Archive for December, 2012

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -157-168….

December 27, 2012

நூற்று ஐம்பத்து ஏழாம் வார்த்தை
சத்ருக்களுக்கு கரைய வேண்டா -ஸ்வாமியுமாய் -ஸ்ரீய பதியுமாய் -ஆனவன் உடைமை ஆகையாலே –

———————————————————————————————–

நூற்று ஐம்பத்து எட்டாம் வார்த்தை
ஆசார்யன் மூன்றாலே உத்தேச்யன் -ஞான ப்ரதன் -அனுஷ்டான ப்ரதன் -உபாய ப்ரதன் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களும் மூன்றாலே உத்தேச்யர் -உபாயத்துக்கு முற் பாடர் -உபேயத்துக்கு எல்லை நிலமாய் -இருந்த நாளைக்கு உசாத் துணை என்று –
பிராட்டியும் மூன்றாலே உத்தேச்யை -புருஷகார பூதை -கைங்கர்ய வர்த்தகை -நித்ய ப்ராப்யை -என்று –
ஈஸ்வரன் மூன்றாலே உத்தேச்யன் -ருசி ஜநகன் -மோஷ ப்ரதன் -உபாய பூதன் -என்று –

————————————————————————————————

நூற்று ஐம்பத்து ஒன்பதாம் வார்த்தை
ஸ்வபாவ அந்யதா ஞானம் -ஸ்வரூப அந்யதா ஞானம் –இவை -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் —
இவன் ஆத்ம பிரதானம் பண்ணினாப் போலே இருப்பது ஓன்று இறே அவன் -ஆசார்யன் -ஞானப் பிரதானம் பண்ணினபடி –

———————————————————————————————-

நூற்று அறுபதாம் வார்த்தை
ஈச்வரனாகிற கர்ஷகன் -சேதனனாகிற திருப்பள்ளித்தாங்கன்றை -விதை–சேஷத்வ ஞானமாகிற ஷேத்ரத்திலே ஊன்றி -ததீய அபராதமும் –
விபரீத ஞானமுமாகிற புழுக்கடியாமல் நோக்கி -கைங்கர்ய அனுவர்த்தமாகிற -மடையாலே – ஆசார்யர்ன் அருளாகிற நீர் பாய்ச்சி –
அஹங்கார மமகாரமாகிற களை மண்டாமே – பகவத் விஷயமாகிற களை கொட்டாலே சேற்றை எடுத்து -விபரீத அங்கீகாரமாகிற மாடும்
-சப்தாதி விஷயமாகிற பேய்க் காற்றும் – புகுராமே -பிரபன்னத்வம் ஆகிற வேலியை இட்டு – ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிற வர்ஷத்தை உண்டாக்கி –
தளிரும் முறியும் மொட்டும் செலுந்துமாய் -கொழுந்துமாய்-அதின் ஒளி மொட்டு எடுத்துக் கட்டின மாலை இறே பரமை காந்தி

திருப்பள்ளித் தாங்கன்று =விதை — செலுந்து =கொழுந்து

———————————————————————————————–

நூற்று அறுபத் தோராம் வார்த்தை –
பரம சேதனனாகிற பசியன் -ஆசார்ய முகத்தாலே அவகாதனாய் -சேதநனாகிற சிறு நெல் பொறுக்கி -வேதாந்தமாகிற உரலிலே -உபதேசமாகிற உலக்கையாலே –
ஸ்ரவணமாகிற தலைத்துகை துகைத்து -உடம்பாகிற உமி கழித்து -மனனமாகிற அடுக்கலிட்டு -நிதித்யாசநமாகிற சுளகாலே -விவேகமாகிற கொழி கொழித்து -அஹங்கார மம காரமாகிற -அடிக் கழித்து -அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்யமாகிற நுனிக் கொழித்து -ருசி வாசனை யாகிற தவிடறக் குத்தி -சேஷத்வ ஞானமாகிற வெளுப்பை உண்டாக்கி -அத்யவசாயமாகிற அரிகுஞ்சட்டியிலே பிரபத்தி யாகிற நீரை வார்த்து -சாதனாந்தரமாகிற தவிடறக் கழுவி -பிரயோஜனாந்தரமாகிற  கல்லற அரித்து,-பரபக்தி யாகிற பானையிலே பர ஞானமாகிற உலை கட்டி – அனுபவமாகிற அடுப்பிலே -விச்லேஷமாகிற அடுப்பை இட்டு -இருவினையாகிற விறகை மடுத்து -த்வரை யாகிற ஊத்தூதி -ஆற்றாமையாகிற கொதி கொதித்து – பரமபக்தி யாகிற பொங்கினாலே -சூஷ்ம சரீரமாகிற கரிக்கலத்தோடே ஸூஷூம்நையாகிய வாசலாலே புறப்பட்டு -அர்ச்சிராதி யாகிற படி யொழுங்காலே மாக வைகுந்தமாகிற மச்சிலேற்றி அப்ராக்ருதமாகிற பொற் கலத்தோடே -அஹம் அன்னம் -என்கிற சோற்றை இட்டு – அஹம் அந்நாத -என்று புஜியா நிற்கும் –
இவை இரண்டும் முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை

———————————————————————————————–

நூற்று அறுபத்திரண்டாம் வார்த்தை
கலங்குகிறதும் -கலக்குகிறதும் -கலங்கிக் கிடக்கிறதும் –தெளிகிறவனும் -தெளிவிக்கிறவனும் -தெளிந்து இருக்கிறவனும் –
கலங்குகிறான் -சேதனன் – கலக்குகிறது -அசித் – கலங்கிக் கிடக்கிறான் -சம்சாரி –
தெளிகிறான் -சேதனன் – தெளிவிக்கிறான் -ஆசார்யன் – தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன் –
ஆகையால் கலங்குகிற தன்னையும் -கலக்குகிற அசித்தையும் – தெளிவிக்கிற ஆசார்யனையும் -தெளிந்த ஈஸ்வரனையும் – அறிய வேணும் .

———————————————————————————————–

நூற்று அறுபத்து மூன்றாம் வார்த்தை
நஞ்சீயர் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்திலே-தெற்கு ஆழ்வார் பட்டர் -தூவிரிய பாசுர வ்யாக்யானத்தில் இவரை பெற்றி என்றும் சொல்வர்
-ஜீயர் ஸ்ரீ பாதத்திலே எழுந்து அருளி -உமக்கு செய்ய வேண்டுவது என் -என்று கேட்டு அருள -ஜீயர் – பெருமாள் சர்வ ஸ்வதானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய -பட்டரும் இத்தை -திருமாலை தந்த பெருமாளுக்கு-இவர் நம் பெருமாளுடைய
அர்ச்சகர் -அருளிச் செய்ய -அவரும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் புறப்பட்டு அருளி -சேலையைக் களைந்து அருளி ஜீயரை அனுபவித்து அருள -ஜீயரும் அனுபவித்து – நம் பிள்ளை தொடக்கமான முதலிகளைக் குறித்து -பெருமாள் எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணி அருளினார் -நானும் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவதாக ஒருப்பட்டேன் -அபேஷை உடையார் உடைய படியே அபேஷித்து கொள்ளும் கோள் என்று அருளிச் செய்ய -நம்பிள்ளையும் -அடியேனுக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய – மணக் கோலத்தே முளை தெளிப்பாரைப் போலே இப்போது தஞ்சமான ஒரு வார்த்தை உண்டோ கேட்பது -என்று பின்னையும் அருளிச் செய்த வார்த்தை – ஆத்ம விநியோகம் ஈஸ்வரன் என்று இராதே ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய -இவர் திரு உள்ளம் பிரசன்ன மாகாமையாலே பேசாதே நிற்க -உம்முடைய நினைவேது சொல்லிக் காணீர் -என்ன -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரம பதத்துக்கு எழுந்து அருளினால் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் என் நினைத்து இருக்கக் கடவர் -என்ன -அது அதிகார அநு குணமாய் அன்றோ இருப்பது -தருப்தன் ஆகில் ஆர்த்தனாய் இருக்கிறான் – ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான் -என்று அருளிச் செய்ய -பிள்ளையும் இவ்வர்த்தத்தை
அநுஷ்டான பர்யந்தமாக கண்டபடி -அம்மங்கி அம்மாள் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்தில் -அவர் திரு மாளிகையிலே பிள்ளை எழுந்து அருள -அவருடைய தேவியார் பிரசன்னையாய் இருக்க -ஸ்ரீ பாதத்தில் சேவித்துப் போந்த முதலிகள் -இதுக்கு நிதானம் என் -என்று கேட்க -அம்மாள் தேவியார் விஷயத்தில் இதுக்கு முன்பு பண்ணின ப்ராதி கூல்யம் உண்டாகில் அன்றோ -அவர் பேற்றுக்கு இவர் வெறுக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார்-அநந்தரம்
 தம்முடைய ஸ்ரீ பாதத்தை உடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாட்டுக்கு எழுந்து அருள -ஸ்ரீ வைஷ்ணவர் பிள்ளைகள் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே விழுந்து அழ இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க -பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் -இழக்கிற தேசம் என் படக் கடவது -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————

நூற்று அறுபத்து நாலாம் வார்த்தை
பட்டர் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -பிரசாதக் கிழியை எடுத்துக் கொண்டு வாரும் -என்ன -பிரசாதக் கிழியின் அருகே –
பணக் கிழியும் இருக்க -அவர் பிரசாதக் கிழியை எடுப்பது பணக் கிழியை எடுப்பதாக நிற்க -இவர் வரக் காணாமையாலே எழுந்து அருளி –
இவர் நிற்கிற நிலையைக் கண்டு -இடம் பெற்ற அளவிலே இருவரும் உம்மை நலிந்தார்கள் ஆகாதே வாரீர் -என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————————

நூற்று அறுபத் தஞ்சாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ராகத் த்வேஷம் கொண்டாடி அவர்களில் ஒருவர் பரிபவப்பட்டோம் என்று பட்டினி விட -பரிபவப் படுவாரும் தாமேயாம் -பட்டினி விடுவாரும் தாமேயாம் -என்று அருளிச் செய்தார் – அவர்கள் இத்தை கேட்டு -வெட்கி -திருந்தினார்கள் –

————————————————————————————————-

நூற்று அறுபத் தாறாம்  வார்த்தை
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராகத் த்வேஷம் கொண்டாடி வர -இவர்களைச் சேர விட்டு அருள  என்று -ஆச்சான் பிள்ளைக்கு -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் விண்ணப்பம் செய்ய – ஜகத்தில் ஈச்வரர்கள் இருவர் உண்டோ -என்று அருளிச் செய்ய -ஆகிலும் சேர விட்டு அருள வேணும் -என்ன –
ஸ்வ சரீரத்தை நியமிக்க மாட்டாத நான் -அந்ய சரீரத்தை நியமிக்க புகுகிறேனோ -என்ன -ஆகிலும் இப்படி அருளிச் செய்யலாமோ என்ன –
அத்ருஷ்டத்துக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம் -த்ருஷ்டத்துக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம் -நாம் இவர்களை சேர விடும்படி என
-என்று அருளிச் செய்ய –இருவரும் அந்யோந்யம் பீருக்களாய் தங்களில் ஏக மநாக்களாய் விட்டார்கள் –

———————————————————————————————–

நூற்று அறுபத்தேழாம் வார்த்தை
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலி யாண்டான் ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு சிஷ்ய லஷணம் இருக்கும்படி என் -என்று விண்ணப்பம் செய்ய -ஆண்டான் அருளிச் செய்த படி -ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன் -பார்யா சமனுமாய் -சரீர சமனுமாய் -தர்ம சமனுமாய் இருக்கும் –
அதாவது -சொன்னத்தை செய்கையும் -நினைத்தத்தை செய்கையும் -நினைவாய் இருக்கையும் – என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

நூற்று அறுபத்து எட்டாம் வார்த்தை-
அநந்தரம் பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டன் இட்டு ஆசார்ய லஷணம் இருக்கும்படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
ஆழ்வான் அருளிச் செய்தபடி – சிஷ்யன் விஷயத்தில் -ஆசார்யன் பர்த்ரு சமனுமாய் -சரீரி சமனுமாய் -தரமி சமனுமாய் -இருக்கக் கடவன் -அதாவது
-ஏவிக் கொள்ளுகையும் -எடுத்து இடுவிக்கையும் -அதாவது அசேதனத்தைக் கொண்டு -நினைத்தபடி விநியோகம் கொள்ளுமா போலே விநியோகம் கொள்ளுகையும் -எடுத்துக் கொள்ளுகையும் -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- கற்றுக் கறவை கணங்கள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 27, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளிப் பெற்ற –
எம்பெருமான் பாதுகை ஸ்தானம் அடியவர் -சேவித்தால் மகிழ்வான் அவன் தானே -கார்யம் செய்பவனும் அவனே
சம்பந்தமே காரணம் –
சீற்றத்துக்கு காரணம் ஆகாது -சன்னதியில் பாகவதர்களை சேவிக்க லாம் -திரு விருத்தம் பாசுரம் வியாக்யானம் –
எம்பெருமானார் சாதித்து –
பாகவதர்கள் முன்னிடுவது –
பிள்ளாய் -பேய் பெண் -கோதுகலம் உடையபாவை –
கிருஷ்ணச்ய த்ருஷ்ண கிருஷ்ணா த்ருஷ்ண இருவருக்கும் ஈடுபாடு
பொய் கலவாது என் மெய் கலந்தான் -வாசு தேவன் சர்வம் –
மாமன் மகள் -தேக சம்பந்தம் உத்தேச்யம் -ஆண்டாள் வயிற்றில் பிறந்த -பிள்ளை என்று என்ன
பெறாமல் ஸ்ரீ பராசர பட்டரின் ஸ்ரீ பாதம் சேவித்து -கண் வளரும் -சப்தம்-
பேறு தப்பாது துணிந்து இருந்த அரும் கலம் -ஐவரையும் எழுப்பி –
திருக் கண்ணா மங்கை ஆண்டான் ஸு வியாபாரத்தை விட்டான் -ஒருவன் நாயை அடிக்க –
அதன் யஜமான் -கோபித்து -வர -கத்தியால் குதி பயந்து ராஜ கோபம் என்பதால் தன்  உயிர் மாய்த்து
எம்பெருமான் தனது சொத்தை விடமாட்டான் -கைங்கர்யமே செய்து கொண்டு –
அவனே தஞ்சம் என்று இருக்க வேண்டும் –
விட முடியாத கர்ம அனுஷ்டானம் -உயர்ந்த குடி பிறப்பு ஆபிஜாத்யம் –
கிருஷ்ணன் உடன் ஒப்பானவள் துல்ய சீல வயோ விருத்தம் போலே –
கற்றுக் கறவை கணங்கள்
கன்றாகிய  கறவை -கறவைகள் -கணம் -கணங்கள் -பல -அநேகம் –
சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றும் இல்லாத கோவலர் தம் பொற் கோடியே -ஆபிஜாத்யம் -இத்தால் –
கண்ணன் ஆசைப்பட்டு வந்து பிறந்த குடி என்பதால்
அழகு -புற்றரவு சுருக்கமான -அல்குல் இடைபிரதேசம்
புன மயில் -போதராய் –
முகில் வண்ணன் பேர் பாடி –
சிற்றாமல் பேசாதே கிடக்கிறாய்
செல்வா பெண்டாட்டி –
கற்றுக் கறவை -கன்று -கறவை -இரண்டும் வெவ்வேற பருவம் –
நாகு  பசு -தலை நாகு -முதல் கன்று குட்டி –
தலை நாகு பாலை தான் உண்ண வேண்டும் -தேசிகன் –
மூத்த குமாரன் ஆசார்ய ஸ்தானம் -ராஜ குமரன் –
நித்ய சூரிகள் பகவத் கைங்கர்யத்தால் -எப்பொழுதும் 25 வயசு
கீழ் நோக்கி பிராயம் புகுகை போலே –
கன்றின் பருவம் போய் கறவை பருவம் வந்து மாறாமல் –
பஞ்ச விம்சதி தான் நித்யருக்கு
கிருஷ்ண ஸ்பர்சத்தால் வந்த -இளகிப் பதித்து
த்ருஷ்ட்வா தசரதன் -இளைத்து -சந்தோஷத்தால் -லோகத்தில் -பார்ப்பது போலே –
ஐந்தாவது பன்மை -கறவை -கறவைகள் -கணம் -கணங்கள் -பல
சமூகத்தாலும் என்ன முடியாத திரள் திரளாக கூட என்ன முடியாத –
அபரிமிதகல்யான குண கணங்கள் -பல அவனுக்கு –
யானை குதிரை நான்கு வித சைத்னங்கள் போலே –
ஜீவாத்மாக்களுக்கு எண்ணிகை போலே -500 கோடி -மனுஷ்ய ஜன்மா –
கரந்த சில்  இடம் தோறும் -இமைக்கும் தூசி மண்டலம் -திருஷ்டாந்தம் -காட்டி -ஒவ்வொரு தூசியிலும் ஆத்மா
அவற்றின் உள்ளும் இருப்பவன் -அநந்தம் –
கறந்து -அத்தனையும் கறந்து -தேங்காதே புக்கு இருந்து -வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
இடையர் தோள் வலிமை
ஈஸ்வரன் ஒருவனே நியமிப்பது போலே
அனைத்தையும் ஒரு இடையனே கறக்கும் சாமர்த்தியம் -மெய்ப்பாடு
பாலும் நெய்யும் கொண்டு -விநியோகம் -செய இல்லை -முலை கடுக்கும் என்று கறக்கிறான்
ஜாதி அனுஷ்டானம் விடாமல் செய்கிறான் –
கர்மம் -சாஸ்திரம் விதித்தசெய்ய வேண்டுமே –வேதம் அனைத்துக்கும் வித்து –
மேலையார் செய்வனகள் பிரயோஜன அபேஷை இன்றி
கறவைகள் பாசுரம் -செய்யாமல் விட்டால் பாபம் -அவற்றை செய்தே வேண்டும் -பகவத் கைங்கர்யமாக
நித்ய நைமித்ய -கர்மம் -கார்ய கர்மம் 12 மாதம் தர்பணம் -செய்வது நான்கு மாதம் -அப்படி இல்லை
பித்ரு தர்ப்பணம் -சாஸ்திர விதியால் -ஸ்வரூபத்துக்கு செய்ய வேண்டும்-பலன் கருதி இல்லை –
வியாபாரம் செய்ய கறக்க வில்லை -சொக்கட்டான் -பணம் வைத்து ஓடம் வரும் வரை -தேசிகன் -காட்டி –
குறிப்பிட்ட முறை படியே செய்ய வேண்டும் –
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் குண அனுபவம் -கைங்கர்யங்களை பொழுது போக்காய் கொண்டு –
செற்றார் -இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார் -கிருஷ்ண விரோதிகள் -திறல் அழிய
கிரிஷ்ணனுக்கு விரோதிகள் இல்லை சர்வ பூதேஷு -வேண்டுதல் வேண்டாமை இலான் –
கம்சாதிகளுக்கும் -மற்று அறுவரை கல்லிடை மோத -ஏழாவது கற்பம் -ஆதி சேஷன் -ரோகிணி -திருவாய்ப்பாடி –
அடுத்து எட்டாவது -தெரிந்தால் கண்ணனுக்கு ஆபத்து என்று மாற்றி –
இடையர்கள் -மதுரைக்கு பக்கல் -கிட்டே –
கம்சனுக்கு பக்கமே கண்ணனுக்கு பாதுகாப்-கம்சனுக்கு கப்பம் கட்டும் இடம் –
பாலும் தயிரும் கப்பமாக கட்டினார்களாம் –
கோபர்களை கண்டால் கம்சனுக்கு பயம் -நேராக வராமல் ஏவல் -மாறு வேஷத்தில் போக அனுப்பி –
கம்சனை வதம் பண்ண இடையர் வேண்டுமோ கடைநிலை நானே போதுமே என்று கண்ணன் வந்தானாம் –
அதனால் தான் அக்ரூரை அனுப்பி கூட்டி வர
சென்று -எதிரிகள் இருந்த இடம் சென்று பொறுகை –
அதமன் -மத்யமன் -உத்தமன் -வீரம் –
கண்ணன் அப்படி அங்கெ சென்று செறு செய்தான் –
சக்கரவர்த்தி திரு மகன் போலே இவர்கல்வீரம்
குற்றம் ஒன்றும் -அவன் வர காத்து இல்லாமல் -குற்றம் இல்லாத -குற்றம் ஒன்றுமில்லாத
கையில் ஆயுதம் பொகட்டவர்களை யுத்தம் செய்யாத குற்றம் –
சரீரம் விட்டு மேலும் பாபம் செய்யாதபடி –
செய்தாரேல் நன்று செய்தார் -பாகவத விரோதம் ஸ்வரூப நாசம் -என்பதால் -அதை செய்ய விடாமல் –
துர் ஆசாரம் இருந்தாலும் என்னையே பூஜித்து இருந்தால்சாதுவாக நினைத்துபோக –
கோபர்கள் பெருமை இப்படி சொல்லி –
பொற் கோடி –
ஜனக குல சுந்தரி போலே  –
பொற் கோடி -தர்சநீயம் –
ஸ்திரீகள் கொடி -புருஷர்கள் மரம் –
ஸ்வா தந்த்ர்யம் தேவை இலை -ரஷிக்க தகப்பன் பர்தா பிள்ளை -காக்க
ஜாக்கிரதையாக வைரம் பொட்டியில் வைப்பது போலே –
படர மரம் -வேண்டுமே -கொழு கொம்பு அன்றி -இழியாமை –
பார்த்தா அடைய வயசு வந்தும் -ஜனகன் துக்கம் –
கோல் தேடிஓடும் கொழுந்தே போலே  -மால் தேடி -ஓடும் மனம் –ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு
தேக சௌந்தர்யம் -பாகவதர் திரு மேனியும் உத்தேச்யம்
ஸ்திரீகள் –
ஆசார்யன் சிஷ்யன் லஷனம் சீர் வடிவை நோக்குபவன்
ஆத்ம ரஷனம் சிஷ்யனுக்கு
பின்பழகிய பெருமாள் ஜீயர் -நஞ்சீயர் திரு முதுகு அழகு சேவிக்க உடம்பை பேணி –
திருக் கோஷ்டியூர் நம்பி -எம்பெருமானார் -இடம் அருளிய வார்த்தை
ஆள வந்தார் -திரு முதுகு சேவித்து -காவேரியில் குளிக்கும் பொழுது அதை தஞ்சமாக
நினைத்து இருப்பேன் -திரு விருத்தம் -வியாக்யானம் –
அல்குல் -இத்தனை சொல்லுவான் என் என்னில் –
த்ரௌபதி -தோழி கள் ஆணாக இருக்காமல் போனோமே –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபகாரம் ஆண்கள் பெண் உடைக்கு ஆசைப் படுத்துவது போலே
புன மயிலே தன்னிலத்தில் உள்ள மயில்
கீஷ்னனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல கூந்தல் அழகு
பொற் கொடி -சமுதாய சோபை -சௌந்தர்யம் -எழில்
விசேஷ த்வயம் -லாவண்யம் -அழகு
இரண்டையும் சொல்லி போதராய்
அத்தனை அழகையும் அனுபவிக்கும் படி
சக்கரவர்த்தி திருமகன் -தண்ட காரண்யம் நுழையும் பொழுது ராஜீவ லோசனன் ஆனான்
அனைவருக்கும் காட்ட போகும் பாரிப்பால் –
எல்லாரும் வந்தாரோ கேட்டாள்
சுற்றத்து தோழிமார் இவ்வூர்   தோழி –
கண்ணனுக்கு -வேண்டியவள் என்பதால் –
பிராப்யமான முற்றம் -விபீஷணன் பெருமாள் இடம் வந்தது போலே –
பொய் சேர்ந்தான் -சொல்லாமல் -வந்து சேர்ந்தான் -ஆஜகாம வால்மீகி சொல்லி –
சேர வேண்டிய இடம் -திரு முற்றம் -பிராப்யம் –
கண்ணனே படுகாடு கிடக்கும் இடம் -சேஷ பூதர் எங்களுக்கு சொல்ல வேண்டுமா
முறுவல் செய்து –
முகில் வண்ணன் -நீ விரும்பும் அழகு -ஸ்வாபம் வள்ளல் தன்மை
அழகையும் குணத்தையும் பாட -மயிலுக்கு மேகத்தை கண்டால்
முகில் வண்ணன் புன மயில்
சிற்றாதே -அசையாமல்
வடிவை நினைத்து பேசாதே கிடக்க
கண்ணுக்கும் செவிக்கும் போக்கியம் என்பதால்
செல்வ பெண்டாட்டி -கிருஷ்ண குண அனுபவத்தால் பொறித்து -இருக்கும் செல்வம் –
கண்ணன் உடன் இல்லையாகில் எற்றுக்கு உறங்கும்
அடியார்கள் குழாம் கூடுவது என்று கொலோ கைவல்யம் போல் கிடக்க காரணம் என்
எங்கள் ஆற்றாமை பாராதே
கண்ணன் போக்யதை பாராதே
உன்னுடைய உத்தேச்யம் பாராதே
எற்றுக்கு உறங்குகிறாய் –
பூதத்தாழ்வார் -எழுப்பி
சுருக்கமாக பாசுரம் பாடி
கோவலர் திருகொவலூர் இடை கழி முதல் ஆழ்வார் மூவரும்
பொற் கொடி -இவர்
கன்றுக்குட்டி போலே வெண்பா பாசுரம் –
தீர்தகரராய் திரிந்து சென்று செ று செய்யும்
குற்றம் ஒன்றும் இல்லாத -கற்ப வாசம் இன்றி அயோனி –
கொடியாக கோல் தேடி கொழுந்து போல் சொல்லிக் கொண்டார்
மயில் -கடல்கரை -அவதரித்து
முகில் வண்ணனை கண்டு
துஷ்ட ஆகாரம் -மயில் போலே இவர்களும்
இடை பிரதேசம் சுருங்கி -ஞானம் பொய்கை பூதத் வைராக்கியம் பேய் பக்தி –
பர ஞானம் இவருக்கு
சுற்றத்து பூதத் ஆழ்வாரும் பேய் ஆழ்வாரும்
மற்றவர் தோழிமார்
முகில் வண்ணன் சப்தம் -பாடி -முதலில் -விருப்பும் திரு நாமம் –
பழுதே பல அழுதேன் சொல்லி பொய்கை -இவர் தான் சிற்றாதே இருந்தவர் –
இவர் செல்வப்பெண்டாட்டி போலே
திரு மகா லஷ்மி போலே தாமரை பூவில் -அவதரித்து -பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -145-156….

December 26, 2012

நூற்று நாற்பத்து ஐஞ்சாம்  வார்த்தை
நான் ஒரு நூலில் வைத்து சொல் என்றால் சொல்லும் நூலில் மாலைகள் ஒரு முமுஷுக்கு பாவனமுமாய் போக்யமுமாய் இருக்கும் என்று
ஆச்சான் பிள்ளை வார்த்தை –

————————————————————————————————-

நூற்று நாற்பத்து ஆறாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் –பெரிய பிள்ளையையும் -பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் –
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் -இவள் சோகார்த்தையாக –ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன
அநாதி காலம் பாப வாசனைகளாலே -ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன
கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் -உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ -அவதரிக்க வேண்டுமோ -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
-பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் -சம்பவாமி யுகே யுகே என்றும் – ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் –

———————————————————————————————–

நூற்று நாற்பத்து ஏழாம் வார்த்தை
ஞானப் பிரதன் ஆசார்யன் –
ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஞான விஷயம் -எம்பெருமான் –
ஞான பலம் -கைங்கர்யம் –
பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் –
சிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதம் அப்ப்ரசாத மாகவும் -அப்பிரசாதம் ஸுப்ரஸாதம் ஆகவும் வேணும் –

————————————————————————————————-

நூற்று நாற்பத்து எட்டாம் வார்த்தை
ஆசார்ய விஷயத்தில் -கிருதஜ்ஞதை -விஸ்வாசம் -ப்ரேமம் -விஸ்லேஷ பீருவாகை – சம்ச்லேஷ விஷயம் -மங்களா சாசனம் -கதி  சிந்தனை –
அனுபவ இச்சை -இவை இத்தனையும் உடையவன் -ஆத்ம ஜ்ஞானமும் உடையவன் ஆகிறான் –

———————————————————————————————-

நூற்று நாற்பத்து ஒன்பதாம் வார்த்தை
அர்த்த பிரவணனுக்கு பந்துவும் இல்லை -குருவும் இல்லை –
விஷய பிரவணனுக்கு லஜ்ஜையும் இல்லை பயமும் இல்லை –
ஷூத்து நலிந்தவனுக்கு விவேகமும் இல்லை -நியதியும் இல்லை –
ஞானிக்கு நித்ரையும் இல்லை சுகமும் இல்லை

———————————————————————————————-
நூற்று ஐம்பதாம் வார்த்தை

திருக்கச்சி நம்பி ஸ்ரீ பாதத்திலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆஸ்ரயித்து -அடியேனை அங்கீகரித்து அருள வேணும் -என்ன
-நம்பி பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் -நம்மை அவனுக்கு சொல்லும் என்ன -நம்பியும் பெருமாள் பிரபத்தியை அருளிச் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவரும் க்ருதார்த்தராய் ஷண காலமும் பிரியாதே சேவிக்க -இவருடைய பிரகிருதி பந்துக்கள் இது கண்டு பொறுக்க மாட்டாமல்
இவரைப் பிரித்துக் கொண்டு போய் பிராயச்சித்தம் பண்ண வேணும் என்ன -இவரும் ஆகில் அநந்த சரஸ்சில் தீர்த்தமாடி -வாரா நின்றேன் என்று போந்து
-நம்பி ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நிற்க -நீர் போகா விட்டதென்- அவர்கள் பொல்லாங்கு சொல்லாமே -என்ன –
அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம் பொறுக்க மாட்டாமல் -சோகார்த்தராய் பரம பதத்துக்கு எழுந்து அருளினார் –

—————————————————————————————————

நூற்று ஐம்பத் தோராம் வார்த்தை
அனந்தாழ்வான் எச்சானுக்கு அருளிச் செய்த வார்த்தை -இவ்வாத்மா வாகிற பெண் பிள்ளையை – ஆசார்யனாகிற பிதா -எம்பெருமானாகிற வரனுக்கு
-குரு பரம்பரை யாகிற புருஷகாரத்தை முன்னிட்டு -த்வயம் ஆகிற மந்த்ரத்தை சொல்லி -உதகம் பண்ணிக் கொடுத்தான் –

————————————————————————————————–

நூற்று ஐம்பத்திரண்டாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -அஹங்காராதிகள் நடையாடிக் கொண்டு போருகிற அடியேனுக்கு -அக்கரைப்பட வழி உண்டோ என்று கேட்க – அருளிச் செய்த வார்த்தை -போக்தாவானவன் போக்ய பதார்த்தத்தை குலம் கொண்டே ஸ்வீகரித்து வைத்து -போக காலம் வந்தவாறே -குலங்கறுத்து மணியை புஜிக்குமா போலே -ஆசார்ய வரணம் பண்ணி -சரணகதனாய் இருப்பான் ஒரு அதிகாரிக்கு -அஹங்கா ராதிகள் நடையாடிற்றாகிலும் கைவிடாதே ஸ்வீகரித்து – தீர்ந்த வடியவர் தம்மை  திருத்திப் பணி கொள்ள வல்ல -திருவாய் மொழி -3-5-11-என்கிற படியே இவனுடைய
அஹங்காராதிகள் ஆகிற சேற்றைக் கழுவிப் பொகட்டு -போக்யமான வஸ்துவை போக்தாவான எம்பெருமான் தானே புஜிக்கும் என்று நினைத்து இரீர்
என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

நூற்று ஐம்பத்து மூன்றாம் வார்த்தை
எங்கள் ஆழ்வான் -ஆசார்யன் ஆவான் அஹங்காரத்தை விட்டு -அழிச்சாட்டத்தை விட்டு –அழிச்சாட்டம் =ஸ்வ தாந்த்ர்யம் -சண்டித்தனம் -அலமாப்பு –
அந்ய சேஷத்வம் ஆகிற வருத்தம் –அலமாப்பை விட்டு -அகாரார்த்தமான அந்தர்யாமிக்கே அற்று -அர்ச்சாவதாரத்தை ஆஸ்ரயித்து -ஆனந்தியாக போருமவன்
-அல்லாதான் ஒருவனுக்கு குடிமகனாய் லோக குருவாய் இருக்க -லோகத்துக்கு அடைய குடிமகன் ஆகா நின்றான் -பணத்துக்காக அடிமைத் தொழில் புரிகின்றான்

————————————————————————————————–

நூற்று ஐம்பத்து நாலாம் வரத்தை
நாராயணனைப் பற்றி நாடு பெறலாய் இருக்க -நாரங்களைப் பற்றி நரக வாசிகளாகா நின்றார்கள் –
எம்பெருமானைப் பற்றி ஏற்றம் பெறலாய் இருக்க -ஏழைகளைப் பற்றி எளிவரவு படா நின்றார்கள் –
ஏழையர் ஆவி உண்ணும் -சேட்டை தன் மடி யகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே –
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி சீர்மை பெறலாய் இருக்க -சில்வானவரைப் பற்றி சீர் கேடராகா நின்றார்கள்–சில்வானர் -அற்பர்கள் –
ஆசார்யனைப் பற்றி அம்ருத பானம் பண்ணலாய் இருக்க அஞ்ஞ்ரை பற்றி அனர்த்தப் படா நின்றார்கள் –
மந்த்ரத்தைப் பற்றி மாசு அறுக்கலாய் இருக்க -மமதையைப் பற்றி மரியா நின்றார்கள் —மரியா நின்றார்கள் –ஸ்வரூப நாசத்தை அடையா நின்றார்கள் –
வடுக நம்பி -நியந்தாவான ஆசார்யன் சந்நிதியிலே வர்த்தித்தல்-நியமவான் ஆன சிஷ்யன் சந்நிதியிலே வர்த்தித்தல் –செய்யில் அல்லது நியதன் ஆகைக்கு
வழி இல்லை –ஆசார்ய சிஷ்ய லஷண பூர்த்தி உள்ளவர் உடன் வர்த்தித்தால் எம்பெருமானே பிரப்யமாயும் பிராபகமாயும் -தாரகமாவும் –
போஷகமாவும் -போக்யமாயும் இருப்பவன் ஆகிறான்-

—————————————————————————————————–

நூற்று ஐம்பத்து ஐந்தாம் வார்த்தை
தான் வைஷ்ணவனாய் அற்றால் தனக்கு தன் ஆசார்யானில் குறைந்து இருப்பான் ஒரு சிஷ்யன் இல்லை -உத்தேச்ய பிரதிபத்தி துல்யமாகையாலே —
ஆகிற படி என் என்னில் -என்னுடைய அஜ்ஞானத்தையும் -அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே -என்னை விஷயீகரித்து -அத்தலைக்கு
ஆக்கினவன் அன்றோ -என்று சிஷ்யன் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
ஆசார்யனும் -என்னுடைய அஞ்ஞானத்தையும் அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே- விஷய பிரவணன் மரப் பாவை காணிலும் ஆலிங்கனம் பண்ணுமா போலே -என் பக்கலிலே உட்பட பர தந்த்ரனாய்க் கொண்டு போருகிறான் அன்றோ -பகவத் விஷயத்தில் தனக்கு உண்டான
ஆதர அதிசயம் இருந்தபடி என் -என்று உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

—————————————————————————————————-

நூற்று ஐம்பத்து ஆறாம் வார்த்தை
ஆசார்யன் அருளிச் செய்யும் வார்த்தையை ஆப்தம் என்று ஆதரித்தாருக்கு அந்தக்கரணம் விதேயமாகும் -அந்தக்கரணம் விதேயமான வாறே
அந்தர்யாமி பிரசன்னனாம் -அந்தர்யாமி பிரசன்னன் ஆனவாறே – அந்த பிரகாசமும் அந்தஸ் ஸு கமும் உண்டாம் –
இவை இரண்டும் உண்டானவாறே அந்தர் தோஷமும் அந்தர் துக்கமும் கழியும் – இவை கழிகிற அளவன்றிக்கே -அந்தமில்லாத ஆனந்தம் உண்டாம் –

—————————————————————————————————
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .

பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-நோற்று ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 26, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற அருளப் பெற்ற ஆழ்வார்கள்
தூ மணி மாடத்து துயில் அணை மேல் கண் வளரும்
சயன திருகோலம் அனுபவிக்க
மாமான் மகளே  மாமீர் -இதில் மட்டும்
பதின்மர் -ஆசார்யர் சிஷ்யர் பாவம் இவருக்கு மட்டும் தான் –
பேய் ஆழ்வார்
மஹா மஹான் -பேய் ஆழ்வார் –
பூதம் சரசா மகாதாஹ்ய -பட்டர் -மஹான் என்று அழைக்க பெற்றவர்
பேய் ஆழ்வார் -பெயர் காரணம் -பெரிய பேய் பெரிய -பேய் மலை –
பொய்கை பிரான் /பூதத் திருவடி தாள்கள் /தமிழ் தலைவன் பொன்னடி பெரியவர் அர்த்தம் –
முதலில் நாயகி பாசுரம் பேய் ஆழ்வார் -திரு துழாய் சூடும் -வேம்கடம் பாடும் –
திருமழிசை அழைப்பான் திரு வேங்கடத்தானை கூட -அவரும் நாயகி பாசுரம் இதனால் -அருளி –
மாமீர் -அவரை பரம ஸ்ரீ வைஷ்ணவர் ஆக்க
உன் மகள் தான் ஊமை பெரும் புலியூர் வ்ருத்தாந்தம் -நெல்லை பிளந்து காட்டி –
செவிடோ அனந்தலோ மந்தரப் பட்டாளோ =மந்திர உபதேசம் கொண்டவர்
மா மாயன் -மாயமாய மாய பாசுரம்
மாதவன் -திரு இல்லா தேவரை தேவன் மின் தேவு
வைகுந்தன் -வைகுந்த செல்வனார் திருவடி மேல் பாடினேன் –
ஸ்வர்க்கம் அனுபவம் கண்ணன் படுகாடு கிடக்க –
பெண்கள் அவன் பால் படும் பாட்டை அவன் தான் பட்டு தண்ணீர் தண்ணீர் –
வீறு உடையவள் -வந்து படுகாடு கிடக்க –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கிறவள் –
ஒரு போகியாக அனுபவிக்கிறவள் –
நோற்ற -ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மானாய் ஆனந்த அனுபவம் செய்து கொண்டு இருக்கிறவள் –
மாற்றமும் தாராயோ
வாசலை தான் திறக்க வில்லை வாயை திறக்க கூடாதோ
கண்ணன் இருப்பதை திரு துழாய் காட்டிக் கொடுக்க
கும்பகர்ணனும் தோற்று -உனக்கு பெரும் துயில் தான் தந்தானோ –
அரும் காலமே -தேறி வந்து திறவாய்
நோற்று -வைகலிலும் எழுந்து வராமல் -வைகிறார்கள் முதல்
பலன் கை வந்தபெண் -சித்த சாதனம் என்பதால் நோற்க வேண்டியது ஒன்றும் இல்லையே
ரஷணம் அவன் உணர்ந்து ஸ்வ யத்னம்தவிர்ந்து  -தத் சேஷத்வம் உணர்ந்து ஸ்வ யத்னம் தவிர்ந்து
இந்த  ஞானம் அறிவதே நோன்பு
உள்ளபடி அறிந்து கொண்டு -சர்வ யக்ஜ சமாப்தம் -பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்து –

பிள்ளையார் சித்த சாதனம் செய்து பழ பலன் பெற்று -கை மேல் பலன்
readymade போலே -விளம்பின பலன் இல்லையே –
எழுப்புகின்றவர்களுக்கும் இது தான் நிஷ்டை
பிராப்தி மேல் உள்ள துடிப்பால் -பேற்றுக்கு த்வரிப்பவர்கள் வெளியில்
பேறு தப்பாது துணிந்து இருப்பவள் உள்ளே –
சித்தோ உபாய நிஷ்டர்களுக்கும் கர்ம யோகம் கைங்கர்யத்தில் -அன்வயமாக
பகவத் ஆக்சை கைங்கர்ய ரூபமாக –
ஞானம் ஸ்வரூபத்தில் -சேர்ந்து
பக்தி துடிப்பில் -பிராப்ய ருசியில் அன்வயித்து விடும் –
ஸ்வர்க்கம் இடைவிடாமல் அனுபவிப்பது கிருஷ்ண அனுபவமே ஸ்வர்க்கம்
சீதை பிராட்டி வார்த்தை -காட்டுக்கு கூட்டி போகாமல் பெருமாள் -சொல்ல –
ஸ்வர்க்கம் நரகம் அதிகாரி பேதம் -படி வேறுபாடும் –
சுக வாக்கியம் – ஸ்வர்க்கம் –
இவளுக்கு ஸ்வர்க்கம் கிர்ஷ்ண அனுபவம்
கூடி இருப்பதே ஸ்வர்கம் பிரிந்து இருப்பது நரகம் –
இது அறிந்து கொள் -பிராட்டி ராமனுக்கு அறிவு -நீ boy school படித்தாய் நான் girl school கற்றது
நாங்கள் உனக்கு குழை சரக்கு –
அவள் பேசாமல் கிடப்பது என் என்னில் ஆனந்தத்தில் மூழ்கி
பிராட்டி திருவடி வார்த்தை கேட்டு மூழ்கி னது போலே –
பேச்சே அமையும் -அம்மனாய் சொன்னதும் ஆனந்தம்
தங்கள் அடியேனாய்  இருப்பவளை அம்மனாய் என்பதே கோபத்தாலும் வாய் திறக்க வில்லை –
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
வாசலை அடைத்தால்  வாயையும் அடைக்க வேண்டுமா
ஐ ஸ்வர்யம் மிக்கு -பந்துக்களை
உடம்பை கிரிஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சை எங்களை
கண்ணும் காதையும் ஒக்க பட்டினி போடா வேண்டுமா
பரஸ்பர போதயந்த
மதுரா மதுரா லாபா இனிமை -பெருமாள் சீதை பற்றி வார்த்தை
வீணாக பழி  -கண்ணன் இங்கே இல்லை
நாற்றத் துழாய் முடி நாரணன்
கோயில் சாந்தை உன்னால் ஒழிக்க போமோ –
பரிமளம் வீச –
ஒருகால் அணைத்து விட்டால் ஐஞ்சு ஆறு குளியலுக்கு நிற்கும்
இப்பொழுது இல்லை
கட்டும் காவலுமான வாசலில் புகுரப் போமோ
அவன் நாராயணன் -கதவு திறக்க காத்து இருக்க வேண்டாமே
வ்யாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தில்
உகவாதார்கள் நாஸ்திகர் கூட விடாமல்
அவனையே உகந்த உன்னை விட்டு போவானா
நம்மால் போற்ற -வெறுமையே பச்சையாக -ஆஸ்ரயணம் உபாயம் இல்லைருசியால் –
அவனை பார்த்தல் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான்
புண்யம் -சித்தமான
கிருஷ்ணன் தர்மம் சனாதனம்
பண்டு ஒரு நாள் -கும்பகர்ணன் –
கூற்றத்தின் வாய் விழுந்த -தண்ணீர் குடிக்கும் ஏரியில் குதித்து மாய்ந்து –
தயரதன் பெற்ற மணித் தடம் –
எதிரிகள் இடமும் கருணை காட்டும் பெருமாள் –
அயோதியை ராஜ்ஜியம் கூட கொடுப்பானே திருவடியில் விழுந்து இருந்தால் –
உறக்கத்தில் தலையானவன்
அவனது துயில் -உன்னது பெரும் துயில் –
அவன் ஒருத்தியை இ றே பிரித்தான்
நீ ஊராக பிரித்து பெரும் துயில்
கிருஷ்ண கிருஷ்ண பெரிய சோம்பல் முறிக்க
அழகை கண்டு அரும் கலமே ஆபரணம் –
ஆர்த்தியை கண்டு துடுக் என்று வந்தாள்
தேற்றமாக -படுக்கையில் இருந்தபடி வாராமல்
தாரை வந்து போல் வாராமல் -விளக்கு ஏற்ற வில்லையே -பேய் ஆழ்வார் –
நோற்று ஸ்வர்க்கம்-திருக் கண்டேன் அனுபவம் –
மாற்றமும் தாரார் வாசலும் திறவாதார் இவர் தானே –
நாற்ற துழாய் முடி நாராயணன் 8/இன்றே கழல் கண்டேன் -பல /ஓட்ட படை எட்டும் -தண துழாய் மார்பன்
புண்ணியன் -சக்கரவர்த்தி திரு மகன்
கும்பத்தை காரணமாக -அகஸ்தியர் கும்பத்தில் பிறந்து
தோற்று பெரும் தமிழன்
தமிழ் தலைவன் அமுதனார்
ஆற்ற அனந்தல் -சிஷ்யருக்கு வெறும் அனந்தல்
அரும் கலமே -திருக் கண்டேன் -பூ மேல் திரு முடித்து –
தேற்றமாய் வந்து -பேய் -அழுதும் அலற்றியும்

பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- தூ மணி மாடத்து துயில் அணை மேல் கண் வளரும்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 26, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற அருளப் பெற்ற ஆழ்வார்கள்தூ மணி மாடத்து –
உறவை சொல்லி இந்த ஒரு கோபிக்கு மற்றும் ஏற்றம் —
துயில் ஆணை மேல் கண் வளரும் -வைத்து அவதாரிகை
கிருஷ்ணன் வந்த போ து வரட்டும் அனாதரித்து கிடக்கிறாள் ஒருத்தி –
பேறு தப்பாது என்று -ஸ்வரூபத்தை -உணர்ந்து அனுபவிக்கையும் அவன் -இட்ட வழக்காய் இருப்பது –
பூனை பூனை குட்டி -தாய் வாயால் கவ்வி கொண்டு வைக்கும் –
நம்மை ரஷிப்பது அவன் பொறுப்பு -இதை அனுஷ்டானத்தில் கொண்டவள் இந்த கோபிகை –
உறுதி இருந்து -செய்த்தலை நாற்று போலே இருப்பது ரொம்ப கஷ்டம் –
மருந்தாக குணப்படுத்துவதும் அவனே -வைத்யோ நாராயண ஹரி
மருந்தும் திருவடி தீர்த்தமாக கொள்வது மத்யம பஷம் –
உத்தம பஷம் -ஒன்றுமே இல்லாது -ரஷணம் ஏது -அவனுக்கு தெரியும் –
நெஞ்சில் பரிபக்குவம் வருவது கஷ்டம் –
நம்முடைய ஸ்வரூபத்தை உணர்ந்து -நாமும் அவனும் உணர்ந்து –
தத் தத்ய சத்ருசம் பவது -பிராட்டி வார்த்தை திருவடி இடம் –
சக்தி உண்டு -சீதோ பவ சொல்லி நெருப்பை குளிர வைத்த அக்னி -பஸ்மம் ஆக்க கட்டளை இடலாம் –
பண்ண கூடாது -என்று இருந்து -ஸ்வரூபத்துக்கு சேராது –
வில்லாலே -போக்கடி பண்ணி -காகுஸ்தன் -ராம பிரான் -அது தான் அவருக்கு தகுதியானது –
த்ரௌபதி இரு கை விட்டு -லஜ்ஜையை விட்டாள் -பிராட்டி சக்தியை விட்டாள் –
அதை அனுஷ்டானத்தில் வைத்து துயில் ஆணை மேல் கண் வளரும் –
இப்படி அவதாரிகை சாதித்து வியாக்யானம்
தூய்மையான மாணிக்கம் -கொண்டு சமைத்த மாடம் –
திரு நாமங்கள் சொல்லி -மாமீர் -நீங்களே சொல்லி -ஏமப் காதல் -பட்டாளா
மந்த்ரம் பட்டாளா
துவளிலா மா மணி மாடம் -எம்பெருமான் திவ்ய தேசம் -திரு தொலை வில்லி மங்களம் –
இரண்டுக்கும் ஒப்பீடு -செய்து வியாக்யானம் –
குற்றம் சொல்லி இல்லை என்று கழித்து அங்கெ -இங்கேகுற்றம் பிரஸ்தாபமே இல்லை –
குற்றம் இல்லாதவன் எவன் -பூமி பிராட்டி குற்றமா கேள்வி பட வில்லலை யே வைபவம் உண்டே –
சௌக்யமாக இருக்கிறீரா -ஜுரம் இல்லையே கேள்வியில் வாசி போலே
அதனால் தூ மணி மாடம் -பாகவதர்கள் மாடம் –
ராஜாக்கள் ரத்னங்களை -அந்த புரம் அனுப்பி நல்லது எடுத்து கழித்து போக மீதி இவன் கொண்டு –
அது போலே பாகவதர்களுக்கு தூ மணி மாடம் –
பக்தர் நித்யர் வாசி போலே -இருக்கை -சம்சார கந்தம் இன்றி –
முன்பு இருந்து  முக்தர் கழித்து -நித்யருக்கு இல்லையே –
திரு மாளிகை உத்தேச்யம் -கூரத் ஆழ்வான் -ஸ்ரீ ஸூ க்தி -ஆசார்யர் திரு மாளிகை அனுசந்தானம் முக்தி தரும் –
கிரகம் வாங்கி நினைவு இல்லம் உண்டே -பாரதி  வாடகை இருந்து பாக்கி வைத்து இருந்தது –
ஏலத்தில் வாங்கி இடித்து கட்ட -பழைய photo பார்த்து மீண்டும் கட்டி –
பதித்த பன் மணிகளின் ஒளியால் -ஆழ்வார் பாசுரம் –
அடியேன் குடிசை -ஆசார்யர் திரு மாளிகை –
சுற்றும் விளக்கு எரிய -மாணிக்கத்தின் ஒளியால் -மங்கள அர்த்தமாக விளக்கு –
கிருஷ்ணன் -வந்தால் கை பிடித்து உலாவ -சுற்றும் விளக்கு எரிய –
புறம்பு நிற்கிறவர்கள் -அறிந்தது எங்கனே என்னில் -தூ மணி மாடம் என்பதால் –
மாணிக்க குப்பி போலே –
தூபம் கமழ -வாசனை -புகைக்காக இன்றி பரிமளம்
அகில் புகை -அசக்யமான -பரிமளம் -எங்களுக்கு வருத்தத்தால் 9-9-திருவாய்மொழி -மல்லிகை கமழும் தென்றல்
அகில் புகையும் துக்கம் விலைக்க -இவளுக்கு சக்யமானதே -படி எங்கனே
கிருஷ்ண -துயில் ஆணை -தூக்கம் வராத்வருக்கும் துயில் வர வளைக்கும்
பிரிவாற்றாமை விரகம் -மென் மலர் பள்ளி வெம் பள்ளியாக  இருக்க –
பிரகிருதி சம்பந்தம் உலகியல் உறவு மாமான் மகள் -ஈட்டீடு கொள்ள -இடித்து பேச –
திரு வாய்ப்பாடியில் பாகவத சம்பந்தம் தனக்கு உஜ்ஜீவனம் –
அடிக் களைஞ்சு -உயர்ந்த மதிப்பு -sq ft அடி -பகவத் சம்பந்திகளுக்கு எல்லாம் -இப்படி –
பந்துக்கள் போலே தோற்றம் -லோக விக்ராந்த சரணவ் சரணம் -பிதரம் மாதரம் –
விபீஷணன் அனைவரையும் விட்டு -வந்தது போலே –
உறவினர் கொள்ள  தக்கவர்களா -விட தக்கவர்களா
வேதாந்திகள் -இப்படி
எம்பெருமானார் -சந்நியாசி -ஆண்டாள் தமையன் -எம் அண்ணனே கோயில் அண்ணன்
ஆண்டான் மருமகன் -கிடாம்பி ஆச்சானும் மருமக-
தம்பி எம்பார் -சீர் உற்ற செல்ல பிள்ளையோ மைந்தன் -எதிராஜ சம்பத் குமாரன்
நம்பி வடுக நம்பி -கூடவே -எதுக்கு ராமானுசனை எதி என்று இயம்புவது
உசாத் துணை -பகவத் கைங்கர்யத்துக்கு இவர்கள் வேண்டுமே
அனுகூலர்களை கொள்ள வேண்டும் –
பிச்சை -அரிசி -பிரமச்சாரி
பக்குவம் செய்த சுத்த அன்னம் சன்யாசிக்கு –
ஸ்திரீகள் தான் கொடுக்க வேண்டும் இரண்டையும் –
நெருப்பு சம்பந்தம் கூடாதே சன்யாசிக்கு -திரு நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுதும் நெருப்பு கூடாதே
மடாதிபதிகள் தளிகை ஸ்திரீகள்
சாதிக்க புருஷர்கள் –
மொத்தமாக ஒரே அன்னம் போட்டு -மரத்தால் செய்த பாத்ரம் -கஷ்டமான அனுஷ்டானம் -ஆத்ம சம்பந்தம் இருந்தாலும் தேக சம்பந்தம் ஆசை பெற்றார் கூரத் ஆழ்வான் -இதனால் அடிக்  களைஞ்சு பெரும்
நம் தெரு -மதுரா நகரத்தில் மாலாகாரர் -தெரு இவளுக்கும் தெரு -இவளும் மாலா காரார் மகள் தானே -ஆறாயிரப் படி
திறந்து வாங்கோ -நீயே திறவாய் மணிக் கதவு என்பதால் –
அலையாதே கிடக்க நீ பேசாமல் இருக்கிறாய் தாயார் குறிப்பால் பார்க்க –
அதை ம்தேரிந்து மாமீர் அவளை எழுப்பீரோ என்கிறாள்
கோபம் -உன் மகள் தான் உஊமையொ அன்றி செவிடோ -காதில்
வார்த்தை கேளாத படி அந்ய பரையோ
சோம்பலோ
ஏமப் காதல்
ம்ச்ந்த்ரப் பட்டாளோ
மையல் இட்டு மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ
அம்மான் பொ டி தூவினார் உண்டோ
அம்மா மாமா சொல்லி பின் வரும் படி சொக்குப் பொடி
கடுமையாக சொல்லாதீர் -திரு நாமங்கள் சொல்
மா மாயன் -மகா மாயன் ஆச்சர்யமான கு
வைகுந்தவன் -தேச விசேஷம்
அவன் கிடீர் எங்களுக்கு எளியவன்
மேன்மை நீர்மை இரண்டுக்கும் அடியான ஸ்ரீ ய பதித்வம் –
பரத்வம் சௌலப்யம் ஸ்ரீ ய பதித்வம் –
மாமீர் இவற்றை சொல்லி எழுப்பும் -என்றும் அர்த்தம் கொள்ளலாம் –
திரு மழிசை ஆழ்வார்
சாக்கியம் கற்றோம் -எங்கும் புக்கு -தூ மணி மாடம் -தூய்மையான ஞானம் உடையவர்
நீணிலா முற்றம் ஞான விஷயம் –
விளக்கும் ஞானம் சுற்றும் எரிய
பிரகாசிக்க
ஸ்பஷ்டமாக அன்வயம் எதிரேக்கம்
திருவடி கண்ணை திறந்து புகை ருத்ரன் –
யதோத்தகாரி -திருக்குடந்தை -துயில் ஆணை மேல் கண் வளரும்
நாகத்தணை குடந்தை எட்டு திவ்ய தேசங்களும் ஒரே பாசுரம் சாதித்து –
மாமான் மகளே -மாமீர் -இருவரும் இதில் உண்டே
தூ மணி மாடத்து துயில் அணை மேல் கண் வளரும்
சயன திருகோலம் அனுபவிக்க
மாமான் மகளே  மாமீர் -இதில் மட்டும்
பதின்மர் -ஆசார்யர் சிஷ்யர் பாவம் இவருக்கு மட்டும் தான் –
பேய் ஆழ்வார்
மஹா மஹான் -பேய் ஆழ்வார் –
பூதம் சரசா மகாதாஹ்ய -பட்டர் -மஹான் என்று அழைக்க பெற்றவர்
பேய் ஆழ்வார் -பெயர் காரணம் -பெரிய பேய் பெரிய -பேய் மலை –
பொய்கை பிரான் /பூதத் திருவடி தாள்கள் /தமிழ் தலைவன் பொன்னடி பெரியவர் அர்த்தம் –
முதலில் நாயகி பாசுரம் பேய் ஆழ்வார் -திரு துழாய் சூடும் -வேம்கடம் பாடும் –
திருமழிசை அழைப்பான் திரு வேங்கடத்தானை கூட -அவரும் நாயகி பாசுரம் இதனால் -அருளி –
மாமீர் -அவரை பரம ஸ்ரீ வைஷ்ணவர் ஆக்க
உன் மகள் தான் ஊமை பெரும் புலியூர் வ்ருத்தாந்தம் -நெல்லை பிளந்து காட்டி –
செவிடோ அனந்தலோ மந்தரப் பட்டாளோ =மந்திர உபதேசம் கொண்டவர்
மா மாயன் -மாயமாய மாய பாசுரம்
மாதவன் -திரு இல்லா தேவரை தேவன் மின் தேவு
வைகுந்தன் -வைகுந்த செல்வனார் திருவடி மேல் பாடினேன் –

பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -132-144….

December 26, 2012

நூற்று முப்பத்து மூன்றாம் வார்த்தை
இதர உபாயங்களில் காட்டில் பிரபதிக்கு வாசி பத்து –
இதர உபாயங்கள் -அதிக்ருதாதிகாரமாகை -விதி பரதந்த்ரனாய் செய்கை –
பிராரப்த கர்ம அவசாநத்திலே பலமாகை -அந்திம ஸ்ம்ருதி வேணும் என்கை –
அசேதனமாகை -சாத்யமாகை -பலம் கூட துணை வேணும் என்கை –
பல ப்ராப்திக்கு ஈஸ்வரனை அபேஷிக்கை -ஸ்வரூப விரோதியாகை –
பிரப்யத்துக்கு விசத்ருசமாகை –
இது சர்வாதிகாரமாகை -ஆசார்ய ருசி பரிக்ரஹமாகை -தேக அவசாநத்திலே பலமாகை –
அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாகை -பரம சேதனமாகை -சித்த உபாயமாகை –
சஹாயாந்தர நிரபேஷமாகை -ஒன்றாகை -ச்வரூபத்தொடு சேருகை –
பிராப்யதுக்கு சத்ருசமாகை –
———————————————————————————————————————————————–
நூற்று முப்பத்து நாலாம் வார்த்தை
கர்மம் கைங்கர்யமாய் இருக்கும்
ஞானம் ஸ்வரூபமாய் இருக்கும் –
பக்தி போக பரமாய் இருக்கும் –
உக்தி கால ஷேபமாய் இருக்கும்
உபாயத்தில் அனுஷ்டானம் சக்ருத் -இதில் அத்யவசாயம் யாவச் சரீர பாதம்
உபேயத்தில் ருசி யாவதாத்மபாவி –
ஓரொன்றில் அநுக்தமாய் -அவஸ்யம் ஞாதவ்யங்களான அர்த்த விசேஷங்களுக்கு
விவரணம் ஆகையாலே -ரஹச்ய த்ரவ்யமும் ஒருவனுக்கு ஞாதவ்யமாக கடவது –
எத்தை எது விவரிக்கிறது -என்னில்
சவி பக்திகமான அகாரத்தை உகார மகார அஷர த்வயமும் விவரிக்கிறது –
அவ் அஷர த்வயத்தையும் -மந்திர சேஷ பத த்வயமும் விவரிக்கிறது –
அப் பத த்வ்யதையும் த்வயத்தில் வாக்ய த்வயம் விவரிக்கிறது –
அவ் வாக்ய த்வயதையும் ஸ்லோகத்தில் அர்த்த த்வ்யமும் விவரிக்கிறது –
அதில் அகாரத்தை அஷர த்வ்யத்தில் பிரதம அஷரம் விவரிக்கிறது –
விபக்தியை மகார அஷரம் விவரிக்கிறது –
இதில் பிரதம அஷரத்தை பிரதம பதம் விவரிக்கிறது –
அனந்தர அஷரத்தை அனந்தர பதம் விவரிக்கிறது –
இதில் பிரதம பதத்தை பிரதம வாக்கியம் விவரிக்கிறது –
அனந்தர பதத்தை ஆனந்தர வாக்கியம் விவரிக்கிறது –
இதில் பூர்வ வாக்யத்தை பூர்வ அர்த்தம் விவரிக்கிறது –
உத்தர வாக்யத்தை உத்தர வாக்கியம் விவரிக்கிறது -இதில் சேஷத்வ பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற அகாரத்துக்கு அநந்ய சேஷ த்வ வாசகமான
உகாரம் விவரனமாகிற படி என் என்னில் -அகார வாச்யனுடைய சேஷித்வம் ஆஸ்ரயாந்தரங்களிலும்
கிடக்குமோ -அநந்ய சாதாரணமாய் இருக்குமோ -என்று சந்திக்தமானால் -அதனுடைய அநந்ய சாதாரணத்வ
பிரகாசம் ஆகையாலே -உகாரம் அகார விவரணம் ஆகிறது -எங்கனே என்னில் -உகாரத்தில் சொல்லுகிற
சேதனனுடைய அனன்யார்க சேஷத்வம் சித்திப்பது -அதுக்கு பிரதி சம்பந்தியான சேஷித்வம் ஓரிடத்தில்
இளைப்பாறில் -அங்கன் அன்றியிலே அநேகம் சேஷிகள் ஆகில் அனந்யார்ஹ சேஷத்வம் சித்தியாது –
அந்யராய் இருப்பார் சில சேஷிகள் உண்டாகில் அந்ய சேஷத்வம் சித்திப்பது ஒழிய அனந்யார்ஹ சேஷத்வம்
சித்தியாதே -ஆகையாலே அகார வாச்யனுடைய சமாப்யதி கதாரித்ர்யத்தை சொல்லிற்றாயிற்று –
சதுர்த்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு ஆஸ்ரய விசேஷ பிரகாசகமாய்க் கொண்டு விவரணம் ஆகிறது
மகாரம் -நிராஸ்ரயமான ஸ்திதி இல்லையே -பகவத் வியதிரிக்தரை தன்னோடு பிறரோடு வாசி யற
அந்யராகச் சொல்லி -அவர்களுக்கு அனன்யார்ஹன் இச் சேதனன் என்கிறது உகாரம் -இதில் கழி யுண்கிற
தேவதாந்தராதி மாத்ரத்தாலே அந்ய சப்தத்துக்கு பூர்த்தி இல்லாமையாலே அவ்வன்ய சப்தத்தில்
அந்விதமான தன்னையும் கழித்து அனன்யார்ஹதையை பூரிக்கிற முகத்தாலே உகார விவரணம்
ஆகிறது நமஸ் சப்தம் -அஹமபி ந மம -என்கிறபடி ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத அத்யந்த
பாரதந்த்ர்யத்தை சொல்லுகிறது நமஸ் சப்தத்திலே இ றே -ஆகையாலே உகார விவரணம் ஆகிறது நமஸ் சப்தம் -சேஷத்வதுக்கு ஆஸ்ரய விசேஷ பிரகாசகமான மகார வாச்யனுடைய சேஷத்வ பூர்த்தி
பிரகாசிப்பது -அகிஞ்சித்கரச்ய சேஷத்வ அநு பபத்தி -என்கிறபடியே கிஞ்சித் காரத்தாலே யாதல் –
ஆகையால் கிஞ்சித் கார பிரகாசகமாய்க் கொண்டு மகார விவரணம் ஆகிறது நாராயண பதம் –
அத்யந்த பாரதந்த்ர்ய பிரயுக்தமாய் வருகிற உபாய விசெஷத்தினுடைய ஸ்வரூபம் என்ன –
இதில் இழிகைக்கு ஏகாந்தமான துறை என்ன -அவ வுபாய விசேஷமாய் செய்ய வேண்டிய அம்சம் என்ன –
இவற்றை பிரகாசிப்பிக்கையாலே நமஸ் சப்த விவரணம் ஆகிறது த்வயத்தில் பூர்வ வாக்கியம் –
கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்கிற இடத்தைக் காட்டி -அதுக்கு களையான
அம்சத்தையும் கழித்து தருகையாலே நாராயண சப்தத்துக்கு விவரணம் ஆகிறது
உத்தர வாக்கியம் -அவ் உபாய ச்வீகாரம் சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகம் ஆகையாலே –
தத் பிரகாசகமாய்க் கொண்டு -பூர்வ வக்யத்துக்கு விவரணம் ஆகிறது பூர்வார்த்தம் –
உத்தர வாக்யத்தில் சொன்ன பிராப்ய ஸித்தி விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக கடவது
என்று விவரிக்கிறது உத்தரார்த்தம் –
சர்வாதிகாரமாயும் -அதிக்ருதாதிகாரமாயும் -ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாயும்
இருந்துள்ள வாக்ய த்வயத்தில் பூர்வ வாக்கியம் பிராபகமாயும் -உத்தர வாக்கியம் பிராப்யமாயும்
இருந்ததே யாகிலும் -பூர்வ வாக்கியம் பத த்ர்யாத்மகமாயும் -அர்த்த த்ர்யாத்மகமாயும் இருக்கும் –
இதில் ஸ்ரீ மத் -என்கிற பிரதேசம் புருஷகாரம் சரணம் பிரபத்யே -என்கிற பதம் அதிகாரி கிருத்தியம் –
நடுவு நாராயண சரணவ் -என்கிற பதம் உபாயம் -உபாயம் புருஷகார சாபேஷமாயும் –
அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் -பலத்தில் வந்தால் அந்ய நிரபேஷமாய் இருக்கும் –
உத்தர வாக்யமும் பத த்ரயாத்மகமாய் இருக்கும் -இதில் ஆய -என்கிற இடம்
கைங்கர்யத்தை சொல்லுகிறது -இதுக்கு கீழ் கைங்கர்ய பிரதி சம்பந்தியை சொல்லுகிறது –
மேலில் பதம் கைங்கர்யத்தில் களையை சொல்லுகிறது –
———————————————————————————————————————————————————————————

நூற்று முப்பத்தஞ்சாம் வார்த்தை
நம் ஆச்சார்யர்கள் திரு மந்தரத்தையும் சரம ஸ்லோகத்தையும் த்வயத்திலே
அனுசந்திக்கும் படி -இது தான் உபாயம் உபேயம் இரண்டையும் சொல்லுகையாலே –
த்வயம் என்கிறது -திரு மந்த்ரத்தில் உபேய பிரதான் யேன சொல்லுகிற அர்த்தத்தையும் –
சரம ஸ்லோகத்தில் உபாய பிரதான் யேன சொல்லுகிற அர்த்தத்தையும் -இதில் பூர்வ
வாக்யத்தாலும் உத்தர வாக்யத்தாலும் சொல்லுகிறது -எங்கனே என்னில் –
அகாரத்தில் -ஸ்வரூப அநு பந்தித்வத்தால் சொல்லுகிற லஷ்மீ சம்பந்தத்தையும் –
நாராயண பதத்திலே பிராட்டிக்கும் அந்தர்பாவம் உண்டாகையாலே -அவ்வழியாலே
வருகிற லஷ்மீ சம்பந்தத்தையும் -த்வயத்தில் உத்தர வாக்யத்தில் -ஸ்ரீ மதே -என்கிற
பதத்தாலே சொல்லுகிறது -அகாரத்தில் சொல்லுகிற சர்வ ரஷகத்வத்தையும் –
இதன் விவரனமான நாராயண சப்ததார்த்தத்தையும்  -உத்தர வாக்யத்தில் நாராயண பதத்தால்
சொல்லுகிறது -அகாரத்தில் சொல்லுகிற தாதர்த்த்யத்தையும் -மகாரத்தில் சொல்லுகிற
ஜீவ ஸ்வரூபத்தையும் -அவதாரண த்தாலே சொல்லுகிற அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் –
இதின் விவரணமான நமஸ் ஸில் சொல்லுகிற அத்யந்த பாரதந்த் ர்யத்தையும்
தத் பிரவ்ருதியை பிரார்திக்கிற சதுர்த்தி யர்த்தத்தையும் -உத்தர வாக்யத்தில்
சதுர்தியாலே சொல்லுகிறது -திரு மந்த்ரத்தில் நமஸ் சப்தார்தமான அஹங்கார மமகார
நிவ்ருதியை உத்தர வாக்யத்தில் நமஸ் ஸாலே சொல்லுகிறது –
ஆக திரு மந்த்ரம் த்வயத்தில் உத்தர வாக்யத்திலே அந்வயித்தது –
இனி சரம ஸ்லோகம் பூர்வ வாக்யத்தில் அந் வயிக்கும் படி சொல்லுகிறது –
மாம் -என்கிற பதத்தில் ஸ்வரூப அநு பந்தித்வத்தாலே சொல்லுகிற லஷ்மீ சம்பந்தத்தையும் -அஹம் என்கிற  ஸ்வரூப அநு பந்தித்வத்தாலே சொல்லுகிற லஷ்மீ சம்பந்தத்தையும்
த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மத் சப்தத்தாலே சொல்லுகிறது-
மாம் என்கிற பதத்தில் சௌலப்யத்தையும்
அஹம் என்கிற பதத்தில் சொல்லுகிற ஸ்வாமித்வத்தையும்
இதில் நாராயண -பதத்தாலே சொலுகிறது –
மாம் என்கிற பதத்தில் சொல்லுகிற -சேநா தூளியும் -சிறுச் சதங்கையும் -தாங்கின உழவு  கோலும்
பிடித்த சிறுவாய்க் கயிறும் -நீட்டின திருவடிகளுமாய் நிற்கிற விக்ரஹ த்தை த்வயத்தில் சரணவ்
என்கிற பதத்தால் சொல்லுகிறது -ஏக சப்தத்தால் சொல்லுகிற அவதாரண அர்த்தத்தையும் –
சரண -சப்த அர்தத்தையும் -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கிற விரோதி நிவ்ருதியையும் –
த்வயத்தில் சரண சப்தத்தாலே சொல்லுகிறது -வ்ரஜ என்கிற இடத்தில் அர்த்தத்தையும் –
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்கிற அர்த்தத்தையும் -த்வா -என்கிற இடத்தில் சொல்லுகிற
அதிகாரி யையும் -பிரபத்யே -என்கிற கிரியா பதத்தாலே சொல்லுகிறது-
தர்ம த்யாகம் அங்கே உண்டோ என்னில் -உபாய ச்வீகாரம் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக
அல்லது நில்லாமையாலே -ஸ்வீகாரம் சொன்ன இடத்தில் த்யாகம் சொல்லிற்று ஆயிற்று
ஆக சரம ஸ்லோகம் த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் அந் வயித்தது –
ஆக திரு மந்த்ரத்திலும் -சரம ஸ்லோகத்திலும் சொல்லுகிற அர்த்தம் த்வயத்தில் சேர அந்வயிக்கும்
படி சொல்லிற்று –
சரம ஸ்லோகத்தாலே பூர்வ கண்டத்தை விசதீ கரிக்கிறது –
திரு மந்த்ரத்தாலெஉத்தர கண்டத்தை விசதீ கரிக்கிறது –
மாம் -அஹம் -என்கிற பதங்களில் லஷ்மீ சம்பந்தத்தை -பூர்வ கண்டத்தில் ஸ்ரீ மத் பதத்தாலே
சொல்லுகிறது -மாம் -அஹம் -என்கிற பதங்களில் -சௌசீல்ய சர்வஞ்த்வாதிகளை
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் நாராயண பதத்தாலே சொல்லுகிறது –
மாம் -என்கிற பதத்தில் விக்ரஹத்தையும் -ஏகம் -என்கிற பதத்தில் அர்த்தத வந்த
அவதாரண த்தையும் -சரணவ் என்கிற பதங்களின் அர்த்தைத்தையும் -பிரபத்யே
என்கிற பதத்தாலே சொல்லுகிறது -சரம ஸ்லோகத்தில் சரண சப்தத்தில் இங்குத்தை
சரண சப்தத்தாலே சொல்லுகிறது -சர்வ தரமான் பரித்யஜ்ய -வ்ரஜ த்வா
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி – மாசுச -என்கிற பதங்களின் அர்த்தங்களை
பிரபத்யே என்கிற பதத்தாலே சொல்லுகிறது –
அகாரத்தில் ஸ்வரூப அநு பந்தியான லஷ்மீ சம்பந்தத்தையும் -நாராயண பதத்தில்
நார சப்தத்தில் லஷ்மீ சம்பந்தத்தையும் -உத்தர கண்டத்திலே ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே சொல்லுகிறது –
அகாரத்தின் அர்த்தத்தையும் -நாராயண சப்த அர்த்தத்தையும் –இங்குத்தை நாராயண
சப்தத்தால் சொல்லுகிறது -அகாரத்தில் சதுர்தியையும் -பிரணவத்தில் மகாரத்தையும் –
உத்தர கண்டத்தில் சதுர்த்தியாலேசொல்லுகிறது
பிரணவத்தில் மத்யம அஷரத்தையும் -நமஸில் அர்த்தத்தையும் -உத்தர கண்டத்திலே
நமஸாலே சொல்லுகிறது –
————————————————————————————————————————————————————————
நூற்று முப்பத்தாறாம் வார்த்தை
மத்ச்யத்தினுடைய ஆகாரம் எல்லாம் ஜலமாய் இருக்கிறாப் போலே
ஸ்ரீ மான் உடைய வடிவு இத்தனையும் ஸ்ரீ மயமாய் இருக்கும்என்று பெரிய முதலியார் -ஸ்ரீ நாத முனிகள் -அருளிச் செய்வர் –
ஆசார்யன் பிரமாதா என்றும் -அர்ச்சாவதாரம் பிரமேயம் என்றும் -த்வயம் பிரமாணம் என்றும்
அருளிச் செய்வர் -உய்யக் கொண்டார் –
சம்சாரவிஷ தஷ்டனுக்கு த்வயம் ரசாயநமாய் இருக்கும் என்று அருளிச் செய்வர் மணக்கால் நம்பி
அதனனுக்கு -குருடனுக்கு -த்வயம் மஹா நிதி போலே என்று அருளிச் செய்வர் பெரிய முதலியார் –
ஷூ தார்த்தனுக்கு -பசியால் வருந்தினவனுக்கு -அம்ருத பானம் போலே என்று அருளிச் செய்வர்
திருமாலை யாண்டான் –
ஸ்த நந்தய பிரஜைக்கு ஸ்தன்யம் போலே என்று அருளிச் செய்வர் திருக் கோட்டியூர் நம்பி –
பதி விரதைக்கு மங்கள ஸூ த்ரம் போலே என்று அருளிச் செய்வர் பெரிய நம்பி –
ராஜ குலத்துக்கு முடியும் மாலையும் போலே இப் பிரபன்னனுக்கு த்வய உச்சாரணம் என்று
அருளிச் செய்வர் -ஸ்ரீ பாஷ்ய காரர்
சம்சாரத்தில் இவ் உபாய விசேஷம் -விலங்கை விட்டவன் தலையிலே முடியை வைத்தால் போலே
என்று அருளிச் செய்வர் எம்பார்
ராஜ குமாரனுக்கு கர்ப்பூர நிகரம் போலே -பிரபன்னனுக்கு பிரபத்தியை விடில் நாக்கு
வற்றும் என்று அருளிச் செய்வர் நம்பிள்ளை
எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்யம் பெறுவாரைப் போலே -என்று பணிப்பர் திருக்
குருகை பிரான் பிள்ளான் –
குரு பரம்பரையை ஒழிந்த பிரபத்தியும் சாதநாந்தரத்தோடு ஒக்கும் என்று அருளிச்
செய்வர் முதலி யாண்டான் –
அந்தன் -குருடன் -கையிலே சிந்தாமணி வந்தால் போலே என்று அருளிச் செய்வர்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
—————————————————————————————————————————————————————————–

நூற்று முப்பத்து ஏழாம் வார்த்தை –
பிரதம பதத்திலே பாணிக் ரஹணம் –
மத்யம பதத்தாலே உடன் மண நீர்
த்ருதீய பதத்திலே சதுர்த்தி படுக்கையுமாய் இருக்கும் –
——————————————————————————————————————————-
நூற்று முப்பத்து எட்டாம் வார்த்தை
ஷேத்ரஞ க்ருத்யமான வரம்பை இட்டுக் கொடுக்கிறது பிரதம பதம் –
இடைஞ்சல் வராமல் களை பறித்துக் கொடுக்கிறது மத்யம பதம் –
விளைந்து ஸ்வாமி போகம் கொடுக்கிறது த்ருதீய பதம் –
—————————————————————————————————————————————-
நூற்று முப்பத்து ஒன்பதாம் வார்த்தை –
திருமந்த்ரத்துக்கு-தாத்பர்யம் ஏது -வாக்யார்த்தம் ஏது -பிரதான அர்த்தம் ஏது -அநு சந்தானம் ஏது –
என்னில் -தாத்பர்யார்த்தம் -சகல வேத சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் -பிராப்ய ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம்-ஆத்ம ஸ்வரூப நிரூபணம் –
அநு சந்தானம் -ம்பந்த அநு சந்தானம் –
த்வயத்துக்கு -தாத்பர்யம் ஏது -வாக்யார்த்தம் ஏது -பிரதான அர்த்தம் ஏது -அநு சந்தானம் ஏது –
என்னில் –
தாத்பர்யார்த்தம் ஆசார்ய ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் பிராப்ய பிராபக ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம் மிதுன கைங்கர்ய பிரதான்யம் –
அநு சந்தானம்-ஸ்வ தோஷ அநு சந்தானம்-
சரம ஸ்லோகத்துக்கு -தாத்பர்யம் ஏது -வாக்யார்த்தம் ஏது -பிரதான அர்த்தம் ஏது -அநு சந்தானம் ஏது –
என்னில் –
தாத்பர்யார்த்தம் சரண்ய  ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் -பிராபக ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம் -ஈஸ்வர ஸ்வரூப நிரூபணம் –
அநு சந்தானம் -சௌலப்யம்
————————————————————————————————————————————————————-
நூற்று நாற்பதாம் வார்த்தை –
ஆஸ்ரயணம் சொல்லி –ஆஸ்ரயிதாவை சொல்லி -ஆஸ்ரயணீயன் வேஷம் சொல்லி –
அப்ருதக் ஸ்திதி த்யோதன நித்ய யோகம் சொல்லி -தஸ்மின் நேவ பராதிசயம் சொல்லி –
பிரபாப்ரபாவ தோரிவ சேஷ சேஷித்வம் சொல்லி -சதா பூர்த்தி சொல்லி –
ஆக லஷ்மீ  விசிஷ்டன் பிரபத்தவ்யன் என்னும் இடம் சொல்லி –
சித் அசித் ஸ்வரூபம் சொல்லி -உபயமும் பரமனுக்கு சரீரத்வார சேஷம் என்று சொல்லி –
தேஹவத் தேஹி நா நாத்வம் சொல்லி -தேஹி நோ ஞான தைகாக ரதயா சமர் என்று சொல்லி -ஆகையாலே
ஸ்வபாப ஐக்யம் சொல்லி -ஸ்வரூப ஐக்யத்தை நிஷேதித்து –
பஞ்ச அவஸ்தையிலும் சந்நிக்ருஷ்டா வஸத அவஸ்திதத்தில் பிரபத்தி என்று சொல்லி –
ஆத்மன பரஸ்ய ச பிராப்தி சொல்லி -குண குணி பேதம் சொல்லி –
கல்யாண குணை கதாநத்வம் சொல்லி -ஹேய குண நிஷேதம் சொல்லி –
ஷட் விம்ஸ கத்வம் சொல்லி -புருஷகார நிரபேஷ மாம்படியான வாத்சல்யாதி
குணங்கள் சொல்லி -நித்யத்வம் சொல்லி -தத் அப்ராக்ருத த்ரவ்ய ஆஸ்ரயம் என்று சொல்லி –
பர பூர்த்தி சொல்லி -சந்நிதி சொல்லி -வடிவு அழகு சொல்லி -சர்வ சாமாநாதி கரண்யம் சமாஸ்ரய ணீ யத்வம் -சொல்லி -சௌலப்யம் சொல்லி -பிரபத்தா ஆர் என்று சொல்லி –
பிரபதவ்யன் ஆர் என்று சொல்லி -அநந்ய பர உபாயத்வம் சொல்லி -அஸ்மை என்று சொல்லி –
அஸ்மாத் என்று சொல்லி -பிராப்யம் சொல்லி -பிராபகம் சொல்லி -கத்யர்த்த த்வாரா புத்யர்த்தம்
சொல்லி -மானஸ பிரபத்தியினுடைய முக்யதை சொல்லி -ஸ ப்ரகார சரணாகதி உபாயம் என்று சொல்லி –
ஸ ப்ரகார லஷ்மீ சஹ சரமான வஸ்துவினுடைய உபாயத்வம் சொல்லி -பர விசெஷணங்கள் அடைய
ப்ராப்யம் என்று சொல்லி -விசேஷ்ய பிரதிபத்தியிலும் விசேஷண பிரதிபத்தி பரஸ்ய ப்ரீதி ஜனகம் என்று
சொல்லி -ஸ ப்ரகார நாராயணனுக்கு என்று சொல்லி -ஏவம் விதனுக்கே அஹம் அர்த்த பூதனான நான் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித சர்வ வித கைங்கர்யத்தையும் பண்ணுகிறேன் என்று –
ப்ரத்யகாத்மன பலம் சொல்லி -பிரபத்தியிலே உபாய புத்தி -உபசார சித்தை என்று சொல்லி –
பரனே பரம உபாயம் என்று சொல்லி -பிரபத்தி உபாயம் என்று சொல்லி -இவை உபாயமாம் போது
பர ஸ அபேஷம் என்றுசொல்லி -நிரபேஷ உபாயம் அவனே என்று சொல்லி -அத ஏவ உபாய அநவத்யதை
சொல்லி -ஒன்றுக்கே உபாய உபேய ஆகாரத் த்வயம் கடிக்கும் என்று சொல்லி -தயா ஷாந்த்யாதி குணங்களாலே
சந்நிஹதனுக்கு உபாயத்வம் சொல்லி -தேச விசேஷ நிலயனுக்கு உபேயத்வம் சொல்லி -உபய விபூதியும் அவனதாய்
இருக்க -ஒரு விபூதியில் நின்றும் ஒரு விபூதிக்கு போகை மோஷம் என்பான் என் என்னில் –
அது மஹா ந ஸஸ்தான -போக ஸ்தான ஸ்தித பர்த்ருபார்யா சம்யோக ந்யாயம் என்று -சொலி –
அவனே பிராபாகன் ஆனால் பாபவிதூ ந நத்வாரா தான் பிரபத்தி என் என்னில் -மஹா ந சத்திலே
புஜிக்கும் போது –சமையல் அறையிலே -பழைய வேஷமே போக்யம் -போக ஸ்தானத்திலே -பள்ளி அறை –
புஜிக்கும் போது உடுத்த புடைவையை அவிழ்த்து
புஜிக்க வேண்டும் என்று சொல்லி -ரத்ன ஸ்வீகாரம் பண்ணும் போது ருஷிகையில் நின்றும் வாங்கி
மஞ்சூஷா காந்தரத்திலே இட வேண்டும் என்று சொல்லி -த்ரிவித பிரபன்னனுக்கும் தேக பாதச ம நந்தரம்
பரம புருஷார்த்த லஷண மோஷம் சொல்லி -மற்றை இருவருக்கும் விளம்ப பலம் சொல்லி –
ராஜா அக்ருத ஆபரண ங்கள் தன்னைதான போது எடுத்து பூணும் அத்தனை என்று சொல்லி –
இச்சா பிரவர்தகம் சொல்லி -அல்லாத போது ஈச்வரத்வம் தான் இல்லை என்னும் இடம் சொல்லி –
இத்தலையிலெ கைம்முதல் அறுகை அவன் கடாஷத்துக்கு அடி என்று சொல்லி -இத்தலையிலெ
விசுவாசம் பிறக்கை யாவது -அருளவனுடைய கிருபைக்கே — கிருபை பிறப்பது துதிக்கை அழுந்தினால்
என்று சொல்லி -கர்ம அனுபவம் அவனுடைய சிஷை என்று சொல்லி -சிஷிதன் ஆனவாறே
பித்ரு பிரசாதம் பிறக்குமா போலே -தாது பிரசாதாத்-என்கிற பேறு சொல்லித் தலைக் கட்டுகிறது
பிரபத்தி வாக்யத்தால் –
——————————————————————————————————————————————————————————

நூற்று நாற்பத் தோராம் வார்த்தை –
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்தை விசதமாக அனுசந்திக்கும் படி த்வயம் –
இது த்வயம் -என்று திரு நாமமாக வேண்டிற்று -உபாய உபேய வாசகமான வாக்யத்
த்வயத்தை  உடைத் தாகையாலே -இதில் பூர்வ வாக்கியம் உபாய பரமாய் இருக்கும் –
உத்தர வாக்கியம் உபேய பரமாய் இருக்கும் -பூர்வ வாக்கியம் மூன்று பதமாய் இருக்கும் –
உத்தர வாக்கியம் மூன்று பதமாய் இருக்கும் -ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்றும் -சரணம் -என்றும் -பிரபத்யே –
என்றும் -ஸ்ரீ மதே -என்றும் -நாராயணாய -என்றும் -நம என்றும் –
இதில் ஸ்ரீ என்கிற திரு நாமம் -ஸ்ரிஞ் சேவாயாம் -என்கிற தாதுவிலே ஆதல் -ஸ்ரயதே ஸ்ரீ யதே இதி ஸ்ரீ –
என்கிற வ்யுத்புத்தி த்வயத்தாலே -சேவிக்கும் -சேவிக்கப்படும் -என்கிறது இவ்வர்த்தம்
சாபேஷம் ஆகையாலே யாரை யாராலே என்ன வேண்டி வரும் -அவை தான் அவளுக்கு ஸ்வரூப
அநு ரூபமாய் இ றே இருப்பது -எங்கனே என்னில் -சர்வ பூதானாம் ஈஸ்வரி ஆகையாலே
த்ரிவித சேதனராலும் சேவிக்கப் படும் -விஷ்ணு பதநி ஆகையாலே தான் அவனை சேவிக்கும்
என்கிறது -ஆகையாலே தன்னை ஒழிந்த சகல ஆத்மாக்கள் உடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள்
தன்னுடைய கடாஷ அதீநமாய் இருக்கும் -தன்னுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் அவனுடைய கடாஷ அதீநமாய் இருக்கும் –
ஆகையாலே தன்னை ஒழிந்தாருக்கு தான் ஸ்வாமினி யாய் -அவனுக்கு பரதந்த்ர்யையாய் இருக்கையே
இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லுகிறது -இது தான் வ்யுத்பத்தி சித்தமே அன்று -பிரமாண சித்தமும் –
இப்படி வ்யத்பத்தி த்வயத்தாலும் -உபய சம்பந்தமும் சொல்கிறது -இது தான் புருஷகாரத்திலே நோக்காய்
இருக்கும் -புருஷகாரம் செய்கைக்கு இத்தலையில் பந்தமும் -அது வாய்க்கைக்கு அத்தலையில் சம்பந்தமும்
சொல்லுகையாலே -வரிக்கும் அவனை -இவனைக் கைக் கொண்டு அருளும் -என்னும் பிராட்டி -கைக் கொண்டு
அருளுகையாவது என் -என்னுமே அவன் -ஆபி முக்யம் பண்ணினான் என்னுமே இவள் -ஆகில் அபராதம் செய்ய
பார்த்த படி என் -என்னுமே அவன் -அது என் இனி -என்னுமே இவள் -அது என் என்றதுக்கு பொருள் என் -என்னுமே அவன் –
பொருளைக் கேளீர் -திருவடி திரு வனந்தாழ்வானோபாதி உம்மை அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்து வைத்து –
உம்முடைய பக்கல் விமுகனாய் -சப்தாதி விஷய பிரவண னாய் -அதன் காரணமான ஜநநாதி களிலே புக்கு –
அநாதி காலம் கிலேசப்பட்டு போரா நிற்க -உம்முடைய பாக்யத்தாலே இற்றை யளவும் சித்தியாத ஆபி முக்யம்
இன்று ஒருபடி சித்தித்தால் -அபராதத்தை உம்முடைய கிருபைக்கு விஷயமாக்கிஉம்முடைய சீலாதி குணங்களையே கிட்டுக்கைக்கு உறுப்பாகும் யோக்யதை சொல்லுகிறது –
எம்பெருமான் பக்கல் யோக்யதை இ றே உபாய வரணம் பண்ணுகிறது –
இப்படி வர ணீ ய ஸ்வரூபத்தில் புருஷகார பாவத்துக்கு அனுஷ்டானம் உண்டோ என்னில் –
ஸ்ருணோ தீ தி ஸ்ரீ -ஸ்ரா வய தீ தி ஸ்ரீ -என்னும் இவ்விரண்டாலும் -ஸ்வரூபத்தில் அனுஷ்டானம்
உண்டு என்கிறது -ஸ்ருணோதி -என்கிறது கேட்கும் என்றபடி -கேட்கிறது என் என்னில் -ஆஸ்ரயிக்கிற
இழிகிற அதிகாரி தன்னுடைய அபராதங்களையும் -எம்பெருமானுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும்
அனுசந்தித்து -அவனைக் கிட்டுகை எனபது ஓன்று இல்லை யாகாதே -என்று இவன் பிற் காலத்தில் –
நீ பிற் காலிக்கிறது என் -உனக்கு ஆபிமுக்யம் அன்றோ வேண்டுவது -அபராதங்களைப் பொறுப்பிக்கைக்கு
நான் இருந்தேன் -நீ அஞ்சாதே -என்று சொல்லுகை -ஸ்ரா வயதி -என்கிறது கேட்பிக்கும் என்றபடி –
அதாவது இவனுடைய அபராதங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக் கதவு அடைத்தால் –
இவனுக்கு வேறொரு புகல்  உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான சம்பந்த சம்பந்த விசேஷத்தைப்
பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது -என்கிறபடி குடநீர் வழித்தாலும் போகாதது ஓன்று
அன்றோ -ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமி யான உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -என்று –

—————————————————————————————————————————————————————

நூற்று நாற்பத்து இரண்டாம் வார்த்தை –
-விஷயம் -ஆத்மா
விஷயீ -ஈஸ்வரன்
விஷய ஸூ த்தி கர்த்தா -ஆசார்யன்
விஷய அனுபவ வர்த்தகை -பிராட்டி
விஷய அனுபவ சஹாய பூதர் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
——————————————————————————————————————————————————————————-
நூற்று நாற்பத்து மூன்றாம் வார்த்தை
அதிகாரி க்ருத்தியம் -ஆசார்ய க்ருத்தியம் -புருஷகார க்ருத்தியம் -உபாய க்ருத்யம் -என்று நாலு –
இதில் அதிகாரி க்ருத்யம் ஆவது -ஆசார்ய ஸு ஸ் ருஷ்யமும் -க்ருதஜஞதையும் -உபாயத்தில் அத்யாவச்யமும் –
உபாய க்ருத்யம் யாவது -விரோதி நிவர்த்தகத்வமும் -பிராப்ய ஸித்தி கரத்வமும் –
புருஷகார க்ருத்யம் ஆவது -அபராத ஷாம கத்வமும் -கைங்கர்ய வர்த்த கத்வமும் –
ஆசார்ய க்ருத்யம் ஆவது -அஜ்ஞா தஜ் ஞாபனமும் -ருசி பிரவர்த்த கத்வமும் –
——————————————————————————————————————————————————————————————
நூற்று நாற்பத்து நாலாம் வார்த்தை
எம்பெருமான் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு பிரயோஜனம் -சேதனருக்கு மோஷத்தில் இச்சை பிறக்கை –
அவதாரங்களுக்கு பிரயோஜனம் -மோஷ பிரதானம் பண்ணுகை –
மோஷ பிரதானம் பண்ணுவது -ஜ்ஞான பிரதானம் பண்ணினால் –
ஜ்ஞான பிரதானம் பண்ணுவது -ஆசார்ய உபதேச முகத்தாலே –
ஆசார்யன் இருவருக்கும் உபகாரகன் -எங்கனே என்னில் –
சேதனனுக்கு செஷியை உபகரித்தான் –
சேஷிக்கு செதணனை உபகரித்தான் –
இப்படி இருக்கிற ஆச்சர்யனுக்கு பிரத்யுபகாரம் பண்ணலாவது -விபூதி சதுஷ்ட்யமும்
ஈஸ்வரத் த்வயமும் உண்டாகில் –
ஆசார்யன் ஆவான் -அர்த்த காமங்களில் நசை யறுத்து -பகவத் பாகவத
விஷயங்களில் மிகவும் நசை உண்டாக்கும் அவன் –
———————————————————————————————————————————————————————————–
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் ..
பின்பழகிய பெருமாள் ஜீயர் ப்திருவடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- கீழ் வானம் -வெள்ளென்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 25, 2012

ஸ்ரீய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள்

எட்டாம் பட்டு
கோதுகலம்
கோபிகை
கீழ் வானம் -வெள்ளென்று -பெரிய அடையாளம் சொல்லி –
உங்களிலே அததிக்கை பார்த்து முக ஒளி -அந்யதா ஞானம் –
திங்கள் திரு முகத்து சேய் இளையார்கள் இறே –
கருப்பாக உள்ள திக்கை வெளுப்பாக
பனிப்புல் மேயஎருமை சிறு வீடு தாமச பிரகிருதி-அப்பொழுது தான் பால் கறக்கும் –
எருமை உண்டோ -நந்த கோபனுக்கு -எருமை பசு ஆடு உண்டே
விபரீத ஞானம் -வஸ்துவையே மாறி நினைப்பது
முகத்தில் ஒளி பட்டு இருள் கலைந்து போக -எருமை
அக்நி கோத்தரம் அறிய வேண்டியவள் இடை பேச்சு இடை நடை -எருமை சிறு வீடு –
இதே அடையாளம் தொண்டரடி பொடி ஆழ்வார் பகவான் திரு பள்ளி எழுச்சி
பஞ்ச லஷம் குடியில் உங்கள் ஒழிய -பலர் -தூங்க உள்ளே இருக்கிறவர்கள் சொல்ல –
பிரதிநிதிகள்
மிக்கு உள்ள பிள்ளைகளும் ஆற்றாமையாலே -போவான் போகின்றாரை
ஆன்-ஏகாரம்  உம்மை வான் -வினை எச்சம் -புகுதருவான் நின்றனவும் –
பிரயோஜனம் -காண்பான் வந்தேன் காண வேண்டும் என்பதற்கு வந்தேன் –
உண்பான் வந்தோம் -போலே -உண்ண வந்தோம்
போவதற்காக போய் கொண்டு
அர்ச்சிராதி கதி போலே போவதே பிரயோஜனம் –
அக்ரூரர் -கண்ணனை கூட்டி வர போனதே ஆனந்தம் –
திருவேம்கட யாத்ரை பாரிப்பு –
நன் இனி எங்கே போக கேட்க –
போகாமல் காத்து இருக்கிறோம் –
செய்யாதன செய்யோம் -ஒரு கோபி குறைந்தால் கூட குறை
கூவுவான் வந்து நின்றோம் –
விபீஷண ஆழ்வான் ஆகாசத்தில் நின்றது போலே நிலை நின்றோம் –
எழுந்து இருந்து செய்வது என்
கோதுகலமுடைய பாவாய் -நீ
கிருஷ்ண சம்பந்தம் -அனைவருக்கும் –
உன்னை முன்னிட்டு செல்ல கிருஷ்ணன் எங்களை
பத்நித்வம் உனக்கு-ப்ரீதி
கன்னனுக்குஎன்கள் இடம் ப்ரீதி
எங்களுக்கு உன் இடம் ப்ரீதி
பாவாய் -நிருபாதிக மான -ஸ்ரீ த்வம் –
எழுந்திராய் -எழுந்து இருக்கா விடில் அவை எல்லாம் அவத்யம்
பெண்ணின் வருத்தம் அறியாதவன் போலே இருக்காதே
எழுந்து இருக்கும் அசைவு காண வேண்டும் –
மாவாய் -பாடிப் பறை கொண்டு
முன்னே மனசால் நினைந்து -வாயால் பாட அனுமதி உண்டே
அனுபவ ஜனித்த ப்ரீதி புறம்பு பொ சியாதபடி முன்பு
வாய்க்கால் வெட்டி –
பறை பாதுகையே பறை -செவிப்பதே பலம் –
எத்தை
மாவாய் பிளந்தான் -கேசி அசுரன்
நம்மையும் தன்னையும் உண்டாக்கி தந்தவன் இத்தால் –
கோபிகளை ரஷிக்க -கேசி -விரோதம் முடித்து கொடுத்தான்
மல்லரை மாட்டிய -மதுரா நகர ஸ்திரீகளுக்கு உதவினபடி இது –
தேவாதி தேவனை -காழியன் வசுதேவர் வார்த்தை -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நகர ஸ்திரீகள் நாகரீகம்-பார்த்து கோபிகள் மறந்தான் -வரக் கூடுமோ –
நாம் போவோம் சென்று நாம் சேவித்தால்
விரகம் தின்ற சரீரம் காட்டுவோம் –
அவன் லஷ்யம் செய்யாமல் இருந்தால் என்ன செய்வோம்
நாம் சென்று சேவித்தால்
ஆ ஆ என்று ஐயோ ஐயோ -பதறி அடித்து
தண்டகாரண்யா ரிஷிகள் -பெருமாள் -பொலெஆராய்ந்து அருளுவான் –
இவர் செல்லுகை அத்தலைக்கு -அவத்யம்
நாம் சேவித்தால் -நான் செய்ய வேண்டியதை நீங்கள் செய்தால் –
பதறி அடித்து -ஆ ஆ என்று
நம்மாலே பேறு -இருக்காமல்துடித்து -நமக்கும் உகந்து அருளுவான்
பிரணயித்வம் போனாலும் ஆர்த்த ரஷணம் விட மாட்டனே
கோதுகலம் உடைய பாவாய் புருஷகாரம் செய்ய வேண்டியவள் –
நம் ஆழ்வார் –
கீழ் வனம் அவதாரத்தால் வகுள பூஷண பாஸ்கரர் உதயம் இவரால் கிழக்கு ஞான வெளிச்சம்
பெரு வீடு -விட்டு சிறு வீடு -கைங்கர்யம் -கைவல்யம் -திருத்தி பணி கொள்ள வேண்டும்
போகாமல் காத்து -திவ்ய பிரபந்தம் மறைந்து உள்ள காலத்தில் காத்து நாத முனிகளுக்கு கொடுத்து
உன்னை கூவுவான் வந்து –
எல்லா ஆழ்வார்களும் அவயவங்கள்-அங்கெ எழுந்து அருளி பின்பு நம் பெருமாள்
கிருஷ்ண த்ருஷ்ண -கண்ணனுக்கு ஆசை கண்ணன் இடம் ஆசை
நோன்பு -வீற்று  இருந்து–ஏற்ற நோற்றேன் -மாவாய் பிளந்தான் மனம் –
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் –
பரகதச்வீகாரம் காஞ்சியில் -பெருமாளே அங்கு எழுந்து அருளி –
கருட சேவை நம் ஆழ்வார் சாத்து முறை அன்றே வர –
ஆழ்வாருக்கு அனுக்ரகம் செய்ய துடித்து எழுந்து அருளுவார் –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- கீசு கீசு என்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 25, 2012

ஸ்ரீய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள்-
பேய் பெண்ணே -பாகவத சம்ச்லேஷ ருசி அறிந்தும் மறந்து இருக்கிறவள்-அடியவர் -கோபிகள் அனுகரித்து நோன்பு
நேர் இளையீர் முதலில் அழைத்து
வையத்து வாழ்வீர்காள் மங்களா சாசனம்
அவர்களால் லோக ஷேமம் உண்டு
அவர்களுக்கு பர்ஜன்ய கிஞ்சித்கார்யம்
அடுத்து பாப்பம் இதுவே போக்கி கொடுக்கும்
அடுத்து பாகவதர்களுக்கு திரு பள்ளி எழுச்சி
பாகவத பிராவண்யம் -திருப்பாவை முழுவதும் –
பேய் தனம் -லோகத்தில் -நன்றாக இருப்பவர்கள் முன்னும் பின்னும் நடக்க
இவளும் இருந்தவற்றை மறந்து பேய் -பித்து -தனம் -வேறு ஒரு நிலை –
பாகவத சம்ச்லேஷ ருசி -சுவடு -ரசம் -அறிந்து மறந்து இருக்கிறவள் -ரசிக்கிறது சுவடர் பரம ரசிகர் பூ சூடுமா போலே வ்யாக்யானத்தில் வரும் உயர்ந்த தமிழ் வார்த்தை –
சம்பாஷணம் இதிலும் –
பொழுது விடிந்ததே எழுந்திராய் என்ன
அடையாளம் என்
ஆனைச் சாத்தான் -பறவை இதில் மட்டும் -திருப்பாவை -கண் அழகு கொண்ட –
சரீரத்துக்கு கண் -அழகு சுகுமாரமான மென்மையான பறவை –
அதுவே எழுந்து
பேசின கீசு கீசு என்று-
25 பட்டம் வானமா மலை -இப்பொழுது 30 பட்டம் -அவர் மலை நாட்டு யாத்ரை போக பறவை ஒன்றை பார்த்து
ஆன சாபம் -சொல்ல -கீழே விழுந்து நமஸ்கரித்தார் –
முன்பு பெரியாழ்வார் -காஞ்சி சுவாமி
இது குலசேகர ஆழ்வார் -தேச பறவை –
மழலை போக வில்லை குழந்தைக்கு தம் மக்கள் -கீசு கீசு –
கிளிகளுக்கு சொல்லி கொடுத்து -பாட கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக கிளி கை கூப்பி
கீசு -சப்தம் -கிருஷ்ண நாம சொல்லி கொடுக்க மழலை கீசு -கிச்சு கூப்பிடுவது போலே –
வேங்கட கிருஷ்ணன் -சுருக்கி கூப்பிட வில்லை பரம பாக்கியம்
நச்சு நரசிம்கன் -பிரணதார்த்தி ஹர  வரதன் -பூர்த்தியாக கூப்பிடாமல் –
அடியவர் துன்பங்களை போக்குபவன் -போக்குவது விட்டு கூப்பிட்டால் –
கேசவன் பேரிட்டு -பெரியாழ்வார் பத்து பாசுரங்கள் –
மன்னான்கட்டு மரம் stone wood பெயர் வைத்து வெளி நாட்டில் –
உயர்ந்த குரல் கீச்சு குரல் ஆனந்தம் கொடுக்கும் –
ஓர் ஆனை சாத்தன் பேச்சு கேட்டு போலுதுவிடிந்தது ஆகுமோ
எங்கும் -சப்தம் –
நீங்கள் எழுப்ப -என்றாளாம்
தாமே உணர்ந்தன -கலந்து பேசின -நாங்கள் எழுப்பி பேசிவது இல்லை
கலந்து -பிரிந்து போனால் -தரித்து இருக்க பேசின பேச்சு -மிடற்றோசை
கேளாமைக்கு -ஆரவாரம் இருக்கா -கண்ணன் இருக்கிறானா –
இவர்கள் ஆகில் இப்படி சொல்வதே பணி –
பதில் சோழ வில்லை பேசாதே கிடக்க
பேய் பெண்ணே மதி கேடி -உணர்ந்த -அறிந்து வைத்து இருந்தும் காற் கொடை கொள்ளுதல்
அலட்ஷியம் -செய்வது -ஞானத்தை மறந்து –
மதி யாவது எது
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிதல்
ஏன் அறியாமை சொல்லாமல் விடிந்தமைக்கு அடையாளம்
தயிர் கடையும் ஓசை
ஆபரணங்கள் காசும் பிறப்பும் கல கலப்ப
காசுமாலை உண்டு பிறப்பு மாலை நீளமாக இருக்குமா
அச்சு தாலி அம்மை தாலி -முளை தாலி போலே –
கை பேர்த்து -ஸ்ரமப் பட்டு
மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் -அரவும் இல்லை -காஞ்சி சுவாமி -அரவமும் –
பாம்பு அரவு –
கல கலப்ப -மலை தேய்க்கும் ஒலி -கடிக்கிற போதே த்வனி
சரமபட காரணம் மூன்று
தயிரின் பெருமை
இவர்கள் சொவ்குமார்யம்
பாலை கறக்க ஆண்கள் -கடைய பெண்கள் –
மலை பேர்த்தால் போலே கை அசைத்து –
கிருஷ்ணன் சந்தி இல்லாமையாலே ஏங்கி தளர்ந்து –
கிருஷ்ணன் இருந்து இடுப்பை தயிரை மோர் ஆக்க மாட்டாமல்
நாலுதல் நால்வாய் தொங்குதல்
கை பிடித்து தொங்குவானாம்
அசார வஸ்து பிடிக்காதே –
ஆகார நியமம் கருப்பஞ்சாறு மோ ரு விதி வில க்கு தேசிகன் –
கலப்படம் பிடிக்காதே கண்ணனுக்கு -அநந்ய -மாம் ஏகம் -என்பதால் –
நெய் பால் தயிர் வெண்ணெய் -கலந்த நல் -இவற்றை சொலி மோரை
மோரை குடம் உருட்டி -ஆராத  வெண்ணெய் விழுங்கி -தாம் மோர் உருட்டி -தயிர் விழுங்கி –
அருகு இருந்த மோர் உருட்டி -கள்ளன் கதை -அம்மா மண்டபம் ஒளிந்து இருந்து நகை பிடிங்கி –
கோபித்து காதை அறுத்து -கல்லணை போலே மோரை உருட்டுகிறான் –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் -உண்டான் –
வாச நறும் குழல் ஆய்ச்சியார்
ஆயாசத்தால் குழல்
மந்தரத்தால் கடலை கடைவது போலே கோஷம் கேட்டு இல்லையா –
அரவிந்த லோசனம் கதை பாடிக் கொண்டே கடைய -ஆகாசம் போய் தொட்டதாம் –
த்வனி -பாடுகிற ஓசை மத்தின் ஓசை ஆபரணங்கள் கல கலப்ப ஓசை –
உன் செவியில் படவில்லையா –
ஓசை விழுந்தது -இதை வைத்து பொழுது விடிந்தது -எப்படி –
முப்போதும்கடைந்து ஈண்டிய வெண்ணெய் -வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
பால் -தயிர் வெண்ணெய் நெய் -ஒன்றை விட அடுத்து நெடும் நாள் இருக்குமே இரவும் பகலும் தயிர் கடைகை ஸ்வாபம் அன்றோ
நாயக பெண் பிள்ளாய் -சொல்லி
சாமர்த்தியமாக பதில் சொல்லி
நிர்வாகமாக இருப்பது
மறுவார்த்தை சொல்வது உன்னுடைய ஐ ஸ்வர்ய செருக்காலே
பேய் பெண்ணே -நாயக பெண் பிள்ளாய் -வாசி இன்றி -நெருக்கம் –
நாராயணன் மூர்த்தி கேசவன் பாடவும் கேட்டே கிடப்பியோ
அதையே கேட்டு உறங்குகிறாயே
குறங்கு -தொடை -தாலாட்டு போலே நினைத்து
சுப்ரபாதம் அழகாக பாட -இனிமையாக -ஒருவர் பாட -அலறி அடித்து எழுந்து வரும்படி இருக்கு -சொல்லி
இனிமையாக பாட -ரசத்தால் கேட்டு உறங்குவார்களே –
பாடுவதையே தொடை தட்டி
நாராயணன் முகம் தோற்றாமல் வாத்சல்யத்தால் -உள்ளே இருந்த -வேண்டா நாற்றம் உடலில் உள்ளே இருந்து –
மூர்த்தி சௌசீல்யம் -திரு மேனி வடிவு உடையவன் -அந்தர்யாமி -ச விக்ரகமா -அனுபிரவேசம் உபாசகனுக்கு விக்ரகத்துடன் –
நம் கண்ணுக்கு இலக்கு ஆகும் படி பிறந்து
கேசவன் -விரோதி போக்கி கேசி அசுரம் அழித்து
மூன்று குணங்களையும் பாடவும் –
பேச்சே தாரகமாக கொண்டு கேட்டே கிடத்தியோ –
துணுக என்று எழ –
நிருபாதிக ஸ்வாமி -மூர்த்தி -கொண்டு கேசவனாக -கேசி வந்து நலியபுக –
கிருஷ்ணன் வதம் பண்ணி விட்டானே சொல்ல –
விஜயம் கேட்டு -ஆலிங்கனம் செய்ய வேண்டாமா
விரோதி நிரசனம் அநந்தரம் -பக்தாராம் பரிஷ்யஷ்வதே சீதை பிராட்டி அணைத்து கொண்டாளே –
தைர்யமாக மார்பிலே கை வைத்து உறங்குகிறாயே
உன்னை காண பெறாத நெஞ்சு இருண்டு
நிரவதிக தேஜஸ் வெளிச்சம் உண்டாக்கி நீயே வந்து திற
ஜன்னல் வழியே பார்க்க –
திரு நாமம் செவிப்பட்டதும் -வடிவில் பிறந்த புகரை
தேசு -பிரகாசகம் -வெள்ளம் –
புள்ளும் -பெரியாழ்வார்
தோட்டத்தில் உள்ள பறவைகள்
புள்ளரையன் -வேதாத்மா வேதமே வடிவு வேண்டிய வேதங்கள் ஓதி கிளி அறுத்து
வெள்ளை விழி சங்கு -சங்கம் எடுத் தூத
பிள்ளாய் -அறிவில் குறைந்து -மங்களா சாசனம் பண்ணி ரஷ்ய ரஷக பாவம் மாறி –
அடிக் களைஞ்சு வரும் -பிள்ளை லோகாச்சார்யர் –

இதில் குலசேகரர் -ஆழ்வார் –
ஆனை சாத்தன் தேச பறவை
பாகவதர் விஷயத்தில் ஈடுபாடு -குடப்பாம்பு வ்ருத்தந்தம் –
கலந்து பேசின பேச்சு அரவம் -மந்த்ரிகள் சாத்தன் -குசு குசு பேச
காசும் பிறப்பும் ஆபரணம் காசுமாலை தொலைந்து
கை பேரது -குடப்பாம்பில் கை பேர்த்து
தயிர் அரவம் -ஒல்லைநானும் கடையவன் என்று பேய்
பேயரே எனக்கு யாவரும் -எம்பிரான் விஷயத்தில் பேய் தனம்
பேய் ஆழ்வார் பெரிய அர்த்தம்
பெண்ணே நாயகி பாவம்
நாயக பெண் நடு நாயகம் -முன்பு ஐந்து
மதுரகவிஆழ்வார் விட்டு நம் ஆழ்வார் பாடினதால்
தேசங்களுக்கு நாயகன் இவர்
சக்ரவர்த்தி போலே இவர் தான்
நாராயணன் மூர்த்தி
நாரணன் அடிக் கீழ்
கேசி வதம் முதலில் பாடி –
கேட்டே கிடப்பியோ -ராமாயண கதை கேட்டு சண்டைக்கு போக –
தேசம் உடையாய் தேசங்கள்
உடையவர் உள் நாட்டுதேசு -பகவத் சம்பந்த தேஜஸ்
ஆளாம் திர்யக் பெருமக்களும் பாரித்து குருகாய் -உண்மையான தேஜஸ் ஆசைப் பட்டவர் –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-புள்ளும் சிலம்பின காண் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 25, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்
பகவத் ஏக -போக்கியம் -அநந்ய பிரயோஜனர் -தேவதைகள் கிஞ்சித் காரம் செய்யும்
தெய்வம் தொழால் கொழுநன் தொழுவாள் பெய்  எனப் பெய்யும் மழை –
அனுபவ விரோதிகளை போக்கி தரும் -திரு நாம சங்கீர்த்தனம் –
ஐந்து பாசுரங்கள் அருளி
இந்த உபகரணங்களைக் கொண்டு அனுபவிக்கும் அவர்களை எழுப்ப -அடுத்த பத்து பாசுரங்கள் –
பல காரணங்கள் –
அனுபவம் பிரதான உபகரணங்கள் -இச்சை
கர்த்தவ்யம்
கண்ணனும் உண்டு
காலமும் சேர்ந்து
கோபர்களும் அனுமதிக்க –
பெருக்காற்றில் இழிவார்களுக்கு துணை தேட்டம் தேடுவாரைப் போலே
பெருக்காறு போலேவிபவங்கள் -வெள்ளம் இட்டு போகுமே சுழி –
சூழல் பெரிய திருவந்தாதி -விபவம் -சுழல் மருவி
கால் ஆளும் -நெஞ்சு அழியும் -கண் சுழலும்
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -கொண்டை கோல் நாட்டுகிறார் –
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -நெஞ்சு அழிந்து மயங்கி இருக்க
குமிழ் நீர் உண்ணப்  பண்ணுமே –
துணை தேட்டமாய் ஒருவரை ஒருவர் எழுப்புகிறாள் -பிரமம் மகத்
அடியார் குழாம் களை உடன் கொடுவது என்று கொலோ -அங்கும் தேட்டம் உண்டே
ஞானம் பரி பூர்ணம் அங்கு -இருந்தும் பகவானை அனுபவிக்க -பர அவஸ்தையில் புருஷோத்தமனை அனுபவிக்க
இங்கே ஞானம் சங்கோசம் -இருக்க கேட்க வேண்டுமா
இமையோர் தமக்கும் -நெஞ்சால் நினைப்பது அரிதால் நீர்மைக்கும் -மேன்மைக்கும் -அளக்குக்கும் நிரவதிக சாகரம்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல் –
தேட்டம் -அவஸ்யம் -உயர்ந்த தமிழ் பதங்கள்
பரபாகம் பர தொடை –
இடக்கையும் வலக்கையும் அறியாத இடைசிகள்
தனி அனுபவிக்க மாட்டாத பிரக்ருதிகள் –
இன் கனி தனி அருந்தார் –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமர்த்தம் பக்தாம்ருதம் –
போதயந்த பரஸ்பரம் –
தாய்க்கும் -இவருக்கும் இவரடி பணிந்தாருக்கும் அநர்த்தம் கண்டு உபதேசிக்க
ததீயர் முன்னிட்டு அனுபவிக்க
வேதம் வல்லர்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் –
சப்தம் விவரணம் திருப்பாவை
வேத த்ரயம் போலே இயற்பா
அங்கி -திருவாய் மொழிக்கு -அங்கம்
உபாங்கம் –
வேதம் -ஐந்து பாசுரம்
வல்லார்களை கொண்டு அடுத்த பத்து
விண்ணோர் -நித்ய சூரிகள் -நாயகன் தொடங்கி ஐந்து பாசுரங்கள்
அவன் வைபவம் அடுத்துஐந்திலும் சொல்லி -பெருமான்
திருப்பாதம் பணிந்து பொற்றாமரை அடியே போற்றி
திருப்பாவை ஐ ஐந்தும் -வேதம் -திருப்பாதம் பணிந்து -விளக்க திருப்பாவை
தனி அனுபவம் கூடாது
ருசி உடையார் இழக்கவும் கூடாது
பாகவதர் முன்னிட்டே அனுபவம் –
அபரிமித பக்தி ப்ரீதி உடையவர் அனைவரும் -தூங்குவார்களா சங்கை வர-
குதுகலம் அனைவருக்கும் உண்டே
நஞ்சு உண்டாரைப் போலே சிலரைமயங்க பண்ணு கையாலும் –
மோகித்து விழ -அனுபவம் எப்பொழுது துடித்து இருக்க –
இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் துடிக்க பன்னுகையாலும்
தாத்பர்யம் -பகவத் விஷயத்தில் புதிதாக -பிள்ளாய் -சப்தம் கொண்டு வியாக்யானம் –
அறியா பருவம் -அறிவு குறைந்து -நோன்பு சுவடு ரசம் அறியாமல் இருக்கும் பெண்ணை -புள்ளும் சிலம்பின காண்
நாமும் நம் பாவைக்கு -போலே சாதனம் அனுசந்திக்க கூடாது அறிந்த நாமும் போலே
அஷரம் ஒவ் ஒன்றுக்கும் வியாக்யானம் –
எல்லே உரையாடல்
மீதி ஒன்பதும் வெளியில் உள்ளவர் வார்த்தை
இவற்றுக்கும் உரையாடல் போலே வியாக்யானம்
ஊகித்து சொல்லி –
புள்ளும் -பறவைகள் கூட எழுந்தன -நீ எழுந்து
முதல் பாசுரத்தில் முதல் அடையாளம் -உம்மை தொகை –
சிஷ்ட கருகை கோபித்து கொண்டு போதொடு வாசலில் சென்று உணர்த்த கடவ -உறங்கி இருக்க
சொல்ல -போது விடிய  எழுந்து இருக்க –
போது விடிந்தது எழுந்திரு
அடையாளம் கேட்க –
நாங்கள் வந்தது போதாதோ
உண்டோ கண்கள் துஞ்சுதல் என்கிறபடி உறக்கம் உண்டோ -தூங்காமல் இருக்க-
வேற அடையாளம் கேட்க புள்ளும் சிலம்பின காண்
இறை தேட போகா நின்றன –
ஏகாந்தமாக பகவானை அனுபவிக்க இடையூறு என்பதால் வாதாடுகிறாள்
கால ஷேபம் கேட்பவர்களுக்கு செல்வர் எழுந்து அருளுவது விரோதி –
ஈடு சாதிக்க -புறப்பாடு நிறுத்தி –
நீங்கள் அவற்றை உறங்க ஒட்டாதே கிளப்பி –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே பேரும் –
பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் ஆழ்வான் -வார்த்தை -பறவைகள் உபகாரம் -செய்கின்றன நாதம் உத்தேச்யம் –
சூசிப்பிக்கிற பட்சி நாதம் அல்லது வேற உத்தேச்யம் இல்லை என்று அருளிச் செய்வர் ஜீயர் அருளி செய்வர்
காலை –கரிய குருவி கணங்கள் -ஓசை கொண்டு கொள்ள முடியாது –
புள்ளரையன் கோயில் வெள்ளை விழி சங்கின் பேர் அரவம்
புள் அரையன் கோ இல் -பெரிய திருவடி -கோ சர்வேஸ்வரன்
திரு சின்னம் -ஊதி
அரையன் -நிர்வாகன் -கருடனின்
கோயில் -சந்நிதி
திரு பள்ளி எழுச்சி சங்க தொனி கேட்க வில்லையோ
இங்கு கோயில் உண்டா
இருந்ததே குடியாக -ஊர் அனைத்தும் கண்ணன் அழகில் ஈடு பட திரு முற்றம் கோயில் உண்டோ
சக்கரவர்த்தி திரு மகன் அழகில் ஈடு பட்டு இருக்க -சக பத்ன்யா விசாலாட்சி -பெரிய பெருமாள் சன்னதி உண்டே
பூஜை அறை பிறை -ஆனது
கண்ணன் திருவாராதனம் செய்ய -தன்னை தானே தொழுவான் போல் தயரதன் மைந்தன் செல்கின்றான் -கம்பர் –
அடையாளம் புள்ளரையன் -ஆஸ்ரிதர் -இவனுடைய தமையன் பெருமாள் -சொல்லி
திரு நாராயண புரம் ஸ்தல புராணம்
விபீஷன ஆழ்வான் கொடுத்தும் -மானச பிரம்மா பெருமாளுக்கு கொடுக்க –
குசன் -சூர்ய வம்சம் சந்திர வம்சம் வாழ்க்கை பட ஸ்ரீ தனம் -கண்ணன் தமையனார் பல ராமனால்
ராம பிரியன் -இரண்டு ராமர் திரு ஆராதனம் –
வேதாத்ரி -கருடாத்ரி -அப்பொழுது பெயர் –
திருவடியில் தாயாமுதல் பிரதிஷ்டை செல்வ பிள்ளை ராம பிரியன் -கண்ணன்
புள்ளரையன் கோயில் -இதை சொல்லி –
அடியவனை இட்டு நிரூபிக்க –
வைரமுடி -கருடனையும் கூட எழுந்து அருள பண்ணி –
கருட வாகனம் -நான்கு பேர் சீலை உடைத்து -யாரும் திறந்து பார்க்க அதிகாரம் இல்லை –
துணி மூடி வைர முடி -திரை -அர்ச்சகர் கண்ணை துணி கட்டி சாத்தி -வஸ்த்ரம் எடுத்து –
பெருமாளை மூடி -யாரும் உள்ளே இருக்க கூடாது -கற்பூரம் கருட ஆழ்வார் முதலில் சேவிக்க ஏற்பாடு –
மீண்டும் உள்ளே வைக்க இதே நிலை –
வெள்ளை விழி சங்கு –
சங்கு வெளுத்து இருப்பது விடிந்தமைக்கு அடையாளமா
வெண்மை பரி சுத்தம் அந்தரங்க கைங்கர்யம்
உண்பது சொல்லில் -கோயிலே உண்டு -கை தலத்தில் உறங்கி -கைங்கர்யம் செய்து –
ஜாமங்கள் தோறும் அழைக்க சங்கு உண்டே அது அரவம்
பேர் அரவம் -சங்கு வெளுப்பு சொல்வான் என்
அழகும்  உத்தேச்யம்
விழி அழைக்கை
சத்வோதமான காலத்தில்
கேட்டிலையோ -கேட்க பாக்கியம் செய்ய வில்லையா
சப்தையாய் இருக்க பிள்ளாய் எழுந்திராய் –
பாகவதர் உடன் சேர்ந்து அனுபவிக்க அறியாத -பிள்ளாய் –
பாகவத சம்ச்லேஷ ரசம் பிறக்கும் அளவும் பகவத்ரசம் இலிய பொறுமை இன்றி
நாங்கள் உனக்காக ஆசைப் பட்டது போலே நீ எங்களை
ஹரி ஓசை -கேட்க வில்லையோ
விசெஷனம் பலசொல்லி
பேய் முலை நஞ்சுண்டு -பெற்ற தாய் கிட்டே இலாத பொழுது வந்த –
இத்தலையை முடிக்க வந்தவளை முடித்து
கள்ள சகடம் காலே ரஷணம் -தாயே ரஷையாக வைத்து யமுனை நீராடபோனாள் –
பேய் இவள் -கள்ள சகடம் -மாறு வேஷம் -திருவடி ஒட்டி –
முலை பால் வராமல் உதைத்த கால் –
கண்ணனுக்கு ஆபத்து என்றதும் துடித்துஎளுந்து வருவாள் என்பதால்
வெள்ளத்து அரவில் அபாயம் இல்லாத இடம் -துயில் அமர்ந்த வித்து
குளிர்ச்சி மென்மைக்கு -நீர் உறுத்தாமைக்கு அரவு –
பனிக் -கடலில் மாய மணாள  நம்பி -மனக்கடலில் வந்தான் –
பிராட்டிமார் திருமுலைத் தடத்தால் நெருக்கினாலும் அடையாத அமரும் –
வித்து-நாற்றங்கால் -அவதாரதுக்குஜலத்தில் ஊற வைப்பது போலே -முனிவர்கள் யோகிகள்
அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் போல்வார் -உள்ளத்து கொண்டு
முனிவர் யோகி -மனன சீலர் -யோக அப்யாசம் -இரண்டு வகை
வருத்தி நிஷ்டர்கைங்கர்யம்
குண நிஷ்டர் –இரண்டு வகை
உறங்குகிறவர்கள் முனிவர் எழுப்புவார்கள் யோகி
மெல்ல எழுந்து கற்பிணிகள் போலே அவனுக்கு வாட்டம் இன்றி
பிரகலாதன் ஹிருதயம் கெட்டியாக பிடித்து -வைத்த வளையம் புஷ்பம் கூட அசையாமல்
திரு வாய்ப்பாடியில் முனிவர் யோகிகள் உண்டோ
பசு கொட்டிலில் நித்யர் படுகாடு கிடப்பார்கள்
மரம் செடி -திர்யக் ச்தாவரமாக நித்யர் வருவார்கள்
ஹரி ஹரி பாபம் ஹரன் -அனுபவ விரோதிகளை போக்கி அருள வேண்டும் –
ரிஷிகள் யோகிகள் பாபம் இல்லை கண்ணன் ஆபத்து தமக்கு வந்து ஆபத்து
அவன் அவனை -ரஷித்து கொள்ள மங்களா சாசனம் பண்ணி –
சம்சார விஷயபயம் போனது
பய நிவ்ருதங்களுக்கு பயப்படுகை –
ஞானம் பிறக்கும் முன்பு இழவு பேறு தங்கள் -பின்பு அவனது –
பேர் அரவு -ஐஞ்சு லஷம் குடிகள் –
அனைவரும் வந்தபின்
படுக்கை கீழே வெள்ளம் போல் திரு நாமம் -பேர் அரவம் ஒலிக்க வவ்வ -குளிர் செவியிலே புகுந்து –
அவன் நெஞ்சிலே புகுந்து ஆனந்திப்பத்தால் போலே
கிருஷ்ண விரகத்தால் நெஞ்சு -வெடித்து பிளவாக இருக்க -பதம் செய்யும் படி த்வனி புகுந்து –

பெரியாழ்வார் -நாலைந்து திங்கள் அளவில் சகட்சம் சாய்த்து -பேய்ச்சி அனுபவம்
உள்ளத்து கொண்டவர் -விஷ்ணு சித்தர் –
வெள்ளத்து அரவில் -திரு பாற் கடல் விட்டு -அகம்படி வந்து புகுந்து பரவுகின்றான்விஷ்ணு சித்தசன்
பள்ளி கோளை  விட்டு என் மனக்கடலில் –
முனிவர்கள் யோகிகள் மனன சீலர்
பா மாலை பூ மாலை இரண்டும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் கோ புரம்கட்டிய கைங்கர்யம் –
அனைத்தும் செய்தவர் –
மெள்ள எழுந்து -பர தெய்வம் நிலை நாட்ட -எழுப்ப -பொட்டு தழும்பு காட்டி நாம் அன்றோ கடவோம் –
ராஜ பண்டிதர் சபை மெள்ள
ஹரி என்ற பேர் அரவம் -கடல் பிரவாகம் -போலே –
உள்ளம் புகுந்தது –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-மாயனை மன்னு வட மதுரை மைந்தனை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 25, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மமதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் –
மழை இல்லாமல் இருக்க நோன்பு நோற்க தொடங்கி –
நதியில் மகிழ்ந்து நீராட மழை பொழிய ஆக்ஜை இட –
உத்தம அதிகாரி கார்யத்தில் இழிய -முன்னமே பலன் கிட்டும் வானம் முந்தி மழை பொழிய –
நோன்பு பகவத் விஷயத்தில் அவகாகனம் மூழ்கி –
எம்பெருமான் அனுக்ரகமே மழை -பொழிய வேண்டும் -தாத்பர்ய அர்த்தம் –
பாபங்கள் தீயினில் தூசு போலே போகுமே வாயாலே பாடி மனத்தினாலே சிந்திக்க –
பெண் பிள்ளை -ஒருத்தி பாரித்து கொண்டு -இருக்கிறோம் தலைக் கட்ட என்ன -விசுவாசம்
அநாதி கால சஞ்சிதமான கர்மங்கள் விரோதத்தை பண்ணாதோ -பெரியவர்களுக்கு கூட பல விக்னங்கள் வருமே –
கெட்டவன்  கார்யம் நடக்கின்றனவே –
பாபங்கள் போக்கி தானே இழிய வேண்டும் –
சக்ரவர்த்தி திருமகன் பட்டாபிஷேகம் தசரதர் ஆசைப் பட்டது நடக்க வில்லை –
மந்தரை நினைத்த கெடுக்கும் கார்யம் நடந்ததே –
நடந்தால் உயர்ந்த கார்யம் இல்லை -நல்ல காரியமா நான்கு தடங்கல் வர சங்கல்பித்தானா –
சாஸ்திர ஞானம் உள்ளவள் கேட்க -வேதாந்த ஞானம் உடையவள்  இதை போக்கி கொண்டு இழிய வேண்டாம்
பகவத் அனுபவம் பண்ண பண்ண தன்னடையே போகும் –
வைதிக கார்யம் -ஆரம்பிக்க சங்கல்பம் செய்து விஷ்வக் சேனர் பூஜை -செய்கிறோம் –
இந்த பூஜைக்கு நிர்விக்நமாக நடக்க என்ன பரிகாரம் –
பெரிய விஷய தடையை இது போக்கும் என்றால் இதுவும் போக்குமே –
திரு நாம சங்கீர்த்தனம் செய்வதே -தடையை போக்கி தரும் –
பட்டர் நஞ்சீயர் -கங்கை நீராட போனவனுக்கு நீர் குழியில்-துவர் குழியில்  நீராட வேண்டுமா –
சமுத்ரம் -தீட்டு -தீர்த்தம் ஆடும் பொழுது விழுப்புடன் கூடாது –
கங்கை தீர்த்தமாட விதி ஒன்றும் இல்லை -பாபங்கள் போக்குமே -துவர் குழியில் நீராடி விட்டு போக வேண்டாமே –
எல்லா பாபங்களை போக்குவது இந்த பாபத்தையும் சேர்த்தே போக்குமே –
கிருதான் -கிரியமானான் -பண்ணி கொண்டு இருக்கும் பாபங்கள் -பண்ணப் போகும் பாபங்கள் அனைத்தையும் போக்கும் செர்ப்பால் சண்ட காச்சி -வைத்து -போக ரூபம் -பித்தம் தன்னடையே போகுமே –
அயோக்யதை பார்த்து அகல வேண்டாம் –
தன்னுடைய சங்கல்பத்தையும் குறைத்து கொண்டு அடியவர் சங்கல்பம் நிறை வெற்றி கொடுப்பான் –
பீஷ்மர் -ஆயுதம் எடுக்க வைப்பேன் -சொன்னதை -நிறைவேற்ற சக்ராயுதம் எடுக்க –
இந்த கோலம் சேவிக்க தான் பிரயத்னம் –
அது போலே பாபங்கள் போக்கி கொடுப்பான்
ஏலா பொய்கள் உரைப்பான் பேர் வாங்கி கொண்டேன்
பகலை இரவாக்கி ஜெயந்த்திரன் வதம் –
நாம் நினைத்தால் தலைக் கட்டுபவன் தான் –
அனைவரையும் அனுக்ரகம் செய்ய பெருமாள் காட்டுக்கு போனான் –
இப்படி அவதாரிகை சாதித்து வியாக்யானம் அருளுகிறார் -செப்பு -திரு நாமங்களை
போய பிழையும் -புகு தருவான் நின்றனவும் அறியாமல் பிரகிருதி சம்பந்தத்தால் வருபவை
தீயினில் தூசாகும்
மாயனை -ஆச்சர்யமானவனே
ஐ ஸ்வர்யம் உடன் இருக்கும் இருப்பு வாசோ மகொசரம் பரம பதத்தில் இருக்கும் நிலையை மாயனை என்று –
கிருஷ்ண அவதார -எளிமை -கிட்டுவது மேன்மை கிட்டுவது விட அதிகம் நெஞ்சால் நினைப்பு அரிதே
வெண்ணெய் உண்டான் -எத்திறம் மோகித்து இதனால் பரம பதத்தில் அனுபவிக்க கோலி –
நாட்டுக்காக தன்னைக் கொடுத்து கொண்டு இருக்கும் இருப்பு திரிபாத் விபூதி –
சமுத்ரத்தில் கடுக்காய் மிதப்பது போல் பூமி –
அண்டங்கள் -பல –
திருவாய்ப்பாடியிலே ஒரு ஊருக்கு தன்னை கொடுத்த நீர்மை
அன்றிக்கே -வட மதுரை மைந்தனை -இதுவே ஆசார்யம்
அந்த இருப்பை விட்டு -பிறந்து -தேவ தேவேச சங்கு சகர -கதாதர -என்கிற படியே
நித்யர் நேராக பார்க்க முடியாத -நிரந்குச ஐஸ்வர்யம் -இதை நினைத்து மாயனை –
இதுவும் அவதார விஷயம் மற்றவை போலே –
அவதார சௌலப்யம் சொல்லுவது முன் ஆழம் கால் பட்டு –
தேவகி பூர்வ சந்தாயாம் ஆவிர்பாவித்தான் சூர்யன் கிழக்கு திக்கில் வருவது போலே –
திக்கில் ஒட்டிக் கொல்லாதே ஆதித்யன் –
ஆழ்வார்கள் பன்னிரு திங்கள் வயற்றில் தங்கி -என்பார்கள்
பிறந்த பிறப்பை மூதலித்து -அவனாலும் இல்லை செய்ய ஒண்ணாத படி
நாட்டில் பிறந்து படாதன பட்டு -மனிசர்களும் படாதவை
பத்து மாசம் இல்லை பன்னிரு மாதம் இருந்து –
குடி இருந்த பிள்ளை தனம் –
மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவர் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அவதார சௌலப்யம் மாயனை -சங்கு சக்கரம் கையிலே ஏந்தி பிறந்து –
இரண்டு திருக்கைகள் -அங்கெ சங்கு சக்கரங்கள் வேலை இல்லையே அங்கே –
ராமன் ஸ்தோத்ரம் செய்யும் தேவர் சங்கு சக்கர கதாதர -அங்கும் சதுர புஜன்
அசாதாரண சிஹ்னங்கள் திவ்ய ஆழ்வார்கள் –
மன்னு வட மதுரை மைந்தனை மாயனை -பகவத் சம்பந்தம் நிலைத்து இருக்கும்
வாமனன் தபஸ் செய்த /சத்ருகன ஆழ்வான் படை வீடு -ராஜ்ஜியம் ஆண்ட தேசம் /கண்ணன் அவதரித்து -இதனால் மன்னு
வட மதுரை -சொல்லும் பொழுதே ஆனந்தம்மதுரானாம் ஹரி -பிறக்க ஏற்ற திவ்ய தேசம் -இனிமையான -நலம் அந்தமில்லதோர் நாடு போலே போக்யமான –
பாவனத்வம் புண்யம் -உண்டே -பாப ஹரி -நெஞ்சாலே நினைக்க
கங்கை கங்கை வாசகத்தாலே போலே –
சுபம் மங்களம் பிராபகமும் பிராப்யமும் அதுவே –
ஜகந்நாதன் வந்து பிறந்த படி -அனைவருக்கும் நாதன் -பிரஜை துக்கம் போக்கி -நாதன் என்பதால் –
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கே பிறந்தான் -ஆதி சோதி உரு அம் –
அப்ராக்ருத திரு மேனி இங்கு வந்து பிறந்தாலும் –
அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் கூடாது –
அங்கு வைத்து இங்கு பிறந்தான் -அங்கு வைத்த படியே -பிறந்தான் –
சாஷாத் விஷ்ணு -அஜகத் ஸ்வாபம்
சனாதனன் தொன்மை ஆஸ்ரித -சமமாக வந்த மெய்ப்பாடு
என்நின்ற யோனியுமாய் பிறந்து –
மைந்தனை மிடுக்கு -சாமர்த்தியம் -தந்தை காலில் விலங்கு அற –
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
விரஜை -போலே
ராமன் -சரயு –
தாமரபரணி ஆழ்வார் –
தூய்மை -வசுதேவோ முழம் கால் அளவு வற்றி கொடுத்து -இத்தாலே வந்த தூய்மை
கிரிஷ்ணனும் கோபிகளும் கொப்பளித்து தூய்மை
பம்பா நதி வால்மீகி வர்ணிக்க ராமநீயம் பிரசன்னா -தெளிவாக -சத்துக்கள் மனம் போலே –
பெ ரு நீர் -கம்பீரம் –
பாவனத்வம் -அழகு -தூய பெரு நீர் –
யமுனைத் துறைவன் -பெண்கள் துறை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு –
ஸ்பஷ்டம் நீர்மை இடைசெரி அந்தகாரத்தில் தீபம் போலே இங்கே
அங்கு பகல் விளக்கு
தோன்றும் -கற்பத்தில் துவட்சி இல்லாமை –
தோன்றியது மதுரையிலே திருவாய்ப்பாடியிலே –
ஜன்ம ஷேத்ரம் -பிரசவ அரை தானே அது -பிறந்த இடம் -தாயார் இடம் திருமலை எம்பெருமானார் –
ஸ்ரீ பெரும் புதூர் –
அழுது புரண்டு வளர்ந்த இடம் –
மணி விளக்கு -மங்கள தீபம் போலே இவன் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
சிறப்பு பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டி –
வயிற்றில் தழும் பாலே கண்ணனை அடிக்கி ஆண்ட பெருமை –
தாமம் -கயிற்றால் –
கௌசல்யை பிரசாஇத்தது போல்
என்ன நோன்பு நோற்றார்கள் கொலோ இவனை பெற்ற வயிறு உடையவள்
தன்னுடைய வயிற்றில் தழும்பை காட்டி பவ்யதை யால் நாட்டார் கொண்டாடும்படி –
ஆனந்தத்தால் வயிறு குளிர்ந்து –
தயிர் கடைய -ஆசை குபு குபு அம்பா –
கிம் -பூதம் -வெண்ணெய் சொல்லாமல் -தூர போ உன்னை முழுங்கும்
நான் விழுங்குவேன் -நவநீதம் இதி பூதம் வெண்ணெய் போலே இருக்குமா
மந்த -ஆனந்த பட்டு தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் –
அவனுடைய பந்தம் அவனாலும் அழிக்க போகாமல் –
நம்முடைய சம்சார பந்தம் அறுக்க வல்லவன்
இதை அனுசந்திக்க நம் பந்தம் போகுமே
தூயோமாய் வந்து -தூய்மை இடைக்கை  வலக்கை அறியாத –
உடம்பு இருக்க தலை குளிக்கை-
தலை இருக்க உடம்பு குளிக்கை –
பிரயோஜனந்தர பலன் சாதனான்தரம் இல்லாத தூய்மை –
யோக்யதை அஹம் தூய்மை வாய்மையாலே வள்ளுவர்
இருந்தபடியே அதிகாரி
விபீஷணன் -சமுத்ரத்தில் குளிக்காமல் சுத்தி –
வந்து நாம் -அவன் வர இருக்க கடவ -நாம் வந்து –
பரம பதம் -திரு பாற் கடல் -மதுரை -ஆய்ப்பாடி -நாம் இருக்கும் இடம் –
சென்று சொல்லாமல் வந்து -இருக்கும் இடம் தான் வந்து
இருக்க வேண்டிய இடம் பகவத் சன்னதி தான்
தண்ட காரண்யத்தில்ரிஷிகள் -பெருமாள் வார்த்தை -கதறி –
ஆ ஆ என்று ஆராய்ந்து அருளுவான் –
உபாயத்தில் துணிவு -உபேயத்தில் தவரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே –
பேற்றுக்கு த்வரிக்கை –
தூ மலர் -தூய்மை -பிரயோஜனம் –எதிர்பார்க்காமல் -மிக்க சீர் தொண்டர் –
குறும்பருத்த நம்பி மண் புஷ்பம் விருத்தாந்தம் -தலை மேல் கொண்டான் –
ஸ்வர்ண புஷ்பத்தை தூ என்று துவர்ந்து –
யோக்கியம் அயோக்கியம் என்று பார்க்காமல் கண்ணுக்கு தோற்றின மலர்
சமர்பித்து இல்லை தூவி -அடைவு கெட பரிமாறி –
அஞ்சலி எதாவது ஒரு மூலையில் ஜலதரங்கம் வாசித்தாயா திரு வாராதனம் –
அபசாராம் -உபசாரம் என்று செய்தவை -தூக்கி போட்டால் போட்டாலும் -ப்ரீதி உடன் -செய்து –
தொளுதோஞ்சளியையும் பண்ணி -பரம் -என்ன கொடுக்க போகிறேன் ஐ ஸ்வர்யம் பரமபதம் கொடுத்து –
கடனாளி போலே திரௌபதிக்கு -நினைத்து -அனைத்தும் செய்தாலும் -வட்டிக்கு வட்டி -ஏறின கடன் போலே –
துக்கம் பட்டான் -ஸ்வாபம் –
கோபிகள் அவன் தொழ இருப்பவர்கள் -பிரணயம் –
பெரியவர்கள் ஏமாற்ற அஞ்சலி செய்து
வாயினால் பாடி -வாய் படைத்த பலன்
மனசில் இருந்து வந்து வாய் சொல்ல
மனசில் இன்றி வெரும்வாயாலே சொன்னாலும் –
விபீஷணன் வந்தது மட்டும் இன்றி வாயால்
சிந்திக்க பாடி -மனசால் -மனசு படைத்த பலனுக்கு சிந்திக்க –
நமோ நாராயண என்று ஓவாத –
மனசில் சிந்திக்க வாயால் சொல்லி –
தொழுது பாடி சிந்திக்க -தனி தனியே கரணங்கள் மேல் விழும்படி
முந்தி முந்தி -பட்டினி இருப்பவன் உண்ணுவது போலே
இந்திரியங்கள் நான் முந்தி நான் முந்தி இடித்து தள்ளி –
போய பிழை -முன் செய்த பாபங்கள்
மேல் -உத்தர பூர்வ தீயினில் தூசாகும்
பஞ்சு போலே போகும் –
உரு மாய்ந்து போகும்
மற்ற வஸ்து கரி போலே இருக்கும் -அதனால் பஞ்சு –
உரு மாய்ந்து போகும்
வேதம் அனைத்துக்கும் வித்து -நெருப்பில் இட்ட பஞ்சு சாந்தோக்ய உபநிஷத் பிரமாணம்
செப்பு -சொல்ல அமையும் –
போய பிழை பூர்வாகம் அநாதி காலம் அறிந்தே செய்தவை
புகு தருவான் ஞானம் பிறந்த பின்பு புத்தி பூர்வகமாக செய்ய மாட்டான்
பிரகிருதி வாசனையாலே செய்வான் அறியாமையாலே –
ஒட்டாதே -தாமரை இலை தண்ணீர் போலே –
திரு நாமங்களை செப்ப அமையும்
எந்த திருநாமங்களை

1-மாயன் –

2-மன்னு வட மதுரை மைந்தன்-

3-தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –

4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு

5-தாயைக் குடல் விளக்கம் செய்த

6-தாமோதரன் –
நாவுக்கு அறு சுவை இவை

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்