மாதர்மா மண்மடந் தைபொருட்டு ஏனமாய்,
ஆதிஅம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல்அணி பைம்பொன் துழாய்என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.
பொ-ரை : என்னுடைய பெண்ணானவள் காதலையுடைய பூமி தேவியின்பொருட்டுப் பண்டைக்காலத்தில் வராக அவதாரத்தைச் செய்து அகன்ற பூ உலகத்தை ஒட்டு விடுவித்து எடுத்து வந்தவருடைய திருவடிகளின்மேலே அணிந்த பசிய அழகிய திருத்துழாய் என்றே சொல்லும்படியான மயக்கத்தை அடைந்தாள்.
வி-கு : ‘ஆதி அம் காலத்து மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடம் கீண்டவர்’ என்க. ‘என்றன் மடந்தை மால் எய்தினள்,’ என மாறுக.
ஈடு : ஆறாம் பாட்டு. 4‘மனிதத்தன்மை அழியாமல் நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற்போல அன்றிக்கே,ரீபூமிப் பிராட்டிக்காகத் தன்னை அழிய மாறியும் உதவினவனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.
மாதர் – அழகு. 1நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னுதல்; 2மாதர் என்று காதலாய், ‘சினேகத்தையுடையவள்’ என்னுதல். மா மண் மடந்தைபொருட்டு – ஏற்றத்தையுடையவளான ஸ்ரீபூமிப்பிராட்டியின்பொருட்டு. ஏனமாய் – 3‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே, காதலி உடம்பு பேணாமல் கிடக்க, காதலன் உடம்பு பேணி இருக்கை காதலுக்குத் தக்கது அன்றே? ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே, நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவையுடையவனாய். ஆதி -வராக கல்பத்தின் ஆதியிலே. அம் காலத்து – அழகிய காலத்தில் . 4காப்பாற்றுகின்ற சர்வேசுவரன் தன் விபூதியைக் காப்பதற்காகக் கொண்ட கோலத்தை அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.
அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் – பெரிய இவ்வுலகத்தை அண்டப்பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே 5‘அந்த வராக நயினாருடைய மயிர்க்கால்களில் உள்ளமஹரிஷிகள் துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே, ‘சனகன் முதலானோர் இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது. இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள். என்றன் மடந்தையே – ‘அவன் அன்றோ பிச்சு ஏறுவான்?’ என்று இருப்பவளாதலின், ‘என் மடந்தை’ என்கிறாள். 1‘இப்பருவத்தைக் கண்டார் படுமதனை இப்பருவமுடைய இவள் படுவதே!’ என்கிறாள்.
பூமிப் பிராட்டிக்காகா தன்னை அழிய மாறி -மேலும் சௌலப்யம்
பெருமை பொருந்திய பூமி பிராடிக்காக
அகலிடம் கீண்டவன் பாதம் மேல் அணி
மாதர் -நிருபாதிக ஸ்த்ரீத்வம்
ஏனமாய் -மாசுடம்பில்
பிரணி யிநித்வம் -தோன்ற
பாசி தூத்து கிடந்த உடம்பு பேணாமல் கிடக்க –
நீ ருக்கும் செற்றுக்கும் இறாயாத
அழகிய காலம் -கோலம் அனுபவிக்க வந்த
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
மா ல் பிச்சு ஏறினாள்
அவன் தான் பிச்சேரும்படி பருவம்
அவன் பெரிய பிராட்டியை திரு மார்பில் கொண்டவன் திருத்துழாய்
மூன்று தேவி சேர்த்தி
மடந்தை -அனுபவிக்கிறார் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply