திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே.

    பொ-ரை : ‘உயிர்களால் குறைவில்லாத ஏழ் உலகங்களையும் தன் வயிற்றினுள்ளே ஒடுக்கிக்கொண்டு, தயிரையும் வெண்ணெயையும்

உண்ட சர்வேசுவரனை. விசாலம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட குற்றமில்லாத இசையோடு கூடின மாலையாகிற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப்பத்துத் திருப்பாசுரங்களாலும் காழ்ப்பு ஏறிய இந்தப் பிறவியை நீக்கிக்கொண்டு பரமபதத்தை அடைவார்கள்,’ என்றபடி.

    வி-கு : ‘ஒடுக்கி உண்டான்’ என்க. ‘உண்டானைச் சடகோபன் சொல் மாலை ஆயிரம்’ என்க. ‘பத்தால் அறுத்து நண்ணுவர்’ என்க.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், காழ்ப்பு ஏறின பிறவியினது கலக்கம் நீங்கிப் பரமபதத்திலே புகப்பெறுவார்கள்,’ என்கிறார்.

    2உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு – கணக்கு இல்லாதவைகளான ஆத்துமாக்கள் நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும். தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை – தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது, ‘செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று எல்லா உலகங்களுக்கும் வேண்டுவனவற்றையெல்லாம் தன் நினைவாலே செய்து, பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது. அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக உணவு முதலானவைகளை உட்கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல். அன்றிக்கே, 3‘எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான அந்தக் கிருஷ்ணபலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாயிருந்து வைத்து, அடியார்கள் சம்பந்தம் உள்ள பொருள்களால் அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

    தடம் குருகூர்ச் சடகோபன் – 4‘அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே, ‘பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோற்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தாற்போலே, இவர்

ஆத்துமாவையும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக் காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். செயிர் இல்சொல் இசை மாலை – செயிர் – குற்றம். இல் – இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது, ‘ஆத்துமாவும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற வார்த்தையில் குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.

    வயிரம் சேர் பிறப்பு அறுத்து – இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து. வைகுந்தம் நண்ணுவரே – ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, 1‘அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் நினைவின் வண்ணமும் பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். என்றது, 2 ‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி. 3அவன் விரும்பினபடி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது?

திருவாய்மொழி நூற்றாந்தாதி

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் – தேறுங்கால்
என்றனக்கும் வேண்டா எனுமாறன் தாளைநெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு.
  

‘பலபடிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல
விதங்களாலும்’ என்பது பொருள்.

3. ‘இவர் திருமேனியை நித்தியமுத்தர்கள் திருமேனிகளைப் போன்று அவன்
விரும்பாநிற்க, இவர் ‘வேண்டா’ என்பான் என்?’ என்ன, ‘அவன்
விரும்பினபடி’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், இங்கே,
‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின
திருமேனி’ என்பதும் பொருள்.

வைரம் சேர் பிறப்பு அறுத்து -வைகுந்தம் பெறுவார்
ஏழு உலகங்களையும் தன்னுள் ஒடுக்கி -தயிர் வெண்ணெய் உண்டான்
செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே இன்றி
தனது கார்யம் செய்து முடித்த பின்பு ஆர அமர வெண்ணெய் உண்டானாம்
ஸ்ரீ சடகோபன் சாதிக்க செருப்பு சாதிக்க கேட்டானாம் –
கற்ப ஸ்திரீகள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உண்பது போலே லோக ஜீவனமாக வெண்ணெய் உண்டான்
அடியார்கள் கை பட்ட த்ரவ்யம் என்பதால்
தடம் குருகூர் சடகோபன் -கூட்டம் கூட்டமாக திரண்ட
செயிர் குற்றம் இல்லாத ஆயிரம்
இவர் வேண்டாம் என்று கழித்தாலும் விடாத சம்சாரம் கழிந்து
அங்கும் பல சரீரம் கொண்டு
சங்கல்பம் அடியாக எல்லா கைங்கர்யம் செய்ய அநேக சரீரம் கொண்டு
பல படிகளாலும் அடிமை செய்யப் படுவர்

அவன் விரும்பின படி இது என்று அறியாதே வேண்டாம் என்கிறார்
சரீரத்தால் மேனி தனில் வஞ்சித்து

பலபடிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல
விதங்களாலும்’ என்பது பொருள்.

3. ‘இவர் திருமேனியை நித்தியமுத்தர்கள் திருமேனிகளைப் போன்று அவன்
விரும்பாநிற்க, இவர் ‘வேண்டா’ என்பான் என்?’ என்ன, ‘அவன்
விரும்பினபடி’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், இங்கே,
‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின
திருமேனி’ என்பதும் பொருள்.

என்னுடைமை
மிக் க உயிர்  வேண்டாம் என்கிறார் மாறன் தாளே நமக்கு பேறு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: