ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -193-204….

நூற்று தொண் நூற்று மூன்றாம் வார்த்தை
அக்நியை அகற்றுவாரும் –அவித்யயை அகற்றுவாரும் –அந்யரை அகற்றுவாரும் –அச்சத்தை அகற்றுவாரும் – அபோக்யரை அகற்றுவாரும் –
ஐந்து வித உபகாரங்கள் செய்யும் ஆசார்யர்கள் -கர்மாதிகள் விலக்கி -ஞானம் -அளித்து-அந்ய சேஷத்வம் கழித்து -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
பிரபத்தியை உபதேசித்து -ஐஸ்வர்ய கைவல்ய -ஸ்வ பிரயோஜன பகவத் கைங்கர்யங்கள் ரூபமான அபோக்யதைகளை அகற்றி அருளுபவர்கள் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று நாலாம் வார்த்தை
துக்க அனுபவம் பிரகிருதி
துக்க அநுபவிதா -ஆத்மா
துக்க அசஹை பிராட்டி
துக்க நிவாரகன் ஈஸ்வரன் –

———————————————————————————————

நூற்று தொண் நூற்று ஐந்தாம் வார்த்தை –
நஞ்சீயர் பட்டரை -பெருமாள் சந்திர புஷ்கரணி கரையிலே கண் வளர்ந்து அருளுகிற இதுக்கு
திரு உள்ளத்தில் கருத்து என் -என்று விண்ணப்பம் செய்ய –
நாராயணா ஒ  மணி வண்ணா -என்று கூப்பிட்ட பின்பு இ றே மடுவின் கரையிலே வந்தது –
இங்கு கண் வளர்கிறது நான் கூப்பிடுவதற்கு முன்பே -என்னை எடுக்கைகாக –
நான் அகப்பட்ட பொய்கையிலே ஏற்கனவே வந்து கண் வளர்ந்து அருளுகிறார் -இவ்வர்த்தம் கேட்டது-
உம்முடைய வசநத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு பெருமாள் என் நினைவை வெளி இட்டு அருளினார் -என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று ஆறாம் வார்த்தை –
ஆழ்வானுக்கு பால மித்ரனாய் இருப்பான் ஒரு பிராமணனுக்கு அநேக காலம்
பிள்ளை இன்றிக்கே இருந்து -பின்பு ஒரு பிள்ளை பிறந்தவாறே -கோயிலிலே
ஆழ்வானுக்கு வார்த்தையாய் கேட்டு -அப்போதே பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று –
அப்பிள்ளைக்கு ஹிதத்தை அருளிச் செய்து -வருவாரை எல்லாம் -அந்தப் பிள்ளை செய்வது என் –
என்று வினவுவர் -ஒரு நாள் ஆண்டாள் போனத்தை வா என்று அழைத்து உறவு கொண்டாடா நின்றீர் –
இதுக்கு ஹேது என் -என்ன -நான் அவனுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னேன் காண் -என்ன –
அவன் எங்கே நீர் எங்கே -இப்படி சொல்லுவதொரு வார்த்தை உண்டோ -என்ன -ஒருவன் விலங்கிலே
கிடந்தால் -விலங்கு விடுவிக்கும் போது -விலங்கில் கிடக்கிறவனுக்கு சொல்லுமோ -விலங்கை இட்ட ராஜாவுக்கு
சொல்லுமோ -என்று அருளிச் செய்தார் -அந்த பிள்ளை உபநயனம் பண்ணின சமனந்தரத்திலே
கோயிலிலே வந்து ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து சேர்ந்தான் –

போசல ராஜ்யத்து ஸ்ரீ சாளக் ராமத்துக்கு உடையவர் எழுந்து அருள -ஊரடைய சைவர் ஆகையாலே
ஆதரியாதே இருக்க -முதலி யாண்டானைப் பார்த்து இவ் ஊரார் நீர் முகக்கும் இடத்தில்
உன்னுடைய ஸ்ரீ பாதத்தை விளக்கி வா -என்று அருளிச் செய்ய -அவரும் அப்படியே செய்ய –
பிற்றை நாள் அவ ஊரார் அடைய உடையவர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார்கள் -அதுக்கு பின்
ஸ்ரீ சாளக் க்ராமம் என்று பேர் ஆய்த்து –

———————————————————————————————–

நூற்று தொண் நூற்று ஏழாம் வார்த்தை
மிளகு ஆழ்வானை  முதலிகள் -நீர் கீழை ஊருக்கு பல காலும் போவான் என் -என்று கேட்க –
நான் அங்கு போனால் பகவத் விஷயத்துக்கு அநு கூலமான வார்த்தைகள் அவர்களுக்கு
சொல்லுவன் -அத்தாலே இங்குத்தைக்கு விரோதியார்கள் என்று -அவர்கள் பக்கலில் சில
கொண்டு போந்து பாகவத விஷயத்துக்கு உறுப்பாக்கினால் -அவர்களுக்கு ஓர் ஆநு கூல்யம்
பிறக்கும் என்றும் போனேன் -என்ன -அப்படி யாகிலும் அவர்கள் பதார்தங்கள் ஆமோ என்ன –
நான் எல்லோரையும் நாராயண சம்பந்த நிபந்தநமாகக் காணும் அத்தனை அல்லது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாகக் காணேன் –அத்தாலே ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாய் இராதே –

————————————————————————————————-

நூற்று தொண் நூற்று எட்டாம் வார்த்தை
நடதூர் அம்மாளும் -ஆளிப் பிள்ளானுமாக கூட அமுது செய்யா நிற்க -அத்தை பெரும் கூரப் பிள்ளை கண்டு அநுபவித்து –
தேவரீர் உடைய அனுஷ்டானத்தை காணாதே அருளிச் செய்த வார்த்தையை தஞ்சம் என்று இருந்தேன் ஆகில்
அனர்த்தப் பட்டோம் இத்தனை இ றே -என்று விண்ணப்பம் செய்ய –
அம்மாளும் -சதாச்சார்ய பிரசாதம் உத்தேஸ்யம்  என்ற போதே எல்லாம் இதிலே கிடந்தது அன்றோ -என்று அருளினார்

————————————————————————————————-

நூற்று தொண் நூற்று ஒன்பதாம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பியை தம்முடைய தமையனார் அந்திம தசையிலே எனக்கு தஞ்சம் ஏது  என்று கேட்க –
விரஜைக்கு இக்கரையிலே -உம்மை எங்கு நின்றும் வந்தீர் என்று கேட்டார் உண்டாகில் –
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் நின்றும் வந்தோம் -என்றும் –
அக்கரையில் உம்மைக் கேட்டார் உண்டாகில் -திருக் கோட்டியூர் தமையனார் -என்றும் சொல்லும் என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————-

இரு நூறாம் வார்த்தை
அபாகவத த்யாகம் -பாகவத பரிக்ரஹம் -பகவத் ஸ்வீகாரம் – ஸ்வ ஆசார்ய அங்கீகாரம் -ஸ்வ ப்ரஜ்ஞை –
இவை இத்தனையும் உண்டான போது-ஆய்த்து ஈடேற லாவது

————————————————————————————————-

இரு நூற்றோராம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே உடையவர் -பதினெட்டு பிரகாரம் எழுந்து அருள –
இன்னமும் கேட்க வந்தீரோ -என்ன -உடையவர் -ஓருரு இரண்டுரு வாந்தனையும் வருவன் – என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————

இரு நூற்று இரண்டாம் வார்த்தை
பெரிய முதலியாருக்கும் நம் ஆழ்வாருக்கும் நடுவு உள்ள ஆசார்யர்கள் எல்லாரையும் அறிய வேண்டாவோ –
என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க -அவர்களுடைய பாஹுள்யத்தாலே அறியப்  போகாது –
இத்தால் இவனுடைய ஞானத்துக்கு ஆதல் பேற்றுக்கு ஆதல் குறை வாராது -அது எங்கனே என்னில்
சந்தானத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ப்ரப்ருதிகளுக்கு அவ்வருகே நாம் அறிகிலோம் இறே –
இதுக்காக ப்ராஹ்மண்யதுக்கு ஏதேனும் தட்டாகிறதோ -என்று அருளினார்

————————————————————————————————

இரு நூற்று மூன்றாம் வார்த்தை
நஞ்சீயரை பெரிய கோயில் வள்ளலார் திருவாய் மொழியிலே -ஓர் அர்த்த பிரச்தாபத்திலே
ஜீயர் அருளிச் செய்த படி ஒழிய -இங்கனே யானாலோ என்ன –
நான் சொன்னபடி அழகிது என்று திருக் கலி கன்றி தாசர் சொல்லுவர் -என்று ஜீயர் அருளிச் செய்ய –
உம்முடைய அழகியது என்பர் என்றது பிரமாணமாக சொல்லுவான் என் -என்ன –
அதில் ஒரு நிபந்தனம் இல்லை காணும் -சதாசார்ய சந்நிதியோடு -சச் சிஷ்ய சந்நிதியோடு –
வாசி இல்லை காணும் ஒருவனுக்கு திருத்தம் பிறக்க -என்று அருளினார் –

————————————————————————————————

இரு நூற்று நாலாம் வார்த்தை
பட்டர் திருவணை யாட எழுந்து அருளுகிற போது பகலில் வழி நடந்த ஆயாசத்தாலே விட்டதொரு தூற்றடியிலே
நஞ்சீயர் மடியிலே திரு முடியை வைத்து கண் வளர்ந்து அருள –
அவ்விரா முடியத் துடை மாறுதல் -சலிப்புதல் செய்யாதே -எழுந்தி அருளி இருந்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

————————————————————————————————-

பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: