திரு-விருத்தம்-97-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றும் –
நின்கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் -இவ்விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –
இவ்விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந்தவிராதாய் இரா நின்றது -அல்லாதார் கண்டீரே -புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து -அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி -அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன -அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –

தலைவன் பிரிவில் துயில் கொள்ளாத தலைவி இரங்குதல் —

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97- –
பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு -துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் -பருவத்தில் ஈசனை -1-6-
 வியாக்யானம் –
எழுவதும் -இத்யாதி -இதுக்கு இரண்டு படி–உத்பன்னமாவதும் -அனந்தரத்திலே நசிப்பதும் -உத்பன்னமாய் சில நாள் கடுக ஜீவித்து -பின்னை நசிப்பதுமாய் இறே இருப்பது –ஜாய ஸ்வயம் ரியஸ்வ -என்கிறபடியே உத்பத்தி ஷணமே விநாச லஷணமாய் இருப்பன சிலவும் -கல்பாதியிலே உண்டாய் கல்ப அந்தத்திலே விநாசமாய் இருப்பார் சிலருமாய் இறே இருப்பது -அவை எல்லாம் ஒரு போகியாக தோற்றுகிறது  ஆயிற்று இவர்க்கு –
கண்டு கண்டு எள்கல் அல்லால்-இப்படி இருக்கிற இவற்றினுடைய அஸ்தைர்யாதிகளைக் கண்டால்-இகழலாய்  இருக்கும் – உன் பக்கலில் கை வைத்தார்க்கும் விடப் போமோ –
எள்கை யாவது இகழுகை-அவற்றில் விரக்தர் ஆகலாம் இறே அவற்றின் தோஷ தர்சனம்-பண்ணினவாறே –
எழுவதும் இத்யாதி -உதிப்பது அஸ்தமிப்பது – இப்படி அநேக நாள் சென்று கழிய காணா நின்றாலும்-எள்கல் அல்லால் -ஈடுபடுத்தும் இத்தனை போக்கி நாள் சென்றது என்றால் நெஞ்சை வாங்கலாயோ -உன் படி இருப்பது -இப்போது எள்கையாவது -இரங்குகை  -அதாவது ஈடுபடுகை -இவை சதோஷமாய் இருக்கையாலே விடலாம் -விலஷண விஷயமுமாய்-அதிலே பாவ பந்தம்-உண்டானால் ஆறி இருக்கப் போமோ -எப்பொழுதும் நாள் திங்கள் –திருவாய் மொழி – 2-5 4- – இத்யாதி –
 
இமையோர் இத்யாதி -உன்னை ஒழிய வேறு ஒன்றில் நெஞ்சு வைக்க கடவர் அன்றிக்கே -இருந்துள்ள நித்ய சூரிகள் உடைய திரளானது -நித்ய அஞ்சலிபுடா ஹ்ர்ஷ்டா -என்கிறபடியே-தொழுது -நம புரஸ்தா  ததப்ருஷ்ட தஸ்தே -என்கிறபடியே முன்னே வருவது பின்னே வருவதாய்-மொய்த்து -இப்படி செய்து போகையே யாத்ரை யாம்படி பழைய னான சர்வேஸ்வரனை –
கண்ணாரக் கண்டு -காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ச்ப்ருசெயம்  -என்கிறபடியே காண-வேணும் என்கிற ஆசை கண்டவாறே தீரும் இறே -மேல் வருமது விஷயாதீகமான காதல் இறே –
உற்றார்க்கும் -காதல் முருக்கு கொளுந்தினார்க்கும்
உண்டோ இத்யாதி -ஸ்வ தந்த்ரனான பெருமாள்  உறங்கினார்  என்று  கேட்டோம் இத்தனை போக்கி-அவரை அனுவர்த்திதுப் போன இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ –
பகவத் விஷயத்தில் கை வைத்தார் இதுக்கு முன்பு கை உறங்கினார் உண்டு என்று யாரேனும்-கேட்டு அறிவார் உண்டோ –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: