Archive for February, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 27, 2013

அஃதே உய்யப்புகும் ஆறுஎன்று கண்ணன் கழல்கள்மேல்
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய்உய்யற் பாலரே.

    பொ-ரை : ‘உய்வதற்கு உரிய வழி மேலே கூறிய அதுவே என்று கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, பறிக்கப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலையாற்சூழப்பட்ட திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அந்தரங்கக் கைங்கரிய ரூபமாகச் செய்யப்பட்ட

அழகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இறைவனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்துப் பாடிய இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் குறைவில்லாதவாறு கற்பவர்கள், ஆழ்ந்துள்ள துன்பங்கள் நீங்கி நற்கதி பெறுவார்கள்,’ என்றவாறு.

    வி-கு : ‘உய்யப் புகுமாறு அஃதே என்று கண்ணன் கழல்கள் மேல் சடகோபன் குற்றேவல் பாடல் இவை பத்தும் கற்றவர் துயர் போய் உய்யற்பாலர்,’ என்க.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, பகவானுடைய கைங்கரியத்தையே புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.

    உய்யப் புகுமாறு அஃதே என்று – ‘திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. கண்ணன் கழல்கள் மேல் – 2‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, 3கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே? அதுதன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி 4‘அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது? 5‘துயர்அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்; 6‘வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு. இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்; ‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம்

செய்தார். இது என்ன 1அடிப்பாடுதான்! 2‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?

    கொய்பூம்பொழில் சூழ்குருகூர்ச் சடகோபன் குற்றேவல் – எப்பொழுதும் பூவும் தளிருமாய் இருக்கின்ற திருச்சோலை சூழ்ந்த திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார், சர்வேசுவரன் திருவடிகளில் அந்தரங்கக் கைங்கரியம் செய்தவை இவைதாம். செய்கோலத்து ஆயிரம் – கவிக்குச் சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம். செய் – செய்த கவி என்னுதல்; ‘குற்றேவல் செய்’ என்று மேலே கூட்டி, ‘வாசிகமான அடிமை’ என்னுதல். சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய் உய்யற்பாலர் – அவன் குணங்களைத் தொடுத்துப் பாடின இவற்றில் ஒன்றும் குறையாமல் கற்றவர்கள் பகவானுக்கு வேறுபட்ட பலன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களாகிற கேடுகள் நீங்கி உய்யும் தன்மையர் ஆவர். அஃகல் – சுருங்கல். ‘உய்தலே தன்மையாக உடையர் ஆவர்,’ என்பார், ‘உய்யற்பாலர்’ என்கிறார். ‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒருநா யகமாய் உலகுக்கு வானோர்
இருநாட்டில் ஏறிஉய்க்கும் இன்பம் – திரமாகா
மன்னுயிர்ப்போ கம்தீது; மால்அடிமை யேஇனிதாம்;
பன்னிஇவை மாறன்உரைப் பால்.

திருவாய்மொழி, 9. 1 : 10. ‘பரோபதேசம் முடிக்கிறதும்’ என்றது, ‘விரோதி
சொரூப விஷயமான பரோபதேசத்தை முடிக்கிறதும்’ என்றபடி. ‘வீடுமின்
முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்,’ ‘கொண்ட பெண்டிர்’
என்கிற நான்கு திருவாய்மொழிகளும் விரோதி சொரூப விஷயமான
பரோபதேசமாதல் காண்க. அவற்றுள், ‘கொண்ட பெண்டிர்’ என்ற
திருவாய்மொழி, பரோபதேசம் செய்யும் திருவாய்மொழிகளில் ஈற்றுத்
திருவாய்மொழியாதலின், ‘பரோபதேசத்தை முடிக்கிறதும்’ என்கிறார்.

பத்தும் கற்றார் பகவத் கைங்கர்யம் அடைவார்
பலன் சொல்லி தலைக் கட்டுகிறார் –
அதுவே உயப் புகுமாறு
திருநாரணன் தாள் உஜ்ஜீவிக்க உபாயம் உபேயம்
கண்ணன் தாள் பற்றி
கண்ணன் கழல்கள் நினைமினோ
தான் அனுஷ்டித்து அதையே உபதேசிக்க
இவ்வடி உடையார்
துயர் அடி தொழுது
கண்ணன் தாள் பற்றி கேடு இலேன்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
இது என்ன அடிப்பாடு
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
கண்ணன் கழல்க்சல் நண்ணும் –திண்ணம் நாரணமே
அந்தரங்க வ்ருத்தி –
குற்றேவல் செய் சேர்த்து –
செய்த கவி
வாசிகமான அடிமை
கோலம் அழகு உள்ள கவி
சீர்த் தொடை குணங்கள் தொகுத்து
ஒன்றும் குறையாமல் கற்று
ஆழ துயர்போய்
ஐஸ்வர்யம் கைவல்யம் நீங்கி உஜ்ஜீவிப்பர்
காலம் பெற சிந்தித்து உய்மினோ ஆவார்

சாரம்
ஒரு நாயகமாய் உலகுக்கு -இந்த உலக இன்பம்
வானோர் இன்பம் ஐஸ்வர்யம் திறம் ஆகா
மன்னுயிர் -கைவல்யம்
மால் அடிமையே ஈந்தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 27, 2013

குறுக மிகஉணர் வத்தொடு நோக்கிஎல் லாம்விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவதுஓர் பாசம்உண்டாம்; பின்னும்வீ டுஇல்லை,
மறுகல்இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடுஅஃதே.

    பொ-ரை : ‘(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும் என்றபடி.

    வி-கு : ‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க. உணர்வு – ஞானம்; ஆத்துமா. இறுகல் – இறுகப்பிடித்தல். இறப்பு – மோக்ஷம். பாசம் – பற்று. மறுகல் – குற்றம். ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக. இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை. ‘அஃதே வீடு’ என மாறுக.

    ஈடு : பத்தாம் பாட்டு. 3‘பூமியில் ஐஸ்வர்யம், சுவர்க்க அனுபவம் இவை நிலை நில்லா,’ என்றார் மேல்;

‘இவைபோல் அன்றிக்கே, ஆத்தும அனுபவம் நிலை நின்ற புருஷார்த்தமே அன்றோ?’ என்னில்,’ ‘மேலே கூறியவற்றை நோக்கும்போது இதற்கு ஒரு நன்மை உண்டேயாகிலும், பகவானுடைய ஆனந்தத்தைப் பார்க்கும்போது இது மிகச் சிறியதாய் இருக்கையாலே இதுவும் தண்ணிது; ஆன பின்பு, அவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

    குறுக உணர்வத்தொடு மிக நோக்கி – பல காலம் புறம்பே உள்ள விஷயங்களில் பண்ணிப் போந்த வாசனை அடைய ஆத்துமாவிலேயாம்படி 1‘விசத தமமாகத் தியானம் செய்து’ என்றது, ‘புறம்பேயுள்ள விஷயங்களிலே தூரப் போய்ப் பற்றுகின்ற மனத்தினை ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்து’ என்றபடி. இது 2கண்ணை இட்டுக் கண்ணைப் பார்த்தாற்போலே இருப்பது ஒன்று ஆதலின், 3குறுக’ என்கிறார். இதனால், முதல் தன்னிலே ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்திய மனத்தினையுடையவனுக்கே ஆத்தும அனுபவத்தில் அதிகாரம் உள்ளது என்பதனைத் தெரிவித்தபடி. எல்லாம் விட்ட – 4திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச்சாற்றைப் போன்று-சாணகச்சாறு – பஞ்ச கவ்யம்.– சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.

    இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் – 5சங்கோசத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்தும ஞானிக்கும்.இவ்வருகு உள்ளனவற்றை நோக்கும்போது ‘விரிந்தது, மேலானது’ என்று இருந்தானே ஆகிலும், அவ்வருகும் கண்டவர் ஆகையாலே

மோக்ஷ உலகத்தை. ‘ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்,
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே,’ என்பது
இவருடைய திருவாக்கு.-
(திருவாய்மொழி,4.9:10)

‘இறுகல்’ என்று இருக்கிறார் இவர். இறப்பு – மோக்ஷம். 2அப்பயன் இல்லையேல் – அந்தப் பகவானுடைய உபாசனம் இல்லையாகில் ஆத்துமாவைத் தியானம் செய்ய ஒண்ணாது, உபாசனமானது இன்பரூபமாயிருக்கையாலே அதனைப் ‘பயன்’ என்கிறார். அவனுடைய சாதனம் இவருக்குப் பலமாய் இருக்கிறது. சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் – 3தன்னை முன்புத்தையிற் காட்டில் மிகச் சிறியனாக நினைக்கும்படி தளைகளான அவித்தை முதலானவைகள் நூறு கிளைகளாகக் கிளைக்கும். ‘தேவோஹம் – நான் தேவன், மனுஷ்யோகம் – நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின், ‘சிறுக நினைவது ஓர் பாசம்’ என்கிறார்.

    மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை – இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு பகவானை வழிபட்டுக் கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்துமாவைக் காண வேண்டும் என்று இருக்கின்ற அன்றும், சர்வேசுவரன் பக்கல் 4அந்திம ஸ்மிருதி பண்ணிஇச்சரீரத்தை விடுவதற்குப் பாரானாகில், அந்த மோக்ஷந்தான் இல்லை. மறுகல் இல் ஈசனை – குற்றங்கட்கு எதிர்த்தட்டான சர்வேசுவரனை, அன்றிக்கே, 1‘மறுகலில் – மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங்காலத்தில் வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல். ஈசனைப் பற்றி விடாவிடில் – 2அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை. அஃதே வீடு – ‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.

ஆத்ம லாபம் -கைவல்யம் -பகவத் ஆனந்தம் பற்ற இது ஏக
தேசம் தண்ணியது –
குறுக மிக உணர்வு -சிறிய பலன்
அப்பயன் இலையேல் -பகவத் அனுபவம்
வீடு இல்லை –
உணர்வை குறுக்கி -நிலை நிறுத்தி த்யானம்
பிரத்யாக்ருத இந்திரியங்கள் -அவனுக்கு தான் ஆத்ம பிராப்தி
கண்ணை இட்டு கண்ணை பார்ப்பது போலே கஷ்டம்
வெளி விஷயம் பாராமல் ஆத்மாவை நோக்கி
எல்லாம் விட்ட -ஆசை அனைத்தையும் -ஐஸ்வர்யம் -பகவத் லாபம் -ஸ்ரீ ய பதி
பெரிய திருவடி தோளில் வந்தாலும் அத்தையும் விட்டு -எல்லாம் விட்டு –
தோளும் தோள் மாலையுமாக வந்தாலும்
இருந்தாலும் எம்பெருமானை நோக்கி தான் உபாசனம் செய்ய வேண்டும் –
சப்தாதி விஷயங்கள் ஈடுபாடு இன்றி ஸ்வர்க்காதி நோக்குபவன் போலே
இங்கே எம்பெருமான் மேனகை அழகை போலே நினைந்து
சாணக சாறு
பஞ்ச கவ்யம் -சுத்திகாக உண்பர் போக்யமாக இல்லை

போக்யதையில் நெஞ்சு செல்லாதபடி அவனையும் விட்டு –
சாணம் எச்சில் பிரட்டி –
தூரப் போடுவது போலே
கைவல்யம் பெற்று அவனை விட்டு –
இறுகல் ஞான சங்கோசம் -மோஷம் என்று சொல்லும் ஆத்ம ஞாநி
கைவல்ய நிஷ்டர் படி இதுவும் விஸ்தரம்
இவருக்கு இதுவும் இறுகல் -அவ்வருகை கண்டவர் ஆகையாலே
கிணற்று தவளை சமுத்திர தவளை போலே
அப்பயன் இல்லையேல் -பலமாக பற்றாமல் சாதனமாக பற்றுகிறான் கைவல்யார்த்தி
பயனா சாதனமா –
ஆழ்வார் அப்பயன் இல்லையேல் தம்முடைய நினைவால் இந்த சப்தம் –
உபாசனம் சுச்சுகம் இனிமையாக இருக்கும்
அவனுடைய சாதனம் இவருக்கு பிரயோஜனமாக இருக்கிறது
சித்திக்காமல் போனால் அவித்யாதிகள் உண்டாகி சரீரமே ஆத்மாவாக நினைக்க நேரிடும்
கைவல்யம் வேண்டும் என்று த்யானம் செய்பவன்
அந்திம ஸ்ம்ருதி –
வேற நினைவு வந்தால் -கைவல்யம் கிட்டாதே

சர்வேஸ்வரன் பக்கல் –
இந்திரியங்கள் அடக்கி
உபாசனம் செய்து
கர்மங்கள் கழிந்து
ஆத்மாவை மட்டுமே நோக்கி
அந்திம ஸ்மரதி பண்ணி
பெற வேண்டிய கஷ்டம் –
மீண்டும் சம்சாரத்தில் விழுவான்
கரணம் தப்பினால் மரணம்-ஜடபரதர் -மான் ஆன வ்ருத்தந்தம்
மறு கல் -ஹேய பிரத்யநீகன்
மறுக்கிற சமயத்தில் ஈசனைப் பற்றி சரீரம் விடா விடில்

மோஷம் எம்பெருமானைப் பற்றுவதே
தண்ணியது
கைவல்யம் விடாவிடில் அதுவே வீடு -மீண்டு அவனை பெற முடியாதே
இரண்டும் கேட்டான் நிலை அடைவானாம் –
பெருக நினைப்பது அவனை நினைப்பது

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 27, 2013

படிமன்னும் பல்கலன் பற்றோடு
அறுத்து,ஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற் றார்களும்,
ஆங்குஅவ னைஇல்லார்
குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும்
மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல்
கழல்கள் குறுகுமினோ. 

    பொ-ரை : பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று, தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்; சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.

    வி-கு : ‘அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக.ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1மேல் எட்டுப் பாசுரங்களால் ‘இவ்வுலக இன்பம் நிலை அற்றது,’ என்றார்; இப்பாசுரத்தில். ‘உடலை வருத்தும் தன்மையையுடைய தவத்தைச் செய்து அந்தத் தவத்தின் பலம் சுவர்க்கமாகக் கொண்டு சுவர்க்கத்தை அடையும்போது பகவானுடைய திருவருள் வேண்டும்; அவனுடைய திருவருளால் சுவர்க்கத்தை அடைந்தாலும், அதனுடைய இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.

    இவன் தவத்தைச் செய்தற்குத் தொடங்கும் போது விடுமவை சொல்லப்படுகின்றன மேல் : படி – பூமி. மன்னு பல்கலன் – முறையாக வந்த பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம். அன்றிக்கே, ‘படி மன்னு பல்கலன்’ என்பதற்குத் 2‘தன் குலத்திலுள்ளார் பரம்பரையாகப் பூண்டு போருகிற பல வகைப்பட்ட ஆபரணங்கள்’ என்னுதல். பற்றோடு அறுத்து – அவற்றை நீக்கி விட்டு வாழ்தல் அன்றிக்கே அவற்றில் வாசனையும் போகை. ஐம்புலன் வென்று – அவற்றில் ருசிக்குக் காரணமான ஐம்பொறிகளும் விஷயங்களிற்போகாதபடி வென்று. 3‘உன்னால் முன்பு இந்திரியங்கள் வெல்லப்பட்டு மூன்று உலகங்களும் வெல்லப்பட்டன,’ என்றாள் மண்டோதரி. செடி மன்னு காயம் செற்றார்களும் – தவத்திற்காகப் பல காலம் ஒரோ ஆசனங்களிலே இருந்தால் சலியாமையாலே உடம்பிலே தூறு மண்டும்படி சரீரத்தை ஒறுத்துத்

தவத்தைச் செய்தவர்களும்; 1‘நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கிரி என்று எண்ணிப்-பிறியாது, பூங்கொடிக்கள் வைகும்’ என்னக் கடவது அன்றோ?

சரீரத்திலே தூறு மண்டும்படி தவம் செய்தலுக்கு மேற்கோள், ‘நெறியார்’
என்று தொடங்கும் பாசுரம். இது, இரண்டாந்திருவந். 53.

அங்கு அவனை இல்லார் – அவன் திருவருள் இல்லையாகில் தானே சித்தியாது. அவன் திருவருளால் பெற்றதாகில், குடி மன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் – ‘இதற்கும் ஆள் பற்றுவதே!’ என்பர் பட்டர். குடிகளினது நெருக்கத்தையுடைத்தாய்; நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டதான இனிமையையுடைத்தான சுவர்க்கத்தை அடைந்தாலும். மீள்வர்கள் – மீளுவார்கள்; 2புண்ணியம் குறைந்தவாறே ‘த்வம்ச’ என்று தள்ளுவார்கள் அன்றோ?

    மீள்வு இல்லை – அங்ஙனம் ஒரு மீட்சி இல்லை. என்றது, ‘அப்படி அவனுடைய புண்ணியத்திற்குக் குறைவு இல்லையே’ என்றபடி. 3‘புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே’ என்பர் பட்டர் பிரான்.- பெரியாழ்வார் திருமொழி, 4. 5 : 2.

கொடி மன்னு புள் -கொடியாய் மன்னாநின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக்காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில், அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் 4பக்ஷபாதமும் அதற்கு அடி. புள்ளுடை அண்ணல் – ‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமேயன்றோ அவன்? அண்ணல் – தலைவன். கழல்கள் குறுகுமின் – உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள். ‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில். இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள்குறுகுமினோ’என்கிறார்காணும், 1அவளோபாதி 2இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.

கீழே எட்டு பாசுரம் ஐ ஹிஹ போகம் சொல்லி
மேலே ஆமுஷ்யஹா போகம்
உடம்பை வர்த்தித்து ஸ்வர்க்காதி பலன் பெற்றாலும்
அதனது ச்வாபத்தாலே நிலை இல்லை என்கிறார் இதில்
செடி முளைக்கும் போலே தபசு செய்தாலும்
இன் ஸ்வர்க்கம் எய்தினாலும் மீள்வர்கள்
படி மன்னு -படி பூமி
மன்னு பல் கலன் -பரம்பரை ஆபரணங்கள் பற்றோடு அறுத்து
ஐம்புலன் அறுத்து
ராவணன் தபஸ் செய்தது போலே
ராவணன் -ராமனால் முடியவில்லை
இந்திரியங்கள் மேலே கிளர்ந்து காமங்கள் உண்டாக்கி ஒழிந்தான் மண்டோதரி
காயம் -உடம்பு
தபஸ் செய்ய அசையாமல் இருக்க
செடி மன்னு
பூதத் தாழ்வார் -செடியார் -அறியாது இளம் கிரி என்று எண்ணி கொடிகள் படர –
செடி மன்னு காயம் –
வால்மீகி -வால்மிக புற்று -கிளம்பி -புளந்து வந்தாராம் –
கிருஷ்ண த்வைபாயனர் வேத வியாசர் இயல் பெயர் –
குடி மன்னும் இன் சுவை இதற்கும் ஆள் பற்றுவதே பட்டர் –
வெளியூர் போவதருக்கும் ஆள் உண்டே சொல்வது போலே
நெருக்கம் உடைத்தே -நரகம் வ்யவர்திக்க ஸ்வர்கம்
மீள்வர்
அவனது புண்ணியம் ஷயம் இலையே -மீட்சி இல்லையே
ராமோ விக்ரஹவான் தர்ம –
கிருஷ்ணன் தர்மம் சனாதன
ஜாமீன் கொடுத்தாலும் போகாவ்ட்டார்கள்
அண்ணல் கழல்
கருட ஆழ்வான் -எம்பெருமானை பற்ற வந்தவன் -அவனை அடையாளம் காட்டும்படி
ஆச்ரயித்தாரும் வ்யாவர்தக விசேஷணம் -அவனுடிய மூக்குவளியும் -பழியும் –
பஷ பாதமும்
அலகில் பலமும் இறக்கை
புள்ளுடை அண்ணல் -ஸ்ரீ ய பதி போலே நிரூபகம் –
திருநாராயண புரம்
துழாய் முடி அண்ணல்
வைர முடி பிரதானம்
கருடாத்ரி பெயரும் உண்டே
கருடன் கொண்டு சமர்ப்பிக்கும் வைர முடி
சம்சாரம் கழல இவன் கழல் பற்ற
திருநாரணன் தாள் புள்ளுடை அண்ணல் கழல்
அவர்களோபாதி இவனும் நிரூபகம்
திரு இல்லா தேவர் -தேவர் என்ன மாட்டோமே போலே
கருட ஆழ்வானும் –

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 27, 2013

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்
கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுஉடன் ஆக்கிலும்,
ஆங்குஅவ னைஇல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும்
மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
பணங்கொள் அரவணை யான்திரு
நாமம் படிமினோ.

பொ-ரை : ‘நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும், அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்,’ என்கிறார்.

    வி-கு : ‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக. ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க. படித்தல் – கற்றல். அன்றிக்கே, ‘திருநாமம் படிமின் – கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம். ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘இராச்சிய இலக்குமி நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வாழாது ஒழியில் அன்றோ? அவர்களோடு பொருந்தி வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன, ‘பொருந்தி வாழ்ந்தாலும், எம் பெருமானை அடையாவிடில் கிடையாது; அவனை அடைந்து பெற்றாலும், அதன் தன்மையாலும் நிலை நில்லாது; ஆன பின்பு, அவன்தன்னையே பிரயோஜனமாக அடையுங்கோள்,’ என்கிறார்.

    குணம் கொள் – குணங்களைக் கொண்டிருப்பாராய்; குணங்களால் மிக்கு இருப்பாராய். என்றது, ‘நிறைந்த குணப் பிரசித்தியையுடையவர்கள்’ என்றபடி. நிறைபுகழ் – நிறைந்த புகழையுடையராய். இப்படி இருந்தார்களே ஆகிலும், அடையத்தக்கவர் அல்லராகில் உபேக்ஷிப்பர்கள்; ஆதலின், ‘மன்னர்’ என்கிறார். என்றது, ‘முடி சூடிய அரச வமிசத்தில் பிறந்த அரசர்கள்’ என்றபடி. அடையத்தக்கவராகிலும் உலோபிகளாய் இருப்பர்களே ஆகில் கிட்டுவார் இலரே? ஆதலின், ‘கொடைக்கடன் பூண்டு இருந்து’ என்கிறார். என்றது, ‘கொடுக்கையே இயற்கையாக உள்ளவர்கள்’ என்றபடி. தர்மம் செய்தலையே இயற்கையாய் உள்ளவர்களாகிலும், தங்களது

மேன்மையை நினைத்து இருப்பவர்களாயின், அவர்களைக் கிட்டுவோர் இலர் அன்றே? ஆதலின், ‘இணங்கி’ என்கிறார். என்றது, ‘எளியனாய் எல்லாரோடும் பொருந்தியிருப்பவர்களாய்’ என்றபடி. 1உலகு உடன் ஆக்கிலும் – உலகத்தைத் தங்களோடே சேர்த்துக்கொண்டார்களே ஆகிலும். என்றது, 2‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை எல்லாரையும் அநுசரித்துக்கொண்டு ஆண்டார்,’ என்கிறபடியே, சேர்த்துக்கொண்டு அரசு ஆண்டார்களேயாகிலும்’ என்றபடி. 3ஆங்கு அவனை இல்லார் – அந்த இராச்சியத்தில் அவன் திருவருள் இல்லையாகில், அந்த இராச்சிய இலக்குமிதான் கிடையாது. மணம் கொண்ட போகத்து மன்னியும் – பகவானுடைய திருவருளால் அந்த இராச்சியத்தை அடைந்தாலும். செவ்வையை உடைத்தான செல்வம் ஆதலின், ‘மணம் கொண்ட போகம்’ என்கிறார். மீள்வர்கள் – அந்த ஐஸ்வரியம் கிட்டினாலும் அதனுடைய இயற்கையாலே மீளுவர்கள்.

    மீள்வு இல்லை – 4‘பின்னர் மீண்டு வருகிறான் இல்லை’ என்கிற பேற்றைப் பெற அமையும். ‘எத்தால்?’ என்னில், பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள். ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார். ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார். அன்றிக்கே, ‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான

படுக்கையையுடையவன் என்பார், ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.

    1இனி, ‘பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’ என்று இத்திருப்பாசுரத்திற்குப் பொருள் கூறலுமாம்.

பூ மேல் -ராஜ்ய ஸ்ரீ கிடைக்க எம்பெருமான் அருள் வேண்டுமே –
எம்பெருமானே கொடுத்தாலும் ராஜ்ய ஸ்ரீ நிலைக்காது ச்வாபத்தாலே என்கிறார் –
தர்மங்கள் பண்ணி இருந்தாலும் -மீள்வர்கள்
குணம் கொள் -நிறைந்த புகளை உடைய -கொடை தர்மம் கொடுத்தாலும் –
சக்கரவர்த்தி திருமகன் போலே ராஜ்ஜியம் செய்தாலும் -ராமோ ராஜ்ஜியம் போலே
தனது மேன்மையை மட்டுமே நினைந்து இருந்தார்கள் ஆகில்
மணம் கொண்ட போகம் -மீள்வர்கள்
எம்பெருமான் ச்பர்சத்தால் விகசிதமான பணங்கள் கொண்ட
திருவனந்தாழ்வான்
துகைத்து ஏறலாம் படி -பர்யங்க வித்தை
பணம் கொள் அரவணையான் –
தானம் தர்மம் செய்பவன் -பலன் எதிர்பார்க்காமல் -எம்பெருமான் உத்தேச்யம்
செய்யாமல் ஸ்வர்க்காதி போகங்கள் பெற்றால் -ஆங்கு அவனை அல்லால்
மீள்வர்கள் -என்னலுமாம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 27, 2013

ஆமின் சுவைஅவை ஆறோடு அடிசில்உண்டு ஆர்ந்தபின்
தூமென் மொழிமட வார்இரக் கப்பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.

    பொ-ரை : ‘பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, ‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

    வி-கு : ‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக. தூ – பரிசுத்தம். துற்றல் – உண்டல். துற்றுவர் – பெயர். ‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க. இடறுவர் – முற்று. கோமின் – தொகுத்துச் சொல்லுமின். ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

    ஈடு :  ஏழாம் பாட்டு. 1‘ஐஸ்வர்யத்துக்கு நீர் சொல்லுகிற குற்றம் உண்டே ஆகிலும், சோறு முதலானவைகட்கு, தரித்திருப்பதற்குக் காரணமுமாய் இனியவையுமாய் இருக்கிற தன்மை உண்டே?’ என்ன, ‘அவையும் நிலை நில்லா,’ என்கிறார்.

    ஆம் இன் சுவை – ஆன இனிய சுவை ; நன்றான நல்ல சுவை. அவை ஆறோடு – ‘அறுசுவை’ என்று பிரசித்தமானவற்றோடே கூட. அடிசில் உண்டு –2முன்பு இரந்து உண்டுதிரிந்தவன், நாழி அரிசி பெற்று வாழப்புக்கவாறே ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து, ‘முதலியார்’ என்னவும் பண்ணி, ‘அடிசில் உண்ணாநின்றார்’ என்னவும் பண்ணும். ஆர்ந்த பின் – கண்டது அடைய இட்டு வயிற்றினை நிரப்பி, உதிரம் குடித்து வாய்விட்ட அட்டை போலே பெயரவும் திரியவும் மாட்டாதே கிடந்து புரளாநிற்குமே? அவ்வளவிலே இவனிடத்தில் அன்புடையார்களாய் இருப்பார் பெண்டுகள் சிலர் வந்து, ‘உடம்பு பதர் போலே இருந்தது ; இதுகொண்டு எங்ஙனம் காக்கப்படுமவர்களான எங்களை நோக்கப் பார்க்கிறது?’ என்பர்கள் ; அதனைக் கேளா ‘நாம் உண்டிலேமோ!’ என்று இவன் தானும் மயங்கும். 1முன்பு இவர்கள் விரும்பிக் கூறினால் மறுக்குமே? ஒரு திரளையைத் திரட்டி ‘இது என் பிடி’ என்பர்கள்; பின்பு உண்ணாது ஒழியமாட்டானே? அப்பேச்சின் இனிமையிலே துவக்குண்டு பின்னரும் உண்ணாநிற்கும். எமக்கு ஒரு துற்று ஈமின் என்று – இவர்களை இக்கட்டளையிலே வேறே ஒருவன் கைக்கொள்ளுமே ; அவனையும் முன்புத்தையவனைப் போலே இரந்து உண்பிப்பார்களே இவர்கள்; அங்கே, தன் வயிறு வாழாமல் சென்று, 2‘நீங்கள் எல்லாருமாக எனக்கு ஒரு பிடி தரவேண்டும்,’ என்னும். பண்டு நல்லது கண்டால் தன் வாயில் இடாதே இவர்களுக்குக் கொடுத்துப் போந்தவன், தன் செல்லாமையாலே இப்பொழுது  ‘எனக்கு’ என்கிறான் அன்றோ? இடறுவர் – அப்போதையவனுக்குப் பிரியமாக அவர்கள் இவன் முகம் பாரார்களே? பின்னையும் தட்டித் திரிவர்கள்.ஆதலின் – ஆன பின்பு, ‘வாழ்வின் நிலையாமை இதுவான பின்பு’ என்றபடி. ஆதி அம் சோதி குணங்கள் கோமின் – எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள். 1‘சொரூபத்தைப் பற்றியதாயும் விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார், ‘ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார். 2‘நான் பரமாத்துமாவாகிய இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்றும், 3‘அவன் எல்லாக் கல்யாண குணங்களையும் பரமாத்துமாவோடு அனுபவிக்கிறான்,’ என்றும், 4‘ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’ என்றவாறு.

துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணைநாளும் இன்புடைத்தா மேலும் – கணைநாணில்
ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே!
ஓவாத ஊணாக உண்.’

  என்பது பெரிய திருவந்தாதி, 78.

அன்ன பாநாதிகளும் நிலை இல்லை -என்கிறார்

அடியவர் ஆகும் கோள் சொல்வது –
அடிமை என்றுமே தானே -இருந்தும் உணராமல் இருந்தது இல்லை போலே தானே –
அன்ன பாநாதிகள் -தாரக போக்யமாய் இருக்குமே என்றவனுக்கு
நன்றான இனிய சுவை ஆறோடு -கூட
அடிசில் உண்டு -கௌரவ வார்த்தை
முன்பு இரந்து உண்டு திரிந்தவன்
வாழப் புக்கவாறே
வெள்ளாட்டி சம்பாதித்து
முதலியாரே என்னவும் பண்ணி –
அடிசில் உண்ணா நின்றார் என்னவும் பண்ணி –
ஆர்ந்த பின்பு உதிரம் குடித்த அட்டை போலே
நகர கூட முடியாமல் இருக்க
அன்புடையார் போலே பெண்கள் மேலும் உண்ண சோழ
தாம் உண்டிலோ ம்  என்று பிரமிக்கும்
ஒரு திரளை எடுத்து இது என் பிடி -என்ன
மேலும் உண்பானாம்
ஸ்திரீ கலை வேறு ஒருவன் கைக்கொள்ள –
அவனை இரந்து
எனக்கு ஒரு பிடி தர வேணும் இரப்பானாம்
பார்வை கூட கொடுக்காமல் இருக்க இடருவர்
பின்னையும் திரிவான் அவர்கள் பின்னால்
வாழ்வின் நிலையாமை இதுவான பின்பு
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் சூடி
ஸ்வரூப விக்ரஹ குணங்கள் கொண்ட சர்வேஸ்வரனை
ஏத்தி அனுபவியங்கள்
அஹம் அந்நாதாக
ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -361-372….

February 26, 2013

வார்த்தை -361-
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவனுக்கு சரீர விச்லேஷத்து அளவும் மஹா பயமும் மஹா விஸ்வாசமும்
அநு வர்திக்கைக்கு காரணம் –
தன்னைப் பார்த்த போது எல்லாம் மஹா பயமும் –
எம்பெருமானை பார்த்த போது எல்லாம் மஹா விஸ்வாசமும் —

இரண்டுக்கும் மஹத்தை யாவது -தன்னை அனுசந்தித்த போது சம்சாரத்திலே இருந்தானாகவும் –
இங்கே இருந்தானேயாகிலும் –
எம்பெருமானை அனுசந்தித்த போது பரம பதத்தில் இருந்தானாகவும் நினைத்து இருக்கை –

————————————————–

வார்த்தை -362-
ஸ்வரூபத்தில் தெளிவும் –
உபாயத்தில் துணிவும் –
உபேயத்தில் த்வரையும்-அதிகாரி க்ருத்யம் என்று நம்பிள்ளை –

————————————————–

வார்த்தை -363-
சம்பாஷண சம்பந்தம் -போஜன சம்பந்தம் -அதருஷ்ட சம்பந்தம் -த்ருஷ்ட சம்பந்தம் –
இவை பார்த்து செய்ய வேண்டும் –

தானிடும் தண்டனுக்கு உகந்திடவும்
தன்னை யிடும் தண்டனுக்கு  குழைந்து  போரவும் –
தன் சத்தையை அழிய மாறியாகிலும் தண்டன் கைக்கொள்ள வல்லனாகையும் அதிகாரி க்ருத்யம் –

—————————————————–

வார்த்தை -364-

மலை நாட்டிலே ஒருவனுடன் மூவரும் ஸ்ரீ ராமாயணம் வாசித்தார்கள் –
அவர்களில் முதலில் அதிகரித்தவனை அழைத்து உனக்கு இதில் பிரதிபன்ன அர்த்தம் ஏது என்று கேட்க –
சக்கரவர்த்தி திருமகன் பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகையாலே
மாத்ரு பித்ரு ஸூ ஸ்ருஷை தர்மம் என்று தோற்றிற்று -என்ன
நீ அத்தைச் செய் -என்றான்

இருவர் ஆனவனைக் கேட்க -சக்கரவர்த்தி திருமகனாய் சரீர பரிக்ரஹம் பண்ணினாலும்
உடம்பு எடுக்கை பொல்ல்லாதாய் இருந்தது –
ஆகையால் இவ்வுடம்பை அகற்றும் வகை விசாரிக்க வேண்டும் -என்றான் –
ஆகில் நீ தத் விமோசன உபாயத்தை பண்ணு என்றான் –

மூவர் ஆனவனைக் கேட்க -நம்முடைய புண் மருந்துகளால் ஒரு பசை இல்லை –
ராவணன் தானே யாகிலும் அவனை விடில் தரியேன் -என்ற சக்கரவர்த்தி திருமகன் கிருபை உண்டாகில் பிழைக்கலாம்
அல்லது பிழைக்க விரகு இல்லை -என்றான் –
ஆகில் நீ உள்ளதனையும் ஸ்ரீ ராமாயணத்தை பரிசயி -என்றான் –

—————————————————————

வார்த்தை -365-

வீர ஸு ந்தரனுக்கு பயப்பட்டு எம்பார் அடிமையான ஜகந்நாத ப்ரஹ்ம ராயருடைய வேச்யை மடத்திலே வந்து இருக்க –
இவளை அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு பயத்தாலே உடையவர் –
எம்பார் இவளை இங்கு நின்றும் போக விட வேண்டும் -என்ன –
எம்பாரும் பயார்தையான இவளை ரஷிக்கவே தர்மம் தானே ரஷிக்கும் –
எம்பெருமான் ரஷகன் என்னும் இடமும் – ஆஸ்த்ரீ பாலமும் அறியுமே –
அவனே ரஷகன் என்கிற அவதாரணம் அறிகைக்கு அன்றோ ஆசார்ய சேவை பண்ணுகிறது -என்று விண்ணப்பம் செய்தார் –

—————————————————————-

வார்த்தை -366-
வீர சிகாமணிப் பல்லவ ராயர் பட்டரை -ராஜ கார்யம் செய்கையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களை அநுவர்த்தித்து நல் வார்த்தை கேட்கப் போகிறதில்லை –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -என்ன –
கடற்கரை வெளியை நினைத்து இரும் -என்று அருளினார் –

பல்லவ ராயரும் தெரியாமையாலே கையைப் பிசைந்து நிற்க –
கடற்கரை வெளியிலே ஓர் அமிர்த கடல் போலே விட்டுக் கொண்டு இருக்க –
எதிர்கரையிலே பிணம் தின்னிப் பையல் ராவணன் விட்டு இருக்க
எழுபது வெள்ளம் சேனை உணர்ந்து கொண்டு பெருமாளைக் குறிக் கொண்டு நோக்கா நிற்க –
பிரக்ருதிமான்கள் ஆகையாலே கண் தூங்கி கால் ஓய்ந்து கை சோர்ந்த அளவிலே –
பெருமாள் தாமும் தம்பியருமாக முதுகிலே ஆனவனாழி கையைக் கட்டிக் கையிலே தெரிந்து பெருக்கிப்
பிடித்த அம்பும் தாமுமாக -சில அண்டஜங்கள் முட்டை இட்டு நோக்குமா போலே
எழுபது வெள்ளம் சேனையும் சூழ நடையாடும் மதிள் போலே
சாரிகையாக வந்த சக்கரவர்த்தி திருமகனுடைய கையும் வில்லும் தஞ்சம் என்று ஸுகமே இரும் -என்று அருளினார் –

————————————————————————

வார்த்தை -367-

தர்சந ரஹஸ்யம் இருக்கும்படி –
உறங்குகிற போது நம்மை நோக்குகிறவன்
உணர்ந்தாலும் நம்மை நோக்கும் என்று கந்தாடை யாண்டான் –

——————————————————–

வார்த்தை -368-

கடக்கத்தப் பிள்ளையைக் கடக்கத்தனொரு பிராமணன் –
உமக்கு தேக யாத்ரை நடக்கிறபடி என் -என்று  கேட்க –
ஸ்வ ரஷண விஷயமாக சித்திரை மாசத்திலே மூக்கு நீர் முன்னடியிலே விழ
ஏற்றம் இறைக்கிற உனக்கு இடுகிற எம்பெருமான்
ந்யச்த பரனாய் அணையிலே சாய்ந்து -சார்ந்து -கிடக்கிற எனக்கு இடச் சொல்ல வேண்டுனோ -என்றார் –

————————————————————

வார்த்தை -369-

ஒரு பிராமணன் இறப்பில் நின்றும் விழ -அவ்வளவிலே சிறியாச்சான் அங்கேற எழுந்தருள 
பிராமணன் -ஆச்சான் -பெருமான் என்னைத் தள்ளினபடி கண்டீரே -என்ன –
அங்கன் அன்று காண் –
கர்மத்தாலே நாம் விழுந்தோம் -பெருமாள் எடுத்தார் -என்று நினைத்து  இராய் -என்று அருளினார் –

———————————————————-

வார்த்தை -370-
ஒருநாள் திரு வீதியிலே பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் திரளாக எழுந்து அருளி இருந்து
பகவத் குண அநுசந்தானம் நடவா நிற்க –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -நாம் பண்ணின ஸுக்ருதம் கண்டதே – இப்படி இருக்கப் பெற்றோமே -என்ன
சிறியாச்சான் எழுந்து இருந்து -இது நெடுநாள் பெருமாள் ரஷகர் என்று சிஷித்தோம் –
இப்போது ஒரு ஸுக்ருத தேவர் உண்டாவதே என்றார் –
எம்பெருமான் ரஷகர் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று –
எம்பெருமான் ரஷ்யம் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று-எங்கனே என்னில்
ரஷகன் என்று இருந்தானாகில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு சேராது –
ரஷ்யம் என்று இருந்தானாகில் ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்துக்கு சேராது –

————————————————————–

வார்த்தை -371-

எம்பெருமான் சாபேஷன்–
பிராட்டியும் ஆசார்யனும் பிரபன்னர்களும் சாபேஷ நிரபேஷர்கள் –

————————————————————

வார்த்தை -372-
ஆழ்வான் காலத்திலே சந்த்யாவந்தனம் பண்ண எழுந்து அருளா நிற்க –
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அருளிச் செயல் த்வநியைக் கேட்டுக் கொண்டு நிற்க –
கூட எழுந்து அருளினவர்கள் அனுஷ்டானத்துக்கு காலம் தப்புகிறதே -என்ன
சந்த்யா வந்தன வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளலாம் –
பகவத் அனுபவ வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்த சாத்யமன்று -என்று அருளினார் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 26, 2013

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை
மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தார்என்று அல்லால், அன்றுமுதல்
இன்று அறுதியா

வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்என்
பதுஇல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல்
அடியவர் ஆமினோ.

    பொ-ரை : ‘வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகிற குமிழி போன்று அழிந்து நரகத்திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே; அது அல்லாமல், அன்று முதல் இன்று வரையிலும் வாழ்ந்தவர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பது இல்லை; ஆதலால், நிலை பெற்ற பேற்றினைப் பெறவேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய இறைவனுக்கு அடியவர் ஆகுங்கோள்,’ என்கிறார்.

    வி-கு : ‘வாழ்ந்தது மொக்குளின் மாய்ந்துமாய்ந்து ஆழ்ந்தார் என்பதே; அது அல்லால், வாழ்ந்தே நிற்பர் என்பது அன்று முதல் இன்று அறுதியா இல்லை ; ஆதலால், நிற்குறில், அண்ணல் அடியவர் ஆமின்,’ என்க. ‘நிற்குறில்’ என்பது, நிற்க உறில் என்பதன் விகாரம்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 2‘மருத்துவர்கள் பிழைத்தாரை எண்ணுமாறு போன்று இறந்தவர்களை எண்ணுகிறது என்? வாழ்ந்தவர்களும் சிலர் இலரோ?’ என்ன, ‘அது இருந்தபடி கேட்கலாகாதோ பின்னை?’ என்கிறார்.

    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது – வாழ்ந்தாராய் இருக்கிறவர்கள் வாழ்ந்தது எல்லாம். 3அவர்கள் வாழ்ந்தார்களாக நினைத்திருக்கிறார்கள்; இவர் ‘கேடு’ என்று இருக்கிறார். அவர்கள் வாழ்வாக நினைத்திருக்கிற இதனை அன்றோ,இன்னம் கொடுப்பாயோ?’ என்று கேடாகவே நினைத்திருக்கிறது இவர்? மா மழை மொக்குளின் – பெருமழைக் குமிழி போலே. 2‘தண்ணீரில் தோன்றுகிற குமிழிக்குச் சமம்’ என்றார் பிறரும். ‘பின் விழுந்த துளியோடே நசிக்கும்,’ என்பார், ‘மாமழை’ என்கிறார். மாய்ந்து மாய்ந்து – அழிந்து அழிந்து. ஆழ்ந்தார் என்று அல்லால் – உயிர் வாழ்கின்ற நாள்களில் செய்த பாபத்தாலே கீழான கதியில் வீழ்ந்து தறைபடுமது ஒழிய. அன்று முதல் இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை – படைப்புக்காலம் தொடங்கி இற்றை அளவும் அவர்கள் வாழ்ந்தவர்கள் ஒருபடிப்பட வாழ்ந்தே போந்தார்கள் என்னும் இந்தத் தன்மைதானும் முதலில் இல்லை.

    நிற்க உறில் – நிலை நின்ற பேற்றினைப் பெறவேண்டி இருந்தீர்களேயாகில். ஆழ்ந்து ஆர்கடல் பள்ளி அண்ணல் – ஆழ்ந்து பரந்த கடலைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன். திருமேனியின் சௌகுமார்யத்துக்குத் தகுதியாக உறுத்தாதபடியான ஆழத்தையுடைத்தாய், திவ்ய அவயவங்களைப் பரப்பிக்கொண்டு கண்வளர்கைக்குத் தகுதியான பரப்பையுடைத்தாய் இருக்கின்றமையைத் தெரிவிப்பார், ‘ஆழ்ந்து ஆர்’ என்கிறார். ‘திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறது கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அல்லவே? நம்மால் பற்றப்படுமவன் ஆகைக்காக அன்றோ? ஆன பின்னர், அவன் நினைவோடே சேரச் சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினைப் பற்றுங்கோள்,’ என்பார், ‘கடற்பள்ளி அண்ணல்’ என்கிறார். அடியவர் ஆமினோ – அவன் தலைவனாயிற்ற பின்பு நீங்கள் உங்கள் அடிமையை இசையப் பாருங்கோள். அன்றிக்கே, அடிமை அல்லாதது ஒரு பொருளை இன்று அடிமை ஆக்கிக்கொடுத்ததாக நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.

முடிந்தவர்கள் எண்ணுகிறது என்
ஜீவித்தவர்கள் சிலர் உண்டே
ஸ்திரமாக இருந்தவர்கள் இல்லையே
வாழ்ந்தார்கள் இல்லை விநாசம்
கெடுப்பார்கள் கெ ட்டு
பல நீ காட்டு கெ டுப்பாயோ
சம்சாரத்தில் வாழ்வு கேடு இவர் நினைவு
மா மழை மொக்குள் போலே அழிந்து
ஒருபடிப் பட ஜீவித்தவர்கள் இல்லை
நிலை நின்ற புருஷார்த்தம்
பரந்த கடலில் சயனம்
கண் வளர்ந்து அருளி
நினைவுடன் சேர ஸ்வரூப அநுரூப
சேஷி அவன்
சேஷ பூதர் ஆகும்
அடியவர் ஆமினோ
என்றும் அடிமை தான் -பகவத் அபிப்ராயத்தால் இன்று அடிமை –

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 26, 2013

பணிமின் திருவருள் என்னும்அம் சீதப்பைம் பூம்பள்ளி
அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுஉண்டார்
துணிமுன்பு நாலப் பல்ஏழையர் தாம்இழிப்பச் செல்வர்
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

    பொ-ரை : ‘திருவருள் புரிதல் வேண்டும் என்று கூறுகின்ற அழகிய மிருதுவான கூந்தலையுடைய பெண்களோடு அழகிய குளிர்ந்த பரந்த பூக்களாலான படுக்கையிலே சேர்க்கையால் உண்டான இன்பமாகிய அமுதை உண்டவர்கள், அந்நிலை கெட்டு, துணி முன்னே தொங்கவும் பெண்டிர் பலர் இழித்துக் கூறவும் செல்லுவார்கள்; ஆதலால், நீலமணி போன்று பிரகாசிக்கின்ற திருமேனியையுடைய நம் மாயவனது திருநாமத்தைச் சொல்லி வாழுங்கோள்,’ என்கிறார்.

    வி-கு : ‘என்னும் குழலாரோடு பூம்பள்ளியிலே இன்ப அமுது உண்டார்’ என்க. உண்டார் – பெயர். ‘உண்டார் செல்வர்’ என முடிக்க. ‘நால இழிப்பச் செல்வர்’ என்க. செல்வர் – முற்று. இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும் வியாக்கியானம் இன்பச் சுவையிலே தோய்ந்தது; நவில்தொறும் இன்பம் பயப்பது. ‘அம் சீதம் பைம்பூம்பள்ளியிலே கிடக்கும் அணி மென்குழலாரைப் பார்த்துத் ‘திருவருள் பணிமின்’ என்னும்  இன்ப அமுது உண்டார்’

என்றும், கலவி இன்ப அமுது உண்டார்’ என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் காணல் வேண்டும் என்பது அப்பெரியார் திருவுள்ளம். இதனை வியாக்கியானத்தில் காணலாகும்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘செல்வ நிலையைப் போன்றே மகளிருடைய சேர்க்கையும் நிலை அற்றது,’ என்கிறார்.

    ‘பணிமின் திருவருள் என்னும் அணி மென் குழலார்’ என்று 2முன்புள்ள முதலிகள் நிர்வஹிப்பர்கள்; இவர்கள் நிர்வாஹத்தில் ‘என்னும்’ என்னும் எச்சம் ‘குழலார்’ என்னும் பெயருக்கு அடைமொழி. பட்டர், அங்ஙன் அன்றிக்கே, ‘திருவருள் பணிமின் என்னும்’ என்னும் இதனை ‘இன்பக் கலவி அமுது உண்டார்’ என்றதனோடே சேர்த்து அருளிச் செய்வர். பணிமின் திருவருள் என்னும் – தான் இராச்சியத்தை அவர்களுக்குப் 3படுக்கைப்பற்று ஆக்கி, அவர்களைப் படுக்கையிலே வைத்துத் தான் தாழ நின்று ‘திருவுள்ளத்தில் கிடக்கிறதை அருளிச்செய்யலாகாதோ?’ என்னும்; 4தன்னைத் தொழுது வணங்குகின்றவர்கள் புறம்பே உண்டே? இனி. இன்பச் சுவையாவது, தான் இவர்களுக்குத் தாழ நிற்கையே அன்றோ? அம் சீதம்

பைம்பூம்பள்ளி – காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து பரந்த பூக்களாலே செய்யப்பட்ட படுக்கையிலே. ‘அவன் இப் படுக்கையிலே வைத்துத் ‘திருவருள் பணிமின்’ என்றால், அவர்கள் செய்வது என்?’ என்னில், அணி மென்குழலார் – அவன் கொண்டாடுகிற கொண்டாட்டத்தில் விருப்பம் இன்றி, ஆபரணத்தைத் திருத்துவது குழலைப் பேணுவது ஆகாநிற்பர்கள். இன்பக்கலவி அமுது உண்டார் – அவர்களுடைய 1அந்த ஊடலை முதலாகக் கொண்டதான கலவியால் வந்த ஆனந்த அமிருதத்தை உண்டவர்கள். அன்றிக்கே, 2‘விருப்பம் இன்மையாகிற அமிருதத்தை உண்டவர்கள்’ என்னுதல். 3‘அல்லி மலர் மகள் போக மயக்குகளைப் பின்பற்றுகிறார்கள்’ என்பதனைத் தெரிவித்தபடி.

    4வேறு ஒருவன் வந்து அவர்களைக் கொண்டு சென்று இன்பக்கலவி அமுது உண்ணாநிற்குமோ? இவன் பின்னைத்தன்னுடைய சரீரத்தைக் காப்பதற்காக அவர்கள் பக்கலிலே சென்று இரக்கத் தொடங்கும். துணி முன்பு நால – 1‘அந்தத் திரிஜடன் என்னும் பிராஹ்மணன் மனைவியின் வார்த்தையைக் கேட்டு உடுத்துவதற்குப் போராத துணியை உடுத்திக்கொண்டு புறப்பட்டான்,’ என்கிறபடியே, பின்பு கொண்டு இணைக்க எட்டம் போராமையாலே முன்னே தொங்காநிற்கும். பல் ஏழையர்தாம் இழிப்ப –2இவன்பக்கல் தங்களுக்கு உண்டான அன்பு தோன்றச் 3செத்துக் காட்டுவர்கள் முன்பு; இப்போது, தங்களை வைத்துக்கொண்டு இருப்பவனுக்குப் பிரியமாக, இவன் இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதி இல்லாதவன் என்பதனையும், இவனிடத்துள்ள உலோபத் தன்மையையும் சொல்லி விருப்பம் இல்லாத சொற்களைக் கூறாநிற்பார்கள். இவர்கள் தாம் பலர் ஆதலின், ‘பல் ஏழையர்’ என்கிறார். செல்வர் – ‘நம்மிடத்துள்ள அன்புத்தளை அன்றோ இவர்களை இங்ஙனம் சொல்லச் செய்கிறது?’ என்று, அவர்கள் கூறிய வார்த்தைகளையும் புத்தி பண்ணாதே செல்வார்கள்;

என்றது, 1‘முன்பு ‘திருவருள் பணிமின்’ என்ற போது ஊடல் காரணமாகக் கூறிய வார்த்தையைப் போன்றதாக இதனையும் நினைத்துச் செல்வர்,’ என்றபடி. ‘நன்று; இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதி இன்றிக்கே இருக்க, செல்லுதற்குக் காரணம் என்?’ எனின், ‘கிழத்தன்மை அடைந்தவனுக்குத் தலைமயிர்கள் உதிர்கின்றன; பற்கள் விழுகின்றன; கண்களின் பார்வை குறைகின்றது; ஆசை ஒன்று மாத்திரம் ஒருவிதக் கேடும் இன்றி இருக்கின்றது,’ என்னக் கடவது அன்றோ?

    ‘ஆன பின்பு, 2‘பக்தாநாம் – ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப் பாருங்கோள்’ என்கிறார் மேல் : மணி மின்னு மேனி – நீலமணி போன்று காந்தியையுடைத்தான திருமேனி; அன்றிக்கே, ‘நீலமணியைக்காட்டிலும் விஞ்சின அழகையுடைத்தான திருமேனி’ என்னுதல். ‘நன்று; திருமேனி பத்தர்களுக்காகவே இருக்குமோ?’ எனின், 3‘இரண்டு சரீரங்களைக் கொடுத்து உதவிய மகாத்துமாவான அந்த அனுமானுக்கு, விலக்காததுஒரு சமயத்தைப்பெற்று, என்னால் கொடுக்கப்பட்டதான இந்த ஆலிங்கனமானது எல்லாக் கொடைக்கும் சமானமாகக் கடவது என்று 1கொடுக்கும்படி அன்றோ? நம் மாயவன் – அடியார்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி எல்லை காணப்போமோ? ‘இப்பேற்றுக்குச் செய்ய வேண்டுவது என்?’ எனில், பேர் சொல்லி வாழ்மினோ – செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். 2வாழ்க்கைக்கு ஒரு பேரோ! ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இதுதன்னுடைய இனிமை இருப்பது?

கூந்தல் உடைய பெண்கள் –
படுக்கையில் -அனுபவித்தவர்
முன்பு துணி தொங்க
ஸ்திரீகள் கேலி பண்ண
பிரகாசிக்கும் திருமேனி உடைய
பணிமின் திருவருள்
பட்டர் இன்பகலவி சேர்த்து அர்த்தம்
திருவருள் பணிமின் -என்ன திரு உள்ளம் ஸ்திரீகள் கேட்பதாக பூர்வர்கள் நிர்வாஹம்
ராஜா வார்த்தையாக ஸ்திரீகள் இடம் கட்பதாக பட்டர் நிர்வாஹம்
போக தசையில் தட்டு மாறிக் கிடக்கும்
லோகம் இவன் காலில் கிடக்க இவன் ஸ்திரீகள் காலில் கிடப்பான்
படிக்கை தனம் மஞ்சக்கானி ஸ்திரீ தனம் ஆக்குவிப்பானாம் தன்னுடைய அரசை
ரசிகத்வம் இவன் தாழ விட்டுக் கொண்டு
குளிர்ந்த பூவாலே பரந்து படுக்கையிலே வைத்து திருவருள் பனிமின்
இவன் சொல்ல அவர்கள் பேசாமல் குழல் பேணி
கொண்டாட்டம் அநாதரித்து இருப்பார்கள்
அணி ஆபரணம் திருத்தி
குழல் பேணி இருப்பார்கள்
இப்படி இருந்தாலும் அதையே தனக்கு பரம போக்யமாக கொண்டு இருப்பவன்
இன்பக்கலவி
அங்கீகாரம் பண்ணா விடிலும்
அநாதர அம்ருத பானம் செய்து –
அதர அம்ருத பானம் கிடைக்காமல்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் போலே இன்றி –
துணி முன் சென்று பிச்சை அவர்கள் இடமே கேட்டு
பின்னே இணைக்க நீளம் போதாதால் முன்னே
பின்னே கொண்டு வந்து இணைக்க
[முடியாமல்
பல ஸ்திரீகள் முன்பு
முன்பு சாபல்யம் தோன்ற செற்று காட்டுவார்கள் ப்ரீதி உடன்
இப்பொழுது தங்களுக்கு ஸ்வீகரித்த ராஜாவுக்கு பிரியமாக கேலி பண்ணி
எலும்பும் தோலுமாக கொண்ட உடம்பு ஆசை கொண்டு
செல்வர் -சென்று கொண்டு இருப்பார்கள் –
ப்ரீதி உடன் சொல்கிறார்கள் என்று நினைத்து போருவார்கள்
முன்பு செல்வர் -இப்பொழுது செல்வர் துணி முன்பு நாள
அநாதரம் தோற்ற

ஆசை மட்டும் கேடு இன்றி -இருக்கிறார்கள் –
பின்னே செல்வர்
ஈசி போமின் நாசமான பாசம் விட்டு பதறி வணங்குமின்
இங்கு இராமின்
வேலைக்காரி விட் டு துரத்தி
பக்தாநாம் -என்கிற உடம்பு -அடியவர்க்கு ஜிதந்தே ஸ்தோத்ரம்
‘தேவரீருடைய திவ்யாத்ம சொரூபமானது தேவரீருக்கு அன்று; திவ்ய
மங்கள விக்கிரஹமும் தேவரீருக்கு அன்று; திருவாழி முதலான
ஆயுதங்களும் தேவரீருக்கு அன்று; அப்படியிருந்தும், திவ்ய மங்கள
விக்ரஹத்தையுடையவராகவே இருக்கிறீர்; தேவரீர் பத்தர்களுக்காகவே
பிரகாசிக்கின்றீர்,’ என்பது அச்சுலோகத்தின் பொருள்.
ஸ்ரீராமா. யுத். 1 : 13. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த
பொருள் பின்வருமாறு : ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது
என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:
(விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே.  ‘இச்சா க்ருஹீதம்’
என்கையாலே,  கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது; ‘அபிமதம்’
என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது; சர்வ ஸ்வபூத : –
இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை
கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே;
சர்வஅபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது! மற்றுக்
கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை
விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே. மயா காலமிமம் பிராப்ய
தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று
கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று குறைபட்டிருந்தவர், இவன்
விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை
போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள்
ஆக்கினான்; ‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற
பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி
உபகரித்தார்,’ என்பது.

திருவடிக்கு கொடுத்தது
ஏஷக -இத திருமேனி -தான் அனுபவித்த திவ்ய மங்கள விக்ரஹம்
இச்சா க்ருஹீதம் -கர்ம நிபந்தனம் இல்லை
தனக்கும் போக்கியம் பக்தர்களுக்கு போக்கியம் என்பதால்
அபிமதம் -திருவடிக்கு கொடுத்தான்
எல்லாமாய் இருக்கிற
மற்ற ஒன்றை கொடுத்தாலும் இதை கொடுத்தது போலே ஆகாதே
சர்வ அபாஸ்ரயமான திருமேனி
பரிஷ்வங்கம் -ஆலிங்கனம்
அமிர்தாசிகளுக்கு புல்லை இட ஒண்ணாதே
பாவோ நன்யாத்ரா கச்சதி -என்று இருந்தவர் –
பரம பதம் -நீ உண்டா
சக்கரவர்த்தி திரு மகன் உண்டா
நினைத்தபடி சேவை சாதிப்பானா
நான் உண்டா இப்படிப்பட்ட நான்
என்ன ரூபமும் கொள்ளலாமே
கைங்கர்யம் செய்ய
இந்த நான் -உம்முடைய திருமேனி ஆலிங்கனம் செய்த நான் –இதுவே வேண்டும்
ஆலிங்கனம் பெற்ற உடம்பு
அங்கு ஆலிங்கனம் செய்தாலும் இதற்க்கு ஒப்பு இல்லை –
இத உடம்பு விரும்பினவனுக்கு இதை தானே கொடுக்க வேண்டும்
விலக்காமை சமயம் பார்த்து இத்தை கொடுத்தார்
ஒரு படி கொடுத்தாராய்
இரண்டு உடம்பு கொடுத்தவருக்கு ஒரு உடம்பு கொடுத்தால் போதுமா
வேணி கொண்டு தற்கொலை -பிராட்டி உளள் ஆக்கி
சமுத்ரம் முழுகி பிராணன் விட பெருமாள் நினைக்க
பல படி உபகரிகையாலே
சஞ்சீவி
பரத ஆழ்வான்
இப்படி பல படி உபகரிக்கை
ஒரு படி உபகரிதார்
நம் மாயன் ஆஸ்ரித விஷயத்தில் அவன் இருக்கும் படி
வாழ்வுக்கு ஒரு பேரா
ஒரு பேர் சொன்னால் வாழ்வு
அச்சுவை இச்சுவை –
திருநாமம் சொல்லி
வாழ்மினோ
மற்றவை தாழ்வு

பேர் சொல்லி வாழ்மினோ’ என்பதற்கு மேலே உபாய பரமாகப் பொருள்
அருளிச்செய்தார். பேர் சொல்லுகைதானே வாழ்ச்சியாய் இருக்கும் என்று
உபேய பரமாகப் பொருள் அருளிச்செய்கிறார், ‘வாழ்க்கைக்கு ஒரு பேரோ!’
என்று தொடங்கி. ‘அச்சுவை பெறினும்’ என்ற இது, திருமாலை 2-ஆம்
பாசுரம். என்றது, ‘வாழ்வு என்று வேறு ஒன்று வேண்டுமோ? ‘எனக்கு
என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம்’ என்கிறபடியே.
‘திருநாமத்தைச் சொல்லுகைதானே போக்கியமாய் இருக்குமே அன்றோ?’
என்றபடி.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 26, 2013

நினைப்பான் புகின் 1கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்குஅற மாய்தல்அல் லால்மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ.

    பொ-ரை : ‘நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கலிலே உள்ள நுண்மையான மணல்களைக்காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றனையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற கிருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கள்,’ என்றவாறு.

    வி-கு : ‘நினைப்பான் – வினையெச்சம். எக்கல் – மணல் மேடு. ‘ஆண்டு கழிந்தவர் பலர்’ என்க. மனைப்பால் – மனை இடம்.

    ஈடு : நாலாம் பாட்டு. 2‘செல்வத்தின் நிலையாமையும் மதிப்பு அறுகையும் கிடக்கச்செய்தே, இன்பத்தை அனுபவிக்கின்றவர்களுடைய நிலையாமையாலும் அவனைப் பற்றவேண்டும்,’ என்கிறார்.நினைப்பான் புகின் – நினைக்கப்புக்கால். ‘புகின்’ என்றதனால், 1கடலிலே இழிவாரைப்போல, நினைத்ததாய்த் தலைக்கட்ட ஒண்ணாதபடியாய் இருக்கிற இருப்பும், தாம் உலக வாழ்வினை நினையார் என்னுமிடமும் தோற்றுகின்றன. ‘ஆயின், இப்பொழுது நினைக்கிறது என்?’ எனின், ஆனாலும், 2பிறருடைய நலத்திற்காக நினைக்குமது உண்டே அன்றோ? கடல் எக்கலில் நுண்மணலின் பலர் – அலைவாய் எக்கலில் நுண்ணிய மணலிற்காட்டில் பலர் ஆவார். ‘இப்படியாண்டு முடிந்து போகிறவர்கள்தாம் யார்?’ என்னில், ‘சிறிய மனிதர்கள் அல்லர்; 3‘பிரமாவினுடைய ஒரு பகலை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் ஓர் இரவை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் அறிகிறார்கள்,’ என்கிறபடியே, 4ஆயிரம் சதுர்யுகம் கூடியது ஒரு பகலாய், இப்படி இராத்திரியாய், இங்ஙனம் நூறு ஆண்டு இருந்து துவிபரார்த்தகாலம் உயிர் வாழ்ந்து முடிந்து போகும் பிரமன் முதலானோர்’ என்கிறார் மேல்; எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர் – பல யுகங்களும் இவ்வுலகையாண்டு, 5இது குறியழியாதே இருக்க, இதனை ‘என்னது’ என்று அபிமானித்து முடிந்து போனவர்கள். ‘கழிந்தவர் கடல் எக்கலில் நுண் மணலின் பலர்,’ எனக்

கூட்டுக. 1‘உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண்மணலிற்பலர்’ என்கிறார்.

    மனைப்பால்  மருங்கு அற – அசலிட்டுப் பக்கத்தில் உள்ளார்க்கும் நாசமாம்; மனைப்பால் – மனை இடம். மருங்கு – அயல். சிறுக வாழ்ந்தானாகில், தன்னளவிலே போம்; பரக்க வாழ்ந்தானாகில், தன் அயலில் உள்ளாரையும் கொண்டு போம்; பெருமரம் முரிந்தால் அருகு உள்ளவற்றையும் கொண்டு போம் அன்றோ? ஆதலின், ‘மனைப்பால் மருங்கு அற’ என்கிறார். மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் – 2இப்படி முடியுமது ஒழிய நிலைத்திருப்பாரை ஒருவரையும் கண்டிலோம். ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில், பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமின் – ‘பனைபோலே இருக்கையாலே அச்சத்தை உண்டாக்குகின்ற காலையுடைத்தான மதயானை உண்டு, குவலயாபீடம்; அதனை முடித்தவன் திருவடிகளைப் பற்றுதற்குப் பாருங்கோள். 3அவன் உங்களுடைய பிரபலமான தடைகளைப் போக்க, நீங்கள் அவன் காலிலே தலை சாய்க்கப் பாருங்ககோள்,’ என்கிறார். மேற்பாசுரத்தில். 4‘மாம்’ என்றபதத்தின் பொருள் சொல்லப்பட்டது: இப்பாசுரத்தில் ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது.1

ஐஸ்வர்யம் மட்டும் நிலை இல்லை எனபது இல்லை
போக்தாவும் நிலை இல்லையே
சமுத்ரம் நுண்  மணல் போலே பல ஜீவாத்மாக்கள்
கோடி கணக்கான ஆண்டுகள் ஆண்டு மாய்ந்து போனவர்கள்
பனை மரம் போன்ற காலை கொண்ட குவலயாபீடம் யானை செற்றவன் தாள்
நினைக்க முடியாத சம்சாரம் -அளவு
நினைக்க முடியாது –
தாம் லோக யாத்ரை நினைக்க வேண்டாதபடி உள்ளது –
அலை வாரி வரும் மணல் போலே அநேகர்
சூத்திர மனுஷ்யர் அல்லர்
ஆயிரம் சதுர யுகம் பிரமாதிகள் -கூட இப்படி -கோடி பிரம்மாக்கள்
சகச்ர யுக பர்யந்தம்
15 நிமிஷம் ஒரு காஷ்டை; 30 காஷ்டை ஒரு கலை; 30 கலை ஒரு
முகூர்த்தம்; 30 முகூர்த்தம் ஒரு நாள்; 15 நாள் ஒரு பக்ஷம்; 2 பக்ஷம் ஒரு
மாதம்; 2 மாதம் ஒரு ருது; 2 ருது ஓர் அயனம்; 2 அயனம் ஒரு வருஷம்;
இப்படி மனித வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருஷம்; தேவ வருஷம்
12000 கொண்டது ஒரு சதுர் யுகம்; 71 சதுர் யுகம் ஒரு மந்வந்தரம்; 14
மந்வந்தரம் ஆயிரம் சதுர்யுகம்; இது பிரமனுக்கு ஒரு பகல்; இரண்டாயிரம்
சதுர்யுகம் பிரமனுக்கு ஒரு நாள். இந்த நாள்களால் மாதங்களையும்,
மாதங்களால் வருஷங்களையும் பெருக்கி, அதனால் வருகின்ற வருஷம் நூறு
ஆனால், பிரமனுடைய ஆயுள் முடிவாகும் என்பர்.

43 20 000 வருஷம்
12000 தேவ வருஷம் இரு சதுர யுகம்
1000 சதுர யுகம் ஒரு பகல்
இப்படி ஒரு ராத்திரி
இங்கனே நூறு ஆண்டு இருந்து ஜீவித்து முடிந்து போன பிரமாதிகள் எத்தனை பேர்
லோகம் குறி அழியாது இருக்க -இவர்கள் மாய்ந்து போக –
கங்கை -மழை சொட்டு போலே
பிதாமகா பிரம்மாக்கள் எண்ணிக்கை இன்றி
மனைப்பால் மருங்கு அற -சேர்த்து
சிறுக ஜீவித்தான் ஆகில் தன்னடையே போம்
பெருக ஜீவிதான் ஆகில் அனைவரையும் அழித்து கொண்டு போம்
களிறு அட்டவன் திருவடிகள் –
பிரதிபந்தம் போக சித்தமாக உள்ளவன் –
கீழில் பாட்டில் மாமின் அர்த்தம்
இதில் அஹம் அர்த்தம்
மாம்’, ‘அஹம்’ என்ற இரண்டும் சரம சுலோகத்திலுள்ள பதங்கள். மேல்
பாசுரத்தில், ‘கண்ணன்’ என்றதனால், சௌலப்யம் தோன்றுகிறது. அதனால்,
‘மாம்’ என்ற பதத்தின் பொருள் கூறப்பட்டது,’ என்கிறார். இப்பாசுரத்தில்,
‘மதகளிறு அட்டவன்’ என்றதனால் ஆற்றல் தோன்றுகிறது. அதனால்,
‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது என்கிறார்.
கண்ணன் கழல்கள் கீழே சொல்லி
கார்யம் செய்பவன் களிறு அட்டவன் -இங்கே அருளுகிறார்

கையும் உழவுகோலும், பிடித்த சிறுவாய்க் கயிறும், சேநாதூளி தூசரிதமான
திருக்குழலும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய
வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்.

(சூத். 218.)

2. ‘சர்வஜ்ஞனாய், சர்வசக்தியாய், பிராப்தனான நான்’, ‘கீழ் நின்ற நிலையும்,
மேல் போக்கடி அறிகைக்கும் அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும்
ஏகாந்தமான குண விசேஷங்களையும், தன் பேறாகச் செய்து
தலைக்கட்டுகைக்கு ஈடான பந்த விசேஷத்தையும் காட்டுகிறது,’ ‘தனக்காகக்
கொண்ட சாரத்ய வேஷத்தை அவனையிட்டுப் பாராதே தன்னையிட்டுப்
பார்த்து, அஞ்சின அச்சந்தீரத் தன்மையை ‘அஹம்’ என்று காட்டுகிறான்,’
என்பன ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ சூக்திகள்;

(முமுக்ஷூப்படி,244, 245, 246.)

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

February 26, 2013

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.

    பொ – ரை : ‘தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடையவர்களாகி அரசர்கள் தாங்கள் தொழாநிற்க, இடியைப்

போன்ற முரசங்கள் வீட்டின் முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு) பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்’ என்பதாம்.

    வி-கு : ‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க; ‘ஆதலின், கழல்கள் நினைமின்’ என்க. நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1இராசாக்கள், தங்கள் காலிலே விழுந்து கிடந்தால் அதனை ஒரு பொருளாக நினைத்து நோக்காத மதிப்பினையுடையவர்கள், 2‘ஒரு சேதநன் – மகன், என்று எண்ண முடியாதபடி மதிப்பு அறுவர்கள் என்கிறார்.

    அடிசேர் முடியினர் ஆகி – தன்னோடு ஒக்க ‘அரசு’, என்று இருந்த இராசாக்கள் தன் காலிலே சேர்க்கப்பட்ட முடியையுடையராய். அரசர்கள் – இராசாக்கள். தாம் தொழ – தாங்கள் அறிந்ததாகத் தொழும் இத்தனை போக்கி, ‘இவன் இப்படித் தொழுதான்’ என்னும் நினைவு அவனுக்கு இல்லை’ என்பார், ‘தாம் தொழ’ என்கிறார். 3‘இன்று ஸ்ரீபாதத்திலே தலை தாக்கத் தொண்டன் இடப்பெற்றோம்,’ என்று இவன்

தான் நினைத்திருக்கும் இத்தனை என்பதாம். 1‘தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே, ‘பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ? ‘இவன் இப்படித் தொழ, அவன் செய்தது என்? என்னில்,

    இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – ‘இன்ன அரசன் காணப் புகுகிறான்’ என்று ஓலக்கம் இருந்து, நாடகச்சாலையில் உள்ளாரை அழைத்து அருளப் பாடிட்டு, நாட்டில் மரங்களை அடையத் தொளைத்துத் 2தோலை மேவி அதனை இடியைப் போன்று ஒலிக்கச் செய்து விருப்பு இன்றியே இருப்பான். ‘இன்னான் வந்து காலில் விழுந்து கிடந்தான்; அவன் இதனை விரும்பாமல் கூத்துக் காண்பது பாட்டுக் கேட்பது ஆனான் என்று உலகத்திலே பிரசித்தமாக வேண்டும்’ என்று ஆயிற்று இவன் இருப்பது. 3அங்கு நிற்கின்ற தூணைக் காட்டிலும் ஒரு வாசி இல்லை காணும் இவருடைய நினைவால்: ஆதலின், ‘இருந்தவர்’ என்கிறார். ‘இப்படி இருந்தவர்கள் என் ஆவர்?’ என்றால், பொடிபடுவர் என்கிறார் மேல் : பொடி சேர் துகளாய்ப் போவர்கள் – ‘தனக்கு’ என்று ஓர் தன்மை இன்றிக்கே ‘பொடியோடே சேர்ந்த தூளி என்று வேறு ஒன்றனோடே சேர்த்து நிரூபிக்க வேண்டும்படி ஆவர்கள். என்றது, ‘தம் காலிலே ஒருவன் குனிந்தால் அநாதரிக்கும்படியான

மதிப்புடையவர், தம் தலையிலே ஒருவன் அடி இட்டால் ‘நாம் இவன் தலையிலே அடி இட்டோம்’ என்று நினைக்க வேண்டாதபடி சிறிய துகளாய்ப் போவர்கள்’ என்றபடி.

    ஆதலின் – பொருளின் உண்மை நிலை இதுவான பின்பு. நொக்கு என – சடக்கு என. கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமின் – 1முடி கொடுத்தால் மாலையும் கொடுக்க வேண்டுமே! திருமேனியின் பரிசத்தால் நாட்செல்ல நாட்செல்ல வாசனை ஏறி வாரா நின்றுள்ள திருத்துழாய் மாலையைத் திருமுடியிலேயுடையனாய் அடியார்கட்கு எளியவனான கிருஷ்ணன் திருவடிகளை நினைக்கப் பாருங்கோள். 2‘நினைத்தல் மாத்திரம் போதியதாமோ? துதிசெய்தல் வேண்டாவோ?’ எனின், நினைத்த மாத்திரத்தில் கொண்டு முழுகுமே அன்றோ திருவடிகளின் இனிமை? அன்றிக்கே, ‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல். என்றது, 3‘யமன், கையில் பாசத்தைத் தரித்த தன்னுடைய கிங்கரனைப் பார்த்து, ‘பகவானிடத்தில் பத்தியுள்ளவர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்;பாகவதர்களுக்கு எஜமானன் அலன் என்று காதின் அடியில் சொன்னான் அல்லவா?’ என்கிறபடியே, யமன் முதலானோர் அஞ்சும்படியான மதிப்பைப் பெறுவர்,’ என்றபடி.

திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவாராய்ப் போதுமின்கள் என்றான் நமனுந்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’

(நான்முகன் திரு. 68)

  ‘காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ!நின் நாமங் கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே!’

(திருமாலை. 1)

  என்னும் திருப்பாசுரங்களை அநுசந்திக்கத் தகும்.

ராஜாக்கள் தங்கள் காலில் விழுந்து இருந்தால் –
திரும்பி பார்க்காமல் அனாதரித்து கர்வம் கொண்டு
சேதனன் என்று மதிகபடாமல் தாழ்ந்து போகிறார்கள்
திருவடிகள் ஒன்றே சார்வு
ராஜாக்கள் காலில் விழுகிறார்கள்
அடி சேர் முடியினன்
இடி சேர் முரசங்கள் முற்றத்தில் ஒலிக்க
இடி ஓசையில் கவனம் செலுத்தி அநாதரித்து வேறு ஒன்றில் கவனம்
யுத்தம் வந்தால் பொடி சேர் துகள் போலே போவார்கள்
கண்ணன் -கடி சேர் துழாய் -திருவடி நினையும்
ராஜாக்கள் முடி தனது கலீல்
ராஜாதி ராஜா சர்வேசா காலில் ராஜாக்கள் விழ
தாம் தொழ -அரசர்கள் தொழ -அரசர்கள் தாம் தொழ –
இவர்கள் சேவித்தார்கள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை –
தண்டன் இதான் நாம் நினைக்க எம்பெருமான் அணைத்துக் கொள்கிறான்
இங்கேயே இவன் அநாதரித்து கர்வம் கொண்டு இருக்கிறான்
பக்தன் அடி தோழா -எம்பெருமான் -இப்படி காலில் விழும்படி கிலேசம் படுகிறான்
பரத ஆழ்வான் -சிரஸா வணங்கி -கேட்டதை நிறைவேற்ற வில்லை
பிள்ளை தலையால் இரக்க -செய்து முடிக்கவில்லையே வருந்திய பெருமாள்

ராஜா காலில் விழுவதை தெரிவிக்க –
அனைவரையும் கூட்டி -ஓலக்கம் -அனைவரையும் அருள் பாடிட்டு
நாட்டில் உள்ள மரங்கள் அடைய அழித்து தோலைக் கட்டி முரசு செய்து –
இடி ஒக்க த்வநித் து
காலில் விழுவதை அநாதரித்து கூத்து பாட்டு
நாடகசாலை மக்களை கூட்டி
இவ்வளவு பெருமையாக இருந்தவன் -பொடி பொடி
இருந்தவர் -ஸ்தம்பம் போலே இருந்தவர் –
பொடி சேர் துகள் -தனக்கு ஆதாரம் இன்றி பொடி உடன் சேர்ந்த தூளி போலே ஆவார்
சடக்கென கடி சேர் வாசனை சேர்ந்த துழாய்
செம்மின் முடி திருமால்
முடி கொடுத்தால் மாலையும் கொடுப்பான்
பரிவட்டமும் மாலையும்
திரு மேனி ஸ்பர்சத்தால் கடி சேரும் நாள் நல செல்ல
ஆஸ்ரித சுலபனான கிருஷ்ணன் திருவடிகளை
நினைத்தாலே போதும்
முழுக்கச் செய்து விடும் இனிமை
இவ்வடியை நினைக்கவே சம்சாரம் அடி இறும்
மதுசூதன அடியார் யமனுக்கு பிரபுகள் -அஞ்சும்படி மதிப்பை உடையவர் ஆவார்கள்
ராஜா அடி வணங்கினவரும் வணங்கப்பட்டவரும் பொடி துகள்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.