ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-170-178..

170-

சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் –
சிலை அன்றோ கைத்தலத்து –
இருவராய் வந்தார் வெஞ்சிலையே துணையாக –
கோதண்ட ராமன் -பட்டாபிஷேக திருக் கோலம் -மூல மூர்த்தி –
இடது திருவடி மடித்து பெருமாள்
சீதை இடது திருவடி மடித்து மேல் நோக்கி
போக ராமர் சீதை உடன் சேர்தியால் -யோக ராமர் -வீர ராமர் -மூன்று சேவையும் இங்கே
சுபாஸ்ராயம் ஆஸ்ரயம் -மங்களங்களுக்கு இருப்பிடம் –
22 சர்க்கம் -தெய்வத்தின் சித்தமே நடக்கும் –
எதை கண்டும் கலங்க வேண்டாமே –
இலக்குவனை -ஆசுவாசப் படுத்துகிறான் ராமன் –
காட்டுக்கு போவதும் தர்மம் தானே -அதுக்கும் பொருள் சேர்ப்போம் சம நிலை வந்தால் தான் இறைவனை சேர முடியும்
மன வருத்தம் போக்குவது கடமை
முதலில் தாயின் வருத்தம் -தீர்க்க –
14 ஆண்டுகள் சீக்கிரம் போகுமுன் மகன் தர்ம கார்யத்துக்கு போகிறேன்
தசரதன் உடன் இருப்பதே தர்மம் –
தந்தை நடுங்கி இருக்கிறார் -அவர் கவலை போக்க வேண்டும் –
அனைவரையும் திருப்தி படுத்த முயல்கிறான் –
காட்டுக்கு போவது சரி தான் என்று கௌசல்யை இடம் சொல்லி திருப்தி செய்ய பார்க்கிறான் –
புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கைக்கு இனிமை –
மநோ பாவம் கண்டு கோபம் படாமல் -எதனாலும் பாதிக்கப் படாமல் –
பேசினாலே கோபம் சண்டை மனப்பான்மை மாறி –
முடிவில் -உரத்த குரலில் பேசுவது நிற்கும் சரி இல்லை
தர்மம் தான் நிலை நிற்கும் –
கைகேயிக்கும் திருப்தி
எனக்கும் திருப்தி ரிஷிகள் இடம் ஆத்மா ஞானம் கற்க வாய்ப்பு
தெய்வ ஆஞ்ஞை தான் நிலைக்கும் -சங்கல்பம் தான் நடக்கும்
கையில் பொம்மை நாம் -சூத்த்ரகாரி –
முடி சூட்ட நீராட தொடங்கி -அதை விட பெரிய வனவாசம் –
அறிவை பண்பை வளர்த்து கொடுக்க வனவாசமே உயர்ந்தது –
தெய்வத்தினால் தான் அனைத்தும் நடக்கும் -நம் முயற்சி ஒன்றும் இல்லையா
முக்கிய விசாரம் காத்து இருந்து மேலும் கேட்போம் –

171-

ராமாயா -சீத்தாயா நம –
சீதா ராமர் சேவை -எங்கும் –
பக்க நாச்சியார் இல்லாத சன்னதிகள் உண்டே பெரிய பெருமாள் -திருவேங்கடத்தான் பக்க நாச்சியார் இல்லையே –
தேர் அழுந்தூர் கருடனும் பிரகலாதனும் கூட சேவை
ராமன் சீதை இல்லாமல் இல்லையே –
லஷ்மணனையும் பிரிய மாட்டான் -ஆஞ்சநேயரும் உண்டு –
தாம்பரம் கோதண்ட ராமர் கோவில் சேவை இன்று அனுபவித்தோம்
கல்யாண ராமர் -நின்ற திரு கோலம் –
அவன் கையில் கருவி நாம் எல்லாரும் –
செய்யும் அனைத்தும் அவன் ஆணை -எப்படி திருந்த போகிறோம் சுழலில் மாட்டி கொண்டவன் நீந்தி வெளி வர முடியுமா –
தெய்வம் -பிரபலம் -தவறும் அவன் தான் தூண்டுகிறாரா
தீய வழி  செல்பவன் -திருடன் கொலை காரன் செய்யும் செயல்கள் அவன் தூண்ட தான் நடக்கிறதா
சங்கை வருமே-
பக்தன் மனம் தத்தளிக்க இத்தால் –
பொறுப்பை விட்டு கொடுக்க -ச்வாதந்த்ர்யம் செருக்கு -இட்ட வழக்காய் வாழ -தடை உண்டே
குழப்பங்கள் பல -உள் அர்த்தங்கள் பல உண்டு
முரண்பாடு இல்லை -வெளித் தோற்றம் -பொருந்த விட்டு பூர்வாச்சார்யர்கள் அருளி இருக்கிறார்கள் –
எதற்காக பிறந்து இருக்கிறோம் -எதனால் செய்கிறோம் நம் வசமா அவன் வசமா –
தெய்வ முடிவு காட்டுக்கு போகிறேன் -என்கிறான் -ராமன்

172-

கோதண்ட ராமர் தாம்பரம் சேவித்து கொண்டு இருக்கிறோம் –
வெம் கதிரோன்  குலத்துக்கு ஓர் விளக்கு
பொறுப்பு –
நல்லதற்கு கிருபை காரணம்
தீயவற்றுக்கு கர்மம் காரணம்
காட்டுக்கு போவது விதியா -கருமமா –
இன்பம் துன்பம் சமம் ராமன் பார்க்கலாம் தெய்வத்துக்கு கர்மம் இல்லையே
கர்மம் தீண்டாதே ராமனை -அப்பால் -பட்டவன்
விதி வலியதாயிற்றே அதன் விளையாட்டா –
ராமன் வலியவன் -கோதண்டதுக்கு நிகரகா ஒன்றும் இல்லையே –
விதி சூழ்ந்தது சொல்ல வழி இல்லை
யார் காரணம்
தசரதன் வரம் காரணம்
அப்பாவி -அகப்பட்டுக் கொண்டான் சொல்லாம்
தசரதன் சூழ்நிலை கைதிஎன்றால் -கைகேயி -காரணமா
காட்டுக்கு போவதால் ராமனுக்கு கஷ்டம் இல்லை
கௌசல்யை கர்மமாக இருக்குமா -பிரிந்து துன்பம் பட –
அவள் விதியால் ராமன் காட்டுக்கு போனானா -ஒருவர் துன்பம் மற்றவர் கர்மத்தால்
நியாயம் இல்லையே -கைகேயி காரணமா
அவன் தான் பிரபலம் -விருப்பம் மீறி செல்ல முடியாது
ஒரு செயலிலும் குறுக்கிடுவது இல்லை
முதல் செயலை அனுமதித்து தூண்டி விடுகிறார் –
கோடிக்கணக்கான நினைவுகள் உண்டே
ஜீவனுக்கு உரிமை செருக்கு ச்வாதந்த்ர்யம் கொடுப்பதும் அதில் ஓன்று
முடிவு எடுக்கும் திறனும் கொடுப்பதாக சங்கல்ப்பிது கொண்டு இருக்கிறான் –
வேதம் படிக்கலாம் -சாஸ்திரம் கற்கலாம் -பூர்வர் அனுஷ்டானம் பார்த்து முடிவு எடுக்கலாம் –
இந்த முடிவு எடுக்கும் திறன் கொடுக்கிறார் நம் ஒவ் – ஒருவருக்கும் –
புகுந்து குழப்ப மாட்டார் இதில் –
நான் எந்த முடிவும் எடுக்காமல் அனைத்தும் உன் இடம் விட்டோம் சரணாகதி அடைந்தவனுக்கு
பெருமாளே தஞ்சம் -முட்டு நெஞ்சு வலிக்கிறது என்றால் –
அவனே பார்த்து கொள்வான் என்று இருப்பது உயர்ந்த நிலை
ஞானம் பக்தி அருளுபவன் அவன் -முக்தி கண் காணாத பலன் –
காண இயன்றது உலக வாழ்க்கை முட்டி வலி போன்றவை -சண்டை பூசலோ படிப்போ
இவை நம் முயற்சி என்று இருப்பதும் ஓர் நிலை -தர்மத்தின் வழி தான் முடிவு எடுக்க வேண்டும்
அதன் வழி செல்பவனுக்கு தான் தெய்வம் துணை நின்று இருக்கும் –

173-

மங்களம் கோசலேந்தாராய -சூர்ய குலம் -சந்த்ர ஹாசம் –
முடிவு எடுக்கும் திறமை ஜீவாத்மாவுக்கு கொடுத்து –
ஸ்ரீ ராமனின் விருப்பத்தால் தான் கானகம் செல்கிறார் –
தர்மம்நிலை நிற்க -துஷ்டர்களை நிரசிக்க -ரிஷிகளை காக்க முடிவு கொண்டு -தெய்வம் பிரபலம் –
அதுவே வலிமை -மாற்ற முற்படாதே -கௌ சல்யை இடம் சொல்வதின் முக்ய -கருத்து –
பகவான் சங்கல்பம் படியே நடக்கும் -வாழ்வது முக்தி அடைய -அவன் திரு உள்ளம் மகிழும்படி நல்ல கார்யம்
தொண்டாக சாஸ்திரம் -கைங்கர்யம் -பிரீதிக்காக செய்கிறோம் –
அவரே தர்மம் நிலை நிறுத்தட்டும் –
ஹனுமான் -ராமன் திரு முகம் மலர செய்த கார்யங்கள் -பெருமை சேர்க்க –
நீயே செய்து கொள் -நாங்கள் உதவாவிடிலும் நீயே செய்யலாமே –
ஜாம்பவான் ஹனுமான் ஜடாயு போல்வார் கேட்க தொடங்கினால் இழவு ராமனுக்கு இல்லை
தொண்டை இழக்க கூடாதே -முக்தி பெற முடியாதே
வாதாட கூடாது -புண்ய செயலை செய்ய தூண்டுகிறான் –
செய்தால்திரு உள்ளம் மகிழ்கிறான் -புரிந்து கொள்ள வேண்டும்
தொண்டு செய்து கர்மம் தொலைய வைக்க வேண்டும் அவனே சரணம் -என்று பொறுப்பை அவன் திருவடிகளில் விட்டு
நிர்பயன் -நிர் பாரம் -இறை பணியில் ஈடுபாடு -பொழுது போக்கு –
தான் முடிவு கொண்டு காட்டுக்கு போகிறான் –

174-ராமோ ராமோ -ராம பூதம் -ராம ராஜ்ஜியம் -பிராணன் போலே ஸ்ரீ ராமன் எல்லா பிரஜைகளுக்கும்
நாடே ஸ்ரீ ராமன் என்று இருப்பவர்கள்
பட்டாபி ராமன் திரு கோவில் கிழக்கு தாம்பரம்
ஆழ்வார் ஆசார்யர்கள் சேவை –
எம்பெருமானார் -சேவை -தேசிகர் சேவை ஏகலைவன் போலே
23 சர்க்கம் -லஷ்மணன் பெரும்கொபம் கொண்டான்
ஆதி செஷன் மூச்சு விட்டு கத்துவது போலே –
கௌ சல்யை இடம் சொன்ன வார்த்தை கேட்டு
பட்டாபிஷேகம் ராமனுக்கே -கை வில் தாண்டி மாற்ற முடியாது
சிங்கம் பிடை  மயிரு சிலிர்த்து பேசுவது போலே
முதலில் கோபம் பார்க்கிறோம் –
மாரீசன் சுபாகு சண்டை இட்டார்கள்
இப்பொழுது தான் பொங்கி ராமனுக்கு பட்டாபிஷேகம் இல்லை என்று கேட்டதும் –
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை -தர்மம் காக்க வேண்டாமா
தந்தை தர்மத்தை மீறப் பார்த்தால்
பொருள் ஆசை பிடித்து இருவரும் சதி திடம் தீட்ட துணை போகலாமா
நாட்டு மக்களை காப்பதே முக்கியம் –
வரம் தப்பான பலத்துக்கு கேட்டால் –
தர்மத்தின் வழி  தானே போக வேண்டும் –
என்றோ வரம் கேட்டு பெற்று இருக்க வேண்டும்
தவறான பலத்துக்கு மந்தரை வார்த்தை கேட்டு
தெய்வம் வலிமை -தந்தை பாசத்தால்
இலக்குவன் வீரம் தான் வெல்லும் -தர்மத்தின் நிலை நாட்ட நான் முற்பட எனக்கு வெற்றி தான் கிட்டும்
மனிதனின் முயற்சியா -தெய்வத்தின் நினைவு படி -தர்மம் நிலை நாட்ட
உண்மையான ஆசை தான் நிறைவேறும்
இந்த லோகத்தில் -கரை தான் கடலை காக்கும்
உனக்கு அடங்கினவன் நான் உன்னையும் காப்பேன்
எதிர்த்து யார் வந்தாலும் அழிப்பது உறுதி
தோள்கள் கை வில் அம்புகள் எப்படி பயன்படுத்துவேன் பார்த்துக் கொள்

175-

லஷ்மி ஹயக்ரீவர் -சகரத் தாழ்வார் சேவை
கருணை பொங்கும் விழிகள் பேசத் துடிக்கும் அதரங்கள் –
பத்து நிலவு பூத்தால் போல் திருவடிகள் –
23 சர்க்கம் இறுதி
கைகள் சண்டை போடா பயன் பட போகின்றன இனி -இலக்குவன் கோபத்துடன் பேச
கலங்காமல் நிதானம் தவறாமல் பெருமாள் திருக் கல்யாண குணங்கள் பீரிட்டு எழும் இடம் இதுவும்
குழந்தை காக்கும் தாய் பதறுவாள் –
காக்கப் பட வேண்டியவன் பயப்பட வேண்டாமே -குழந்தை படுவது இல்லை –
காப்பாள் உறுதி இருக்கும் வரை குழந்தை பயப்படாதே –
நடப்பதை தடுக்கவும் முடியாது தூண்டவும் முடியாது -முயற்சி மட்டும் வேண்டும்
காப்பாளன் இடம் நம்பிக்கை வேண்டும்-
நாம் தான் கவலை பட கூடாது-மாசுச பொறுப்பு என்னது சொல்லி -அருளின பின்பு –
முடிவை கண்டு பயப்படாமல்
பொறுப்பை தட்டி கழிக்க கூடாது ராமானுஜர் -போல்வார் செய்த
கிரிசைகள் நாம் அவன் சொத்து என்ற உறுதி உடன்
தந்தை சொல் காப்பதே சிறந்த தர்மம்
24 சர்க்கம் –
உறுதி மாறாமல் இருப்பதை கௌசல்யை கண்டாள்
தன மடி தவிர வேறு ஒன்றும் அறியாதவன் காட்டுக்கா -போக போகிறான்
காய் கறி  உண்பானா -சூர்யன் வெயில் மழை
கன்று தாய் பசு போல்நானும் வருகிறேன் –
கைகேயி வஞ்சித்தாள் என்றால் நீயும் தசரதனை விட்டு வரலாமா சிச்ரூஷை செய்ய வேண்டாமா
தலைவன் அரசன் விருப்பம் படி தான் நடக்க வேண்டும்
ராஜா இருக்கும் பொழுது யாரும் அநாதை இல்லையே
திரும்பி வரும் பொழுது தசரதனை சேவிக்க வேண்டும்
கச்சா புறப்பட்டு -திரும்ப வரும் வரை காத்து இருப்பேன்
உள்ளே சென்றாள்
மங்களாசாசனம் செய்ய தயார் ஆனாள்

176-

ஸ்ரீ ராம ரமேதி -ஆயிரம் நாமங்களுக்கும் சமம் –
வனம் சத்ரு -ஜலம் ஆபத்து -பெருத்த பயம் -போக்கி கொடுக்கும்
உடல் நோயும் மன நோயும் விலகி ஓடும்
ஊனமாஞ்செரி -திரு கோவில் வண்டலூர் -அருகில் 3 km தூரம்
கோதண்ட ராமர் தரிசனம் -அரசனின் ஊனம் மறைத்த சேரி
கல்யாண குனங்கல்நிரைந்த ஏரி  தானே பெருமாள் –
ப்ரோஷணம் ஆசமனம் செய்து கொண்டு -புஷ்கரணியில்
வெளியில் தனி ஆஞ்சநேயர் சன்னதி
விஜயநகர் பேரரசு அடையாளம்
24 சர்க்கம் -பார்த்தோம் -சமாதானம் படுத்தி ஆசீர்வாதம் செய்து அனுப்புகிறாள்
அழுத கண் வருந்திய  நெஞ்சுடன் செய்யாமல் தன்னைதூய்மை செய்து -மங்களா சாசனம்
கை கால் கழுவி வீட்டில் நுழைகிறோம்
சாணி பூச்சிகள் நுழையாமல்
திக்பாலர்களை வேண்டிக் கொண்டுஆசீர்வாதம் –
குறுகிய மனம் உடன் ஆசீர்வாதம் செய்ய கூடாது விசாலமான மனசு வேண்டும் –
தர்மம் உன்னை காக்கட்டும் -முதலில் -இதை சொல்லி
தெய்வங்கள் உன்னை காக்கட்டும் –
ரிஷிகள் உன்னைக் -காக்கட்டும்
விஸ்வாமித்ரர் அருளிய அச்த்ரங்கள் உன்னைக் காக்கட்டும் –
சேர்ந்து வைத்த தர்மம் தெய்வம் அடுத்து தான் கல்வி செல்வம்
உண்மை உன்னை காக்கட்டும்
தினம் பகல் நாள் வேதம் இதிகாச புராணங்கள் நஷத்ரங்கள் உன்னைக் காக்கட்டும்
அசுரர் பிசாசம் பூதம் ஆபத்து இன்றி இருக்கட்டும்
கொசு பாம்பு பூதம் உன்னை எதுவும் செய்யாமல் இருக்கட்டு ம்
நல்லதே கண்ணில் படட்டும் காதில் கேட்கட்டும்
இந்த்ரன் பெற்ற மங்களம் உனக்கு உண்டாகட்டும்
வினிதை சிறுவன் கருடன் தாய் ஆசீர்வாதம் செய்த படி
அமுத கடலை கடையும் பொது அதிதி வழங்கிய மங்களம் ஏற்படட்டும்

177-

கோதண்ட ராமன் சேவை -ஆபத்து போக்கி -நல்லது வழங்குவார் –
ராமன் இடம் சமர்பித்து அவனே காப்பான் –
பிம்ம சமுத்ரம் -முன்பு பெயர் -ஊனாம்சேரி -700 வருஷம் முன்பு அரசன் ஊனம் போக்கி
புஷ்கரணியில் நீராடி பூஜிக்க நோய் குணமானது கோயில் எழுப்பி –
ஊனம் மாய்த்த சேரி
விஜய நகர மன்னர்கள் திரு பணி -பன்றி முத்தரை -சின்னங்கள் உண்டு –
நீண்ட ஸ்தம்பம் பலிபீடம்
ராஜ கோபுரம் இல்லை
கலசங்கள் உண்டு –
26 சர்க்கம் -மங்களாசாசனம் -திருமேனி மெ ன்மை செல்வகுழந்தை என்பதால் -அன்பு மிக்கு –
பிராட்டி திருக்கைகள் கொண்டு பிடித்தாலும் கூசும் மெல்லடி அவனுக்கே –
மூலிகை விசயகரணி -ரஷையாக கொடுக்கிறாள்
சர்வ சித்தார்த்தம் -14 ஆண்டுகள் கழிக்க
கச்ச ராம -கண்ணீர் குளமாக
ராஜா மாதா -தெம்பில் பேசி –
நாட்டு மக்கள் காத்து இருப்பார்கள் –
தாயாரை திருவடி பற்றி -விடை பெற்று கொண்டான் –
இனி சீதை பிராட்டி -அந்த புரம் -வருகிறான் –
கனக பவன் -இன்றும் ஸ்ரீ ராம கதைகள் பேசும் பரிக்கிரம வலம் செய்து
சரயுவில் நீராடி ஸ்ரீ ராமாயணம் பாராயணம் செய்து ராமன் திருவடி பட்டைடங்கள்
செய்தி எட்டாமல் பிராட்டி இருக்க -பெருமாள் நடந்து வர
யானை சத்திரம் சாமரம் இன்றி வர –
நிமிர்ந்த நேர் கொண்ட ராமனை பார்த்த சீதை –
பிரிய நேரிடுகிறதே வருந்தி வெட்கி இருக்க
அக்னி சாட்சியாக பிரிய மாட்டேன் -தர்மம் மீறியதால் வெட்கி தலை குனிந்து இருக்க –
என்ன நடந்தது வினவ –
தந்தை சக்கரவர்த்தி ஆணை செய்ய போகிறேன்
உன் உறுதுணை தேவை
என்ன ஆணை இட்டாலும் செய்வேன் –
வரம் கதை சொல்ல -பணிவிடை செய்
பொங்கி -விட்டு போவது எதற்கு வினவ –

178-

மன்னு  புகழ் கோசலை -தன் புதல்வன் –மைதிலி மணவாளன் -குலசேகர பெருமாள்
தனியே விட யாருக்கு இஷ்டம் –
ஆழ்வார் ஆசார்யர் சேவை
பெருமாள் ராமன் -சிரித்தாள் சிரிக்கும் -குலசேகர பெருமாள் -பெருமாள் திருமொழி
ராமனை பற்றிய பெருமாள் அருளிய திரு மொழி
கடுமையாக பேசும் மென்மையான சீதை வார்த்தை
சக தர்ம சரிதவ பின் தொடர
தாய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா
26 சர்க்கம் -விடை பெற பார்க்க –
நாட்டில் இருக்க போகிறாய்
தாய்  தந்தை பார்த்து கொள் –
என்னை புகழ்ந்து பேசாதே பரதன் அரசன் உபன்யாசம் பண்ண தொடங்க –
ஒரு சீதையும் கேட்க மறுக்கிறாள்
கைபிடித்தவள் –
அணைத்து பணிவிடை செய்
பரதன் சத்ருணன் வருவார்கள் கூடப் பிறந்த தம்பி யாக பரதனை பார்த்து கொள்
பிள்ளையாக சத்ருணனை பார்த்துகொள்
லஷ்மணனை பற்றி பேச வில்லை இங்கே
அதுவே ஹேதுவாக லஷ்மணன் பின்பு சொல்ல போகிறான்
27 சரக்க சீதை வெடித்து பேச பிரணய ரோஷம் காதலால் ஏற்பட்ட கோபம்
கதவு அடைத்து தள்ளி சேர்த்தி உத்சவம் மட்டையடி உத்சவம்
அருகில் யாரும் இல்லை தெரிந்த உடன் தான் வெடித்தாள்
சொன்ன சொல்லின் பொருள் இன்றி பேசுகிறாய் தைத்யமாக பெருமாள் இடம்பேச
பெரியவர்கள் இதை கேட்டு இகழ்வார்கள் தர்ம சாஸ்திரம் புலவர்கள் இகழ்வார்கள்
தந்தை தாய் -அடுத்த படி மனைவி கணவன் மிக சிறந்த நட்பு
புண்ய பலன் பகிர்ந்து கொள்ளும் உறவு
பிறந்தகம் மறந்து வந்த -கணவனை நம்பி கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை உடன்
தர்மம் குழைத்து விடாதே
சற்றே மாறினால் நாட்டுக்கே கேடு –
நீ கை விட்டு நாட்டில் இருக்க சொல்லாதே

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: