திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மடந்தையை வண்கம லத்திரு மாதினைத்
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூந் தண்அம் துழாய்மலர்க் கேஇவள்
மடங்குமால்; வாணுத லீர்!என் மடக்கொம்பே.

    பொ-ரை : ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்களே! என்னுடைய பெண்ணானவள், மடந்தைப் பருவத்தையுடையவளாகிய, வளப்பம்பொருந்திய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரியபிராட்டியைப் பரந்த மாலையை அணிந்த திருமார்பிலே வைத்த எம்பெருமானுடைய திருவடிகளின்மேலே அணிந்த தொடுக்கப்பட்ட பூக்களையுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலர்க்கே இவள் சுருண்டு விழுகின்றாள்.

    வி-கு : ‘என் மடக்கொம்பு இவள் துழாய் மலர்க்கே மடங்கும்,’ எனக்கூட்டுக. கொம்பு – ஆகுபெயர். ‘தார் கொள் தடம் மார்பு’ என மாறுக.

    ஈடு : ஏழாம் பாட்டு. 2‘அமிர்தத்திற்காகத் திருப்பாற்கடலைக் கடைகிற காலத்திலே பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே வைத்தருளினவனுடைய திருவடிகளிற் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படாநின்றாள்,’ என்கிறாள்.

மடந்தையை – 1எப்போதும் ஒக்க போகத்திற்குத் தகுதியான பருவத்தையுடையவளை. வண் கமலத் திருமாதினை – அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய திருவாகிற பெண் பிள்ளையை. ‘சாக்ஷாத் இலக்குமியை’ என்றபடி. தடம்கொள் தார் மார்பினில் வைத்தவர் – பெரிய பிராட்டியாருக்குத் திவ்ய அந்தப்புரமாகப் போகும்படி இடமுடைத்தாய், இறைமைத் தன்மைக்கு அறிகுறியான மாலையையுடைத்தான மார்பிலே வைத்தவர்.

    மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் – 2‘மஹாலக்ஷ்மியானவள் பார்த்துக்கொண்டிருக்கின்ற எல்லாத் தேவர்களுக்கும் நடுவில் பகவானுடைய திருமார்பை அடைந்தாள்’ என்கிறபடியே, அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் 3‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ என்று தன்பாடு ஏற வர, அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின்மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருத்துழாய்ப் பூவை ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள். வாள் நுதலீர் – ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்களே! 4‘உங்களைப்போன்று இவளைக் காண்பதுஎப்போது?’ என்பாள், ‘வாள் நுதலீர்’ என்று விளிக்கிறாள். என் மடக்கொம்பே ‑ 1என்னைப் பிரியாமல் எல்லா அளவிலும் விகாரம் இல்லாதவளாய் இருக்குமவள் படும் பாடே இது!

வெருவு மாலமும் பிறையும்வெவ் விடையவற் கீந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற் கருளி
மருவு தொல்பெரு வளங்களும் வேறுற வழங்கித்
திருவு மாரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி.’

  என்பது கம்ப ராமாயணம்

தடம் கொள் மார்பில் வைத்து
அழகிய தாமரைப் பூவை இருப்பிடம் ஆக கொண்ட
திவ்ய அந்தபுரம் தடம் கொள்
ஐஸ்வர்ய சூசகம்
அமிர்த
மால் –
அமுது கொண்டு உகந்த
சர்வ தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்க தானே ஏறி உட்கார்ந்து
அமம் மா அம்மா இம்மா ர்வு பெற வேண்டும் என்று ஏறி வர
தர்சநீயமான செவ்வி
மடங்கும் மால்
நுதலீர் -உங்களைப் போலே இவளைக் காண்பது என்றோ –
மாறுபாடு படுகிறாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: