அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –நாச்சியார் திருமொழி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

114-

பேச்சும் செய்கையும் -2-4-
கண்ணன் கள்வம் -திருவாய்மொழி -9-9-7-
உன் தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய
மந்த்ரம் தான் கொலோ -இவர்கள் தன்  வடிவில் தோற்று ஈடுபட்டமை தோற்ற
வார்த்தை சொன்னவாறே அதுவே அவகாசமாக -அடியேன் குடியேன் -என்றால் போலே சில தாழ்வுகள்
சொல்லுவது விரல் கவ்வுதாய்க் கொண்டு சிலவற்றைச் செய்யப் புக்கான் -அதிலே துவக்கு உண்டு
அறிவு கெட்டு ஆய்ச்சிமர் சொல்லும் வார்த்தை இது –
கண்ணன் கள்வம்  -சம்ச்லேஷ தசையிலே -தாழ்ந்த பேச்சுகளும் செயல்களும் -பேச்சும் செய்கையும் –
என்னக் கடவது இ றே -அவற்றாலே அபஹ்ருதமாய் அத்விதீயமான என் நெஞ்சானது அவனது பக்கலது –
இப்படி ஆண்டாளும் ஆழ்வாரும் ஆய்ச்சியர் பாவனையில் ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் மண்டினபடி –

115-
காலை –கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் -3-5-
ஆயர் மட மக்களை பின்னே சென்று –ஒளித்து இருந்து -அங்கு அவர் பூம்
துகில வாரி -கொண்டு இட்டு -வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் -பெரிய திருமொழி -10-7-11
ஆய்ச்சியர் துகில்களை வாரிக் கொண்டு மரம் ஏறி வீற்று இருந்த கண்ணன் -அரையிலே ஒன்றைச் சாத்துவது –
தலையிலே ஒன்றைக்கட்டுவது -உத்தரீயமாக ஒன்றை இடுவதாக -இப்படி தன் திருமேனிக்கு
பரபாகமாம் படி -நாநா வர்ணமாவற்றைக் கொண்டு அலங்கரித்து-சேஷித்தவற்றை குருந்திலே இட்டு வைத்து –
கண்டி கோளே நமக்குத் தகுதியாய் இருந்தபடி -இத்தைக் கண்ட உங்களுக்கு வேண்டி இருந்ததோ -என்றான் –
அழகிதாய் இருந்தது -நாங்கள் அவற்றை வேண்டுகிறோம் அல்லோம் -குருந்தில் கிடந்தவற்றை தா –
என்று ஆய்ச்சியரும் கண்ணனும் பரிமாறின பரிமாற்றத்தை ஆண்டாள் அனுபவித்தாள் –
கொண்மின் -என்று வேண்டுமாகில் இங்கே ஏறிக் கொள்ளும் கோள் -என்று இருந்தாய் -என்று கூறுவதாக
கலியன் அனுபவம்
————————————————————————————————————————————————————————————–

116
தெள்ளியார் பலர் -4-1
பன்னலார் பயிலும் பரனே -திருவாய் மொழி -2-3-7-
தெள்ளியார் -நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் பகவல் லாபத்தோடு இருந்து –
போது போக்கும் அவர்களும் சிலரே -பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து –
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் -அத்தனை அளவு உடையார்கள் ஆய்த்து –
பன்னலார் பயிலும் -தெள்ளியார் பலர் -என்கிறபடியே -தாங்கள் பலராய் -பகவத் குணங்களுக்கு
தேசிகராய் இருந்துள்ள நித்ய சூரிகள் சதா தர்சனம் பண்ணா நின்றாலும் -அநு பூதாம்சம்
அளவு பட்டு -அநு பாவ யாம்சமே பெருத்து இருக்கை –
—————————————————————————————————————————————————————————-
117
பள்ளி கொள்ளும்  இடம் -4-1
பள்ளி யறை -பெரியாழ்வார் திருமொழி -5-2-9-
பள்ளி கொள்ளும் இடம் ஆகிறது கோயில் -என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று பிள்ளை
அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி யறை -என்கிறது தம் திருமேனியை –
மேல் பாட்டில் வ்யக்தமாக அரவத் தமளியினோடும் -அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தாமும் அகம்படி வந்து புகுந்து -என்கிறார் இ றே –
அங்குத்தை வாஸம் ஸாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம் -என்னா நின்றது இ றே
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விசவச யா யத்னம் மஹத-
நெஞ்சமே நீள் நகராக இருந்த –
கோயில் ஸ்த்தாவர ஸ்ரீ விமானம்
ஆழ்வார் திரு உள்ளம் ஜங்கம ஸ்ரீ விமானம் -உறங்காதீர்கள் -இதனைக் குறிக் கொண்மின் என்கிறார்
——————————————————————————————————————————————————————————————

118
வேம்கடம் -கண்ண புர நகர் -4-2
வடவரை –கண்ண புரம் -பெரிய திருமொழி -8-2-5-
இருவரும் திருக் கண்ண புரத்துக்கு மூல ஸ்தானம் திருவேம்கடம் என்று அருளிச் செய்து இருக்கிறார்கள் –
—————————————————————————————————————————————————————————————
119
பூத்த நீள் கடம்பேறி 4-4-
பல்லவம் திகழ பூம் கடம்பேறி -பெரிய திருமொழி -4-2-2-
பச்சிலைப் பூம் கடம்பேறி -பெரிய திருமொழி -10-7-12-
விஷ துஷ்டமான கரையிலே இவன் ஏறிய மரம் மட்டும் பூத்து இருக்க காரணம் –
திரு உடம்பு பட்டவாறே போத்தது -கல்லும் பெண்ணானால் கடம்பு பூக்க சொல்ல வேணுமோ –
பல்லவம் -பச்சிலை –திருவடிகளின் ஸ்பர்சத்தாலே தளிரும் பூவுமாய் தழைத்தது ஆய்த்து
———————————————————————————————————————————————————————————————-
120
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் -4-11-
நாமம் பல உடை நாரண நம்பீ -பெரிய திருமொழி -10-8-4-
வாழ் தொல் புகழார் -திருவாய் மொழி -5-8-6-
நிறை புகழ் ஆய்ச்சியர்-எம்பார் -இவர்களுக்கு நிறை புகழ் ஆவது -கிரிஷ்ணனை இன்னாள்  நாலு பட்டினி கொண்டாள்
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் -என்னும் புகழ் காண் -ரசகனமான உரை
வாழ்-திருக்குடந்தை எம்பிரான் திவ்ய தேசத்தில் ஆதரித்து வாழும் புகழ்
——————————————————————————————————————————————————————————————————

121
வில்லிபுத்தூர் உறைவான் –கண்ணினை துஞ்சா -5-5-
நிறை வேங்கடம் –தேவர்கள் கை தொழுவார்களே -திருவாய் மொழி -9-3-8-
வைகுந்தன் என்பதோர் தோணி  பெறாது -அது தூரஸ்தம் -இதுவோ தனக்காவ வந்து நிற்கிற இடம் தானே -என்னில் –
உள்ளுப்புக்கால் குறி யழியாமே நம்மைப் போலே போர வல்லள் அவள் –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிபபா ள் ஒருத்தி -ஜீயர் அருளிச் செய்த வார்த்தை –
திருவேம்கடம்-சந்நிகிதமே ஆகிலும் – செல்ல ஆழ்வாருக்கு பலம் இல்லை –
சீல குணத்தால் வந்த பல ஹானி -ஆல்வரைக் காட்டிலும் ஆண்டாளுக்கு பல ஹானி மிக்கு -இருந்தபடி –
—————————————————————————————————————————————————————————————————-

122
கண்ணிப் புனிதன் -6-4
வேதம் விரித்துரைத்த புனிதன் -பெரிய திருமொழி -2-2-8-
விவாஹ சமயத்தில் -அவள் பேர் ஒப்பனை போல் அன்றிக்கே -ஒரு தனி மாலை இட்டு
ஸ்நானம் பண்ணி -கையும் பவித்ரமுமாய் -தீண்டினார் உண்டாகில் முகத்தை போலாதாக பண்ணி –
குந்தி நடந்து -புடவையை ஒதுக்கி விநித வேஷத்தோடு வந்த படி -பெரியாழ்வார் பெண் பிள்ளையை
ஆசார்ய வைகல்யம் உண்டானால் கொடார்கள் இ றே -இது திருக் கல்யாண காலத்தில் ஆசாரம் –
வேதம் விரித்துரைத்த புனிதன் -கீதோ உபநிஷத்தாய் விரித்து உரைத்த ஹேய பிரத்யநீகன் –
ஸ்வ பிரயோஜன நிரபேஷமாய் -பர ஹிதமே சொல்லுகையாலே வந்த சுத்தி –
இது உபதேச காலத்தில் வந்த சுத்தி
——————————————————————————————————————————————————————

123
கற்பூரம் நாறுமோ -7 th -சங்கப் பதிகம்
விண்ணீல மேலாப்பு -8 th -மேகப் பதிகம் –
கார்க்கோடு -முதல் திருவந்தாதி -27
சங்கத்துக்கும் மேகத்துக்கும் சேர்த்தி -அடுத்த அடுத்த பதிகத்தில் ஆண்டாள் அருள-
கார்க்கோடு பற்றியான் கை -என்று பகவான் உடைய திரு மேனியை வர்ணித்து
அதிலே சங்கம் உள்ளமை காட்டிய இந்த பாசுரத்தை பெரியவாச்சான் பிள்ளை
உதாஹரித்து விண்ணீல மேலாப்பு பத்திக் அவதாரிகை சாத்தித்து அருளுகிறார் –
——————————————————————————————————————————————————————
124
அன்னம் போல் சங்கு -7-7-
சங்கம் போல் மட வன்னங்கள்  -பெரியாழ்வார் திருமொழி -4-4-4-
திருக் கோஷ்டியூர் அன்னங்களுக்கு பகவத் பாஞ்ச ஜன்யத்தை திருஷ்டாந்தம்
————————————————————————————————————————————————————————

125
திருமாலும் போந்தானே -8-1-
திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே -திருவாய்மொழி -2-1-1-
போந்தானா -கோட் பட்டாயா -என்று ஏகாரம் வினாவில் வந்ததாக கொள்ள வேண்டும் –
——————————————————————————————————————————————————126
126
இது தமக்கோர் பெருமையே -8-1-
சுடர் சோதி மறையாதே -திருவாய் மொழி -3-1-9-
பிரிநிலை ஏகாரம் இரண்டு இடத்திலும் –
தமக்கோர் பெருமையே -ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தை உடையராய் இருக்கிற தமக்கு
அவளோடு அனந்யராய் இருப்பார் நோவு பட முகம் கொடுத்திலர் -என்றால் அத்தால் வரும் அவத்யம்
தம்மது  அன்றோ -இது தன்னை தாமே பரிஹரிக்க வேண்டும் -என்றபடி –
சுடர் சோதி மறையாதே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் காரணமே என்று அழைக்க ஓடி வந்து ரஷித்தான் நாரணன் –
கை கழலா நேமியான் -திரு வாழி கொண்டு ரஷித்து இருப்பான் ஆகில் -நாராயண பரோ ஜ்யோதி –
என்று வேதாந்தம் கொண்டாடிய அவன் தேஜஸ் நிறம் பெறுமா -ஆனைக்காக முதலை மேல் சீறி வந்ததால்
தானே தேஜஸ் நிறம் பெற்றது -மறையாதே -என்ற இதுக்கு மறையும் மறையும் -என்று சிற்றாள் கொண்டான்
வார்த்தை –
———————————————————————————————————————————————————————————————–
127
பெண் நீர்மை யீடழிக்கும் இது -9-1
ஓர் பெண் கோடியை வதம் செய்தான் -9-9-
முதல் பாசுரத்தில் இது என்று அஸ்பஷ்டமாக அருளிச் செய்தததை
ஒன்பதாம் பாட்டில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறாள் –
—————————————————————————————————————————————————————————-

128
மதயானை போல் எழுத மா முகில்காள் -8-9-
திணரார் மேகம் எனக் களிறு -திருவாய்மொழி -6-10-5-
ஆனை போலே மகம் -ஆண்டாள் -மேகம் போலே களிறு -ஆழ்வார்
அன்னம் போல் சங்கம் -7-7- சங்கம் போல் அன்னம் -பெரியாழ்வார் 4-4-4-
தன கைச் சார்ங்கம் அதுவே போலே -ஆண்டாள் -கறுப்புச் சிலை கொல் புருவம் -திருவாய்மொழி -7-7-4
என்று வில் புருவங்களை அனுபவித்தது போலே –
————————————————————————————————————————————————————————————-
129-
விண்ணீல மேலாப்பு -8 th -வடக்குத் திருமலை
சிந்துரச் செம்பொடி -9 th -தெற்குத்  திருமலை
துக்கச் சுழலை -பெரியாழ்வார் திருமொழி -5-3-
சென்னி யோங்கு -பெரியாழ்வார் திருமொழி -5-4-
ஆழ்வாரும் ஆண்டாலும் மாறி மாறி அனுபவித்தவை –
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னும் இவையே முலையா வடிவமைத்து
அன்ன நடைய வணங்கு-பெரிய திரு மடல் –
நம் ஆழ்வாரும் இரண்டு திவ்ய தேசங்களுக்கும் இரம்டு பதிகங்கள் அருளிச் செய்தார் இ றே
விசேஷ ஆதாரம் தோற்றும் படி –
——————————————————————————————————————————————————————————————-
130

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -10-4-
அரக்கியை மூக்கீர்ந்தாயை -திருவாய்மொழி -2-3-6
ராமஸ்ய தஷிணோ பாஹூ -பெருமாளுக்கு இளைய பெருமாள் வலக்கை இ றே
குமரனார் -என்று அவன் பருவத்தையும் மாறாமல் அருளிச் செய்தாள் ஆண்டாள்
தருணவ் -சூர்பணகை -வார்த்தையும் பருவத்தில் ஈடுபாடு -ஆயின் பிராட்டி இன்றி பெருமாளை பற்றிய வார்த்தை –
—————————————————————————————————————————————————————————————————-
131
நானும் பிறந்தமை பொய்யன்றே -10-4-
அறிவொன்றும் சங்கிப்பன் -திருவாய் மொழி -8-1-4/7
பகவத் லாபத்துக்கு ஹேதுவாக பகவத் வாக்யத்தையும் பாகவத சம்பந்தத்தையும் நினைத்து –
பகவத் வார்த்தை பொய்யானாலும் -பாகவத சம்பந்தம் பொய்க்காதே -அதுவும் பொய்யாயிற்றெ
அதிமாத்ர கிலேசத்தை அநு சந்தித்து அருளிய வார்த்தை இது –
அறிவொன்றும் சங்கிப்பன்-உன்னை ஆநான் அதுவும் பொய்யோ என்றி சங்கித்து -ஆழ்வார் –
அர்ச்சா சௌலப்யத்திலும் அதி சங்கை -இது நான்காம் பாட்டின் சாரம் –
ஏழாம் பாட்டில் -சகல பதார்த்தங்களும் உனக்கு ப்ரகாரதயா சேஷமாய் -நீ ப்ரகாரியாய் –
நீயே அவற்றுக்கு நிர்வாஹன் என்றும் -அறிவு ஒன்றும் கொண்டு தரித்து இருக்கிற நான் –
என் பாபத்தால் அதிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் -இது ஆழ்வார் உடைய அதி சங்கை –
—————————————————————————————————————————————————————————

132-

வேங்கட நாடர் –ஆடும் கருளக் கொடி உடையார் -10-5
திருவேங்கடமுடையாய் -பறவை ஏறு -பெரியாழ்வார் திருமொழி -5-4-1/2
கொடிப் புள் திரித்தாய் –திருவேங்கடம் மேய -பெரிய திருமொழி -1-10-2
பறவையின் பாகன் –வேங்கட வாணன் -திருவாய்மொழி -8-2-1-
திருவேங்கடமுடையானுக்கும் கே-பெரிய திருவடி சம்பந்தம் –
வேங்கட நாடர் –ஆடும் கருளக் கொடி உடையார் –மேலே பரம பத நாதனை சொல்லுகையாலே
அவன் ஸ்ரீ வில்லிபுத்தூரில் வந்து தன்னுடன் கலக்குகைக்கு திருமலையில் நிலை சினையாறு ஸ்தானம் –
திருவேங்கடமுடையாய் -பறவை ஏறு –திருவேங்கடமுடையான் பெரிய திருவடி மேல்
எழுந்து அருளி -இவரை பரம பதத்தில் கொடு போகிக்கு த்வரிக்கை
மற்றை இரண்டு இடங்களில் கருட சம்பந்தம் அர்த்தாந்தர அநு குணம் –
—————————————————————————————————————————————————————–
133
கருளக் கொடி உடையார் -10-5
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி -திருவாய் மொழி -2-5-7
ஆண்டாளும் ஆழ்வாரும் பர வாசுதேவனை கூறி அருளுகிறார்கள் –
———————————————————————————————————————————————————————–

134

மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர் -11-10
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே -பெரிய திருமொழி -9-4-5-
மெய்ம்மைப் பெரு வார்த்தை-கீதா சரம ஸ்லோக வார்த்தை -இதை கேட்ட பின்பு உபாயத்வென
விலங்கின துரும்பு நறுக்கி அறியார் -பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வார் –
இந்த வார்த்தையை கேட்டு -தந் நிஷ்டராய் இருப்பார் -இது மெய்யான வார்த்தையை கேட்டு
அதன் படி இருப்பர் -என்றது ஆய்த்து
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –அவன் பொய் ஆகையால் அன்றோ
எனக்கு ஆகர்ஷகமாய் இருக்கிறது -ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவனுடைய பொய்யே-
அத்தை கேட்டு -அத்தாலே தரித்து இருந்தேன் -இது பொய்யான வார்த்தையை கேட்டு
தரித்து இருந்தபடி
பகவானுடைய பொய்யோடு மெய்யோடு வாசி இல்லை ஆஸ்ரிதர் தரிக்க -என்றவாறே –
——————————————————————————————————————————————————————————–
135
ஊமையரொடு செவிடர் வார்த்தை -12-1-
தலையினோடு ஆதனம் தட்ட -திருவாய் மொழி -3-5-3-
ஊமையரொடு செவிடர் வார்த்தை –செவிடரோடு ஊமையர் வார்த்தை என்றபடி –
என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றின படி சொல்ல பரிகரம் இல்லை -எனக்கு கேட்கைக்கு
பரிகரம் இல்லை -ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை -செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
தலையினோடு ஆதனம் தட்ட –ஆதனத்தோடு தலை தட்ட -என்றபடி -தலை தரையிலே தட்டும் படி –
பஜனை பண்ணுவார் பஜனை பண்ணும் முறையை ஆழ்வார் அருளுகிறார் –
————————————————————————————————————————————————————————————————-

136-

136
பண்டு பண்டாக்க -12-2
பண்டு பண்டு போலே -பெரிய திருமொழி -11-1-9-
முன் செய்ய மாமை நிறம் -திருவாய்மொழி -5-3-3-
பகவத் விஸ்லேஷ காலத்தில் அருளிய பாசுரங்கள்  இவை-
வாய் உடம்பு வெளுத்து -வைவர்ண்யம் -இவை என்று தீரும் ஆர்த்தி உடன் அருளியவை –
பண்டு என்று ஒரு சொல் இன்றி பண்டு பண்டு -பழைய பழைய என்றபடி –
இப்பொழுது விஸ்லேஷ காலம் -இதுக்கு பண்டான காலம் பகவான் உடன் கூடிய காலம் –
அதுக்கு பண்டான காலம் பகவத் விஷயமே அறியாத காலம் -அப்போதைய நிறம்
மிகவும் ஆகர்ஷகம் இ றே -கலந்து பிரிந்து லாப அலாபங்கள் அறியாத பூர்ணை யாய் இருந்த நிறம் –
——————————————————————————————————————————————————————————–
137
நாலயாரும் அறிந்து ஒழிந்தார் -12-2
ஞாலம் அறியப் பழி -சுமந்தேன் திருவாய் மொழி -8-2-3-
பிறர் அறியாமைக்கே தான் பரிகிரகிக்க பார்க்கிறது -இது அறியார் சிலர் உண்டாய்
தான் பரிகரிக்க வேண்டுமே -எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து –
ஞாலம் அறிய நாணித் தான் என் -ஜகத் பிரசித்தமாகி விட்டதாகில் லஜ்ஜித்து
என்ன பிரயோஜனம் –
———————————————————————————————————————————————————————-
138-
மதுரை தொடக்கமாக வண் துவராபதி தன்னளவும் -12-10
மகனாய்த் தோன்றிற்று முதலா தன்னுலகம் புக்கது ஈ றா -பெருமாள் திருமொழி -10-11
மதுரைப் புறத்து -என்று தொடங்கி -துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் -ஆண்டாள் அனுபவம்
சம காலத்து வால்மீகி போலே அனுபவித்த ஸ்ரீ குல சேகர பெருமாளும் பெருமாளும் –
-இருவரும் புனர்வசு -ஷத்ரியர்கள் –
திரு அவதாரம் தொடங்கி திரு அவதார சமாப்தி வரை அனுபவம் –
———————————————————————————————————————————————————————

139

கரும் தெய்வம் -13-1
கொந்தார் காயாவின் —-நிறத்த -திருவாய்மொழி -3-2-5-
ஸ்வரூபம் மாறாடினால் ஸ்வபாவம் மாறாடினால் ஆகாதோ -இந்நிறம் எப்போதும்
படு கொலை யடிக்கும் அது தவிருகிறது இல்லையே -கிருஷ்ண சப்தார்த்தம் மெய்யாய் விட்டது
ஸ்வரூபம் -காருண்யம் -ஸ்வபாவம் -கருமை
நீ உதவாத போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது
உதவாது ஒழியப் பார்த்த நீ உன் வடிவைக் காட்டிற்று ஏன் –
——————————————————————————————————————————————————————————-
140
முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே -13-9-
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய்மொழி -4-7-3-
நேர் கொடு நேர் முகம் பார்த்து -எனக்கு உன் பக்கல் ஆதரம் இல்லை -உன்னை உபெஷித்தேன் -நீ போ –
என்று நம் போக்கை அனுமதி பண்ணினால் -அது மிகவும் நன்றே –
—————————————————————————————————————————————————————————————-
141-
நம்பி விட்டு சித்தன் -13-10
தென் குருகூர் நம்பி -கண் நுண் சிறு தாம்பு -1-
பகவத் விஷயத்தின் பூர்த்தி அளவு அன்று ஆசார்ய  விஷயத்தின் பூர்த்தி –
பகவானைப் பற்றினால் ஆழ்வார் அளவு வர வேணும் –
ஆழ்வாரை பற்றினால் அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை –
ஆசார்யர்களை நம்பி என்னக்  கற்ப்பித்தார் ஸ்ரீ மதுர கவிகள் இ றே -என்று ஜீயர் அருளிச் செய்வர்
—————————————————————————————————————————————————————————————-
142-
இனிது மறித்து நீரூட்டி -14-1-
தடம் பருகு கரு முகிலை -பெரிய திருமொழி -2-5-3-
கன்று மேய்த்து இனிது உகந்த -திரு நெடும் தாண்டகம் -16-
இவ்விஷயம் முன்பே விளக்கப்பட்டது –
—————————————————————————————————————————————————————————————–
143-
பல தேவர்க்கோர் கீழ்க் கன்றாய் -14-1
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் திருமொழி -1-7-5-
பெண்கள் அளவில் தீம்பு செய்பவன் இவன் அளவில் பவ்யனாய் இருப்பன்
தனக்கு அபிமத விஷயங்களில் சேர விடுகைக்கு கடகன்  என்பதால் –
ஆய்சிகளை தனது இனிய சொல்லாலே ஆஸ்வசிப்பித்து பொருந்த விடுவான்
இவன் ஓர் அடி பிற் படவே பாம்பின் வாயில் விழுந்தது –
————————————————————————————————————————————————————————————-

144
குணுங்கி நாறி -14-2
கறையினார் துவருடுக்கை -திருவாய் மொழி -4-8-4-
இருவரும் கண்ணனின் முடை நாற்றத்தை ஆசைபட்டார்கள் இ றே –
பெருமாள் உடைய தீஷித வேஷத்தை ஆசைப்பட்ட சீதை பிராட்டியைப் போலே அன்று இ றே -இவர்கள்
—————————————————————————————————————————————————————————————–
145
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -14-4-
வாசுதேவன் வலை உளே அகப்பட்டேன் -திருவாய் மொழி -5-3-6-
போன இடம் எங்கும் போய்த் தப்பாதபடி -வளைத்து குளிர நோக்கி -என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் –
அவன் என்னை குறித்த நோக்கில் அன்றோ அகப்பட்டது –
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி -அபிநயம் செய்வித்த  ஐ திக்யம் –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –யாவும் தெரிந்தவர் இ றே எம்பெருமானார் –
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்நோக்கிலே அகப்பட்டேன் –
——————————————————————————————————————————————————————————————————-
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: