189-
காவலில் புலனை வைத்து -இச்சுவை
திருக் கமல பாதம்
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் -பண்டை வல்வினை பாற்றி அருளினன்
பரம பாவநத்வ போக்யத்வங்களை அருளின படி –
————————————————————-
190-
நாட்டினான் தெய்வம் எங்கும் –காட்டினான் திருவரங்கம் -10
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -திருவாய்மொழி -4-5-5
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் -திருவாய் மொழி -5-2-8-
சத்வ ப்ரசுரராய் தன்னை பற்றுமபவர்களுக்கும்
ரஜஸ் தமஸ் பிரசுரர்களுக்கும் -சுள்ளிக் கால் நடடினால் போலே –
முதல் தன்னிலே இவற்றை முமுஷு ஸிசு ருஷியா சிருஷ்டித்து
வேத சஷுசையும் கொடுத்தருளி குண அனுகூலமாக தேவதையை ஆஸ்ரயித்து
அவற்றின் ஸ்வா பாவத்தையும் -தனது வாசியையும் அறிந்து
தனது பக்கலிலே வருகிறன என்றது ஆய்த்து -இது அவன் அருளின கார்யம்
திருவரங்கத்தை காட்டினது நல்லதோர் அருள் தன்னாலே
தேவதாந்தர முகமாக தச் சரீரியை ஆராதிக்கையும் உஜ்ஜீவன பிரகாரம் ஆனாலும்
அது அதிக்ருதா அதிகாரம்
கோயிலை வந்து ஆஸ்ரயிக்கை சர்வாதிகாரம்
இப்படி எவ் உயிர்க்கும் தாயான பகவான் செய்யும் ஷேம க்ருஷி பரம்பரை
அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் -நல்லதோர் அருள் தன்னாலே
நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்தி-
ஆற்ற அமைய -பொறுக்க பொறுக்க -குளப்படியிலே கடலை மடுத்தால் போலே அன்றிகே
சாத்மிக்க சாத்மிக்க தனது கல்யாண குணங்களை அனுபவிக்க பண்ணி -மாதா நாராயண -இறே
———————————————————-
191
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோறு -14
வினைகளை வேரற பாய்ந்து -திருவாய் மொழி -3-2-1-
திருவரங்கம் என்னாத மூர்க்கர் -வழி யல்லா வழியில் அபஹரித்து ஜீவித்து உண்கிறார்கள் –
பாய்ந்து- சர்வ சக்தன் சர்வேஸ்வரன் வினைகளை போக்கும் பொழுது பாய்ந்து -போக்குகிறான் சினம் தோற்றுகிறது
———————————————————-
192-
சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே -14
சோற்றினை வாங்கி புல்லைத் திணி மினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5-
தங்களை உத்தேசித்து வந்து கண் வளருகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர்
க்ருதஞ்ஞமான நாய்க்கு இடுமின்
மனுஷ்ய யோநியிலே பிறந்து வைத்து அறிவிலிகளாக -ஞானம் இல்லாதவர் பசுக்களுக்கு சமானம்
இப்படி இருவரும் அருளிச் செய்தது -இது தன்னை கேட்டாகிலும்
லஜ்ஜா பயங்கள் உண்டாகி பகவத் விஷயத்திலே நெஞ்சு புரிவார்களோ என்கிற நசையாலே –
——————————————————————
193-
சூதனாய் கள்வனாகி -16
களவும் சூதும் -திருவாய்மொழி -2-10-10-
சூதாவது பச்யதோஹரத்வம் -சத்வ வ்ருத்தனாய் இருப்பான் ஒருவன் –
பர சேஷமாய் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு –
என்று இருப்பவனைக் கண்டு இவை யெல்லாம் பொய் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்கை –
களவாவது பர த்ரவ்யத்தை தனது என்று இருக்கை
பிரமாண விஷயமான அர்த்தத்தை இல்லை என்கை
களவாகிறது ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை தனது என்று இருக்கை
———————————————————————-
194
பாதம் நீட்டி -19
நீள் கழல் -திருவாய்மொழி -1-9-11
ஆழ்வார் அளவும் நீட்டின திருவடிகள்
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள் -ஒக்கின்றன
திரு முடிப்பக்கம் குட திசை மேற்கு
திருவடிப் பக்கம் குணதிசை கிழக்கு
திரு மண்டங்குடி கோயிலுக்கு கிழக்கே இறே இருப்பது –
துர்யோதன ஸ்தானம் வாழ்ந்து போனால் அர்ஜுனன் இருப்பு வாழ சொல்ல வேண்டா இறே
ஆளவந்தார் திருவடி தொழ எழுந்து அருளினால் துரியோதன ஸ்தானம் என்று
திரு முடிப் பக்கத்தில் ஒரு நாளும் எழுந்து அருளி அறியார் -திரு வாசலுக்கு கிழக்கே எழுந்து
அருளி இராத பிரதேசம் இல்லை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளர்ந்த திருவடி -நீள் கழல்
அடியார் அளவும் வளர்ந்த திருவடிகளை இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள்
————————————————————————-
195
கடல் நிறக் கடவுள் எந்தை -19
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் -திருவாய்மொழி -3-3-4-
நித்ய ஸூரிகளுக்கு நித்ய ஆ காங்க்ஷிதமான வடிவை உடைய பரதேவதை கிடீர் –
நித்ய சம்சாரியைக் குறித்து சாபேஷமாக கிடக்கிறது -தாழ்வுக்கு எல்லை நிலமான என்னளவும் வரும்படி வெள்ளம் கோத்தது –
என் கண் பாசம் வைத்த -அவர்கள் சத்தை உண்டாக்க- அவர்களோடு கலந்து -தான் சத்தை பெற என்னோடு கலந்தான் –
நெஞ்சும் உடம்பும் எனக்கு தந்து- ஜீவனம் வைப்பாரோ பாதி அவர்கள் பக்கலில் –
——————————————————————————–
196
பள்ளி கொண்ட மாயனார் -20
அரவின் அணை மிசை மேய மாயனார் -அமலனாதி -7-
கண் வளர்ந்து அருளும் போதைக்கு அழகின் ஆச்சர்யம்
சாய்ந்தவாறே மற்றயோர்க்கு பொல்லாங்கு தெரியும் இங்கே பழைய அழகும் நிறம் பெரும் –
இன்று நாம் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே மல்லாந்து
என்ன ஒண்ணாதே இருக்கும் ஆச்சர்யம் –
————————————————————————————
197
மனமதொன்றி -21
பூசும்சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி -4-3-1
மனஸ் என்றது மநோ வ்ருத்தியை சொல்லுகிறது
நெஞ்சமே -நெஞ்சின் கார்யமான ஸ்ம்ருதியை சொல்லுகிறது
மட நெஞ்சால் குறைவிலமே -4-3-2-என்கிற இடத்தில் -நாயகன் வரவு தாழ்த்தான் என்று அவன் முன்னே
சாந்தை பரணியோடே உடைப்பாரைப் போலே என் நெஞ்சம் எனக்கு வேண்டா என்கிறார் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி
நெஞ்சு சாந்து பரணியாகவும் -அதில் உள்ள ஸ்ம்ருதி சாந்தாகவும் விவஷிதம் -அரும் பத உரை –
பூசும் சாந்து என் நெஞ்சமே பாசுர அவதாரிகையிலும் ஈட்டில் -காரண கார்யமான ஸ்ம்ருதி உள்ளது –
ஆக இருவரும் மநோ வ்ருத்தியை மனம் என்கிறார்கள் –
—————————————————————————————-
198
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -34
சிந்தையினால் செய்வது தான் அறியாதன இல்லை -திருவாய்மொழி -7-10-10-
நினைவுக்கு வாய்த்தலை பற்றி இருப்பதாலே –
அவன் நினைத்தால் இவன் அநந்தரம் நினைக்க வேண்டும்படி இருக்க அவன் அறியாதன உண்டோ –
——————————————————————————————-
199
செங்கண் மாலே -35
உன் பவள வாய் -பெருமாள் திருமொழி -4-9-
இவர் சிக்கென என்றவாறே திரு உள்ளம் பிரசன்னமாய் -உள்ளடங்காமல்
திருக்கண் சிவந்ததை செங்கண் மால் என்கிறார் -வ்யாமோஹத்தால் குதறிச் சிவந்த திருக் கண்கள் –
படியாய் கிடந்தது என்றவாறே அசித் போன்ற பாரதந்த்ர்யம் உணர்ந்தவர் என்ற வ்யாமோஹத்தால்
திருவேம்கடமுடையான் சோதி வாய் திறந்து சிரிக்க -உன் பவள வாய் என்கிறார் –
வ்யாமோஹம் -கடாஷம் புன்னகை அனுபவித்தபடி –
—————————————————————————————–
200
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -36
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -44
மழை -ஆனை என்று பொதுவாக கூறப்பட்டாலும் கோவர்த்தன தாரணம்
கஜேந்திர மோஷம் -திரு உள்ளம் பற்றி அருளிச் செய்தார் என்பதை
வயவஸ்திதமாய் ஆய்த்து இவர்கள் கோஷ்டி இருப்பது –
பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-
——————————————————————————————
201-
வரை முன் ஏந்தும் -36
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21
ஏழு திரு நஷத்திரத்திலே மலையை எடுத்த இடத்திலே ஒரு பூ பந்தை எடுத்தாப் போலே வருத்தம் அற்று –
சேஷி மலை எடுத்தது சேஷ பூதர் சூட்டு நன் மாலைகள் ஏந்தினாப் போலே –
—————————————————————————————————
202-
உழைக கன்றே போலே நோக்குடையார் வலை -36
அகப்பட்டேன் மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே -திருவாய்மொழி -5-3-6-
அப்ராப்த விஷயத்தில் அகப்பட்ட சேதனன் பிராப்த விஷயத்தில் அகப்பட்டு உஜ்ஜீவித படியை அருளினபடி –
————————————————————————————————
203-
அம்மா ஒ கொடியவாறே -37
சிறு தொண்டர் கொடியவாறே -பெரிய திருமொழி -11-6-3
பெருமான் கடாஷம் அருளாததை கொடுமை என்றும்
சேதனன் பகவத் குண அனுசந்தானம் பண்ணாததை கொடுமை என்றும் அருளுகிறார்கள் –
—————————————————————————————–
204-
ஆம் பரிசு -38
உறுவது இது சீரியது என்று -திருவாய் மொழி -9-4-4-
இரண்டாலும் கைங்கர்யம் அருளுகிறார்கள்
————————————————————————————
205-
பெண்ணுலாம் சடையினானும் -44
திருமால் என்னை ஆளுமால் –சிவனும் காணாது -திருவாய்மொழி -10-7-6
பிரம ருத்ராதிகளுக்கும் அரியன்
ஆனை ஆழ்வார்களுக்கு எளியன் என்றார்கள் –
——————————————————————————–
206-
இறையவர் பதினொரு விடையரும் இவரோ -திருப் பள்ளி எழுச்சி -6
வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-
————————————————————————————
207-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4
அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
வாட்டுகை -நிச் சேஷமாக முடிக்கை -கரி யாக்குகை
வீர பத்னி யாகையாலே -கிள்ளிக் களைந்தானை -என்கிறாள் –
————————————————————————————
208
அந்தரத்து அமரர் -திருப் பள்ளி எழுச்சி-7
கேசவன் தமர் -திருவாய் மொழி -2-7-1-
அந்தரம் =ஆகாசம் -தேவ லோகம் -அவர்கள் வர்த்திக்கும்தேசத்தை இட்டு அந்தரத்து அமரர்
ஸ்ரீ வைஷ்ணவர்களை விஷ்ணு இட்டே சொல்வது கேசவன் தமர்
ஏகாந்தீ வ்யாபதேஷ்டவ்ய நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய -இ றே
————————————————————————————-
209-
துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திருப் பள்ளி எழுச்சி -10
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் -பெரிய திருமொழி -11-2-6-
அவனுக்கு சேஷித் வ ஸூ சகம் ஆழியும் இத்யாதி
சேஷ சேஷிகளின் அடையாளம் இத்தால் கூறப்பட்டன –
————————————————————————————
210
தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10
அடியார் அடியார் –அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10
பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply