அருளிச் செயல் அனுபவம் —

நாச்சியார் திருமொழி 1-9-
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி  செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது  அலமந்தம் மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவ தோர்  ஒருத்தினை நுகம் கொடு பாய்ந்து உஊட்ட மின்றித் துரந்தால் ஒக்குமே  -1-9-
இங்கே பாற் கடல் இல்லை பார்க்கடல் –
இதை பரிஷை செய்தார்களாம் காஞ்சி சுவாமி குறிப்பிட்டு உள்ளார் –
பார் சூழ்ந்த கடல் பூர்வர் வியாக்யானம் ஸ்பஷ்டமாக குறித்து அருளி உள்ளார்கள்
பெரியாழ்வார்  திருமொழி -4-9-1-
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு  வுடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீளம் காற்றாட்ட ஓ  சலிக்கும் ஒளி  அரங்கமே -4-9-1-
பூர்வாசார்யர்கள் மலருகின்ற கண் என்றே அருளியதால் மலர் கண் என்பதே சரியான பாடம்
மலர்க்கண் -மலர் போன்ற கண் -தப்பான பாடம்
கமல பந்துவை -திருவடிக்கு கமலத்தை உபமானமாக சொல்லு
சொல்ல மாட்டேன் பதில் அளித்தாராம்
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம்
எல்லையில் சீர் இள ஞாயிறு இரண்டு போல் என்னுள்ளவா -என்ற பாசுரமே அவர்கள் கேள்விக்கு பதில் –

————————————————————————————–

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார்

வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும்
தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள்உருவாய் நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன
அட்ட புயகரத்தேன் என்றாரே  -பெரிய திருமொழி -2 -8 -2 –

இன் கவி பாடும் பரம கவிகளா
 தன் கவி தான் தன்னைப் பாடுவியாது -இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை
 வன் கவி பாடும் என் வைகுந்தநாதனே -திருவாய் மொழி -7 -9 -6 –
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் –யானே
இரும்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லெண பிரித்து -இரண்டாம் திருவந்தாதி – 74-
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே -மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை உண்டே என்னொருவர்
தீக்கதிக் கண் செல்லும் திறம் -முதல் திருவந்தாதி -95-
தாமுளரே தம்முள்ள முள்ளுளதே தாமரையின்
பூவுளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி – 21-
நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அம் கையால் தொழுதும் நன் நெஞ்சே -வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறை யும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் -மூன்றாம் திருவந்தாதி -8-
———————————————————————————————————-
நின் தனக்கும் குறிப்பாகில் கறக்கலாம் கவியின் பொருள் தானே –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூகதி
– ஸ்வத சர்வஞ்ஞானாய் இறுமாந்து இருந்தால் போதாது -என்னோடு அதிகரிக்கில் அறியலாம் –
ஒரு வசிசிஷடனோடே சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்க கடவ -அவனுக்கு
திருமங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்க தாழ்வோ -ஆயின் அவன் மங்கை மன்னனிடம்கற்றானோ
கற்றிலனோ தெரியாது -கற்க விரும்பியது மட்டும்  நமக்கு தெரிகிறது –
வட வேம்கடவன் எம்பெருமானார் இடம் வட மொழி வேத சாரம் வேதார்த்த சந்க்ரகம்
கேட்டு அறிந்தான் -இன்றும் ஞான முத்தரை உடன் அங்கே சேவை சாதிக்கிறார் –
சங்காழி அழிக்க பெற்றது உலகம் அறிந்ததே –
திருக்குறுங்குடி நம்பி  ஸ்ரீ வைஷ்ணவ நம்பி ஆனதும் பிரசித்தம் இறே
வேதத்தின் உட் பொருள்  நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -மதுரகவிகள்
வேதப்  பொருளே என் வேங்கடவா -பொருள் அவன் -உட் பொருள் -பாகவதர்
அத்ரபரத்ரசாபி நித்யம் யதீ ய சரணவ் சரணம் மதீயம்
ஈன்ற தாய்-ஆழ்வார்
 வளர்ப்புத்தாய் -எம்பெருமானார்
பெருக்கி வாழ்வு அளிக்கும் வள்ளல் -பெரிய ஜீயர்
ஆழ்வார்  எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
பொன்னடியாம் செங்கமலம் -உட் பொருளின் சாரம்
எறும்பி அப்பா -வரவர முனி சதகம் -63 –

ஆத்மாநாத்மபிரமிதி  விரஹாத் பத்யுரத்யந்ததூர
கோரே தாபத்ரி தயகுஹரே கூர்ணமானோ ஜநோசயம்
பாதச்சாயாம் வரவர முனே ப்ராபிதோயத் பிரசாதாத்
தஸ்மை தேயம் ததி ஹகி மிவ ஸ்ரீ நிதே ர் வர்த்ததே தே–
தேஹாத்மா விவேகம் கூட இல்லாதவரும் -எம்பெருமானுக்கு வெகு தூரத்தில் உள்ளவரும் –
கோரமான தாபத் த்ரய படு குழியில் சுழலுகின்றவருமான என்னைப் போன்ற மக்கள்
எவருடைய அனுக்ரஹத்தால் திருவடி நிழலில் செர்க்கப்பட்டனரோ -அத்தகைய
தேவரீருக்கு திருமகள் கேள்வனும் இவ்விஷயத்தில் வழங்கலாம் படி யான வேறு
கைம்மாறு யாது உள்ளது -தனியன் சமர்ப்பிப்பது தவிர வேறு இல்லை எனபது கருத்து –
பதச்சாயா -திருவடி உபாயமும் நிழல் உபேயமும்-பிரத பர்வம் நம் பெருமாள் திருவடி நிழல் –
சரம பர்வம் -மா முனிகள் திருவடி நிழலே –
விஷ்ணு சேஷீ ததீய ஸூ ப குணா நிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் –
மோஷம் ஏக ஹேதுவான ரம்யஜாமாத்ரு முனிவர் -ஜீயர் திருவடிகளே சரணம் –
———————————————————————————————————————————
ஒண் சங்கதை வாளாழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -திரு வாய் மொழி – 8- 8- 1-

பொய்கை ஆழ்வார் -பாஞ்ச ஜன்யம் அம்சம்-ஒண் சங்கு
பூதத்தாழ்வார் -கதையின் அம்சம் -ஒண் கதை
பேயாழ்வார் -நாந்தகம் அம்சம்  -ஒண் வாள்
திரு மழிசை ஆழ்வார் -திரு வாழி அம்சம் -ஒண் ஆழி
முதல் ஆல்வார்கலோடும் திரு மழிசை ஆழ்வார் உடன் எம்பெருமான் நம் ஆழ்வார் ஹிருதயத்தில்
புகுந்தான் -என்று ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் சுவாமிகள் நிர்வகிப்பாராம் –
————————————————————————————————
                              திருவாய் மொழி                                                                            கண்ணி நுண் சிறுத் தாம்பு
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுது — 2- 5- 4-      நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
                                                                                                                        அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே –
மலைக்கு நாவுடையேற்கு – -6 -4 -9 –                                                  நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே – 6- 10- -10 –                                 மேவினேன்  அவன் பொன்னடி மெய்ம்மையே
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை – -5 -2 -7 –                         தேவு மற்று அறியேன்
பாடி இளைப்பிலம் – 1- 7- 10- –                                                                      பாடித் திரிவனே
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் – 8- 10- 4- –                         திரி தந்தாகிலும்
உரிய தொண்டர் தொண்டர் – 6- 9- 11-                                                            நம்பிக்கு ஆள் உரியனே
தாயாய் தந்தையாய் – 7- 8- 1- –                                                                            அன்னையாய் அத்தனாய்
ஆள்கின்றான் ஆழியான் – 10- 4- 3- –                                                                     என்னை ஆண்டிடும் தன்மையான்
கடியனாய் கஞ்சனைக்கொன்ற பிரான் – 9- 6- 11-                                       தக்க சீர் சடகோபன்
யானே என்தனதே என்று இருந்தேன் – 2- 9- 9- –                                                  நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று – 2- 8-1 –                  இன்று தொட்டு எழுமையும்
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் – -7 -9 -1 – –                       நின்று தன புகழ் ஏத்த அருளினான்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்க  – 1- 7- 7- –                                       என்றும் என்னை இகழ்விலன் காண்மின்
மயர்வற மதி நலம் அருளினன் – -1 1-1 –                                              எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே
அருளுடையவன் – 2- 10-11 –                                                              அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கது
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் -10 -8 -2 –                நிற்கப் பாடி என் நெஞ்சுள்  நிறுத்தினான்
வழு விலா அடிமை செய்ய  வேண்டும் நாம் – 3- 3- 1- –                    ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
ஆராத காதல் – -2 -1 -11 –                                                                                  ஆட்புக்க காதல்
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை                      பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும்
 கொண்டாய்- 5- 7- 3- –                                                                                           செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய
என் அன்பேயோ  – -10 -10 -7 –                                                                                                தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய்
உலகம் படைத்தான் கவி – 3- 9-10 –                                                                        மதுரகவி
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும்
தம்மூர் எல்லாம் – 5- 3- 11- –                                                                            நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
பிறந்தவாறு
பையவே நிலையம் வந்து                                                                                  கண்ணி நுண் சிறுத் தாம்பு
உரலை நேராக செதுக்கப் போகாது -அப்போதாக கயிற்றை  நெடுக விட போகாது -இனி இவனை விட்டு நெடிய
கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான் -காற்றில் கடியனாய் ஓடும் -இனி செய்வது என் –
என்று அவள் தடுமாறிய படியைக் கண்டான் -கட்டுண்ணப் பண்ணிய -சதகரூப ரூபாய -பிறந்து
படைக்க நினைத்த குணத்தை இழக்காமல் இருக்க -கட்டுண்ணப் பண்ணினான் –
கண்ணியார் குறுங்கயிற்றால் கட்டவெட்டேன்று இருந்தான் -பெரியதிருமொழி – 5- 9- 7- –
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் – பெரியதிருமொழி – 11- 5- 9-
தாம் நா சைவ –யதி சக் நோஷி  -சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது –
அவர் உயர்வற உயர்நலம் உடையவன் குணத்தை முதலில் அனுபவித்தார்
அவன் திரு மேனியில் ஸ்பர்சித்ததொரு தாம்பை வர்ணிக்கிறார்
அவருடைய உத்தேச்ய வஸ்து வெளிறாய்  கழிகிறது இறே
கட்டுண்ணப் பண்ணிய -பக்தி உண்டே யாகிலும் அவன் தானே தன்னை அணைத்து
தர வேண்டும்படியாய் -இது பின்னையும் சிறிதாய் இருக்கும் ஆய்த்து-
நாயமாத்மேத்யாதி –யமேவைஷ வ்ருணுதே தேந லப்யஸ் தச்யைஷ ஆத்மா  விவ்ருணுதே
தநூம் ஸ்வாம்–என்றபடி -இந்த பக்தி நெஞ்சில் அந்ய பரதையை  அறுக்கும் இத்தனை –
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி -திரு சந்த விருத்தம் –83 –
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் -அத்தாலே யாதல் –
இரண்டு என்று வாக்ய த்வயமாதல் -அத்தாலே யாதல் –
வசீகரித்து என்னவுமாம் -அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்கு
கட்டப் போகாதே –
களவிலே தகனேறினபடி -அபிமத ஸித்திக்கு ஓர் அஞ்சலியே சாதனம் என்று அறிந்து
தொழுகையும் -பெருமாள் திரு மொழி – 7- 8- – செய்வான் இறே
பெரு மாயன் -அவாப்த சமஸ்த காமன் -தனக்கு ஒரு குறை உண்டாய் -அது தன்னை
ஷூத்ரரைப் போலே கழவாகிற வழி அல்லா வழி இழிந்து சர்வ சக்தியான தான்
அது தன்னை தலைக் கட்ட மாட்டாதே -வாயது கையதாக அகப்பட்டு  கட்டுண்டு
பையவே நிலையும்-திரு வாய் மொழி – 5- 10- 3- உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார் –
என்னப்பனில் -பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில் ஆழ்வார் சம்பந்தம்
அற வேணும் இறே -பும்ஸாம்  த்ருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றபடியே அவ்வருகு
போவாரையும் துவக்க வல்ல விஷயத்தில் துவக்குண்டு சொல்கிறார் –
என்னப்பனில் நண்ணி -இங்கே தோஷ தர்சனம்  காண விரகு இல்லையே –
நல்கி என்னை விடான் நம்பி -திருவாய் மொழி – 1- 10-8 -ஆழ்வார் உத்தேச்யமாக பற்றின
விஷய பூர்த்தி இவர் பற்றின -தென் குருகூர் நம்பி -ஆசார்யர்களை நம்பி என்ன கற்பித்தார்
என்றக்கால் -ஓர் உக்தி  மாத்ரமே  அமையும் இவ் விஷயத்துக்கு
மனோ வாக் காயம் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு
பூர்த்தி சௌலப்யம் இரண்டாலும் வந்த ஏற்றம்-
——————————————————————————————
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: