ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -109-124….

நூற்று ஒன்பதாம் வார்த்தை –

உபாயத்தை நிலை இட்டவர்கள் –
பிராட்டியும்
த்ரௌபதியும்
திருக் கண்ண மங்கை ஆண்டானும் –

உபேயத்தை நிலை இட்டவர்கள்
இளைய பெருமாளும் –
பெரிய உடையாரும்
சிந்தயந்தியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்

சீதோ பவ என்னும் சக்தியோடே தன்னுடைய தனி இருப்பை மாற்ற வல்லவள் –
பெருமாளுடைய ஸ்வரூபத்துக்கு கொற்றையாம் என்று துரும்பு நறுக்காது இருந்த படியாலும் –

லஜ்ஜை இல்லாத கோஷ்டியில் லஜ்ஜை வுடையவள்
அவன் கையிலே தன்  லஜ்ஜையை பொகட்டு இருந்த படியாலும்-

தம் பர பரப்பை மாற்றி வகுத்தவன் வாசலிலே ஒதுங்கின படியாலும் –
உபாயத்துக்கு ஸீமா பூமி இவர்கள் –

நில் என்ன -குருஷ்வமாம் அநு சரம் –என்கிறபடியாலும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற படியாலும் –
க்ரி யதா மிதி மாம் -வத என்கிற படியாலும் –
லஷ்மனே ந கதாம் கதிம் -என்னும் படியான பிராப்தியாலும் –
சஹஜ கைங்கர்ய விதய -என்கிற அர்த்தம் கைப்பட்டது அவர்க்கே யாகையாலும் –

பெரிய வுடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் -வகுத்த விஷயத்தை பிரிந்து தம் தாமுடைய
உடம்பைப் பேணாமையாலும் –

சிந்தயந்தி வகுத்த விஷயத்தை கண்ட மாத்ரத்திலே விரோதியான உடம்பை விட்டு நிற்கையாலும்
உபேய அனுபவத்துக்கு ஸீமா பூமி இவர்கள் –

ஸ்ரீவசன பூஷணம் சூரணை -80 முதல் 84 இவை உண்டே –

——————————————————-

நூற்று பத்தாம் வார்த்தை

வங்கி புரத்து ஆச்சி -கிடாம்பி ஆச்சானுக்கு –
பகவத் சேஷமாய் –
அநாதி காலம் எம்பெருமானோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்ட ஜந்துவுக்கு –
எம்பெருமான் திருவடிகளில் -பிணைத்துப் பிழைப்பிக்க பிராட்டி உளள் என்று இரும் –
என்று அருளிச் செய்தார் –

———————————————————–

நூற்று பதினோராம் வார்த்தை

விட்டுப் பற்றித் தேறி இருக்கை அதிகாரி க்ருத்யம்
விடுவித்து பற்றுவித்து விலக்கி அடி யறுக்கை உபாய க்ருத்யம்
என்று வடக்குத் திரு வீதி பிள்ளை

————————————————————

நூற்று பன்னிரண்டாம் வார்த்தை

உபாயத்தில் அத்யவசாயம் ஆவது –
சங்கா த்ரய நிவ்ருத்தி பூர்வகமாக அத்யவசிக்கை –

சங்க த்ரயம் ஆவது –
ஸ்வ க்ருத தோஷ தர்சனம் –
உத்தேச்ய துர்லபத்வம் –
உபாய பல்குத்வம் –

இம் மூன்று சங்கையும் –
1-சர்வஞ்ஞத்வம் –
2-சர்வ சக்தித்வம் –
3-பரம காருணி கத்வம் –
4-பரம ஔ தார்யத்வம் –
5-ஆஸ்ரித வத்சலத்வம் –
6-அசரண்ய சரணத்வம் –
7-அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் –
8-நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் –
9-ஸ்ரீயபதித்வம் –
10-நாராயணத்வம் –
இப் பத்து குணங்களையும் அனுசந்திக்க நிவ்ருத்தமாகும் –
எங்கனே என்னில் –

1-ஆஸ்ரித வாத்சல்யத்தை அனுசந்திக்க –
ஸ்வ க்ருத தோஷம் தர்சனத்தாலே வருகிற சங்கை கழியும் –

2-சர்வஞ்ஞத்வ -சர்வ சக்தித்வ -பரம காருணிகத்வ -பரம ஔ தார்யத்வ -ஆகிற நாலு குணங்களையும் -அனுசந்திக்க –
உத்தேச்ய துர்லபத்தாலே வருகிற சங்கை கழியும் –

3-அசரண்ய சரண்யத்வம் -அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் -ஆகிய இவை இரண்டையும் அனுசந்திக்க
உபாய பல்குவத்தால் வருகிற சங்கை கழியும் –

மேல் மூன்று குணங்களும் மூன்றுக்கும் பொது –
எங்கனே என்னில் –
ஸ்ரீ ய பதித்வம் அனுசந்திக்க -தோஷம் கண்டு அஞ்ச வேண்டா –

நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் அனுசந்திக்க -உத்தேச்ய துர்லபம் கண்டு அஞ்ச வேண்டா –

நாரயணத்வத்தை அனுசந்திக்க உபாய பல்குத்வம் கண்டு அஞ்ச வேண்டா –

இக்குணங்கள் மாம் -என்கிற பதத்தால் அனுசந்தேயங்கள் –
எங்கனே என்னில் –
1-உன்னில் காட்டில் உன் கார்யம் அறிவேனுமாய் –
2-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு ஷமனுமாய் –
3-உன்னிலும் உன் கார்யத்துக்கு நேர்ந்து இருப்பேனுமாய் –
4-உன் கார்யம் செய்யும் இடத்தில் என்றும் செய்வேனுமாய் –
5-உன் குற்றம் காணாது இருப்பேனுமாய் –
6-உன் குற்றம் போக்யமாய் இருப்பேனுமாய் –
7-உனக்கு பற்று இல்லாத அன்று பற்றாய் இருப்பேனுமாய் –
8-உன் தரம் பாராது இருப்பேனுமாய் –
9-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு பிராப்தனுமாய் –
10-உனக்கும் எனக்கும் தாரகையான சர்வேஸ்வரிக்காகவே  உன் கார்யம் செய்வேனுமாய் –
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே -இவள் குற்றம் காட்டிலும் விட ஒண்ணாத குடல் துடக்கையும்
உடையேனுமாய் இருக்கிற என்னை என்றபடி –

————————————————————–

நூற்று பதிமூன்றாம் வார்த்தை

த்யாக விசிஷ்டம் ஸ்வீகாரம்
ஸ்வீகார விசிஷ்டம் அதிகாரம்
குண விசிஷ்டம் உபாயம்
லஷ்மீ விசிஷ்டம் உபேயம்

——————————————————–

நூற்று பதினான்காம் வார்த்தை –

நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசர் –
அர்ஜுனன் பிரச்னம் பண்ண –
சர்வஞஞனுமாய் – சர்வ சக்தியுமாய் இருக்கிறவன்
பண்டு போல் சொல்ல மாட்டேன் -என்றது என் -என்று
கூரத் ஆழ்வானைக் கேட்க –

திரௌபதி குழல் முடித்த பின்பு பண்டு போலே அவன் வாய் புறப்படுமோ -என்று
திரு உள்ளக் கருத்து -என்று அருளிச் செய்தார் –

——————————————————

நூற்று பதினைந்தாம் வார்த்தை

பிள்ளை உறங்கா வல்லி தாசர் வார்த்தை
நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம் –
நம் பக்கல் தம் பேற்றுக்கு -நம -என்னாதவர்களை
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -திருவாய் மொழி 3-9-9- என்னும்படியாய்
இருப்பதொரு ஔதார்ய விசேஷம் –

நார வஸ்துவுக்கு நைரந்தர்ய வேஷம் —
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
பேற்றுக்கு நிர்பரனாய் போருகையும் –
தத் பிரதிபந்தகமான பாபத்தில் ஆர்த்தனாய்ப் போருகையும் –

————————————————————–

நூற்று பதினாறாம் வார்த்தை

எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை
ஸ்வ ஸ்வரூப வைசதய தசையாவது –
பர ஸ்வரூப விஷயத்தில் -ஸ்வீகார -த்யாக பிரகார –
பிரதிபத்தி நிவ்ருத்தியில் வ்யவச்தனாய்ப் போருகை –

விட்டுப் பற்ற என்று அருளிச் செய்வர் ஆழ்வான் –

பற்றி விட -என்று அருளிச் செய்வர் முதலி யாண்டான் –

பிச்சுத் தெளிந்து கண் விழிக்கை என்று ஆண்டான் –

—————————————————————

நூற்று பதினேழாம் வார்த்தை

எம்பார் வார்த்தை –
ஸ்வீக்ருத உபாய பூதனாகை யாவது -ஸ்வீக்ருத பூதனாகை –
அதாவது –
ஸ்வ கத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து -பரகத ஸ்வீகாரத்துக்கு விஷயமாய் விடுகை –
அதாவது
ஸ்வார்த்த பிரவ்ருத்தியும் -ஸ்வ பிரவ்ருத்தியும் விட்டு –
பரார்த்த பிரவ்ருத்தியிலும் – பர பிரவ்ருத்தியிலும் அந்வயிக்கை –

உனக்கு என்று நிவ்ருதிக்கையை விட்டு –
எனக்கு  என்ன நான் பிரவ்ருதிக்க என்று உள்ளே புகுரு -என்று
ஈஸ்வரன் வாக்கியம் -சரம ஸ்லோகம் அருளியது –

———————————————————————————–

நூற்று பதினெட்டாம் வார்த்தை –

நடதூர் அம்மாள் – திரு வெள்ளறை -பிள்ளை எங்கள் ஆழ்வார் -ஸ்ரீ பாதத்திலே
சரம ஸ்லோகார்த்தம் கேளா நிற்கச் செய்தே –
பிள்ளை -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று அருளிச் செய்ய

அம்மாள் -இது ஒரு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் இருந்த படி என் -என்ன –

பிள்ளையும் –
நீர் இப்படி சொல்லுவான் என் –
அதிகாரிக்கு சேர்ந்தத்தை விடச் சொல்லில் அன்றோ நீர் இப்படி சொல்ல வேண்டுவது –
அதிகாரிக்கு சேராததை யன்றோ விடச் சொல்லிற்று –
ஆகையால் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் அன்று காணும் இது –
அதிகாரிக்கு ஸ்வரூப ஹானி யாகையாலே காண் இத்தை விடச் சொல்லிற்று –
என்று அருளிச் செய்தார் –

———————————————————–

நூற்று பத்தொன்பதாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை வார்த்தை
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -விடுகை உபாயமோ பற்றுகை உபாயமோ -என்று கேட்க
விடுகையும் உபாயம் அன்று –
பற்றுகையும் உபாயம் அன்று –
விடுவித்து பற்றுவிக்கிறவனே உபாயம் -என்று அருளிச் செய்தார் –

————————————————————–

நூற்று இருபதாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யமோ
பிராப்ய அநு ரூபமான ஸ்வரூபமோ -என்று கேட்க

முமுஷு தசையில் -ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யம் –
முக்த தசையில் -பிராப்ய அநு ரூபமான ஸ்வரூபம் என்று
திருநகரிப் பிள்ளை அருளிச் செய்தார் –

——————————————————–

நூற்று இருபத்தோராம் வார்த்தை

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
சம்சாரத்தினுடைய பொல்லாங்கையும் –
மந்த்ரங்களினுடைய பன்மையும் கண்டு
நம் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய –

ஆகையால் அன்றோ தானே உபாயமாக வேண்டுவது என்று அருளிச் செய்தார் –

————————————————————–

நூற்று இருபத்திரண்டாம் வார்த்தை

அப்பிள்ளைப் பிள்ளைக்கு பட்டர் –
பெரிய பெருமாள் கண் வளருகிறபடி புத்தி பண்ணினீரே –
என்று அருளிச் செய்த வார்த்தை –

வைஷ்ணவன் கர்மங்களினுடைய கனத்தைப் பார்த்து பயப்பட –
மடித்த திருக்கையில் திரு விரல்கள் –
உன்னை ரஷிக்கைக்கு கவித்த முடி அன்றோ -என்று தொட்டுக் காட்டுகின்றன –

திருவடிகளிலே நேரே பொகட்ட திருக்கை –
பிரஜையினுடைய நாவிலே முலைக் கண்களை நெருடிக் கொடுக்கும் மாதாவைப் போலே
திரு வடிகள் புகலிடம் என்று காட்டுகிறது -என்று அருளிச் செய்தார் –

———————————————————-

நூற்று இருபத்து மூன்றாம் வார்த்தை –

எம்பெருமான் உபாயமாம் இடத்தில் –
விஷய சாபேஷனுமாய்
வ்யாபார நிரபேஷனுமாய்
இருக்கும் -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் –

சரணம் அடையும் பொழுது புருஷனை எதிர் பார்ப்பன் –
ஆனால் அவன் முயற்சியை எதிர்பாராதவன் –

ஸ்ரீ வசன பூஷணம் சூரணை -268-உபாயம் ஸ்வீகார காலத்தில் புருஷ சாபேஷமுமாய் —
கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் –

————————————————————

நூற்று இருபத்து நாலாம் வார்த்தை

விக்கிரமச் சோழன் திரு வீதியிலே திருவரங்க செல்வர் எழுந்து அருளா நின்றால் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் நாள் தோறும் ஆயுதம் எடாமல் சேவிப்பர் –

அருளாள பெருமாள் எம்பெருமானார் –
பிள்ளாய் -உம்முடைய ஆயுதம் என்று விநியோகப் படுவது -என்று கேட்க –

உம்முடைய அஞ்சலி பவித்ரம் விநியோகப் படும் அன்று –
அடியேனுடைய ஆயுதம் விநியோகப்படும் -என்றார் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading