ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -385-396….

வார்த்தை -385-

அனந்தாழ்வான் மூன்று சம்வத்சரமாக வாதமாய்க் கிடக்க –
ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பவர் சிலர் –
திருவேங்கடமுடையான் செய்து அருளுகிறது என் – என்று வெறுக்க –
திருவேங்கடமுடையான் ஹிதம் அல்லது செய்யான் -என்று அருளிச் செய்தார் –

——————————————————

வார்த்தை -386-
அனந்தாழ்வான் திரு நந்தவனத்துக்கு மண் சுமவா நிற்க –
பிள்ளைகளிலே ஒருவன் சென்று -கூடையை வாங்க –
நான் இத்தை விடில் இளைப்பன் -நீ இத்தைத் தொடில் இளைப்புதி -என்ற அளவிலே –
இளைப்பாகாது -என்று பின்னையும் வாங்க –
ஆனால் நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்க வேணுமோ –
நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கி சுமக்க மாட்டாயோ -என்று அருளிச் செய்தார் –

—————————————————————

வார்த்தை -387-

அனந்தாழ்வான் திரு நந்தவனத்திலே திருமண்டபத்திலே இருந்து திருமாலை கட்டா நிற்க –
திருவேங்கடமுடையான் அருள் பாடிட –
இவரும் பேசாதே இருந்து திருமாலையும் கட்டிக்கொண்டு பின்பு கோயிலுக்குள் புக்கவாறே –
நான் அழைக்க வராவிட்டது என் -என்று திரு உள்ளமாக –

தேவரீரைக் கொண்டு கார்யம் என் கருமுகை மொட்டு வெடியா நிற்க -என்ன –
ஆனால் -நாம் உம்மை இங்கே நின்று போகச் சொன்னோமாகில் செய்வது என் -என்ன –
பரன் சென்று சேர் திருவேம்கடமாமலை அன்றோ –
தேவரீர் அன்றோ வந்தேறிகள் -இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ -என்றார் –

—————————————————————————————–

வார்த்தை -388-
அனந்தாழ்வான் திருபடலிகை யிலே திருமாலையைச் சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கு –
கைப் புடையிலே நின்று அருளப்பாடு என்றவாறே
திருத் திரையை நீக்கித் திருமாலையை நீட்டி கையை மறித்துப் போருவர் –
நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -பெரியாழ்வார் திருமொழி -3-6-6-
தனது கையில் சக்தி இல்லை -மாலை கட்டும் கைங்கர்யம் தானே செய்வித்துக் கொண்டான் என்றபடி

—————————————————————-

வார்த்தை -389-

பீஷ்மர் ஞாநாதிகராய் யிருக்க –
பகவத் பரிக்ருஹீத பஷ பிரதிபஷத்தில் நின்று கிருஷ்ணன் திருமேனியில் அகப்பட அம்பு படும்படியான  செயல் கூடிற்று –

ராஜக்களை பணிக்கன் சிரமம் செய்விக்கும் போது நினைத்த இடத்திலே தட்டுகை ப்ராப்தமாம் போலே –
ஏவம்விதரும் சர்வேஸ்வரனுடைய லீலா ரஸாதீ ந சங்கல்ப அந்தர்கதர் –

——————————————————————–

வார்த்தை -390-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஐஸ்வர் யார்தியோ -அநந்ய பிரயோஜநனோ -என்னில்
அஸ்மாதாதிகள் பிரபன்னராய் வைத்தே சரீர அவசாநத்தளவும்
ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிறாப் போலே –
அநந்ய ப்ரயோஜநனாயே அதிகார அவசாநத்தளவும் ஐஸ்வர்ய அனுபவம் பண்ணுகிறான்

————————————————————-

வார்த்தை -391–
முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் பட்டருக்கு அருளிச் செய்த வார்த்தை –
எம்பெருமான் சிலரைப் போம் என்னும் –
சிலரை வா வென்னும் –
சிலரைப் போது என்னும் –

பிரயோஜனந்தர நிஷ்டரை பலத்தைக் கொடுத்து போ என்னும் –
கர்ம ஜ்ஞான நிஷ்டரை கர்மம் கழிந்தவாறே வா வென்னும் —
அநந்ய பிரயோஜனரை போது என்னும் -போதுவீர் போதுமினோ -உடனே வாருங்கோள் என்று கை நீட்டி வரவேற்ப்பான்

இந்த தேசத்தில் ஒரு அநந்ய  பிரயோஜனரை உண்டு என்று இருந்தோமோ –
உண்டாகில் அங்கே கண்டு கொள்கிறோம் -எங்கனே என்னில் –

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமான் என்றால் விஸ்வசிப்பார் இல்லை –
விஸ்வசித்தால் க்ருதஞ்ஜராய் இருப்பார் இல்லை –
க்ருதஞ்ஜராய் பெற்றதாகில் பகவத் கைங்கர்யம் விரசமாய் இருக்கும் –

இவை மூன்றும் கூடிற்று ஆகிலும் -ராக த்வேஷ அபஹதர் ஆகையாலே
பாகவத கைங்கர்யத்துக்கு இசையார் –
அதுவும் கூடிற்றாகில் ஆசார்ய உடைய தேக யாத்ரையைக் கண்டு நெகிழ நினைப்பர்கள் –
இதுவும் கூடிற்றாகில் தங்களை ஸூத்தராக நினைப்பர்கள் –

ஆகையால் பகவத் குணம் சொல்லுகைக்கும் கேட்கைக்கும் இவ்விடத்தில் ஆள் இல்லை காணும் –

சரஸ்வதி பண்டாரத்தில் எழுந்து அருளி இருந்து பணித்த வார்த்தை –

——————————————————

வார்த்தை -392-

திருமாலையாண்டான் அருளிச் செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோம் என்றால் சம்சாரத்தில் ஆள் இல்லை -அது எங்கனே என்னில் –
ஒரு பாக்கைப் புதைத்து அது உருவாந்தனையும் செல்லத் தலையாலே எரு சுமந்து ரஷித்து
அதினருகே கூரை கட்டி -பதினாறாட்டைக் காலம் காத்துக் கிடந்தால்
கடைவழி ஒரு கொட்டைப் பாக்காயிற்று கிடைப்பது –

அது போல் அன்றிக்கே இழக்கிறது ஹேயமான சம்சாரத்தை –
பெறுகிறது விலஷணமான பரம பதத்தை –
இதுக்கு உடலாக ஒரு வார்த்தை அருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலும்
க்ருதஞ்ஜர் ஆகாத சம்சாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்வது -என்று வெறுத்தார் –

—————————————————————–

வார்த்தை -393-
அவதாரம் இருக்கும்படி என் -என்று நம்பிள்ளையை முதலிகள் கேட்க –
மெய் வெளுத்து நாக்கு வற்றி இருக்கும் -என்ன –
அது  என் என்ன –

அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்
பெற்றால் பிரயோஜனாந்த பரர்  ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு
வற்றி இருக்கும் -என்று அருளிச் செய்தார் –

————————————————————-

வார்த்தை -394-

ஆளவந்தார் ஒரு நாள் பெருமாளைத் திருவடி தொழ வென்று உள்ளே புகுரா நிற்க
ஒருத்தி அநந்ய பிரயோஜனரைப் போலே கண்ணும் கண்ண நீருமாய் -கழுத்தும் கப்படுமுமாய் -சேலை யுமாய் –
பிரதஷணம் பண்ணா நிற்க -உள்ளுப் புகுராதே புறம்பே நின்றருளி –
பிரயோஜனாந்த பரை யானவள் புறப்பட்டாளோ -என்று கேட்டருள –

இதுக்கு நிதானம் என் -என்று விண்ணப்பம் செய்ய –
பெருமாள் சன்னதியே யாகிலும்
பிரயோஜனந்த பரரோட்டை சேர்த்திக்கு -அதிகாரி விரோதம் பிறந்து -பல விரோதமும்
பிறக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –

———————————————————

வார்த்தை -395-
தேஹாத்ம விவேகம் -பரமாத்ம விவேகம் -த்ரி மூர்த்தி சாம்ய விவேகம் –
புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் -விரோதி அவிரோதி விவேகம் –
உபாய அநுபாய விவேகம் -வைஷ்ணவ அவைஷ்ணவ விவேகம் -துஷ்கர ஸூகர விவேகம் –
ஆசார அநாசார விவேகம் -சிஷ்ய ஆச்சர்ய விவேகம் –
இவைகள் ஒருவனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யங்கள் –

———————————————————-

வார்த்தை -396-

முமுஷுவாய் பிரபன்னனான அதிகாரிக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்தம் -நாலு –
ப்ராப்ய விஷயமும் -பிராபக விஷயமும் -ஆசார்ய விஷயமும் -போஜன விஷயமும் –

ப்ராப்ய விஷயம் ஆவது -சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்திலே போய்
பரம பதத்திலே சென்று -அங்குண்டான பகவத் அனுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –

இதில் அத்யாவச்யம் ஆவது -கைங்கர்யத்தை ஒழிந்த தர்மார்த்த காமங்களிலும் –
மோஷத்தில் கைவல்யம் முதலாக உள்ள புரஷார்தங்களிலும் கால் தாழாதே
இக்கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –

பிராபக விஷயமாவது -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் -விக்ரஹ விசிஷ்டன முமாய் உள்ள ஈஸ்வரன் –

இதில் அத்யாவசியம் ஆவது -பிராட்டி புருஷகாரமாக அவனே
உபாயம் என்று அறுதி இட்டு -உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞான பக்திகளில் கால் தாழாமல் இருக்கை –

ஆசார்ய விஷயமாவது -இவ்வுபாய ஸ்வீகாரம் பண்ணினவன் சரீர அவசாநத்து அளவும் –
மநோ வாக் காயங்களினால் அநுகூலித்து வர்திக்கை –
அதாவது –
உகந்து அருளின நிலங்களிலும் -அர்ச்சாவதார ப்ரேமம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும் -த்ரிவித கரணத்தாலும் ப்ராதிகூல்யம் தவிருகை –

இதில் அத்யாவச்யம் ஆவது -இப்படி வர்த்திக்கும் இடத்தில் -க்யாதி  லாப பூஜைகளைப்
பற்றவாதல் -பகவத் ப்ராப்திக்கு சாதனம் என்றாதல் -செய்யாதே ஸ்வயம் பிரயோஜனம்
என்று இருக்கை –

போஜன விஷயம் ஆவது -ந்யாய ஆர்ஜித த்ரவ்யத்தாலே தாஹம் போம் அளவே
என்று ஜீவிக்கை –

இதில் அத்யாவச்யம் ஆவது -அநுகூலரை நெருக்கி யாதல் -பிரதிகூலரை
அபேஷித்தது ஆதல் -அமுதுபடி த்ரவ்யத்தை யாதல் ஜீவனம் ஆக்காதே
உடம்பை வருத்தி யாதல் அயாசிதமாக வாதல் வந்த த்ரவ்யதைக் கொண்டு
தேக யாத்ரை நடத்துகை –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: