திரு-விருத்தம்-98-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –

இவ் விஷயத்திலே கை வைத்து அதில் உமக்கு உண்டான ஈடுபாட்டைச் சொல்லுவது -பிறரை திருத்தப் பார்ப்பதாய்க் கொண்டு -க்லேசியாய் கிடவாதே -உம்முடைய துறை அன்றோ கிருஷ்ணாவதாரம் -நவநீத ஸௌ ர்ய வ்ருத்தாந்தத்தை அனுபவித்து போது போக்க பார்த்தாலோ -என்றார்கள் சிலர் -இவர்க்கு அது ஆழம் கால் என்று அறியார்களே -இவர் -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமது இறே அது தான் -அது நெஞ்சாலும் நினைக்கப் போகாது –

தலைவனது அருமை நினைந்து கவல்கிற தலைவிக்கு தோழி கூறல் —

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 – –
பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் -துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் -கெடுமிடராய-10-2-
வியாக்யானம் –
எஞ்சாப் பிறவி இடர் கெடுவான் துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற –
துஞ்சா முனிவர் -யா நிசா சர்வ பூதானாம் -என்கிறபடியே -என் நெஞ்சு அவனை ஒழிய வேறு-ஒன்றைப் பேணாது -என்றார் -பகவத் விஷயத்திலே கண் வைத்தார்க்கு உறக்கம் இல்லை -என்றார் –
சம்சாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் -என்றார் -இப்படி கிடந்தது அலமாவா நில்லாதே -உம்முடைய பாழி-துறை -அன்றோ கிருஷ்ணாவதாரம் -நவநீத ஸௌ ர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுபவர் அன்றோநீர் –
ஆன பின்பு அத்தை அனுசந்திக்க புக்காவோ  -என்ன -அல்லாத இடங்களில் கரை மேலே யாவது போகலாம் -இது இழிய வென்று நினைக்கவும் போகாது -இதில் இழிவதில் கை வாங்கி இருக்கையே நன்று -என்கிறார் –
துஞ்சா முனிவரும் -சம்சாரிகள் சப்தாதி விஷயங்களில் மண்டி இருக்குமா போலே -ஆத்ம விஷயத்திலும்-ஈஸ்வர விஷயத்திலும் உணர்தியை உடையவராய் -தமோ குணா அபிபூதர் அன்றிக்கே இறே சனகாதிகள் இருப்பது –
யா நிச -அவர்கள் தங்களை சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உடலாக உண்டாக்க செய்தேயும் -ஜன்மாந்தரத்தில்-ஸூ க்ருத்தாலே சம்சாரத்தில் வ்ரக்தராய் -முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு -இவர்கள்-அதுக்கு ஆள் அல்லார்
இதுக்கு புறம்பே ஆள் தேடிக் கொள்வோம் -என்னும்படி இருந்தவர்கள் இறே –
அல்லாதாரும் -ஸூ கருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே கர்ம பாவனையும்-பிரம்ம பாவனையும் இரண்டும் கூடி இறே ப்ரஹ்மாதிகள் இருப்பது -பிரம பாவனை-உண்டாவது சத்வத்தாலே இறே -காதசித்கமாக  சத்வம் தலை எடுக்கிறபோது -சம்சாரம் த்யாஜ்யம் – சர்வேஸ்வரன் உபாதேயன் -அவனைப் பெற வேணும் -என்று அதுக்கு ஈடாக வர்த்தியா நிற்பர்கள் இறே –
அல்லாத போது -சம்சார வர்த்தகர்களேயாய் இருந்தார்களே ஆகிலும்
-எஞ்சா பிறவி -ஒருக்காலும்-சுருங்க கடவது அன்றிக்கே -முடிவு காண ஒண்ணாதபடி -அநாதியாய் வருகிற ஜன்ம பரம்பரையால் உண்டான-இடரைத் தவிர்த்து கொள்ளுக்கைக்கு ஈடாக -துஞ்சா முனிவரும் அல்லாதாரும் –எஞ்சா பிறவி இடர் கடிவான்தொடர நின்ற -அநாதி காலம் கூடி இவ்வளவாக சூழ்ந்து கொண்ட இது அசக்தனான தன்னால் போக்கிக் கொள்ள-ஒண்ணாமையாலே -ஒருத்யோகத்திலே தன்னுடைய ஆஸ்ரயண மாத்ரத்திலே போக்க வல்லான் ஒரு
சர்வ சக்தியைப் பற்ற வேணும் இறே -தன் சார்விலாத -ருத்ரம் சமாஸ்ரிதா தேவா -ருத்ரோ ப்ரஹ்மாணம் ஆஸ்ரித-ப்ரஹ்மாமாம் ஆஸ்ரிதேரா ஜன்நாஹம் கஞ்சிதுபாஸ்ரித -என்கிறபடியே   –ப்ரஹ்மாதிகள் தங்கள் துக்க-நிவ்ருத்திக்கு உடலாக தன்னை ஆஸ்ரிக்கிறவோபாதி-தான் வேறு சிலரை ஆஸ்ரயநீயராக உடையன்
அன்றிக்கே இருக்குமவன் என்கிறது –
வெண்ணெய் ஊண்   என்னும் ஈனச் சொல்லாகிற மாயம் உண்டு -ஆஸ்ரியம் –
இமையோர் -தமக்கும் செவ்வே  நெஞ்சால் நினைப்பு அரிதால் -சம்சாரிகள் சூத்திர விஷயங்களைக் கூட-உண்டு அறுக்க மாட்டாதே இருக்க –நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிறார் சிலராய்-செய்ய முடியாது செய்தாராய் –
இருக்கிறார் நித்ய சூரிகள் இறே -அவர்களுக்கு கூட அனுசந்திக்கப் போகாது இவ் ஆஸ்ரயம் -என் தான் அவர்களுக்கு
நினைக்க போகாது ஒழிகிறது என் என்ன -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட துக்க நிவ்ருதியைப் பண்ணிக் கொடுக்கிற
தான் ஆஸ்ரிதரால்தனக்கு வந்த வாஸ்ரயம் தனக்குத் தான் நிலமோ -சர்வேஸ்வரனாய்-ப்ரஹ்மாதிகளுக்கும்
கூட ஆஸ்ரயநீயனாய்-அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே
தனக்கு தாரகமாய் -அது தான் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே -இப்படி களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி –
அதுதான் தலைக்கட்ட  பெறாதே -வாயதுகையதாக அகப்பட்டு -கட்டுண்டு -அடியுண்டு -பிரதி க்ரியை அற்று –
உடம்பு வெளுத்து  பேகணித்து நின்ற நிலை சிலருக்கு நிலமோ –
அரையனுக்கு போகிற பாலை ஓர்
இடையன் களவு கண்டான் -என்று கட்டி அடியா நிற்க –பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்டு
பரவசராய் இருந்து -இத்தால் வந்ததுக்கு எல்லாம் நான் கடவன் -என்று விடுவித்துக் கொண்டாராம் –
செவ்வே நெஞ்சால் -சிசுபாலாதிகளைப் போலே தோஷத்தை ஏறிட்டு கொண்டு சில சொல்லில் சொல்லலாம்-அல்லது -குணமானபடியை நேரில் அனுசந்தித்து போம் என்றால் அது செய்யப் போகாது –
துஞ்சா முனிவரும் அல்லாதாரும் -எஞ்சாப் பிறவி இடர் கடிவான் -துடா நின்ற -தன் சார்விலாத-தனிப் பெரும் மூர்த்தி வுடைய வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லான மாயமானது-இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிதால் -என்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: