திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணி றைசுனை நீர்த்திரு வேங்கடத்து
எண்இல் தொல்புகழ் வானவர் ஈசனே.   

    பொ-ரை : பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன், அழகினைக்கொண்ட செந்தாமரையைப் போன்ற திருக்கண்களையுடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையுமுடையவன், தெளிந்த நிறைந்த தண்ணீரையுடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற அளவிடற்கரிய இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகட்குத் தலைவன் ஆவன்.

    வி-கு : ‘தொல்புகழ்’ என்பது ஈசனுக்கு அடை. ‘கருமாணிக்கம்’ என்பது இல்பொருளுவமை.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘நாம் இங்ஙனம் அடிமை செய்ய வேண்டும் என்று விரும்புகிற இதுவேயோ வேண்டுவது? அவன் தான் நமக்கு அனுபவத்தின் நிறைவைத் தருவானோ?’ என்ன, ‘ஆசையற்றவர்கட்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிறவன், ஆசையோடு கூடிய நமக்குத் தரச் சொல்லவேண்டுமோ?’ என்கிறார்.

    அண்ணல் – ‘குறிஞ்சி நிலத்துத்தலைமகன்’ என்னுதல்; ‘எல்லார்க்கும் தலைவன்’ என்னுதல். மாயன் – அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியங்களையுடையவன். ‘அவற்றில் 2ஓர் அம்மான் பொடி சொல்லிக்காணீர்,’ என்ன, சொல்லுகிறார்மேல்: அணிகொள் செந்தாமரைக் கண்ணன் – ‘இக்கண்ணழகு உடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா,’ என்னும்படியிருப்பதாய், தனக்குத்தானே ஆபரணமாய், மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாம்படி சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன். இது, முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது. செங்கனி வாய் – அந்நோக்குத் தப்பினார்க்கும் தப்பவொண்ணாதபடியிருக்கிற புன்முறுவலைச் சொல்லுகிறது. முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது. கருமாணிக்கம் – அந்த முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது. தெள் நிறை நீர் சுனைத் திருவேங்கடத்து – தெளிந்து நிறைந்துள்ள நீரையுடைய சுனையையுடைய திருமலையிலே. இதனால், இறைவன் வடிவேயன்றித் திருமலையும் சிரமத்தைப் போக்கக்கூடியதாய் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. ‘ஆயின், விக்கிரக அனுபவத்தை விட்டுச் சுனையை வருணித்தற்குக் காரணம் என்?’ எனின், ‘அணிகொள் செந்தாமரைக் கண்ணன்’ என்றதனோடு, ‘செங்கனிவாய்’ என்றதனோடு, ‘கருமாணிக்கம்’ என்றதனோடு, ‘தெண்ணிறை நீர்ச்சுனை’ என்றதனோடு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்தில் உள்ளதொன்றாகையாலே. எண் இல் தொல் புகழ்- 1‘சிறுவனே! கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, மஹாத்துமாவான பகவானுடைய குணங்களும் அளவிறந்தன,’ என்கிறபடியே, கணக்கு இல்லாதவையாய் இயல்பாகவே அமைந்த குணங்களையுடைய. வானவர் ஈசன் – குணங்களை அனுபவிப்பித்து நித்தியசூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு செல்லுகிறவன். என்றது, ‘கண்ணழிவற்ற ருசியுடையாரைத் தன்னையனுபவிப்பிக்கும்’ என்கை.

வானவர் ஈசனே’ என்பதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘ஆசையில்லாதவர்’ என்றது, பகவானுடைய அனுபவ ரச
பூர்த்தியைத் திருவுள்ளம் பற்றி.

2. அம்மான் பொடி – வசீகரண சாதனமான ஒரு வகைப்பொடி. பாலர்களை
வசீகரிக்கைக்காக அவர்கள்மேலே ‘அம்மான்’ என்று சொல்லி ஒரு பொடி
விசேடத்தைத் தூவினால், அந்தப் பாலர்கள் கள்ளர் பின்னே ‘அம்மான்,
அம்மான்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்; அந்தப் பொடி என்றபடி.
அப்படியே, ஆச்சரியமாக

மநோ ரதம் இதுவே வேண்டுவது
நிரபேஷம் உள்ளாருக்கும் தன்னைக் கொடுப்பவன்
அபேஷித்தவருக்கு கொடுப்பன் சொல்ல தேவை இல்லையே
நெஞ்சு கேட்டதாம் -பதில் சொல்கிறார்
அண்ணல் மாயன் -செம்தாமரைக் கண்ணன்
செம் கனி வாய் கரு மாணிக்கம்
சுனை நீர் -திருவேம்கடது
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
வினை சொல் இன்றி இதிலும்
கேள்விக்கு பதில் இங்கே –
புனர் யுத்தி தோஷம் இல்லை
வானவர் நிரபெஷர்
சர்வச்வாமி குறிஞ்சிக்கு தலைவன்
மாயன் -சௌந்தர்யா சீலாதிகளால் ஆசார்ய பூதன்
அம்மான் பொடி -மயக்க சில சொல்லிக் காட்டுகிறார் –

கண் அழகு உடையவனுக்கு வேற ஒப்பனை வேண்டாமே
செம் தாமரைக் கண் -தனக்கு தானே ஆபரணம்
விகாசம் செவ்வி குளிர்ச்சி நாற்றம் ஒருவகைக்கு ஒப்பாக சொலலலாய் தாமரை
முதல் உறவை பண்ணும் -செம் கனி வாய்
முருவலால் இவரை எழுதிக் கொடுத்து
ஆழம் கால் படுத்தும் திரு மேனி அழகு
தெளிந்து நிறைந்த சுனை -திரு மலை யும் வடிவு நிறைந்து
வாசி இன்றி-செம்கனி வாய்-சுனை நீர் –
அதுவும் அந்நிலத்தில் உள்ளபடியாதளால்
அவனுக்கும் இதனாலே ஏற்றம் –
எண்ணில் -என முடியாத
தொல் -தொன்மையான புகழ்
சமுத்திர ரத்னங்கள் போலே பிரமாணம் மாஸ்த்ய புராணம் –
ஸ்வா பிகமான புகழ் குணங்கள்
வானவர் ஈசன் -நித்யர் சத்தை இத்தால் அனுபவித்து நிர்வகித்து போனவன்
திருக் கல்யாணகுணங்கள் அனுபவமே நித்யருக்கு பிராணன்
கண் அழிவு அற்ற ருசி உடையாரை தன்னை அனுபவிக்க செய்கிறான்
நமக்கும் கொடுப்பான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: