ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -397-408….

வார்த்தை -397-
நம்பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
அந்யோந்யம் பிணங்கி ஒருவரை ஒருவர் மடி பிடித்துக் கொண்டு செல்ல –
அதுக்கடி என்ன -என்று பிள்ளை கேட்டருள -பெரியவாச்சான் பிள்ளை கேட்டருள-
இத்தனை நாளாக சேவித்து நின்றதில் தேங்கின அர்த்தம் இது என்று காட்ட வந்தார்கள் -என்ன –
கோ மூத்தவன் பாடே போகாதே நம்பாடே வந்தார்கள் – என்று அருளினார் –

————————————————————

வார்த்தை -398-
சர்ப்பாஸ் யகதமான மண்டூகத்தினுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்தார் என்று
நம் பிள்ளை அருளிச் செய்தார் -இத்தால்
பர துக்க அஸ ஹிஷ்ணுத்வமும் –
பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வமும் வைஷ்ணவனுக்கு ஸ்வபாவம் -என்றபடி –

——————————————————————-

வார்த்தை -399-
பிள்ளை திருவழுதி நாட்டு அரையருக்கு அந்திம தசையிலே ஒரு சோகம் உண்டாயிற்று –
சுற்றில் இருந்த முதலிகள் அந்யோந்யம் முகம் பார்த்தார்கள் –

இவர் அத்தை திரு உள்ளத்திலே கோலி -வாரி கோள் முதலிகாள் -சம்சாரிகள் இழவுக்கு நொந்தோம் காணும் கோள் –
அவர்களில் நமக்கு அல்பம் ஆய்த்து வாசி -எங்கனே என்னில் –

நாம் இடுவது ஒரு தண்டன் – பண்ணுவது ஒரு பிரபத்தி –
இழப்பது சம்சாரம் -பெறுவது பரமபதம் –
இத்தை அறியாதே அத பதிக்கிறார்களே என்று கிலேசம் ஆயிற்று காணும் கோள்–என்ன –
இவர்களும் க்ருதார்தர் ஆனார்கள்

——————————————————————-

வார்த்தை –400-
வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் காலத்திலே பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து
அருளி இருக்கச் செய்தே –
வீர சுந்தர பட்டான் என்று பிள்ளை  பிள்ளை யாழ்வான்
ஆண்டாளுக்கு விண்ணப்பம் செய்ய -போர க்லேசித்தார் –

பட்டரை கோயிலில் இருக்கவும் கூட ஒண்ணாதபடி பண்ணின இவன் பட்டான் என்றதுக்கு இது வென் -என்ன –

பிள்ளையோடு உண்டான விரோதத்தாலே அத்ருஷ்டத்தை இழந்தான் –
சில நாள் இருந்து த்ருஷ்ட சுகமாகிலும் அனுபவிக்கிறானோ என்று இருந்தோம் –
அதுவும் கூட இழந்தான் ஆகாதே -என்று க்லேசமாயிற்று -என்று அருளிச் செய்தார் –

—————————————————————

வார்த்தை -401-

நம்பிள்ளை திரு உள்ளத்திலே அபேஷை நடக்கும்படியையும் –
அநபேஷை நடக்கும்படியையும் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்யும் படி –

அபேஷை நடப்பது -அஹங்கார நிரசநத்திலும் -அவிவேக நிரசநத்திலும் –
அநபேஷை நடப்பது -ஆத்ம ஜ்ஞானத்திலும் -ஆத்ம லாபத்திலும் -பகவல் லாபத்திலும் –

ஆத்ம ஜ்ஞானம் ஆவது -ஜ்ஞாநானந்த சாஷாத்காரம் –
ஆத்ம லாபம் ஆவது -தத் பிரதிபந்தக நிவ்ருத்தி –
பகவல் லாபமாவது -ஸ்வ யத்ன சாத்யமுமாய் -ஸ்வ கதமுமான பகவத் அநுபவத்தை –

———————————————————————

வார்த்தை -402-

எம்பெருமானார் எம்பாரை  நோக்கி -ஸ்ரீ கோவிந்த பெருமாளே –
எம்பெருமான் எளியன் என்று பலபடியாலும் சொன்னோமே என்ன –
இப்படி எளியனாகில் நமக்கு என் -என்று எல்லோரும் உபேஷிகைக்கு உடலாம் இத்தனை யன்றோ -என்ன –
இப்படி இருக்கிற அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளது
உமக்கு ஒருவருக்கும் அன்றோ -என்று அருளினார் –

——————————————————————-

வார்த்தை -403-
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய்மொழி -1-3-2- என்கிற இடம்
அருளிச் செய்யா நிற்க –
இப்படி குணவானாய் இருக்கிற அவனை சாஷாத்கரிக்க விரகு இல்லையோ என்று
மணக்கால் நம்பியை ஆளவந்தார் கேட்டருள –

எனக்கு சேஷத்வ அனுசந்தானமே அமையும் நீர் குருகை காவல் அப்பன் பாடே செல்லும் என்ன –
இவரும் அங்கே செல்ல –

அவரும் காலம் குறித்து விட -இவரும் திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளி –
அங்கே அக்காலத்தை நினைத்து -அப்பன் பக்கல் ஏறப் போக ஒரு புஷ்பகம் பெற்றிலோமே – என்று க்லேசிக்க –
பெருமாளும் -நாம் செய்தபடி காணும் இது -சேஷத்வ ஜ்ஞானமே அமையும் என்று அருளினார் –

—————————————————————-

வார்த்தை -404-

நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
முமுஷுவான அதிகாரிக்கு அனுசந்தேயம் -ஸ்வரூபம் -பரதந்த்ரம் –
விரோதி -பிரபலம் – புருஷார்த்தம் -அந்ய சாத்தியமன்று –
பரிஹார்யம் தேவதாந்திர பஜனமும் -பாகவத அபசாரமும் ஆகிற படு குழிகள் -என்று அருளினார் –

———————————————————————

வார்த்தை -405-
துறை அறிந்து இழிந்து
முகம் அறிந்து கோத்து
விலை அறிந்து பரிமாறி
நினைவு அறிந்து
அடிமை செய்ய வேண்டும் –

—————————————————————

வார்த்தை -406-

ஜ்ஞானத்துக்கு இலக்கு -ஆச்சார்ய குணம் –
அஜ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு -நிஷித்த அனுஷ்டானம் –

———————————————————

வார்த்தை -407-
நம்பிள்ளை திருவெள்ளறை தேன கொள சோலை தாஸர் மாளிகையிலே எழுந்தருளி –
அவருடைய திருமாளிகையிலேயே ஐஸ்வர்யத்தைக் கண்டு ப்ரீதராய் இருக்க –
இதுக் கடி என் என்று எதிராஜ தாசர் பிள்ளையைக் கேட்க –

நம்பிள்ளை –
இஸ் சம்ஸார ஸுகம் தான் மூன்று படியாய் இருக்கும் –
இஸ் ஸுகத்தை தனக்கு என்றும் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்றும் –
எம்பெருமானுக்கே என்றும் -நினைக்கை காண் –

தனக்கு என்கை -நரக அநுபவ சத்ருசம் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை ஸ்வர்க்க அநுபவ சத்ருசம் –
எம்பெருமானுக்கே என்கை பரமபத அநுபவ சத்ருசம் –

————————————————

வார்த்தை -408-
ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை விட்டு –
ஔ பாதிகமான பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொள்ளுகிற இத்தனை இறே
என்று பெரியவாச்சான் பிள்ளை –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: