திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மூன்றாந்திருவாய்மொழி – ‘ஒழிவில் காலம்’

முன்னுரை

    ஈடு : ‘நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்று அவனைக் கிட்டித் 1தம்முடைய சொரூபம் பெற்றவாறே, சொரூபத்திற்குத் தகுதியான அடிமை பெறவேணும் என்று 2பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில். 3பிரகிருதி சம்பந்தத்தால் வந்த கரணங்களின் குறைவை அநுசந்தித்து நினைத்த வகைகளெல்லாம் பரிமாறப் பெறாமையாலே நொந்து, ‘இறைவன் முதலிலே இதனைத் தவிர்த்துத் தன்னையனுபவித்தற்கு உறுப்பாகப் பல உபாயங்களைப் பாரித்து வைத்தான்; அவற்றிற்குத் தப்பினேன்; அவதாரங்களுக்குத் தப்பினேன்; உயிருக்குள் உயிராயிருக்கும் தன்மைக்குத் தப்பினேன்; இப்படி அவன் பாரித்து வைத்த வழிகள் முழுதிற்கும் தப்பின யான், 4இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ? இழந்தேனேயன்றோ!’ என்று ஆசையற்றவராய் முடியப் புக, ‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காக அன்றோ திருமலையில் வந்து நிற்கிறது? உம்மை இவ்வுடம்போடே அனுபவிக்கைக்காக இங்கே வந்து நின்றோமே! நீர் 5அங்குச் சென்று காணக்கூடிய காட்சியை நாம் இங்கே வந்து காட்டினோமே! இனி, 1உம்முடைய இவ்வுடம்பு நம்முடைய அனுபவத்துக்கு விரோதியுமன்றுகாணும்; நீர்தாம் கரணங்களின் குறைவினை நினைத்தலாலே நோவு படுகிறீராகில், 2முதலிலே இது இல்லாதாரும் நம்மையனுபவிக்கும்போது படும் பாடு இது காணும்; அவர்களும் வந்து அனுபவிக்கிற இடங்காணும் இத்திருமலை; ஆன பின்னர், நீரும் இவ்வுடம்போடே நினைத்த அடிமைகளெல்லாம் செய்யும்,’ என்று தான் திருமலையிலே வந்து நிற்கிற நிலையைக்காட்டிச் சமாதானம் பண்ண, 3சமாதானத்தையடைந்தவராய், அடிமை செய்யப் பாரிக்கிறார்.

    ‘யாங்ஙனம்?’ எனில், 4தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு, ஒரு தேச விசேடத்திலே சென்றால் செய்யக்கூடிய அடிமைகளெல்லாம் இந்நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறையற்றிருந்ததாகில், நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில், இனித்தான் அங்குப் போனாலும் 5‘அவன் கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான இறைவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது? அந்தச் 6சௌலப்யம் முதலிய நற்குணங்கள்தாம் விளங்கிக் காணப்படுவதும் இங்கேயாகில், இனி 1அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு, பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், 2நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று, இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார். ‘பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின், இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது; 3‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி? 4உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மனோரதம்.

245

ஒழிவுஇல் காலம்எல்லாம்
உடனாய் மன்னி
வழுஇலா அடிமை
செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித்
திருவேங் கடத்து
எழில்கொள் சோதி
எந்தைதந்தை தந்தைக்கே.

    பொ-ரை : மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற அழகினைக்கொண்ட ஒளியுருவனான எந்தை தந்தை தந்தைக்கு, எல்லையில்லாத காலமெல்லாம்

எல்லா இடத்திலும் உடனிருந்து ஒன்றும் குறையாதபடி எல்லா அடிமைகளையும் நாம் செய்ய வேண்டும்.

    வி-கு : தெழித்தல் – ஒலித்தல். வழுவிலா – குற்றமில்லாத. குற்றம் இல்லாமையாவது, ஓர் அடிமையும் நழுவாமை; ‘எல்லா அடிமையும்’ என்றபடி.

    இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

    ஈடு : முதற்பாட்டில், ‘திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்,’ என்கிறார்.

    ஒழிவு இல் காலம் எல்லாம் – முடிவில்லாத காலமெல்லாம். இது, இனி வருகின்ற காலத்தைக் குறிக்கின்றது. இதற்கு, ‘இதுகாறும் கழிந்த காலத்தையுங்கூட்டி அடிமை செய்யப் பாரிக்கிறார்’ என்று மிகைபடக் கூறுவாருமுளர். அங்ஙனேயாயின், ‘கழிந்த காலத்தை மீட்கை’ என்று ஒரு பொருள் இல்லையேயன்றோ? 1‘ஜனங்களின் நடுவிலிருந்தும் இச்சரீரத்தை நினையாமலே நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கிறான்,’ என்கிறபடியே, கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயன்றோ உள்ளது? 2‘இது ஒன்றே எனக்குத் துக்கத்தைத் தருகிறது; அது யாதெனில், ‘பிராட்டியினுடைய வயதானது வீணே கழிகின்றதே! போன காலத்தை மீட்க முடியாதே!’ என்று வருந்தினார் பெருமாள்; ஆகையாலே, 3‘இனி மேலுள்ள காலம் எல்லாம்’ என்பதே பொருள். உடனாய் – காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச சம்பந்தமும் விருப்பமாயிருக்கிறதுகாணும் இவர்க்கு. இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வனத்திலும் அடிமை செய்தாற்போலே. மன்னி – சர்வேசுவரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக்கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப் போன்று 4அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான அடிமைகளைச் செய்ய வேண்டும். இதனால், எல்லா நிலைகளையும் நினைக்கிறது. 1‘பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் ஆகிய மூவரும், அழகிய பர்ணசாலையைக் கட்டிக்கொண்டு காட்டில் மகிழ்ந்தவர்களாயிருந்தார்கள்,’ என்று இருவர்க்கு உண்டான அனுபவத்திலே மூவரைச் சொல்லுகிறார்; அவ்விருவர்க்கும் பரஸ்பரம் கலவியால் பிறக்கும் ரசம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே. ஆக, ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்றது, எல்லாக்காலத்தையும் எல்லாத் தேசத்தையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது. 2ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால், ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக்கட்டிப் போவாராம்.

    வழுவிலா அடிமை செய்யவேண்டும் – அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்கவொண்ணாதாயிற்று. எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது, ‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்; ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி. ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார். 3’இந்தக் கைங்கரியமநோரதம் முன்பும் உண்டன்றோ? இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பரியந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார். 1கைங்கரிய மநோரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார். 2‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு 3ஒரு தலையிலே பொருளை நியமித்து, போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்; இனி, 4‘சுவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால், 5‘சுவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்; இனி, சுவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்; இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள் போலன்றி, சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய், தேசமும் நித்தியமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய், சிற்றின்ப விஷய அனுபவம் போன்று துக்கங்கலந்ததாயிருத்தல் அன்றி, நிரதிசய சுக ரூபமாய் இருப்பதொன்றன்றோ இது?

    1ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி 2‘ராஜந்’ என்ன, அப்போது சுவாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ? இதனால், 3பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் சுவாதந்திரியம் கேடு என்று தோற்றும். மேலும், 4ஏபிஸ்ச ஸசிவைஸ் ஸார்த்தம் – சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான். ‘இவன் தம்பி’ என்று சுவாதந்தரியம் மேற்கொண்டு, 5கண்ணழிக்கலாவது எனக்கு அன்றோ? இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே! இவர்கள் தாங்களே காரியத்தை விசாரித்து அறுதியிட்டு, ‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால் அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு? அவருடைய பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில், தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல் கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே. போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; 1அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.  ‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ? ‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ? ‘ப்ராது: – பின் பிறந்தவன்’ – 2‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி, ‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? எல்லா ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது? ‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பியகாரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’

    நாம் – தம் திருவுள்ளத்தையுங்கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்; அன்றி, 1கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல். அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்: இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் 2கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?   தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. 3திருஅருவியின் ஒலியுங்கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு, அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது. 4‘சிலைக்கை வேடர் தெழிப்பு அறாத’ என்று திருவேங்கட யாத்திரை போகிறவர்களைப் பறிக்கிற வேடருடைய ஆரவாரமும் உத்தேஸ்யமாயிருக்கிறதன்றோ அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே? ஆக, அங்குத்தைத் திருவேடர் பறிக்கிற ஆரவாரமுங் கூட உத்தேஸ்யமாயிருக்கும்போது இவர்க்கு இந்தத் திருஅருவியின் ஒலியுங்கூட உத்தேஸ்யமாகச் சொல்லவேணுமோ? திருவேங்கடத்து எழில் கொள் சோதி – ‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது,’ என்று அவன் வந்து வசிக்கிற தேசம். ‘பாங்கான நிலம் ஆயினவாறு என்?’ எனின், இச்சரீர சம்பந்தமற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் இவன் செய்யக்கூடிய அடிமையை இந்நிலத்தில் இவன் செய்யலாம்படி அவன் வந்து வசிக்கின்ற தேசமாகையாலே என்க. தூரத்திலுள்ளவனேயாகிலும், மேல் விழ வேண்டும்படி வடிவழகு இருத்தலின், ‘எழில் கொள் சோதி’ என்கிறார். 1வானார் சோதியையும் நீலாழிச் சோதியையும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்கிறார். வானார் சோதி, பகல் விளக்குப்பட்டிருக்கும்: நீலாழிச் சோதி கடல்கொண்டு கிடக்கும்; வேங்கடத்து எழில்கொள் சோதி, குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்; 2‘வேங்கடமேய விளக்கே’யன்றோ? அந்நிலத்தின் தன்மையாலே அழகு நிறம் பெற்றபடி. எந்தை – அழகில்லாதவனேயாயினும் விடவொண்ணாதபடியிருக்கும் சம்பந்தத்தைத் தெரிவிக்கிறார். இனி, ‘சௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்த படியைத் தெரிவிக்கிறார்’ எனலுமாம். தந்தை தந்தைக்கு – எல்லார்க்கும் முதல்வன் என்றபடி.

    இப்பாசுரத்தால், 3கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்கிறார்: ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால், 1நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது; ‘நாம்’ என்னுமிதனால், பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது; ‘இது, சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை. ‘தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்; 2சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள். 3பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.

இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?’ என்றது, ‘தொழுது
எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக
எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.

. ‘அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு’ என்றதனை,
‘ஒளிதுறந் தனமுகம் உயிர்து றந்தெனத்
துளிதுறந் தனமுகில் தொகையும் தூயநீர்த்
தளிதுறந் தனபரி தான யானையும்
களிதுறந் தனமலர்க் கள்ளுண் வண்டினே.

  ‘நீட்டில களிறுகைந் நீரின் வாய்புதல்
பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரைபுனிற் றீன்ற கன்றையும்
ஊட்டில கறவைகன் றுருகிச் சோர்ந்தவே.’

  (கம். அயோத். 205. 212) என வரும் பாடல்களால் உணரலாகும்.

‘கைங்கரியப் பிரதானமான திருமந்திரம்’ என்றது, புருஷார்த்தம் கைங்கரியமே
என்று அறுதியிடுகின்ற திருமந்திரம் என்றபடி. திருமந்திரத்தின் பொருளாவது,
‘எம்பெருமானுக்கே உரியனான நான், எனக்கு உரியன் அன்றிக்கே
ஒழியவேண்டும்; சர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்
செய்யப்பெறுவேனாக வேண்டும்,’ என்பது. இப்பொருளையே ‘ஒழிவில்
காலமெல்லாம்’ என்ற இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார் என்கிறார்.

. ‘நான்காம் வேற்றுமை’ என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’
என்னும் நான்காம் வேற்றுமையுருபினை. ‘பிரார்த்தனையைச் சொல்லுகிறது’
என்றதன் பொருளை ‘ஆய என்கிற இத்தால், ‘சென்றாற் குடையாம்’
என்கிறபடியே எல்லா அடிமைகளும் செய்யவேணும் என்று அபேக்ஷிக்கிறது’,
‘ஆகையால், ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்கிற
பிரார்த்தனையைக் காட்டுகிறது’ (முமுக்ஷூப்படி, 105, 108.) என்னும்
வாக்கியங்களாலுணரலாகும். ஆத்துமாவின் சொரூபம் – இறைவனுக்குச்
சேஷமாயிருக்குந்தன்மை; ‘சேஷத்துவமே ஆத்துமாவுக்கு ஸ்வரூபம்.’
‘பிரணவத்தால் ‘கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு
உரியனோ?’ என்கிறபடியே ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று.’ என்பன  (
முமுக்ஷூப்படி, 55, 72.)
‘இது’ என்றது, ‘பிரணவத்தால் ஆத்துமாவின்
சொரூபத்தைச் சொல்லுகிறது’ என்று மேலே கூறியதனைச் சுட்டுகிறது.
‘சொல்லின் சுபாவத்தைக்கொண்டு சொன்னோம்’ என்றது, ‘மகாரத்திற்குப்
பொருளாயுள்ள நான், அகாரத்திற்குப் பொருளாயுள்ள எம்பெருமானுக்கே
உரியவன்.’ என்னும் போது ‘நான் உரியவன்’ என்ற கருத்தாவிலே
நோக்காயிருத்தலைத் திருவுள்ளம் பற்றி. பொருளின் பிராதாந்யத்தை
நோக்கும் போது ‘அகாரவாச்சியனான எம்பெருமானுக்கே மகாரவாச்சியனான
ஆத்துமா உரியது’ என்ற பொருளே போதரும். ‘அருளிச்செய்தருளின
வார்த்தை’ என்றது, நம்பிள்ளை இங்ஙனம் அருளிச்செய்தார் என்றபடி.

2. ‘திருவேங்கடத்து’ என்றதனால் சௌலப்யமும், ‘எழில்கொள் சோதி’
என்றதனால் வடிவழகும், ‘எந்தை’ என்றதனால் ஸ்வாமித்துவமும் போதருதல்
காண்க.

3. ‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)
பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம். ஆக, ‘ஓம் நமோ
நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின்
பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன; இங்குச் சொல்லப்படாத ‘நம’
பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்
நிரசராய் கதறியவாறே முகம் காட்டி –
வடக்கு திருமலை நிற்பதை -குழந்தை பாலுக்கு அழ -எந்த ஸ்தனம் காட்டினாலும் உத்தேஸ்யம்

ஸ்வரூப அனுரூபமான அடிமை செய்ய பாரிப்பை வெளி இடுகிறார்
பிரகிருதி சம்பந்தத்தாலே ஏற்பட்ட கரண சந்கொசத்தால் நொந்து
சிருஷ்டித்து -அவதாரங்களுக்கு தப்பி -அந்தர்யாமிக்கு தப்பி -நைந்து போக –
உமக்காக அன்றோ உடம்போடு அனுபவிக்க -இங்கே நின்று இருந்து அருள –
சரீரம் விரோதி இல்லை -கைங்கர்யம் செய்ய சரீரம் வேண்டும்
கரண சங்கோசம் இல்லாத நித்ய முக்தர்களுக்கும் நம்மை அனுபவிக்க படும் பாடும் இது தானே
அவர்களும் வந்து -எந்நாளே அடித் தாமாரை காண -படுகாடு கிடைக்குமிடம் இந்த திருமலை –
சமாதனம் பண்ண -தரமி ஒக்க -எங்கும் பூர்ணம் -தானே -உடம்பு விரோதி இல்லை அடிமை செய்ய பாங்காக
சர்வான் காமான் -பிரமதுடன் கூட இருந்து -அவனுடைய -திருக் கல்யாண குணங்களை அவன் கூட சேர்ந்து
நாமும் அனுபவிக்க -சீலாதி குணங்கள் இங்கே தானே பிரகாசிக்கும் –
ஸ்பஷ்டமாக இங்கே திருமலை -அங்கு உள்ளாறும்  வந்து அடிமை செய்வதும் இங்கே –
ஆழ்வார் திருப்புளி ஆழ்வார் அடியில் இருக்க
நீரும் நிழலும் கண்டால் -விடாய்த்தார் -பாரிப்பது போலே –
அடிமை செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகிறார் –
பாரி த்து கொண்டு இழுவது -அஹம் சர்வம் கரிஷ்யாமி -எதிர் சொல் வினை –
கானகம் புறப்படும் பொழுது –
போஜன பரமாய் இருப்பவன் ஊன் அத்யாயம் செய்வது போலே -திரு அத்யயனம் -செய்ய முன் இரவே சொல்லாமல் -கோபித்த வ்ருத்தாந்தம் –
பாரிப்பு -முக்கியம் -கைங்கர்யம் தானே ஆழ்வாருக்கு ஊன் –
சர்வ தேச சர்வ கல சர்வ அவச்தைகளிலும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –
கூடவே எழுந்து
வழு இலா அடிமை ஸுய போக்த்யதா புத்தி இன்றி
தெளி குரல் அருவி திருவேம்கடது
எழில் கொள் சோதி
குல முதல்வன் -எந்தை தந்தை தந்தைக்கே
முடிவு இல்லாத அனந்தமான காலம்
கீழ் கழிந்த பழுதே பல போயின அதற்கும் சேர்ந்து அதி பிரசங்கம்
மீட்கை என்று பொருள் இல்லை –
இழவு நெஞ்சில் படாமல் மறப்பிக்கையே உள்ளது –
நித்ய -முக்தர் விடுபட்டு போக வாசி
நாள் இழவே போக்கி -பொருள் இழவு இல்லையே
கீழ் கழிந்த நாள் நினைக்காதபடி அனுபவம்
அவனால் முடியும் -கீழ் கழிந்த
சாந்தீபன் புத்ரனை மீட்டு 12 வருஷம் கழித்து கொடுத்தானே –
மா தவத்தோன் புத்ரனை -தஷிணையாய் -முழுகின பொழுது இருந்தபடி
காலம் கழித்து கொடுத்தான் -அகடிதகடனா சமர்த்தன்
நமே  துக்கம் -பெருமாள் வார்த்தை கழிந்த காலம் மீட்க முடியாதே
இனி மேல் வரும்
உடனாய்மன்னி -சகல  தேசங்களிலும்
படை வீட்டிலும் வன வாசத்திலும் கைங்கர்யம்
மன்னி -பிராட்டியுமாய் திரை மறைத்து ஏகாந்தமாக இருந்தாலும் படிகம் குத்து விளக்கும் போலே
சர்வ அவச்தைகளிலும்
எத் தனை பாரிப்பு -ஆழ்வாருக்கு –
மூவரும் சந்தோசம்
பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் பரஸ்பர சந்தோஷ சேர்த்தியில் கைங்கர்யம் -இளைய பெருமாளுக்கு
அசித் போன்ற பாரதந்த்ர்யம்
பரத ஆழ்வான் போலேயும் கைங்கர்யம் பாரிக்கிறார்
திரு அரங்க பெருமாள் அரையர் மேல் போகமாட்டமல் ஒழிவில் காலம் எல்லாம் -அர்த்தம் அனுசந்தானத்தில்
வழு இல்லா -கூறு கொடுக்காமல் தானே
அனந்தாழ்வான் ஏரி கட்டி தோட்டம் -அவனே வந்து பங்கு கொள்ள மறுத்து –
கடப்பாரை இன்றும் சேவிக்கலாம்
மொவாக்கட்டையில் பச்சை கர்ப்பூரம்
ஸ்ரீ பாத ரேணு -இதற்க்கு பெயர் –
திருவடி =எம்பெருமான் அர்த்தம் சொல்ல வில்லை
கர்ண பரம்பரையாக கேள்வி பட்ட
திருவடி மண் கொண்டு வைக்க சொன்னானாம்
திருவடி புழுதிக்கு ஆசைப் பட்டானாம் -அடிமை எல்லாம்தானே செய்ய வேண்டும்
இளைய பெருமாள் காட்டிலே -பரதாழ்வான் பிரிந்து இருந்து செய்த அடிமையும் செய்ய வேணும்
ராஜன் சப்தம் கேட்டு -இடி விழுந்தால் போலே பாரம் பொருக்க மாட்டாமல் படு கொலை பட்டால்
போல் கூக்குரல் விட்டு அழுதான் -சதுர்வித சைன்யம் கூட்டி போனான்
தன்னை விட அவர்களுக்கு துக்கம் அதிகம் என்பதால்
ஆற்றாமை தன்னோடு ஒத்த -பாரதந்த்ர்யரசம் உணர்ந்தார்க்கு ஸ்வா தந்த்ர்யம் அவத்யம் என்பதால் –
தன்னை போலே ஆற்றாமை உடையவர் –
இளைய பெருமாள் சங்கை
தான் மட்டும் போனால் தட்டி கழித்தாலும் -தம்பி என்ற நினைவால்
இவர்கள் கண் அழிவு பொருக்க மாட்டேனே
இவர்களுக்கு பாரதந்தர்யம் இவர்கள் ஏவி பணி செய்பவன் –
யுத்தத்துக்கு போவது போலே யானை -குதிரை அவற்றுக்கும் ஆற்றாமை உண்டே
தலை வைத்து யாசித்தான்
என் பேற்றுக்கு காலில் தலை வைத்து கெஞ்சுபவன்
தலையால் -இரந்து
அத்தலை இத்தலையானால்
பின் பிறந்தவன் –
தம்பிக்கு உபயோகம் இல்லையானால் நெருப்பில் போகட்டும் சொல்லும் பெருமாள் வார்த்தை
சிஷ்யச்ய பிராதாயச்ய
வசிஷ்டர் இடம் கேட்டதை தானே உபதேசித்து குரு –
பிராதா பந்துத்வம்
அசேஷ ரகசியம் கற்று கொடுத்து
தாசனாகவும் இருக்கிறேன் –
விற்கவும் செய்யலாமே
என் தமை விற்கவும் பெறுவார்களே
இவ்வளவு பாரிப்பு பரதாழ்வான்கைங்கர்யத்தில் பாரிப்பு இருக்கும் படி
உண்டது உருகாட்டாது -சாப்பிட்டது தெரியும் படி –
அடிமை ஏதாவது குறைந்தால்
செய்ய வேண்டும் -அனுஷ்டான பர்யந்தமாக வேண்டும்
மநோ ரத ஸ்தானத்தில் போகம் இவருக்கு
போக காலம் புறம்பே தள்ளி விடுவர் அபிமத ஸ்திரீ விஷயம் –
ஸ்வர்க்க அனுபவம் -அனுபவித்து முடியும் -அருகில் நரக அனுபவமும் காட்டி
இது நிரந்தர நிரதிசய போகம் –
சாலில் எடுத்த நீர் போலே -ஜலத்தின் பழுவால் மேலே வருமே ஏற்ற சால்
முகம் கேள் பட தள்ளுவார்கள் ஸ்வர்க்கத்தில்
ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான -கைங்கர்யம்
அஹங்கார மமகாரம் அடியாக வரும் அனுபவம் போலே இன்றி –
நாம் -பன்மையில் திரு உள்ளதை கூட்டி
கேசவன் தமருக்கு அப்புறம் தனியார் இல்லை
அவனுக்கும் பாரிப்பு
இருந்த இடத்தில இவர் பாரிக்க
அவன் பரம பதத்தில் இருந்து திருவேம்கடம் எழுந்தி அருளி
அனுஷ்டானத்தில் காட்டி
ஏதேனும் ஆவேனே -எல்லாம் உத்தேயம்
அருவி தொனி கைங்கர்யம் செய்ய வா
கை வேடன் -பரி க்கும் பொழுதும் ஆரவாரமும் உத்தேச்யம்
எழில் கொள் சோதி -பிரகாசிக்க
அடிமை கொள்ள பங்காக
இங்கே இதே தேசத்தில் அங்கு செய்யும் கைங்கர்யம்
இதே சரீரத்துடன் கைங்கர்யம் செய்ய
மேல் விழும்படி
வானார் சோதி மணி வண்ணா -பகல் விளக்கு பட்டு
நீராழி சோதி -கடல் கொண்டு போகும்
வ்யவர்த்திக்கிறது திருவேங்கடத்து -குன்றில் இட்ட விளக்கு
வேங்கடம் மேய விளக்கு
எந்தை -தந்தை
விட ஒண்ணாத ப்ராப்தி -மூல புருஷன்
எளிமை அழகு பரம சேஷி –
பிராப்ய -திருமந்தரம் அர்த்தம் -ஆய கைங்கர்யம்
நம -சப்தார்தம் அவன் ஆனந்தத்துக்கு
சதுர்த்தியில்
நாம் -ஸ்வரூபம் சொல்லும்
சப்த ஸ்வாபாவம் ஜீவாத்மா பிரதானம்
எழுவாய் ஜீவாத்மாவுக்கு
நாராயண
சௌசீல்யம் காருண்யம் காட்டி
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கர்யம் இ றே பிராப்யம்
வடிவு அழகு ஸ்வாமித்வம் அனைத்தையும் காட்டி –
சதுர்த்தி அர்த்தம் ஒழிவில் காலம் எல்லாம்
த்வயத்தின் உத்தர வாக்கியம் என்றும் காட்டி அருளுவர்கள் –

ஆசை மிகுதி யானால் -விடாய்த்தவர் –
அழகர் திவ்ய மங்கள விக்ரக சௌந்தர்யம் -கரணங்களின் சங்கோசம் –
மலர்ந்த -முக்காலத்தையும் அறியும் சக்தி -நித்ய முக்தர்கள் –
களேபரம் சரீரம் கர்ணம் இந்திரியங்கள்
எப்படி கூடப் போகிறேன் என்கிற நிராசை மிகு –
விஷய வைலஷ்ண்யத்தால் –
பாரிப்பை வெளி இட்டார் ஒழிவில் காலம் பதிகத்தில்
சர்வ காலத்திலும் -சர்வ தேசங்களிலும் சர்வ அவச்தைகளிலும் அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே
அருவிகளும் கூப்பிடும் திருவேம்கடம் –
வானார் சோதி நீராழி சோதி விட உயர்ந்த எழில் கொள் சோதி
இங்கே மூல புருஷன் ப்ராப்யமான –
திருமந்த்ரத்தின் அர்த்தம் -சொல்லும்
அகார வாச்யன் அவனுக்கே அடிமை
ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -ஒழிவில் காலம் –அடிமை செய்ய வேண்டும்
ப்ரார்தனாயாம் சதுர்த்தி நான்காம் வேற்றுமை
லுப்த சதுர்த்தி சேஷத்வ சதுர்த்தி
ஸ்வரூபம் தெரிவிக்க பட்ட பின்பு -என்ன செய்ய வேண்டும் –
ஸ்வரூபம் அறிவித்து பின்பு தனக்கு இன்றிகே ஒழிய வேண்டும் -நம பத அர்த்தம் -அடுத்து பிரார்த்தனை
அதற்க்கு தகுந்த -படி சர்வ தேச சர்வ கால சர்வ நிலைகளிலும் சர்வ அவச்தைகளிலும்
சேதன அசித் -விளக்கு படிக்கம் போலேயும் -கைங்கர்யம் –
நாம் -இடம் பிரணவ பிரதித்யனான ஜீவாத்மா ஸ்வரூபம்

மகாரத்தின் அர்த்தம் என்று சொல்லி இருக்கலாம்
பிரணவ ப்ரதிபாத்யனான இவனுடைய ஸ்வரூபம் என்கிறார்

சப்தம் கொண்டு ஜீவாத்மா தெரிவிக்கப் படுகிறான் பிரணவத்தால்
அர்த்தம் கொண்டு பரமாத்மா
ராஜபுருஷன் -ராஜாவினுடைய வேலைக் காரன்
ஆசார்ய புருஷ -ஆசார்யர் நியமனம் படி செய்யும் புருஷர்கள்
சப்தத்தில் வேலைக்காரன் பற்றியும் -பிராதான்யம் யாருக்கு ராஜா -அர்த்தம் கொண்டு பார்க்கும் பொழுது ராஜா
அது போலே சப்தம் கொண்டு பிரணவம்
பகவானுக்கே ஜீவாத்மா அடிமை பட்டவன்
எழுவாய் -இதில் ஜீவாத்மா தானே
அர்த்தத்தால் பிராதான்யம் பகவான் –
உபய பிரதானமான பிரணவம் -இருவருக்கும் –
பதிம் விச்வச்ய -இரண்டிலும் சப்தம் அர்த்தம் அவனுக்கு பிரதான்யம்
நாயனார் அருளிச் செயல் ரகஸ்யம் -அர்ஜுன ரதம் போலே இருப்பது இது
ரதி சாரதி -நியமிக்க பிராதான்யம் ரதிக்கு -கை ஒழிந்து முடியாத போதும்
கொல்லா மா கோல் கொலை செய்து -சாரதிக்கே பிராதான்யம் -நிமித்த மாதரம் அர்ஜுனன் –
நாம் இங்கும் எழுவாய் -திருவேம்கடம் உடையானுக்கு அடிமை –
நாராயண -சகல கல்யாண குணங்கள் கூடி
சௌலப்யம் வடிவு அழகு ஸ்வாமித்வம்
திரு வேம்கடத் து எழில் கொள் சோதி எந்தை தந்தை
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கர்யம் தானே பிராப்யம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: