திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வரிவளையால் குறையில்லாப் பெருமுழக்கால் அடங்காரை
எரிஅழலம் புகஊதி இருநிலம்முன் துயர்தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்துஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.

    பொ-ரை : ‘வரிகளையுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கினது குறைபாடு இல்லாத பெரிய ஒளியால், எரிகின்ற அச்சமாகிய நெருப்பானது பகைவர்கள் மனங்களிலே புகும்படியாக ஊதிப் பெரிய நிலத்தினது துன்பத்தை நீக்கிய, அறிதற்கு அரிய சிவனும் பிரமனும் இந்திரனும் வணங்கி ஏத்துகின்ற விரிந்த கல்யாண குணங்களையுடைய சர்வேசுவரன் விரும்பாத மேகலையால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்’ என்கிறாள்.

    வி-கு : ‘வரிவளையினது குறை இல்லாத பெருமுழக்காலே அடங்கார் மனங்களிலே எரி அழலம் புக ஊதி நிலத்தினது துயரைத் தவிர்த்த விரிபுகழான்,’ என்க. அழலம் : அம் – சாரியை. அழல் – நெருப்பு. ‘வளையால், அடங்காரை’ என்பன வேற்றுமை மயக்கங்கள். ‘தெரிவரிய’ என்பது, ‘சிவன்’ முதலானோர்கட்கு அடை.

    ஈடு : எட்டாம் பாட்டு. 2‘உலகத்திற்கு உபகாரத்தைச் செய்த சர்வேசுவரன், தனக்கே உரியவளான என்னை

விரும்பிலனேயாகில், என்னுடைய மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள்.

    வரி வளையால் – 1ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே. வளை – சங்கு. குறை இல்லாப் பெருமுழக்கால் – 2‘அந்த ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய நெஞ்சுகளைப் பிளந்தது,’ என்றும், 3‘அந்தப் பாஞ்சஜன்யமானது, பாதாளம் ஆகாயம் திக்குகள் திக்குப்பாலர்கள் ஆகிய இவற்றோடு கூடின உலகத்தை நடுங்கச் செய்தது,’ என்றும் கூறப்படுகின்றபடியே, பகைவர்கள் அளவு அல்லாத பெரிய ஒலியாலே. ‘ஹஸ்தேந ராமேண – கையினாலே ஸ்ரீராமனாலே’ என்னுமாறு போன்று, ‘வரிவளையால் பெருமுழக்கால்’ என்பது  வேற்றுமை மயக்கம். அடங்காரை – பகைவர்களை. எரி அழலம் புக ஊதி – எரியாநின்றுள்ள நெருப்பானது அவர்கள் மனங்களிலே புகும்படி ஊதி. என்றது, ‘பய அக்கினி கொளுந்தும்படி செய்து’ என்றபடி. அடியார்களுடைய பகைவர்கள் கழிய ஊதியது 4இவளையிட்டே அன்றோ?

    இருநிலம் முன் துயர் தவிர்த்த – பரப்பையுடைத்தான பூமியில் முன்பே உண்டான துக்கத்தைப் போக்கின. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘முன்பே பிடித்துத் துக்கத்தைப் போக்குமவனாய்ப் போருமவன், இன்று இத்தலையை நோவுபட விட்டிருக்குமாகில், பின்னை எனக்கு என்னுடைமை கொண்டு காரியம் என்?’ என்கிறாள் என்றபடி. 5‘தேவர்களுக்குப் பலம் விருத்தியடைந்தது

யோகிகளுக்குத் தெளிவும் விருத்தியடைந்தது’; 1‘அந்தச்சங்கின் ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய மனங்களைப் பிளந்தது,’ என்கிறபடியே, ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலியாகிற இதுதான் அன்புடையவர்கள் கேட்க ஆசைப்பட்டிருப்பதுமாய், பகைவர்கள் முடிகைக்குக் காரணமுமாய் இருப்பது ஒன்றே அன்றோ?

    2பெரியாழ்வார் திருமகளார்க்கும் விசேடித்து ஜீவனமாய் இருப்பது ஒன்றே அன்றோ இது? ‘பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும், சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்றுகொலோ!’ என்பது நாய்ச்சியார் திருமொழி. 3என்றது, ‘ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப்பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒருகாலே பெறவேண்டும்,’ என்கிறாள் என்றபடி. 4‘இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர். 5சிசுபாலன் சுயம்வரத்திலே வந்த போது உருக்குமிணிப்பிராட்டி, ‘இவ்வளவிலே கிருஷ்ணன் வந்து முகங்காட்டிற்றிலனாகில் நான் பிழையேன்!’ என்ன, அவள் கலங்கின சமயத்திலே புறச்சோலையிலே நின்று ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை முழக்க, அது வந்து செவிப்பட்டது; இராவணன் மாயா சிரசைக் காட்டிய போது பிராட்டி தடுமாற, அவ்வளவிலே வில்லின் நாண் ஒலி வந்து செவிப்பட்டது;அவ்விருவர் விடாயும் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, இரண்டும் ஒருகாலே பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாளாயிற்று இவள்.

    தெளிவு அரிய சிவன் பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும் விரி புகழான் – பாரதப்போரை முடிய 2நடத்தினமை காண்கையாலே, தாங்கள் பிறரால் அறியப்படமாட்டாதவர்களாக நினைத்திருப்பாருமாய்ப் பூமியில் கால்பாவாமையால் வந்த செருக்கினையுடையருமான சிவன் தொடக்கமானார் செருக்கு அற்றவர்களாய்க்கொண்டு வந்து விழுந்து ஏத்தும்படியான பரந்த புகழையுடையவன். 3ஒரு கொசுகுத்திரள் இருந்தது என்னா, திருப்பாற்கடலில் ஒரு மூலை சுவறாதே அன்றோ? அப்படியே, இவர்கள் ஏத்தா நின்றால் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சும்படியான புகழையுடையவனாதலின், ‘விரிபுகழான்’ என்கிறது. ‘கவராத மேகலையால் குறை இலமே – அவன் விரும்பாதே நானே உடுத்து முசியும்படியான மேகலை எனக்கு என் செய்ய? அன்றிக்கே, 4‘உடைமாறாத பரிவட்டங்கொண்டு காரியம் என்?’ என்னுதல். அன்றிக்கே, ‘பாதுகாப்பவனாய்த் தான் வந்து புகழ் படைத்துப் போருகிறவன், ‘இத்தலையைப் பாதுகாப்பதனால் வரும் புகழ் வேண்டா; அது தவிர்ந்தால் வரும் பழி வர அமையும்,’ என்று இருந்தானாகில், நான் எனக்குப் பழியாம்படி 5பரிவட்டம் பேணி இருக்கவோ?’ என்னுதல்.

    6இனி, வரிவளையால் குறையிலமே – வாயாடி. வாய்க்கரைப் பற்றை அடுத்தூணாகவுடையவன். எதிரிகள்முடுகினால் இவன்தான் வாய்க்கரையிலே இருந்து செய்யும் ஆர்ப்பரவத்தைக் கேட்டு எதிரிகள் முழுக்காயாக அவியும்படியாக இருப்பவன். அந்தப்புரத்திலுள்ளார் ‘எங்கள் வாய்புகு சோற்றைப் பறித்து ஜீவியாநின்றான்!’ என்று முறைப்பட்டால், அவன் 1வாய்விடாச்சாதி என்னலாம்படி அன்றோ இருப்பது? ஓசையும் ஒளியும் உடையனாய் எதிரிகளை ஊதப் பறக்கும்படி செய்தே அன்றோ இருப்பது? 2அல்லாத ஆழ்வார்கள் கூரியரேயாகிலும், ‘தடியர் கழுந்தர் என்னலாய், இவனைப் போலே சுஷியுடையார் இலரே அன்றோ? 3மரங்கள்போல் வலிய நெஞ்சர் ஆகையாலே எரிஅழலம் புக ஊதிக் கொளுத்தினபடி. ‘இப்படி அடியார்களைப் பாதுகாத்தவன் விரும்பாத மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள் என்னுதல்.

ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலி தாரகம் என்று ஆசைப்பட்ட பேர் உளரோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பெரியாழ்வார்’ என்று தொடங்கி.

  ‘கோங்குல ரும்பொழில் மாலிருஞ் சோலையில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைக ளோடுஉடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத் துமடுத் தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாணொலி யும்தலைப் பெய்வதுஎஞ் ஞான்றுகொலோ!’

  என்பது அத்திருப்பாசுரம்.

‘மற்றைய ஆழ்வார்களைக்காட்டிலும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்திற்கு உயர்வு யாது?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அல்லாத’ என்று தொடங்கி.
மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் – கூரிய
அறிவினர்; தீக்ஷணர்கள். தடியர் – கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
சப்பரை. சுஷி – ஞானம், துவாரம்.

மேகலை ஆபரணத்தால் என்ன பயன்
வரி வளையால் -வரிகளை உடைய பாஞ்ச சன்யம்
ஒலியால் பிரதி கூலர் நெஞ்சை பிளந்து
எங்கு தர்மம் இருக்கோ அங்கெ வெற்றி -எங்கு கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கெ தர்மம்
பாண்டவர்கள் மகிழ -துரியோதனாதிகள் -நடுங்க ஒலி கொடுக்குமே
ஜகத் பாதாளம் திக்குகள் நடுங்க பெரு முழக்கால்
ஹஸ்தேன சரேன ராகவேன -சங்கம் உஊத பய அக்நி பெருக
ஆஸ்ரித விரோதிகளை இவளை இட்டு அன்றோ -பெண் பிள்ளைக்காக

இவளையிட்டேயன்றோ?’ என்றது, சிலேடை : ‘இந்தப் பாஞ்சஜன்யம்
என்னும் சங்கைக் கொண்டேயன்றோ?’ என்பது நேர்ப்பொருள். ‘இவள்
காரணமாக அல்லவா?’ என்பது

பூமிப் பிராட்டிகாக
இவ் வளை இட்டு –
ஸ்ரீ பாஞ்ச சன்ய  கோஷம் அனுகூலர் கேட்க ஆசைப்பட்டு –

ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலி தாரகம் என்று ஆசைப்பட்ட பேர் உளரோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பெரியாழ்வார்’ என்று தொடங்கி.

  ‘கோங்குல ரும்பொழில் மாலிருஞ் சோலையில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைக ளோடுஉடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத் துமடுத் தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாணொலி யும்தலைப் பெய்வதுஎஞ் ஞான்றுகொலோ!’

  என்பது அத்திருப்பாசுரம்.

தூது விடுகிறாள் -சங்கு ஒலியும் சாரங்க வில் நாண் ஒலியும்
பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று பிள்ளை அருளிச் செய்வர்
நஞ்சீயர் -சிஷ்யர் நம்பிள்ளை -சிஷ்யர் ஆகும் பின்பு பட்டர் இடம் கேட்டு இருப்பார்
பட்டர் 28 வயசில் பரம பதம் செல்ல வாய்ப்பு இல்லை
நஞ்சீயர் வந்து சேர்ந்த கொஞ்ச காலத்தில் போய் இருக்கலாம் –
அதனால் பால்யம்-58 இருக்கலாம்
-1147-
எம்பெருமானார் பரம பதம் சென்ற பின்பு 20 வருஷம் இருந்து இருப்பார் பட்டர்
இருவரும் பெற்ற பேற்றை தான் ஒருத்தி பெற ஆசைப் படுகிறார் -இரண்டும் ஒருகாலே கேட்க ஆசைப் படுகிறாள்
சிசுபாலன் -ருக்மிணி முகம் காட்டாவிடில் நான் பிழையேன் என்ன –
கண்ணாலம் கோடித்து -பாரித்து -கன்னி தன்னைக் கை பிடிக்க அண்ணாந்து
இருக்கும் சிசுபாலன் -பாஞ்ச சன்யம் ஒலி கேட்டு -தரிக்க -அந்த ஆனந்தம்
தனக்கு கிடைக்க –
பராங்குச நாயகியும் இதே ஆசைப்பட
மாயா சிரஸ் பார்த்து தடுமாற -சார்ங்கம் நாண் ஒலி கேட்டு -தரித்து ஆனந்தம்
பட்ட சீதா பிராட்டி போலேயும்
விடாய் ஒருத்திக்கே உண்டாகையாலே –
பாரத சமயத்தை முடிய -சேர்த்து வியாக்யானம்
கண்டு தேவதைகள் -பூமியில் கால் பாவ கூசும் -விழுந்து ஏத்தும் படி
சிவன் பிரமன் இந்த்ரன் போல்வார் –
கொசுகுத் திரள் போலே இவர்கள் ஏத்தினால் ஏத்தா இடம் விஞ்சி விரி புகழான்
விரும்பாத -மேகலை -வஸ்த்ரம் ஆபரணம் இரண்டும் -கார்யம் என்ன
உடை மாறாத பரிவட்டம் வேண்டாமே
ரஷிப்பதே அவன் ஸ்வாபம்
இவளை ரஷித்து வரும் புகழ் வேண்டாம் என்று இருப்பானாகில்

வாயாடி வாய் கரிப்பட்ட
வாயாலே ஜீவனம்
திருப்பவள்ம் இருக்கும் பாஞ்ச ஜன்யம்
எதிரிகள் -வாயாலே வாயாடி -கேட்டு எதிரிகள் அழியும் படி இருக்கும்

வாய் விடாச்சாதி – ‘வார்த்தை சொல்லமாட்டாதவன்’ என்பதும், ‘வாயை
விடாதவன்’ என்பதும் பொருள். ‘வரி’ என்ற பதத்தையும், ‘பெருமுழக்கால்’
என்றதனையும் கடாக்ஷித்து, ‘ஓசையும் ஒளியுமுடையனாய்’ என்கிறார்.
இதனால், ‘வார்த்தை சொல்ல வல்லவன்’ என்றும், ‘ஒளியையுடையவன்;
என்றும் தெரிவித்தபடி. என்றது, ‘உலகத்தில் வார்த்தை சொல்ல
வல்லவனானால், ஒளி இல்லாமல் இருப்பான்; ஒளியுடையனாயிருப்பின்,
வார்த்தை சொல்ல வல்லவனல்லனாயிருப்பான்; அப்படியன்றிக்கே,
ஒளியையும் ஓசையையுமுடையவனாய்’ என்றபடி. ‘ஊதப் பறக்கும்’ என்றது,
‘ஊதினால் பறந்து போகும்படி’ என்றபடி.

2. ‘மற்றைய ஆழ்வார்களைக்காட்டிலும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்திற்கு உயர்வு யாது?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அல்லாத’ என்று தொடங்கி.
மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் – கூரிய
அறிவினர்; தீக்ஷணர்கள். தடியர் – கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
சப்பரை. சுஷி – ஞானம், துவாரம்.

பொதுவாக இருப்பதை புக்கு நீ உண்பாயே –
அந்தபுர வாசிகள் சொன்னாலும் வாய் அகலாதபடி –
வாயாடிக்கும் சங்கு ஆழ்வானுக்கும்
ஓசை ஒளி இரண்டாலும் எதிரிகளை ஊனப் படுத்தி
அல்லாதார் கூரியர் ஆகிலும் -தடியர் கழுந்தர் பெயர் –
சுசி வீரம் உடையார் இல்லையே
இப்படி ஆஸ்ரித ரஷணம் செய்த அவன் விரும்பாத மேகலையால் என்ன பலன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: