ஸ்ரீ கீதா சாரம் -ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் —

ஸ்ரீ கீதா சாரம்–

சர்வ உபநிஷதோ காவ உக்தா கோபால நந்தன-பார்த்தோ வத்ஸூ தீ போக்தா துக்தம் கீதாம்ருதம் மவாத் —

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ்ஞானமில் —
1-2 3- -தத்வ விவேக –
4- நித்யத்யா நித்யத்வ
5- நியந்த்ருத்வ
6- சௌலப்ய
7- சாம்ய
8-/ – 9- அஹங்கார இந்திரிய தோஷ பல
10 -மன பிரதான்ய
11- கரண நியமன
12- ஸூ கருதி பேத
13- தேவ அஸூர விபாக
14 -விபூதி யோக
15- விஸ்வரூப தர்சன
16 – சாங்க பக்தி
17 –/ 18- – பிரபத்தி
இத்யாதிகளாலே அன்று ஓதிய கீதா சமம் கீதா சாரம் பல பல
பிரமாணங்களாலே உக்தம் –
அஜாயமான பஹூதா விஜாயதே -கர்ம வச்யன் அன்றி கிருபா வச்யனாய் எம்பெருமான்
பல படிகளால் அவதரிக்கிறான்
அஜாயமான பஹூதா என்று வேதமும் -பஹூ நிமே ஜன்மானி -என்று வேத்யனும்
சன்மம் பல பல செய்து -என்று வைதிக அக்ரேசரும் -பகவத் அவதாரம் அஸங்கயேயம் என்று அறுதி இட்டது

ஸ்ரீ பகவத் அவதாரங்களுள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பரம பிரதானம் –
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து –மாதவனே கண்ணுற நிற்கிலும்
காணகில்லா உலகோருக்கு ஒரு சேம வைப்பாகா ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தை அருளிச் செய்தது
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் தனிச் சிறப்பாகும் –
ஸ்ரீ ராம அவதாரத்தில் -மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் -சக்ருதேவ பிரபந்நாய –அபயம் ததாமி –
இத்யாதி சில வாக்யங்கள் காணக் கிடைத்தவையே யாயினும் –
பரம வேதாந்த சாரார்த்த கர்ப்பிதமானதோர் திவ்ய சாஸ்திரம் -ஸ்ரீ கீதை -அவதரித்தது ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் இறே –

பாரத பஞ்சமோ வேத -என்றும் –
மகத்வாத் பாரவத் வாச்ச மஹா பாரதம் உச்யதே -என்றும்
கோஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத்பவேத் -என்றும்
விஷய கௌரவத்தாலும் பிரபந்த கௌரவத்தாலும் வக்த்ரு கௌரவத்தாலும் பரம பிரமாணம் ஆகும் ஸ்ரீ பாரதம் –
ஸ்ரீ வேத வியாச பகவான் சம்சாரிகளுக்குக் கொடுத்த ஸ்ரீ மகா பாரதம்
சம்சார விமோசகம் இறே -வங்கக் கடல் கடைந்து அமரர்க்கு அமுத ஈந்தான் ஆயர் கொழுந்து
அது பந்தம் ஆயிற்று -சம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப் பருஹ்மித வேதாய நமோ வ்யாசாய விஷ்ணவே -என்று
அருளிச் செய்தார் ஸ்ரீ சுருதி பிரகாச பட்டர் இப்படியாய் இறே ஸ்ரீ மஹா பாரத வைபவம் இருப்பது –
அம் மஹா பாரதமே கோது -அசாரம் என்னும்படி ஆய்த்து -ஸ்ரீ கீதை –
வேத பௌருஷம் ஸூக்தம் தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம்
பாராதே பகவத் கீதா புராணே ஷூ ச வைஷ்ணவம் -என்னக் கடவது இறே –

கீதா ஸூ கீதா கர்தவ்ய கிமன் நயு சாஸ்திர சங்க்ரஹத்திலே
யா ஸ்வயம் பத்ம நாபச்ய முகபத்மாத் விநிஸ் ஸ்ருதா -என்று இத்யாதிகளில் ஸ்ரீ கீதா வைபவம் ஸூ பிரசித்தம் –
ஸ்ரீ நாராயண அவதாரமான ஸ்ரீ வியாசர் தம்முடைய சாரீரகத்திலே -ச்ம்ருதே ச -1 2-6 – – என்றும்
ஸ்மரந்நிச – 4-1 10- – என்றும் ஸ்ரீ கீதையை சம்வாதி பிரமாணமாகக் காட்டி அருளினார் இறே
பார்த்தம் பிரபன்னம் உத்திச்ய சாஸ்த்ர அவதரணம் க்ருதம் என்று ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹத்திலே
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் உத்திச்ய -என்றது -வ்யா ஜீ க்ருத்ய -என்றபடி –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த
நிறை ஞானத்தொரு மூர்த்தி -என்ற ஸ்ரீ ஆழ்வார் திரு வாக்கை ஒற்றி இறே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது –

நாட்டார் அன்ன பாநாதிகள் எல்லாவற்றாலும் கார்யம் உடையராய் இருப்பார் –
அறிவு ஒன்றிலும் ஆய்த்து குறைவுபட அறியாதது -சாஸ்த்ரார்த்த ஜ்ஞானம் இல்லாமையே அன்று –
அறிவில்லாமை பற்றி குறைவும் இன்றிக்கே இருக்கும் சம்சாரிகள் படும் அநர்த்தம் கண்டு
ஆற்றாமையாலும் -மிக்க கிருபையாலும் இறே ஸ்ரீ பகவான் ஸ்ரீ கீதோ உபதேசம் பண்ணினான் –
இவன் உபதேசத்துக்கு ஆஸ்ரித வ்யாமோஹமும் ஒரு காரணம் ஆகும்-
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக –
என்று இறே ஸ்ரீ பிள்ளை உலகாரியன் திருவாக்கு –
மால் என்கோ -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ சூக்திக்கு ஸ்ரீ நம்பிள்ளை ஈட்டு
ஸ்ரீ ஸூக்திகள் அவசியம் அனுசந்தேயங்கள் —
உபநிஷதம் உதாரம் உத்வமன் பாண்டவார்த்தம்
சரண முபகதான் நச்த் ராயதே சாரங்க தந்வா -என்று இறே தாத்பர்ய சந்த்ரிகா –
ஆக அகல் ஞாலத்தவர் அறிய -கணக்கறு நலத்தனன் -அந்தமில் ஆதி அம் பகவன்
உபதேசித்தது ஸ்ரீ கீதா சாஸ்திரம் -என்றது ஆயிற்று -இனி கீதா பிரமேய சாரத்தை அனுபவிப்போமாக –

ஸ்ரீ கீதையில் இது அசாரம் இது சாரம்
என்று கூற இயலுமா -இயலாது –ஸ்ரீ கீதையே சாரமாகும் –
சார சாஸ்த்ரமான ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தில் பல பல சார அர்த்தங்கள் –
அவற்றுள் ஒன்றினை அனுபவிப்போம் ஈங்கு
மாயன் அன்றோதிய வாக்கு -என்று ஸ்ரீ திருமழிசைப் பிரானும்
வார்த்தை யறிபவர் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -என்று ஸ்ரீ ஆண்டாளும்
தே து சரமம் வாக்கியம் ஸ்மரன் சாராதே -என்று ஸ்ரீ பராசர பட்டரும் அனுபவித்த வார்த்தையை
ஈங்கு அனுபவிப்போம் -சாரோத்தாரம் -என்று இறே பெரியோர் அனுபவித்து உள்ளார்கள் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாஸூச –
தர்ம சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே இந்த ஸ்லோகத்தில் சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று -என்கையாலே –சாஷாத் தர்மம் தானே என்கிறது –
பரதத்வமும் பரம ப்ராப்யமுமானவன் ஸ்ரீ மன் நாராயணனே -என்று சகல வைதிக சம்மதம் –
ஆயினும் ஹிதாம்சத்தில் இறே விசாரம் உள்ளது –
கர்மம் ஜ்ஞானம் பக்தி பிரபத்தி -இத்யாதிகளாக தர்மாந்தரங்கள் பலவாறாக சாஸ்திர சம்ப்ரதாய
சித்தங்கள் ஆகையாலே -அதிலே இறே நிஷ்கர்ஷம் தேவைப் படுகிறது -அதனை நிஷ்கர்ஷிக்கும்
ஸ்லோகமே இது –சரம ஸ்லோகம் எனப் படுகிறது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி யான
சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே சரம ஸ்லோகம் என்று இதுக்கு பேராய் இருக்கிறது -என்று
இறே ஸ்ரீ மன் லோக தேசிகன் ஸ்ரீ ஸூக்தி -ரஹஸ்ய தம உபாயத்தை ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாதபடி
உபதேச பர்யவசானமாக -சரம ஸ்லோகத்தால் -சகல லோக ரஷார்த்தமாக அருளிச் செய்கிறான்

ஸ்ரீ கீதாசார்யன் -என்றபடி -யே ச வேத விதோ விப்ரா யே ச அத்யாத்ம விதோ ஜநா
தேவ தந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -என்று இறே பிரமாண கதி இருப்பது –
ஆழ்வார் திருவாய் மொழியிலே ஸ்ரீ மன் நாராயணனே உபாயம் என்று முதல் பத்தாலும்
அவனே ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தாலும் –
அவன் திவ்ய மங்கள விசிஷ்டன் என்று மூன்றாம் பத்தாலும் அறுதி இட்டு -மேலே
நான்காம் பத்தான ஒரு பத்தாலே மற்றை பிராப்யங்கள் பிராப்ய ஆபாசங்கள் –உண்மையாக
பிராப்யங்கள் அல்ல -என்று மூதலித்து மேலிட்டு ஆறு பத்துக்களாலே அவனைத் தவிர
மற்றைய உபாயங்கள் ப்ராப்ய ஆபாசங்களே என்று மூதலிக்கிறார் –
ஷட் பி ஸ்வாம் பஞ்சமாத்யை அந்தர கதிதாம் ஆசசஷே முநீந்திர -என்ற சார வாக்கியம் இங்கே அனுசந்தேயம் –
சர்வ தர்மாம்ச சந்த்யஜ்ய சர்வ காமாஞ்ச சாஷரான் -லோக விக்ராந்த சரணவ் சரணம் தே வ்ரஜம் விபோ -என்று
இறே புராண நிஷ்கர்ஷம்

கீதா சரம ஸ்லோகமே கீதாசாரம் -அவனே சாஷாத்தர்மம் என்பதே கீதாசாரார்த்தம்
உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -என்று இறே ஸ்ரீ ஆண்டாள் அறுதி இட்டது
சாதனமும் சரண நெறி யன்று என்று இறே -தூதனும் நாதனுமான ஸ்ரீ பார்த்த சாரதி
கீதாசார்யன் அர்ஜுனனுக்கு அறுதி இட்டான் –
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் மாம் -என்று தன்னுடைய சௌலப்யம் வெளி இட்டான்
இது ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகமான குணமாகும் -வ்ரஜ என்று ஆஸ்ரயண விதாகம்
இறே பூர்வார்த்தம் -நம் ஆழ்வாரும் கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ
என்று -திரு வாய் மொழி – 4-1 3- –மாமின் அர்த்தத்தை அருளிச் செய்தார் –
சரம ஸ்லோகத்தில் உத்தரார்த்தத்தில் –அஹம் என்று தன்னுடைய பரத்வத்தை வெளி இட்டான் –
இது ஆச்ரயண கார்ய ஆபாதகமான குணமாகும் -பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி -என்று இறே மேலில் வார்த்தை –
அவனுக்கு எளிமை இல்லையேல் அவனை ஆஸ்ரயிக்க முடியாது
அவனுக்கு மேன்மை இல்லையேல் அவனுக்கு நம் கார்யம்செய்து தலைக் கட்ட இயலாது –
காருணிகன் இறே ஆஸ்ரயநீயன் –சக்தன் இறே கார்யாகரன் -சமர்த்த காருணிக விஷயம் இறே பகவத் விஷயம்

தேர் மன்னர்க்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் -தார் மன்னர் தங்கள் தலை மேலான் இறே –
இதிலே பராவர சப்தார்த்தம் —கையும் உழவு கோலும் பிடித்த சிறு வாய்க் கயிறும் –
சேநா தூளித தூசரித மான திருக் குழலும் -தேருக்கு கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற
சாரதியான தான் -என்றான் -மாம் -என்று நித்ய சம்சாரியாய் போந்த இவனை -சரணம் -என்றதே
கொண்டு –நித்ய ஸூரி பரிஷத்துக்கு ஆளாக்கிகிற சர்வ சக்தித்வத்தை -அஹம் -என்று
காட்டுகிறான் -என்பர் நம் பெரியோர் -சேயன் மிகப் பெரியன் அணியன் சிறியன் மாயன் -என்றார்
இறே திரு மழிசைப் பிரானும் –
மாம் -என்ற சௌலப்யமும் -அஹம் -என்ற பரத்வமும் –ஸ்ரீ மத்வத்தாலே
யாகிறது –ஆகையால் –மாம் -என்கிற இடத்தில் ஸ்ரீ மானே கூறப்பட்டான் என்பர் பெரியோர் –
மாதவ பக்தவத்சல -என்றும் -ஸ்ரீ கர்ப பரமேஸ்வர -என்றும் பரத்வ சௌலப்ய நிதானம் ஸ்ரீ மத்வம்
என்று காட்டப்பட்டது –
திரு வுடை அடிகள் –திரு மகளார் தனிக் கேள்வன் -பெருமை உடைய பிரான் -என்று ஸ்வாமித்வமும் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே -என்று சௌலப்யமும் –
அவற்றின் அடியான ஸ்ரீயபதித்வமும் கூறப்பட்டது இறே –

ஆக -சரம ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவான் ஸ்ரீ மன் நாராயணனே –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஆகதோ மதுராம் புரீம் -என்னா நின்றது இறே –
உத்தரார்த்தத்தில் –அஹம் -என்று -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனான தன்னையும் –
த்வா -என்று அறிவு ஒன்றும் இல்லாத இவனையும் நிர்தேசித்தால் –
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேராம் இறே
குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருச நிம் நமிமம் ஜனம் உந் நமய -என்று அருளிச்
செய்தார் ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற பிறகு -மாம் –என்றான் –
அது தர்ம நிவர்த்தக வேஷம் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதற்கு முன்னே
அஹம் என்றான்-இது அதர்ம நிவர்தகமான வேஷம் –
மாம் -என்று இவன் கால் தன் தலையில் படும்படி கூறினான் –
அஹம் -என்று தன் கால் அவன் தலையில் படும்படி கூறுகிறான் –
மாம்-என்று கையும் உழவு கோலுமான வேஷம்
அஹம் -என்று கையும் திருவாழி யாமுமான வேஷம் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இறே –

பாப நிவ்ருத்தியான விரோதி நிவ்ருத்தி சொன்னது இஷ்ட ப்ராப்திக்கும் உப லஷணம் –
என்று சொல்வார்கள்
அநிஷ்டம் தொலைந்தவாறே -சேது பங்த ஸ்ரோத ப்ரஸ்ருதி ந்யாயத்தாலே -இஷ்ட
பிராப்தி தன்னடையேயாம் என்று கூறுவார் -பிரபன்னனுக்கு பாப நிவ்ருத்தியில்
பக்தனைக் காட்டிலும் ஏற்றம் உள்ளது ஆகையால் அது தனித்து கூறப்பட்டது
என்றும் சொல்லுவர் –
பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசி நீ -பிரபத்தி பிராரப்த ஸ்யாபி நாசி நீ –
என்று இறே சாஸ்திர நிஷ்கர்ஷம் இருப்பது –
முக்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்று இவ்வளவில் கூறப்பட்டது –
இதுவே கீதாசாரம் –

—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி திருவடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: