திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

தாள்ப ரப்பிமண் தாவிய ஈசனை
நீள்பொ ழிற்குரு கூர்ச்சட கோபன்சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வுஎய்தி ஞாலம் புகழவே.

    பொ-ரை : திருவடியைப் பரப்பி உலகத்தை அளந்து கொண்ட சர்வேசுவரனை, நீளுகின்ற சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூமியிலுள்ளவர்களெல்லாரும் புகழும்படி பேற்றினையடைந்து வாழ்வார்கள்.

    வி-கு : ‘பரப்பித் தாவிய ஈசன்’ என்க. கேழ் – ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!’ (கம். அயோத்.) என்ற இடத்துக் ‘கேழ்’ இப்பொருளதாதல் காண்க. ‘வல்லவர் ஞாலம் புகழ வாழ்வெய்தி வாழ்வர்,’ எனக் கூட்டுக. ஞாலம் – ஆகுபெயர்.

    ஈடு :  முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், ஆழ்வார் வேண்டிக்கொண்டபடியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எத்தகைய அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

    தாள் பரப்பி மண் தாவிய ஈசனை – கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற்போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்துகொண்ட சர்வேசுவரனை. நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் – திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு 1அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி வளர்ந்த பொழிலையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த. ‘ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின், 2’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும், 3’மண் அளந்த இணைத்

தாமரைகள்’ என்றும், 1‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ என்றும் 2ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்; அன்றியும், எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.

    கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் – ஒப்பில்லாத இப்பத்தையும் கற்க வல்லவர்கள். இப்பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான கைங்கரியத்தை விரும்பிய பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை. ஞாலம் புகழவே வாழ்வு எய்தி வாழ்வர் – 3‘இளையபெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படைவீடாகக் கொண்டாடியது போன்று, எல்லாரும் புகழும்படியாகக் கைங்கரியத்தை விரும்பிவிடுதல் அன்றி இவருடைய விருப்பமே விருப்பமாகக் கைங்கரியமாகிற பேற்றினையடைந்து அனுபவிக்கப் பெறுவர்கள். இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி, கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்கவேண்டி ஏத்துவார்களே அன்றோ? அங்ஙனன்றி, இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல். ‘விசேடஞ்

ஞர்கள் ஏத்துதலேயன்றி, அவர்களில் சிலர் நெஞ்சிலே துவேஷமுங்கிடக்க ஏத்துதலேயன்றி, இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

    முதற்பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் எத்தகைய அடிமைகளும் செய்யவேணும் என்று விரும்பினார்; இரண்டாம் பாட்டில், ‘அது ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை,’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைச் தரச்சொல்ல வேண்டுமோ?’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘எனக்குத் தன்னைத் தந்தான் என்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக் கிடையாமல் நிற்கிறவனுக்கு?’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையே போம்’ என்றார் ஏழாம் பாட்டில், ‘இக்கைங்கரியத்தைத் திருமலையாழ்வார் தாமே நமக்குத் தருவர்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘அத்திருமலையாழ்வார் தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தருவர்,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையாழ்வார் எல்லாம் வேண்டுமோ நமக்குப் பேற்றினைத் தருகைக்கு? அவருடைய சம்பந்தமுடையார் அமையும்,’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே அடியர் ஆனார் எல்லாரும் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்றார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்கநலம் சேர்மாறன்
பூங்கழலை நெஞ்சே! புகழ்.

‘கைங்கரியத்தைப் பெற்று, ஞாலம் புகழ வாழ்ந்த பேர் உளரோ?’ என்ன,
அதற்கு விடையாக, ‘இளையபெருமாள் ஒருவரே!’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். இவ்விடத்தில்,

  ‘திருவரை சுற்றிய சீரை ஆடையன்
பொருவருந் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ! இவர்க்குஇவ்வூர் உறவென் றார்சிலர்.
‘என்பத்தைத் கேட்ட மைந்தன் இராமனுக் கிளையா ரென்று
முன்பொத்த தோற்றத் தேமில் யானென்றும் முடிவி லாத
துன்பத்துக் கேது வானேன்; அவனது துடைக்க நின்றான்;
அன்பத்துக் கெல்லை உண்டே? அழகிதென் னடிமை’ என்றான்.’

  என்ற கம்ப ராமாயணச் செய்யுள்கள் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

நிகமத்தில் -ஆழ்வார் பிரார்த்தித்தபடி எல்ல வித கைங்கர்யங்களும் செய்ய பெறுவார்
தாள் பரப்பி மண் தாவிய ஈசன்
ஞாலம் புகழ வாழ்வு எய்து
கடினமான தேசத்தில் பூவை பரப்பினது போலே
தாவிய ஈசன்
திருவேம்கடமுடையான்
கொண்டாய் குறளாய்
மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன்
மதுகைடபார சமஸ்த ஜகதாம்
மதக தாயாக இருப்பவன்
மாதா அளப்பதும்
தாள் பரப்பி மண் தாவிய ஈசன்
எல்லாரையும் திருவடிகளின் கீழே இட்டு கொஇண்டுஈ
வரையாதே காணும் வானரமும்
வாமனன் சாம்யம்
அணுக்கர் இட்டால் போலே சோலைகள் குடை பொழில் உள்ள திருமலை
அவன் ஓங்கினான் பொழிலும் நீண்டு குடை பிடிக்க
கேளில் ஒப்பு இல்லாமை
கைங்கர்யம் மனோரதித்த
பத்தும் வாழ்வு கைங்கர்யம்
மனோ ரதிது விடுவர் அன்றிக்கே பெற்று
ஞாலம் புகழவே இளைய பெருமாளை படை வீடாக கொண்டாடுவது போலே
வாழ்வு எய்தி -ஜீவிக் க வேண்டியபடியாலே -ஸ்தோத்ரம் செய்பவர் போல் அன்றிக்கே
இவனை ஏத்த பெற்றோமே ப்ரீதி உடன் ஏத்துவர்
நெஞ்சில் த் வேஷம் இன்றி இருந்ததே குடியாக ஸ்தோத்ரம் செய்வர் பாசுரம் தோறும் அருளிய அர்த்தம் தொகுத்து அருளுகிறார்
ஒளிவிழா காலம் உண்டனாகி மன்னி
மாலுக்கு
ஏழு சிகர வேம்கடத்தில்
பாரித்த மாறன்
பூம் கழலை நெஞ்சே புகழ் போற்று மா முனிகள்
பாரித்த வாசிக கைங்கர்யம் அடுத்து திருவாய்மொழியில் அருளுகிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: