ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -145-156….

நூற்று நாற்பத்து ஐஞ்சாம்  வார்த்தை
நான் ஒரு நூலில் வைத்து சொல் என்றால் சொல்லும் நூலில் மாலைகள் ஒரு முமுஷுக்கு பாவனமுமாய் போக்யமுமாய் இருக்கும் என்று
ஆச்சான் பிள்ளை வார்த்தை –

————————————————————————————————-

நூற்று நாற்பத்து ஆறாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் –பெரிய பிள்ளையையும் -பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் –
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் -இவள் சோகார்த்தையாக –ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன
அநாதி காலம் பாப வாசனைகளாலே -ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன
கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் -உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ -அவதரிக்க வேண்டுமோ -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
-பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் -சம்பவாமி யுகே யுகே என்றும் – ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் –

———————————————————————————————–

நூற்று நாற்பத்து ஏழாம் வார்த்தை
ஞானப் பிரதன் ஆசார்யன் –
ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஞான விஷயம் -எம்பெருமான் –
ஞான பலம் -கைங்கர்யம் –
பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் –
சிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதம் அப்ப்ரசாத மாகவும் -அப்பிரசாதம் ஸுப்ரஸாதம் ஆகவும் வேணும் –

————————————————————————————————-

நூற்று நாற்பத்து எட்டாம் வார்த்தை
ஆசார்ய விஷயத்தில் -கிருதஜ்ஞதை -விஸ்வாசம் -ப்ரேமம் -விஸ்லேஷ பீருவாகை – சம்ச்லேஷ விஷயம் -மங்களா சாசனம் -கதி  சிந்தனை –
அனுபவ இச்சை -இவை இத்தனையும் உடையவன் -ஆத்ம ஜ்ஞானமும் உடையவன் ஆகிறான் –

———————————————————————————————-

நூற்று நாற்பத்து ஒன்பதாம் வார்த்தை
அர்த்த பிரவணனுக்கு பந்துவும் இல்லை -குருவும் இல்லை –
விஷய பிரவணனுக்கு லஜ்ஜையும் இல்லை பயமும் இல்லை –
ஷூத்து நலிந்தவனுக்கு விவேகமும் இல்லை -நியதியும் இல்லை –
ஞானிக்கு நித்ரையும் இல்லை சுகமும் இல்லை

———————————————————————————————-
நூற்று ஐம்பதாம் வார்த்தை

திருக்கச்சி நம்பி ஸ்ரீ பாதத்திலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆஸ்ரயித்து -அடியேனை அங்கீகரித்து அருள வேணும் -என்ன
-நம்பி பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் -நம்மை அவனுக்கு சொல்லும் என்ன -நம்பியும் பெருமாள் பிரபத்தியை அருளிச் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவரும் க்ருதார்த்தராய் ஷண காலமும் பிரியாதே சேவிக்க -இவருடைய பிரகிருதி பந்துக்கள் இது கண்டு பொறுக்க மாட்டாமல்
இவரைப் பிரித்துக் கொண்டு போய் பிராயச்சித்தம் பண்ண வேணும் என்ன -இவரும் ஆகில் அநந்த சரஸ்சில் தீர்த்தமாடி -வாரா நின்றேன் என்று போந்து
-நம்பி ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நிற்க -நீர் போகா விட்டதென்- அவர்கள் பொல்லாங்கு சொல்லாமே -என்ன –
அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம் பொறுக்க மாட்டாமல் -சோகார்த்தராய் பரம பதத்துக்கு எழுந்து அருளினார் –

—————————————————————————————————

நூற்று ஐம்பத் தோராம் வார்த்தை
அனந்தாழ்வான் எச்சானுக்கு அருளிச் செய்த வார்த்தை -இவ்வாத்மா வாகிற பெண் பிள்ளையை – ஆசார்யனாகிற பிதா -எம்பெருமானாகிற வரனுக்கு
-குரு பரம்பரை யாகிற புருஷகாரத்தை முன்னிட்டு -த்வயம் ஆகிற மந்த்ரத்தை சொல்லி -உதகம் பண்ணிக் கொடுத்தான் –

————————————————————————————————–

நூற்று ஐம்பத்திரண்டாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -அஹங்காராதிகள் நடையாடிக் கொண்டு போருகிற அடியேனுக்கு -அக்கரைப்பட வழி உண்டோ என்று கேட்க – அருளிச் செய்த வார்த்தை -போக்தாவானவன் போக்ய பதார்த்தத்தை குலம் கொண்டே ஸ்வீகரித்து வைத்து -போக காலம் வந்தவாறே -குலங்கறுத்து மணியை புஜிக்குமா போலே -ஆசார்ய வரணம் பண்ணி -சரணகதனாய் இருப்பான் ஒரு அதிகாரிக்கு -அஹங்கா ராதிகள் நடையாடிற்றாகிலும் கைவிடாதே ஸ்வீகரித்து – தீர்ந்த வடியவர் தம்மை  திருத்திப் பணி கொள்ள வல்ல -திருவாய் மொழி -3-5-11-என்கிற படியே இவனுடைய
அஹங்காராதிகள் ஆகிற சேற்றைக் கழுவிப் பொகட்டு -போக்யமான வஸ்துவை போக்தாவான எம்பெருமான் தானே புஜிக்கும் என்று நினைத்து இரீர்
என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

நூற்று ஐம்பத்து மூன்றாம் வார்த்தை
எங்கள் ஆழ்வான் -ஆசார்யன் ஆவான் அஹங்காரத்தை விட்டு -அழிச்சாட்டத்தை விட்டு –அழிச்சாட்டம் =ஸ்வ தாந்த்ர்யம் -சண்டித்தனம் -அலமாப்பு –
அந்ய சேஷத்வம் ஆகிற வருத்தம் –அலமாப்பை விட்டு -அகாரார்த்தமான அந்தர்யாமிக்கே அற்று -அர்ச்சாவதாரத்தை ஆஸ்ரயித்து -ஆனந்தியாக போருமவன்
-அல்லாதான் ஒருவனுக்கு குடிமகனாய் லோக குருவாய் இருக்க -லோகத்துக்கு அடைய குடிமகன் ஆகா நின்றான் -பணத்துக்காக அடிமைத் தொழில் புரிகின்றான்

————————————————————————————————–

நூற்று ஐம்பத்து நாலாம் வரத்தை
நாராயணனைப் பற்றி நாடு பெறலாய் இருக்க -நாரங்களைப் பற்றி நரக வாசிகளாகா நின்றார்கள் –
எம்பெருமானைப் பற்றி ஏற்றம் பெறலாய் இருக்க -ஏழைகளைப் பற்றி எளிவரவு படா நின்றார்கள் –
ஏழையர் ஆவி உண்ணும் -சேட்டை தன் மடி யகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே –
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி சீர்மை பெறலாய் இருக்க -சில்வானவரைப் பற்றி சீர் கேடராகா நின்றார்கள்–சில்வானர் -அற்பர்கள் –
ஆசார்யனைப் பற்றி அம்ருத பானம் பண்ணலாய் இருக்க அஞ்ஞ்ரை பற்றி அனர்த்தப் படா நின்றார்கள் –
மந்த்ரத்தைப் பற்றி மாசு அறுக்கலாய் இருக்க -மமதையைப் பற்றி மரியா நின்றார்கள் —மரியா நின்றார்கள் –ஸ்வரூப நாசத்தை அடையா நின்றார்கள் –
வடுக நம்பி -நியந்தாவான ஆசார்யன் சந்நிதியிலே வர்த்தித்தல்-நியமவான் ஆன சிஷ்யன் சந்நிதியிலே வர்த்தித்தல் –செய்யில் அல்லது நியதன் ஆகைக்கு
வழி இல்லை –ஆசார்ய சிஷ்ய லஷண பூர்த்தி உள்ளவர் உடன் வர்த்தித்தால் எம்பெருமானே பிரப்யமாயும் பிராபகமாயும் -தாரகமாவும் –
போஷகமாவும் -போக்யமாயும் இருப்பவன் ஆகிறான்-

—————————————————————————————————–

நூற்று ஐம்பத்து ஐந்தாம் வார்த்தை
தான் வைஷ்ணவனாய் அற்றால் தனக்கு தன் ஆசார்யானில் குறைந்து இருப்பான் ஒரு சிஷ்யன் இல்லை -உத்தேச்ய பிரதிபத்தி துல்யமாகையாலே —
ஆகிற படி என் என்னில் -என்னுடைய அஜ்ஞானத்தையும் -அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே -என்னை விஷயீகரித்து -அத்தலைக்கு
ஆக்கினவன் அன்றோ -என்று சிஷ்யன் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
ஆசார்யனும் -என்னுடைய அஞ்ஞானத்தையும் அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே- விஷய பிரவணன் மரப் பாவை காணிலும் ஆலிங்கனம் பண்ணுமா போலே -என் பக்கலிலே உட்பட பர தந்த்ரனாய்க் கொண்டு போருகிறான் அன்றோ -பகவத் விஷயத்தில் தனக்கு உண்டான
ஆதர அதிசயம் இருந்தபடி என் -என்று உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

—————————————————————————————————-

நூற்று ஐம்பத்து ஆறாம் வார்த்தை
ஆசார்யன் அருளிச் செய்யும் வார்த்தையை ஆப்தம் என்று ஆதரித்தாருக்கு அந்தக்கரணம் விதேயமாகும் -அந்தக்கரணம் விதேயமான வாறே
அந்தர்யாமி பிரசன்னனாம் -அந்தர்யாமி பிரசன்னன் ஆனவாறே – அந்த பிரகாசமும் அந்தஸ் ஸு கமும் உண்டாம் –
இவை இரண்டும் உண்டானவாறே அந்தர் தோஷமும் அந்தர் துக்கமும் கழியும் – இவை கழிகிற அளவன்றிக்கே -அந்தமில்லாத ஆனந்தம் உண்டாம் –

—————————————————————————————————
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .

பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: