திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

    பொ-ரை : ‘சாகின்ற விதமும், செல்வம் கெடுகின்ற விதமும், தாயாதிகளும் மற்றைய உறவினர்களும் மேல் விழுந்து மேல் விழுந்து துக்கத்தினால் கிடந்து அழுகின்ற வகையுமான உலக இயற்கை இவை என்ன? இவர்கள் உய்யும் வகை ஒன்றனையும் அறிகின்றிலேன் யான். அரவணையாய்! அம்மானே! அடியேன் விஷயத்தில் திருவுள்ளம் பற்றி அடியேனை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் வகையில் விரைய வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு :  தமர் – தாயத்தார். உற்றார் – மற்றைய உறவினர். தலைத்தலை – இடந்தோறும். அரவணை – பாம்புப்படுக்கை. ‘குறிக்கொண்டு அடியேனைக் கூமாறே விரை கண்டாய்,’ என்க. கண்டாய் – முன்னிலையசைச்சொல்.

    ஈடு : இரண்டாம் பாட்டு, 1முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று தொகுத்துக் கூறினார்; அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய், ‘இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.

    சாமாறும் கெடுமாறும் – சாகும்படியும் கெடும்படியும். ‘‘ஆறும், ஆறும்’ என்னுதல் என்னை? சாதலுக்கும் கெடுதலுக்கும்

மேற்படச் சில வகைகளும் உளவோ?’ என்னில், ‘பல காலம் 1ஒருபடிப்பட வாழக்கடவனாகவும், தன்னோடு ஒக்க வாழ்வாரை அழியச் செய்யக் கடவனாகவும் கோலிக் கொண்டு போகாநிற்க, நினைவு அற முடிந்துகொடு நிற்கும்படியும், நான்கு 2சின்னம் கைப்பட்டவாறே, ‘இனி, நமக்கு உள்ளதனையும் வாழ்வதற்கு ஒரு குறை இல்லை’ என்று நினைத்திருக்கச்செய்தே, அதனை இழந்து துன்பப்பட்டுக் கூப்பிடும்படியும் எனச் சில உளவே அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி.’ 3ஒருவன் தன் சாக்காட்டிற்கும் இசைவான், தன் கையில் அகப்பட்ட பொருள் தப்பினால்; 4அதனையே அன்றோ இவன் தஞ்சமாக நினைத்திருப்பது? ஆதலின், சாதற்குப் பின் ‘கெடுதலை’ வைத்து ஓதுகின்றார். 5ஒருத்தனை ‘ராஜத்துரோஹி’ என்று கையையும் காலையும் தரிக்க, இவனை வினவப் புகுந்தவர்கள், ‘இப்படிப்பட்டது வரல் ஆகாதே!’ என்ன, ஆயிரம் ஐந்நூறு என்று காசு சில தா,’  என்னாதே இவ்வளவோடே போயிற்று உங்கள் அநுக்கிரஹமே அன்றோ?’ என்றானாம்.

    6இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின; 7‘நின்னலால் இலேன்காண்’ என்றும், 8‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’ 9‘இன்னம் கெடுப்பாயோ?’ என்றும், ‘பகவானை அடையாதொழிவது விநாசத்திற்குக் காரணம்,’

என்றும், ‘இதர விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது. 1‘அடியவனான என்னைத் தேவரீர் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருளவேண்டும்; என்னை அழைத்துக்கொண்டு போவதில் பாவம் இல்லை; தேவரீருக்கே பயன் கிடைக்கின்றது; நான் தேவரீருக்குக் கைங்கரியத்தைச் செய்து அதனால் பயனை அடைந்தவன் ஆகப் போகிறேன்,’ என்றும், 2‘ஸ்ரீராமரே! உம்மோடு கூடி வசிக்கும் இடம் எதுவோ, அது சுவர்க்கம்; உம்மைப் பிரிந்து வசிக்கும் இடம் எதுவோ அது நரகம் என்று எண்ணுகின்ற எனது சிறந்த பிரீதியை அறிந்தவரான நீர் என்னுடன் புறப்படும்,’ என்றும், இவற்றை விநாசமும் கேடுமாகவேயன்றோ இவர்கள் நினைத்திருப்பது? 3இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக்கொண்டார்கள்? ‘என் ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்?’ என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

    தமர் உற்றார் – சரீரசம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; 4இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு. தலைத்தலைப்பெய்து – மேல் விழுந்து மேல் விழுந்து. ஏமாறிக் கிடந்து அலற்றும் – 5‘ஏ’ என்று ஏக்கமாய்,

மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல். அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல். ‘ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை; அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர். இவை என்ன உலகு இயற்கை – இவை ஒரு உலக வாழ்வு இருக்கும்படி என்? என்றது, ‘வாழ்வதற்கு எண்ணாநிற்க முடிவது; நான்கு காசு கையிலே உண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்று இருக்க, அது அழிந்து போவது; சரீர சம்பந்தம் காரணமாக வருகிறவர்களையே தனக்கு எல்லாவித உறவுமாக நினைத்து, அவர்களுக்கு ஒன்று வந்தவாறே ‘பட்டேன் கெட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுவது ஆகிற இவையும் ஒரு உலகப் போக்கே! பிரானே!’ என்கிறார் என்றபடி.

    ‘நன்று; அவர்கள் என்படில் உமக்கு நல்லது? நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே! ‘சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்: நான் ஆமாறு ஒன்று அறியேன் – 1‘அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ? சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ? அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ? இவ்வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று அறியாநின்றேனோ?’ என்கிறார். 2அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது, ‘நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.

    அரவணையாய் அம்மானே – இவற்றைக் காக்கும் பொருட்டுத் திருவனந்தாழ்வான்மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி, இவற்றைப் பாதுகாத்தல் உன் பேறாம்படியான

குடல் சம்பந்தத்தை உடையவனே! 1இவற்றிற்கு இவனோடு மெய்யான குடல் சம்பந்தமே அன்றோ? 2இவனுடைய பொய்யோடு மெய்யோடு வாசியற இவனுக்கு இரண்டும் காப்பதற்குக் காரணமாக இருக்கும். கூமாறே விரை – 3சுலபனாய் இவற்றைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிலே கூக்குரல் கேட்கைக்காகக் கிட்டி வந்து கிடக்கிற நீ, நான் உன் திருவடிகளை வந்து கிட்டும்படி என்னை அழைத்துக்கொள்வதிலே விரைய வேண்டும். ‘இப்படி விரைய வேண்டுகிறது என்?’ என்னில், கண்டாய் – என்னைக் கண்ட உனக்குவிரையாதே இருக்கலாய் இருந்ததோ? 4‘காட்டிலே கொடியவர்களான இராக்கதர்களாலே பல வகையில் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலருடைய சரீரங்களைக் கடாக்ஷிக்க வேண்டும்; எழுந்தருளவேண்டும்,’ என்றாற்போலே, ‘பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.

    ‘ஆனாலும், அநாதி காலம் நீர் பிரியில் தரியாதே போந்த உடம்பும் உற்றாரும் அன்றோ?’ என்ன, அடியேனைக் குறிக்கொண்டே – ‘இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய்இருக்கிற 1என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.  2உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று பிறருடைய துக்கத்தைப் பொறுக்க மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்’ என்னுதல். ‘நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், ‘பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில், ‘இவை என்ன உலகியற்கை?’ என்று இந்த உலக வாழ்வினை நினைத்து வெறுத்து, என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?    

தமர் உற்றார் மேலே விழுந்து
இவை என்ன உலகு இயற்க்கை
அடியேனை திருவடியில் சேர்த்து கொள்ள வேண்டும்
சாமாறும் -ஒருபடிப்பட ஜீவிக்க தாம் கடவ
கெடுமாறும் -மற்றவர் அழியும்படியும் நினைந்து
இவனே முடிந்து போக -காசு இழந்து -சூதாடி பாண்டவர்களும் –
சூதாட கூப்பிட்டால் போகாமல் இருந்தால் ஷத்ரியர் இழுக்கு என்ற நினைவால் –
நாலு காசு கிடைத்த உடன் -இனி கவலை என்று ஜீவித்து இருக்க அதுவும் கெட்டு –
இவன் இருந்தாலும் அது கெடுமாறு
அது இருந்தாலும் இவன் சாவுமாறு –
நோவு பட பல விஷயம் ஆழ்வாருக்கு
நின்னலால் இலேன்காண்’- திருவாய், 2. 3 : 7. என்றும்,
‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’ –
திருவாய், 6. 9 : 9.
‘இன்னம் கெடுப்பாயோ?’ – திருவாய். 6. 9 : 8. -என்றும்,
‘பகவானை அடையாதொழிவது விநாசத்திற்குக் காரணம்,’
ஆழ்வார்களுக்கு
இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக்கொண்டார்கள்?

‘என் ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்?’-முதல் திருவந்.95. என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

நா வாயில் உண்டே
நமோ நாராயணா மந்த்ரம் உண்டே
சொல்லும்பொழுது மூச்சு விடாமல் -ஓவாது உரைக்கும் உரை உண்டே
மா கதி செல்லும் வகை உண்டே
எப்படி நரகம் போவார் என்ன ஆச்சர்யம் –
பிரிவும் சேர்ந்து இருப்பதே நரகமும் ஸ்வர்க்கமும் –
விநாசம் அநர்த்தம் இரண்டும் உண்டே -பிரிவு விநாசம்
கெடுமாறு ஸு போக்த புத்தி உடன் கைங்கர்யம் செய்தல்
குருஷ்ம மாம் இளைய பெருமாள்

ஸ்வா தந்த்ரம் கெடுமாறு என்று இவர்கள் நினைத்து இருப்பது
சாமாறு விட கெடுமாறு ரொம்ப -துக்கம்
பாடுபட்டு புதைத்து வைத்து கூடு விட்டு ஆவி போன பின்
ராஜ துரோகி கை காலை வெட்ட -விசாரிக்க வந்தவர்கள் -காசு கேட்க்காமல் இதை செய்தது நல்லது என்பாராம்
-அபராதம் சவுக்கடி -விரலை வெட்டி எது வேண்டும் –
விரலை வெட்டிக்கோ என்றானாம் -பணம் கொடுத்தானாம் அப்புறம் -புத்தி இப்படி போக –
தமர் உற்றார் -இது ஒழிய வேறு சிலர் -தமர்கள் தமர்கள் தமர்கள் -திருவாய்மொழி -8-10-9-
ஆழ்வாருக்கு –
சம்சாரிகள் -மேலே விழுந்து
ஏமாறி ஏக்கமாய்
ஏமாற்றம் ஒரு சொலாய் துக்கித்து கிடந்தது
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய்
தெளிவி அழிக்கை பிள்ளை அமுதனார்

ஏமாறி’ என்பதற்கு, ‘ஏங்காதே’ என்றும், ‘துக்கித்து’ என்றும், ‘கலங்கி’
என்றும் மூன்று வகையான பொருள் அருளிச்செய்கிறார்,

ஏமாறிக் கிடந்தது அலற்றும் -பெரியாழ்வார் திருமொழி -2-7-8-
சீலமில்லா சிறியன் -கூப்பிட வைத்தேனே
இவர்கள் கூப்பிடுவது உனது சம்பந்தம் இருக்க செய்தேயும் சம்சாரம் படுத்தும் பாடு
சம்சாரத்தில் இன்னம் வைத்து இருக்க –
இன்னத்துக்கு கூப்பிடுகிறேன் அறியாது
துக்க ஹேது என்னது அறியேன்
எனக்கு நீ தந்த வாசி இவர்களுக்கு சோழ அறிகிலேன்
அரவணையாய் அம்மானே -உனது பேறாக குடல் துவக்கு கொண்டு ரஷணத்துக்கு
யோக நித்தரை செய்து இருக்கும்
மெய்யான குடல் துவக்கு உண்மை சரீரி இரண்டுமே உண்டே
பொய்யும் மெய்யும் ரஷிக்கைக்கு உடலாய் இருக்கும்

சரீரம் பொய் ஆத்மா மெய் சாஸ்திர அர்த்தம் உண்டே

பிராசங்கிகமாக அருளிச்செய்கிறார், ‘இவனுடைய’ என்று தொடங்கி.
‘இவனுடைய பொய்’ என்றது, கிருஷ்ணாவதாரத்தில் பொய்யை. என்றது,
‘ஆயுதம் எடேன்’ என்று கூறி, ஆயுதம் எடுத்தல் போல்வன. ‘இவனுடைய
மெய்’ என்றது, இராமாவதாரத்தில் மெய்யை. என்றது, அபயப் பிரதான
விருத்தாந்தத்தை. இனி, ‘இவனுடைய பொய்யோடு மெய்யோடு’ என்றதற்கு,
‘நாஸ்தி சப்த வாச்சியமான அசித்தோடு, அஸ்தி சப்த வாச்சியமான
ஆத்மவஸ்துவோடு’ என்று பொருள் கோடலுமாம். ஈண்டு, ‘இவனுடைய’
என்பதற்குப் ‘புருஷனுடைய’ என்பது பொருள். ‘இல்லதும் உள்ளதும்’ என்ற
பாசுர வியாக்கியானம் ஈண்டு நினைவு கூர்க. ‘உடலாயிருக்கும்’ என்றதும்
சிலேடை : ‘சரீரமாக இருக்கும்’ என்பதும், ‘காரணமாக இருக்கும்’ என்பதும்
பொருள்.

விபரீத லஷணை சரீரம் மெய் என்கிறோம்
கூமாறே விரை கண்டாய் கிட்டி வந்து கிடக்கிற நீ
நான் உனது திருவடிகளை கிட்ட விரைய வேண்டும்
கண்டாய் -என்னை பார் அனுக்ரகம் செய்யா விடில் பாராய் வடிவை காட்டுகிறார்
பசய சரீராணி என்னுமா போலே
அநாதி காலம் பியில் தரியாதே போன லோக யாத்ரை செல்லாத என்னை அறிந்து
சம்பந்தம் அறிந்து தொடங்கி -உன்னைப் போலே பிறர் துக்கம் சகியாத என்னை –
அவயவம் அனைவரும் என்று உணர்ந்த அடியேனை –
பரார்த்தம் பொறுக்க மாட்டாதவர்
கூமாறு -இவை என்ன உலகு இயற்க்கை வெறுத்து பேசினவர் –

 நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: