திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

தோளிசேர் பின்னை பொருட்டுஎருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவல னார்,குடக் கூத்தனார்
தாள்இணை மேல்அணி தண்அம் துழாய்என்றே
நாளும்நாள் நைகின்ற தால்என்றன் மாதரே.

    பொ-ரை : ‘என்னுடைய பெண்ணானவள், ஒத்த தோள்களையுடையவளான நப்பின்னைப்பிராட்டி காரணமாக ஏழ் எருதுகளையும் தழுவிக்கொண்டவரும், ஆயர் வமிசத்தில் பிறந்தவரும், குடக்கூத்தை ஆடியவருமான கண்ணபிரானது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய் என்றே நாளுக்குநாள் வருந்தாநின்றாள்,’ என்கிறாள்.

    வி-கு : தோளி – தோள்களையுடையவள். தழீஇ – தழுவி; சொல்லிசை அளபெடை. கோளியார் – கொண்டவர். ‘மாதர் நைகின்றது,’ என மாறுக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘எல்லா ஆத்துமாக்களுக்கும் பரனாய்ப் பரமபதத்தில் உள்ளவனாய்க் கிட்டுதற்குமுடியாதவனாய் இருக்கிறவன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை என்னால் தேடப்போமோ?’ என்ன, ‘ஆனால், இங்கே என்னைப் போன்றாள் ஒருத்திக்காகத் தன்னைப் பேணாதே எருது ஏழ் அடர்த்த கிருஷ்ணன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

    தோளி சேர் பின்னை – 2‘ஒத்த சீலம் வயது ஒழுக்கம் இவற்றையுடையவளும், ஒத்த குலம் இராஜ லக்ஷணம்

இவற்றையுடையவளுமான பிராட்டிக்குப் பெருமாள் தக்கவர்; பெருமாளுக்குப் பிராட்டியும் தக்கவள்,’ என்கிறபடியே, குடிப்பிறப்பு முதலியவைகளால் பெருமாளுக்கு ஒத்தவளாய்க் ‘கறுத்த கண்களையுடையவள்’ என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற்போலே, மற்றை அழகு எல்லாம் கிருஷ்ணனோடு ஒத்திருக்கும்; தோள் அழகு அவனைக்காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது. அவளுடைய அவயவ சோபையிலே தோற்று அத்தோளோடே அணைக்கைக்காக; எருது ஏழ் தழீஇக் கோளியார் – எருதுகள் ஏழனையும் தழுவிக் கொள்ளுமவர். அடுத்த கணத்திலே அவளைத் தழுவப் பார்க்கிறான் ஆகையாலே, அவளைத் தழுவினாற்போலே இருக்கிறதாயிற்று எருதுகளோடு பொருததும்; ஆகையாலே அன்றோ ‘எருது ஏழ் தழீஇ’ என்கிறது? அவளைப் பெறுகைக்குக் காரணம் ஆகையாலே, 1அவற்றின் கொம்போடே பொருததும் இக்கொம்போடே சேர்ந்தாற்போலே போக ரூபமாய் இருக்கிறபடி. கோவலனார் குடக்கூத்தனார் – அவளைப் பெறுகைக்குத் தகுதியான 2குடிப்பிறப்பையும் செருக்கையும் உடையவர். வில் முரித்தாலும் இக்ஷ்வாகு வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே, எருது ஏழ் அடர்த்தாலும் ஆய்க்குலத்தில் குறை உண்டாகில் பெண் கொடார்கள் அன்றே ஆயர்கள்? ஆதலின், அதனை அடுத்துக் ‘கோவலனார்’ என்கிறது.

    தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே – அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் சார்த்தின திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்பட்டது. நாளும் நாள் நைகின்றது – ஒருநாள் நைகைக்கும் 3ஆஸ்ரயம் இல்லாத மென்மையையுடையவள், நாள்தோறும் நையா நின்றாள். 4நைவதற்குரிய சரீரத்தையும் கொடுத்து நையப்பண்ணும் விஷயமே அன்றோ? என்றன் மாதர் – 1என் பெண் பிள்ளை. அன்றிக்கே, தன்னைப்போலே பிறந்து விலங்கு முரித்துக் கொண்டுபோய்ப் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் முதலானவைகளோடே பொருது, 2‘தழும்பு இருந்த தாள் சகடம் சாடி’ என்கிறபடியே, தழும்பு ஏறி இருப்பாள் ஒருத்தியோ என் பெண்பிள்ளை என்பாள், ‘என்மாதர்’ என்கிறாள் என்னுதல். என்றது, 3‘தொடுங்கால் ஒசியும் இடை இளமான் அன்றோ?’ என்கிறாள் என்றபடி.

சர்வ ஸ்மாத் பரன் -கிட்ட முடியாதே என்ன
என்னைப் போன்ற நப்பின்னை பிராடிக்காக எருதுகள் மேலே விழுந்த
கூத்தன் -தன்னைப் பேணாதே கிருஷ்ணன் -திருவடிகளில் சாத்திய திருத் துழாய்
நைகின்றாள் –

கோவலனார் குடக்கூத்தனார் –
துல்ய சீல வா வ்ருத்தாம்
அபி தீஷிணாம்
சீதை பிராட்டி கண் அழகுக்கு ராகவன் முழுவதும் ஒப்பு
அது போலே இவள் தோளுக்கு -நப்பின்னை பிராட்டிக்கு

விஞ்சி இருக்கும் தோள் அழகு உடையவள்-அஸி தீஷிணா போலே –
அல்லாத அழகு ஒத்து இருந்தாலும் –
இது ஒன்றுமே ஒரு தட்டு -அவன் முழுவதும் ஒரு தட்டு
அவயவ அழகில் தோற்று எருதுகளை
தழுவினான் அநந்தரம் -அவளை தழுவினது போலே
கொம்பு உடன் சேர்ந்தது இக்கொம்பு உடன் சேருவது போலே போக ரூபம்
வஞ்சிக்கொம்பு -போன்ற ஸ்திரீகள் –

கோவலனாய் ஆனதே நப்பின்னை பிராட்டி கொள்வதற்கு
இரண்டு தாயார் இரண்டு குலம் -ருக்மிணி பிராட்டி நப்பின்னை பிராட்டி
ஷத்ரிய இடைய குலம்
செருக்கையும் உடையவன் குடக்கூத்தன் –
குயவன் -ஸ்ரீ வைஷ்ணவ ததீயாராதனம் நுழைந்த வ்ருத்தாந்தம்
சக்கரம் மாற்றி சுற்றி பழக்கம் -அடே குசவா சொல்லி -எப்படி கண்டு பிடித்தாய்
கண்ணன் -கோவலன் -குடக் கூத்து ஆடி மெய்ப்பித்தான்
வில் முறித்தாலும் இஷ்வாகு குலம் ஜனகன் பெண் கொடுத்தது போலே
உதவின கிருஷ்ணன்

சரீரம் கொடுத்து நலிய வைக்கிறான் –
தழும்பு இருந்த தாள் -திருவிருத்தம்
என்னுடைய பெண் பிள்ளை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: