திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-10-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பத்தாந்திருவாய்மொழி – ‘கிளரொளி’

முன்னுரை

    ஈடு : 1மேல் ‘எம் மா வீடு’ என்னும் திருவாய்மொழியிலே ‘அறுதியிட்ட பேற்றினைப் பெறுகைக்குத் திருமலையை அடைகிறார்’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமலையாண்டான் பணிப்பர். எம்பெருமானார், ‘அங்ஙனம் அன்று; இவர் மேல் திருவாய்மொழியிலே பாட்டுகள் தோறும் ‘ஒல்லை’, ‘ஒல்லை’ என்றும், ‘காலக் கழிவு செய்யேல்’ என்றும் விரையப் புக்கவாறே, 2‘நமக்கும் அறிவித்து, 3நாமும் இவர் காரியம் செய்வதாக அறுதியிட்டால், அதனைக்கொண்டு சரீரத்தின் முடிவில் பேறு தப்பாது’ என்று அறுதியிட்டு வாளா இருக்கலாய் இருக்க, இவர் இப்படி விரைவது இச்சரீரத்தோடே இவரை நாம் அடிமை கொள்ள வேண்டும் என்று போலே இருந்தது; இனி இவர்க்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான இடம் ஏதோ’ என்று ஞாலத்தூடே நடந்து உழக்கிப் பார்த்து வரச்செய்தே  ‘இவ்விடம் சால ஏகாந்தத் தலமாய் இருந்தது’ என்று திருமலையிலே சந்நிதி பண்ணியருளி, ‘நாம் உமக்கு முகந்தருகைக்காக வந்து நின்றோம்; நீர் இங்கே வந்து நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறி அனுபவியும்’ என்று தெற்குத் திருமலையிலே நிற்கின்ற நிலையைக் காட்டிக்கொடுக்க, இவரும் அதனை அநுசந்தித்துப் பகவான் பிராப்பியனானால் அவன் வாழும் தேசமும் பிராப்பியமாகக் கூடியதாதலின், திருமலையோடு, அதனோடு சேர்ந்த அயன்மலையோடு புறமலையோடு, திருப்பதியோடு, போம் வழியோடு, ‘போகக்கடவோம்’ என்று துணியும் துணிவோடு வேற்றுமை அறப் பிராப்பியாந்தர்க்கதமாய் அனுபவித்து இனியர் ஆகிறார்’ என்று அருளிச்செய்வார்.

கிளர்ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர்ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர்இளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை
1
தளர்விலர் ஆகில் சார்வது சதிரே.

    பொ – ரை : ‘பொங்கி வருகின்ற ஒளியையுடைய இளமைப்பருவம் கெடுவதற்கு முன்னே, வளர்கின்ற ஒளியோடு கூடிய மாயவன் எழுந்தருளியிருக்கின்ற கோயில், வளர்கின்ற இளமையையுடைய சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலையைத் தளர்ச்சி அற்று இருக்க விரும்பு வீராகில் சென்று சேர்வதே மேலான பேறு’ என்பதாம்.

    வி-கு : ‘கெடுவதன் முன்னம் தளர்விலராகில், சார்வது சதிர்’ எனக் கூட்டுக. ‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க. சார்வது தொழிற்பெயர்.

    ஈடு : முதற்பாட்டு. 2‘திருமலையை அடைகையே இவ்வாத்துமாவுக்கு நிரதிசயமான பேறு’ என்கிறார்.

    ‘திருமலையை அடைமின்’ என்கிறார்; ‘செய்கிறோம்’ என்று ஆறியிருந்தார்கள்; ‘கெடுகின்றவர்களே! எதனை நம்பித்தான் நீங்கள் ஆறியிருக்கிறீர்கள்?’ ‘கழிந்த பருவத்தை உங்களாலே தான் மீட்கப் போமோ? மேலும், 3‘காதலியான சீதை தூரத்திலிருக்கிறாள் என்று எனக்குத் துக்கம் இல்லை; ஒருவனால் அபகரிக்கப்பட்டாள் என்று எனக்குத் துக்கம் இல்லை; வயதானது பயன் இன்றிக் கழிகின்றதே என்று அதற்கே நான் துக்கிக்கிறேன்,’ என்றும், 4‘வாள்களாகி நாள்கள் செல்ல’ என்றும் முன்னையோருடைய வார்த்தைகளும் இருக்கின்றனவே? ஆதலால், ‘கிளர்ஒளி இளமை கெடுவதன் முன்னம் சார்மின்’ என்கிறார்.

‘நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்.’

  என்ற திருக்குறள் ஒப்புமையுடையது.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – ‘கிளர் ஒளி இளமை’ என்றது, 1‘மனத்தில் உண்டாகும் சிரத்தையாய், பிறந்த இச் சிரத்தை இதினின்றும் மாறி வேறு விஷயங்களில் பிறப்பதற்கு முன்னே’ என்றபடி. என்றது, ‘ஒருவனுக்கு ஒரு விஷயத்தில் ஒரு கால் சிரத்தை பிறக்கும்; அவனதனக்கே அவ்விஷயத்திலே சிரத்தை இன்மையும் பிறக்கக் கூடியதாய் இருக்கும். ஆக, பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே’ என்றவாறு. இனி, ‘கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்’ என்பதற்கு,  ‘அடையத் தக்கது’ என்னும் நினைவு பிறந்தாலும், 2‘கரணபாடவம் இல்லையே!’ என்று கை வாங்க வேண்டாதபடி கரணபாடவம் உள்ள போதே என்று பொருள் கூறலுமாம். உயர்வு பற்றி ‘ இளமை கெடுவதன் முன்னம்’ என்றாராயினும், இனம் பற்றிப் பால்ய யௌவன பருவங்களையும் கொள்க. 3‘பாலியத்தில் விளையாட்டில் ஆசையுள்ளவர்களாகவும், யௌவன காலத்தில் விஷயங்களை அனுபவித்தலில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று கூறி, ‘ஆகையாலே, பால்யத்திலே அறிவோடு கூடினவனாய் எக்காலத்திலும் புகழின்பொருட்டு முயற்சி செய்தல் வேண்டும்’ என்றும் கூறுதல் காண்க. வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் – நாட்செல்ல நாட்செல்ல வளரா நின்றுள்ள புகரை உடையவனாய் ஆச்சரியம் பொருந்திய ஆற்றலை உடையனான சர்வேஸ்வரன் நித்திய வாசம் பண்ணுகிற தேசம். ‘வளர்தல் குறைதல்கள் இயற்கையில் இல்லாத சர்வேஸ்வரனுக்கும் விகாரத்தைப் பிறப்பிக்க வல்ல தேசம்’ என்பார், ‘வளர் ஒளி மாயோன் கோயில்’ என்கிறார். 4அவதாரங்கள் போன்று தீர்த்தம் பிரசாதியாமல் தங்கி இருக்கும் தேசமாதலின், ‘மருவிய கோயில்’ என்கிறார். வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை – வளர வளர

இளகிப்பதித்துச் செல்லாநிற்கும் சோலை சூழ்ந்த மாலிருஞ்சோலை. அடிமை செய்கிறவர்கள், கிளர் ஒளி இளமையையுடையவர்கள்; அடிமை கொள்ளுகிறவன், வளர் ஒளி மாயோன்; அடிமை செய்கிற தேசம், வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை. ஆக, இப்படி அடிமை செய்யுமவனும், அடிமை கொள்ளுமவனும், அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாய் ஆயிற்று இருப்பது.

    தளர்வு இலர் ஆகில் – ‘முகூர்த்தகாலமாயினும் ஒரு கண நேரமாயினும் வாசுதேவனைச் சிந்திக்க இல்லை என்பது யாது ஒன்று உண்டு? அது பெரிய இழிவு; பெரிய கெடுதி’ என்கிறபடியே, 1‘திருமலையைக் கிட்டாமையால் வருகின்ற எவ்வகையான துக்கமும் இல்லாமல் இருக்க வேண்டில். இனி, ‘திருமலையே அடையத்தக்கது’ என்னும் புத்தி பிறந்து அதனை அடைவதற்கு விரோதியாய் வருகின்ற 2அனர்த்தபாகிகள் அல்லாதாராய் ஒழிய வேண்டில் எனலுமாம். சார்வதே சதிர் – திருமலையைக் கிட்டுமிதுவே இவ்வாத்துமாவுக்குச் சதிர்; அல்லாதவை எல்லாம் 3இளிம்பு. ‘கண்ணுக்கு இலக்கான விஷயங்களை விட்டு வேறே சிலவற்றைப் பெறுகைக்கு எண்ணுகின்றீர்கள்; நீங்கள் எண்ணுமதுவே இளிம்பு; இதுவே சதிர்’ என்றபடி.

கிளர் ஒளி இளமை
அழகர் கோயிலில் கைங்கர்யம்
திருமலையை ஆஸ்ரயிக்கிறார்  ஆளவந்தார் -நிஷ்கர்ஷித பிராப்யம் பெற -சென்றார்
எம்பெருமானார் அங்கனம் அல்ல
பாட்டு தோறும் ஒல்லை கால கழிவு செய்யேல் என்று எல்லாம் தவரிக்க புக்கவாறே எம்பெருமான் காட்டிக் கொடுத்தான் –
சரீர முடிந்ததும் பேறு தப்பாது என்று துணிந்து இல்லாமல்
துடிக்க –
எம்பெருமானுக்கும் அறிவித்த பின்பும் -த்வரிப்பது
சரீரதுடனடிமைகொள்ள  வேண்டிய ஆசை ஆழ்வாருக்கு என்று அறிந்து
நினைத்த படி பரிமாறுவதற்கு ஏகாந்தமான திவ்ய தேசம்
ஞாலத்துள்ளே நடந்து  உழக்கி பார்த்து -தேர்ந்து எடுத்து காட்டி அருளினான்
சந்நிதி பண்ணி அருளி உமக்கு என்று இங்கே உகந்து அருளின தேசம்
பகவான் பிராப்யன் அனால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிரப்யம் ஆகுமே
அத்தால்திருமலை யோடு –அயன் மலை -புற மலையோடு -போகும் வழியோடு அனைத்தும் உத்தேச்யம்
போக்க வழியும் -போகபோகிறோம் என்ற நினைவும் பிராப்ய அந்தர்கதம்
திருமலையை பிராபகமாக ஆச்ரயித்தார் ஆளவந்தார் -சாதனமாக
திருமலையே பிராப்யமாக அதுவே பலன் -எம்பெருமானார் -பிராப்ய அந்தர்கதம்
போவது கிறியே என்பதால் இதுவே சாத்தியம் –

திருமலையை அடைவதே புருஷார்த்தம் –
இளைமை கெ டுவதன் முன்பு
தேஜஸ் நிரந்த மாயோன் மருவிய கோயில்
திரு மால் இரும் சோலை
சார்வது சதிர் சாமர்த்தியம் உயர்ந்தது –
திருமலையை ஆஸ்ரியும் சொன்னதும்
எத்தை விஸ்வசித்து ஆறி இருக்கிறீர்கள்
சக்தி இருக்குமா -மூப்பு வராதா -போன காலம் மீண்டும் பெற முடியாதே பெருமாள் அருளிய வார்த்தை
போனால் போனது தான் –வாள்கள் போலே நாள்கள் செல்ல -திரு மழிசை ஆழ்வார்
போகும் பொழுதும் வரும் பொழுதும் அறுத்துக் கொண்டே போகுமே –
கிளர்  ஒளி மானச ஸ்ரத்தை -விஷயாந்தரங்களில் பிறப்பதன் முன்பு -கெடுவதன் முன்பு
ஸ்ரத்தை ஒரு கால் பிறந்து உடனே அஸ்ரத்தை பிறக்குமே
அங்கன் இன்றிக்கே -இளைமை அர்த்தமே கொண்டு –
மூப்பு வரும் முன்பு -கர்ம பாதகம் இந்திரியங்கள் -படுத்துமே –
பால்யே -பிரகலாதன் வார்த்தை -பிரதமமா அம்சே விஷ்ணு புராணம் அர்த்தம் –
குருகுலத்தில் -சொன்ன வார்த்தை -விளையாட்டில் புத்தி -யவனத்தில் விஷய புத்தி –
அறியாமையால் -தஸ்மாத் பால்யே இறங்கி -கற்றுக் கொள்ள வேண்டும் –
வளர் ஒளி மாயோன்

முற்றம் -இளையா  முன் பத்ரி -திரு மங்கை ஆழ்வார் அருளியது போலே
மாயோன் மருவிய கோயில் -பொழில் சூழ்ந்த
சதிர் -சாமர்த்தியம் -சாதுர்யம் –
திருமலையை ஆஸ்ரயிக்க சொல்கிறார் –
இழந்த காலம் மீட்க முடியாதே –
வாள்கள் போலே நாள்கள் செல்லுமே -நம்மை முடிய அறுத்துக் கொண்டே போகுமே –
ஆறி -இருக்காதீர்கள் அழிந்த பருவத்தை மீட்க போகுமோ –
கிளர் ஒளி இளமை சரீர மானஸ இளமை
இழந்த -விஷயாந்தர ஈடுபாடு வருவதன் முன்னம் -மானஸ ஸ்ரத்தை போகும் முன்னம்
லோக ஸ்வா பாவம் இப்படி தானே -பிறந்த ருசி மாறுவதற்கு முன்பு –
இந்திரியங்கள் -பிராப்யம் பிரதி பத்தி வந்தாலும் -படுத்தலாமே
பால்யே -பிரதமாம்சே –அம்சமாக பிரித்து ஸ்ரீ விஷ்ணு புராணம் அர்த்தம் -பிரகலாதன் வார்த்தை
விளையாட்டு புத்தி பால்யத்தில் -விஷயங்களில் யௌ வன பருவம் –
ஸ்ரேயசே பால்யத்தில் இறங்கினால் கேட்டு போகாதே –
திவ்ய தேச வாசம் ஏற்படுத்திக் கொடுக்குமே
ஆதமா நடுவில் வந்தால் நடுவிலே போகுமே –
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் ஆசார்ய சக்தி தேஜஸ் உடையவன்
விகாரத்தை பிரகாசிப்பிக்க வல்ல திவ்ய தேச ஸ்வா பாவம் -அவிகாராயா சுத்தாயா நித்யாய பரமாத்மா –
சுதகா வருத்தி ஷயம் இல்லாதவன் -ஏறுதல் இறங்குதல் -இன்றி
அவனுக்கும் விளக்க விகாரம் ஏற்படுத்தும்
நாள் நாள் செல்ல பிரகாசம் மிக்கு –
ஆச்சர்ய சக்தி உடையவன் -மாயோன் –
மருவிய -அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்யம் சந்நிதமான
தீர்த்தம் -பரமபதம் சரம திருமேனி திருமஞ்சனம் -வானமா மலை ஜீயர் -புரோஷித்து –
ஸ்ரீ பாத தீர்த்தம் இல்லை -சரம திருமேனிக்கு –
அர்ச்சாவதாரம் -நித்யமாக வாசம் செய்யும் திவ்ய தேசம் மருவிய பொருந்திய
வளர்ந்து கொண்டே இருக்கும்
இளம் பொழில் சூழ்
அடிமை
அடிமை கொள்ளுபவன் -அடிமை கொள்ளும் தேசம் -அடிமை செய்பவர் ஒத்த பருவமாய் வளர வளர இளகிப் பதித்து இருக்கும் –
இளமை -அனைவருக்கும்
தளர்விலர் ஆகில் ஆகி இரண்டு பாடம் –
முகூர்தம் ஷணம் வாசு தேவனை சிந்திக்காமல் ஸா ஹாநி -வீணாக போகுமே
அது போல் திரு மால் இரும் சோலை கிட்டாமல் -சர்வ வித அநர்த்தம்
சாராதது அநர்த்தம் -சார்வது சதிர்
புத்தி பிறந்து லபிக்கைக்கு விரோதியாக வருபவை ஒழிய
ஆத்மாவுக்கு சதிர்-இதுவே — அல்லாதவை எல்லாம் -இழிப்பு தாழ்வு
கண்ணுக்கு இலக்காக விஷயம் விட்டு வேறு ஒன்றை -மோஷம் அனுபவிக்க பார்ப்பதும் இழிப்பு
அதீந்தரமான விஷயத்தில் யத்தனம் செய்யாமல் -இதுவே சதிர் –
அழகர் விட்டு வேறு விஷயாந்தரங்களை பற்றி போகாதீர்கள் -ஆகி –
ஆகில் ஒழிய வேண்டில்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: