ஒன்பதாம்திருவாய்மொழி – ‘நண்ணாதார்’
முன்னுரை
ஈடு : 1‘உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ‘ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு வேண்டுமாகில் அதனைத் தந்தருளவேண்டும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 2இந்த அமங்கள வார்த்தையைத் திருமுன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. 3எம்பார், ‘உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்; இதனைத் தவிர்த்தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச்செய்வர். 4‘கதையைக் கையிலேயுடையவனாய் நான்கு மந்திரிகளோடு
உயர எழுந்தான்,’ என்கிறபடியே, இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று. இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலைநின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்றதன்றோ?
1அங்ஙன் அன்றிக்கே, ‘ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய்மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டு ஆவார் உளரோ என்று உலகத்தாருடைய செயல்களை ஆராய்ந்து மக்களைப் பார்த்தார்; அவர்கள், தாம் சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய் அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாபமாம்படி இருந்தார்கள்; அதனைக் கண்டவாறே 2வாளேறுகாணத் தேளேறு மாய்ந்தாற்போலே, தம் இழவை மறந்தார்; இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது; 3சர்வேசுவரனைப் பார்த்தார்; அவன் முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்
பரம வள்ளலாய் எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய் எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.
அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் 1‘தன்னரசு நாடோ?’ என்று பார்த்து, 2 ‘நீ சர்வேசுவரனாய்ப் பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய் இவற்றின் துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க, இவை இங்ஙனம் கிடந்து நோவுபடுகை போருமோ? இவற்றைக் கரைமரம் சேர்க்கவேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க, ‘நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே? நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே? புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது? அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியங் கொள்ளுகிறோம் அல்லோமே? இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு நாம் பார்த்து வைத்த 3வழிகளையடையத் தப்பின பின்பு நம்மாற்செய்யலாவது இல்லைகாணும்; நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.அதனைக் கேட்ட இவர், ‘நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தையடைந்தேனாவது 1‘இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவுபடுகின்றார்கள்’ என்று உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன, ‘இவர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று 2நம்மை ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து,’ ‘உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன, ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் 3தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்; நாமும் ஆகுந்தனையும் பார்த்து முடியாமைகாணும் கைவாங்கியது; இனி நம்மாற்செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.
‘ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும் 4என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘முன்பே உம்மை வாங்கினோமே! 5சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில், இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு
தோன்ற இருக்கும் 1இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் பேற்றுக்குக் 2குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன, 3இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக்கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.
4ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடாநிற்க, ‘இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.
421
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.
பொ-ரை : ‘பகைவர் மகிழ்ச்சி கொள்ளவும் சிறந்த உறவினர்கள் மனங்கரைந்து வருந்தவும் எண்ணுவதற்கு அமையாத துன்பத்தை உண்டாக்குகின்ற இவை என்ன உலகத்தின் தன்மை! கிருபையையுடையவனே! திருப்பாற்கடலைக் கடைந்தவனே! உன் திருவடிகளுக்கே
நான் வரும்படி காலம் நீட்டியாமல் அடியேனைச் சாகுமாறு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்,’ என்கிறார்.
வி-கு : ‘முறுவலிப்ப ஏங்கத் துயர் விளைக்கும் உலகு’ என்க. ‘உலகு இயற்கை இவை என்ன?’ என்க. என்ன – எத்தன்மையவாய் இருக்கின்றன? அன்றிக்கே, ‘என்னே!’ எனலுமாம். ‘வரும் பரிசு பணி கண்டாய்’ என்க. கண்டாய் – முன்னிலையசைச்சொல். சாமாறு – உடலை விட்டு உயிர் பிரியும் வழியை. தண்ணாவாது – காலம் நீட்டியாமல்.
இத்திருவாய்மொழி, தரவு கொச்சகக் கலிப்பா.
ஈடு : முதற்பாட்டு. 1‘உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும் நான் உன் திருவடிகளிலே வந்து கிட்டும்படி எனக்கு இச்சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’ என்கிறார்.
நண்ணாதார் முறுவலிப்ப – 2ஒருவனுக்கு ஒரு கேடு வந்தவாறே, அற்றைக்கு முன்பு வெற்றிலை தின்று அறியார்களேயாகிலும், அன்றைய தினத்திலே ஒரு வெற்றிலை தேடித் தின்பது, ஓர் உடுப்பு வாங்கி உடுப்பது, சிரிப்பது ஆகாநிற்பர்கள் ஆயிற்று. நண்ணாதார் – பகைவர். 3பிறர் கேடு கண்டு சிலர் உகக்கும்படியாவதே! இஃது என்ன ஆச்சரியந்தான்! 4அருச்சுனன், ‘என் பரகு பரகு கெடுவது என்று?’ என்ன, ‘எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதனாய் இருக்கிற என்னை!’ என்கிறபடியே, ‘நான் எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதன்,’ என்று அறிந்தவாறே நீயும் என்னைப் போன்று என் விபூதிக்குப் பரியத்தேடுவுதிகாண்,’ என்றானே அன்றோ?நல் உற்றார் – சர்வேசுவரனே காரணம் பற்றாத உறவாய் அவனைப் பற்றினவர்களையே 1‘அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன் அவன் தமரே,’ என்று, அவர்களை 2‘ஒருகாலும் பிரிகிலேன்’ என்றிருத்தல் தகுதியாக இருக்க, சரீரசம்பந்தம் காரணமாக வருகின்றவர்களைக் காரணம் பற்றாத உறவினர்களாக நினைத்து, அவர்களுக்கு ஒன்று வந்தவாறே, 3‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்,’ என்று இவர் பகவத் விஷயத்தை நினைத்தல் சொல்லுதல் செய்யப்புக்கால், படுவன எல்லாம் படாநிற்பர்களாயிற்று. ‘கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற இரண்டனையுமேயன்றோ? 4‘எல்லா ஆத்துமாக்களையும் சரீரமாகவுடைய கோபாலனிடத்தில் பகைவன் நட்டோன் என்கிற தன்மை ஏது?’ என்றது, 5‘ஆசையையும் துவேஷத்தையும் பற்றி வருகையாலே, நட்புத் தன்மையோடு பகைத்தன்மையோடு வாசி இல்லை. 6‘சுகம் துக்கம் என்கிற பெயரையுடைய இரண்டால் விடப்பட்டவர்கள்’ என்கிறபடியே, ‘சுக துக்கங்கள்’ என்று சில பெயர் மாத்திரமேயன்றே உள்ளன? உண்மையை
நோக்குங்கால், இரண்டும் துக்கமாய் அன்றோ இருப்பன? ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.
1‘ஸ்ரீராமபிரானையே நினைத்தவர்களாய் ஒருவருக்கு ஒருவர் நலியவில்லை,’ என்கிறபடியே, திருவயோத்தியையில் உள்ளார், ஒருவரை ஒருவர் வேரோடே வாங்கிப் போகட வேண்டும்படியான பகைமை தொடர்ந்து நிற்கச் செய்தேயும் எல்லாரும் ஒரு மிடறாக விரும்பினார்கள்; ‘அதற்கு அடி என்?’ என்னில், பகைமை நெஞ்சிலே பட்டு அவர்களை நலிய நினைத்த போதாகப் பெருமாளை நினைப்பார்கள்; ‘அவர் முகம் சுளியும்’ என்னுமதனாலே அதன் காரியம் பிறக்கப் பெற்றது இல்லை.
எண் ஆராத் துயர் விளைக்கும் – முறுவலிக்கிறதும், கரைந்தேங்குகிறதும் இரண்டு துயராய்த் தோற்றுகிறதாயிற்று இவர்க்கு. அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று இருப்பது; அதனால் ‘எண் ஆரா’ என்கிறார். பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று. 2‘இராச்சியத்தினின்று நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட
எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?
2‘சர்வேசுவரன் பெரிய பிராட்டியாரோடு பரிமாறும் போது மற்றுள்ள பிராட்டிமார் மலர் சந்தனம் முதலியவைகளைப் போன்று இன்பத்திற்கு உறுப்பான பொருள்களின் கோடியிலே சேர்ந்திருப்பார்கள்; மற்றைப்பிராட்டிமார்களோடு பரிமாறும் போது பெரிய பிராட்டியார் தம்மோடு பரிமாறுவதைப் போன்றே நினைத்து மகிழாநிற்பார்;’ 3‘திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால், திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்?’ என்கிறபடியே, அவர்களோடு இவன் பரிமாறும்போது பிராட்டிக்கே அற்றானாய் இருக்கும்; அதற்கு அடி, அதனால் பிறக்கும் முகமலர்ச்சி
அவள் பக்கல் காண்கையாலே. 1உயர் குணங்கள் பல பொருந்தியிருந்த ஸ்ரீ கௌசல்யையார் தமக்கு என ஒரு தன்மை இன்றிக் காலந்தோறும் காலந்தோறும் சக்கரவர்த்தியின் நினைவுக்குத் தகுதியாக மற்றைய மனைவிமார்களுக்கு விரோதவுணர்ச்சி தோன்றாதவாறு பரிமாறிப் போந்தாரே அன்றோ? இவை என்ன உலகு இயற்கை – 2உன்னை ஒழியப் புறம்பேயும் இந்த உலகப்பேறு இழவு ஆம்படி இது ஒரு உலக ஒழுக்கினை நீ பண்ணி வைத்தபடி என்? பிரானே! ‘நாம் பண்ணுகையாவது என்? இவர்கள் தாங்கள் செய்த கர்மங்களினுடைய பலம் தொடர்ந்து வருகிறது இத்தனையன்றோ? நம்மால் வந்தது அன்றுகாணும்,’ என்று பகவானுடைய அபிப்பிராயமாக, அருளிச்செய்கிறார் மேல் :
3கண்ணாளா – இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில், உன் கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே? கண்ணாளன் – அருளை உடையவன். அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’ என்னக்கடவதன்றோ? அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை ஆளுகின்றவனே!’ என்னுதல். அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது, ‘நீ நிர்வாஹகனாய் இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல். கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர். ‘தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே அனுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் மேல் : கடல் கடைந்தாய் – ‘தூர்வாச முனிவரது சாபத்தால் வந்த கேட்டினைத் தப்புகைக்கு வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்கும் அரியன செய்து உதவுமவன் அன்றோ?’ என்கிறார். ‘நன்று; அவர்களுக்கு இச்சை உண்டு; இச்சை இல்லாதவர்களுக்கு நம்மாற்செய்யலாவது உண்டோ?’ என்ன, ‘ஆகில், இவர்கள் நடுவே இராதபடி என்னை உன் திருவடிகளிலே வரும்படி செய்ய வேண்டும்,’ என்கிறார் மேல் :
உன கழற்கே வரும் பரிசு – 1விலக்கடிகளில் போகாமல், வகுத்ததுமாய் இனியதுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவது ஒரு வகை. இவர்க்குக் 2காற்கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈசுவரன். தண்ணாவாது – தாழாது; தண்ணாக்கை – தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது; செய்துகொடு நிற்க வேண்டும்,’ என்றபடி. ‘நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன, ‘அடியேனை’ என்கிறார்; என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி. பணிகண்டாய் சாமாறே – பணிக்கை -சொல்லுகை; 3சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது? அன்றிக்கே, 4‘சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.
அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல். ‘நன்று; பிரபந்த ஜனகூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று 5இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில், 6‘கண்ணபிரானுடைய தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு சகவாசம்செய்தலாகிற பெருந்துன்பத்தைக் காட்டிலும் நெருப்பினுடைய சுவாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே, இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது, ‘காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது? பின்பே அன்றோ இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது? அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்கவேண்டும் என்கிறார்,’ என்றபடி.
ஆத்ம ஆத்மதீயங்கள் வேண்டாம் என்றார் கீழே
உடம்பு உயிர் வேண்டாம் உபேஷித்து –
வேண்டாம் என்றால் தவிராதே -பெறுவதருக்கும் முடிகைக்கும் அவன் அனுக்ரகம் வேண்டுமே –
சம்ஸாரம் விரும்பாதே -வெறுப்பு அமங்கள வார்த்தை சாமாறு பணி கண்டாய் சொல்லும்படி –
இரண்டு நிர்வாஹம்
எம்பார் உன்னை பிரிந்து கிலேசம் போலே இல்லை சம்ஸாரத்தில் இருக்கும் இருப்பு
பொறுக்க முடியாதது
இரண்டாம் பிரிவை விட முதல் பிரிவு துக்கம் அதிகம் ராஷசிகள் உடன் இருந்ததால்
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க -இவர்கள் நடுவில் வைத்து இருக்கிறாயே கதறுகிறார்
‘பகவானிடத்தில் விருப்பமில்லாதாரோடு சேர்ந்திருத்தலாகாது,’ என்பதற்கு
உதாஹரணம் காட்டுகிறார், ‘கதையை’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத்.
16 : 16. ‘எழுந்தான்’ என்றது, ஸ்ரீ விபீஷணாழ்வானை.
‘என்றலும் இளவலும் எழுந்து வானிடைச்
சென்றனன்’
‘அனலனும் அனிலனும் அரன்சம் பாதியும்
வினைவலர் நால்வரும் விரைவின் வந்தனர்
கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்
இனைவரும் வீடண னோடு மேயினார்.’
என்றார் கம்பநாட்டாழ்வாரும்.
மேலே எழுந்து -நெருப்பு பட்ட இடத்தில் கால் வைக்க முடியாமல் அடி கொதித்து
கதா பாணி -ஹனுமான் ஆயுதம் எதற்கு -விபீஷணன் கொடுத்ததாம் -சதாபிஷேக ஸ்வாமி
அங்கு உள்ளாரில் -தண்டம் சமர்பிக்கும் ஓன்று இது தானே -ந நமேயம் என்றது
அதையும் எடுத்து தோளில் வைக்க
நான்கு பேர் இதுவும் வேண்டாதார் தானே
தாமே அப்புறப் படுத்திக் கொள்ள ஆசைப் படுகிறார்
உன்னை விட்டு பிரிந்த இலவை விட இது அதிக துக்கம் -எம்பார்
கூரத் ஆழ்வான் -உலகத்தாரை திருத்தப் பார்க்கிறார் -பிறர் அநர்த்தம் கண்டு பொறுக்க முடியாமல் –
இரண்டாவது ஆழ்வான் நிர்வாஹம் : ‘ஆழ்வான் நிர்வாஹத்துக்குக் கருத்து,
‘கண்ணாளா! கடல் கடைந்தாய்!’ என்று அவன் குணங்களையும் சொல்லி,
‘நண்ணாதார் முறுவலிப்ப’ என்று சமுசாரிகளுடைய இழவையும் அநுசந்தித்து,
‘இவை என்ன உலகியற்கை?’ என்று, ‘நீ இப்படிக் குணாதிகனாயிருக்க
இவர்கள் யாத்திரை இருந்தபடி என்!’ என்று விண்ணப்பம் செய்ய, அவனும்,
‘இதனை விட்டு உம்முடைய பலத்தை நீர் கண்டுகொள்ளும்’ என்று
அருளிச்செய்ய, ‘ஆனால் இவர்களோடு சேர்ந்திருத்தல் தகாத காரியம்;
இவர்கள் நடுவில் இராதபடி திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருளவேணும்,’
என்று பிரார்த்திக்கிறார்,’ என்பது. இவர் நிர்வாஹத்தில், ‘கண்ணாளா! கடல்
கடைந்தாய்!’ என்பன போன்ற குண அநுசந்தானங்கள் எல்லாம்
பிறர்பொருட்டு எனக் கொள்க. ஆழ்வான் நிர்வாஹத்தை அருளிச்செய்கிறார்,
‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி. ஆழ்வான் – கூரத்தாழ்வான்.
இவர்கள் துக்கம் நெஞ்சில் பட -சர்வேஸ்வரனை பார்த்து
நெஞ்சிலே பட்டால். அவர்களுக்கு ஹிதம் அருளிச்செய்யலாகாதோ?’
என்ன, ‘சர்வேசுவரனை’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘ஆமாறு ஒன்றறியேன்
நான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘அவன் முற்றறிவினன்’ என்றும்,
(தம்மை ‘ஆமாறு ஒன்று அறியேன்’ எனின், அவன் முற்றறிவினன் என்பது
தானே போதருமன்றோ?’) ‘கடல் கடைந்தாய்’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி ‘அளவிலாத ஆற்றலையுடையவனாய்’ என்றும், ‘வள்ளலே’
என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பரம வள்ளலாய்’ என்றும்,
‘அரவணையாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாருடைய
பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய்’ என்றும், ‘வினையேனை
உனக்கு அடிமை அறக் கொண்டாய்,’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய்’ என்றும், ‘கண்ணாளா!’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாரையும் நியமிக்கின்றவனாய்’ என்றும்
அருளிச்செய்கிறார்.
பாம்பு வாயில் தவளை கண்டு மோகித்து -துக்கம் தாளாமல் மயங்கி விழ -கூரத் ஆழ்வான் –
ஏறாளும் இறையோன் -ஆற்றாமை -இது போல் இருக்கும் கூட்டாள் உண்டோ பார்க்க –
வாளேறு -தேளேறு கண்டு தம்முடைய இழவை மறந்து –
சர்வேஸ்வரன் -பார்த்து –ஸ்வா பாவம் நினைத்து பார்த்து சக்தன் ஞானவான் குணவான்
வள்ளல் -ரஷணத்தில் தீஷித்து இருப்பவன் -அபராத சஹன் -சர்வ நியந்தா -பிராப்தன்
அவன் படி இப்படி இருக்க நோவு பட இது தன்னரசு நாடா -கரை மரம் சேர்க்க வேண்டும் –
அவன் -இவர்களுக்கு ருசி உண்டாக வேண்டாமோ -சேதனர்கள் தானே -என்ன –
ருசி இன்றி அனுக்ரகம் செய்தல் அவர்களுக்கும் எனக்கும் ரசிகாதே –
புருஷார்த்தம் -புருஷன் அர்த்திக்க பட வேண்டுமே
இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘அம்மானே!’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘நீ சர்வேசுவரனாய்’ என்றும், ‘கண்ணாளா!’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றிப் ‘பேரருட்கடலாய்’ என்றும், ( கண்-அருள்) ‘அம்மானே!’
என்றதனையே திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனுமாய்’ என்றும்
அருளிச்செய்கிறார்.
ருசி பிறக்க நாம் செய்த வழிகள் -அனைத்தும் தப்பி –
உண்டது உருகாட்டாதே -கர்ம ஞான பக்திகளைக் கொடுத்து –
ஏதேனும் பற்ற நீங்க வழி கண்டு பிடித்து -வ்ரதம் கொண்டு -படைத்தல் அவதாரங்கள்
நீ சொன்னது -பரிஹர்ரம் இல்லையே
அத்தனைக்கும் நீ ஆதீனம் ருசி நீயே உண்டாக்கலாமே -நான் சமாதானம் அடைய முடியாதே
இவர்கள் சேதனர் ஆகையால் -நம்மை ஒரு தட்டிலும் சப்தாதி விஷயங்கள் ஒரு தட்டில்
அது தாழ்ந்து இருப்பதாலே அதை பற்றி –
சமுசாரிகள் நினைவாலே ‘தாழ்ந்திருக்கையாலே’ என்கிறார். அன்றிக்கே,
‘இரத்தினத்தோடே பெரிய கல்லை வைத்து நிறுத்தால், கல் வைத்த தட்டுத்
தாழினும், அத்தாழ்வாலே அக்கல்லிற்கு ஓர் உயர்வு இல்லையாமேயன்றோ?
அது போன்றது,‘ என்று கோடலுமாம்.
ஆந்தனையும் பார்த்து முடியாமல் கை வாங்கினேன் என்றானாம்
இவர்கள் நடுவே வைக்காமல் அப்புறப் படுத்த
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை அன்றே பண்ணினேன் என்ன
பெரிய பிராட்டியார் தாமும் -ஒண் டோடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க
காட்டிக் கொடுத்து அங்கெ உம்முடைய நெஞ்சு போகும்படி
செய்த பின் செய்ய வேண்டுவது என்ன –
ஆழ்வாருடைய பேரருளைக் குறிக்கின்ற இந்நிர்வாஹம், பரம தயாளுவான
ஆழ்வான் தன்மைக்குச் சேரும் என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்,
‘ஆழ்வான்’ என்று தொடங்கி.
இவ்விடத்தில், ‘ஆழ்வாருக்கு மூன்று விதமான துன்பங்கள் உண்டு,’
என்று அருளிச்செய்வர் பெரியோர்: பிரகிருதி சம்பந்தமான துன்பம், ‘முந்நீர்
ஞாலம்’ என்ற திருவாய்மொழியிலே; பகவானைப் பிரிந்ததனால் உண்டான
துன்பம், ‘சீலமில்லா’ என்ற திருவாய்மொழியிலே; சமுசாரிகள் இழவைக்
கண்டு வாடும் துன்பம், இத் திருவாய்மொழியிலே.
ஆழ்வாருடைய பேரருளைக் குறிக்கின்ற இந்நிர்வாஹம், பரம தயாளுவான
ஆழ்வான் தன்மைக்குச் சேரும் என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்,
பாம்பால் பிடிக்கப் பட்ட தவளை கூப்பிட இது யார் அறிய கூப்பிடுகிறது என்றாராம் கூரத் ஆழ்வான்
நண்ணாதார் முறுவலிப்ப -வேண்டாதார் சிரிக்க
நல்லுற்றார் கரைந்து ஏங்க -வேண்டியவர் ஏங்கும்படி
எண்ண முடியாத துயர்கள் -விளைக்கும் உலகு இயற்க்கை
கண்ணாளா நிர்வாஹனே
சமுத்ரம் கடைந்தவனே
உனது திருவடி அடைவேன் அறிவேன் சீக்கிரம் கூட்டிக் கொள்
இப்படியும் லோகத்தில் இருப்பார்களா
சுக்ருதம் சர்வ பூதானாம் -நீ இருக்க -நீ எனது விபூதிக்கு பரிய தேடுவுதி காண்
ஜகமே அவன் சரீரம் -அவயவம் அனைத்தும் -ஓன்று வேறு ஒன்றை விரோதிக்குமோ –
உடுக்கை -இடுக்கண் களைவதே நட்பு திருக்குறள் போலே
சத்ருக்கள் அநர்த்தம் கண்டு வெற்றிலை வாங்கி -புது உடுப்பு உடுத்து சந்தோஷிக்க –
நல்லுற்றார் -கரைந்து ஏங்க -சர்வேஸ்வரனே உற்றார் அறியாமல் -சரீர சம்பந்தம்
பந்துக்களை கண்டால் பாம்பை கண்டது போலே இருக்க வேண்டுமே
அவன் தமர் பாப யோனியில் பிறந்தவர் ஆகிலும் உற்றாராக கொள்ளுவது இருக்க
‘அவன்தமர் எவ்வினைய ராகிலும் எங்கோன்
அவன்தமரே என்றொழிவ தல்லால் – நமன்தமரால்
ஆராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.’-(முதல் திருவந். 55.)
2. ‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே,’ என்பது
பெரிய திருமொழி.
உற்றாருக்கு ஓன்று வந்தால் நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்,’-திருவாய்மொழி, 9. 6 : 2.
என்று இவர் பகவத் விஷயத்தை நினைத்தல் சொல்லுதல் செய்யப்புக்கால், படுவன எல்லாம் படாநிற்பர்களாயிற்று.
பிரகலாதன் வார்த்தை -எல்லாருக்கும் ஆத்மா நண்பன் விரோதி எனபது இல்லையே
கரைந்து எங்க முறுவலிப்ப -எப்படி ராக த்வேஷம் இரண்டும் கூடாதே –
பகைமைதான் கூடாது; இரங்குதல் நல்லதேயன்றோ?’ என்ன, ‘இரண்டும்
தியாஜ்யமேயாம்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘எல்லா
ஆத்துமாக்களையும்’ என்று தொடங்கி, இது, ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 31.
இரணியனைப் பார்த்துப் பிரஹ்லாதாழ்வான் கூறியது.
சுகம் துக்கம் இரண்டுமே த்யாஜ்யம்
கோலம் கொள் ஸ்வர்க்கம் யானே என்னும்
நரகமும் ஸ்வர்க்கமும் த்யாஜ்யம்
‘வேற்றுமை இல்லை என்னலாமோ? நட்பு உத்தேஸ்யம் அன்றோ?’ என்ன,
‘சுகம் அநுகூலமாயிருக்க, துக்கத்தைப் போன்று, அதுவும் தியாஜ்யம்
என்னாநின்றதேயன்றோ?’ என்று அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘சுகம்
துக்கம்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ கீதை, 15 : 5. இங்கு, ‘இருள்சேர்
இருவினையும் சேரா’ என்ற திருக்குறளின் பொருளினை நினைவு கூர்தல்தகும்.
அயோத்யையில் விரோதம் இருந்தாலும் ஒரு மிடறாக பிரார்த்தித்து பெருமாளை நினைக்க
ராமன் முகம் சுளியும் என்று
‘எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதன் சர்வேசுவரன்’ என்று அறிந்து
துவேஷத்தை விட்ட பேர் உளரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘ஸ்ரீ ராமபிரானையே’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
யுத். 131 : 95.
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியார் உடன் பரிமாறும் பொழுது -மற்றைய பிராட்டிமார்
புஷ்பம் சந்தனம் போல -இருப்பர்கள் –
நம்முடன் அவன் கலந்தால் -தன்னுடைய அவயவம் உடன் கலந்தது போலே அவளும் நினைப்பாள்
திரு மகளும் மண் மகளும் ஆய்மகளும் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் -முதல் திருவந்தாதி -42பாசுரம் –
கௌசல்யை தசரதன் கல்யாண குணங்களுக்கு தோற்று -அல்பம் ஆநுகூல்யம் இருக்கும்
தசரதன் -தாஸ்யை பார்யை தாய் -சஹி -சகோதரி -போலே பொறாமை இன்றி இருந்த –
யதா யதா ஹி நினைவு படி பரிமாறி போந்தாள்
ஸ்ரீராமாயணம், அயோத்தியா காண்டம், 12ஆம்
சர்க்கத்தின் 68ஆம் சுலோகம் அநுசந்தேயம்.
எண் ஆரா -பரம பதம் துக்கம் கலவா இன்பம் போலே
இங்கே இன்பம் கலவாத துக்கம் –
இங்கே அனைத்தும் துயரே தான்
அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் இங்கே துக்கம் எல்லை காண முடியாதே
இன்னார்க்குத் துயர் விளைக்கும் என்று விசேடித்துக் கூறாமையாலே,
கர்மங்கட்குக் கட்டுப்படாத சர்வேசுவரன் அவதரித்தாலும் அவனுக்கும்
துக்கத்தை விளைக்கக் கூடியது என்று கூறத் திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்கிறார், ‘இராச்சியத்தினின்று’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
ஆரண்ய. 67 : 24.
‘ராஜ்யாத் ப்ரம்ஸ:’ என்ற மேற்சுலோகத்திற்கு வியாக்கியாதா
அருளிச்செய்த பொருள் வருமாறு : திருவபிஷேகம் பண்ண நான்
இட்டவாறே, ‘ராஜ்யம் எனக்கு வேணும்’ என்றார் சிலர். அத்தை இழந்தால்
படை வீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் ஆமிறே, ‘என் மகன் ராஜ்யம்
பண்ண வேண்டா; பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே இருக்க
அமையும்,’ என்றாளிறே ஸ்ரீ கௌசல்யை. சீதா நஷ்டா – பிராட்டியும்
தாமுமாய் ‘ஏகாந்தமாகப் புஜிக்கலாம்’ என்று போர, இருவரும் இரண்டு
இடத்திலேயாம்படி விழுந்தது. பிராட்டிக்குத் தனியிடத்திலே உதவப் புக்க
பெரிய உடையாரையும் இழந்தது. * ‘ ‘ராஜ்ய நாசோ பஹர்ஷதி’ என்றும்,
‘வனவாசோ மஹேநதய:’ என்றும் சொல்லிப் போந்தவற்றை இப்போது
அநர்த்தமாகச் சொல்லுகிறது என்?’ என்னில், ஆஸ்ரித சம்ஸ்லேஷத்துக்கும்,
ரிஷிகளை எடுக்கைக்கும் என்றிறே போந்தது; அத்தோடே
விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும்,
பெரியவுடையார் இழவு பலிக்கையாலும், இவற்றுக்கு அடியானவையும்
இப்போது அநர்த்தமாய்த் தோற்றுகையாலே சொல்லுகிறார். இவ்விரண்டாலும்
வரும் துக்கங்களையடைய நினைக்கிறது. நிர்த்தஹேதபிபாவகம் – பிரியாத
இளையபெருமாளையும் பிரிக்க வற்றாயிறே இருக்கிறது.
‘இப்பொழுது எம்ம னோரால் இயம்புதற் கெளிதே யாரும்
செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்பவ் வாசகம் உரைக்கக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா!’
என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைவிற்கு வருகின்றது.
ராஜ்ஜியம் இழந்து –
வனே வாஸா
நஷ்டா சீதா
ஜடாயு இழந்து
எனது வினை அலஷ்மி பெருமாள் வரத்தை
நெருப்பையும் எரிக்கும் துக்கம் உலக கொடுமை –
கௌசல்யை கண் வட்டத்தில் இருக்க முடியாமல் காட்டுக்கு போக
இருவரும் பிரிந்து
பெரிய உடையாரையும் இழந்து
இத்தை -வன வாஸம் -ஆஸ்ரித சம்ச்லேஷம் ரிஷிகள் இடம் கற்க வந்தது அனர்த்தமா
இழந்த சோகம் இப்படி பேச வைத்ததாம் -காஞ்சி ஸ்வாமி நிர்வாஹம் காட்டி –
நெருப்பையும் எரிக்கும் படியான துக்கம்
லோக யாத்ரை இப்படி பண்ணி வைத்தது எதற்கு -ஆழ்வார் கேட்க
கர்ம பலன் இவை என்றானாம் –
கண்ணாளா நிர்வாஹனே -உனது கிருபைக்கு என்ன கார்யம்
கிருபாளான் நீ இல்லையா –
கடல் கடைந்தாயே -பிரயோஜனாந்த பரருக்கும் உதவினாயே
அவர்களுக்கு இச்சை உண்டே
பிரார்தித்தார்களே அவர்கள்
இவர்கள் இச்சை இன்றி இருக்க
ஆகில் இவர்கள் நடுவில் இல்லாதபடி உனது திருவடியில் சேர்த்து கொள்ள வேண்டும்
உனது திருவடிகளுக்கே -ஏகாரம்
கால் கூறு இச்சை
காற்கூறு – திருவடிகளாகிற பாகத்தில் என்பது பொருள். ‘ஒன்றில் நாலில்
ஒரு பாகம்’ என்பது வேறும் ஒரு பொருள்
செய்ய வேண்டும்
தாழ்வு இன்றி
அடியேனை
சாமாறு பணிக்க வேண்டும்
நீ செய்ய வேண்டிய கார்யம்
ஒரு வார்த்தை சொன்னால் அடியேனுக்கு சத்தை
சரீரம் போனால் போதுமா
கைங்கர்யம் வேண்டாமா
கேவலரை போலே கேட்க மாட்டாரே
காட்டுத் தீயில் அகப்பட்ட நீரும் நிழலும் தேடுவது போலே –
எம்பெருமான் நினையாதவர் உடன் இருப்பதை விட நெருப்புக்குள் இருப்பதே தேவலை
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.