திரு-விருத்தம்-99-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
பகவத் விஷயத்தில் நீர்  இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –  அத்ய ராஜ குலச்ய -இத்யாதி
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம்  ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –ரசவாதம் கீழ்ப் போமாம் போலே
ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் -இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -சக்கரவர்த்தி துஞ்சினான் -பெருமாள் பொகட்டுப் போனார் -நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே
அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது -நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ -புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே –
இன்ன போது மோஹிப்புதீர்  என்று தெரிகிறது இல்லை –சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க  புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி  தாசர் கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக்

கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து -கள்வன் கொல் யான் அறியேன்  கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் -இப்படி இருக்கிறவன் இறே  தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் -ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் –  நஞ்சீயரை     பட்டர்
ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக -அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –
அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க -ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து -நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன -லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் -சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் -இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே -அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் – அப்படியே செய்து கொடு போந்தார்களாய் -இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –
கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக -ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே -இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என்  -என்ன -ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து -நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி  நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன -என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன -ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே -இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –

தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
 ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –
பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக -துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –செஞ்சொல் கவிகாள் -10-7-
வியாக்யானம் –
ஈனச் சொல் ஆயினுமாக -சிலர் ருசி உண்டாய் கேளா நிற்க -நான் சொல்லாது இருக்க மாட்டேன் –
சர்வேஸ்வரன் முந்துற அர்ஜுனனுடைய சோகத்தை காண்கையாலே ரஹச்யத்தை சொல்லிக் கொடு
நின்று – பின்பு மூலையில் கிடந்ததை முற்றத்தில் இட்டோம் -என்று பதண்  பதண்  என்றான் இறே –
இவர் அதை முற்படவே அருளிச் செய்து கொள்கிறார் –ஈனச் சொல் ஆகிறது –அஹிதமான சொல்லு –
அஹிதமாகை யாவது -பிரயோஜன சூன்யமாகை -அதாவது ஸ்வரூபத்துக்கு அநு ரூபத்தை சொல்லுதல் –
அசக்ய கிரியை யைச் சொல்லுதல் செய்கை -தன் பரத்தை ஒரு சர்வ சக்தி தலையிலே எறிடுகையாலே
எழுகிறது ஆகையாலே  – அசக்ய கிரியை அல்ல -தன் பாரதந்த்ரதொடே சேர்ந்தது ஆகையாலே இது தான்
ச்வரூபத்தொடு சேருமதாய் இருக்கும் -தன்னுடைய அஞ்ஞான அசக்திகளால் வரும் -ஜ்ஞான வைகல்யமும்
சக்தி வைகல்யமும் -வராதிறே ஒரு சர்வ சக்தியை பற்றுகையாலே –
எறி திரை வையம் முற்றும்  ஏனத்து உருவாய் இடந்த பிரான் -என்று சக்தியை சொல்கிறது –
ஞானப் பிரான் -என்று ஜ்ஞானத்தை சொல்கிறது –
ஆயினுமாக -ஆகியுமாக என்னாதே – ஈனச் சொல்லாயினும் நன்றாக என்று நைசயம் சொல்லாதே
ஆயினும் -ஆக என்கையாலே -அவன் அருளிச் செய்ததுக்கு நால்வர் இருவர் உண்டானவோபாதி
இதுக்கும் சிலர் உண்டாகிலும் உண்டாக -அவர்கள் ஆதரிக்க்கவுமாம் தவிரவுமாம் -நான் சொல்லித் தவிரேன் –
இவற்றின் அனர்த்தைக் கண்டு இவற்றை நல் வழி போக்கி பரிகரிக்க வேண்டும் அன்றோ –
ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே -நீர் தாம் இப்படி -பூவுக்கிட்டோம்  போலவும் என்று
சொல்லுகிறது தான் ஏது என்ன –எறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று -என்றான் -அவனையே பற்ற வேண்டுகிறது
என் என்ன -இவையாபின்னமானவன்று -பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ -இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –
ஹேதுவாகிறது தான் என் என்ன –எறி திரை வையம் -கடல் சூழ்ந்த பூமியை பிரளயம் கொள்ள –
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான் -என்கை -இடந்த -இத்தால் சர்வ சக்தி –என்னுமிடத்தை சொல்லுகிறது —
பிரான் -சக்தியே அன்றிக்கே இவற்றை ரஷிக்கைக்கு ஈடான பிராப்தியும் அவன் கையதே என்கிறது –
ஸ்வாமி என்கிறது -இவற்றின் உடைய ரஷன உபாய ஜ்ஞானமும் -அதுக்கு ஈடான சக்தியும்
பிராப்தியும் உள்ளது அவன் பக்கலிலே என்கை -இவனுடைய அஞ்ஞான அசக்திகளாலும்
அவனையே பற்ற வேணும் -இனி உடைமை பெறுகைக்கு  உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –
ஆக -குறைவாளர்க்கோ அவனைப் பற்ற அடுப்பது என்ன
இரும் கற்பகம் இத்யாதி –இங்கே ஒருஸூ க்ருதத்தைப் பண்ணி அதுக்கு பலமாக ஸ்வர்க்கத்திலே போய் கல்பக வ்ருஷம் அபேஷித சம்விதானம் பண்ண இருப்பார்க்கும்  அவன் வேணும் -ஸ்வ கர்ம பலன் அனுபவிக்கிறான் ஆகில்
அவன் என் என்னில் -இவன் பண்ணின கிரியை இங்கே நசியா நின்றது இறே -இவன் கர்மத்தையும் அளந்து -இவன் தன்னையும் அளந்து பலம் கொடுப்பான் ஓர் ஈஸ்வரன் வேணும் இறே -கிரியை நசித்தால்-நின்றுபலம் கொடுக்கைக்கு கிரியா சக்தி என்றாதல் -அபூர்வம் என்றாதல் -ஒன்றைக் கொள்ளா நின்றார்கள் இறே -இனி ஓன்று கற்பிக்கும் இடத்தில் ஒரு பரம சேதனனைக் கற்பிக்க அமையாதோ –
மற்ற எல்லாயவர்க்கும் -ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி -அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் -அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே –எல்லாயவர்க்கும் -தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே   -ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று
இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும் சம்விதானம் பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்
ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத்தலையில்-உண்டான அறிவு அசத் சமம் என்கை -என்தான் ஜ்ஞானத்தால் அன்றோ மோஷம்  –பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன -உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார் -ஞானப் பிரானை – தன்னை சூழ் த்திக்  கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது -பர ரஷன உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று –
அல்லால் இல்லை –அவன் உளன் என்கை யல்ல -ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே -வழி கெட நடந்தோமா -என்று நாஸ்திகரும் கூட அங்கீகரிக்கிற அளவஅன்றே இவர்கள் சொல்லுகிறது -அவனை ஒழிந்த தானும்
தான் பரிக்கிரஹிக்கிற உபாயங்களும் அடைய கழுத்துக் கட்டி என்கை –
ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க -அவனைக்
கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் -உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைரபேஷ  யத்தை அருளிச் செய்தார் இறே  –ஈஸ்வரனை ஒழிந்த தன்  ச்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம்  அருளிச் செய்கிறார் –
இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும் தான் பரிக்கிரஹித்த உபாயங்களுமே இறே
சஹ காரியாக உள்ளது -அவற்றைத் தவிர்க்கிறது –
நான் கண்ட -கைப் பறியாக பறித்ததாய்-புண்ய பாபங்கள் கலந்து இருக்கையாலே –
புண்யம் தலையெடுத்த போதாக வெளிச் செறித்து – அல்லாது போது கலங்கி இருக்கிற
ஜ்ஞானத்தைக் கொண்டு -பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே
பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் -அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார்
கைப்பறியாய் பறித்ததாய் -ஸ்வ யத்னத்தால் சாதிக்கப்பட்ட -இத்தால் ருஷிகளை சொல்லுகிறது -அத்தை இத்தை -பரத்வத்தையும் சௌலப்யம் இரண்டையும்
கோயில் கூழை -நியதி இல்லாதா வியாபாரம் -கோயில் பரிசாரகம் செய்யும் வியாபாரம்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் -அமுது செய்த அடையாளம் -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் -அர்ச்சாவதாரத்தில்
விபவ சமாதி பண்ணுவதும் -மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: