அஃதே உய்யப்புகும் ஆறுஎன்று கண்ணன் கழல்கள்மேல்
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய்உய்யற் பாலரே.
பொ-ரை : ‘உய்வதற்கு உரிய வழி மேலே கூறிய அதுவே என்று கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, பறிக்கப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலையாற்சூழப்பட்ட திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அந்தரங்கக் கைங்கரிய ரூபமாகச் செய்யப்பட்ட
அழகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இறைவனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்துப் பாடிய இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் குறைவில்லாதவாறு கற்பவர்கள், ஆழ்ந்துள்ள துன்பங்கள் நீங்கி நற்கதி பெறுவார்கள்,’ என்றவாறு.
வி-கு : ‘உய்யப் புகுமாறு அஃதே என்று கண்ணன் கழல்கள் மேல் சடகோபன் குற்றேவல் பாடல் இவை பத்தும் கற்றவர் துயர் போய் உய்யற்பாலர்,’ என்க.
ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, பகவானுடைய கைங்கரியத்தையே புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.
உய்யப் புகுமாறு அஃதே என்று – ‘திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. கண்ணன் கழல்கள் மேல் – 2‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, 3கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே? அதுதன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி 4‘அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது? 5‘துயர்அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்; 6‘வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு. இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்; ‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம்
செய்தார். இது என்ன 1அடிப்பாடுதான்! 2‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
கொய்பூம்பொழில் சூழ்குருகூர்ச் சடகோபன் குற்றேவல் – எப்பொழுதும் பூவும் தளிருமாய் இருக்கின்ற திருச்சோலை சூழ்ந்த திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார், சர்வேசுவரன் திருவடிகளில் அந்தரங்கக் கைங்கரியம் செய்தவை இவைதாம். செய்கோலத்து ஆயிரம் – கவிக்குச் சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம். செய் – செய்த கவி என்னுதல்; ‘குற்றேவல் செய்’ என்று மேலே கூட்டி, ‘வாசிகமான அடிமை’ என்னுதல். சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய் உய்யற்பாலர் – அவன் குணங்களைத் தொடுத்துப் பாடின இவற்றில் ஒன்றும் குறையாமல் கற்றவர்கள் பகவானுக்கு வேறுபட்ட பலன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களாகிற கேடுகள் நீங்கி உய்யும் தன்மையர் ஆவர். அஃகல் – சுருங்கல். ‘உய்தலே தன்மையாக உடையர் ஆவர்,’ என்பார், ‘உய்யற்பாலர்’ என்கிறார். ‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஒருநா யகமாய் உலகுக்கு வானோர்
இருநாட்டில் ஏறிஉய்க்கும் இன்பம் – திரமாகா
மன்னுயிர்ப்போ கம்தீது; மால்அடிமை யேஇனிதாம்;
பன்னிஇவை மாறன்உரைப் பால்.திருவாய்மொழி, 9. 1 : 10. ‘பரோபதேசம் முடிக்கிறதும்’ என்றது, ‘விரோதி
சொரூப விஷயமான பரோபதேசத்தை முடிக்கிறதும்’ என்றபடி. ‘வீடுமின்
முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்,’ ‘கொண்ட பெண்டிர்’
என்கிற நான்கு திருவாய்மொழிகளும் விரோதி சொரூப விஷயமான
பரோபதேசமாதல் காண்க. அவற்றுள், ‘கொண்ட பெண்டிர்’ என்ற
திருவாய்மொழி, பரோபதேசம் செய்யும் திருவாய்மொழிகளில் ஈற்றுத்
திருவாய்மொழியாதலின், ‘பரோபதேசத்தை முடிக்கிறதும்’ என்கிறார்.பத்தும் கற்றார் பகவத் கைங்கர்யம் அடைவார்
பலன் சொல்லி தலைக் கட்டுகிறார் –
அதுவே உயப் புகுமாறு
திருநாரணன் தாள் உஜ்ஜீவிக்க உபாயம் உபேயம்
கண்ணன் தாள் பற்றி
கண்ணன் கழல்கள் நினைமினோ
தான் அனுஷ்டித்து அதையே உபதேசிக்க
இவ்வடி உடையார்
துயர் அடி தொழுது
கண்ணன் தாள் பற்றி கேடு இலேன்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
இது என்ன அடிப்பாடு
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
கண்ணன் கழல்க்சல் நண்ணும் –திண்ணம் நாரணமே
அந்தரங்க வ்ருத்தி –
குற்றேவல் செய் சேர்த்து –
செய்த கவி
வாசிகமான அடிமை
கோலம் அழகு உள்ள கவி
சீர்த் தொடை குணங்கள் தொகுத்து
ஒன்றும் குறையாமல் கற்று
ஆழ துயர்போய்
ஐஸ்வர்யம் கைவல்யம் நீங்கி உஜ்ஜீவிப்பர்
காலம் பெற சிந்தித்து உய்மினோ ஆவார்சாரம்
ஒரு நாயகமாய் உலகுக்கு -இந்த உலக இன்பம்
வானோர் இன்பம் ஐஸ்வர்யம் திறம் ஆகா
மன்னுயிர் -கைவல்யம்
மால் அடிமையே ஈந்தான்நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply