. அதனை ரசோக்தியாக விவரிக்கிறார், ‘கண்ட காபாலி’ என்று தொடங்கி.
காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் – கந்தையையுடையவன்;
சிவன். அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு
நாபீ கமலத்தில் பிறந்தவன் என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.

அடியேன் என்பவனுக்கு கொடுக்காமல் நான் நான் என்பாருக்கு கொடுத்து
கண்ட காபாலி கழுத்தில் காபாலி அணிந்து மாலையாக -கையிலே கொண்டு
இவர்கள் பெற்று போக -எனக்கு அரிதாகிறது
வேதாத்மா பெரிய திருவடி வாகனமாக கொண்ட –
ரக்கை நகம் கூட வேதமே உருவாக கொண்ட -பெரிய திருவடி –
ஏறு ஆளும் -இவனும் தானும் -செருக்கு உற்று -கைக்கொள் ஆண்டிகளைப் போலே –
உபய விபூதி நாதன் -இவன் ஏறு ஆளும்
இவனும் இறையோன் -கள்ளியை மகா வருஷம் என்பாரைப் போலே -விபரீத லஷணை
எதிர்மறை இலக்கணை யில் தான் ஈஸ்வரன் என்று இருக்கும்

‘சிவனாய் அயனானாய்’ என்று ஐக்கியம் சொல்லாநிற்க, ‘இறையோன்,
திசைமுகன்’ என்று பேதகமாகச் சொன்னதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘தர்ம தர்மிகள்’ என்று தொடங்கி. என்றது, ‘தேவன் என்றால், தேவ
சரீரத்துக்கும், சரீரியான ஆத்துமாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிறாப்போலே,
இவர்கள் சரீரமாயும் அவன் சரீரியாயும் இருக்கையாலே ஐக்கியம்
சொன்னதித்தனை போக்கி, சொரூப ஐக்கியம் சொல்லவில்லை,’ என்றபடி.
தர்மம் – சரீரம். தர்மி – ஆத்துமா. தர்மி துவயம் – இரண்டு தர்மிகள்.

மனுஷ்ய சரீரத்தை உடையவன் என்னாமல் மனுஷ்யன் என்கிறோம்
அத்வைதி தரமி ஒன்றாக –
ஜீவாத்மா தரமமாக இருக்கும் விசிஷ்டாத்வைத தத்வம் அருளுகிறார் –
இரண்டு தரமி ஐக்கியம் சோழ முடியாதே
சரீரமாக இவை இருப்பதால் -சரீர ஏக தேசம்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -நீராய் நிலனாய் ஐக்கியம் காட்டி –

திசை முகன் சிருஷ்டிக்கு நான்கு முகம் –
திரு மகளும் -அனந்யா ராகவே -பிரியாமல் கட்டுப்பட்டு இருப்பவள்
அவளுக்கும் கொடுத்து துர்மாநிகளுக்கும் இடம் கொடுத்து
கூறிட்டு ஆளும் படி அத்வதீயமான திரு உடம்பு
அனைவரையும் ஆளுகின்ற –
படிக்கை பற்று பிராட்டி பரிக்ரமம் –

அவனால் நியமிக்க பட்ட அதிகாரிகள் -தனது பத்னி –
பிராட்டிக்கு வேண்டியவன் -பிரம ருத்ராதிகளுக்கு வேண்டியவன்
திவ்யாத்மா ஸ்வரூபம் வீறு உடையது திரு மேனி
சர்வ அபாஸ்ரயமாக இருப்பது திருமேனி எம்பெருமானும் கூட -ஆஸ்ரயிக்கும்படி –
இத்தனை சீலவானை கிடீர் நான் இழந்தேன்
விரோதி நிரசன சீலன் -பிரதி பந்தகங்கள் போகும் சர்வ சக்தன் -இருந்தும் நான் இழந்தேன்
குணவான் வீர்யவான் முதல் இரண்டு குணங்கள் ஸ்ரீ ராமாயணம்
குணம் -சீலம் தான் ஆசார்யர்கள் நிர்வாகம்
ஸ்வாமி -உடையவர் தானே

பராக்கிரமம் அடுத்து சொல்லி –
குணவான் வீர்யவான் -என்றால் போலே குலம் குலம் அசுரர் நீராக்கி –

விஷ்ணு பக்தி இல்லாதவர் அசுரர் பாஸ்மாகும் படி செய்து அருளி

நினைத்தால் மாத்திரம் போதியதாமே? படை எடுப்பான் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உலகத்தை’ என்று தொடங்கி. என்றது,
‘அடியார்களிடத்து வைத்த அன்பினால் செய்கிறான்’ என்றபடி. சங்கல்பம் –
நினைத்தல்.

5. ‘படைதொட்ட’ என்றதற்குப் பாரதப் போரைத் திருவுள்ளத்திலே கொண்டு
பாவம் அருளிச்செய்கிறார், ‘படைத்தல் முதலிய’ என்று தொடங்கி. ‘அசத்திய
சங்கல்பன்’ என்றது, வீடுமனைக் கொல்லுதற்குத் திருவாழியைத் திருக்கரத்தில்
ஏந்தியது, திருவாழியைக்கொண்டு சூரியனை மறைத்தது முதலிய
செயல்களைத் திருவுள்ளம் பற்றி என்க. ‘சங்கல்பத்தோடு அமையாது அதற்கு
மேலும் காரியங்களைச் செய்வான் அடியார்கள் விஷயத்தில்’ என்றபடி.

சிருஷ்டிக்கும் பொழுது சங்கல்பமே போதுமே
பகுச்யாம் -நினைக்கும் பொழுதே
அசத்திய சங்கல்பம் -ஆயுதம் எடேன் என்று சொல்லி படை தொட்டானே
சின்னம் பின்னம் ஆகும் படி தூளியாகும் படி நீராக்கி
யக்ஜம் அழிப்பாரை முடிப்பான் –
பாண்டவரை விரோதிப்பாரை முடிப்பேன்

எல்லா உயிர்களிடத்திலும் ஒத்த அன்பினையுடைய சர்வேசுவரனுக்குப்
பகைவர் ஆவார் உளரோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘துரியோதனன்’ என்று தொடங்கி. இது, பாரதம், உத்தியோக பர். 74 : 27.
என்றது, ‘அடியார்க்குப் பகைவர்கள், தனக்கும் பகைவர்கள்’ என்றபடி.
மேற்காட்டிய சுலோகப் பொருளோடு,

  ‘என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
மின்னில்மின்னிலகு விறல்நெடும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்
உன்னி லின்னமுள தொன்று பஞ்சவ ருரைக்க வந்தஒரு தூதன்யான்
நின்னி லின்னடிசி லுண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ?’

  என்ற வில்லி பாரதச் செய்யுளை ஒப்பு நோக்குக.

மம பிராணாகி பாண்டவ
மாறாளன் மிடுக்கன் –
சர்வ பூதேஷு சமம் இருந்தாலும் பக்த பக்த விரோதிகளை முடிப்பானே –
பாகவத அபசாரம் கூடாதே -மத்யானம் வெய்யில் போலே -பகவத அபசாரம் காலை வெயில் போலே
விரோதிகளை அழிய செய்து விடாய்த்து தண்ணீர் தண்ணீர் என்று சீதை ஆலிங்கனம் செய்து
அணையாத நல்ல நிறத்தால் –
நிறத்திலே அவன் ஆதரிக்கும் என்றே ஆசை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-7-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

March 20, 2013

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென்குருகூர் மாறன் சடகோ பன்சொல்
வழுவி லாத ஒண்த மிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.

    பொ-ரை : ‘கூட்டங்கூட்டமான மாடங்களையுடைய அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறன் சடகோபராலே, தம்மைத் தழுவிக் கொண்டு நிற்கின்ற காதலால், தாமரை போன்ற கண்களையுடைய சர்வேசுவரனைப் பற்றி அருளிச்செய்யப்பட்ட குற்றம் இல்லாத பிரகாசம் பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் மனம் பொருந்தப்பாடி ஆட வல்லவர்கள் பரமபதத்தை அடைவார்கள்,’ என்றவாறு.

    வி-கு : ‘சடகோபன் தாமரைக் கண்ணனைக் காதலால் சொல் தமிழ்கள் ஆயிரம்’ என்க. தமிழ்கள் – திருப்பாசுரங்கள். ‘வல்லார் ஏறுவர்’ என்க.

    ஈடு : முடிவில், 3‘இத்திருவாய்மொழி கற்றார் எம்பெருமானோடே எப்பொழுதும் சேர்ந்திருக்கலாம்படியான திருநாட்டிலே செல்லப்பெறுவர்,’ என்கிறார்.

    தழுவி நின்ற காதல் தன்னால் – ‘நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே. தாமரைக்கண்ணன்தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –4நேத்திரபூதரைச் சொல்லுகிறார்.

குழுவு மாடம் தென்குருகூர் – 1‘ஆழ்வார்க்குத் துக்கம் மிக மிகச் சர்வேசுவரன் வரவு தப்பாது’ என்று திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி. இதனை ‘வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்பது போன்று கொள்க. மாறன் – சமுசாரத்தை மாற்றினவர். சடகோபன் – பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் பகைவர். சொல் வழு இலாத – பகவானைப் பிரிந்த பிரிவாலே கூப்பிடுகிற இந்நன்மையில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன. ஆயிரத்துள் இப்பத்தும் தழுவப்பாடி ஆட வல்லார் – 2ஆழ்வாருடைய மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக்கற்க வல்லவர்கள். வைகுந்தம் ஏறுவரே – காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற இவ்வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர். குழுவு மாடம் – நெருங்கின மாடம். தென்குருகூர் – ஆதலால், ஆழகிய திருநகரி.

(11)

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

சீலமிகு கண்ணன் திருநாமத் தால்உணர்ந்து
மேலவன்றன் மேனிகண்டு மேவுதற்குச் – சால
வருந்திஇர வும்பகலும் மாறாமற் கூப்பிட்டு
இருந்தனனே தென்குருகூர் ஏறு.         

‘ஆழ்வார் ஆற்றாமையாலே துன்ப மிகுந்தவராய் இருக்க, திருநகரிக்குக்
குளிர்த்தி எங்ஙனே?’ என்ன, அதற்கு விடையும் அருளிச்செய்து,
மேற்கோளும் காட்டுகிறார், ‘ஆழ்வார்க்கு’ என்று தொடங்கி. ‘தென்’ என்பது
அழகாய், அதனால், குளிர்ச்சியைச் சொல்லுகிறது. அதற்குப் பிரமாணம்
‘வீட்டில்’ என்று தொடங்குவது, இது, ஸ்ரீராமா. யுத். 127 : 5. ஸ்ரீ
பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக் கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலேயன்றோ ‘எல்லாரும்
சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்று பரத்துவாச முனிவர் ஸ்ரீ ராமபிரானைப்
பார்த்துக் கூறியருளினார்?’ என்றபடி.

2. ‘தழுவி நின்ற காதல்’ என்றாற்போலே, ‘தழுவி நின்று பாட வல்லார்’
என்னாதது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஆழ்வாருடைய’ என்று தொடங்கி. ‘தழுவுதல்’ என்றது, பரிசித்தலாய்,
‘ஆழ்வாருடைய பாவ விருத்தியிலே அந்யவத்தை உடையராய்க்கொண்டு’
என்றபடி.

நிகமத்தில்
வைகுந்தம் ஏறுவது
தழுவி
விட எண்ணி நாளும் விடாத காதல் தன்னால்
கிருஷி பண்ணின நேத்ர பூதர் தாமரைக் கண்ணன்
குருகூர் -கோஷ்டி
ஆர்த்தி மிகுந்து குடி நெருங்கி –
நிச்சயம் வருவான் என்று –
பரத ஆழ்வான் துன்பம் கண்டு பெருமாள் வருவார் என்று நிச்சயம்
மாறன் சம்சாரம் போக்கி
சடகோபன் விரோதிக்கு சத்ரு
சொல் -கூப்பிட நன்மையில் ஒன்றும் தப்பாத படி
பாவம் கொண்டு
தழுவ பாடி தொட்டு கொண்டு
கொஞ்சம் ஸ்பர்சமே போதுமே
வைகுந்தம் ஏறுவர் பலன் –
நித்ய அனுபவம் உகந்து இருக்க பெறுவார்
தம்மைப் போலே கதற வேண்டாத படி
நெருங்கின மாறன் குருகூர் மாறன் என்றுமாம்

தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவர்
சாரம்
சீல  மிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
தீர்ப்பாரை திருவாய் மொழி துவராபதி மன்னன் ஏத்தி உணர்ந்து
மேனி கண்டு மேவுதற்கு ஆசைப் பட்டார்
சால வருந்தி -அருளி
இரவும் பகலும் கூப்பிட்டு –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.