திருப்பல்லாண்டு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த -முதல் தனியன்

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –

————————————————————————–
குருமுகம் -ஆசார்ய முகத்தாலே
அநதீத்ய-அப்யசிக்காமலே
ப்ராஹ -உபன்யசித்தாரோ
வேதான் -வேதங்களை
அசேஷான் -சமஸ்தமாகிய
நர பதி -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
பரிக்லிப்தம் -ஏற்படுத்தப்பட்ட
சுல்கம்-வித்யா சுல்கத்தை
ஆதாதுகாம -க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
ஸ்வசுரம் -மாமனாரும்
அமர -தேவதைகளால்
வந்த்யம் -ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
ரங்க நாதஸ்ய -ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
ஸாஷாத் -பிரத்யஷமாய்
த்விஜகுல -ப்ராஹ்மண வம்சத்துக்கு
திலகம் -அலங்கார பூதருமாகிய
தம் விஷ்ணு சித்தம் -அந்த பெரியாழ்வாரை
நமாமி -சேவிக்கிறேன்-

————————————————————————–

அவதாரிகை –
இந்த தனியன் திருப்பல்லாண்டு பாடுகைக்கு அடியான பெரியாழ்வார் வைபவத்தை
பெருக்க பேசி அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது –

————————————————————————–
வியாக்யானம் –
குருமுகம் அநதீத்ய –ஸ்வதஸ் சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனும் -சாந்தீபனேஸ் சக்ருத்
ப்ரோக்தம் ப்ரஹ்ம வித்யா சவிஸ்தரம் -என்னும்படி -சாந்தீபநிடத்திலே ஆய்த்து
சகல வேதங்களையும் அதிகரித்தது –
இவர் அங்கன் குருகுல வாஸம் பண்ணி -தந் முகேன -நலங்களாய நற் கலைகள் நாலையும் –அதிகரியாதே -புண்டரீகரைப் போலே துளபத் தொண்டிலே மண்டி –
ஸ்ரீ மாலா காரரைப் போலே சூட்டு நன் மாலைகள் தொடுத்து –
வட பெரும் கோயில் உடையானுக்கு சூட்டி அடிமை செய்து போந்தார் –
ஏவம் வித தாஸ்ய ரஸஞ்ஞரான இவர்-

நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம-என்று ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவாலே பரதத்வ நிர்ணய பூர்வகமாக-புருஷார்த்த லாபத்தை லபிக்கைக்காக அநேகமான அர்த்தத்தை வித்யா சுல்கத்தை கல்பித்து கல் தோரணத்திலே கட்டிவைக்க-இப்படி நிர்மிதமான அந்த தநத்தை வட பெரும் கோயில் உடையானுடைய ஆக்ஜையாலே
ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்கிற அபேஷை உடையராய் -வித்வித் கோஷ்டியிலே சென்று –
அசேஷான் -வேதான் -ப்ராஹ –
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி யறுத்தான் என்றதைச் சொல்லுகிறது –
இவருக்கு அப்போது -வேதப் பிரானாரான -பீதகவாடைப் பிரானார் தாமே -பிரம குருவாய் -போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து -நாவினுளானாய் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளை-இவர் முகேன பேசுவித்தான் இ றே-எயிற்றிடை மண் கொண்ட எந்தையான -ஞானப் பிரான் ஆய்த்து இவரை ஞானக் கலைகளை-ஒதுவித்தது -ஆகையாலே நாட்டாருக்கு ஓதின இடம் ஒழிந்து ஓதாத விடம் தெரியாததாய்-இருக்கும் -இவருக்கு மயர்வற மதி நலம் அருளுகையாலே அசேஷ வேதங்களையும்-அருளிச் செய்யும்படி விசதமாய்த்து -அத்தாலே -வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த-விளக்கை விட்டு சித்தன் விரித்தன் -என்னும்படி -பரதத்வ ஸ்தாபனம் பண்ணி அந்த-வேத தாத்பர்யமான திருப்பல்லாண்டை -அங்கு ஆனை மேல் மங்கல வீதி வருகையாலே –
மங்களா சாசனமாக அருளிச் செய்தார் -வேதான் அசேஷான் –என்கிறதுக்கு உள்ளே இதுவும் அந்தர்ப்பூதம்-வேதைஸ் ச ஸர்வை ரஹ மேவ வேதய -என்னக் கடவது இ றே-
ஸ்வ ஸூரம் –
அநந்தரம் வித்வான்களை வென்று கிழி யறுத்து -அந்த தநத்தை ஸ்வாமி சன்னதியிலே
சமர்ப்பித்து -மீளவும் தம் துறையான துளவத் தொண்டிலே மூண்டு நடத்திக் கொண்டு போர -அக்காலத்திலே ஆண்டாள் இவர்க்கு திருமகளாய் திருத்துழாய் அடியிலே அவதரிக்க இவரும்-திருமகள் போலே வளர்த்துப் போர-அஞ்சு பிராயத்திலே திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியில் பெண்களை அநுகரித்து
திருப்பாவை பாடி -அதுக்கு மேலே அவர் தொடுத்த துழாய் மலரை –
வியன் துழாய் கற்பென்று சூடும் கரும் குழல் மேல் -என்கிறபடியே
சூடிக் கொடுத்தவராய் -பின்பு ப்ராப்த யௌவனையாய் –
மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் -என்றும் –
பண வாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் -என்றும் -சொல்லப்படுகிற-அழகிய மணவாள பெருமாளை பிரார்த்தித்து திருமணம் புணருகையாலே அவர்-அவர் மணவாளபிள்ளை யானார் –
மறை நான்கு முன்னோதிய பட்டனுக்கு இ றே -பட்டர் பிரான் கோதையைக் கொடுத்தது –
ஆகையால் ஔபசாரிகமாக அன்றிக்கே யதாவாக ரெங்கநாதனுக்கு பட்டநாதர் மாமனார் ஆனார்அத்தாலே அமர வந்த்யம் என்கிறது -அதாவது –
வடிவுடை வானோர் தலைவனான தம்மை அவர்கள் அடி வணங்கி ஏத்துமா போலே –
இவர் தம்மையும் அமரர் வந்திக்கும்படியான வரிசை கொடுத்தபடி -தம்மையே ஒக்க அருள் செய்வர் இ றே
பட்டநாதரான மாதரம் அன்றிக்கே தேவர்களாலும் ஸ்துதித்யராய் இருக்குமவர் என்கிறது
விரும்புவர் அமரர் மொய்த்து -என்னக் கடவது இ றே
அஸ்தானே பய சங்கிகள் ஆனவர்களையும் இவர் மங்களா சாசனம் பண்ணுமவர் ஆகையாலே-அவர்களும் இவர்க்கு ஸ்துதிய அபிவாதனந்களை பண்ணுவர்கள் –
பரஸ்பர நீச பாவை -என்னக் கடவது இ றே
இனி ரெங்கநாதனோடே சம்பந்திகைக்கு ஈடான பட்ட நாத குலத்தை சொல்லுகிறது-
த்விஜ குல திலகம் என்று -வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தர் ஆகையாலே –
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென்னரங்கத்தே -என்னும்படி கண்டு கொடுத்தார் -த்விஜ குல திலகர் ஆகையாவது -ப்ராஹ்மண குலத்துக்கு எல்லாம் முக்யராய் -சிரஸா வாஹ்யராய் -ஸ்ரேஷ்டராய் இருக்கை என்றபடி –
தம் விஷ்ணு சித்தம் –
அப்படி ஸ்ரேஷ்டராய் -விஷ்ணுவை எப்போதும் சித்தத்திலே உடையவர் ஆனவரை என்கிறது –
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்என்று
அடியிலே தமக்கு நிரூபகமாக ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே –
விட்டு சித்தர் -என்கையாலே –
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த -என்று பெரியாழ்வார் திருமொழி அடியிலும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்று முடிவிலும் அருளிச் செய்கையாலே-
இந்த திரு நாமத்தாலே அந்த பிரபந்த ப்ரவக்தா என்னுமதுவும் ஸூசிதம் –
அதுக்கும் தனியன் இதுவே இ றே –
அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து
வைகி வாழச் செய்தாய் எம்பிரான் -என்னும்படி
இவர் திரு உள்ளத்திலே அத்ய அபிநிவிஷ்டனாய் இருக்கும் ஆய்த்து –
விஷ்ணு சித்தம் -விஷ்ணு நாவ்ய பதேஷ்டவ்யராய் -இருக்கிற படி –
நின் கோயிலில் வாழும் வைட்டணவன் -என்றார் இ றே
அவனும் வைஷ்ணவ சம்பந்தத்தை அபேஷித்து கைப் பற்றினான் –
தம் விஷ்ணு சித்தம் நமாமி –
அந்த விஷ்ணு சித்தரை -கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று -என்னும்படி
சேவிக்கிறேன் என்கிறது -நமஸ்காரமும் சேவையும் பர்யாயம் –
ஓம் நமோ விஷ்ணவே -என்னுமது விஷ்ணு சித்த விஷயத்திலே யாய்த்து –
விசேஷஞ்ஞர்க்கு பகவத் விஷயத்திலே அரை வயிறாய் -இங்கே இ றே எல்லாம்
பூரணமாவது -நம்பி விட்டு சித்தர் இ றே
இத்தால்
பிரதம பிரபந்த அனுசந்தான தசையில்–தத் வக்தாவான ஆழ்வாரை -தம் பூர்வம் அபிவாதயேத் -என்று பிரதமம் திருவடி-தொழும் படியை சொல்லிற்று ஆய்த்து-

————————————————————————–

இரண்டாம் தனியன் -மின்னார் தட மதிள் இத்யாதி –
அவதாரிகை –
இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்-திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்-அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும்
மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது –

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து-

மின் -மின்னுதல் -மணிகளால் ஒளி விடுதல்
ஆர் -நிறைந்த அதிகமான
தடம் -அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
மதிள் -திரு மதிளாலே
சூழ் -வளைக்கப்பட்ட
வில்லி புத்தூர் என்று -ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
ஒரு கால் சொன்னார் -ஒரு தரம் உச்சரிதவருடைய
கழல் கமலம் -திருவடித் தாமரைகளை
சூடினோம் -விசேஷ புஷ்பமாக முடித்தோம்
முன்னாள் -புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
கிழி -பொருள் முடிப்பை
அறுத்தான் என்று -அறுத்து வெளி இட்டவர் என்று
உரைத்தோம் -சொல்லப் பெற்றோம்
ஆகையால்
கீழ்மை -நரகத்தில்
இனி -இனிமேல்
சேரும் -முன் போல் செல்லுகிற
வழி -மார்க்கத்தை
அறுத்தோம் -அறப் பண்ணினோம்
நெஞ்சே -மனசே
வந்து -சம்ஸார ரஹீதராய் வந்து

வியாக்யானம்

மின்னார் தட மதிள் சூழ் –
தேஜ பரசுரமான பெரிய மதிள்களால் சூழப் பட்ட வில்லி புத்தூர் -இத்தால்
செம்பொன் ஏய்ந்த மதிளாய் இருக்கை –
பிரதி கூலருக்கு கிட்ட ஒண்ணாத படியாய் -அனுகூலருக்கு கண்டு வாழும் படியாய் இருக்கை-
கல் மதிள் போல் அத்தலைக்கு அரணாய் -மங்களா சாசன பரரான பெரியாழ்வார் இருக்குமூரில் மதிள் இ றே -ஏவம்விதமான மதிளாலே சூழப்பட்ட

வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் –
ஒருகால் ஆகிலும் ஸ்ரீ வில்லிபுத்தூரை உச்சரித்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய ஸ்ரீ பாத கமலங்களை-பைம் கமலத் தண் தெரியலாக -தலையிலே சூடினோம் –
கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலவே -என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது –
ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் வட பெரும் கோயில் உடையானுக்கும் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து –
வில்லிபுத்தூர் உறைவான் –
வில்லிபுத்தூர் பட்டர் பிரான் –
அன்ன வயல் புதுவை ஆண்டாள் –
கோதை பிறந்தவூர் -வில்லிபுத்தூர் -என்னக் கடவது இ றே
பிரணவம் போலே மூவரும் கூடலாய் இருக்கை

இப்படி உத்தேச்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்போதும் உத்தேச்யர் ஆகையாலே-அவர்கள் ஸ்ரீ பாதங்கள் சிரோ பூஷணமாக தார்யம் என்கிறது –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னுமா போலே –

பின்னை விரோதிகள் செய்தது என் என்னில் –
முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
முன்னாள் கிழி யறுக்கை யாவது –
முற்காலத்திலே பாண்டியன் வித்யா சுல்கமாக கட்டின த்ரவ்ய கிழியை அங்கே  சென்று
வேதாந்தார்த்த முகேன -விஷ்ணுவே பரதத்வம் என்று விஷ்ணு சித்தரான தாம் வித்வஜ்
ஜனங்களை வென்று த்ரவ்யக் கிழியை யறுத்த ஆழ்வார் உடைய இந்த அத்யத்புத கர்மத்தை அனுசந்தித்தோம்
அத்தாலே
கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி -த்யக்த்வா தேஹம் -புநர்ஜன்ம நேதி
மாமேதி சோர்ஜுந -என்று
கிருஷ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம சம்சார பந்தத்தை அறுக்குமா போலே
யாய்த்து விஷ்ணு சித்தர் ஜன்ம கர்மங்களும் –
இங்கும் ஸ்ரீ வில்லி புத்தூர் ஜன்மமும் கிழி யறுக்கை கர்மமுமாய் இருக்கும்
கீழ்மையினில் சேரும் வழி யறுக்கை யாவது –நிஹீன க்ர்த்யத்தாலே ப்ராபிக்கும் ப்ரதிபந்தகமான மார்க்கத்தை சேதித்தோம் -புற நெறிகளை கட்டு -அவைதிக மார்க்கத்தை அடைகை பாப பலம் இ றே –
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று இவர் தாம் சந் மார்க்க வர்த்திகள் இ றே
அன்றிக்கே
கீழ்மையினில் சேரும் வழி -என்று
அத பதநத்திலே ப்ராப்தமான மார்க்கம் என்று அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கீழாய்
புநராவர்த்தி லஷண ஹேதுவான தூமாதி மார்க்க த்ரயத்தையும் நிரோதித்தோம் –

நெஞ்சமே வந்து
நெறி நின்ற நெஞ்சாய் -நீ அநுகூலிக்கை யாலே இந்த லாபத்தை லபித்தோம்
வந்து -இவ்வளவும் வந்து -ஆழ்வார் அளவும் வந்து -வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம்-

கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம்-இதுவன்றோ நீ அநுகூலித்ததால் பெற்ற  பேறு -நீ என் வழி வருகையாலே-இவை எல்லாம் பெற்றோம் -இஷ்ட ப்ராப்தியோபாதி அநிஷ்ட நிவாரணமும் பலம் இறே
நெஞ்சமே வந்து- 
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் –
என்றால் போலே பெற்ற பேற்றைப் பேசி நெஞ்சோடு ஹர்ஷிக்கும் படியைச் சொல்கிறது
வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் என்றது –
வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -என்றும் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -என்றும் –
பகவத் விஷயத்திலே தகப்பனாரும் மகளாரும் ஒரு கால் சொன்னால் போலே
பாகவத விஷயமாக ஒரு கால் சொன்னார் -என்றபடி-சம்பந்த அநுசந்தானம் ஸக்ர்த் என்றபடி

————————————

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

பாண்டியன் கொண்டாட -அவதாரிகை –
இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று –

பாண்டியன் -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன்
கொண்டாட -மேன்மேல் ஏத்த
பட்டர்பிரான் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
வந்தான் என்று -எழுந்து அருளினான் என்று
ஈண்டிய -கூடின அநேகமான
சங்கம் எடுத்து -சங்குகளைக் கொண்டு
ஊத -அநேகர் சப்திக்க
வேண்டிய -அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
வேதங்கள் -வேதார்தங்களை
ஓதி -தெரியச் சொல்லி
விரைந்து-தாமசியாமல்
கிழி -வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
யறுத்தான் -அறுத்தவனுடைய
பாதங்கள் -திருவடிகளே
யாமுடைய -நாங்கள் ஆஸ்ரயமாக உடைய
பற்று -ஆதாரம் –
————————————————————-
வியாக்யானம் –
பாண்டியன் கொண்டாட –
தென்னன் கொண்டாடும் போலே -நமக்கு பரதத்வ நிர்ணயம் பண்ணித் தரும்படி
பட்டர்பிரான் வந்தான் என்று பாண்டியனான ஸ்ரீ வல்லப தேவன் சொல்லிக் கொண்டாட -அத்தசையிலே –

ஈண்டிய சங்கம் எடுத்து ஓத –
திரண்டு இருக்கிற வித்வத் சங்கமானது ஓரோர் பிரதேசங்களிலே ஓதிக் கிடக்கிற
ப்ரசம்சா பர வாக்யங்களை எடுத்து ப்ரஹ்ம ருத்ராதிகளை போரப் பொலிய சொல்லி
உபன்யசிக்க என்னுதல்-அன்றிக்கே
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத என்று-
ஜய சங்கங்கள் பலவற்றையும் வாயிலே மடுத்தூத என்னுதல் –
பூம் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி -என்னக் கடவது இ றே
எடுத்தூத -என்ற போது
சங்கத்தை எடுத்துவாயிலே ஊதி என்றபடி –
அடுத்தூத -என்ற போது
கிட்டி ஊத என்றபடி –
அதிஷேபித்த வித்வான்கள் வாய் அடைக்கும்படி –

வேண்டிய வேதங்கள் ஓதி –
சர்வே வேதா யத் பதமாம நந்தி –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய -என்கிறபடி
வேதங்கள் எல்லாவற்றாலும் ஆராதன பிரகாரத்தையும் ஆராய்த வஸ்துவையும்
சொல்லுகிறது என்று அறுதி இட்டு -பகவத் பரத்வத்தை சாதித்து -இனி தாழுகைக்கு
ஹேது என்று திருவடிகளில் தாழ்ந்த கிழியை த்வரித்து அறுத்தவருடைய –
த்ரவ்ய க்ரந்தியை யறுத்தவருடைய

பாதங்கள்
கிழி யறுத்த பட்டர்பிரான் பாதங்கள்

யாமுடைய பற்று –
பட்டர்பிரான் அடியேன் -என்னும்படி அவருக்கு சேஷ பூதராய் இருக்கிற நம்முடைய ரஷை
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்று -என்கிற பொதுவானவன் உடைய திருவடிகள் அன்று
அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
யாமுடைய பற்று
நம்முடைய அரண் -புகல் -உபாயம் -சரண்யம் -என்றபடி
யாமுடைய பற்று –
பற்றற்ற நம்முடைய பற்று –
பற்றிலார் பற்ற நின்றான் -என்னக் கடவது இ றே-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாண்டிய பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாத முனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: