திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-3–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கொண்டாட்டும் குலம்புனைவும் தமர்உற்றார் விழுநிதியும்
வண்டுஆர்பூங் குழலாளும் மனைஒழிய, உயிர்மாய்தல்
கண்டுஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டேபோல் கருதாது,உன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.

    பொ-ரை : ‘கடல் போன்ற நிறத்தையுடையவனே? மக்களால் கொண்டாடப்படுகின்ற கொண்டாட்டமும் குலத்தின் பெருமையும் பங்காளிகளும் உறவினர்களும் சிறந்த செல்வமும் வண்டுகள் தங்கியிருக்கின்ற மலர்களையுடைய கூந்தலையுடைய மனைவியும் வீட்டிலேயே தங்கியிருக்க, இறத்தலாகிற இந்த உலகியற்கையைக் கண்டு பொறுக்ககிலேன்! ஆதலால், அடியேனை முன்பு போலக் கருதாது உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்து அடிமை கொள்ளவேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ஒழிதல் – ஈண்டு இறவாது தங்கியிருத்தல். ‘அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே, முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்’ (தொல். எழுத். சூ. 315) என்றவிடத்து ‘ஒழிய’ என்பதூஉம் இப்பொருளிலேயே வந்திருத்தல் காண்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 3‘குலம் முதலானவைகள் எல்லாம் கிடக்க, இவை முடிகிறபடியைக் கண்டு பொறுக்க

மாட்டுகின்றிலேன்; துக்கம் சிறிதும் இல்லாத உன் திருவடிகளிலே அடிமை கொள்ள வேண்டும்,’ என்கிறார்.

    கொண்டாட்டும் – முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன் சிறிது வாழப் புக்கவாறே ‘முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள். 1‘பயிலும் திருவுடையார்’ என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்? குலம் புனைவும் – நல் வாழ்வு வாழப் புக்க அன்று தொடங்கி இவனுக்கு ஒருகுலம் உண்டாகத் தொடுத்துச் சொல்லுவர்கள். தமர் – 2முன்பு ‘இவனோடு நமக்கு ஓர் உறவு உண்டாகச் சொல்லுமது சாலத் தண்ணிது’ என்று போனவர்கள் இவன் வாழப் புக்கவாறே உறவு சொல்லிக்கொடு வந்து கிட்டுவார்கள், ‘அவன் தமர்’ என்று தமக்குத் தமர் புறம்பே அன்றோ? உற்றார் – 3முன்பு, ‘இவனோடு சம்பந்தம் செய்து கோடல் தரம் அன்று; நிறக்கேடாம்,’ என்று போனவர்கள், இப்போது ‘இவனோடு ஒரு சம்பந்தம் பண்ணினோமாக வல்லோமே!’ என்று ஆதரித்து மேல் விழுவர்கள். விழு நிதியும் – நினைவின்றிக்கே இருக்கச் செய்தே சருகிலை திரளுமாறு போலே சீரிய நிதி வந்து கைப்புகுருமே; அச்செல்வத்திற்குப் போக்கடி காணாமல், 4செய்வது அறியாமல், அதனை முன்னிட்டு ஒரு பெண்ணை மணந்துகொள்வான்; அவள்தான் வண்டு ஆர் பூங்குழலாள் ஆயிற்று. இவள் செவ்விவண்டே உண்டு போமித்தனை

போக்கித் தான் உண்ண மாட்டான் ஆதலின், ‘வண்டார் பூங்குழலாள்’ என்கிறது. ‘என்னை?’ எனின், இன்பத்திற்குத் தகுதியில்லாத பருவத்திலே ஆயிற்றுத் தான் அவளை மணந்துகொண்டது. 1‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’ இவை எல்லாம் சர்வேசுவரனேயன்றோ இவருக்கு?

    மனை ஒழிய – அவளுக்கும் தனக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கைக்குத் தன் ஆற்றல் எல்லாம் கொண்டு 2பல நிலமாக அகத்தை எடுப்பான். உயிர் மாய்தல் – 3இவை குறி அழியாதிருக்க, இவளைக் கூட்டோடே கொடுத்து, இப்படிப் பாரித்த தான் முடிந்து போவான். கண்டு ஆற்றேன் உலகு இயற்கை -இப்படிப்பட்ட உலக வாழ்வினை என்னால் பொறுக்கலாய் இருக்கிறதில்லை. கடல் வண்ணா – 4இந்த உலக வாழ்க்கையின்படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே. இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டியருளாய். அடியேனைப் பண்டே போல் கருதாது – ‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச் சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப் போன்று இராதே அன்றோ? 5சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது

சேர்க்கை பல்லி போலே பணியன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.

    1அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது, பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம். உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே – உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருளவேண்டும். 2உன் திருவடிகளிலே அழைத்தாலும், அடிமையின் இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது? ஆன பின்னர், என்னை நித்திய கைங்கரியம் கொண்டருளவேண்டும்,’ என்னுதல்; அன்றிக்கே, ‘சோற்றையிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.

ஆபிஜாதிகள் எல்லாம் கிடக்க
துக்க கந்தம் இல்லா உனது திருவடியில் சேர்த்து கொள்ளே வேண்டும்
அடியேனை பண்டே போல் கருதாது
அடிக்கே கூவி பணி கொள்ள  வேண்டும்
கொண்டாடும் -அவஸ்துவாய் போந்தவன் -கொஞ்சம் பணம் வந்ததும் முதலியார் போலே
பயிலும் திரு உடையார் –திருவாய் 3. 7 : 1.-ஆழ்வார்கள்
குலம் உண்டாவதாக இட்டுக்கட்டி பேசுவர் குலம் புனைவர்
தமர் -அவன் தமர்-முதல் திருவந். 55.-இவருக்கு
கிட்டின உறவு போலே சொலிக் கொள்வார்கள் கொஞ்சம் பணம் வந்ததும்

சேஷு எங்கே -கேட்டு வந்தவர் -நீதிபதி வீட்டில் –
நானும் நீயும் ஒரே எமனால் கொண்டு போக –
தயார் சகோதரிகள் -என்றாராம் –
லஷ்மி குமாரன் மூதேவி குமாரன் என்றாராம் அச்சு பிச்சு சொலி வருவார்கள்
விழு நிதியும் -பணம் வந்ததும் முதுமையிலும் பெண்ணை மணந்து
சருகு இலை சேர்வது போலே -வண்டார் பூம் குழலாள் -ஆயிற்று
இவள் செவ்வி வண்டே புஜித்து போகும் –
இவன் கிழவன் -சல்லாபம் பண்ணாதவன் –
ஆழ்வாருக்கு சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’

இவை எல்லாம் சர்வேசுவரனேயன்றோ –திருவாய். 5. 1 : 8.
துக்கம் இன்றி படி உண்டே உனது திருமேனி

மேற்கூறிய பொருளுக்கு ஆப்த சம்வாதம் காட்டுகிறார், ‘சிற்றாள்
கொண்டார்’ என்று தொடங்கி. சேர்க்கைப்பல்லி – நிலைப்பல்லி, ‘சேர்க்கைப்
பல்லி ஓர் இடத்திலேயே பலகால் சொல்லிக் கொண்டிருக்கும்; அந்தப் பல்லி
போலே, இவர்க்கும் இது பணி அன்றோ?’ என்று இருக்க ஒண்ணாது
என்கிறார் என்றபடி.

அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது,

பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம். உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே –

உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருளவேண்டும்

உன்னை இழந்த வருத்தம் தான் முன்பு
இப்பொழுது இவர்கள் இழவுக்கும் சேர்த்து கூவுகிறேன்
அடிமை சுவடு அறிந்து -கைங்கர்யமும் கொடுத்து பணி கொள்ள வேண்டும்
சோற்றை இட்டு பணி கொள் என்பாரைப் போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: