திருவரங்க சோலை –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை -திரு மாலை -14
வண்டு -மயில் -மேகம் குயில் பதங்கள் மா முனியையும் -அரங்கனையும்
குறிப்பனவாக அமைந்து உள்ளன –
வண்டினம் முரலும் சோலை-
1-நம் ஆழ்வார் எம்பெருமானை -வண்டாக -தூயிவம் புள்ளுடைத் தெய்வ வண்டு -என்று அருளுகிறார் –
2-மலர்கள் வண்டுகளின் வரவை எதிர்பார்த்து வாசனையை தினம் தோறும் வீசி நிற்கும்
அது போலே ஆழ்வாரும் ஆர்வுற்று இருக்க -அவரினும் முன்னம் பாரித்து தான் அவரை முற்றப் பருகினான் –
3-ஆறு கால்கள் கொண்ட வண்டு -ஷட் பதம் -பகவான் இடத்தில் பக -சப்தம் ஆறு கல்யாண குணங்களைக் குறிக்கும்
ஞானம் -பலம் -ஐஸ்வர்யம் -வீர்யம் -சக்தி -தேஜஸ்
4- லஷ்மீ கல்பல தோத்துங்க ஸ்தனச்தப கசஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே — ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் 1-10-
திருமகளாம் கற்பகக் கொடியின் வாராளும் இளம் கொங்கையாம் பூம் கொத்தில்
சுழன்று வரும் அணி அரங்கன் என்னும் மணி வண்டு அடியேன் உள்ளக் கமலத்து
அமர்ந்து களித்திடுக
மா முனிகள் -வண்டு –
வண்டுகளை வட மொழியில் -த்விரேப -அதாவது இரண்டு ர எழுத்துக்களை தன பெயரில்
கொண்டுள்ளது -ப்ரமர -என்பது -இது போல் வர வர முனி என்ற பெயரிலும் இரண்டு ரே பம் உள்ளது –
பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் வர வர முனி சதகம் –
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்
ரம்யோ பயந்த்ருயமிநம் சரணம் ப்ரபத்யே — 1- எம்பெருமானார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் –
மஹ தாஹ்வய பாத பத்மயோ
மஹது த்தம் சித யோர் மது வரதம் — 43- -பேயாழ்வார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் சடா ராதி ஸ்ரீ மத் வத ந சரஸீ ஜாதமிஹரே
ததீய ஸ்ரீ பாதாம்புஜ மதுகர தஸ்ய வசஸாம் – 53- நம் ஆழ்வார் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு என்றும் –
தமநுதி நம் யதீந்த்ர பத பங்கஜப் ருங்க வரம்
வர முனி மாஸ்ரயாஸய விஹாய தத் அந்ய ருசிம் -85 -எம்பெருமானார் திருவடித் தாமரைகளில்
படிந்த வண்டாகிய மா முனிகளை -நெஞ்சே ஆஸ்ரயி -என்று அருளிச் செய்து இருப்பது
நோக்கத் தக்கது
ஆச்சார்ய ஹிருதயம் -சூரணை -152-
என் பெறுதி என்ன ப்ரமியாதி உள்ளத்து ஊறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல்வாய் வகுளத்தின் ஸாரம் கிரஹித்து –
வண்டுகள் வகுளம் முதலிய சாரமாம் தேனைப் பருகுதல் இயல்பே –
மா முனிகளும் வகுளாபரணர் சொல் மாலைகள் சாரம் கிரஹித்து -திருவாய் மொழி நூற்றந்தாதி -அருளி –
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்று தாமே அருளி செய்துள்ளாரே -மயிலினம் ஆலும் சோலை –
ப்ரலய சமய ஸூ ப்தம் ஸ்வம் சரீரை கதேசம்
வரத சித சிதாக்யம் ச்வேச்சயா விச்த் ரு ணா ந
கசிதமிவ கலாபம் சித்ர மாதத்ய தூந்வன்
அநு சிகிநி ஸி கீவ க்ரீடசி ஸ்ரீ ஸ மஷம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் – 2-44-
பேரருளா -தோகை விரிக்கின்ற பொறியார் மஞ்சை பேடை மயில் முன் -அணி மா நடம் பயின்று
ஆடுவது போலே -ஊழி காலத்து உறக்கம் கொண்டவை போல் நின் திரு உடம்பில் ஒரு கூறாய்
ஒன்றி நின்ற -அனைத்தையும் மழுங்காத ஞானத்தினால் -பல்வகை பெரு விறல் உலகமாய்ப் பரப்பி
திருமடந்தை முன்பே நீ விளையாடுதீ –
மயில் தன் உடலில் அடங்கிய கலாபத்தை விரிப்பது போன்று –மா முனிகளும் தமது திரு உள்ளத்தில்
கிடந்த கலைகளை வியாக்யானம் அருளும் பொழுது விரித்து சிறந்தனர் –
மயில்கள் ஆலித்தல் அழைத்தல் போன்று மா முனிகளும் முகில் வண்ணனைக் கண்ணாரக் கண்டு
கொண்டு ஆட்டமேவி அலந்து அழைத்து அயர்வெய்திய மெய்யடியார் யாவார் –
கொண்டல் மீதணவும் சோலை –
சிஞ்சேதி மஞ்ச ஜனம் இந்தி ரயா தடித்வான்
பூஷா மணித் யுதிபி ரிந்த்ரத நுர்த தா ந
ஸ்ரீ ரெங்க தாமனி தயாரதச நிர்பரத்வாத்
அத்ரவ் சயாலுரிவ ஸீ தல காள மேக –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – 1-82-
பூ மன்னு மாது என்னும் மின்னில் பொலிவதாய் –
இழை பலவற்றில் பதித்த பன் மணிகளின் ஒளி யாகிற ககன வில் ஓன்று ஏந்தியதாய் –
நல்லருள் என்னும் நீர் நிரம்ப பெற்றமையால் –
திருவரங்க பெரு நகருள் வரை மேல் –
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணையை மேவி –
பள்ளி கொள்ளுவதான குளிர்ந்து உறைகின்ற
கார்முகில் அடியேனை யும் நனைத்து அருளுக –
இதனை அடி யொற்றி திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
காவிரிவாய்ப் பாம்பணை மேல் கரு முகில் போல் கண் வளரும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் யரங்கர் பொன்னடியே தஞ்சமென பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்ற இருவரினும் சீரியரே -திருவரங்க கலம்பகம் – 100-
குயிலினம் கூவும் சோலை –
கயல் துளு காவிரி சூழ் அரங்கனை குயில் என்றது நிற ஒற்றுமை ஒன்றினால் அன்று –
குயிலுக்கு வட மொழியில் -வநபிரிய -என்று பெயர் உண்டு –
சோலையில் விருப்புடையது -என்று இதற்குப் பொருள் –
அரங்கனும் வனப் பிரியனே -ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் இருப்பதால் –
குயில் மா மரம் ஏறி மிழற்றும் இயல்பு உடைத்தாதலின் -மா -வின் இடத்தில் இதற்கு பெரிய
விருப்பு உணரப்படும்-அரங்கனோ எனில் -அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும்
நிற்கும் அம்மான் -என்றபடியே -மா -திரு மா மகள் இடம் பேரன்பு உடையவன்
குயில் பஞ்சம ஸ்வரத்தில் இனிமையாக பாட வல்லது
பாரத பஞ்சமோ வேத-என்று மகா பாரதம் புகழ் பெற்றது போலே
ஐந்தாம் மறை என்னும்படியான ஸ்ரீ ஸூத்திகளை அருளிச் செய்த மா முனிகள் குயிலினை ஒப்பார் –
மேலும் -ஸ்வை ராலாபை ஸூ லபயசி தத் பஞ்சமோபாய தத்தவம் -வரவர முனி சதகம் – 11
எறும்பி அப்பா அருளியது போல் -பஞ்சமோபாயத்தை உணர்த்தி அருளியவர் –
குயில் பரப்ருதம் -மா முனிகளும் பராபிமானத்தில் -எம்பெருமானார் அபிமானத்தில் ஒதுங்கியவர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply