ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யான -அவதாரிகை –

ஸ்ரீ ய பதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாய்-
சர்வ ரஷகனாய் -இருக்கிற சர்வேஸ்வரனை ரஷ்யமாக நினைத்து திரு அவதார
விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார் திருப் பல்லாண்டிலே-

அந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை –பல்லாண்டு பாடுதும் -6- என்றும்
இராக்கதர் வாழ் இலங்கை பாழா ளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் – 3- என்றும்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும் ஸ்ரீ ராமவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்

மாயப் பொரு படை வாணனை –7- என்றும் ஐந்தலைய – 10 – என்றும் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரதுக்கு பிரசுரமாக
மங்களாசாசனம் பண்ணுகையாலும் –
இவ் வவதாரத்துக்கு ஹேதுவாக -படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்ட – 9-அருளின ஸ்ரீ பெரியபெருமாள்
ஆல  மா மரத்தின் இலை  மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும்  உண்டான் அரங்கத்து அரவின் அணையான் -என்றும் –
வையம் உண்டு ஆல் இலை மேவு மாயன் மணி நீண் முடிப்பை கொள் நகத்தணையான் பெரிய திரு மொழி – 5-4-2- என்றும்
ஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகையில் புகுந்தும்
ஸ்ரீ வட பெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி -இரண்டாம் திருவந்தாதி – 46-என்று
ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழுந்து அருளி –
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே உரக மெல்லணை யானாய்க் -பெரியாழ்வார் திருமொழி -4-4-4–  
கண் வளர்ந்து அருளுகையாலும் –
அணி கோட்டியூர் கோன் அபிமான துங்க செல்வனைப் போலே -திருப் பல்லாண்டு -11- இத்யாதிப்படியே இவ் வாழ்வாருக்கு
மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியோடே ஸ்ரீ திருக் கோட்டியூர் பிரஸ்துதம் ஆகையாலும் –
திருக்  கோட்டியூரானே -பெரிய திருமொழி -9-10-1-என்றும் –
கன்று கொன்று விளங்கனி எறிந்து -பெரிய திருமொழி -9-10-7-இது முதலாக பல இடங்களிலும் –
அவனே இவன் -என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும் –

செந்நாள்  தோற்றிச் சிலை குனித்த ஸ்ரீ திரு மதுரையில் -திருப்பல்லாண்டு – காட்டில் -ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யமாகையாலும் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து  வளரச் செய்தேயும் -திருப்பாவை -25-
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் திருமொழி -4-3-2- என்று
ஈச்வரத்வம் நடமாடுகையாலும் -குண்டலிதம் -க்வா சித்கம் –

மற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் -தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும் –
பந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களும் ஆகையாலும் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபாராந்தமாய் -பந்துக்களும் சாதுக்களான ஆயராய் –
முளைப்பது எல்லாம் தீப்பூண்டுகள் ஆகையாலே
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாய் நின்ற இடத்தில் -அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன
சமஸ்த வ்யாபாரமாய் போருகையாலே -மங்களாசாசனம் மிகவும் வேண்டுவது
அர்ச்சாவதாரத்திலே ஆகையாலும் -சென்னி யோங்கு -5 -4 -அளவும் இவர்க்கு அர்ச்சாவதார
பர்யந்தம்மாக மங்களாசாசனம் நடக்கும் இறே

முதல்பாட்டு –
அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே -அர்ச்சாவதார பர்யந்தமாக
மங்களாசாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –

ஸ்வா பதேசம் –
வண்ணம் இத்யாதி –
வண்ண நன் மணியும் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-இத்யாதிப்படியே –
நாநா ரத்னங்களாலே சமைத்து -அழகும் நிறமும் -உடைத்தாகையாலே -தர்சநீயங்களான மாடங்களால்
சூழப் பட்ட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் -நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான –
தேவகி புத்திர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையாலே -கண்ணன் -என்கிறார்

கேசவன் நம்பி –
அவனுடைய சர்வ காரணத்வத்தையும் -விரோதி நிரசனத்தையும் -தாம்
ஏறிட்டுக் கொள்கையாலே -அவன் போக்யதைக்கு மங்களாசாசனம் பண்ணி -பிரசஸ்த கேசன் –
கல்யாண குண பரிபூர்ணன் -என்கிறார் –

பிறந்தினில் –
இன் இல் பிறந்து -ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பொல்லாங்கு இல்லாத படியாலே
திருவாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்து என்கிறார் –
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே –
ஆகையாலே சிறைக் கூடத்திலே வ்யாவ்ருத்தி ஸ்ரீ திருவாய்ப்பாடிக்கு உண்டு என்கிறார் –

எண்ணெய் சுண்ணம் இத்யாதி –
எள்ளில் நெய்யையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவி  என்னுதல் –
ஒருத்தருக்கு பிரதியாக ஒருத்தர் தூவி என்னுதல்

கண்ணன் முற்றம்
ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த போதே க்ருக  நிர்வாஹன்  பிள்ளையாக நந்தகோபன் நினைக்கையாலே
கண்ணன் முற்றம்  என்னுதல் –
இடமுடைதான தர்சநீயமான முற்றம் என்னுதல்

கலந்து அளறு ஆயிற்றே –
இவை தம்மிலே சேர்ந்து சேறாயிற்று -என்கிறார் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: