திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வாங்குநீர் மலர்உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்குஉயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்குஇதன்மேல் வெந்நரகம்; இவைஎன்ன உலகியற்கை!
வாங்குஎனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.

    பொ-ரை : ‘வளைந்த கடலாற்சூழப்பட்ட பரந்த உலகத்திலே நிற்பனவும் திரிவனவுமான அவ்வவ்விடங்களிலே வசிக்கின்ற உயிர்கள் பிறப்பாலும் இறப்பாலும் வியாதியாலும் வருந்தாநிற்கும்; ஈங்கு இதற்குமேலே கொடிய நரகமுமாம்; இவை என்ன உலகு இயற்கை!

நீலமணி போன்ற நிறத்தையுடையவனே! நீ என்னை அங்கீகரித்தருளவேண்டும்; அடியேனைக் கலங்கும்படி செய்யாதொழிய வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ‘வாங்கு நீர்’ வியாக்கியானம் பார்க்க. தகர்ப்புண்ணல் -வருத்தத்தை அடைதல்; அழிதல். மறுக்கேல் – கலங்கப்பண்ணாதே.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. ‘பிறப்பு மூப்பு இறப்பு முதலியவைகளாலே நோவுபடுகிற இம்மக்கள் நடுவினின்றும், இவை நடையாடாத தேசத்திலே அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.

    வாங்கு நீர் மலர் உலகில் – இவ்வருகு உண்டான காரியவர்க்கத்தையடையத் தன் பக்கலிலே வாங்காநின்றுள்ள நீரிலே உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே.  1காரியங்கள் எல்லாம் காரணத்திலே இலயமாகக் கடவன அன்றோ? 2இலயத்தை முன்னிட்டு அன்றோ படைப்பு இருப்பது? அன்றிக்கே, ‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல். வாங்கு – வளைந்த. திரிவனவும் நிற்பனவும் -தாவரங்களும் சங்கமங்களும், ஆங்கு உயிர்கள் – அந்த அந்தச் சரீரத்திலேயுள்ள ஆத்துமாக்கள். அன்றிக்கே, ‘நிற்பனவும் திரிவனவுமான உயிர்கள்’ என்று கூட்டித் ‘தாவரமாகவும் சங்கமமாகவும் இருக்கின்ற உயிர்கள்’ என்னலுமாம். ‘ஆங்கு’ என்பதனை, மேலே வருகின்ற ‘வாங்கு எனை நீ’ என்றதனோடு கூட்டுக.

    பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் – பிறப்பு இறப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்குண்ணாநிற்பர்கள் சமுசாரத்தில் இருக்கும் நாள்கள் முழுதும். இதன்மேல் வெந்நரகம் – இதற்குமேல் போனால் கொடிதான நரகம். ‘இங்கு இருந்த நாள் 3மூலையடியேசுகாநுபவம் பண்ணித் திரிந்ததைப் போன்றது அன்றே அங்குப் போனால் படும் துக்கம்?’ என்பார், ‘வெந்நரகம்’ என்கிறார். என்றது, ‘துன்பத்தை இன்பமாக மயங்கும் மயக்கத்தாலாவது இன்பம் உண்டு இங்கு; அங்கு, வடிகட்டிய துக்கமே ஆயிற்று உள்ளது,’ என்றபடி. 1உயிர்க்கழுவில் இருக்குமவன் நீர் வேட்கை கொண்டு தண்ணீரும் குடித்து நீர் வேட்கை நீங்கினவனாய் இருக்குமாறு போன்றதே அன்றோ இங்குள்ளவை? அதுவும் இல்லை அங்கு. இவை என்ன உலகு இயற்கை – இது ஓர் உலக வாழ்வினைப் பண்ணி வைக்கும்படியே! ‘ஆனால், உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்ன, ஆங்கு வாங்கு எனை – 2‘நினைவிற்கும் எட்டாத உலக நாதரானா ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடுகூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே. ஏழுலகும் தனிக்கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்கவேண்டும். மணி வண்ணா – 3ஐம்புல இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை, ‘அவ்வடிவை நாய்க்கு இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போகவேண்டும். 4‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே, இவன் படியைக்கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ? அடியேனை – 5உன் படி அறிந்த என்னை; என்றது, ‘நீயும் அவ்வோலக்கமுமாய் இருக்கிறஇருப்பில் இனிமை அறிந்த என்னை’ என்றபடி. மறுக்கேலே – 1பிறப்பு மூப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்கு உண்கிற இவர்கள் நடுவே இருந்து நெஞ்சு மறுகாதபடி பண்ணவேண்டும். என்னைக் கலங்கப் பண்ணாதே கொள். தெளிவிசும்பிலே வாங்கியருளவேண்டும். ‘உனக்கே உரியராய் அடியருமாய் இருப்பாரைக்கொண்டு லீலாரசம் அனுபவிக்கக் கடவதோ?’ என்பார், ‘அடியேனை மறுக்கேல்’ என்கிறார்.

பிறப்பு இறப்பு இவை இல்லாத பரம பதம் அருளி
நிற்பனவும் திருவனவும் துன்பம் வென் நரகம்
வாங்கு நீர் கார்யம் காரணங்களில் லயம்

‘தண்ணீரோ, எல்லாவற்றையும் வாங்குகிறது?’ என்ன அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘காரியங்கள் எல்லாம்’ என்று தொடங்கி. தண்ணீர்,
காரணம்; பூமி, காரியம். தண்ணீரினின்றும் பூமி உண்டாயிற்று என்ற சிருஷ்டி
முறையை நினைவு கூர்க.

வாங்கு நீர் பூமியை வாங்கிக் கொள்ளும் நீர் காரணம் –
வாங்குதல் வளைதல் நீரால் சூழப்பட்ட
ஸ்தாவரம் ஜங்கமம் நிற்பன திரிவன அபிமான உயிர்கள் –
பிறப்பு இற ப்பு  பிணி மூப்பு -பிணி பசி மூப்பு -தொண்டர் அடி பொடி
இதன் மேல் வென் நரகம் -இங்கு மூலையடியே சுகம் பிராந்தி உண்டே
புலி துரத்த பாம்பு தேன் சொட்ட பிராந்தி
நரகம் துக்கமே ஆக இருக்கும்
உயிர் கழு இருப்பவன் தண்ணீர் குடித்து தாகம் தீர்ப்பவன் போலே –
லோக யாத்ரை இப்படி
ஆங்கு வாங்கு எனை -அந்த இடம் -ஸ்ரியா சார்த்தம் -ஏழு உலகும் தனிக் கோல் செய்யும் அந்த இடம் வாங்கு
பக்தஸ் பாகவதஸ் சஹ உனது வடிவை காட்டி –
‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ –இரண்டாந்திருவந். 42.என்கிறபடியே,

இவன் படியைக்கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ?

அடியேனை -உன்னை அறிந்த
மறுக்குதல் மருகாத படி பண்ண வேண்டும்
தெளி விசும்பு அது
இது இருள் தரும் மா ஞாலம்
வாங்கி அருள வேண்டும்
லோக வஸ்து லீலா கைவல்யம்
இன்புறு இவ்விளையாட்டு உடையான்
சேஷ பூதன் என்னைக் கொண்டு இப்படி செய்ய வேண்டுமா
அடியேனை கலங்கப் பண்ணும்படி வைக்காதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: