திரு மங்கை ஆழ்வார் –

திரு மங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு மணவாள மா முனிகள் அருளிய

வடிவழகு சூர்ணிகையும் தனிப்பாடல்களும் –

அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்
ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்
பரந்த விழியும் -பதிந்த நெற்றியு- நெறித்த புருவமும்
சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும்
தாழ்ந்த செவியும்- சரிந்த கழுத்தும் -அகன்ற மார்பும்
திரண்ட தோளும் -நெளித்த முதுகும் -குவிந்த இடையும்
அல்லிக் கயிறும்  -அழுந்திய சீராவும் -தூக்கிய கரும் கோவையும்
தொங்கலும் தனிமாலையும்-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்
சாற்றிய திருத் தண்டையும்-சதிரான வீரக் கழலும்
தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக் காலும்
குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணம் கொல்லையும்
வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று
வாழ்வித்தருளிய நீலக் கலிகன்றி மருவலர்தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே –
உறை கழித்த வாளை யொத்த விழி மடந்தை மாதர் மேல்

உருக வைத்த மனம் ஒழித்து   இவ் வுலகளந்த நம்பி மேல்
குறைய வைத்து மடல் எடுத்த குறையலாளி திரு மணம்
கொல்லை தன்னில்  வழி பறித்த குற்றமற்ற செங்கையான்
மறை உரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன் முனே
மடியொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து ஒன்றலார்
கறை குளித்த வேல் அணைத்து நின்ற விந்த நிலைமை என்
கண்ணை விட்டகன்றிடாது கலியன் ஆணை ஆணையே –
காதும் சொரி முத்தும்  கையும் கதிர்வேலும்
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீதி புனை தென்னாலி நாடன் திரு வழகைப் போல
என்னாணை ஒப்பார் இல்லையே
வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு வெட்டு எழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த  வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என்கண்
இதுவோ திருவரசு இதுவோ திரு மணம் கொல்லை
இதுவோ எழில் ஆழி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த விடம்
ஐயன் அருள்மாரி செய்ய அடி இணைகள் வாழியே
அந்துகிலும் சீராவும் மணி யாரையும் வாழியே
மையிலகு வேல் அணைத்த வண்மை மிகு வாழியே
மாறாமல் அஞ்சலி செய் மலர்க் கரங்கள் வாழியே
செய்ய   கலனுடன் அலங்கல் சேர் மார்பும் வாழியே
திண் புயமும் பணிலம் அன்ன திருக் கழுத்தும் வாழியே
மையல் செய்யும் முக முறுவல் மலர்க்கண்கள் வாழியே
மன்னு முடித் தொப்பாரம் வளையமுடன் வாழியே –
ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலி வைரிணே

சதுஷ் கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
பத்மா நியுக்த குமுதவல்யா ப்ரியசி கீர்ஷ்யா
ஆராதித விஷ்ணு பக்தைய பரகாலாய மங்களம்
கருணா கர காஞ்சீ ஸ ஸூகந்த புற நாதத
நிவ்ருத்த ராஜபாதாய பரகாலாய மங்களம்
சர்வச்வே விநியுக்தேசபி ராஜோஸ்ர்த்தை ஸ்லோகங்கள்
பூஜி தாச்யூத பக்தைய பரகாலாய மங்களம்
ரங்கேச ராஜ்ஜோஸ்ர்த்தைஸ் சகலார்த்தாப ஹாரிணே
தத் பக்த பூஜநாரத்தம து பரகாலாய மங்களம்
பக்தாராதன ஸூ ப்ரீதாத் ரங்க தாம்ன க்ருபாகராத்
ப்ராப்தாஷ்டாஷர மந்தராய பரகாலாய மங்களம்
ஸௌ வர்ண பாஹ்ய பிம்பேண ரங்கிணோ கோபுராதிகம்
ஷட் கைங்கர்யம் க்ருதவதே பரகாலாய மங்களம்
ரங்காதி திவ்ய தேசான் ஷட் பிரபந்தைர் மநோ ரமை
பக்த்யா ஸ்துவதே பூயாத் பரகாலாய மங்களம் –
கலந்த திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தான் வாழியே
காசினியில் குறையலூர் காவலோன் வாழியே
நலம் திகழ் யாயிரத்து ஒண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்துமாறைந்தும்நமக்குரைத்தான் வாழியே
இலங்கு எழு கூற்று இருக்கை யிருமடல் ஈந்தான் வாழியே
இம் மூன்றில் இரு நூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே
வலம் திகழ் குமதவல்லி மணவாளன் வாழியே
வாட் கலியன் பரகாலன் மங்கையர் கோன் வாழியே –
திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: