ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -157-168….

நூற்று ஐம்பத்து ஏழாம் வார்த்தை
சத்ருக்களுக்கு கரைய வேண்டா -ஸ்வாமியுமாய் -ஸ்ரீய பதியுமாய் -ஆனவன் உடைமை ஆகையாலே –

———————————————————————————————–

நூற்று ஐம்பத்து எட்டாம் வார்த்தை
ஆசார்யன் மூன்றாலே உத்தேச்யன் -ஞான ப்ரதன் -அனுஷ்டான ப்ரதன் -உபாய ப்ரதன் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களும் மூன்றாலே உத்தேச்யர் -உபாயத்துக்கு முற் பாடர் -உபேயத்துக்கு எல்லை நிலமாய் -இருந்த நாளைக்கு உசாத் துணை என்று –
பிராட்டியும் மூன்றாலே உத்தேச்யை -புருஷகார பூதை -கைங்கர்ய வர்த்தகை -நித்ய ப்ராப்யை -என்று –
ஈஸ்வரன் மூன்றாலே உத்தேச்யன் -ருசி ஜநகன் -மோஷ ப்ரதன் -உபாய பூதன் -என்று –

————————————————————————————————

நூற்று ஐம்பத்து ஒன்பதாம் வார்த்தை
ஸ்வபாவ அந்யதா ஞானம் -ஸ்வரூப அந்யதா ஞானம் –இவை -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் —
இவன் ஆத்ம பிரதானம் பண்ணினாப் போலே இருப்பது ஓன்று இறே அவன் -ஆசார்யன் -ஞானப் பிரதானம் பண்ணினபடி –

———————————————————————————————-

நூற்று அறுபதாம் வார்த்தை
ஈச்வரனாகிற கர்ஷகன் -சேதனனாகிற திருப்பள்ளித்தாங்கன்றை -விதை–சேஷத்வ ஞானமாகிற ஷேத்ரத்திலே ஊன்றி -ததீய அபராதமும் –
விபரீத ஞானமுமாகிற புழுக்கடியாமல் நோக்கி -கைங்கர்ய அனுவர்த்தமாகிற -மடையாலே – ஆசார்யர்ன் அருளாகிற நீர் பாய்ச்சி –
அஹங்கார மமகாரமாகிற களை மண்டாமே – பகவத் விஷயமாகிற களை கொட்டாலே சேற்றை எடுத்து -விபரீத அங்கீகாரமாகிற மாடும்
-சப்தாதி விஷயமாகிற பேய்க் காற்றும் – புகுராமே -பிரபன்னத்வம் ஆகிற வேலியை இட்டு – ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிற வர்ஷத்தை உண்டாக்கி –
தளிரும் முறியும் மொட்டும் செலுந்துமாய் -கொழுந்துமாய்-அதின் ஒளி மொட்டு எடுத்துக் கட்டின மாலை இறே பரமை காந்தி

திருப்பள்ளித் தாங்கன்று =விதை — செலுந்து =கொழுந்து

———————————————————————————————–

நூற்று அறுபத் தோராம் வார்த்தை –
பரம சேதனனாகிற பசியன் -ஆசார்ய முகத்தாலே அவகாதனாய் -சேதநனாகிற சிறு நெல் பொறுக்கி -வேதாந்தமாகிற உரலிலே -உபதேசமாகிற உலக்கையாலே –
ஸ்ரவணமாகிற தலைத்துகை துகைத்து -உடம்பாகிற உமி கழித்து -மனனமாகிற அடுக்கலிட்டு -நிதித்யாசநமாகிற சுளகாலே -விவேகமாகிற கொழி கொழித்து -அஹங்கார மம காரமாகிற -அடிக் கழித்து -அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்யமாகிற நுனிக் கொழித்து -ருசி வாசனை யாகிற தவிடறக் குத்தி -சேஷத்வ ஞானமாகிற வெளுப்பை உண்டாக்கி -அத்யவசாயமாகிற அரிகுஞ்சட்டியிலே பிரபத்தி யாகிற நீரை வார்த்து -சாதனாந்தரமாகிற தவிடறக் கழுவி -பிரயோஜனாந்தரமாகிற  கல்லற அரித்து,-பரபக்தி யாகிற பானையிலே பர ஞானமாகிற உலை கட்டி – அனுபவமாகிற அடுப்பிலே -விச்லேஷமாகிற அடுப்பை இட்டு -இருவினையாகிற விறகை மடுத்து -த்வரை யாகிற ஊத்தூதி -ஆற்றாமையாகிற கொதி கொதித்து – பரமபக்தி யாகிற பொங்கினாலே -சூஷ்ம சரீரமாகிற கரிக்கலத்தோடே ஸூஷூம்நையாகிய வாசலாலே புறப்பட்டு -அர்ச்சிராதி யாகிற படி யொழுங்காலே மாக வைகுந்தமாகிற மச்சிலேற்றி அப்ராக்ருதமாகிற பொற் கலத்தோடே -அஹம் அன்னம் -என்கிற சோற்றை இட்டு – அஹம் அந்நாத -என்று புஜியா நிற்கும் –
இவை இரண்டும் முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை

———————————————————————————————–

நூற்று அறுபத்திரண்டாம் வார்த்தை
கலங்குகிறதும் -கலக்குகிறதும் -கலங்கிக் கிடக்கிறதும் –தெளிகிறவனும் -தெளிவிக்கிறவனும் -தெளிந்து இருக்கிறவனும் –
கலங்குகிறான் -சேதனன் – கலக்குகிறது -அசித் – கலங்கிக் கிடக்கிறான் -சம்சாரி –
தெளிகிறான் -சேதனன் – தெளிவிக்கிறான் -ஆசார்யன் – தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன் –
ஆகையால் கலங்குகிற தன்னையும் -கலக்குகிற அசித்தையும் – தெளிவிக்கிற ஆசார்யனையும் -தெளிந்த ஈஸ்வரனையும் – அறிய வேணும் .

———————————————————————————————–

நூற்று அறுபத்து மூன்றாம் வார்த்தை
நஞ்சீயர் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்திலே-தெற்கு ஆழ்வார் பட்டர் -தூவிரிய பாசுர வ்யாக்யானத்தில் இவரை பெற்றி என்றும் சொல்வர்
-ஜீயர் ஸ்ரீ பாதத்திலே எழுந்து அருளி -உமக்கு செய்ய வேண்டுவது என் -என்று கேட்டு அருள -ஜீயர் – பெருமாள் சர்வ ஸ்வதானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய -பட்டரும் இத்தை -திருமாலை தந்த பெருமாளுக்கு-இவர் நம் பெருமாளுடைய
அர்ச்சகர் -அருளிச் செய்ய -அவரும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் புறப்பட்டு அருளி -சேலையைக் களைந்து அருளி ஜீயரை அனுபவித்து அருள -ஜீயரும் அனுபவித்து – நம் பிள்ளை தொடக்கமான முதலிகளைக் குறித்து -பெருமாள் எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணி அருளினார் -நானும் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவதாக ஒருப்பட்டேன் -அபேஷை உடையார் உடைய படியே அபேஷித்து கொள்ளும் கோள் என்று அருளிச் செய்ய -நம்பிள்ளையும் -அடியேனுக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய – மணக் கோலத்தே முளை தெளிப்பாரைப் போலே இப்போது தஞ்சமான ஒரு வார்த்தை உண்டோ கேட்பது -என்று பின்னையும் அருளிச் செய்த வார்த்தை – ஆத்ம விநியோகம் ஈஸ்வரன் என்று இராதே ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய -இவர் திரு உள்ளம் பிரசன்ன மாகாமையாலே பேசாதே நிற்க -உம்முடைய நினைவேது சொல்லிக் காணீர் -என்ன -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரம பதத்துக்கு எழுந்து அருளினால் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் என் நினைத்து இருக்கக் கடவர் -என்ன -அது அதிகார அநு குணமாய் அன்றோ இருப்பது -தருப்தன் ஆகில் ஆர்த்தனாய் இருக்கிறான் – ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான் -என்று அருளிச் செய்ய -பிள்ளையும் இவ்வர்த்தத்தை
அநுஷ்டான பர்யந்தமாக கண்டபடி -அம்மங்கி அம்மாள் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்தில் -அவர் திரு மாளிகையிலே பிள்ளை எழுந்து அருள -அவருடைய தேவியார் பிரசன்னையாய் இருக்க -ஸ்ரீ பாதத்தில் சேவித்துப் போந்த முதலிகள் -இதுக்கு நிதானம் என் -என்று கேட்க -அம்மாள் தேவியார் விஷயத்தில் இதுக்கு முன்பு பண்ணின ப்ராதி கூல்யம் உண்டாகில் அன்றோ -அவர் பேற்றுக்கு இவர் வெறுக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார்-அநந்தரம்
 தம்முடைய ஸ்ரீ பாதத்தை உடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாட்டுக்கு எழுந்து அருள -ஸ்ரீ வைஷ்ணவர் பிள்ளைகள் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே விழுந்து அழ இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க -பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் -இழக்கிற தேசம் என் படக் கடவது -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————

நூற்று அறுபத்து நாலாம் வார்த்தை
பட்டர் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -பிரசாதக் கிழியை எடுத்துக் கொண்டு வாரும் -என்ன -பிரசாதக் கிழியின் அருகே –
பணக் கிழியும் இருக்க -அவர் பிரசாதக் கிழியை எடுப்பது பணக் கிழியை எடுப்பதாக நிற்க -இவர் வரக் காணாமையாலே எழுந்து அருளி –
இவர் நிற்கிற நிலையைக் கண்டு -இடம் பெற்ற அளவிலே இருவரும் உம்மை நலிந்தார்கள் ஆகாதே வாரீர் -என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————————

நூற்று அறுபத் தஞ்சாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ராகத் த்வேஷம் கொண்டாடி அவர்களில் ஒருவர் பரிபவப்பட்டோம் என்று பட்டினி விட -பரிபவப் படுவாரும் தாமேயாம் -பட்டினி விடுவாரும் தாமேயாம் -என்று அருளிச் செய்தார் – அவர்கள் இத்தை கேட்டு -வெட்கி -திருந்தினார்கள் –

————————————————————————————————-

நூற்று அறுபத் தாறாம்  வார்த்தை
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராகத் த்வேஷம் கொண்டாடி வர -இவர்களைச் சேர விட்டு அருள  என்று -ஆச்சான் பிள்ளைக்கு -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் விண்ணப்பம் செய்ய – ஜகத்தில் ஈச்வரர்கள் இருவர் உண்டோ -என்று அருளிச் செய்ய -ஆகிலும் சேர விட்டு அருள வேணும் -என்ன –
ஸ்வ சரீரத்தை நியமிக்க மாட்டாத நான் -அந்ய சரீரத்தை நியமிக்க புகுகிறேனோ -என்ன -ஆகிலும் இப்படி அருளிச் செய்யலாமோ என்ன –
அத்ருஷ்டத்துக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம் -த்ருஷ்டத்துக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம் -நாம் இவர்களை சேர விடும்படி என
-என்று அருளிச் செய்ய –இருவரும் அந்யோந்யம் பீருக்களாய் தங்களில் ஏக மநாக்களாய் விட்டார்கள் –

———————————————————————————————–

நூற்று அறுபத்தேழாம் வார்த்தை
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலி யாண்டான் ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு சிஷ்ய லஷணம் இருக்கும்படி என் -என்று விண்ணப்பம் செய்ய -ஆண்டான் அருளிச் செய்த படி -ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன் -பார்யா சமனுமாய் -சரீர சமனுமாய் -தர்ம சமனுமாய் இருக்கும் –
அதாவது -சொன்னத்தை செய்கையும் -நினைத்தத்தை செய்கையும் -நினைவாய் இருக்கையும் – என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

நூற்று அறுபத்து எட்டாம் வார்த்தை-
அநந்தரம் பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டன் இட்டு ஆசார்ய லஷணம் இருக்கும்படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
ஆழ்வான் அருளிச் செய்தபடி – சிஷ்யன் விஷயத்தில் -ஆசார்யன் பர்த்ரு சமனுமாய் -சரீரி சமனுமாய் -தரமி சமனுமாய் -இருக்கக் கடவன் -அதாவது
-ஏவிக் கொள்ளுகையும் -எடுத்து இடுவிக்கையும் -அதாவது அசேதனத்தைக் கொண்டு -நினைத்தபடி விநியோகம் கொள்ளுமா போலே விநியோகம் கொள்ளுகையும் -எடுத்துக் கொள்ளுகையும் -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: