திரு-விருத்தம்-96-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
பேச ஒண்ணாது என்று கை வாங்கவும் மாட்டாதே -பேசாது இருக்கவும் மாட்டாதபடியாகவும் -இதர விஷயங்களில் அருசியையும் -பிறப்பித்து -தன் பக்கலிலே ருசியையும் பிறப்பித்த-இந்த மகா உபகாரத்துக்கு சத்ருசமாக பண்ணுவது ஒரு பிரத்யு உபகாரம் இல்லை இறே –
 உன்னதான வஸ்துவையும் உன் பக்கலிலே சமர்ப்பிக்கும் அத்தனை இறே இனி என்று
அத்தைச் செய்தார் -வணங்கும் துறை -லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் -நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ
லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –
நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை
என்று அருளிச் செய்கிறார் -நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக -கரண களேபரங்களைக் கொடுத்து-பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து -ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய-கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –
சித் சக்திகளையும் பிரவ்ருத்தி சக்திகளையும் -அடியிலே இவை அசித் கல்பமாய் இருந்த-சமயத்திலே -இவற்றினுடைய தயநீய தசையைக் கண்டு -புருஷார்த்தம் இன்னது என்று அறிந்து -ருசித்து பற்றுகைக்கு ஈடாக கொடுத்து விட –அவை தான் இதர விஷயங்களின் ருசிக்கைக்கும்-அதுக்கு ஈடாக ப்ரவர்த்திக்கைக்கும் பொதுவாய் இருக்கையாலே -இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது -கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே -யாறி இருந்த தாயை தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –

தலைவி வெறி விலக்கு வைக்க நினைத்தல் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 – –
 பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி -துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க  நினைத்தால் -ஒன்றும் தேவும் -4-10-
வியாக்யானம் –
நாம் இவை சம்சரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன –
வணங்கும் துறை இத்யாதி -ரஜஸ் தமஸ்க்கள் உடையராய் இறே புருஷர்கள் இருப்பது –
அவ்வவ குண அநு குணமாக ருசி பிறந்தால் அவ்வளவிலே -ராஜசராயும் -தாமசராயும்
உள்ள அவ்வவோ தேவதைகளே ஆஸ்ரயநீய வஸ்துக்கள் என்று உபதேசிக்கைக்கு ஈடாக
உபதேஷ்டாக்களான தீர்த்தர்கள் பலவாயும் உண்டாக்கி வைத்தாய் -துறை என்று தீர்த்தமாய் -அத்தால் தீர்த்தரை நினைக்கிறது –
மதி இத்யாதி -மதி பேதத்தால் -ஒருவன் சித்தாந்தித்து -அது தன்னையே பூர்வ பஷமாக கொள்ளும்-இறே வேறு ஒருவன் –      இப்படி பிணங்கு கைக்கு  பாசுரமான அவ்வவோ சாஸ்திரங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –
அவையவை இத்யாதி -அவ்வவோ சாஸ்த்ரங்களில் பிரதிபாதிக்கப் படுகிற தேவதைகள்
பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –
நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் –யோயோயாம்யாம் தநும்பந்த்யா -என்கிறபடியே
உனக்குத்த அநு பூதர் ஆனவர்களை பலரையும் உண்டாக்கி வைத்தாய் –
பைசல் கைசு நோய் முக்தைசு -என்று பண்டே இவற்றினுடைய அறிவு கேட்டுக்கு மேலே
சூத்திர தேவதைகளை ஆஸ்ரயணீயர்  என்று உபதேசிப்பாரையும் -அவர்களுக்கு உபதேசிக்கைக்கு-பாசுரமான சாஸ்திரங்களையும் -அவ்வவோ தேவதைகளையும் உண்டாக்கி வைத்தாய் –
இணங்கு நின்னோரை யில்லாய் -நீ இப்படி பரப்பி வைத்தால் இத்தை வேறு சிலரால் தவிர்க்கலாம்படி -இருப்பான் ஒருவன் அல்லை -உன்னோடு ஒக்க நிற்கும்படி -உனக்கு போலி யானாரை-உடையை அல்லை -இனி நீ செய்யப் பார்த்தது என் என்ன –
நின் கண் வேட்கை எழுவிப்பனே -ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து -அவர்கள் தங்கள் அறிவு கேட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி -எல்லாரும் என்னைப் போலே உன் பக்கிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் -இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –     நீ கை விட்டாலும் நான் கை விடவோ -அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: