திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வேங்க டங்கள்மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துஉறை வார்க்கு நமஎன்னல்
ஆஅங் கடமை அதுசுமந் தார்கட்கே.

    பொ-ரை : ‘திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவர்க்கு வணக்கம்,’
என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியமாம்; அதனைச் சுமந்தவர்கட்கு, தீர்க்கக்கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்துவிடும்; அடியார்களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள்.

    வி-கு : ‘கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்,’ என மாறுக. கடன் – கடம்; னகரத்திற்கு மகரம் வந்தது. ‘கள்’ பன்மையையுணர்த்த வந்தது. ‘சுமந்தார்கட்கு வேம்’ எனக் கூட்டுக.

    ஈடு : ஆறாம் பாட்டு : 2மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான ‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். ‘இறைவன் பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பெற்ற அளவைக் கொண்டு மனம் நிறைவு பெறாதவனாகவிருந்தாலும், நாம் ஆசை

யுடன் கூடினவர்களாகவிருந்தாலும், 1சரீர சம்பந்தங்காரணமாகத் தொன்றுதொட்டு நாம் செய்து வைத்த, பகவானையடைவதற்குத் தடையாகவுள்ள கர்மங்கள் செய்வன என்?’ என்ன, ‘நாம் இதிலே துணியவே அவையெல்லாம் தாமாகவே நசிக்கும்,’ என்கிறார்.

    கடங்கள் வேம் – 2‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பிதிரர் கடனையும் தீர்க்கக் கடவன்,’ என்றும், 3‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோட்சத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோட்சத்தையடைய விரும்புகிறவன் கீழே விழுகிறான்,’ என்றும் சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள்வேம். ‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி. மெய்ம்மேல் வினை முற்றவும் – சரீரத்தின் சம்பந்தங்காரணமாக வருகின்ற பாவங்களைச் சொல்லுகிறது. ஆக, கடன்கள், மெய் மேல் வினைமுற்றவும் வேம் – நசிக்கும் என்றபடி. 1இங்ஙனம் ஆளவந்தார் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘இதற்கு, வேதாந்தத்திற்சொல்லுகிற கட்டளையிலே பொருள் சொல்ல அமையாதோ?’ என்று இங்ஙனம் அருளிச்செய்வர். அதாவது, 2‘ஞானத்தையடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத்தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாமலிருத்தலும், பூர்வாகத்துக்கு நாசமும் உண்டாகும்’ என்றும், 3‘இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப் பாவங்களும் நெருப்பிற்போடப்பட்ட துய் போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ என்றும் சொல்லுகிறபடியே ‘வேம்’ என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும், உத்தராகத்துக்குச் சம்பந்தியாமற்போய்விடுகையும் சொல்லுதல். அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், சம்பந்தியாமற்போதலைச் சொல்லிற்றாகவுமாம்.பூர்வாகமாவது – ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த தீவினைகள். உத்தராகமாவது – ஞானம் பிறந்த பின்பு அஜாக்கிரதையால் செய்து போந்த தீவினைகள். ‘ஆயின், பிரபந்நனுக்கு உத்தராகம் வருவதற்குக் காரணம் உண்டோ?’ எனின், ஞானம் பிறந்த பின்பும் விரோதியான சரீர சம்பந்தம் தொடர்ந்து வருகையினாலே பாவங்களிலே செல்லுவான்; பின்னர், ஞானம் பிறந்து, கடுக மீண்டு முன்பு செய்ததற்கு ‘நாம் என் செய்தோமானோம்!’ என்று கழிவிரக்கங்கொண்டு வருந்துவான். கடங்கள் மேல் வினை முற்றவும் வேம்; இது மெய்-சத்தியம். ‘இப்படிச் செய்கின்றவனுடைய எல்லாப் பாவங்களும் அழிகின்றன ‘என்பது உபநிடத வாக்கியம். ‘ஆயின், உபநிடதம் கூறின், அது மெய்யாக வேண்டுமோ?’ எனின், பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் திரிபுணர்ச்சிக்குக் காரணமாய் அவ்வுணர்ச்சியை நீக்குவதாயுமிருக்கும்; அவ்வாறு அன்றி, ‘உண்மையை உள்ளவாறே கூறுவது சாஸ்திரம்,’ என்கிறபடியே, சாஸ்திரம் சொல்லிற்று என்றால் அவ்வர்த்தம் மெய்யாக இருக்குமன்றோ?

    ‘ஆயின், மேல் வினை முற்றவும் சாராவாகில், அவற்றிற்குப் போக்கடி என்?’ எனின், 1கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் நாலடி வர நின்றவாறே, அச்சமயத்திலேயே ‘உன் விரோதிகளைச் சொல்லாய்’ என்றார் அன்றோ? இவ்விடத்திலே பட்டர் ஒரு ஐதிஹ்யம் அருளிச்செய்வர்: ‘பண்டு தலையில் மயிர் இல்லாதான்

ஒருவன் நெல் அளந்துகொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று, ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்றுமின்று; கண்டு போக வந்தேன்,’ என்ன, ஆகில், ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்துவிட, அவன் அதனைக்கொண்டு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து, ‘இது பெற்றது எங்கே?’ என்ன, ‘உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்’ என்ன, அவன் சென்று அங்கேயுள்ள அவனைக் கண்டு, ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையுங்கொண்டு என்னையும் வைது போவதே!’ என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து, ‘ஏன்தான் குழல்கள் அலைய அலைய ஓடி வாராநின்றாய்?’ என்ன, ‘ஒன்றுமின்று, இன்னம் ஒரு கோட்டை கொண்டுபோகச் சொல்ல வந்தேன்,’ என்றானாம்; அப்படியே, கடலை முகங்காட்டுவித்துக்கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது கோலைத் தொடுப்பதாகாநிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே, ‘உனக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி, ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’ என்றார் அன்றோ?

    இனி, முதற்பாசுரத்திலே 1சொல்லாமல் விடப்பட்டதொரு பொருளைச் சொல்லுகிறார் மேல்: தாங்கள் – மற்றை விஷயங்களில் விரக்தராய்க் கைங்கரிய ருசியுடையராயிருக்குமவர்கள். தங்கட்கு – இப்படிப்பட்ட ருசியுடையராயிருக்கிற தங்களுக்கு. நல்லனவே செய்வார் – தங்கள் சொரூபத்தோடு சேர்ந்த கைங்கரியத்தையே செய்வார்கள். ‘ஆக, இதனால், பலத்தை அனுபவிக்கிறவனுக்குப் பலத்தைப் போன்று விரோதி கழிதலைப் பிரார்த்தித்துப் பெறவேண்டியிருக்குமோ?’ என்னில், ‘அது வேண்டா; தாங்கள் தங்களுக்கு நன்றான கைங்கரியத்தைச் செய்யாநிற்க அமையும்; இவ்விரோதி தன்னடையே போம்,’ என்கிறார் என்றபடி. ‘ஆனால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் என்பதற்கு, ‘தங்களுக்கு நல்லவையாய்த் தோற்றியவற்றைச் செய்வார்கள்’ என்று பொருள் கூறின் என்னை?’ எனின், அங்ஙனங்கூற ஒண்ணாதே! ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற 1அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி ‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான். ‘நன்று; ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்கிறது, இவர்களை 2எங்ஙனேயாக நினைத்து?’ எனின், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கே – ‘வேங்கடத்துறைவார்க்கு’ இதனால், நான்காம் வேற்றுமையின் அர்த்தம் சொல்லப்படுகிறது; ‘நம:’ – எனக்கு அன்று, அவனுக்கு என்றபடி. என்னல் – இது தான் நெஞ்சில் உண்டாக வேண்டா; சொல்லளவே அமையும்; ‘இதுதான் சிறியதாய் இருப்பினும் இவன்தனக்குச் செய்தற்கு அருமையாக இருக்குமோ?’ எனின், ஆம் – மிக எளிதான காரியம். ‘எளிது எனின் சொரூபத்தோடு சேராததாயிருக்குமோ?’ என்னில், கடமை – செய்யத்தக்கது. அது சுமந்தார்கட்கு – பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சியின் சிறுமையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப்போன்று ‘அது சுமந்தார்கட்கு’ என்கிறார். இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும் அறிந்திருக்கிற இவர்தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்; இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே

சொல்லுகிறாராதல். ‘ஆயின், அவன் நினைவு அப்படியிருக்குமோ?’ எனின், 1‘நம:’ என்ற சொல்லைக் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?

    2‘திரௌபதி வெகுதூரத்தில் வசிக்கின்ற என்னைக் ‘கோவிந்தா!’ என்று கூவி அழுதாள் என்பது யாதொன்று உண்டு; அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே, ‘கோவிந்தா!’ என்று நம் பேரைச் சொன்னாள்; நாம் ஒன்றும் செய்திலோம் என்று அவளைக் கொண்டாடி, தன்னை நிந்தித்துத் திருவுள்ளம் புண்பட்டிருக்குமவனன்றோ? அப்போது சபையில் பிறந்த பரிபவம் நீக்கப்பட்டிருந்தும், ‘நம் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவளுக்கு ஆற்றாமையிலே முகங்காட்டப் பெற்றிலோம்’ என்று தான் உள்ளதனையும் இழவுபட்டிருந்தான் என்றபடி. ‘இழவுபடுகிறது என்? காரியம் செய்யப்படவில்லையோ?’ எனின், 3‘நம்முடைய பெயர் தன் காரியம் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோமே!’ என்று இருந்தான். ‘ஆயின், கிருஷ்ணனையொழியவும் திருப்பெயரே காரியம் செய்யவற்றோ?’ எனின், பொருத்தமில்லாமல் இரண்டு சொற்களைச் சேர்த்துச் சொல்ல அது விஷத்தைப் போக்குதற்குக் காரணம் ஆகாநின்றதே சொற்களின் சத்தியால்? அதைப் போன்றும் போராமை இல்லையன்றே திருநாமம்?

    ‘வேங்கடத்துறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்; ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ எனக் கூட்டுக.

ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடனைக் குறித்தது;
‘மெய் மேல் வினை முற்றவும்’ என்றது, பூர்வோத்தராகங்களைக் குறித்தது;
மெய் – சரீரம். எம்பெருமானார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடன்
போலே அவசியம் அனுபவிக்கத் தக்கவைகளைச் சொல்லி, ‘மேல் வினை
முற்றவும்’ என்றது, உத்தராகத்தைச் சொல்லுகிறது. மெய் – சத்தியம் என்பது
பொருளாம். எம்பெருமானாருடைய நிர்வாகம் இரண்டு வகை: ‘அதாவது,
ஞானத்தையடைந்தவுடன்’ என்றது முதல் ‘சம்பந்தியாமற் போய்விடுகையும்
சொல்லுதல’ என்றது முடிய ஒரு வகை. ‘பூர்வாகத்துக்குச் சொன்ன
அழிவுதானே’ என்றது முதல் ‘சம்பந்தியாமல் போதலைச்
சொல்லிற்றாகவுமாம்’ என்றது முடிய இரண்டாவது வகை.

இவ்விடத்தில்,

  ‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்’

  என்னும் ஆண்டாள் ஸ்ரீ சூக்தியையும், ‘சாரக் கடவனவாய் நின்ற
துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின், உயிரான் அளவின்றி
ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான்
அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும்
அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல
ஞான யோகங்களின் முன்னர்க் கெடுதலான், ‘அழித்துச் சார்தரா’ என்றார்;
மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும்
என்றார்; ‘அஃது

திருமந்த்ரத்தை முதல் பாட்டில் அருளிச் செய்து
நம சப்தார்தம் அதில் ஸ்பஷ்டமாக சொல்ல வில்லையே
அவித்யாதிகள் கழிகை
அதை இங்கே அருளிச் செய்கிறார்
கர்மங்கள் நசிக்கும் தனனடையே
உடம்பு கர்மம் -சரீர சம்பந்த நிபந்தனம் பாப கூடங்கள்
பகவத் பிராப்தி பிரதிபந்தங்கள்
இதில் துணியவே உத்யோக்கிக்க இறங்கவே எண்ணில் துணிக கர்மம் –
மாயனை -பாசுரம் போலே இறங்கவே போகும் தீயினில் தூசாகும்
வேம் கடங்கள் இங்கு
வெந்து போகும் பாபங்கள்
கடன் -எல்லாம் போகும்
மெய் சத்யம்
மேல் வினை வரக் கூடிய பாபங்களும்
வேம்கடது உறை வார்க்கு நம சொன்னால் போதும் –
இது ஒன்றை செய்தால் அவன் சுமந்து இருந்து
கடம் -கடன் என்றபடி மனனே னகர மகரகடைப் போலி
அது போலே இங்கு
கடன்கள் -மனுஷ்யன் பிறக்கும் பொழுதே மூன்று கடன்கள்
ஆளவந்தார் நிர்வாகம் -ப்ரமசர்யென ரிஷிகள் கடன் /யக்ஜம் கொண்டு தேவதைகள் கடன் -பிரஜை பித்ரு கடன் தீர்க்கிறான்

மூன்றையும் தொலைத்த பின் நல்கதி அடைவான்
வேம் -வெந்து போகும்
மெய் மேல் -சரீரம் மேல் வினை கர்மங்கள் -பிரகிருதி சம்பந்தத்தால்
இவை முற்றவும் நசிக்கும்-வேம் -ஆளவந்தார் நிர்வாகம்
எம்பெருமானார் கேட்டு அருளி -வேதாந்தம் சொல்லும் கட்டளை
முன்பு சொனது வேதம் சொன்னபடி –
உத்தர பூர்வாக
ஏவம் சாந்தோக்ய உபநிஷத்
சர்வே பாபேப்மான அழிந்து போகும்
உரு மாய்ந்து இஷிகம் இலவம் பஞ்சு போலே –
தாமரைஇலை தண்ணீர் போலே ஒட்டாது -இரண்டு வாக்கியம் சொல்லி –

உபநிஷத் இரண்டையும் சொல்லி -வேத வியாசர் சங்கை தீர்க்க பிரம சூத்திரம்
எம்பெருமானை அறிந்து கொள்ளுவதற்கு முன் னால் செய்த பாபம் உரு மாய்ந்து போகும்
பூர்வாகம் இது உத்தராகம் -அறியாமல் தவிர்க்க முடியாத பாபங்கள் -பிரகிருதி சம்பந்தத்தால்
கிருபை காரணமாக ஒட்டாது வராத கடன் -தள்ளுவது போலே –
மாப்பிளையாக ஸ்வீகாரம் செய்த பின்பு கொடுப்பது கடனே இல்லையே
அது போலே எம்பெருமான் -உத்தர பூர்வ அபயோக அத்வேஷம் விநாசம் –
மூன்று கடன்கள் -என்று கோளாமல்
உத்தர பூர்வ -வேம் -வெந்து போகும் -கடன்கள் -பாபங்கள் பூர்வ
மேல் வினை சாரா வார்த்தை வரவு செய்து கொண்டு  உப லஷண ம் –அச்லேஷம் ஒட்டாது
ஞானம் பிறந்த பின்பு தெரியாமல் செய்யும் பாபங்கள் உத்தராகம்
விரோதியான தேக சம்பந்தம் அனுவர்த்திகையாலே
முன்பு செய்ததுக்கு என் செய்வோம் அனுதாபம் செய்வதே பிராயச்சித்தம்
கடன்கள் மேல் வினை –
இது சத்யம் –
முற்றவும் சாரா -பிரத்யஷாதிகள் -பிரமாணம் இல்லை சாஸ்திரம் ஒன்றே பிரமாணம்
பிரமமுண்டாக்கும் மற்றவை
சாஸ்திரம் சொல்வது மெய்யாகி இருக்கும்
நம பத அர்த்தம் இது
இங்கே சொல்லுகிறார் –
அத்தனை பாபங்களையும் போக்குவாரா –
பலன் அனுபவித்தே தீர வேண்டுமே
ஸ்தோத்ரம் செய்ய பாபங்கள் மறந்து போகிறான் சர்வஞ்ஞன்
கடலுக்கு தொடுத்த அம்பை விரோதிகள் இடம் -சாகரம் தோஷ இஷ்யாமி
உனக்குதோற்ற அம்பு இல்லை பொய் சொல்கிறான் சக்கரவர்த்தி திருமகன்

ஸ்வாமி இப்பொழுது தான் எழுந்து இருக்க -கௌ ரவ வார்த்தை
அடே வழி விடு சொல்லாம் இருக்க சமுத்திர ராஜன்
பட்டர் அருளிய கதை
பண்ணையார் -நெல்லை வாங்கிய கதை கழற்று மேட்டில் –
குழல் அசைய வாடுகிறதே மொட்டை தலையன் ஒரு மூட்டை நெல்லை கொடுக்க
வந்தவனும் மொட்டை தலையன்
உன்னைப் போலே மொட்டை தலையன் ஏமாந்தான்
இருப்பதாய் சொல்லி கோபம் இங்கே
இல்லாதது சொல்லி சந்தோஷம் அங்கே –
ஓடி சென்று -கேட்க
குழல் அசைய ஓடி வர வேண்டுமா –
இன்னொரு மூட்டை நெல்லை கொடுக்க -வந்தேன்

சர்வேஸ்வரன் தனக்கு செய்த அபராதங்கள் மறப்பான் சொல்ல  வேண்டுமா

கடலை முகம் காட்ட கலை பிடித்து கோலை பிடித்து
விரோதிகளுக்கு என்றான்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
இவர்களை -பல போக்தாவான -உத்தேச்யம் போலே -பிரார்த்தித்து பெறாமல்
ஸ்தோத்ரம் செய்தால் -தன்னடைவேபோகும்
நன்றன கைங்கர்யம் பண்ணா நிற்க அமையும்
விளக்கு ஏற்றி இருட்டு தானே போகுமே

ஸ்வரூப ப்ரப்தமானவற்றை செய்தால் தன்னடையே போகுமே –
அவானவனும் கடன் கடமை அர்த்தம் அங்கெ
கடன் பாப்பம் இங்கே
ஆகாமி –
சஞ்சிதம் வேம் -ஞானம் பெற்றவனுக்கு நெருப்பில் இட்ட பஞ்சு போலே
ஒட்டாது -இரண்டாக பிரித்து அர்த்தம் –
அவஸ்யம் அனுபவித்தே போக்க வேண்டுமே -கோபம் போய் பாப்பம் போகுமே
கடல் அரசன் திருஷ்டாந்தம் கதை பார்த்தோம் -இல்லாத ஒன்றை சொல்லி -பரிசு கொடுத்த கதை -மேல் வினை முற்றவும் சரா
பண்ண வேண்டிய கார்யம் -பிரார்த்தி பெற வேண்டாம் -தன்னடையே விரோதி போகும் என்றார் –
தாங்கள் தங்கட்குநல்லனவே செய்வார்  -வழு இலா அடிமை செய்பவர்
தன்னுடைய ஆனந்தத்துக்கு செய்ய மாட்டார்கள் –
களை அறுக்கிறது கைங்கர்யத்தில் –

செய்ய கூடாதே
நல்லதை -தங்களுக்கு ஏற்றதான ஸ்வரூப பிராப்த கைங்கர்யம்
நல்லதை பயக்கும் என்ற அர்த்தம் -அவன் ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யம்
அதிகாரி வை லஷண்யம்
தாங்கள் தங்கட்கு நல்லனவே -அனந்தாழ்வான்
ஸ்வரூபம் உணர்ந்த தாங்கள் தங்களுக்கு ஸ்வரூப பிராப்தமான
இந்த திருவாய்மொழி முழுவதும் அனந்தாழ்வான் -வார்த்தை கள் பல உண்டே
குன்றம் ஏந்தி பாசுரம் -அங்கும் சரித்ரம் உண்டே
அதிகாரி வை லஷ்ண்யம் -வ்ருத்தி வை லஷண்யம் -சிறப்பு இரண்டும் சொல்லி
ஊன்றி சொல்லி அர்த்தம் –
தாங்கள் இதர விஷய வ்யக்தராய் –
சுமையாக பாரம் இல்லை -நல்லனவே செய்வார் –
வேம்கடத் து உறைவார்க்கு -சதுர்த்தி ஆய -அர்த்தம்
நம -எனக்கு அல்ல என்று சொல்வதே போதுமே
நெஞ்சில் உண்டாக வேண்டா உக்தி மாத்ரமே போதுமே

கருட மந்த்ரம் சொல்லி விஷம் தன்னடையே இறங்கும் –
வாயினால் பாடி –
மாயனை –பாசுரம் இறுதியில் செப்பு-முக் கரணங்கள் வேண்டாம்
எளிது –
ஸ்வரூபம் சேருமோ
ஆம் -சுலபமாக ஆகும்
என்னல் ஆம் -கடமை ஸ்வரூப பிராப்தம்
அது சுமந்தார்கட்கே மூன்று அர்த்தம்
பேற்றின் கனம் -ஆழ்வார் அபிப்ராயம் -நிரதிசய ஆனந்தம் -வாயாலே சொல்லிய மாத்ரம்
நேற்றி கடன் -கஷ்டமான கடன் அர்த்தம் இல்லை வேம்கடது உறைவார்க்கு நம -சொல்வது மட்டுமே –

மலையை சுமக்கணும் -அது சுமந்தார்கட்கு பெரிய கார்யம் இல்லை எதிர்மறை
பகவத் கிருபை பேற்றின் கனம் அறிந்து ஆழ்வார் இப்படி அருளுகிறார்
மூன்றாவது இவன் பக்கல் உள்ள கனக்க -மலையை சுமந்தான் என்று
பகவான் நினைப்பான் -பூயிஷ்டாம் என்று அவன்  நினைப்பானாம்
பூயிஷ்டாந்தே நம -உக்தி யஜுர் வேதம் -அக்னே -பெரியதான நம உக்தி வார்த்தை

தே பூயிஷ்டாம் உனக்கு பெரிய பழு வான வார்த்தை என்று பூர்வர்கள் அர்த்தம்
கை கூப்பி அஞ்சலி பரம் அவளுக்கு பாரம் -பட்டர் –
த்ரௌ பதி கோவிந்த புண்டரீகாஷா பேரை சொன்னாள் -துக்கம் பட்டான்
ஆபத்தில் விட்டு வைத்தோமே துக்கப்பட்டானாம்
மாம் தூரவாசினாம் -அர்ஜுனன் இடம் அருளிய வார்த்தை -சாம்பன் வதம் பண்ண போய் இருந்தான் –

ரிணம் பிரவ்ருத்தம்இவவே வட்டிக்கு மேலே வட்டி -அத்தனையும் முடித்த பின்பு உத்தரை சிறுவனையும் உய்யக் கொண்ட  பின்பு –

அங்கு வந்து இருந்தான் என்றால் பாண்டவர்களை நிரசித்து இருப்பான்
நாமம் செய்த கார்யம்

யோக ஷேமம் வஹாம் அஹம் -அவன் சுமக்கிறான்
இது சுமையா -சுமை என்று எம்பெருமான் -அவன் சுமையாக கொண்டான் -மூன்று அர்த்தங்கள் –

அசந்கதமாக இரண்டு சப்தங்களை சேர்த்து சொல்லி மந்த்ரம் -விஷகரம்
சப்த சக்தியால் -அவ்வோ போது போக வேண்டாம் திருநாமம் –
எந்த்ரங்களும் இயங்குகின்றன சப்தம் கொண்டே இன்று –
கடங்கள் முற்றவும் வேம்
இது மெய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: