ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -409-420….

வார்த்தை -409-
அன்ன சாங்கர்யம் –
ஜ்ஞான சாங்கர்யம் –
கால சாங்கர்யம் –
தேச சாங்கர்யம் –
போக சாங்கர்யம் –
இவை த்யாஜ்யம் –

சாங்கர்யம் =கலப்படம்

————————————————————–

வார்த்தை -410-
நடுவில் திருவீதிப் பிள்ளை –
சம்சாரிகள் தோஷத்தை தன் அசக்தியாலே காணாது இருக்கக் கடவன்
சாத்விகருடைய தோஷத்தை இவர்களுடைய சக்தியாலே காணாது இருக்கக் கடவன் –

பத்த லோகத்தில் விலஷண ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இன்ற்க்கே இருக்கை யாவது –
ஔஷத பலத்தாலே அக்நியை ஏந்தி இருக்குமா போலே –
ஜ்ஞானத்துக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச பிரவேசத்திலும்
அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

——————————————————————-

வார்த்தை -411-
ஆச்சான் பிள்ளை -சித்த உபாயனான பிரபன்னனுக்கு அஞ்சு ஸ்பர்சம் பரிஹார்யம் –
அவையாவன –
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன  ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம் –
இவை ஐந்தும் ஐந்து அனுசந்தானத்தாலே போம்

எம்பெருமானுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை அனுசந்திக்க சைவ ஸ்பர்சம் போம்
சமஸ்த கல்யாண குணங்களை அனுசந்திக்க மாயாவாத ஸ்பர்சம் அறும்
ஸ்ரீ ய பதித்வதை அனுசந்திக்க ஏகாயன  ஸ்பர்சம் அறும்
உபாய பூர்த்தியை அனுசந்திக்க உபாயாந்தர ஸ்பர்சம் அறும் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்க விஷயாந்தர ஸ்பர்சம் அறும் –

——————————————————

வார்த்தை -412-
முமுஷுவாய் பிரபன்னன் ஆனவனுக்கு
1-சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரன் விஷயமாகவும் –
2-அநாதிகால ஆர்ஜித பாபத்தை போக்கக் கடவளான பிராட்டி விஷயமாகவும்-
3-மஹா உபகாரகரான ஆசார்ய விஷயமாகவும் –
4-உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயமாகவும் –
5-த்யாஜ்யரான சம்சாரிகள் விஷயமாகவும் –
6-ஸ்வ சரீர விஷயமாகவும் –
7-சரீர சம்பந்திகள் விஷயமாகவும் -பிறக்கும் அநுசந்தானம் –

தேகாத்ம அபிமான நிவ்ருத்திக்கும் –
தேஹாத் வ்யதிரிக்தனான ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வ ப்ரகாசத்துக்கும் –
சேஷ பூதனுக்கு ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்தர்யதினுடைய எல்லைக்கும் –
இப்படி பரதந்த்ரனானவனுக்கு ஸ்வரூப ப்ராப்தமான புருஷார்த்த சித்திக்கும் –
இப்புருஷார்ததுக்கு இடைச் சுவரான அஹங்கார மமகார நிவ்ருத்திக்கும்
அவனே உபாயம் என்று சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரனை அனுசந்திப்பது –

இப்படி ரஷகனான ஈஸ்வரனுடைய கழற்ற ஒண்ணாத ஸ்வா தந்த்ர்யத்தை தலை சாயப் பண்ணி
இவ்வதிகாரி உடைய அபராதம் அவன் ஹிருதயத்திலே படாதபடி பண்ணி
அவனுடைய சீலாதி ஸ்வாபாவங்களை ப்ரகாசிப்பித்து ரஷிக்கும் என்று பிராட்டியை அனுசந்திப்பது-

இம் மிதுனத்தோடே கழற்ற ஒண்ணாதபடி சம்பந்தத்தையும் –
இஸ் சம்பந்தத்துக்கு அநுரூபமாய் -ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞான வர்த்தகர் என்று ஆசார்யனை அனுசந்திப்பது –

சஹ வாஸ யோக்யர் என்றும் -ப்ராப்யாந்தர்க்கரர் என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திப்பது –

பகவத அனுபவ விரோதிகள் என்றும் பாகவத சம்ச்லேஷ விரோதிகள் என்றும் சம்சாரிகளை அனுசந்திப்பது –

பகவத் ஜ்ஞான விரோதி என்றும் விபரீத ஜ்ஞானத்திலே அன்வயிப்பிக்கும் என்றும்
தன்  பக்கலில் போக்ய புத்தியைப் பிறப்பிக்கும் என்றும் -சரீரத்தை அனுசந்திப்பது –

பகவத் ப்ராவண்ய விரோதிகள் என்றும் -அர்த்த காம அபிமானங்களை வர்திப்பிப்பார்கள்
என்றும் -சரீர சம்பந்திகளை அனுசந்திப்பது –

ந்யார்ஜிதமான தனத்தாலே ஷூ நிவ்ருத்தி பர்யாப்தனாய்ப் போருவது –

இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் ஆசார்ய கடாஷத்தாலும் –
எம்பெருமான் விஷயீகாரத்தாலும் உண்டாகக் கடவது ஆகையாலே
ஆசார்ய விஷயத்தில் க்ருதக்ஜையும் –
எம்பெருமான் பக்கலிலே ரஷகத்வ பிரதிபத்தியும் – சர்வ காலமும் நடையாடவும் –
கரணத் த்ரயத்தாலும் பகவத் பாகவத விஷயங்களிலே ஸ்வரூப ப்ராப்த கைங்கர்யம் பண்ணவும்
உபகாரகனான ஆசார்யனுக்கு சத்ருச சத்காரம் இல்லாமையாலே –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -உனக்கு என் செய்கேன் -என்று அனுசந்திக்கவும் –

————————————————————————

வார்த்தை -413-
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே சம்பந்தம் உடைய –
முமுஷுகளுடைய காலஷேபத்துக்கும் -பரமபத ப்ராப்திக்கும் –
சாதனம் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகையும் –

அநாதி கால வாஸித பாப நிவ்ருத்திக்கு சாதனம்
பெரிய பிராட்டியாருடைய விசேஷ கடாஷம் என்று இருக்கையும் –

இவ்வர்த்தம் உபதேசிக்கும் ஆசார்ய விஷயத்தில்
பிரத்யுபகார நிரபேஷ உபகார ஸ்ம்ருதி கண் அழிவு அற உண்டாகையும் –

இவ்வர்த்ததோடு சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில்
தனக்கு சிஷ்யத்வம் ஆகிற முறை தப்பாது இருக்கையும் –

தேவதாந்தர ஸ்பர்சத்தை தூரதே வர்ஜநீயம் ஆக்குகையும் –

உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர் விஷயத்தில் த்யஜ்யமான அர்த்த காமம் நிமித்தமாக
நெஞ்சு தவறாமல் அனுவர்த்திக்கையும் –

இவ்வதிகாரிக்கு சரீர பாதத்தளவும் ஸ்வரூப அநுரூபமான க்ருத்யம்
பகவத் பாகவத விஷயத்தில் பண்ணும் அநுகூல வ்ருத்தி மாறாது ஒழிகையும் – –

ஈஸ்வரனையும் பிராட்டியையும் -ஆசார்யனையும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களையும் ஒழிய
அல்லாத விஷயத்தில் நிஸ் ப்ருஹனாகையும் –

——————————————————————

வார்த்தை -414-
விஷயம் வகுத்த விஷயமானாலும் –ஆற்றாமை கரை புரண்டாலும் –
உபாயம் ப்ரபல உபாயமானாலும் –ஸ்வ சக்தி அதிகாரமானாலும் –
ஸ்வரூப அனுரூபமான உபாயத்தால் அல்லது பெறக் கடவோம் என்கிற-அத்யவசாயத்தை சொல்லுகிறது —
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர காண்டம் -39-30-என்று இருக்கும் இருப்பு –

———————————————————–

வார்த்தை -415-
ஆசார்ய விஷயீகாரமோ -ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரமோ –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமோ -தன்னுடைய அனுசந்தானமோ –
சம்சார நிவ்ருத்திக்கும்
பரமபத ப்ராப்திக்கும் ஹேது என் என்னில் –

இவை நாலும் அன்று –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் ப்ராப்திக்கும் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகை –
ஆசார்ய விஷயீகாரம் அஜ்ஞ்ஞானத்தை போக்கி வெளிச் செறிப்பிக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் சத்துக்கள் சத்கரிக்கப் பண்ணும் –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமும் தன்னுடைய அநுசந்தானமும் தன்னுடைய கால ஷேமம் –

——————————————————————-

வார்த்தை -416-

ரஷகனுடைய ரஷகத்வம் ஆளிட்டுச் செய்விக்கை யாவது -அவனுடைய ஸ்வாமித்வத்துக்கு கொத்தை

சேஷபூதனுடைய சேஷ வ்ருத்தி ஆளிட்டு செய்விக்கையாவது -இவனுடைய சேஷத்வத்துக்கு கொத்தை –

கொத்தையாக வேண்டுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டும் ஸ்வரூபம் ஆகையாலே –

——————————————————————-

வார்த்தை -417-
பட்டர் பிரபன்னரை அழைத்தருளி –
உம்மை எல்லோரும் பிரபன்னர் என்னா நின்றார்கள் ப்ரபன்ன லஷணம் இருக்கும்படி என் -என்று கேட்க
அர்த்த ராத்ரியிலே தனி வழி போகா நிற்க -துஷ்ட மிருகங்களால் மிடைநததொரு காட்டிலே –
முன்னடி தோற்றாதபடி மருண்டு -வர்ஷமும் இடியும் உண்டாய் –
கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினாப் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க –
அவ்வஸ்தையிலே திரு நாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை ப்ரபன்ன லஷணம் என்று அருளினார் –

———————————————————————-

வார்த்தை -418-
திருவேங்கட யாத்ரையாக எழுந்தருளா நிற்க -காட்டிலே ஒரு நாள் விடுதியிலே நீராட
எழுந்து அருளா நிற்க -ஸ்ரீ பாதத்திலே விஷம் தீண்ட –

பரிவராய் இருப்பார் – எங்கே விஷம் தீண்டிற்று என்ன –

அந்த செடியிலே என்ன –

அவர்களும் லஜ்ஜா விஷ்டராய்ப் போக -இத்தை அனந்தாழ்வான் கேட்டருளி
பிரபன்னர் எழுந்தருளின வாறே -நீர் என்ன நினைத்து விஷம் தீர்க்க வேண்டாது இருந்தீர் -என்ன –

பிரபன்னரும்
கடித்த பாம்பு பலவானாகில் -விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறோம் –
கடி உண்ட பாம்பு பலவானாகில் திருக் கோனெரியிலே தீர்த்தமாடி
திருவேங்கடமுடையானை சேவிக்கிறோம் -என்று நினைத்து இருந்தேன்
என்று விண்ணப்பம் செய்தார் –

————————————————————–

வார்த்தை -419-
ஒரு விசேஷ திவசத்திலே பெரிய திருமண்டபத்திலே பெருமாளும் நாய்ச்சிமாரும் புறப்பட்டருளி இருந்து
திருத் திரை யிட்டு ஏகாந்தமாய் இரா நிற்க –
பட்டர் திருவடித் தொழ என்று எழுந்தருளி திருத் திரையை வாங்கினவாறே
பெருமாள்  முனிந்து புறப்படவிட திரு உள்ளமாக –
இவர் புறப்பட்ட அளவிலே

அவனை அழையும் கோள் -என்று திரு உள்ளமாக –
அருளப்பாடு -என்ற அளவிலே
இவரும் வந்து திருவடி தொழ –

நாம் புறப்பட சொன்ன போது என நினைந்து இருந்தாய் என்று கேட்டருள –
பெருமாளும் நாய்ச்சிமாருமாக நினைந்து இருந்தேன் -என்ன –

நம்மை முன்பு என்ன நினைந்து இருப்பதென்று கேட்டருள –
முன்பு ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்து இருப்பேன் என்ன –

நம் ஆணையே -நம்மை முன்பு போலே நினைத்து இரு -என்று திரு உள்ளமாய் அருளினார் –

————————————————————————

வார்த்தை -420-
வைஷ்ணத்வம் ஆவது -வைஷம்ய ஜ்ஞானம் -அதாவது வாஸி அறிகை –
1-குருக்களுக்கும் சத்குருவுக்கும் உள்ள வாசியும் –
2-தேவதாந்தரங்களுக்கும் பர தேவதைக்கும் உள்ள -வாசியும்
3-மந்த்ராந்தரத்துக்கும் மந்திர ரத்னத்துக்கும் உலா வாசியும் –
4-தேஹத்துக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வாசியும் –
5-உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் உள்ள வாசியும் –
6-சாதனாந்தரங்களுக்கும் சித்த சாதனத்துக்கும் உள்ள  வாசியும் –
7-பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசியும் –
8-சம்சாரிகளுக்கும் வைஷ்ணவனுக்கும் உள்ள வாசியும் –
9-ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசியும் –
10-புருஷார்தங்களுக்கும் பரம புருஷார்தத்துக்கும் உள்ள வாசியும் -அறிகை –

அதாவது –
குருக்கள் ஆகிறார் -சம்சார பிரவர்த்தகருமாய் -அஜ்ஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும்
சத்குரு ஆகிறான் சம்சார நிவர்தகனுமாய் -ஜ்ஞான ப்ரதனுமாய் இருக்கும் என்று அறிகை –

தேவதாந்தரங்கள் அஜ்ஞ்ஞராய் அசக்தராய் இருப்பார்கள் என்றும் –
பரதேவதை சர்வஜ்ஞ்ஞனுமாய் சர்வ சகதியுமாய் இருக்கும்  என்று அறிகை –

மந்த்ராந்தங்கள் பிரயோஜநாந்தர ப்ரவர்தகமுமாய் ஸ்வாதந்த்ர்ய ப்ரவர்த்தகமுமாய் இருக்கும் என்றும்
மந்திர ரத்னம் புருஷார்த்த ப்ரவர்தகமுமாய் பாரதந்த்ர்ய பிரகாசமுமாய் இருக்கும் என்று அறிகை

தேஹம் ஜடமாய் பரிணாமியாய் இருக்கும் என்றும் ஆத்மா ஜ்ஞாநானந்த ரூபமுமாய்
ஏக ரூபமுமாய் இருக்கும் என்று அறிகை

உபாசகனுக்கு ஆநுகூல்யஸ்ய சங்கல்பமும் ப்ராதிகூல்ய வர்ஜனமும் வேண்டும்
பிரபன்னனுக்கு அபராதாநாம் ஆலய -அகிஞ்சன என்று இருக்க வேண்டும் -என்று அறிகை

சாதநாந்தரம் சாத்யமுமாய் சாபாயுமாய் இருக்கும் என்றும் -சித்த சாதனம் சித்தமுமாய்
நிர் உபாயுமாய் இருக்கும் என்று அறிகை

பரத்வம் ஸ்வ தந்த்ரமுமாய் துர் லபமுமாய் இருக்கும் -என்றும் -அர்ச்சாவதாரம்
ஸுலபமுமாய் ஆசீத பராதீனமுமாய் இருக்கும் என்று அறிகை

சம்சாரிகள் அநாசார பிரவர்த்தகருமாய் துர்மான ப்ரதர்களுமுமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்ய ப்ரவர்தகருமாய் துர்மான நிவர்தகருமுமாய் இருப்பார்கள் என்று அறிகை –

ஆத்மா வ்யாப்யமுமாய் சேஷமுமாய் இருக்கும் என்றும் -ஈஸ்வரன் வ்யாபகனுமாய்
சேஷியுமாய் இருக்கும் என்று அறிகை

புருஷார்தாந்தரம் அல்பமுமாய் அஸ்திரமுமாய் இருக்கும் என்றும் பரம புருஷார்த்தம்
நித்யமுமாய் நிரதிசயமுமாய் இருக்கும் என்று அறிகை

ஆகிற இது வைஷம்ய ஜ்ஞானம் ஆவது –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: