திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஈசன் வானவர்க்கு என்பன்என் றால்அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?
நீச னேன்நிறைவு ஒன்றுமி லேன்என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

    பொ-ரை : தாழ்ந்தவனாய்க் குணம் சிறிதுமில்லாதவனான யான், இறைவனைப் பார்த்து நித்தியசூரிகளுக்குத் தலைவன் என்று

சொல்லுவேன்; அப்படிச்சொன்னால், அது என்னிடத்தில் அன்பை வைத்த மேலான சுடரையுடைய ஒளியுருவனான திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் புகழாகுமோ? ‘ஆகாது’ என்றபடி.

    வி-கு : நிறைவொன்றுமிலேன் – வினையாலணையும் பெயர். ‘நீசனேனும் நிறைவொன்றுமிலேனுமாகிய யான், ‘வானவர்க்கு ஈசன்’ என்பன்; என்றால், அது, என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதியாகிய திருவேங்கடத்தானுக்குத் தேசமோ?’ எனக் கூட்டுக.

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘நித்தியசூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தவன்’ என்றார் மேல்; ‘மிகத் தாழ்ந்தவனான என் பக்கலிலே பாசத்தை வைத்தவனுக்கு ‘நித்தியசூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தவன்’ என்னும் இது ஓர் ஏற்றமோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.

    வானவர்க்கு ஈசன் என்பன் – நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகன் என்று சொன்னேன். என்றால் – நான் இப்படிச் சொன்னால். அது திருவேங்கடத்தானுக்குத் தேசமோ – திருமலையிலே வந்து சுலபனாய் நிற்கிறவனுக்கு ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று இருக்கிற இது ஓர் ஏற்றமாயிற்றதோ? 2‘ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு ஏற்றஞ்சொல்லுகிறேனாக மயங்கினேன்; கானமும் வானரமும் வேடுமானார் ஓலக்கம் கொடுக்க நிற்கிறவனுக்கு நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?’ என்றபடி, ‘பரமபதத்தை விட்டு இங்கே வந்து இந்நிலத்தையிட்டு நிரூபிக்க வேண்டியிருக்கிறவன்’ என்பார், ‘திருவேங்கடத்தானுக்கு’ என்கிறார். ‘ஆக,3 முடி சூடி அரசு செலுத்துமவனுக்கு ஏற்றஞ்சொல்லும்போது தட்டியிலிருந்த காலத்தின் தன்மையையிட்டு ஏற்றஞ்சொல்ல ஒண்ணாதே,’ என்கிறார் என்றவாறு. ‘ஆயின், திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின், ‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்; இது கிடக்க அதனையோ சொல்லுவது?’ என்கிறார்.

    நிறைவொன்றுமிலேன் – தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று. 1‘தாய்க்கும் மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் சென்மம்; சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்; ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்; அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது ‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்; நன்மை சொன்னவனுடைய உயர்வினைப் பொறாதவன்; உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்; அபகாரங்களைச் செய்து போதலேயன்றி நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்; அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்; புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில்நின்றும் அபகரிப்பவன்; ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்; இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக்காரியம் பார்ப்பவன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். 1‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான். ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால், ஆத்துமாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்தும குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி. ‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் 2இவ்வார்த்தை சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

    3வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி – ‘நித்தியசூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை வைத்தான். அவர்களுக்கு இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்: தன் இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்; பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார். இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு, 1‘என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர். இனி, மனத்தொடுபடாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும், கலந்த பின்னர் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் என்னுதலுமாம். ‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.

சோதியான திருவேங்கடத்தானுக்கு, ‘வானவர்க்கு ஈசன்’ என்பன் என்றால்,
அது தேசமோ?’ என்று கூட்டி அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘சௌலப்யத்தை மேற்கொண்டு திருமலையில் நிற்கிறவனுக்குப் பரத்துவம்
சொல்லுகை ஏற்றம் அன்று,’ என்றபடி. ‘ஆயின், ஏற்றம் அல்லாததனை
ஏற்றமாகச் சொன்னதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஸ்ரீவைகுண்டநாதனுக்கு’ என்று தொடங்கி.

3. முடி சூடி அரசு செலுத்தும் நிலை, திருவேங்கடத்தில்; தட்டியில் இருக்கும்
நிலை, பரமபதத்தில். தட்டி – சிறைக்கூடம்.

நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்று இப்படித் தம்மைத் தாழ்விற்கு
எல்லை நிலமாகச் சொன்னார் உளரோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
ஸ்தோத்திர ரத்தினத்திலிருந்து ‘அமர்யாத:’ என்ற சுலோகத்தை
எடுத்துக்காட்டி, அதற்குப் பொருளும் அருளிச்செய்கிறார், ‘தாய்க்கும்
மற்றொரு பொருளுக்கும்’ என்றது முதல், மேன்மேல் எனக் காரியம்
பார்ப்பவன்’ என்றது முடிய.

. ‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும்’ என்று தொடங்கும்
வாக்கியத்தின் பொருளை ‘அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ
ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி
‘அகதிம்’ என்ன, ‘நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி
என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம். அனந்தாழ்வான் ‘அமர்யாத:’
என்ற சுலோகத்தை ஆளவந்தார் அருளிச்செய்தார் என்னக் கேட்டு ‘எனக்கு
அது சொல்ல வேண்டா’ என்றான்; அவர் சம்பந்தத்தாலே’ என வருகின்ற
திருப்பாவை வியாக்கியானத்தால் உணரலாகும்.

(மாரி மலை முழைஞ்சில், நாலாயிரப்படி)

2. ‘இவ்வார்த்தை’ என்றது, ‘வானவர்க் கீசன்’ என்றதனை.

3. ‘வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்று கூட்டி
இதற்கு மூன்று வகையாக பாவம் அருளிச்செய்கிறார். முதல் வகை,
‘நித்தியசூரிகளுக்கு’ என்று தொடங்குவது. இரண்டாம் வகை, ‘அவர்களுக்கு
இருப்பு’ என்று தொடங்குவது. மூன்றாம் வகை, ‘பிராதம்யத்துக்கும்’ என்று
தொடங்குவது. பிராதம்யம் – முதன்மை. செங்கல் சீரை – காஷாயம்.
‘பிராதம்யத்துக்கும்’ என்று தொடங்கும் வாக்கியத்தின் கருத்து, முதன்முதல்
விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் என்பதற்காகவும் ‘முதல் மனைவிக்கு
ஜீவனம் கொடுக்கவில்லை’ என்று உலகத்தார் கூறும் பழிச்சொற்களுக்காகவும்,
காஷாய வஸ்திரம் தரித்துப் பிச்சை புக்காளாகில் தனக்கு மானக்கேடு
உண்டாகுமே என்ற எண்ணத்தாலும் முதல் மனைவிக்கு ஜீவனோபாயத்துக்குச்
சிறிது பொருள் கொடுப்பாரைப் போன்று என்பது. ‘பாசம் வைத்த’
என்றதனால் நெஞ்சு கொடுத்தமை சொல்லிற்று; ‘பரஞ்சுடர்ச் சோதி’
என்றதனால் உடம்பு தந்தது சொல்லிற்று.

என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பையுண்டாக்கினான்’ என்றதன் கருத்து,
ஆழ்வார்க்குத் தன் மாட்டு அன்பை உண்டாக்கினான் என்பது.
முதற்பொருளில், இறையவன் ஆழ்வாரிடத்தில் அன்பை வைத்தான் என்பது
கருத்து. இரண்டாவது பொருளில் இறைவனாகிய தன்னிடத்தில் ஆழ்வார்க்கு
அன்பை உண்டாக்கினான் என்பது கருத்து.

நித்யர் அனுபவிக்க கொடுத்தான் என்றார் கீழே
அத்யந்த நீசன் எனக்கு அருளினவன் -அத்யந்த ஹேயன் உடன் சங்கம் -வைத்தவன்
ஈசன் வானவர் என்றது தேஜசோ –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
குணம் இன்மை –
நிர்வாகன் -வானவர்க்கு
திருமலையில் சுலபன் -அடர்வரும் அமரர்கள் அதிபதி வைகுண்ட நாதனுக்கு தான் அது ஏற்றம்
வானரம் வேடம் கானும் -ஓலக்கம் கொடுக்க நிற்கிறவன்
இந்நிலத்தை இட்டு நிரூபிக்க
திருவேம்கடம் உடையான் –
திருமலையே பொற்பு பேய் ஆழ்வார் -இரண்டு உருவும் ஓன்று
வேறு ஆழ்வார் திருமலை ஒருமலை யானே திரு மங்கை ஆழ்வார்
மற்றவர் மலையை இட்டு அவரை நிரூபிக்க வேண்டும்படி –
முடி சூடி ராஜ்ஜியம் செய்பவனுக்கு சிறை இருப்பை சொல்வது ஏற்றமே-

பரம பதம் இருப்பு சிறை போலே –
சிறு பேர் அழைத் தனவோம் சீறி அருளாதே
என் கண் பாசம் வாய்த்த பரம் சுடர் சோதி இது தானே பெருமை
நீசனேன் -நீசத்வம்
நிறை ஒன்றும் இலேன்
இந்த இரண்டையும் கூட்டி ஆழ்வார் ஆக்கி -வடிவு எடுத்தவர் தாம் தம்மை சொல்லிக் கொள்ள
ஆளவந்தார் அமர்த்யா -ஸ்லோகம் அர்த்தம்
நைச்ய அனுசந்தானம்
கட்டுப்பாடு இன்றி -ஜனனிக்கும் மற்று ஒன்றுக்கும் -தாய் தாரம் வாசி இன்றி இருக்கும்
நிரபசுகு -வேஷத்தால் நரன் பசு செயல்களால் மிருகம்
சாஸ்திரங்கள் ஆகாது நிஷேதிவற்றை செய்து
சூத்திர -சாஸ்திர மரியாதை மீறாதே ஒருவன் சொன்னால் அதை கேட்காதவன்
சலமதி -நெஞ்சில் பட்டாலும் விஸ்வசிக்காத நிலவா நில்லா நெஞ்சு உடையவன்
அசூயா -பிரசவ பூது
ஹிதம் சொன்னவன் உத்கர்ஷம் பொறாமல்
கிருதஞ்ஞன் நன்றி கொன்றவன் இல்லை செய்து அவதானம் பண்ணி போந்து
துர்மானி அஹங்காரம்
ஹிதம் சொன்னவருக்கும் மேலாக நினைத்து
பரவச இதர ஸ்திரீகள் ஈடுபாடு
காமுகருக்கும் கீழாக
அங்கும் வஞ்சனை வஞ்சன பரர்
திருடி ஸ்திரீ கொடுத்து அங்கெ திறண் டவாறே அபகரித்து
இரக்கமும் இன்றி -கருணை இன்றி
அபதாரம் செய்து
பாபிஷ்ட பாபத்துக்கு ஊன்றி அடி இட்டு
அனந்தாழ்வான் தனது வாயால் சொல்ல மாட்டேன் ஆளவந்தார் அருளிச் செய்து இருந்தாலும்

யாமுனாசார்யர் ஸுய நைச்ய –
ஆளவந்தார் சம்பந்தத்தால் இப்படி
கிடம்பி ஆச்சான் -அழகர் அகதிசரனாம்கதி
ராமானுஜனை உடையவர் ஆனபின்பு
அமர்யாதா -ஸ்லோகம் வாயால் சொல்ல மாட்டேன்
ராமானுஜ சம்பந்தம் -அகதி இல்லை
நீசனேன் -அனாத்ம குணம் உள்ளது
தண்மையும் நிறை இன்றி
ஈசன் வானவர்க்கு சொன்னது தப்பு -பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தை
அறிவு இன்றி பெருமையாக சொன்னேன்
என் பக்கலில் பாசம்
சங்கத்தை பண்ணினான்
வானவர்க்கு தலைவன்
ப்ரீதி என்னிடம்
சத்தைஉண்டாக்க அவர்கள் இடம் கலந்து
தனது சத்தை பெற
நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு
மூத்தவள் இடம் ஜீவனாம்சம் கொடுத்து
பழிக்கு அஞ்சி -கொடுத்தானாம்
செங்கல் சீரை -பிச்சை எடுப்பாள் -அவமானம் இவனுக்கு –
மூன்று கா\ரணம் அஞ்சி
நித்யருக்கு ஈசன் இதனால்
என் கண் பாசம் -சங்கம் -தன்னிடத்திலே வைத்த
கண்ட விஷயத்தில் பாசம் வைக்காமல் அவன் இடம் ஸு விஷய பாசம் வைக்க

பரம் சுடர் ஜோதி –
ஹிருதயமாக ப்ரீதி உடன் செய்து
திருமேனியில் உள்ள தேஜஸ் இத்தை காட்டிக் கொடுக்க
வடிவில் பிறந்த புகர் -உஜ்ஜ்வலம்
முன்பு இல்லாத தேஜஸ் பெற்று
பிராட்டி உடன் கலந்தது போலே இருந்தான்
இது தான் அவனுக்கு பெருமை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: