இரண்டாந்திருவாய்மொழி – ‘பாலனாய்’
முன்னுரை
ஈடு : 1இராம விரகத்தில் திருவயோத்தியில் உள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய உறுப்புகளுமாய்ப் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்; இக்கூப்பீட்டை அல்லாதார் மிகச் சிறிய பிரயோஜனங்களுக்காகப் புறம்பே கூப்பிடுகிறபடியைக் கண்டு, ‘இது இவ்விஷயத்திலே ஆகப் பெற்றது இல்லையே!’ என்று நொந்து, ‘நாம் முந்துற முன்னம் இவ்விஷயத்திலே கூப்பிடப்பெற்றோம் அன்றோ?’ என்று உகந்தார், ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில்; ‘அவ்வளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தகுந்த உறுப்புகளை உடையோமாகவும் பெற்றோம்,’ என்றார் ‘சன்மம் பலபல’ என்ற திருவாய்மொழியில்; அல்லாதார் தங்கள் தங்களுடைய உறுப்புகளைப் பாழே போக்குகைக்கு அடியான ஐஸ்வரிய கைவல்யங்களிலே ஈடுபாடு உள்ளவராய்க் கேட்டினை அடைகிறபடியைக் கண்டு, அவற்றினுடைய சிறுமை, நிலையின்மை முதலிய தோஷங்களையும், சர்வேசுவரன் அடையத்தக்க மேலான பலமாய் இருக்கிறபடியையும் உபதேசித்து, ‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,’ என்றார், ‘ஒரு நாயகம்’ என்ற திருவாய்மொழியில்.
2பிராசங்கிகமாக, இவ்வொரு நாயகம் அருளிச் செய்தவரே அன்றோ ‘சூழ்விசும்பு அணிமுகி’லும் அருளிச்செய்தார்?இதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். என்றது, ‘இது கண்கூடாகக் காண்பது போன்று இச்சரீரம் நீங்கிய பின்னர் அதுவும் காண அன்றோ நாம் புகுகிறது! 1இனி எத்தனைநாள்?’ என்றபடி. ஆக 2மூன்று திருவாய்மொழிகளாலும் இப்படிப் பரோபதேசம் செய்த இது, சமுசாரிகள் திருந்துகைக்குக் காரணம் ஆகாமல். 3அத்தாலும் தமக்குப் பகவானிடத்திலே விடாய் பிறந்தபடி சொல்லுகிறார் இதில்.
என்றது, 4மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைச் சொல்லுதல் முன்னாகப் பகவானுடைய வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, ‘அவனைப் பற்றுங்கோள்; மற்றைய விஷயங்களை விடுங்கோள்,’ என்றே அன்றோ அருளிச் செய்தது? அது அவர்கள் திருந்துவதற்குக் காரணமாகாமல் தமக்குப் பற்று மிகுதற்குக் காரணமாயிற்று; 5ஸ்ரீ விபீஷணாழ்வான் இராவணனுக்குச் சொன்ன நலம் அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல் தான் பெருமாளைப் பற்றுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன நலம் அவன் நெஞ்சிலே படாமல் தனக்குப் பகவானிடத்தில் பத்தி மிகுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்’ என்னும் இம் மூன்று திருவாய்மொழிகளிலும் பிறரைக் குறித்து அருளிச்
செய்த நலம் அவர்கள் திருந்துவதற்குக் காரணம் ஆகாமல், மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே தமக்கு அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பணைக்கைக்குக் காரணம் ஆயிற்று என்றபடி. இவர்களுக்குக் களையாவது, பகவானுக்கு வேறுபட்ட விஷயங்களும், சேவிக்கத் தகாதாரைச் சேவைசெய்து திரிகையும், ஐஸ்வர்யத்தைப் புருஷார்த்தம் என்று இருக்கையும். சங்காயமாவது, பயிர்களின் இடையிடையே முளைத்து, அறியாதார்க்குப் பயிர் போலே தோற்றி, அதனை வாரிப் போகடாத போது நெல் பதர்க்கும்படியாய் இருப்பது ஒன்று. அப்படியே கைவல்யமும்.
1இந்தக் காதற்பெருக்கும் இப்படிச் செல்லாநிற்கச் செய்தே, முன்பு ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த விடாய் 2வேறு ரசங்களாலே மூடப்பட்டுக் கிடந்தது; அந்த விடாய் தலை எடுத்து, ‘தேசத்தாலும் காலத்தோடும் தேசத்தோடும் கூட்டி இப்போதே அனுபவிக்க வேண்டும்,’ என்னும் விடாயையும் பிறப்பித்தது; அவை அப்போதே கிடையாமையாலே அந்த விடாய்தான் 3வேறு நிலையைப் பிறப்பித்தது; அந்த நிலைதான் சர்வேசுவரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி நிலையாய், பிராட்டிதான் மயங்கினவளாய்க் கிடக்க, அவள் நிலையைப் பார்த்த திருத்தாயார், ‘தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்த அவன் படிகளையும் அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூட்டி இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிறாள்,’ என்கிற பாசுரத்தாலே தம் நிலையைப் பேசுகிறார்.திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, 2‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே, ‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ? அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடியாலேயும், தன் ஆசையின் மிகுதியாலேயும் இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.
344
பாலன்ஆய், ஏழ்உலகு உண்டு, பரிவுஇன்றி
ஆலிலை அன்ன வசம்செயும் அண்ணலார்
தாளிணை மேல்அணி தண்அம் துழாய்என்றே
மாலுமால் வல்வினை யேன்மட வல்லியே.
பொ-ரை : அதிபால்யமான வடிவையுடையனாய் எல்லா உலகங்களையும் உண்டு வருத்தம் இல்லாமல் ஆலின் இலையிலே உண்ட உணவு அறாமைக்குத் தகுதியாகக் கிடக்கும் பெருமையையுடைய இறைவனது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயினைப் பெறவேண்டும் என்றே மயங்காநின்றாள்; தீவினையேனாகிய என்னுடைய, பற்றியதை விடாத வல்லிக்கொடி போன்ற பெண்ணானவள்.வி-கு : ‘வல்வினையேன் மடவல்லி ஆல் இலை அன்ன வசம் செயும் அண்ணலார் தாளிணை துழாய் என்றே மாலும்,’ என்று கூட்டுக. ‘பரிவு இன்றி அன்ன வசம் செயும் அண்ணலார்’ என்க.
இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.
ஈடு : முதற்பாட்டு. 1‘ஆல் இலையைப் படுக்கையாக உடையவனுடைய திருவடிகளிலே சார்த்தின திருத்துழாயைச் செவ்வியோடே இப்போதே பெறவேண்டும் என்று ஆசைப்படாநின்றாள்,’ என்கிறாள்.
பாலன் ஆய் – கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தை உடையனாய்; 2‘படியாதும் இல் குழவிப் படி’ என்னக் கடவது அன்றோ? 3பருவம் நிரம்பின பின்பு உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில், என் மகள் இப்பாடு படாளே! ‘அவன் ஒரு நிலையிலேகாண் காப்பாற்றுமவன் ஆவது’ என்று மீட்கலாமே!’ என்பாள், ‘பாலன்’ என்கிறாள். 4‘என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த நிலை ஒழிய முன் நிலை நெஞ்சிற்படாமல் இருந்தானாதலின், ‘ஆய்’ என்கிறாள். ஏழ் உலகு உண்டு –5‘இது சரிக்கும்; இது சரியாது,’
என்று அறியாமல் ஏதேனுமாக முன்பு தோன்றியதை வாயிலே எடுத்து இடும்படி ஆயிற்றுப் பருவம். 1‘காப்பாற்றுகின்ற சர்வேசுவரனுடைய தொழில் ஆகையாலே, இது பாதுகாவலாய் முடிந்தது இத்தனை. அவன் பொறுக்கும் செயலைச் செய்தானாகில், இவளும் பொறுக்கும்படியானவற்றை ஆசைப்படாளோ?’ என்பது தாயாருடைய உட்கோள். ஆபத்து உண்டானால் 2வரைந்து நோக்குமது இல்லை ஆதலின், ‘உலகு’ என்கிறாள்.
பரிவு இன்றி – ஒரு வருத்தம் இன்றிக்கே. என்றது, உலகங்களை எடுத்து வயிற்றிலே வைக்கிற இடத்தில் அதனால் ஒரு வருத்தம் இன்மையைத் தெரிவித்தபடி. ஆல் இலை – அப்பொழுது தோன்றியது ஓர் ஆல் இலையிலே. என்றது, 3‘அவ்வடம் பண்ணிக்கொடுத்த சுத்த பத்திரத்திலே’ என்றபடி,
அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’
என்றபடி. அவ்வடம் – அந்த ஆலமரம். சுத்த பத்திரம் – வெற்று இலை.
அன்ன வசம்செயும் – தன் வசமாக அன்றிக்கே 4‘அஹம் அன்னம் – நான் இனியபொருளாய் இருப்பவன்’ என்கிற அன்னத்திற்கு வசமாக. என்றது, உண்ட உணவு சரியாதபடி 5அதற்குத் தகுதியாகச் செய்தமையைத் தெரிவித்தபடி.
அதற்குத் தகுதியாக’ என்றது, ‘வலக்கை கீழாக’ என்றபடி.
‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்தபழஞ்
சேமப் புவனம் செரிக்கும்என் றேசிவன் மாமுடிக்கு
நாமப் புனல்தந்த பொற்றாள் அரங்கர் நலஞ்சிறந்த
வாமத் திருக்கர மேலாக வேகண் வளர்வதுவே.’
என்பது திருவரங்கத்து மாலை.
அண்ணலார் – எல்லாப் பொருள்களையும் காக்கின்றவருமாய் எல்லாப்பொருள்களுக்கும் ஸ்வாமியும் ஆனவர். எல்லாப் பொருள்களையும் காக்கின்றவரான உமக்கு உம்மை ஆசைப்பட்ட வலிமை அற்றவளான என் விருப்பத்தைச் செய்யத் தட்டு என்?’ என்கிறாள்
என்பாள். ‘அண்ணலார்’ என்கிறாள். 1அவன் இளமைப்பருவத்தில் பாதுகாப்பதில் குறிக்கோளாய் இருப்பது போலே ஆயிற்று இவள் மயங்கி இருக்கும் காலத்திலும் முறையில் கலக்கம் அற்று இருந்தபடி.
அண்ணலார் தாள்இணை – அடிமையாக உள்ளவன் பற்றுவது ஸ்வாமியினுடைய திருவடிகளை அன்றோ? தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் – இப்படி இவள் ஆசைப்படுகைக்கு 2அடியிலே பச்சையிட்டாள்காணும். பிராஹ்மணன் பிச்சு ஏறினாலும் ஓத்துச் சொல்லுமாறு போன்று, இவளும் அடியில் கற்றுப் பழகியதனையே சொல்லாநின்றாள்; 3தாள் பட்ட தண் துழாய்த் தாமத்திலே அன்றோ வாசனை பண்ணிற்று? துழாய் என்றே – எப்போதும் அத்தையே சொல்லாநின்றாள்.
அடியிலே பச்சையிட்டாள், சிலேடை : அடியிலே – முதலிலே,
திருவடிகளிலே. பச்சை – உபகாரம், திருத்துழாய்.
3. ‘அடியிலே கற்றது எங்கே?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தாட்பட்ட’ என்று தொடங்கி. இது திருவாய். 2. 1 : 2.
‘கெடுவாய், இது, சேராதது காண்; இறந்த காலத்தில் உள்ளது ஒன்றுகாண்,’ என்றால், அது செவியிற்படுகிறது இல்லை என்பாள், ‘என்றே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறாள். ஒரு காரணத்தாலே சாதித்துக்கொள்ள முடியாமல் இருக்கையைத் தெரிவித்தபடி. மாலும் – மயங்கும். என்றது, ‘இது ஒரு சொல் அளவேயாய் அகவாயில் இன்றிக்கே இருக்கை அன்றிக்கே, உள் அழியாநின்றாள்,’ என்றபடி. 4மாணிக்கத்தின் ஒளியிலே நெருப்பு என்னும் புத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேண்டுமோ? வல்வினையேன் – 5மயக்கம் உற்றவளாய்க் கிடக்கிறஇவளுக்கு ஒரு துக்கத்தின் நினைவு இல்லை ஆதலின், உணர்ந்திருந்து பார்த்துக் கூறுகிற தன்னை ‘வல்வினையேன்’ என்கிறாள். மடம் வல்லி – ஒரு கொள்கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின், ‘வல்லி’ என்கிறாள். 1‘தமப்பபனாரான ஜனகமஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற கடலில் மூழ்கினார்,’ என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் – பற்றிற்று விடாமை.
பாலனாய் –
இராம விரகத்தில் திரு அயோதியை உள்ளார் கூப்பிட்டார் போலே முடியானே
கூப்பிட்டை அல்லாதார் -லோகத்தார் உலக விஷய -புறம்பே கூப்பிட்டகண்டு
பகவத் விஷயம் -தாம் முந்துற பெற்றோமே -ஹ்ருஷ்டராய் சொனால் விரோதம் அருளி
சென்மம் பல -கரணங்கள் பகவத் விஷய ஈடுபாடு ஹ்ருஷ்டராய்
அல்லாதார் ஐஸ்வர்ய கைவல்ய ப்ரவணராய் இருக்க அல்ப அஸ்திர தோஷம் காட்டி
இவற்றை விட்டு அவனைப் பற்ற
ஒரு நாயகமாய் அருளிச் செய்தவர் தானே சூழ் விசும்பு பணி முகில் அருளி
விஸ்வசித் து இருக்கவேண்டும் -இனி எத்தனை நாள் என்றே இருக்க வேண்டும் –
மூன்றாலும் உபதேசிக்க -சம்சாரிகள் திருந்த உடலாக இல்லாமல்
அத்தாலே இவருக்கு பகவத் விஷய விடாய் கூட பலனாய்
பகவத் வை லஷ்ண்யம் அனுசந்தித்து -தமக்கு ஈடுபாடு அதிகரிக்க
விபீஷண ஆழ்வான் இராவணனுக்கு ஹிதம் அருளி -தனக்கே இது உடலாக
இரா வணன் -இரவை போன்ற வண்ணம் -இராமனை குறிக்கலாமே மேகஸ்யாமம்
இரா மன்னைக் கொன்றான் நிசாசரா இரவுக்கு மன்னன் இராவணன்
சமாளித்து இராவணன் இராமனைக் கொன்றான் சொல்லி
பிரகலாதன் ஹிரண்யனுக்கு ஹிதம் உபதேசித்து தனக்கு ஈடுபாடு ஆனது போலே
மூன்று களை பறித்து –
சக்காயம் -கோரப்புல்லும் நீக்கி –
வீடு முன் முற்றவும் -சொன்னால் விரோதி ஒரு நாயகம்
கைவல்யம்
பகவத் இதரிக்த விஷயம் -அசேவ்ய சேவை -ஐஸ்வர் யம் மூன்று களை
கைவல்யம் பார்ப்போருக்கு பயிர் போலே தோன்றும் சக் காயம்
முடியானே பிறந்த விடாய்
மூடிக் கொண்டு -உபதேசிக்க போனதும் –
இதில் மீண்டும் எழ -தலை எடுத்து –
தேச -கால -பர வ்யூஹ விபவ படிகளை
அந்த காலம் அந்த தேசம் போலே அனுபவிக்க
கிட்டாமல் அவஸ்தான்தரம்
பிராட்டி நிலை
மோஹித்து கிடக்க
திருத்தாயார் -பாசுரம் -ஸ்வ தசையைப் பேசுகிறார் –
திருவடியைக் கண்ட பீம சேனன் –
வாலைத் தூக்க முடியாமல்
சமுத்ரம் தாண்டிய அபிராத்திமா மகத் ரூபம் காண ஆசைப் பட்டது போலே
முன்பு கடல் கடந்த ரூபம் காண
பாரதம். இந்தச் சுலோகப் பொருளோடு,
‘நீட்டு மவ்வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான்;
மீட்டும் நல்வரம் ஒன்றுமுன் வேண்டினன் வீமன்;
ஈட்டு மாநிதி இலங்கைதீ இட்டநாள் இசைந்த
மோட்டு ருத்தனைக் காட்டுகென் றிறைஞ்சினன் முதல்வன்.’
(வில்லி பா.ஆரணிய பர்.புட்ப யாத். செய். 49.)
என்ற செய்யுள் ஒப்பு நோக்கலாகும்.
பகவத் சக்தி அறிந்தவர்
அவா மிகுதி
பூதகாலம் –
வடதள சாயி சாத்தின திருத் துழாய் அதே வாசனை உடன் அனுபவிக்க ஆசைப் படுகிறார்
முதல் பாசுரத்தில்
தேச கால பிற்பாடு ஆனாலும் அவற்றைஅவன் படிகளை -இப்பொழுது பெற்று
அனுபவிக்க ஆசைப்படுகிறாள் –
வட தள சாயி திருவடிகளில் சாத்திய திருத் துழாய் செவ்வியை
அனுபவிக்க வல்வினையேன் மட வல்லி –
த ண் அம் துழாய்
பாலனாய் ஏழு உலகும் உண்டு
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணல்
அன்னத்துக்கு வசம் ஆனான் –
பாலனாய் -சின்ன குழந்தை பால முகுந்தம்
பருவம் முடிந்தபின்பு -இத்தை செய்தான் ஆகில் -இன்றி குழைந்தை பருவத்தில் செய்ததால் அவன் மேலே ஈடுபாடு –
அனைத்து தசையிலும் ரஷகன் ஆகவே இருந்தவன்
பூர்வ நிலை நெஞ்சில் படாமல் -ஆத்மாநாம் மானுஷ்ய -மன்யே
ராமன் ஆன பின்பு -உண்மையான நிலை -மன்யே பகுமன்யே அதை பெரியதாக மதித்து இருக்கிறேன்
குவாலாக கொண்டான்
அது போலே பாலனாக ஆனான்
படி -ஒப்பு வேரு பாலன் இல்லை –
கலப்பற்ற பிள்ளைத் தனம்
ஏழு உலகும் உண்டு -இதுசாத்மிக்கும் இது சாதிமிக்காது அறியாமல் உண்டான் –
ரஷகன் வியாபாரம் என்பதால் பண்ணின செயல் ரஷகம் ஆனது
பண்ணினது எல்லாம் ஆசைப்படுகிறாள்
கிரமம் பாராமல் உண்டான் –
அப்படியே உண்டான்
பரிவு இன்றி அனாயாசேன
ஆலிலை பலனான ஆலிலை அலம் தளிர்
அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’
என்றபடி. அவ்வடம் – அந்த ஆலமரம். சுத்த பத்திரம் – வெற்று இலை.
அஹம் அன்னம் அன்ன வசம் ஆனான்
ஜீவாத்மா வசம் ஆனான்
அண்ணலார் -வலப்பக்கம் சயனித்து ஜரிக்காமல் இருக்க
அதற்குத் தகுதியாக’ என்றது, ‘வலக்கை கீழாக’ என்றபடி.
‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்தபழஞ்
சேமப் புவனம் செரிக்கும்என் றேசிவன் மாமுடிக்கு
நாமப் புனல்தந்த பொற்றாள் அரங்கர் நலஞ்சிறந்த
வாமத் திருக்கர மேலாக வேகண் வளர்வதுவே.’
என்பது திருவரங்கத்து மாலை.
சயன திருக்கோலம் வலது பக்கம் சயனித்து எங்கும் –
அண்ணலார் -சிறு பருவத்திலும் ரஷகன் -மோஹித்து இருக்கும் நிலையிலும் அண்ணலார்
ஸ்வரூபம் இருவரும் மாறாமல் இருப்பது
ஸ்வாமி -சர்வ ரஷகன்
என்னை ரஷிக்க வேண்டாமா
தாள் இணை -சேஷி திருவடி
அடியிலே பச்சை இட்டாள்
பிராமணர் பிச்செறினாலும் ஒத்து சொல்வது போலே
அடியிலே அப்யசிதத்தை சொல்லா நின்றாள்
தாள் இணை மேல் உள்ள த ண் அம் துழாய் என்றே
இதை ஒன்றே சொல்லி
பூத காலம் என்றாலும் செவியில் படுகிறது இல்லை -கெடுவாய்
யுக்தி -சொல்லி புரியும் நிலை இல்லையே இவள் மோகித்து இருக்க
மாலும் மயங்கி
உள் அழிந்து –
மாணிக்கம் பிரகாசிக்க நெருப்பு துண்டு -தொட்டால் சுடாதே
மோகத்தில் -இருந்தாலும் விடாமல் கேட்கிறாள் –
உணர்ந்து இருந்து சோகிக்கிற நான்
மடப்பு பற்றிற்று விடாமல்
வல்லி -கொள் கொம்பு உடன் சேர்க்கும் பருவம்
ஜனகன் வார்த்தை போலே ஸ்ரீராமா. அயோத். 119 : 36.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply