ஈடு அனுபவம் -சில துளிகள்

பீடுடை நான்முகனைப் படைத்தானுக்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு – 6- 6-4 –
சதுர்த்த புவனங்களையும் படைக்க சிருஷ்டிக்க வல்ல சதுர முகன் -பீடு இத்தால் –
பகவத் அபிப்ராயத்தாலே பாண்டவர்களை நாடுடை மன்னவர் -என்கிறார் காணும் –

——————————————————————
தீர்ப்பாரை யாம் இனி –
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் -இந் நோய்க்கும் ஈதே மருந்து –
இவள் நோய்க்கும் பரிகாரம் அன்றோ –
அதைச் சொல்ல மற்ற ஒன்றை சொல்லுகிறது ஏன் -என்ன
ஆகில் -சம்பார் கைக்குப்  போக வேணுமோ –
வைக்கோல் கொண்டே கட்டி வைப்பது போலே –
அவன் திருவடியே இதற்கும் மருந்து –

—————————————————————————————————–
மணி மாமைக் குறைவில்லா மலர் மாதார் உறை மார்பன்
அணி மானத் தட வரைத் தோள்  அடல் ஆழித் தடக் கையன்
பணி  மானம் பிழையாமே அடியேனைப் பணி  கொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறைவிலமே  – 4- 8- -2 –
பணி =கைங்கர்யம்
மானம்  =அளவு
அதில் ஓர் அளவும் குறையாமே
ஐ திஹ்யம் -கிடாம்பி ஆச்சான் பாகவதர்களுக்கு நீர் பரிமாறும் பொழுது
எம்பருமானார் -நேரே அன்றோ  ஊடோ  பரிமாறுவது -என்று அருள –
ஆச்சான் -பணி  மானம் பிழையாமே அடியேனைப் பணி  கொண்ட -என்றாராம் .

————————————————————————————————————————–

மதுவார் தண் அம் துழாயான
முது வேத முதல்வனுக்கு
எதுவே என் பணி  என்னாது
அதுவே ஆட் செய்யும் ஈதே – – 1-6 2- – –
புரிவதுவும் புகை பூவே என்றது கீழ்
இதில் மதுவார் தண் அம் துழாயான -என்று தொடங்குகிறது –
இது சேரும்படி எங்கனே என்ன –
பூவாகில் மதுவோடு கூடியது அல்லாது இராமையாலே -சேரும் -என்று சொல்லுவர் தமிழர் –
வதுவார் தண் அம் துழாயான -என்ற பாடமான போது -போரச் சேரும்
நாறு நாற்றத்தை உடைய துழாய் என்றுமாம் -இது தமிழர் போரச் சேரும்-
இது போல் சொன்னால் விரோதமிது -பதிகத்திலும் பல மாறுபட்ட
பாட பேதங்களும் தமிழர்கள் பற்றிய குறிப்புக்களும் உண்டு
———————————————————————————————————————
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து – -4 -6 9- –
வேதம் வல்லார்கள் யார் –
சர்வேஸ்வரன் ப்ராப்யமும் ப்ராபகமும் என்ற வேத தாத்பர்யம் கைக் கொண்டவர்களைக் கொண்டு –
———————————————————————————————————–
திருமால் இரும் சோலை மலை என்றேன் -என்ன -10-8-திருவாய் மொழி
ஆழ்வார் எம்பெருமான் சம்வாதம்
இன்று இப்படி சிரசா வஹிக்கிர தேவரீர் -முன்பு அநாதி காலம் இதை கைவிட்டு
இருப்பான் ஏன் –
இனி ரஷகன் அவனுக்கு  நெடுமால் -ரஷ்ய வர்க்கத்தை விட்டு இருந்த இதற்க்கு
சொல்லல் ஆவது ஒன்றும் இல்லையே –பிற்பாடான்  ஆனதுக்கு லஜ்ஜிக்கும்
அதுக்கு மேற்பட -ஆகையாலே சொல்லலாவது மாற்றமும் ஒன்றும் காணாமையாலே
கவிழ்ந்து நின்று காலாலே தரையை கீரினான் –
இதொரு நிர்ஹெதுக விஷயீகாரம் இருக்கும்படியே என்று அதில் ஆயங்கால்
பட்டு ஹ்ருஷ்டராயக் களிக்கிறார் –
——————————————————————————————————-

திருவாய் மொழி -2-3-ஊனில் வாழ்  உயிரே -பதிகம்
முதல் பாட்டிலே -உள்ளத்தை கொண்டாடினார் -நல்லை போ உன்னைப் பெற்று
இரண்டாம் பாட்டிலே -அதையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடினார் -என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று
மூன்றாம் பாட்டில் -தன நெஞ்சில் பட்டதொரு உபகாரத்தை சொன்னார் – அடிமைக் கண்
அன்பு செய்வித்து -அறியா மா மாயத்து அடியேனை வித்தையால் -என்று
நான்காம் பாட்டில் -அதற்க்கு பிரத்யு உபகாரமாக ஆத்மா சமர்ப்பணம் பண்ணினார்
எனதாவி தந்து ஒழிந்தேன் –எனதாவியார் யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே –
ஐந்தாம் பாட்டில் -எனக்கு பிரதம சுக்ருதமும்  நீ யானபின்பு -உன் திருவடிகளைக் கிட்டினேன்
என்கிறார் –தனியேன் வாழ் முதலே –உன பாதம் சேர்ந்தேனே
ஆறாம் பாட்டில் -இன்றோ கிட்டிற்று -தேவரீர் எனக்கு விசேஷ கடாஷம் பண்ணின அன்றே
பெற்றேனே என்றார் -அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்று
ஏழாம்  பாட்டில் -அவனுடைய போக்யத்தை அனுசந்தித்து பிரியில் தரியேன் -என்றார்
கன்னலே அமுதே கார்முகிலே -நின்னலால் இலேன் காண்
எட்டாம் பாட்டில் -இப்படி நிரதிசய போக்யனானவனை எளியதோர் விரகாலே லபிக்கப்
பெற்றேநேஎன்கிறார் -சில நாளில் எய்தினேன்
ஒன்பதாம் பாட்டிலே-என்னுடைய சகல கிலேசங்களும் போம்படி அனுபவித்து
களித்தேன் என்கிறார் -செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப்
பருகிக் களித்தேனே -என்கிறார்
பத்தாம் பாட்டிலே -இப்படி அவரை அனுபவித்து கழிப்பார் திரளிலே போய் புகப் பெறுவது
எப்போதோ -என்கிறார் – ஒளிக் கொண்ட சோதி மயமாய் உடன் கூடுவது என்று கொலோ —
அடியார்கள் குழாம் களையே -என்றார்
நிகமத்தில் -இத் திருவாய்மொழியை சபிப்ப்ராயமாக அப்யசித்து -நாலு  நாலும்
நால்வர் இருவர் உள்ளார் கூடி இருந்து அனுபவிக்கப் பாரும் கோள் -என்கிறார் –
அடியீருடன்  கூடி நின்று ஆடுமினே –

இது போல் பல திருவாய் மொழிக்கும் சுருக்கமாக தொகுத்து அருளி இருக்கிறார் .

——————————————————————————————————————-

பத்துடை அடியார்க்கு எளியவன்
பரத்வனை முதலில்  பாடி -அனைத்தையும் விட்டு அவனைப் பற்ற சொல்லி அருளினார்
முடவனான நாம் யானை மேல் ஏறப் போமோ
எளியவனாக நம்மைப் போலே அவதரித்தான் –
நம் போல்வார் தானே என்று எண்ணி விலகி நிற்க
அந்த எளிமையே -எம்பாரே உம்மை இப்படி திகட்டும்படி அனுபவிக்க வைக்கிறதே –
என்று வித்தரானாராம் எம்பெருமானார் –
நீருக்காக தார்மிகர் அமைத்த தடாகத்தில் விழுவாரைப் போலேவும்
விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் போலவும் –
வேத விளக்கு இறே

வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு இறே

தயரதன் பெற்ற மரகத மணித் தனம் இறே

ஆயர் குலத்து  அணி விளக்கு இறே

எத்திறம் என்று ஆறு மாதம் மோகிக்க வைத்ததே –
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –

—————————————————————————————————————————–
நம்பெருமாள் நம் ஆழ்வார் நம் ஜீயர்
நம் பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்
அன்புடையோர் சாற்றும் திருநாமங்கள் தான் என்று
நன் நெஞ்சே எற்றதனைச் சொல்லு நீ இன்று –

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை
நன்குரைத்து ஈடு முப்பது ஆறாயிரம் –

————————————————————————————-
நம்பிள்ளை திருவடிகளே சரணம் .
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: