திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கோதுஇல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல்அணி பைம்பொன் துழாய்என்றே
ஓதுமால்; ஊழ்வினை யேன்தடந் தோளியே.

    பொ-ரை : ஊழ்வினையேனான என்னுடைய பெண்ணானவள், ‘சமயிகள் குற்றம் இல்லாத வளவிய கல்யாணகுணங்களைக் கொண்டு ஒவ்வொரு குணத்திற்குரிய உயர்வின் பேதங்களைச் சொல்லிப் பிதற்றும்படியான பிரானாகிய பரனுடைய திருவடிகளின்மேலே அணிந்த பசுமையான அழகிய திருத்துழாய்’ என்றே சொல்லாநின்றாள்.

    வி-கு : ‘சமயிகள் வண்புகழ் கொண்டு பேதங்களைச் சொல்லிப் பிதற்றும் பரன்’ என்க. பிதற்றும் – பிதற்றப்படுகின்ற. பிரான் –

உபகாரகன், ‘தடந்தோளி ஓதும்’ என மாறுக. ஊழாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாய நியதி. தோளி -தோளையுடையவள். ‘சமயிகள்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற்காண்க.

    ஈடு : நாலாம் பாட்டு. 1‘பெருக்காறு வற்றினாற் போலே ஒருகால் எல்லாரையும் வாழ்வித்துப் போன அவதாரங்களில் உள்ளதனை நான் இப்போது எங்கே தேடுவேன்?’ என்ன, ‘அது தவிருகிறேன்; என்றும் ஒக்க ஓரே தன்மையனாய் இருக்கின்ற பரமபத நிலையன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

பரன் பாதங்கள்மேல் அணி’ என்றது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘பெருக்காறு வற்றினாற் போலே’ என்ற
இவ்விடத்தில் ‘பூகத ஜலம்போலே அந்தர்யாமித்வம்; ஆவரணஜலம் போலே
பரத்வம்; பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே
விபவங்கள்;அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்,’ என்னும்
பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீ சூக்திகளை ஒப்பு நோக்குக.

 

    கோது இல் — குற்றம் அற்ற; ‘குற்றங்கட்கு எதிர்த்தட்டான’ என்றபடி. குணத்திற்குக் கோது இல்லாமையாவது, ஒரு குணத்தை அநுசந்தித்தால் மற்றைய குணங்களிற்போகாதபடி காற்கட்டுகை. 2அப்படி இராதாகில், அல்லாத விஷயங்களிற்காட்டில் வேற்றுமை இல்லையே அன்றோ? வண்புகழ் – கல்யாண குணங்கள். கொண்டு – இக்குணங்களைச் சொல்லிக்கொண்டு. சமயிகள் – 3ஒரோ குணத்தில் கால் தாழ்ந்து மற்றைய குணங்களில் போகமாட்டாதவர்கள்; என்றது, ‘சீல குணம் துவக்க வற்று; அதிலும் வீரகுணம் துவக்க வற்று; அதிலும் உருவகுணமான அழகு முதலானவைகள் துவக்க வல்லன,’ என்று இவற்றிலே நிஷ்டரானவர்கள் என்றபடி. இனி, சொன்ன இவர்களை ஒழிய, 4‘சத்வித்யா நிஷ்டர், தகரவித்யா நிஷ்டர்,உபகோசல சாண்டில்யாதி வித்யா நிஷ்டரைச் சொல்லவுமாம்.

சர்வஜ்ஞத்வம் முதலான குணங்களோடு கூடின சொரூபம் உபாசிக்கத்
தக்கது’ என்று கூறுபவர்கள் சத்வித்யா நிஷ்டர். ‘குணமும் உபாசிக்கத்
தக்கது; சொரூபமும் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுமவர்கள் தகர வித்யா
நிஷ்டர். ‘கண்களில் வசிக்கின்ற சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று
கூறுமவர்கள் உபகோசலவித்யா நிஷ்டர். ‘உலகமே உருவாயுள்ள
சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் சாண்டில்ய வித்யா
நிஷ்டர்.

பேதங்கள் சொல்லி – தாங்கள் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி; என்றது, சீல குணத்தை அனுபவித்து, இதுவும் ஒரு குணமே! இது போலேயோ வீர குணம்!’ என்றாற்போலே சொல்லுதல் என்றபடி. பிதற்றும் – அந்தக் குணங்களிலே ஈடுபட்டு ஜ்வரசந்நி பதிதரைப்போலே அடைவு கெடக் கூப்பிடா நிற்பர்கள். பிரான் பரன் – 2அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன்; என்றது, ‘இமையோர்தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்’ என்கிறபடியே, இக்குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே ‘பிரான்’ என்கிறாள் என்றபடி. 

    பரன் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் – ‘சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி’ என்கிறபடியே, மிக்க சீர்த்தொண்டரான நித்தியசூரிகள் அவன் திருவடிகளிலே சார்த்தினதாய், அதனாலேயே மிகவும் விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று எப்போதும் சொல்லாநின்றாள். ஊழ்வினையேன் – 3வந்தது அடைய முறையாம்படியான பாவத்தைப் பண்ணின யான். ஊழ் – முறை. தடந்தோளியே – 4இப்படிக் கைவிஞ்சினஅழகையுடையவள், குணங்களுக்கு இருப்பிடமான அவன் திருவடிகளிலே திருத்துழாயை ஆசைப்படாநின்றாள். இத்தோள் அழகுக்கு இலக்கு ஆனாரோ, இவளோ, இப்படி அடைவு கெடப் பிதற்றுவார் என்பாள், ‘தடந்தோளி’ என்கிறாள்.

பெருக்காறு -அவதாரம் -ஆற்றில் வெள்ளம் -யென்றோ வரும் போலே
நித்தியமாய் உள்ள பரமபத நாதன் திருவடிகளில் உள்ள திருத் துழாய்
ஏக ரூபமாய் இருப்பானே
கோது இல் புகழ் கொண்டு
சமயிகள் –
பிதற்றும் பிரான் –
அதற்குள்ளும் பேதங்கள் –
பரன் பாதங்கள் மேல் பசுமை பொன் போலே திருத்துழாய்
ஹேயப் பிரத்யநீகன்
கோது -இல் -வேறு எங்கும் போக மாட்டாத ஒவ்வொரு குணங்களும்
குணாநதரம் போக மாட்டாதபடி கால் கட்டி
சமயிகள் -சீல குணம் உருக்கும் -வீர -ரூப -அதிலும் ஒவ்வொன்ற்றிலே நின்று
ஸ்ரீ பாஷ்யம் -3 அத்யாயம் 32 வித்யை சொல்லி உபாசனம் செய்பவரை
குணங்கள் சிறப்பை சொல்லி பேதங்கள்
பெரும் தேவர் குழாம் பிதற்றும் பிரான்
தோஷ போக்யத்வம்
தயா பர துக்க நிரசனம் -துக்கிக்த்வம் போன்ற பேதங்கள் –
பிரான் -உபகாரகன் பிதற்றும்படி செய்ததால்
நெஞ்சல் நினைப்பதரிதால் -குணங்களை நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே
சூட்டு நன்மைலைகள் -மிக்க சீர் தொண்டர் சாத்திய திருத்துழாய்
அநந்ய பிரயோஜனர் சமர்ப்பித்த
வினையேன் -வந்தது துக்கம் அடைய –
தடம் தோ ளியே
கை விஞ்சிய அழகு
திருத்துழாய் ஆசைப்படா நின்றாள்
அவன் சொல்ல வேண்டியதை –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: