திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,
தேவர்கள் மாமுனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல்அணி செம்பொன் துழாய்என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.

    பொ-ரை : ‘வலிய தீய வினைகளைச் செய்த என்னுடைய பெண்ணானவள், ‘பாக்களோடு கூடின வேதங்களில் சிறந்த மாலைகளைக் கொண்டு தேவர்களும் பெருமை பொருந்திய முனிவர்களும் துதிக்கும்படி உலகத்தை அளந்து நின்ற சிவந்த திருவடிகளின்மேலே அணிந்த சிவந்த பொன் போன்று விரும்பத்தக்க திருத்துழாய்’ என்றே கூப்பிடாநின்றாள்.’ வி-கு : ‘தேவர்கள் முனிவர்கள் நன்மாலை பல கொண்டு இறைஞ்ச நின்ற சேவடி’ என்க, ‘கோதை கூவும்,’ என மாறுக.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘ஓர் ஊருக்காக உதவினதே அன்றிக்கே, ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல் உள்ளது பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

    பா இயல் வேதம் – பாவாலே இயற்றப்பட்ட வேதம், பா – செய்யுள். 2‘அநுஷ்டுப்’ என்றும், ‘பிருஹதீ’ என்றும், ‘திருஷ்டுப்’ என்றும் இவை முதலாகச் சொல்லப்படுகின்ற சந்தஸ்ஸூக்களையுடைத்தான வேதம் ஆதலின், ‘பா இயல் வேதம்’ என்கிறார். நல் மாலை பல கொண்டு – அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு; என்றது, ஸ்ரீ புருஷசூக்தம் முதலியவைகளை. 3‘யாதொரு அடையத் தக்க பரம்பொருளின் சொரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், 4‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் யானே’ என்றும் சொல்லப்படுகின்றவாறே மற்றைய இடங்களிலும் சொல்லப்படுகின்றவன் அவனேயாகிலும், சொரூப ரூப குணங்களுக்கு நேரே வாசகங்களாக இருக்கையாலே, அவற்றைநன்மாலைகள்’ என்கிறார். 1அன்றிக்கே, ‘ஆராதனத்திலும் விபூதி விஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும் ஸ்ரீ புருஷசூக்தம் முதலானவைகளையும் கொண்டு’ என்னலுமாம்.

    தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற – தேவர்களும் சனகன் முதலிய முனிவர்களும் 2‘சுவர்க்கத்திலுள்ள தேவ கூட்டத்தாலும் பூமியிலுள்ள மனிதர்களாலும் ஆகாயத்தில் திரிகின்ற வைமாநிகர்களாலும் துதிக்கப்பட்டவனாய் உலகத்தை அளந்த அந்தத் திரிவிக்கிரமன், எப்பொழுதும் எனக்கு மங்களம் உண்டாகுமாறு துணையாக வேண்டும்,’ என்கிறபடியே துதித்துப் பற்றும்படி திரு உலகு அளந்து நின்ற. சே அடி – 3‘மா முதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி’ என்கிறபடியே, தலையிலே பூப்போலே வந்திருக்கிற போது மேலே பார்த்தவாறே அனுபவிக்கத் தகுந்ததாய் இருந்த சிவப்பையுடைத்தாய் இருக்கை. 4‘அடியில் ராகம் அன்றோ இப்படி ஆக்கிற்று இவளை? அன்றிக்கே, செவ்விய அடி என்றாய், அடிக்குச் செவ்வையாவது, 5‘பொதுநின்ற பொன்னங்கழல்’ என்கிறபடியே, அடியார் அடியர் அல்லார் என்ற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் வைத்த செவ்வை. 6‘தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே’ என்று ஈடுபடும்படி அன்றோ அடியில் நேர்மை இருப்பது?

    சே அடிமேல் அணி செம்பொன் துழாய் என்றே கூவுமால் – அத்திருவடிகளிற்சார்த்தின விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று சொல்லிக் கூப்பிடாநின்றாள்.‘தோளிற்சார்த்தின மாலை கொடுக்கிலும் கொள்ளாள்’ என்பாள், ‘சே அடி துழாய் என்றே கூவுமால்’ என்கிறாள். ஆல் – இது ஒரு ஆச்சரியம் இருந்தபடி என்னே! அன்றிக்கே, அசையுமாம். கோள்வினையாட்டியேன் – முடித்து அல்லாது விடாத பாவத்தைச் செய்த என்னுடைய. அன்றிக்கே, கோள் என்று மிடுக்காய், ‘அனுபவித்தே தீர்க்க வேண்டும்படியான பாவம்’ என்னுதல். 1கோதையே – தன்மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமதனைத் தான் படுவதே! இம்மாலையையுடைய இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலையான இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலைக்கு மால் அவன்; அம்மாலுக்கு மால் இவள்.

கோதை என்பது, ‘பூமாலை, பெண்களின் தலைமயிர், பெண்’ முதலிய பல
பொருள்களைக் குறிப்பதொரு பெயர்ச்சொல். முதல் இரண்டு
பொருள்களையும் அருளிச்செய்கிறார், ‘தன் மாலையையும்’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருளை அருளிச்செய்கிறார், ‘இம்மாலையையுடைய இவள்’
என்று தொடங்கி. கோதை என்பது, பிராட்டி தன்னைச் சொல்லுகிறதாகத்
திருவுள்ளம் பற்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மார்வத்து மாலையான’
என்று தொடங்கி. மார்வத்து மாலை – பிராட்டி. ‘உன் திருமார்வத்து மாலை
நங்கை’ என்பது தமிழ்மறை. (திருவாய். 10. 10 : 2.)

      ‘கோதை’ என்றதனை நோக்கி, ‘அம்மாலுக்கு மால் இவள்,’ என்கிறார்.
‘அவனுடைய வியாமோஹத்துக்கு விஷயமாயிருப்பவள்’ என்றபடி. மால் –
வியாமோகம்; எல்லார்க்கும் அறப்பெரியவன்.

ஊருக் காக செய்த உபகாரம் சொன்னாள் முன்பு
நாட்டுக்காக உதவினவன்
தேவ லோகம் செய்த உபகாரம்

அளவியற்சந்தம்’ என்றும், ‘அளவழிச் சந்தம்’ என்றும் சந்தம் இரு
வகைப்படும். நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த
இருபத்து மூன்றடியானும் வந்து, தம்முள் ஒத்தும், குருவும் லகுவும் ஒத்தும்
வந்தன அளவியற்சந்தம் எனப்படும். எழுத்தொவ்வாதும் எழுத்தலகு
ஒவ்வாதும் வருவன அளவழிச் சந்தம் எனப்படும். எட்டெழுத்தடி
அளவியற்சந்தம் ‘திருஷ்டுப்’ என்றும், ஒன்பதெழுத்தடி அளவியற்சந்தம்
‘பிருஹதீ’ என்றும் பெயர் பெறும். ‘சந்தம், பா’ என்பன, ஒரு
பொருட்கிளவிகள்.

3. ‘எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்றவன் சர்வேசுவரனாயிருக்க,
புருஷ சூக்தம் முதலானவைகளை மட்டும் ‘நன்மாலைகள்’ என்பது என்?’
என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘யாதொரு’ என்று தொடங்கி. இது, கடவல்லி உபநிடதம், 1. 2 : 15.

சந்தஸ் உடைய வேதம்

நல் மாலை பல கொண்டு – அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு

ஸ்தோத்ரம் செய்து –

அன்றிக்கே’ என்று தொடங்கி வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்.
இப்பொருளில் வேதங்களும் நன்மாலைகளும் என்று உம்மைத் தொகை.
முன்னைய பொருளில் வேற்றுமைத் தொகை; ‘வேதத்திலேயுள்ள
நன்மாலைகள்’ என்பது பொருள்.

வேதம் எல்லாம் அவனை சொன்னாலும் ஸ்பஷடமாக ஸ்வரூப ரூபா குணங்கள் புருஷ சுக்தம் சொல்லும்

வேதம் -நன்மாலை இரண்டையும் கொண்டு –

தேவர்கள் -சனகாதிகளும் ஸ்தோத்ரம் செய்ய

சேவடி -மா மலர் அடிப்போது கவிழ்த்து -அலர்த்தி – –திருவாசிரியம், 5.

தலையிலே -அடியில் ராகம் இ றே -ஆழ்வாருக்கு 

ராகம் சிகப்பு ஆசை –

செவ்விய அடி உயர்ந்து பொது நின்ற பொன் அம் கழல் வாசி அற அனைவர் தலைகளையும் தீண்டி

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே

என்றே கூவுமால்

தோளில் சாத்தின திருத்துழாய் கொள்ளாள்

வினை -வலிமை கோள் -முடித்து அல்லது விடாத பாபம் -அனுபவத்தாலே விநாச்யம்

கோதையே -மாலை -முடி அழகையும் பார்த்து அவன் பட வேண்டியது

இம்மாலையை உடைய இவள் -வேறு ஒரு மாலை ஆசைப்படுகிறாள்

இவளே மார்பத்து மாலை நங்கை -மாலுக்கு மால் இவள் வ்யாமோஹம்

அம்மாலுக்கு இவள் மால்

கோதை என்பது, ‘பூமாலை, பெண்களின் தலைமயிர், பெண்’ முதலிய பல
பொருள்களைக் குறிப்பதொரு பெயர்ச்சொல். முதல் இரண்டு
பொருள்களையும் அருளிச்செய்கிறார், ‘தன் மாலையையும்’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருளை அருளிச்செய்கிறார், ‘இம்மாலையையுடைய இவள்’
என்று தொடங்கி. கோதை என்பது, பிராட்டி தன்னைச் சொல்லுகிறதாகத்
திருவுள்ளம் பற்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மார்வத்து மாலையான’
என்று தொடங்கி. மார்வத்து மாலை – பிராட்டி. ‘உன் திருமார்வத்து மாலை
நங்கை’ என்பது தமிழ்மறை. (திருவாய். 10. 10 : 2.)

      ‘கோதை’ என்றதனை நோக்கி, ‘அம்மாலுக்கு மால் இவள்,’ என்கிறார்.
‘அவனுடைய வியாமோஹத்துக்கு விஷயமாயிருப்பவள்’ என்றபடி. மால் –
வியாமோகம்; எல்லார்க்கும் அறப்பெரியவன்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: