வல்லிசேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல்அணி நாறு துழாய்என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.
பொ-ரை : செய்த தீவினையையுடையேனாகிய என்னுடைய பாவை போன்ற பெண்ணானவள், ‘கொடிபோன்ற நுண்ணிய இடையையுடைய ஆயர் பெண்களோடும் வரம்பு அழிந்த செயல்களைச் செய்து குரவைக்கூத்தைக் கோத்து ஆடிய கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே அணிந்த வாசனை வீசுகின்ற திருத்துழாய்,’ என்றே சொல்லாநின்றாள்.
வி-கு : ‘பாவை சொல்லும்’ என மாறுக. பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நல்லடி’ என்கிறாள். ‘வாலறிவன் நற்றாள்’ என்றார் திருவள்ளுவனாரும்.
ஈடு : இரண்டாம் பாட்டு. 2‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான சர்வேசுவரன் பிரளய ஆபத்திலே உடைமையாகிற தன் உலகத்தைக் காப்பாற்றினானாகில், அதுவும் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, ‘அது உடல் அன்றாகில் தவிருகிறேன்; என் பருவத்தினையுடைய பெண்களுக்கு உதவின இடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.வல்லி சேர் நுண் இடை – 1‘வள்ளி மருங்குல்’-பெரிய திருமொழி, 3. 7 : 1.– என்றாற்போலே, வள்ளிக்கொடி போலே இருக்கிற இடையையுடையவர்கள் என்னுதல்; நுண்ணிய இடையையுடைய வல்லி போன்ற வடிவினையுடையவர்கள் என்னுதல். இடைக்கு உபமானம் இல்லாமையாலே, ‘நுண்ணிடை’ என்கிறது. ஆய்ச்சியர்தம்மொடும் – திருவாய்ப்பாடியில் இவள் பருவத்தையுடைய பெண்கள் பலரோடும். 2கொல்லைமை செய்து – வரம்பு அழிந்த செயல்களைச் செய்து. அன்றிக்கே, ‘தன் அழகு முதலியவைகளாலே அவர்கள் மரியாதையை அழித்து’ என்னலுமாம். குரவை பிணைந்தவர் – அவர்களோடு தன்னைத் தொடுத்தபடி. இதனால், ‘என் பருவத்தினையுடைய பெண்கள் பலர்க்கும் உதவினவர், அவர்கள் எல்லார் விடாயையுமுடைய எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்றபடி.
நல் அடிமேல் அணி – 4பெண்களும் தானுமாய் மாறி மாறித் துகைத்த திருத்துழாய் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். பிரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுபவள் அன்றே இவள்? நாறு தூழாய் – 5அவர்களும் அவனுமாகத் துகைத்ததுஎன்று அறியுங்காணும் இவள் வாசனையாலே; 1‘கலம்பகன் நாறுமே அன்றோ?’ என்றே சொல்லுமால் – 2நினைத்தது வாய்விடமாட்டாத பெண்மை எல்லாம் எங்கே போயிற்று? சூழ்வினையாட்டியேன் – தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். 3‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள், தன்னைச் ‘சூழ்வினையாட்டியேன்’ என்கிறாள். பாவையே – 4‘எல்லா நிலைகளிலும் தன் அகவாயில் ஓடுகிறது பிறர் அறியாதபடி இருக்கக்கூடிய இயல்பாகவே அமைந்த பெண்மையையுடைய இவள் தன் பேற்றுக்குத் தான் வார்த்தை சொல்லும்படி ஆவதே!
பருவ பெண்களை ரஷித்தவன்
முன்பு சர்வ ரஷகன் -அது உன் பேற்றுக்கு உடலாகுமா
எல்லா பாசுரங்களிலும் திருத் துழாய்
பறிக்கும் நாள் விதி உண்டே ஏகாதசி பறிக கூடாதே
விலை கொடுத்து வாங்க கூடாது
இந்த பதிகம் சேவித்தால் திருத்துழாய் சமர்ப்பித்து போலே
இடை -வள்ளிக் கோடி போலே
குரவை கூத்து
நல்லடி மேல் அணிந்த
வள்ளி மருங்குல் போலே
இடைக்கு உபமானம் இன்றி நுண் இடை
பலருக்கும் உதவி
அவர்கள் எலாரும் விடாய் இவள் ஒருத்திக்கு
கொல்லமை -வரம்பு அழிய
மரியாதை கட்டுப்பாடு அழித்து
இது ஒரு அற்புதம் கேளீர் -காவல் கடந்து -கயிற்றை மாலையாக்கி
சௌந்தர் யாதிகளால்
நல்லடி மேலடி -பெண்களும் இவனும் மிதித்து
பிரமச்சாரி அடி திருத் துழாய் வேண்டாம்
பரிமளம் கொண்டே அறி வாள் -இருவரும் துகைத்த
கலம்பகம்
என்றே சொல்லுவாள்
வாயைத் திறந்து
ஸ்த்ரீத்வம் குடி போயிற்றே
பெண்மை என் -எங்கே போனது உண்மை உரைக்கின்றாள் பெரிய திருமொழி பாசுரம்
சூழ் வினை யாட்டியேன்
சூழ்ந்து அகப்படுத்திக் கொண்ட பாபம்
வார்த்தை சொல்கிறது என் பாபம்
சுமந்த்ரன் -பிராட்டி வார்த்தை சொல்லாமல்
துக்கத்திலும் வார்த்தை சொல்லாமல் –
ஸ்ரீராமா. அயோத். 58 : 85. இது, பெருமாளையும் இளைய
பெருமாளையும் பிராட்டியையும் கங்கையின் கரையிலே விட்டு மீண்டு
அயோத்தியா நகரத்திற்கு வந்த சுமந்திரன் கூறுவது.
இங்கே வாயைத் திறந்து வார்த்தை சொன்னது தான் செய்த
பாபம்
பாவையே -இவள் மனசில் உள்ளதை அறிய முடியாமல்
தனது பேற்றுக்கு தானே பேசும்படி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply