ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் ..

ஸ்ரீ ராமன் பாமாலை -ஆழ்வார்கள் உகந்த  ஸ்ரீ ராமன்

..                      முதலாயிரம்
திருப்பல்லாண்டு
– 1-    இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான் -3 –

பெரியாழ்வார் திருமொழி-
– 2-    பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை -இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலை கலங்க சரம் தொட்ட கையான் — 1-6 7- –
– 3-    குரக்கினத்தாலே குரை  கடல் தன்னை நெருக்கி அணை  கட்டி நீணீ ரிலங்கை
அரக்கர்  அவிய  அடு  கணையாலே நெருக்கிய கையான் – – 1-6 8- –

-4-  கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும்  பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கானடை அங்கண்ணன் — –2-1-8-

– 5-  வல்லாளிலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் – – 2-1 10- –
– 6-  சிலை ஓன்று  இறுத்தான்  -2 -3 -7 –
– 7-   நின்ற மராமரம் சாய்த்தான் –2 -4 -2 –
– 8-  பொற்றிகழ் சித்ரகூடப் பொருப்பினில் உற்ற வடிவிலொரு கண்ணும் கொண்ட
வக்கற்றைக் குழலன் —2 -6 -7 –
– 9-    மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லா சிலைகால் வளைத்திட்ட மின்னுமுடியன்  –2 -6 -8 –
– 10- தென்னிலங்கை மன்னன் சிரம் தோள்  துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண  நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலன்காரன் — 2- 6- 9- –
-11 –  கள்ள  வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் — – -2 -7 -5
– 12- என்  வில்வலி கண்டு போ  என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும்  தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து
முது பெண் உயிர்  உண்டான் – 3- 9- 2-
-13 – மாற்றுத் தாய் சென்று வனம் போகே  என்றிட
ஈற்றுத்  தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றமிலாத சீதை மணாளன்    – -3 -9 -4

– 14- முடி ஒன்றி மூ வுலகங்களுமாண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தான் —3- 9- 6- –
– 15- தார்கிளந்தம் பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற் கொண்டு போகி
நுடங்கிடை சூர்பணகாவை    செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தான்  — -3- 9- 8-
– 16- காரார்  கடலை அடைதிட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு
ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராமுதன் – – 3–9 -10 – –
– 17- செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து  சீதையை கொணர்ந்தது
அறிந்து அரசுகளை கட்ட அரும் தவத்தோன் இடை விளங்க
செறிந்த சிலைகொடு தவத்தை சிதைத்தான்   -3 -10 -1 – –
-18 –  எல்லியம்போது  இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க விருந்தான் – – -3- 10- 2-
– 19-   கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய்
மன்னவனும் மறாது ஒழிய குலக்குமரா காடுறையப் போ என்று
விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அன்கேகினான்   -3- 10- 3- –
-20 –  கூரணிந்த வேல்வலவன்  குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த
தோழமை கொண்டான் – – -3 -10 -4 –
– 21-  கானமருங்  கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழில் சாரல் சித்ரகூடத்து இருக்க
பரத நம்பி பணிய நின்றான் — -10 -5 –
– 22-  சித்ரகூடத்து இருப்ப  சிறு காக்கை முலை  தீண்ட அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே யிராமா  ஒ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் –3–10 -6 –
– 23-  பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -சிலை பிடித்து
எம்பிரான் ஏக பின்னே யங்கு  இலக்குமணன் பிரிய நின்றான்  – – —3 -10 -7 –
– 24-  அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியர் கோன் — -3- 10- 8- –

25- திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே
வில்லிறுத்தான் — 3- 1- 9-
– 26-  கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண்  முடியன் எதிரில்
பெருமை இராமன் — 4- 1- 1-
– 27 – நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து  பெருமை யிராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்
கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்
தன்  வேள்வியில் காண நின்றன்   -4 -1 -2
– 28- சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று
தடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான்  –4 -1 -3 –
– 29- அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ்
படுத்து குல விளக்காய் நின்ற கோன்   — -4 -2 -1
– 30- வல்லாளன் தோளும்  வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத
மூக்கும் போக்குவித்தான்  -4 -2 -2 –
– 31-  கனங்குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
கழுவேற்றுவித்த  எழில் தோள்  எம்மிராமன் – -4 -3 -7 –
– 32- எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க்கோட்டம் தவிர்ந்துகந்த அரையன் – – 4- 3- 8-
-33 –  தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் சாரதி – – 4- 7- 1-
– 34-  கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் – -4 -8 -4 –

–35 –  பெரும் வரங்கள் அவை பற்றி  பிழக்கு உடைய இராவணனை
உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தான் — 4- 8- 5-
– -36 – கீழுலகில் அசுரர்களைக் கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய
கருவழித்த அழிப்பன்   — 4- 8- 6-
– 37- கொழுப்புடைய செழும்  குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு  உடைய அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4 -8 -7
–  38- பருவரங்களவை பற்றி படையாலித்து எழுந்தானை
செருவரங்க பொறாது அழித்த திருவாளன் —4 -8 -10
– 39 – மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு  உடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் -4 -9 1-
– 40- மன்னுடைய விபீடணற்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி
மலர் கண் வைத்தான் –4-9 -2-
திருப்பாவை –
– 41- சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்  -12 –
– 42- பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்தான் -13 –
– 43-  சென்று அங்கு தென்னிலங்கை செற்றான்  -24 –
நாச்சியார் திருமொழி –
– 44- கடலை யடைத்து யரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப்
பூசலாக்கிய சேவகன்    – -2 -6 –

45- சேது பந்தம் திருத்தினான்  – -2 -7 –
-46 –  சீதை வாய் அமுதுண்டான்  – 2–10
– 47-  வில்லால் இலங்கை அழித்தான்  -3 3
– 48 – இலங்கை அழித்த  பிரான் – – 3 -4 –
– 49 –  மாதலி   தேர்  முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல்
சரிமாரி தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன்  – 3 3
-50- கொல்லை யரக்கியை  மூக்கரிந்திட்ட குமரனார்  – 10- 4-
பெருமாள் திருமொழி

– 51 – சுடர் வாளியால்  நீடு மாமரம் செற்றவன்  – 2 2
-52–முன்னிராமனாய் மாறடர்த்தான்   -2-3-
-53 – மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவன்
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தான்  – 8 -1 –
– 54 -திண்  திறலாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தான் – 8-2-
55-  கொங்குமலி  கரும் குழலாள் கௌசலை தன குல மதலை
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகன் தாசரதி  – 8 -3
56 -தயரதன்  தன் மா மதலை மைதிலி தன்  மணவாளன் ஏமரு
வெஞ்சிலை வலவன்   -8 -4-
57- பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் – 8 -5

58-சுற்றம் எல்லாம் பின் தொடர தொல்  கானம் அடைந்தவன்
அயோத்தி நகர்க்கதிபதி சிற்றவை  தன்  சொல் கொண்ட சீராமன் – 8-6-
59–வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவன்  – 8-7-
60-மலையதனால் அணை  கட்டி மதிள் இலங்கை அழித்தவன்
சிலை வலவன்  சேவகன் சீராமன்  -8 -8
61-தளைய விழு நறும் குஞ்சித் தயரதன் தன் குல மதலை
வளைய ஒரு சிலையதனால் மதிள்  இலங்கை அழித்தவன்
இளையவர் கட்கு அருளுடையான் -8-9-
62-ஏவரி வெஞ் சிலை வலவன் இராகவன்  -8 -10-
63-வன்  தாளிணை  வணங்கி வள  நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றான்
அரி இணை மேல் இருந்தானாய் நெடும் கானம் படரப் போக நின்றான் -9-1-
64-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மையாவாய களிறு ஒழிந்து
தேர் ஒழிந்து  மா ஒழிந்து வனமே மேவி நெய்வாய வேல் நெடும் கண்
நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக நடந்தான்  – 9- 2-
65-கொல் லணை மேல் வரி நெடும் கண் கௌ சலை தன் குல மதலை
குனி வில்லேந்தும் மல்லணைந்த  வரைத் தோளன் வியன் கான
மரத்தினீ ழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்ற காகுத்தன் – 9-3-
66-வேய்  போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன்
வில்லைச் செற்றான் – 9-4-
67-பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிகள் குருதி சோர விரும்பாத
கான் விரும்பி வெயில் உறைப்ப வெம்பசி நொய் கூரப் போனவன் -9-5-
68-பூ மருவி நறும் குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு  தோள் புதல்வன் வனம் சென்றான் – 9-7-
69-70–பொன் பெற்றோர் எழில் வேதப்புதல்வன் முன்னொரு நாள் மழு வாளி சிலை
வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றான் – 9-8-

71-தேனகு மாமலர்க்கூந்தல் கௌ சலையும் சுமத்ரையும் சிந்தை நோவக்
கூனுருவில் கொடும் தொழுத்தை சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு
கானகமே மிக விரும்பி வன நகரைத் துறந்தான் – 9- 10-
72 -ஏரார்ந்த கரு  நெடு மால் இராமன் -9-11-
73-அம் கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும்
விளங்கும் சோதி வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும்
உய்யக் கொண்ட வீரன் செங்கண் நெடும் கரு முகில் இராமன் – 10-1-
74-வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி வரு குருதி பொழி தர வன் கணை
ஒன்றேவி மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -10-2-
75-செவ்வரி நற் கரு நெடும் கண் சீதைக்காகி சினவிடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்
எவ்வரி  வெஞ்சிலை தடக்கை இராமன்  -10-3-
76 –தொத்தலர் பூஞ் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து
துறைக் கங்கை தன்னை பக்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்திர கூடத்து இருந்தான் – 10-4-

77-வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி
கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி சிலை வணக்கி மான் மரிய  எய்தான் -10-5-
78- தன மருவு வைதேகி பிரியலுற்று தளர் வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன  மருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைக் கொன்று இலங்கை நகர்
அரக்கர் கோமான் சினமடங்க மாருதியால் சுடுவித்தான் – – 10-6-
79-குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன்
தம்பிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன்  -10-7-
80- அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய்
தான் முன்கொன்றான் தன்  பெரும் தொல்  கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம் பவளத் திரள் வாய்த் தன்
சரிதை கேட்டான்  -10-8-
81-  செறி தவச் சம்புகன் தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர்  மீட்டு
தவத்தோன் ஈந்த நிறை மணிப்பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட திறல்  விளங்கும் இலக்குமனைப்
பிரிந்தான் –10-9-
82-அன்று சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றி அடலரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்றி
இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவிச்
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் – 10-10-
83–தில்லை திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதி யோடு அமர்ந்தான்
எல்லையில் சீர்த் தயரதன் தன்  மகன் -10-11

திருச் சந்த விருத்தம்
84–குரங்கை யாளுகந்த எந்தை -21-
85-கூனகம் புகத் தெறித்த கொற்ற வில்லை –30-
86-வேலை வேவ வில் வளைத்த வெல்  சினத்த வீரன் –31
87–குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கரங்க வெஞ்சரம் துரந்த வாதி -32
88-மின்னிறத்து எயிற்றரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோன் —-
89-வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டினான்  -39
90–வெற்பு  எடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்தான் –39
91–கொண்டை  கொண்ட கோதை  மீது   தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்ட ரங்கவோட்டி உண் மகிழ்ந்த நாதன் -49
92-வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னோர் நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் –50-
93-  சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள்
பத்தறுத்து உதிர்த்த செல்வர்  -51
94-இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் –54-
95-இலங்கை மன்னன் ஐந்தோடு ஐந்து பைந்தலை நிலத்து உகக்
கலங்கவன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரன்  -56
96-மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச்
சரந்துரந்த உம்பராளி யெம்பிரான் -73
97-உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்தான்  – 81
98- பண்ணுலாவு மென் மொழிப் படைத் தடம் கணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினான்  -91
99- இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லிராமன்  -93
100- குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் -102
101–கடுங்கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து
கூறு செய்த பல் படைத் தடக்கை மாயன்  -104
102-மாறு செய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -116

திருமாலை

103-சிலையினால் இலங்கை செற்ற தேவன் -7 –
104-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -11-
திருப் பள்ளி எழுச்சி
105-இலங்கையர் குலத்தை  வாட்டிய  வரி சிலை வானவர் ஏறு மா முனி வேள்வியைக் காத்து
அவபிரதமாட்டிய அடு  திறல் அயோத்தி எம்மரசு -4-

அமலனாதி பிரான்
106-அன்று நேர்ந்த நிசாசரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -2-
107-சதுரமா மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை  உய்த்தவன்
இரண்டாவதாயிரம் -பெரிய திருமொழி –

108–வாலி மாவலத் தொருவன துடல் கெட வரி சிலை வளைவித்தான் – 1-2-1-
109- கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மாநகர் பொடி  செய்த அடிகள்  -1-2-2-
110-தானவனாகம் தரணியில் புரள தடஞ்சிலை குனித்த வென் தலைவன் -1-4-1
111-கானிடை வுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த எம்பெருமான்  -1-4-2
112-இலங்கையும் கடலும் அடலருந்  துப்பின் இருநிதிக் கிறைவனும்
அரக்கர் குலங்களும்  கெட முன் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் -1-4-3
113-மான் முநின்தொருகால் வரி சிலை வளைத்த மன்னவன்  -1-4-8
114-கலையும்  கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாக சென்றான் மலை கொண்டலை
நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து
அறுத்து உகந்தான் -1-5-1
115-கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த
கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான் -1-5-2-
116-ஒருகாலிருகால் சிலை வளைய தேராவரக்கர் தேர் வெள்ளம் செற்றான்  -1-5-4-
117-அடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய்  விட்டலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் -1-5-5-
118-மராமரம் ஏழும் எய்த  வலத்தினன் -1-8-5
119-கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம்
பிளக்கச் சரம் செல உய்த்தான் -1-10-1-
120-இலங்கைப் பதிக்கன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர்
மாளக் கொடிப்  புள் தெரித்தான் -1-10-2-

121 -காசையாடை மூடி யோடிக் காதல் செய் தானவனூர் நாசமாக
நம்பவல்ல நம்பி நம்பெருமான் -2-2-1
122 -தையலாள்  மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று செய்த
வெம்போர்  தன்னிலங்கு ஓர் செஞ்சரத்தால் உருள எய்த எந்தை எம்பெருமான் -2-2-2-
123- முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால்  மாள  முனிந்தான் -2-2-3-
124-சிற்றவை பணியால் முடி துறந்தான் -2-3-1

125-பரதனும் தம்பி சத்ருக்னனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்
பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகன் –2-3-7

126- மாலும் கடலார மலைக்குவடிட்டு அணை  கட்டி வரம புருவ மதிசேர்
கோல மதிளாய  இலங்கை கெடப் படைதொட்டு ஒருகால் அமரில் அதிரக்
காலமிது வென்று அயன் வாளியினால் கதிர் நீண்  முடி பத்தும்
அறுத்தமரும்  நீல முகில் வண்ணன்  -2-4-5-
127-கிளர்  பொறிய மறி  திரிய அதனின் பின்னே படர்ந்தான் – 2-5-6
128-தென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலங்கை
வாய்ச் சரங்கள் ஆண்டான் -2-5-9-
129-விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல்லியலார் கொண்டாடும்
மல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டார் -2-6-4-
130-தடங்கடல் நுடங்கு எயில் இலங்கை வன் குடி
மடங்க வாள் அமர் தொலைத்தான் –2-7-6-
131–குடைதிறல் மன்னவனாய்  ஒரு  கால் குரங்கைப் படையா மலையால்
கடலை யடைத்த வன் எந்தை பிரான் -2-9-8-
132-தாங்கரும் போர் மாலிபட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை
முடித்த தன்மையான் –2-10-4-
135-மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீண்  முடி பொடி  செய்த மைந்தன் –3-1-7
136-நெய்  வாய் அழல் அம்பு துரந்து  முந்நீர் துணியப் பணி  கொண்டு
அணி யார்ந்து இலங்கு மையார் மணி வண்ணன் –3-2-6-

137-பைம்கண் விறல் செம்முகத்து வாலி மாளப்  படர் வனத்துக் கவந்தனோடும்
படையார் திண் கை வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் -3-4-6-
138-பொருவில் வலம்  புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போல
புவிமேல் சிந்தச் செருவில் வலம்  புரி சிலைக்கை மலைத் தோள் வேந்தன் -3-4-7
139-மரம் எய்த மா முனிவன் -3-5-5-
140-அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் –3-7-3-
141-சிறையாரு வணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் இரியச் செருவில்
கறையார் நெடு வேலரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் – 3-8-4-
142-கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியை காதொடு
மூக்குடன் அரியக் கதறி அவள் ஓடி தலையில் அம் கைவைத்து
மலை இலங்கு புகச் செய்த தடம் தோளன் –3-9-4-
143-மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன்
முடி ஒருபதும் தோள்  இருபதும் போய் உதிர  தன்  நிகரில் சிலை
வளைத்து அன்று இலங்கை பொடி  செய்த தடம் தோளன் –3-9-5
144 –வாள்  நெடும் கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள்  இருபதும் போய் உதிர தாள் நெடும் திண்  சிலை வளைத்த தயரதன் சேய் –3-10-6-

145- வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண்
சிலை இறுத்த தனிக்காளை –4-1-8
146–கம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால்
அறுத்து அரசவன் தம்பிக்கு அளித்தவன் –4-2-1-
147-தீ மனத்து அரக்கர் திறல்  அளித்தவனே என்று -சென்று அடைந்தவர் தமக்கு தாய்
மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலை  –4-3-5-
148- மல்லை  மா முந்நீர் அதர்பட மலையால் அணை  செய்து மகிழ்ந்தவன்
கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டான் – 4-3-6-
149- தான் போலும் என்று எழுந்தான் தரணி யாளன் அது கண்டு தரித்து இருப்பான்
அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றமன்ன இருபது தோள்
உடன் துனித்த ஒருவன்   -4-4-6-
150-இலங்கை வவ்விய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த  வெந்தை  -4-5-2-
151-  கருமகள்  இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன்  மேல் வருமவள்
செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை  – 4-5-5
152-  உருத் தெழு வாலி மார்வில்  ஒரு கணை வுருவ வோட்டி கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர்முடி யரசளித்தான்  -4-6-3-

153- முனை முகத்தரக்கன் மாள முடிகள் பத்தறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு
இளையவற்கே அரசு அளித்து அருளினான்  -4-6-4-
154-  கல்லால் கடலை அணை  கட்டி  உகந்தான் – 4-7-6-
155-  மல்லை  முந்நீர் தட்டிலங்கை கட்டு அழித்த  மாயன்  -4-8-4-
156-  அரக்கர் ஆவி மாள  யன்று ஆழ்கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன்
கோலவில்லி  -4-8-5-
157- அலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ் சிரங்களை வுருட்டினான்  -4-10-2-
158 – காற்றிடை பீளை கரந்தன வரந்தை வுறக் கடலரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த  கோல வில்லி ராமன்  -4-10-6-
159 — மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்தான்   -5-1-3-
160 –  விறல்  வாள்  அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும்
துணித்த வல் வில் ராமன்  -5-1-4-

161- ஆறினோடு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக
வில்லது வளைத்தவன்   -5-3-7-
162-  விளைத்த வெம்போர் விறல்  வாள்  அரக்கன் நகர் பாழ்  பட வளைத்த
வல் வில் தடக்கையவன் -5-4-4-
163 –  வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால்
முனிந்த அழகன்  -5-4-5-
164 –  மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலை யாளன்  -5-5-2-
165 -சுரி குழல் கனிவாய் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசைஅரக்கன்
எரி விழித்து  இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி  கடல் நெறிபட மலையால்
அரி  குலம் பணி  கொண்டு அலை கடல் அடைத்தான் -5-7-7-
166-  இலங்கை மலங்க வன்று அடு  சரம் துரந்தான்  -5-7-8-
167 –  ஏழை ஏதலன்  கீழ் மகன் என்னாது இரங்கி  மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை  மான் மட நோக்கி வுன்  தோழி உம்பி எம்பி என்று உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்றான்  -5-8-1-
168 – வாதமா மகன் மற்கடம் விலங்கு  மற்றோர் சாதி என்று ஒழியாது உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்றான்  -5-8-2-
169 –  விலங்கலால்  கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு  வில்லால் இலங்கை
மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் -5-9-6-
170 – பிறையின் ஒளி யெயிறிலக முறுகி எதிர் பொருதும் என வந்தவசுரர்
இறைகளவை நெறு நெறு  என வெறியவவர் வயிறழல நின்ற பெருமான் -5-10-4-
171-  மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்து மென வந்த வசுரர் தோளும்
அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியா மள  வெய்தான் -5-10-5-
172 – தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி எரி கானகம் வுலாவுமவர்  -5-10-6-
173- வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றான் – 6-3-5-
174- தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு  எரி ஊட்டினான்  -6-4-6-
175- ஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையை
சாடி இலங்கை செற்றான் – 6-5-3-
176-  விண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணி வெய்த சுடு வெஞ்சிலை
வாய்ச் சரம் துரந்தான்   -6-7-1-
177- துள்ளா வருமான் விழ வாளி துரந்தான்  -6-7-3-
178 – கல்லார் மதிள்  சூழ் கடி இலங்கைக் காரரக்கன் வல்லாகம் கீழ வரி
வெஞ்சரம் துரந்த வில்லான் -செல்வ  விபீடணற்கு வேறாக நல்லான் -6-8-5-

179- பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகளவை சிதற அழலாரும்
சரம்  துரந்தான்  -6-9-2-
180-எறிஞர் அரண் அழியக் கடியார் இலங்கை கடந்த நம்பி  -6-10-1

181-இலங்கைக் கோன்  வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை

விபீடணற்கு நல்லான் -6-10-4-
182 – தென்னிலங்கை  அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வென்கூற்றம்
நடையா உண்ணக் கண்டான்  -6-10-5-

183- கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர் மானம்
அழித்து நின்ற வென்றி யம்மான் -6-10-6-
184-  வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணி  வுடன் கல்லார் கடும் கானம்
திரிந்த களிறு – 7-1-5-
185-  சினவில்  செம் கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –மரம்
ஏழு எய்த மைந்தன் -7-3-1-
186 – ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் – 7-3-4-
187 – தழலே  புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்  படச் சூழ் கடல் சிறை வைத்தான் -7-3-9-
188-  மீதோடி வாள்  எயிறு மின்னிலக முன்விலகு முருவினாளைக் காதோடு
கொடி மூக்கன்று உடன் அறுத்த கைத் தலத்தன்   -7-4-3-

189 – தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி  வீழ
போராளும்  சிலையதனால் பொரு  கணைகள் போக்குவித்தான்  -7-4-4-
190 – செம்பொன் மதிள்  சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு  இலக்காக உதிர்த்த வுரவோன்  -7-5-3-
191 – அடையார் தென்னிலங்கை யழித்தான்  -7-6-3-
192 – பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை
வேந்தன் அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து
உகந்த வம்மான் -7-8-7-
193- தார்மன்னு  தாசரதி  — வாளரக்கர்  காலன் -8-4-7-
194-  ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் -8-5-5-
195 – முரியும்  வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி  யம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தன்  -8-5-6-
196-  கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகள் -8-5-7-
197-  துளங்கா  வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளைய
சிறிதே முனிந்த திரு மார்பன் -8-6-1-
198 – பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்றவன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி
தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை யிருந்தோர் தம்மை வுடன் கொண்டு
அங்கு எழிலார் பிலத்துப்புக்கு ஒளிப்பக் கரும் தாள் சிலை கைக்கொண்டான்  -8-6-2-
199 -வல்  இடையாள்  பொருட்டாக மதிள் நீர் இலங்கையர் கோவை அல்லல் செய்து
வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட
முனிதன் வேள்வியைக் கல்வி சிலையால் காத்தான் -8-6-3-

200 – மல்லை  முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை
விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத் தொல்லை
மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை எடுத்தான் -8-6-4-
201 – சேம  மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணிந்தான்  -8-6-5-
202- திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ வுன்ணச் சிவன்தான் -8-6-6-
203- அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை  மா சிலையால் எய்தான் -8-6-7-
204- விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி  எழக் கண்டவர் -8-7-5-
205- வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடி இலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து  செய்த
வெம்போர் நம்பரன் -8-8-7
206-வானுளார வரை வலிமையால் நலியும் மறிகட லிலங்கையார்
கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலேப் பருமுடி உதிர
வில் வளைத்தோன் -9-1-7-
207-கலைவுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும்படை எடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்றான் -9-1-10-
208- வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன்   -9-4-5-
209 -தென்னிலங்கை மலங்கச் செற்றவன்  -9-5-10-
210 -சிரமுனைந்து மைந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த  உரவோன் -9-6-4-
211 -சிலையால் இலங்கை செற்றான் -9-6-10-
212 -சுடு சரமடு சிலைத்துரந்து நீர்மை இலாத தாடகை மாள  நினைந்தவர் -9-8-4-
213 – வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன்தான் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள்  -9-8-5-
214 – காவலன்  இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம்  தவிர்த்தான் -9-10-6-

215-அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்  -10-2-10-
216- இராவணற்கு காலன் -10-3-3-
217 – மணங்கள்  நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தை
புன்மையாளன்  பொன்ற வரி சிலையால் கணங்கள் உண்ண
வாளி  யாண்ட  காவலன் -10-3-4-
218 – கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் நடந்து இலங்கை அல்லல் செய்தான் -10-3-6-
219- கவள  யானை பாய் புரவித் தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தவள மாட நீடயோத்திக்
காவலன் தன்  சிறுவன் – 10-3-8-
220 -ஏ டொத்து ஏ ந்தும் நீளிலை வேலி ராவணனார் ஓடிப் போகா நின்றார் -10-3-9-
221 – தெளியா வரக்கர் திறல் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப்
படையா விலங்கல்  புகப் பாய்ச்சி விம்மக் கடலை அடைத்திட்டவன் -10-6-7-
222- நெறித்திட்ட  மென் கூழை நன்நேர் இழை யோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இறுத்திட்ட  வளின்பமன் போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு  இலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
வறுத்திட்டவன்  -10-6-8-
223 -வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும்  எய்து மலை போல் உருவ த்தோர் இராக்கதி
மூக்கரிந்திட்டவன் -10-6-9-
224 – இலங்கை ஒள்ளெரி  மண்டி வுண்ணப் பணித்த ஊக்கமுடையான் -10-9-1-
225 – அரக்கியராகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச்
செருக்கு அழித்து  அமரர் பணிய முன் நின்ற சேவகன் -10-9-6
226 – பெரும்தகைக்கு இரங்கி வாலியை முனைந்த பெருமையான் -10-9-8-
227- அரக்கரை வென்ற வில்லியார்  -11-1-1-
228 – சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் -11-1-6-
229 -பொருந்து மாமரம் ஏழும் எய்த புனிதனார்  -11-1-6-

230 – இலை மலி பள்ளி எய்தி யிது மாயம் என்ன இனமாய மான்பின் எழில் சேர்
அலை மலி வேல் கண்ணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானையமையாக்
கொலை மலி  வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் -11-4-7-
231 – கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு  செஞ்சரங்கள்
செல உய்த்த நாங்கள் திருமால் -11-4-10 –
232 – மானமரு மென்னோக்கி வைதேகி இன் துணையாக்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   -11-5-1-

திருக் குறும் தாண்டகம்

233- கடி மதிள் இலங்கை செற்ற வேறு –2
234 – முன் பொலா  இராவணன் தன்  முது மதிள்  இலங்கை  வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றான் -15
235-  மாயமான் மாயச் செற்றான் -16

திரு நெடும் தாண்டகம்

236- வில்லிறுத்து  மெல்லியல் தோள் தோய்ந்தான் -13
237 -வென்றசுரர் குலம்  களைந்த  வேந்தன் -16
238- தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச்
செந்தீ ஒல்கிப் போராளன் -20
239- தென்னிலங்கை அரண் சிதறிய வுணன் மாளச்  சென்றான் -28
240 – அலை கடலைக் கடைந்து அடைத்த வம்மான் குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடும் சிலை வாய் சரம் துரந்து  குலம்  களைந்து வென்றான் -29

மூன்றாவது ஆயிரம் -இயற்பா
முதல் திருவந்தாதி
241- சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27
242 – பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீண்  முடியைப்
பாதமத்தால் எண்ணினான் -45
243- நுடங்கு இடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன்  விலங்கை வைத்தான் -59
244 – மேலொரு நாள் மான் மாய வெய்தான் -82
இரண்டாம் திருவந்தாதி –
245 -சீதையை மான் பின் போய் அன்று பிரிந்தான் – 15
246 – இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் – 25
247 – தென்னிலங்கை  நீறாக வெய்து  அழித்தான் -29
248-அன்று காரோதம் பின்னடைந்தான்  -30
249- தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும்
வீழச் சரம் துரந்தான்  -43
மூன்றாம் திருவந்தாதி –
250- இலங்காபுரம் எய்து எரித்தான் -51
251 – எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தானம் மான் மறியை
ஏந்து இழைக்காய் தென்னிலங்கை கோன் வீழ வெய்தான் -52
253- வாள்  அரக்கன் ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77
நான்முகன் திருவந்தாதி –
254- ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட
வீரந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் -8
255- தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் -28
256- மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29
257- தண்டவரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் -44
258- கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53

மூன்றாவது ஆயிரம் -இயற்பா
முதல் திருவந்தாதி
241- சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27
242 – பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீண்  முடியைப்
பாதமத்தால் எண்ணினான் -45
243- நுடங்கு இடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன்  விலங்கை வைத்தான் -59
244 – மேலொரு நாள் மான் மாய வெய்தான் -82
இரண்டாம் திருவந்தாதி –
245 -சீதையை மான் பின் போய் அன்று பிரிந்தான் – 15
246 – இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் – 25
247 – தென்னிலங்கை  நீறாக வெய்து  அழித்தான் -29
248-அன்று காரோதம் பின்னடைந்தான்  -30
249- தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும்
வீழச் சரம் துரந்தான்  -43
மூன்றாம் திருவந்தாதி –
250- இலங்காபுரம் எய்து எரித்தான் -51
251 – எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தானம் மான் மறியை
ஏந்து இழைக்காய் தென்னிலங்கை கோன் வீழ வெய்தான் -52
253- வாள்  அரக்கன் ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77
நான்முகன் திருவந்தாதி –
254- ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட
வீரந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் -8
255- தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் -28
256- மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29
257- தண்டவரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் -44
258- கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53

266- சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை மாட்டே துயர்
இழைத்த மாயவன் -66
267- கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன்  -78
திரு எழு கூற்று இருக்கை
268 – ஒருமுறை இரு சுடர் மீதினி லியங்கா மும் மதிள் இலங்கை
இருகால் வளைய ஒரு சிலை ஒன்றிய வீர் எயிற்று அழல் வாய்
வாளியில்  அட்டான் –
சிறிய திரு மடல்
269- இலங்கை பொடி  பொடியா  வீழ்த்தவன்
270- தன்  சீதைக்கு நேராவான் என்ற ஓர் நிசாசரி தான் வந்தாளைக்  கூரார்ந்த வாளால்
கொடி  மூக்கும் காத்து இரண்டும் ஈரா  விடுத்தவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே
சிலை குனித்தான் -செந்துவர் வாய் வாரார் வன முலையாள் வைதேகி காரணமா ஏரார் தடம்
தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்

பெரிய திருமடல்
271- போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே
புலம்ப வலம்  கொண்டு  மன்னும்  வள நாடு கை விட்டு கொன்னவிலும் வெங்கானத்தூடு
கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த  வெம் பரல் மேல் பஞ்சடியால் வைதேவி
என்று உரைக்கும் அன்ன நடைய வணங்குடன் நடந்த மன்னன் இராமன்
272- வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை
மாமண்டு வெஞ்சமத்து பொன் முடிகள் பத்தும் புரளச் சரந் துரந்து தென்னுலகம்
ஏற்றுவித்த சேவகன்

273- தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன்
நல்  தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்து சூர்பணகா சோர்வு எய்தி
பொன்னிறம்  கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளை
தான் முனிந்து மூக்கு  அரிந்தான் ,வாய்த்த மலை போலும் தன்னிகர் ஒன்றிலாத
தாடகையை மா முனிக்கா தென்னுலகம்  ஏற்றுவித்த திண்  திறலோன்
நான்காவதாயிரம் –     திருவாய் மொழி –
274- கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தான்  -1-5-5-
275- சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்  செய்த சிரீ தரன்  -1-5-6-
276 – நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்  -1-6-7-
277 – மராமரம் எய்த மாயவன் -1-7-6-
278- தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான்  -2-1-3-
279- அரக்கியை மூக்கீர்ந்தான் -2-3-6-
280 – குழாம் கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவன் -2-3-11-
281-  அரக்கன் இலங்கை செற்றான் -2-4-3/2-4-4-
282- கிளர் வாழ்வை வேவ  விலங்கை செற்றான்  -2-4-10-
283- தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்தான் -2-5-7-
284- பாறிப் பாறி யசுரர் தம் பல் குழாம் கள் நீறு எழப் பாய் பறவை ஒன்றேறி வீற்று இருந்தான் -2-6-8-
285 – இலங்கை செற்றான் -மராமரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லான் -2-6-9-
286- இலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -2-9-10-
287- ஏர் கொள் இலங்கை நீறே செய்த நெடுஞ்சுடர் சோதி  -2-7-10-
288 – தென்னிலங்கை எரி  எழச் செற்ற வில்லி -3-6-2-
289 – தயரதற்கு மகன் -3-6-8-
290 – தண் இலங்கைக்கு இறையச் செற்ற நஞ்சன் -3-8-2-
291 – சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில் ஒண்மை உடைய
வுலக்கை  ஒள்  வாள்  தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில் வன்மை வுடைய
வரக்கர் அசுரரை மாளப்  படை பொருத நன்மை வுடையவன் -3-10-1-
292 – கொம்பு போல் சீதை பொருட்டிலங்கை நகர் அம்பெரி  வுய்த்தவர்  -4-2-8-
293-  மதிள்  இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தான் -4-3-1-
294-  கிடந்து நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்து மணம்
கூடியும் கண்ட வாற்றால் தனதே வுலகென நின்றான் -4-5-10-
295- குலம் குலமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் -4-8-1-
296 – தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள்  காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் -4-8-5-
297- காயும் கடும் சிலை என்  காகுத்தன் -5-4-3-
298 – கொடியான் இலங்கை செற்றான் -5-6-9-
299 -இலங்கை செற்ற வம்மான் -5-7-3-
300- மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10-
301 – மன்னுடை இலங்கை யரண்  காய்ந்த மாயவன் -6-2-1-
302 – காண்  பெரும் தோற்றத்துக் காகுத்த நம்பி -6-6-9-

303- ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வானாள் மேல்
தீவாய் வாளி பொழிந்த சிலையான் -6-10-4-
304 – புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில்  வலவன்  -6-10-5-
305 – அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் ஒருங்கறுத்தான்  -7-1-5-
306 -காகுத்தன்
307- பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -7-3-7-
308 – மாறு நிரைத்து  இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா நீறு பட இலங்கை செற்ற வப்பன் -7-4-7-
309 – புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்த இராமபிரான் -7-5-1-
310 – நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்தான் – 7-5-2-
311 – ஆளியைக்  காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கரூளை யிட்டன்று இலங்கை கடந்து
பிலம்புக்  கொளிப்ப மீளி யம் புள்ளைக் கடாய் விறல்  மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான்  -7-6-8-
312 – ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை  தடிந்து மீண்டும் அவன் தம்பிக்கே
விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன்  சோதி புக்க வமரர் வரி ஏறு –7-6-9-
313 – அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடு படை யவித்த யம்மான் –
314 – செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை வுருக்கெட வாளி பொழிந்த வொருவன் -8-6-2-
315 – புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்  -8-9-3-
316 – கணை ஒன்றாலே யேழ் மரமும் எய்த வெங்கார் முகில் -9-1-2

317- காய்ச்சின பறவை ஊர்ந்து பொன் மலையில் மீமிசைக் கார்முகில்போல்

மாசின மாலி மாலிமான் என்று அங்கு அவர்படக் கனன்று முன் நின்ற

              காய்ச்சின வேந்தன் — -9 -2 -6 –
 -318 – கூற்றமாய அசுர குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே – 9- 2- 9-
 – 319- – என் ஆர் உயிர் காகுத்தன் — 9- 5- 6-
— -320 –  பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த
                தயரதன் பெற்ற மரகத மணித் தடம் –10 -1 -8 –
                 ஸ்ரீ சீதா ராம ஜெயம்
             ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: